• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் - 1

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
உனக்கே உயிரானேன்





அத்தியாயம் 1

அதிகாலை ஐந்து மணி அளவில் அனைவரும் உறங்கி கொண்டிருக்க அப்போது ஒரு வீட்டில் கந்தஷஷ்டி கவசம் பாட வீடு முழுவதும் சாம்பிராணி புகை சூழ்ந்திருக்க அந்த இடமே கோவிலாக காட்சி அளித்தது.

கண் விழித்த பார்வதி அருகில் கணவர் சேகர் நன்றாக உறங்கி கொண்டிருக்க ...யார் இந்நேரத்தில் சாமி கும்பிடுவது என யோசனையுடன் வெளியே வந்தார்.

அப்போது பக்கத்து அறையில் இருந்து அவளது மாமியார் மரகதமும் எழுந்து வர முகத்தில் குழப்பத்துடன் பார்வதி அவரை பார்க்க அவரும் முழித்துகொண்டு நின்றார்.

உடனே பார்வதி “அத்தை நீங்க சாமி கும்பிடலையா...அப்படின்னா வேற யாரு” என சந்தேகமாக கேட்டாள்.

“அதான பார்த்தேன்...எங்கே வெள்ளிகிழமை நாள் அதுவுமா நீ நேரமே எழுந்து பூஜை பண்றேன்னு நினச்சேன்.......அதான் எப்பவும் நடக்கிறது இல்லையே “ என சொல்லி கழுத்தை நொடித்தவர் அந்த காலை பொழுதிலும் தனது மாமியார் பணியை செவ்வனே செய்து முடித்தார்..

பார்வதி அவரை கோபமாக பார்க்க

திடிரென இருவர் கண்களும் மின்ன “...ஓ ...அதானா விஷயம் என இருவரும் இரே குரலில் சொன்னவர்கள் வருசத்துல இரண்டு நாள் இவ பன்ற இந்த பக்தி நாடகத்துல முருகன் மறுபடியும் கோபப்பட்டு மலை ஏறாம இருந்தா சரி” என பார்வதி கிண்டலாக சொல்ல

“விடு பாரு....சின்ன பொண்ணு ....செஞ்சுட்டு போறா ...அதெல்லாம் முருகன் மலை ஏறுனாலும் நான் இருக்கேன்ல ...போய் கூட்டிட்டு வந்திடறேன்” என மரகதம் தனது பேத்திகாக சப்போர்ட்டுக்கு வந்தார்.

உடனே பார்வதி..... “இங்க பாரு இதுக்கு கைதடி கண்ணாடி இல்லாம நடக்கவே முடியாது....... சந்தடி சாக்குல கிழவி கே.பி.சுந்தராம்பாள் ரேஞ்சுக்கு பேசுது.....தமிழ எழுத்து கூட்டி கூட படிக்க தெரியாது....இதுல மலையேறி முருகனை மலை இறக்குதாம் என மனதில் நினைத்தவள் தன்னை யாரோ முறைப்பது போல் தோன்ற திரும்பி பார்த்தவள்

“நீ என்ன நினைக்கிறேனு எனக்கு தெரியும்........நான் சுந்தரம்பாள் தான்...... .......போய் வேலையை பாரு “என பெரிய மனுசியாக மரகதம் ஒரு அதட்டல் போட அமைதியாக சமையல் அறைக்கு சென்றார் பார்வதி.

பின்னர் மரகதம் நேராக சாமி அறைக்கு செல்ல அங்கு புகை மண்டலமாக காட்சி அளிக்க ......”இவ ஒருத்தி வருசம் முழுவதும் போடற சாம்பிரானிய ஒரே நாள் போட்டு ஊரயே எழுப்புவா” என முனகியவர்

“ ஏம்மா இன்னும் உள்ள என்ன செய்கிறாய் ” என பாசத்துடன் அவர் அழைக்க

“இதோ வந்திடறேன் பாட்டி என சொல்லி கொண்டே குளித்து முடித்து ஜாதி மல்லி சூடி ,சந்தன குங்குமபொட்டிட்டு ,குறும்பு பொங்கும் முகத்துடன்,பொன்வண்ண நிறத்தில் சுடிதார் அணிந்த ஒரு வண்ண மயில் வெளியே வர

