• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் தீண்டிடுமோ நேசம் 34

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
683
512
93
Chennai
அத்தியாயம் 34

தான் வெளியே சென்ற அடுத்த அரை மணி நிமிடத்தில் நிரஞ்சன் என்பவன் காணாமல் போய் விடுவான் என்பதை அறியாமல் விட்டது தான் ஸ்டீபனின் பெரும் தவறு.

ஆம்! அனுவிற்கு காவலாய் நின்ற இரு தடியன்கள் வெளியே வரவும் மொத்த போலீஸும் வீட்டை சுற்றி வளைக்கவும் சரியாய் இருக்க, சத்தமே இல்லாமல் அனுவை பாதுகாப்பாய் கௌதம் விஷ்வா உடன் அனுப்பிவிட்டு ராம் மத்த காவலர்கள் உடன் உள்ளே சென்று அமைதியாய் அமர்ந்து விட, பொறி தேடி சிக்கும் ஆளாய் உள்வந்து மாட்டிக் கொள்ளப் போகிறான் ஸ்டீபன்.

இடையில் நிரஞ்சன் உளறிய உளறலில் கௌதம் வாசுவிற்கு அழைத்து வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று சொல்லிவிட, வாசுவிற்கு ஏற்பட்ட சந்தேகத்தில் அனுவிற்கு தொடர்பு கொள்ள அவள் மொபைல் தான் எப்பொழுதோ சுவிட்ச் ஒப் செய்யப்பட்டு விட்டதே!.

கௌதம் உண்மையை முழுதாய் வாசுவிடம் சொல்லாமல் விட்டுவிட, அவள் பதட்டத்துடன் அழுகையுமாய் கௌதமிற்காக காத்திருந்தாள்.

நிரஞ்சன் இரு தடியன்களுடன் ராம் போலீஸ் சகிதம் அந்த வீட்டினுள் இருப்பதை அறியாமல் வாசுவை தேடி சென்ற அந்த ஐவரும் அவள் கிடைக்காமல் திரும்பி வந்து அவர்களுடன் சிக்கி கொண்டனர்.

"நிரஞ்சன்! நிரஞ்சன்!" கத்தலுடன் அந்த வீட்டினுள் நுழைந்த ஸ்டீபன் யாரும் இல்லாமல் இருக்க சந்தேகமாய் அனு இருந்த அறையை எட்டிப் பார்த்தான். அங்கே அவள் இல்லை.

"வாட் தி ஹெல்" மீண்டும் கத்தியவன் வெளியேற முயல, அவன் எதிர் வந்து நின்றான் ராம்.

"யூ.. யூ.." ராமை ஏற்கனவே அடையாளம் தெரிந்தவன் போல எதுவோ சொல்ல வந்தவன் ராம் பின்னாலே இன்னொரு அறையில் இருந்து வந்த நிரஞ்சன் போலீஸ் மொத்தத்தையும் கண்டு கொஞ்சம் அதிர்ந்து தான் விட்டான்.

ஆனாலும் நான் சளைத்தவன் இல்லை என்பதை போல அவன் மொபைலை கையில் எடுக்க, அதை லாவகமாக தட்டித் தூக்கியிருந்தான் ராம்.

"இன்ஸ்பெக்டர்! இவர் நம்ம சீஃப் கெஸ்ட். ஸ்பெஷலா கவனியுங்க. அப்புறம் தோ நிக்குறானே இவனை கேளுங்க மொத்த விபரமும் வாந்தி எடுப்பான். அதை ஸ்டேட்மென்ட்டா எழுதி இந்த பெரிய மனுஷனை அர்ரெஸ்ட் பண்ணுங்க" என நிரஞ்சனை கைகாட்டி சொல்ல, அவன் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொண்டார் இன்ஸ்பெக்டர்.

