• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் தீண்டிடுமோ நேசம் 5

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
512
93
Chennai
அத்தியாயம் 5

"நிவி! உன் மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்க? மாப்பிள்ளை போட்டோ உன் டேபிள் மேல வச்சு 2 நாள் ஆகுது. பாருன்னு சொன்னேன்ல?"

நிவி அன்னை தன் மகனுக்கும் மகளுக்கும் பார்த்த வரன்களை இருவருமே தொடாமல் இருக்க முதலில் நிவியிடம் கேட்டார்.

"ம்மா! எவனா இருந்தாலும் ஓகேனு சொல்லிட்டேனே அப்புறம் என்ன போட்டோ பாரு வீடியோ பாருனு? எனக்கு ஒரே ஒரு கண்டிஷன் தான் நான் வேலைக்கு போவேன். இது என்னோட பேஷன். அதுக்கு தடை சொல்லக் கூடாது" என சொல்ல, மாப்பிள்ளை வீட்டில் எதுவும் சொல்லாமலே

"எல்லாம் சொல்லியாச்சு. மாப்பிள்ளைக்கு வேலைக்கு போறது எல்லாம் பிரச்சனை இல்லையாம்" என முதல் பொய்யை கூற, "அப்போ எப்ப கல்யாணம்னு சொல்லு. லீவ் போடணும்" என்றுவிட்டு கிளம்பி சென்றாள்.

"டேய் நீயாவது பொண்ணு போட்டோ பாத்தியா இல்லையா டா? நம்ம நிவிய அவங்களுக்கு புடிச்சி போச்சி. உன்னையும் தான். நீ சரினு சொன்னா அடுத்த வேலையை பாக்கலாம்" நிவி அண்ணனிடம் நந்தினி போட்டோவை காட்டி கேட்க, அப்போது தான் வாயை திறந்தான் ராஜ் குமார்.

"அம்மா நான் ஒரு பொண்ணை விரும்புறேன். அவளை தான் கல்யாணமும் பண்ணிப்பேன்" சொன்னவன் நிற்காமல் சென்றுவிட, அன்னையோ அதிர்ந்தாலும் பெரிய இடத்து சம்பந்தத்தை விட மனமில்லாமல் மகன் மனதை மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் சம்மதம் தெரிவித்து அடுத்த கல்யாண வேலைகளில் ஈடுபட்டார்.

நாட்களும் யாருக்காகவும் நிற்காமல் செல்ல, கெளதம் சொன்னது போலவே நிவி வாசுவிற்கு தன்னால் ஆன உதவிகளை செய்து கொடுத்தான். ராமின் முழு வேலையும் நிவி அந்த கம்பெனியை விட்டு வெளிவரும் வரை அவளை கவனிப்பது தான் என்று ஆனது.

"அண்ணா! ஒரு முக்கியமான எவிடென்ஸ் கிடைச்சுருக்கு. அதைபத்தி பேசணும் ஈவினிங் அந்த காபி ஷாப்ல மீட் பண்லாமா? போனில் நிவி கௌதமிடம் கேட்க, அவனும் வருவதாக சொல்லி வைத்தான்.

"ஹேய் லூசே! ஏண்டி எவிடென்ஸ் கிடைச்சா எடிட்டர்கிட்ட குடுத்து வேலையை முடிக்குறதை விட்டுட்டு ஏன் இப்ப இவனை வர சொல்ற. அவன் வந்தாலே என்னை வம்பிழுப்பான்".

வாசு கடுப்புடன் சொல்ல, "ஆமா உனக்கு ஏன் கௌதம் அண்ணாவை புடிக்க மாட்டுது டி? அந்த ராம் வாயே திறக்க மாட்டான் அவன்கிட்ட மட்டும் நல்லா பேசுற?" நிவியும் பதில் கேள்வி கேட்டாள்.