.....நிலா பிறை போன்ற நெற்றியும்,கவி பாடும் கண்களும்,கூர்மையான நாசியும்,கோவைபழம் போன்ற இதழ்களும் ஒரு முறை பார்த்தவர்கள் மீண்டும் பார்க்க தோன்றும் முக அமைப்பும் அதில் புகை மூட்டத்தின் நடுவே வானுலக தேவதை போல் அவள் நடந்து வர என் குலம் காக்க வந்த குலமகள் என பெருமையுடன் மரகதம் நிற்க...அப்போதுதான் எழுந்து வெளியே வந்த சேகர் தனது மகளை மனநிறைவுடன் பார்த்து ரசித்து கொண்டிருந்தார்.

அப்போது “இது வருசத்துக்கு இரண்டு முறை நடக்க கூடிய நிகழ்ச்சிதான ......அதற்கு ஏன் அம்மாவும் மகனும் இப்படி ரியாக்சன் கொடுக்கிறிங்க “ என உள்ளே இருந்து பார்வதியின் குரல் வர சட்டென்று சுதாரித்த சேகர் வாக்கிங் போக வெளியே கிளம்பினார்.

உடனே மரகதம் “அதான நாங்க இரண்டு பேரும் கொஞ்ச நேரம் சேர்ந்து இருந்தா இவளுக்கு பொறுக்காதே” என அவர் வாய்க்குள் முனகியபடி நிற்க அதற்குள் அந்த தேவதை “என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க பாட்டி” என அவர் காலில் விழ ...”நீ எப்போதும் சந்தோசமா தீர்க்க ஆயுளோட இருக்கனும்” என வாழ்த்தியவர் அவளை கட்டி அணைத்து உச்சி முகர்ந்தார்.

தங்கள் குடும்பத்தின் ஒரே தேவதை அல்லவா அவள்...அவர்களுக்கு நான்கு தலைமுறையாக பெண் குழந்தையே இல்லை......மரகதத்திர்க்கு சேகர் ஒரே மகன்..... அவருடைய ஒரே மகள் தான் இப்போது புகை மண்டலத்தின் நடுவில் பார்த்த தேவதை பெயர் ரோஜா ..இந்த குடும்பத்தின் ஒரே வாரிசு அதுவும் பெண்பிள்ளை என்பதால் செல்லம் அதிகம்..........சேகர் பார்வதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.அதில் மரகதத்திர்க்கு சிறிது வருத்தம்.ஆனால் அவள் ரோஜாவை பெற்றெடுத்ததும் கோபம் மறைந்து அவளை ஏற்றுகொண்டார்.பார்வதியும் சிறந்த குணவதி தான். ...எனினும் திருமணம் ஆன புதிதில் மரகதம் அவளை கொஞ்சம் காட்டமாக பேசிவிட அது ஆறா தழும்பாக பதிந்து போனது.ஆனாலும் மரகதத்தின் மேல் மிகுந்த மரியாதை கொண்டவள். அவரின் விரைந்து முடிவு எடுக்கும் குணம் பார்வதிக்கு மிகவும் பிடிக்கும்.சேகர் சிறந்த மகன், நல்ல கணவன், செல்ல தந்தை மொத்தத்தில் அனைவருக்கும் நல்லவன்.

பார்வதிக்கும் ரோஜா செல்லம் தான்.ஆனால் பெண் பிள்ளை அல்லவா ...அதனால் கொஞ்சம் கண்டிப்போடு நடந்து கொள்வார்.மேலும் மரகத்ததின் பாதி குணம் ரோஜாவிடம் உண்டு.....அவரது நிமிர்ந்த நடை,பிரச்சனயை எளிதில் சமாளிக்கும் திறன்,மேலும் எடுத்த முடிவில் பின்வாங்காத தன்மை ,தவறாக இருந்தாலும் அதை ஒரு நிமிர்வோடு சொல்வது போன்றவை ....இதில் ஒரு சில விஷயங்கள் பார்வதிக்கு பிடிக்காது ...அவள் அச்சம் ,நாணம்,மடம், பயிர்ப்பு என சொல்லிக்கொண்டு இருப்பாள்.அதனால் இருவரும் இரு துருவங்களாக நிற்ப்பார்.இடையில் மாட்டி கொண்டு முழிப்பது சேகரின் நடைமுறை பணிகளில் ஒன்று.