"அப்புறம் ஸ்டீபன் சார் ஃபாரினர். சோ இங்கே அர்ரெஸ்ட் பண்றதுனா அதுல என்னென்ன காம்ப்ளிமென்ட்ஸ் இருக்கோ அதெல்லாம் நான் பாத்துக்குறேன். இவன் எக்காரணம் கொண்டும் ஜாமின்ல கூட வெளில வர கூடாது. நம்ம நாட்டோட இல்லீகல் பிசினஸ்க்கு துணை போயிருக்கான். பீ கர்ஃபுல் சார்"

ராம் முற்றிலும் கூறி அவனே கையெழுத்திட்டு கிளம்பி வீடு திரும்ப, அங்கே அனு மயக்கத்தில் இருந்தாள். டாக்டர் ஓய்வு எடுக்க சொல்லிச் சென்றிருந்தார். கௌதம் வாசுவுடன் அங்கிருந்த அனைவருக்கும் அங்கு நடந்ததை விளக்கிக் கொண்டிருந்தான். உடன் விஷ்வா, ரேகாவும்.

"ஏன்டா அறிவில்ல உனக்கு? இப்படி பிரச்சனைனு எங்ககிட்ட சொல்லாட்டியும் ராமை கூட்டிட்டு போக உனக்கு ஏன் வலிக்குது? தனியா பெரிய இவனாட்டம் கிளம்பியிருக்க? ராம் மட்டும் உன்கூட வராமல் உனக்கு ஏதாவது ஆகியிருந்தால்? எங்க நிலைமையை நினச்சு பார்த்தியா?"

சகுந்தலா அழுவதை பார்த்து ராம் வாசலில் நின்று கேட்டுக் கொண்டிருந்தவன் வேகமாக உள்ளே ஓடி வந்தான்.

"ம்மா! அப்படியெல்லாம் இவனை தனியா விட்டுடுவேனா? அதான் ஒன்னும் இல்லையே அப்புறம் என்ன அழுதுகிட்டு" என்றவனை அணைத்துக் கொண்டான் கௌதம்.

"சாரி டா. அந்த நேரக் குழப்பத்துல அப்படி யோசிச்சிட்டேன்" கௌதம் சொல்ல,

"ஹ்ம்ம்! வரவர நான் உன்னை மாதிரி மாறிட்டு வர்றேன். நீ என்னை மாதிரி மாறிட்டு வர்ற" என்ற ராம் சிரிப்புடன் அவன் தோளை தட்டிக் கொடுத்துவிட்டு அனு அருகே சென்றான். வாசு இன்னும் அழுகையில் விம்மிக் கொண்டு தான் அவளருகில் அமர்ந்திருந்தாள்.

"வாசு! என்ன நீ? நீயும் அவன் கூட சேர்ந்துட்டியா?" என கௌதமை கிண்டல் செய்தவன்,

"நாம எடுக்குற ஒவ்வொரு அடிக்கும் பின்னால் இருக்குற எல்லாத்தையும் யோசிக்கணும் வாசு. இதை நானும் லேட்டா தான் கத்துகிட்டேன்" என நிவியை பார்த்து சிரித்தவன்,

"அனுவிற்கு ஒன்னும் இல்லை. அவ எழுந்ததும் நீ தைரியம் கொடு" என்று சொல்லிவிட்டு நிமிர அப்போது தான் அங்கிருந்த விஷ்வா ரேகாவை பார்த்தான்.

"ஹேய் கைஸ்! ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். நீங்கள் இல்லைனா என்ன நடந்திருக்கும்னே தெரியல" ராம் விஷ்வாவிடம் கைகுலுக்கி பேச,

"ஹப்பா! இப்பவாச்சும் எங்களை பார்த்திங்களே! ஆமாம் சார் இவன் கூட நாம போகலாம். யாரோ தானே! நாம ஏன் ஹெல்ப் பண்ணனும்னு கேட்டான். நான் தான் அவனை பேசி சரிகட்டி அந்த கேங்கை கண்டுபிடிச்சேன்"

பெருமையாய் ரேகா சொல்ல அவளை கொலைவெறியோடு பார்த்து நின்றான் விஷ்வா.

