• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் தீண்டிடுமோ நேசம் 4

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 4

“போர்ட் மீட்டிங் வைக்குறதுக்கு இவங்களுக்கு இடமே கிடைக்கலயா? போயும் போயும் இவன் கம்பெனிக்கு எல்லாம் வர வேண்டியதா இருக்கு. என் நேரம்!" புலம்பி கொண்டே வருண் ஆபீஸ் உள்ளே சென்றான் ராம்!

"ஹெல்லோ ஜென்டில் மென்ஸ்! குட் மார்னிங் எவ்ரிஒன்!" என ஒருவர் பேச ஆரம்பிக்க, அங்கு நீளவட்ட மேஜையில் தனக்கு எதிரே அமர்ந்திருந்த ராமை முறைத்து கொண்டிருந்தான் வருண்.

தேவை இல்லாத வன்மம். 5 வருடங்களுக்கு முன்பு வரை அப்பா பொறுப்பில் ஆபீஸ் இருந்த போது நம்பர் ஒன்னாக இருந்த கம்பெனி, வருண் கைவசம் வந்த பின் கௌதம் ராம் இருவரும் இவன் இடத்தை பிடித்துக் கொண்டனர். அப்படித்தான் வருண் நினைத்து கொண்டான். ஆனால் தன்னுடைய பொறுப்பற்ற தன்மை தான் அதற்கு காரணம் என அவனுக்கு புரியாமல் போனது.

சென்ற வருடம் கௌதம் இளம் சாதனையாளர் விருதை வாங்கியிருந்த போது ராம் அங்கு பெருமையுடன் நிற்க, அவர்களின் மேல் இன்னும் கோபம்.

பேசுபவரை கவனித்து கொண்டிருந்த ராம் தற்செயலாக திரும்ப அங்கே வருண் இவனை பார்த்து கொண்டிருந்தான். வருண் தந்தை மேல் எப்போதும் மதிப்பு உண்டு ராமிற்கு. எவ்வளவு நல்ல மனிதர். அவர் பெயரை கெடுக்கவே பிறந்திருப்பான் போல என வருணை நினைத்தவன் பின் அவன் வேலையை தொடர்ந்தான்.

"என்னடி இது? ஒரு மண்ணும் புரியல! இப்ப என்ன பண்றது? கஜகஜனு இருக்கு வாசு" நிவி கம்ப்யூட்டரில் தெரிந்த கோடிங்கை சொல்ல,

"டெக்னாலஜி நிவி! இரு இன்னும் 5 மினிட்ஸ்ல எடிட்டோட கைப்புள்ள நமக்கு வேண்டியதை அனுப்பிடுவாங்க. நான் ஆல்ரெடி மெயில் பண்ணிட்டேன்" என சொல்லவும் "நல்லவேளை பா நான் இதெல்லாம் படிக்கல. எனக்கு பசிக்குது டி பிஸ்கட் வேணும்" என வாசு பையை எடுத்தவள், போன் வரவும் அதை எடுத்துக் கொண்டு தள்ளி சென்றாள்.

"சொல்லு ராஜ்! எப்படி இருக்க?" என தன் அண்ணனிடம் பேசிக் கொண்டே செல்ல, தனக்கு வலதுபுறம் வந்தவன் மேல் மோதி நின்றாள்.

"வாவ்வ்வ்! அப்படியே 50 கேஜி பொக்கே என்மேல மோதின மாதிரி இருக்கு" என அவளை தாங்கியபடி வருண் நிற்க, இதனை பார்த்து கொண்டு பின்னால் நின்றான் ராம்.

மீட்டிங் முடிந்து வந்த வருண் நிவியை இடித்தது மட்டும் இல்லாமல் அவளை தாங்கி கொண்டு நிற்க, அதை பார்த்து எந்த முகபாவனையும் காட்டாது அவர்கள் அருகில் வந்தான் ராம்.

"50கேஜி பொக்கே என் மேல விழுந்த மாதிரி இருக்கு" என வருண் சொல்லிக் கொண்டு இருக்க, தூரத்தில் இருந்து பார்த்த வாசுவிற்கு எதையாவது தூக்கி ஏறியலாமா எனும் அளவிற்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

அவன் சொன்னது நிவி ராம் இருவர் காதிலும் விழ, நிவி உடனே எழுந்து கொள்ளவும், ராம் அவர்கள் அருகில் வந்து நிற்கவும் சரியாய் இருந்தது.