பேத்தியை தன் அருகில் அமரவைத்த மரகதம் ....”ஏன் ரோசா இது மாதிரி நீ தினமும் செய்தால் இந்த வீடே கோவிலாக இருக்கும்....செய்யலாம்ல என தன் மருமகள் செய்யாததை பேத்தியாவது செய்வாள்” என அவர் ஆசையுடன் கேட்டார்.

......”நான் காலேஜ் படிக்கிறேன் பாட்டி.........நீங்க கமண்டலத்தை கொடுத்து என்னை சாமியாராகவே மாற்றி விடுவீர்கள் என்று நினைக்கிறேன் ” என அவள் தனது விழிகளை உருட்டி கொண்டு பயந்தவள் போல் சொல்ல

“என்ன பேச்சு ராஜாத்தி இது...சாமியாரு அப்டின்னு ......நீ பாதினாறு புள்ள பெத்து சீரும் சிறப்போடு” என சொல்லிகொண்டே பேத்திய பார்த்தவர் அவளது முகம் மாறியதை கண்டதும் தனது பேச்சின் தவறு தெரிய என்ன செய்வது என தெரியாமல் அவர் முழித்து கொண்டிருக்க....

அந்த நேரத்தில் “யார் நீ சாமியாரா போகபோற ....எங்களை மொட்டை அடிச்சுடுவ நீ...போடி...போய் டீ போட்டு வச்சுருக்கேன் எடுத்து குடி” என மகளிடம் சொல்லிகொண்டே பார்வதி தனது மாமியாரை பார்க்க...அவரது கண்களில் கண்ணீர் நிற்க, கண்காளாலே அதற்கு தடை சொன்னவள் அவரிடம் டீ கப்பை கொடுப்பது போல் அவரது கைகளை பிடித்து இமைகளை மூடி திறந்தாள். 1



அம்மாவின் அதட்டல் அவளுக்கு கோபத்தை ஏற்படுத்த ........பாரு உனக்கு வர வர பயமே இல்லாம் போய்டுச்சு.....இன்னைக்கு அந்த நாள் அப்டிங்கிறதால நீ தப்பிசுட்டஎன சொல்லிகொண்டே உள்ளே சென்றாள் ரோஜா.

அவள் உள்ளே சென்றதும் பார்வதிய பார்த்த மரகதம் .....”இல்ல பார்வதி பேசும்போது வந்திடுச்சு”...அதான் என அவர் சொல்ல,

“பரவாயில்லை அத்தை......அதான் அவ அதை பெருசா எடுத்துக்களைல.....விட்ருங்க” என அவருக்கு ஆறுதல் சொல்ல மரகதமோ அந்த நினைவுகள் மனதில் எழும்பாமல் இருக்க போராடி கொண்டிருந்தார்.

அப்போது டீ எடுத்து கொண்டு வந்தவள் தன் அம்மாவை ஒரு இடி இடித்து விட்டு தனது பாட்டியிடம் வந்து அமர்ந்தாள்.

“ஏண்டி கொழுப்பா உனக்கு.....உன்னை சொல்லி தப்பில்லை....எல்லாம் வீட்ல இருக்கிறவங்க உனக்கு கொடுக்கிற செல்லம்” என தனது மாமியாரை இந்த பேச்சில் அவள் இழுத்து விட முகம் வாடி இருந்த அவர் மருமகள் தன்னை பற்றி சொன்னதும் சிலிர்த்து கொண்டு நிமிர்ந்தவர்......”யாரும் ஜாட மாடையா பேசவேண்டாம் என சொல்லிகொண்டே நடக்க கூட வழி விடாம பெரிய உருவத்தை வச்சுக்கிட்டு நின்னா குழந்தை என்ன பண்ணுவா என பார்வதி குண்டாக இருப்பதை அவர் கிண்டலாக சொல்ல

சூப்பர் பாட்டி...பின்ற போ என அவள் பாட்டிக்கு சப்போர்ட் பண்ண

தேங்க்ஸ் ரோசா ....உனக்கு நான் இருக்கேண்டி என அவளை மரகதம் தோளில் சாய்த்துகொள்ள பார்த்து கொண்டிருந்த பெற்றவளின் மனம் குளிர்ந்து.