" அதான் என்னை மட்டும் காப்பாத்து கடவுளேன்னு வேண்டுனியா?" விஷ்வா அவளை முறைத்துக் கொண்டே கேட்க, அந்த சகஜப் பேச்சில் அனைவரும் லேசாய் புன்முறுவல் பூத்த நேரம் மெதுவாய் கண் விழித்தாள் அனு.

"டேய் இவங்க எழுந்ததும் படத்துல கேட்குற மாதிரி நான் எங்கே இருக்கேன்னு கேட்பாங்களா?" ரேகா விஷ்வா காதில் முணுமுணுக்க, அது அருகில் நின்ற ராம், நிவி காதிலும் விழுந்தது.

"என்ன நிவி, இந்த பொண்ணுக்கு உன்னைவிட வாய் அதிகம் போலயே!" ராம் நிவியிடம் கேட்க ரேகா அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தாள்.

ஐந்தே நிமிடத்தில் வாசுவும் கௌதமும் முழுதாக அனுவை தேற்றி இருக்க, அவர்களிடம் விடைபெற நின்றான் விஷ்வா ரேகாவோடு.

"ஒரு நிமிஷம் விஷ்வா" என்ற கௌதம் வாசுவை அருகே அழைத்து ராமிடம் எதுவோ சொல்ல,

"ஓஹ்" என்று கேட்டுக் கொண்டவன், "நீயே எல்லாரிடமும் சொல்லிவிடு" என்று சொல்ல, கௌதம் வாசுவை பார்த்துவிட்டு அனு அருகே சென்றான்.

"உன் சிஸ்டர்க்கு என் மேலே நம்பிக்கையே இல்லை அனு. நீ என்னை நம்புறியா?" அனுவை பார்த்து கேட்டான் கௌதம்.

கொஞ்சமும் யோசிக்காமல் உடனே அவள் தலையாட்ட, ஒரு போட்டோவை அவன் மொபைலில் எடுத்து அவளிடம் காட்டியவன் திரும்பி அனைவரிடமும் காட்டினான். "இவரு பேரு சிவா. நான் அனுக்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளை" என்று சொல்ல விழி விரித்து அவனை பார்த்தாள் வாசு.

"டேய் இந்த பேரையும் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு. இந்த ஆளையும் எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கு டா. உனக்கு தெரியுதா?" கௌதம் மொபைலில் காட்டிய போட்டோ பார்த்து ரேகா விஷ்வாவிடம் மெல்லமாய் கேட்டாள்.

"ஹேய் அரைலூசு! அது என் அண்ணா தான்" என்றான் சிவா.

சாயலில் விஷ்வா சிவா இருவரும் ஒரே போல இருக்க அதை தான் அவ்வளவு அழகாக கேட்கிறாள் ரேகா.

"அட ஆமா! உன் மூஞ்சி தான்ல உன் அண்ணாவும். அதான் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு பார்த்தேன். வாவ்! அப்ப அனுவும் நம்ம பேமிலியா? ஜாலி ஜாலி" - ரேகா.

"ஏண்டி என் மூஞ்சியையே எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குன்னு சொல்றியே! உன்னை எல்லாம் கல்யாணம் பண்ணி நான் என்ன தான் பண்ண போறேனோ!" விஷ்வா ரேகாவிடம் புலம்ப,

"நான் நம்ம கல்யாணத்துக்கு மூணு மாசம் டைம் கேட்டது அனுக்காகவும் தான். எனக்கும் அனு மேலேயும் நம்ம குடும்பத்து மேலேயும் அக்கறை இருக்கு"

நம்ம குடும்பம் என்பதில் அழுத்தம் கொடுத்து கௌதம் வாசுவிடம் சொல்ல, கண்ணீருடன் முகம் மலர்ந்து நின்றாள் வாசு.

"கிரேட் டா கௌதம். ஐம் ப்ரௌட் ஒப் யூ" கௌதமை ராம் கட்டிக் கொள்ள, சகுந்தலா கூட அவனை பெருமையோடு அணைத்துக் கொண்டார்.

"நான் கூட உங்களை இவ்வளவு நல்லவரா நினைக்கல அண்ணா" நிவி கிண்டல் செய்ய, நந்தினி, சக்தி இருவரும் கௌதமை ரசித்து பார்த்து நின்றனர்.