"என்ன பண்றது டி எல்லாம் என் நேரம். சேர்க்கை சரி இல்ல. உனக்கு அந்த கௌதம் குரங்கை புடிச்ச மாதிரி எனக்கும் ராம் அண்ணாவை புடிச்சிருக்கு" என சொல்ல, "போதும் போதும் மூடிட்டு ஈவ்னிங் ரெடியா இரு" என்றவள் தனது வேலையை தொடர்ந்தாள்.

"டேய் ஈவ்னிங் நிவி காபி ஷாப் கூப்பிட்ருக்கா. வந்துடு டா. இன்னைக்காவது அவகிட்ட பேச பாரு. நீ பாட்டு உம்முன்னு இருக்காத. ஆல்ரெடி அவங்க அம்மா பொண்ணுக்கு சம்மதம்னு சொல்லிட்டாங்க. ஆனா நிவி உன் போட்டோ பார்த்த மாதிரி கூட தெரியல. கல்யாணத்தன்னைக்கு எந்த பிரச்சனையும் வந்திட கூடாது" கௌதம், ராமின் திருமணம் நல்லபடியாக முடிய வேண்டுமே என புலம்ப,

"அதெல்லாம் எனக்கு தெரியும் போடா" என போனை வைத்தான் ராம்.

"வா நிவி! வாங்க மேடம்!" இருவரையும் கௌதம் வரவேற்க, ராம் அண்ணா வரலையா என்றாள் வாசு.

அவளை ஒரு பார்வை பார்த்தவன் நிவி கேட்கும் வரை அவனைப் பற்றி பேசக் கூடாது என்ற முடிவுடன் பேச்சை மாற்றும் விதமாக "சொல்லு நிவி, என்ன எவிடென்ஸ்?" என்றான்.

"உன்கிட்ட போய் கேட்டேன் பாரு" என நினைத்து முகத்தை திருப்பிக் கொண்டாள் வாசு.

"அண்ணா இது வருண் போற பாரோட எண்ட்ரன்ஸ்" என ஒரு போட்டோவை காட்ட, அவனும் அதைப் பார்த்தான்.

"அண்ட் இதுல சாப்ட் காபி இருக்கு. ஒரு பொண்ணு கூட வருண் உள்ளே போறான். ஆனால் வரும்போது அந்த பொண்ணை காணும். இன்னைக்கு காலையில அந்த பொண்ணு ஆஃபீஸ்க்கு அழுதுட்டே வந்துச்சு. அந்த பொண்ணை நான் போட்டோ கூட எடுத்தேன். இப்ப நான் அந்த பொண்ணுகிட்ட பேசணும்" என தெளிவாய் சொல்ல, கௌதமும் தீவிரமாய் கேட்டுக் கொண்டான்.

"ஓகே நிவி! ஆபிஸ் உள்ள இருந்து எப்படி போட்டோ எடுத்த?"

"அண்ணா நான் யாரு? நிவியாக்கும்" இல்லாத சட்டை காலரை தூக்கிவிட்டு நிவி சொல்ல, அவளருகில் இருந்த சேரில் வந்து அமர்ந்தான் ராம்.

"ஹாய் வாசு! ஹாய் நிவி!"

"ஹாய் ராம் அண்ணா!" வாசு உற்சாகமாய் சொல்ல, வேண்டா வெறுப்பாய் ஹாய் என்றாள் நிவி.

பின் கௌதம் முழு விபரமும் கேட்டு நாளை ஏற்பாடு செய்வதாக சொல்ல, சரி என கேட்டுக் கொண்டாள். காபி வந்தபின் அனைவரும் காபியை பருக, கௌதம் வாசுவை பார்த்துக் கொண்டே நிவியிடம் கேள்வி கேட்டான்.

"ஏன் நிவி! உன் பிரண்ட் அந்த துப்பட்டாவை முகத்துல இருந்து எடுக்கவே மாட்டாங்களா? துப்பட்டால ஸ்மெல் வராது?" கிண்டலுடன் கேட்க,

"ஹெல்லோ! என் முகம் என் துப்பட்டா உங்களுக்கு என்ன?" என வாசு கேட்க, "அண்ணா! ப்ளீஸ்" என்றாள் நிவி.