"ராஜ் நான் அப்புறம் கூப்பிடுறேன்" என போனை கட் செய்ய, "நிவி நீ எங்கே இங்க?" நீண்ட நாள் பழகியவன் போல ராம் கேட்க, வருண் மேல் கோபத்தில் நின்ற நிவிக்கு ராமை அடையாளம் காணவே சில நொடிகள் தேவைபட்டது.

"நிவி உனக்கு கோகுல் தெரியுமா?" வருண் கேட்க, சுருங்கிய முகத்துடன் தலையாட்டினாள் நிவி.

"நான் இங்கே தான் ஒர்க் பண்றேன்" எங்கே தான் யார் என்பதை அவன் உளறிவிடுவானோ என்ற பயத்தில் நிவி உடனே சொல்ல, ஏற்கனவே அவள் ஜர்னலிஸ்ட் என தெரிந்த ராமும் ஓஹ் என்றதோடு நின்று கொண்டான்.

"ஓகே நிவி, யூ கேர்ரி ஆன்" என சொல்லி வருண் நகர பார்க்க,
"வருண் இஃப் யூ டோன்ட் மைண்ட், நான் இவங்ககிட்ட ஒரு 5 மினிட்ஸ் பேசலாமா?" ராம் கேட்க, வருண் யோசனையோடு தலையாட்டி "நோ ப்ரோப்லேம்" என்றுவிட்டு சென்றான்.

வருண் செல்லவும் வாசு அவர்கள் அருகே வந்தாள். "ஹ்ம்ம் ரெண்டு பேரும் ஒன்னா தான் வந்தீங்களா?" ராம் கேட்க,

"ஆமா! ஆனால் அவன் உங்களை கோகுல்னு..." நிவி இழுக்க, "கோகுல் ராம்" என்றான் சிரிப்போடு.

"ஓஹ்! நீங்க எங்க இங்க?" நிவி கேட்க, "இதை நான் கேட்கணும்" ராம் கேட்கவும், இவனிடம் சொல்லவா என நிவி யோசிக்க, வாசு அனைத்தையும் கூறினாள்.

"சோ இதான் உங்க ப்ராஜெக்ட்டா?" என கேட்ட ராம் சிறிது யோசனைக்கு பின் "வெல்! பீ சேஃப். இந்த இடமும் இங்க இருக்கவங்களும் கொஞ்சம் டேஞ்சர்.." ராம் சொல்லிக் கொண்டிருக்க, "எங்களுக்கு தெரியும்" என்றாள் நிவி வேகமாக.

"ஹேய் நிவி! சொன்னா கேட்டுக்கோ! இதுவும் நமக்கு தேவையான தகவல் தான். சாரி அண்ணா அவ அப்படி தான்" வாசு சொல்ல, "ஓகே டேக் கேர்" என்று இரண்டடி எடுத்து வைத்தவன் பின் நிவி அருகே வந்து "நடக்கும் போது முன்ன பார்த்து நட" என்று சொல்லிவிட்டு சென்றான்.

"இவன் சொல்லட்டா எனக்கு தெரியாதா?" நிவி சிலிர்த்து கொள்ள, "லூசு அந்த கௌதம்கிட்ட மட்டும் அன்னைக்கு நல்லா பேசின? உன் நல்லதுக்கு தானே ராம் சொன்னாங்க. அப்புறம் ஏன் கோபம் உனக்கு?" வாசு கேட்க, அதற்கு நிவியிடம் பதில் இல்லை.

கௌதம் ஆஃபிஸ் சென்று ராம் உண்டு இல்லை என செய்துவிட்டான்.

"உன் தங்கைக்கு இவ்வளவு தைரியம் கூடாது டா. எவ்வளவு தைரியமா வருண் ஆபீஸ் உள்ளேயே போயிருக்கா. எப்படி அவங்க வீட்ல அல்லோ பண்ணாங்க. ப்ச் எனக்கு தான் டென்ஸ்டா இருக்கு" ராம் விடாமல் புலம்ப கௌதம் கூட கொஞ்சம் யோசனையானான்.