"உனக்கு சம்மதமா அனு மா?" சகுந்தலா அனுவிடம் கேட்க,

"நீங்கள் எல்லாரும் சேர்ந்து எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம் தான்" என்றாள் அவள்.

அனைவரும் திருப்தியானதும் விஷ்வா ரேகாவை வழியனுப்பி வைத்து, கௌதமும் அனு, வாசுவுடன் மல்லிகாவை பார்க்க கிளம்பினான்.

மல்லிகா பயந்து விடுவார் என பயந்து அவரிடம் அனு கடத்தப்பட்டதை மறைத்து அனுவிற்கு பார்த்த மாப்பிள்ளை பற்றி முழு விபரம் சொல்லி சம்மதம் வாங்கிய பிறகே அனு வாசுவை விட்டு கிளம்பினான் கௌதம்.

"சாரி கௌதம்! நான் அறிவாளியா யோசிக்குறதா நினச்சு உங்களை ஹர்ட் பண்ணிட்டேன்ல?" வாசு.

"ம்ம்ம்ம்! அப்படியும் சொல்லலாம்" - கௌதம்.

"சாரி பா"

"வாசு! ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சிக்கோ! நீ எனக்குன்னு நான் முடிவு பண்ணின அப்பவே உன் பேமிலி தான் என்னோட பேமிலி. உன்கிட்ட நான் அதை பலமுறை சொல்லிட்டேன். எனக்குன்னு ஒரு பேமிலினு நான் எவ்வளவு சந்தோசமா இருக்கிறேன்னு தெரியுமா? ஆனால் நீ என்னை தள்ளி வச்சு பாக்குற? ஒருவேளை நான் உன்னை கட்டாயப்படுத்தி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கிட்டேனோன்னு...."

வாசு பின்னால் இருந்து அணைத்திருக்க கௌதமின் பேச்சு பாதியில் நின்று காணாமலேயே போனது.

"சாரி. ரியால்லி சாரி"

"இப்படி மன்னிப்பு கேட்டால் மன்னிச்சுட்டே இருக்கலாம் போலயே"

"ம்ம் ஆசை தான்"

"ஆமா"

"ச்சோ போங்க!"

"ம்ம் போறேன்! போறேன்!. அம்மாக்கும் ஓகே தான். அப்ப அனு மேரேஜ் நெக்ஸ்ட் மன்ந்த் வச்சுக்கலாம். அடுத்ததா நம்ம மேரேஜ். ஓகேவா?"

"ஏன்? ரெண்டு மேரேஜும் ஒன்னா வைக்கலாமே?"

"எனக்கும் ஆசையா தான் இருக்கு.."

"அய்ய! அது இல்லை கௌதம். ஒரே டைம்னா எல்லாருக்கும் ஈசியா இருக்குமே"

"இல்ல வாசு! அனு மேரேஜ் கிராண்ட்டா பண்ணலாம். நம்ம மேரேஜ் நம்ம பசங்க இருக்குற இடத்துல தான். இது நான் காலேஜ் படிக்கும் போதே முடிவு பண்ணிட்டேன். உன்கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கனும் தான். ஆனால் என் வாசுவுக்கும் இது பிடிக்கும்னு எனக்கு தெரியும்"

நம்ம பசங்க என அவன் கூறியது ஆசிரமத்தில் இருக்கும் குழந்தைகளை தான். அதை வாசுவும் அறிந்து மகிழ்ச்சியுடனே புன்னகைத்தாள்.

அடுத்த நாள் காலை சக்தி கிளம்பி சென்று வருவதாக சொல்ல, அந்த நிமிடம் நேற்றில் இருந்து புரிந்தும் புரியாமலுமாய் குழம்பி நின்ற நந்தினியின் மனதிற்கு அனைத்தும் புரிந்தது போல ஒரே நேரத்தில் சந்தோசமும் கவலையுமாய் இருந்தது.