"ஹ்ம்ம் நீ வேணா பாரு நிவி! நானே ஒருநாள் அந்த துப்பட்டாவ எடுத்துவிட போறேன். அதுவரை உன் பிரண்ட் அவங்க முகத்தை காட்ட மாட்டாங்க போல"

"நிவி திஸ் இஸ் தி லிமிட்! நான் கிளம்புறேன்" என வாசு எழுந்து கொள்ள, கௌதமிற்கு முன் "வாசு கொஞ்சம் இரு. நான் உங்க ரெண்டு பேரோடவும் பேசணும்" என ராம் சொல்ல,

"என்ன இவன் ரெண்டு பேரையும் இருக்க சொல்றான்? தத்தி" என கௌதம் ராமை முறைத்து பார்க்க, ராம் கண்டுகொள்ளவில்லை.

"எங்ககிட்ட நீங்க என்ன பேசணும்?" கௌதம் தான் எப்பொழுதும் நேரடியாக நிவி வாசுவிற்கு உதவி செய்வான். அவர்களை பாதுகாப்பது தான் ராமின் வேலை. அதனால் நிவி இப்படி கேட்க,

"மிஸ் வாசு! அவங்க பேமிலி பத்தி தனியா பேசப் போறாங்க. வாங்களேன் நாம அந்த பக்கம் தனியா போலாம்" என கௌதம் வாசுவை அழைக்க, அவள் முறைக்கவும் "அட வாம்மா! சும்மா நொய்யி நொய்யினு" என வாசுவை பக்கத்து டேபிளிற்கு இழுத்துச் சென்றான் கௌதம்.

"அண்ணா!.. அண்ணா!.." நிவி அழைப்பது எல்லாம் கேட்காதது போலவே அவன் சென்றுவிட, நிவி முறைத்தவாறே ராம் அருகே அமர்ந்தாள்.

"சீக்கிரம் சொல்லுங்க. நான் கிளம்பனும்" கௌதமிடம் பேசியது போல ராமிடம் இதுவரை சாதாரணமாக நிவி பேசியதில்லை. ராமும் அதற்கு முயற்சித்ததில்லை. ஆனால் இன்னும் ஒரு மாதத்தில் கல்யாணம் எனும் நிலையில் இவள் தன்னை யார் என்றே தெரியாமல் இருப்பது மனதுக்கு நெருடலை ஏற்படுத்த, இப்போது சொல்லிவிடும் முடிவில் இருக்கிறான்.

வாசு சாதாரணமாக ராமிடம் பேசுவதால் அவளும் இருந்தால் நன்றாக இருக்கும் என ராம் நினைத்துக் கொண்டிருக்க கௌதம் அவளை தனியாக இழுத்து சென்றுவிட்டதும் அவனை முறைத்துக் கொண்டிருந்தவன் காதுகளில் நிவி கேட்டது விழ, நிவி பக்கம் திரும்பினான்.

"உங்களுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? ராம் அண்ணா எங்க ரெண்டு பேரோடவும் தான் பேசணும்னு சொன்னாங்க" வாசு கௌதமிடம் சொல்ல,

"அய்யய்யய்ய கொஞ்ச நேரம் வாய மூடு. ஆமா நிவி வீட்ல மாப்பிள்ளை பாக்குறாங்கல்ல அது உனக்கு தெரியுமா? நெக்ஸ்ட் மன்த் மேரேஜ் பிக்ஸ் பண்ணியிருக்காங்க அது தெரியுமா?" என கேட்கவும் "அவங்க அண்ணாக்கு தான் பாக்குறாங்க. எனக்கு தெரியும். சும்மா உளறாதிங்க" என்றாள் தனக்கு தெரியும் என்ற உறுதியில்.