ராமின் புலம்பல்கள் அதிகமாக, "டேய் என்ன சின்ன குழந்தைங்களா அவங்க? கூல் ராம். இரு நான் பேசுறேன்". என்ற கௌதம்

உடனே சிலபல வேலைகள் செய்து நிவியின் மொபைல் நம்பரை பெரும் வேலையில் ஈடுபட, கிடைத்ததென்னவோ வாசுவின் எண் தான்.

"ஹெல்லோ"

"வாசு! நிவிகிட்ட போன் குடு"

"ஹெல்லோ மிஸ்டர்.. யாரு நீங்க? எடுத்ததும் குடுன்னா நாங்க குடுத்துடனுமா?

"ஆஹ்ஹ்! சாரி சாரி! நான் கௌதம். ஞாபகம் இருக்குல்ல. ராம் எல்லாம் சொன்னான். நீங்க ஏன் அங்க போனீங்க?"

"அதெல்லாம் இருக்கட்டும். என் நம்பர் உங்களுக்கு எப்படி? எங்க ஜாப்பே இது தான். நீங்க ஏன் இதெல்லாம் கேட்குறீங்க?"

"ப்ச் உன்கிட்ட போய் கேட்டேன் பாரு! நீ முதல்ல நிவிகிட்ட போன் குடு. நான் அவகிட்டயே பேசிக்கிறேன்"

மேலும் வாசு எதுவோ சொல்ல வர, நிவி அவள் கையில் இருந்த மொபைலை பறித்திருந்தாள்.

"ஹெல்லோ யாரு?" நிவி கேட்க, "நிவி நான் கௌதம்"

"ஸ்பீக்கர், ஸ்பீக்கர்ல போடு" ராம் சொல்ல, கௌதமும் அவ்வாறே செய்தான்.

"ஹாய் அண்ணா எப்படி இருக்கிங்க? நேத்து தான் மீட் பண்ணோம் அதுக்குள்ள வாசுவோட நம்பர் எல்லாம் கலெக்ட் பன்னிட்டிங்க போல. சரி இல்லையே" கிண்டலாய் கேட்க,

"ஹேய் வாலு! உன்னை வார்ன் பண்ண தான் கால் பண்ணேன். நீ என்னையே கலாய்கிறீயா? ஹ்ம்ம் ஏன்டா இந்த வேலையை வெளில இருந்து பார்த்திருக்கலாமே! ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுக்கறீங்க?"

"நீங்க இந்த நிவி பத்தி தெரியாம பேசுறீங்க. பாருங்க 1 வீக்ல எப்படி இந்த ப்ராஜெக்ட் முடிச்சு அந்த வருண காலி பன்றேன்னு" நிவி சொல்லிக் கொண்டிருக்க, ராம் தலையில் அடித்து கொண்டான்.

"ஹ்ம்ம் ஓகே டா. டேக் கேர். எதுனாலும் எனக்கு கால் பண்ணு. பர்ஸ்ட் உன் நம்பர் எனக்கு சென்ட் பண்ணு. அண்ட் வாசு டார்லிங்கை கேட்டதா சொல்லிடு" என்றவன் நிவி சூடான பதில் சொல்லும் முன் கட் செய்தான்.

"ஹாஹாஹா! வாசு டார்லிங்.. கௌதம் அண்ணா உன்னை கேட்டதா சொல்ல சொன்னாங்க"

"அடி செருப்பால! யாரு டி டார்லிங். தோ பாரு! அவன் சரி இல்ல. சொன்னா கேளு" வாசு சொல்லிக்கொண்டு இருக்க, நிவி கௌதம் நம்பரை இருவர் மொபைலிலும் பதிவு செய்தாள்.

"என்னடா சொல்றா?" ராம் கேட்க,

"ஏன்டா இவ்வளவு டென்ஷன் ஆகுற? அவங்க வேலைக்கு இதெல்லாம் சாதாரணம். நீ அவளை அடக்கனும்னு நினைக்குரியா?"

"கௌதம்..."

"பின்ன என்ன டா. ஷி இஸ் போல்ட். அவளால் முடியும். இல்லைனா நாம எதுக்கு இருக்கோம். கவலையை விடு பார்த்துக்கலாம்" கௌதம் சொல்ல ராமும் புரியும் விதமாய் கேட்டுக் கொண்டான்.

தொடரும்..
 

judithP

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 3, 2022
Messages
1
Thanks for the update. Nice UD. Both girls are super bold and fearless. Love to see how Vasu looks.
 
Top