அவ்வளவு நேரமும் பிறந்த வீட்டில் உற்சாகமாய் துள்ளி திரிந்தவள் சக்தி கிளம்புவதாக சொல்லவும் வாடிப் போனாள்.

நேற்றே அவள் மனதிற்குள் சக்தி வந்துவிட்ட செய்தியை அறிந்தும் கொண்டாள். ஆனாலும் ஒரு பெண்ணாய் அதை அவனிடம் வெளிப்படுத்த தான் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

"நீ கிளம்பும் போது சொல்லு நந்தினி நானே வந்து கூட்டிட்டு போறேன்" சக்தி சொல்ல,

'நீயும் வானு கூப்பிட்டா என்னவாம்' என்று தான் அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

சக்திக்கு அவளை விட்டு செல்ல விருப்பம் இல்லை. இவ்வளவு நாள் விலகி இருந்தாலும் ஒரே வீட்டில் ஒரே அறையில் இருக்கும் போது இல்லாத ஒன்று இப்போது மனதை அலைக்கழிக்க, அதை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் நின்றான்.

இப்போது தான் மனம்மாறி வரும் அவளை எந்த விதத்திலும் துன்புறுத்தி விடக் கூடாது என நினைத்து தான் அவன் மட்டும் கிளம்பிவிட்டான்.

கிளம்பியவன் வெளியே வந்து அனைவரிடமும் சொல்லிக் கொள்ள, இருவர் முகத்தையும் பார்த்த சகுந்தலா தனக்குள் சிரித்துக் கொண்டவர்,

"சக்தி! அதான் அடுத்தடுத்து கல்யாணம் வருதே! இனி கல்யாணம் வரை நந்தினி இங்கேயே இருக்கட்டும். நான் செல்லம்மாகிட்ட சொல்லிக்குறேன்" சிரிப்பை வாய்க்குள் அடக்கி கூறினார்.

நிவியும் அரை மணி நேரமாக சக்தி நந்தினி பார்வை பரிமாற்றங்களையும் இருவர் கண்ணிலும் தெரிந்த ஏக்கங்களையும் பார்த்தவளுக்கு நன்றாக தெரியுமே பிரிவின் வலி.

சகுந்தலாவின் விளையாட்டை தெரிந்தவளாய் அவளும் சேர்ந்து அத்தையுடன் ஒத்து ஊதினாள். "ஆமா சக்தி அண்ணா! நந்தினி இங்கேயே இருக்கட்டும்"

ஒன்றுக்கு இரண்டு மாதங்களா? இது சக்தி நந்தினி இருவரும் எதிர்பாரா ஒன்று. இருவரும் திகைத்தாலும் நந்தினி கொஞ்சம் உணர்ச்சிவசமாக,

"என்னம்மா நீங்க? திடிர்னு வந்து மாசக்கணக்குல இருக்க சொன்னா எப்படி?" என்றவள் சொல்லி முடித்தபின்பு சக்தியை பார்க்க, அவனோ ஆச்சர்யமும் சந்தோசமுமாக அவளை பார்த்து நின்றான். நிவி, சகுந்தலா இருவரும் கிண்டலுடன் இவர்களை பார்த்து நின்றனர்.

"இல்ல! ஸ்கூல் ஆரம்பிச்சுடுவாங்க. லீவ் சொல்லலையே அதான்..."

சக்தியின் பார்வையில் நந்தினி தடுமாறி என்னென்னவோ உளற, அங்கே வந்தான் ராம்.

நிவி கண்ணசைவில் இருவரையும் காட்டி நடந்ததை கூறவும் "அது சரி வராது மா. இப்படி பண்ணலாம். இப்ப சக்தி கூட நந்தினியும் கிளம்பட்டும். அப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்து வந்து தங்கட்டும்" ராம் கூறி முடிக்கவும்

"ஆமா. அப்ப நானும் சக்தி கூட கிளம்புறேன். அப்புறமா வர்றேன்" என்ற நந்தினி ஓடி சென்று பேக்குடன் வர, சக்தியோ நடப்பதை நம்ப முடியாமல் வானில் தான் மிதந்து கொண்டிருந்தான்.

தொடரும்..