"ஆமா நல்லா தெரியும்! இந்த வாய் மட்டும் தான் உனக்கு" என்றவன், "அவங்க அண்ணாக்கு பாத்துருக்க பொண்ணு யாருன்னு தெரியுமா? அதோ இருக்கானே அவனோட சிஸ்டர் நந்தினி தான்" என சொல்ல,

"ஒஹ்" என யோசித்த வாசு "அதான் பேமிலி பத்தி பேசுறாங்களா" என்றாள் யோசனையோடு எங்கோ பார்த்தவாறு.

"அட அறிவுக்கொழுந்தே! மாப்பிள்ளையோட சிஸ்டரும் பொண்ணோட அண்ணனும் எங்கயாவது இப்படி பேமிலிப்பத்தி டிஸ்கஸ் பண்ணுவாங்களா? பொண்ணு குடுத்து பொண்ணு எடுக்குற மாதிரி இவங்க ரெண்டு பேருக்கும் மேரேஜ் பிக்ஸ் பண்ணியிருக்காங்க. அது உன் பிரண்ட்க்கு தெரியுமானு தெரில. அதைத்தான் ராம் பேச போறான். இதுல நந்தி மாதிரி குறுக்கால இருந்துகிட்டு என்னை வேற திட்டுற" என நீள விளக்கம் கொடுத்தான் கௌதம்.

"ஓஹ்ஹ்ஹ்... " இப்போது அனைத்தும் புரிந்தது போல அவள் கண்ணை விரிக்க எப்போதும் போல இப்போதும் அவள் முகத்தை காணும் ஆவல் அவனுக்கு வந்தது.

ஆனாலும் அதன் பின் அமைதியாக ஒருவரை மற்றவர் அறியாமல் பார்த்துக் கொண்டு ராம் நிவியையும் கண்காணித்தனர்.

"என்ன தான் பேசணும் ஏன் இப்படி அமைதியாவே இருக்கீங்க? இந்த கௌதம் அண்ணாக்கு அறிவே இல்ல" நிவி திட்ட ஆரம்பிக்க, ராம் தொண்டையை செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தான்.

"நிவி உங்க வீட்ல மாப்பிள்ளை பாக்குறாங்க இல்ல?" சட்டென கேட்ட கேள்வியில் அமைதியாகிவிட்டாள் நிவி.

"உங்களுக்கு எப்படி?.. " அதிர்ச்சியுடன் நிவி கேட்டாள். அவள் இப்போது நினைப்பது ராமிற்க்கு தெரிந்த யாரோ தான் மாப்பிள்ளை என்று.

ராம் "நீ போட்டோ பார்க்கலையா?"

"இல்ல! நான்.. அம்மா.. நான் டேபிள்ள.." நிவி திக்கிக் கொண்டிருக்க, அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த கௌதம்

"இது தேறாது! ராம் சொதப்புவான்னு நினச்சேன். உன் பிரண்ட் என்ன இப்படி சொதப்புறா?"

"ஹ்ம்ம்! அவ நல்லா தான் இருந்தா, கொஞ்ச நாளா அவ அண்ணா கூட சேர்ந்து இப்படி ஆயிட்டா" என வாசு சொல்ல,

"ஹை அப்ப நீயும் ஒட்டு கேட்டுட்டு தான் இருக்கியா?" என்றதும் அவள் முறைத்ததில் வாயை மூடிக் கொண்டான்.

ராம் "நீ ஏன் பார்க்கலனு ஐ டோன்ட் க்நொவ். பட் மேரேஜ்கு ஓகே சொல்லிட்டியா?" என்றதும் ஆமாம் என தலையாட்டினாள்.

"இவ்வளவு போல்டா ஒர்க் பண்றது எல்லாம் ஓகே. யாருன்னே பார்க்காம கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லியிருக்க, ஒருவேளை அவன் உன் கேரக்டருக்கு ஒத்து வரலைனா என்ன செய்வ?" என கேட்க, இப்போது தான் நிவிக்கு தோன்றியது அந்த போட்டோவை பார்த்திருக்கலாமோ என்று.

தொடரும்..