தோளோடு சாய்ந்து இருந்தவளிடம் சமையல் அறைக்குள் ஏதும் நடக்கலையில என அவர் சூசகமாக கேட்க...உடனே அவள் சிரித்து கொண்டே ஆமாம் இல்லை என இருபுறமும் தலை ஆட்ட

இன்று வலையில் மாட்டும் மீன் எதுவோ என மரகதம் ஆவலாக கேட்டார்.

அதற்குள் வாக்கிங் போய்விட்டு உள்ளே வந்த சேகர் “பார்வதி டீகொண்டு வா” என சொல்லிவிட்டு செய்திதாளோடு சோபாவில் அமர்ந்தார்.

அப்பப்பா ....உள்ள நுழையறதுக்கு முன்னாடியே அதிகாரம்தான் என மனதில் நினைத்தவள் ......அவங்க அம்மா இருந்தா இந்த மனுசன கைல பிடிக்க முடியாது என மனதில் புலம்பியவாறே டீ கொண்டு வந்தாள்.

“என்னடா தம்பி ரொம்ப சோர்ந்து போய் இருக்க” மரகதம் வாஞ்சையுடன் கேட்க அதுதானே பெத்தமனம்...பிள்ளைக்கே பிள்ளை வந்தாலும் மரகத்ததிற்கு சேகர் குழந்தை தான்.

“ரொம்ப தூரம் நடந்து களைப்பா இருக்கும்மா......ஸ்ட்ராங்கா ஒரு டீ குடிச்சா சரி ஆகிடும்” என சொல்லிகொண்டே டீ வாங்கியவர் அதை வாயில் வைக்க

“அய்யய்ய்யய்ய்ய்யி என டீயை துப்பியவர் என்னடி இது ...டீ க்கு சர்க்கரை போட சொன்னா உப்பு போட்டு வச்சிருக்க ....... ஒரு டீ ஒழுங்கா போடா தெரியுதா உனக்கு ...உன்னை எல்லாம்” என திட்டி கொண்டே எழுந்து உள்ளே சென்றார்.

“என்னாச்சுங்க..... நான் சர்க்கரைதான் போட்டேன்...இப்பதான் அத்தை நம்ம ரோஜா” என சொன்னவர் சட்டென்று பேச்சை நிறுத்தி அவள் முகம் பார்க்க அவளோ எங்கோ எதோ நடப்பது போல் ருசித்து டீ குடித்து கொண்டிருக்க பெற்றவளுக்கு தெரியாதா பிள்ளையின் கள்ளத்தனம் ..... இவளோட கொட்டத்தை அடக்கறது யாருன்னு தெரியலை வாய்க்குள் முனகியபடி அவளை முறைத்தவாரே மீண்டும் இன்னொரு டீ போடுவதற்கு சமையல் அறைக்கு சென்றார் பார்வதி.

மரகதம் திரும்பி பேத்தியை பார்க்க....என்னடா கடைசில என் மகனா அந்த மீன் என அவர் பார்வை இருக்க அவளோ எதுவும் நடக்காதது போல் எழுந்து தனது அறைக்கு சென்றாள்.

பார்த்து கொண்டிருந்தவர் மனதிற்குள் இந்த பூவுக்குள் ஒளிந்திருக்கும் பூதம் எப்போது வெளியே கிளம்பூமோ என்ற பயம் தோன்ற அப்படியே அமர்ந்திருந்தார்.

சேகர் கிளம்பி வெளியே வந்தவர் “ரோஜா ரெடியா என கேட்க இதோ கிளம்பிட்டேன்பா” என சொல்லி கொண்டே சாமி அறைக்கு ஓடினாள்.அங்கிருந்த சில பேப்பர்களை எடுத்து கொண்டு சேகர் சாப்பிடும் இடத்திற்கு வந்தாள்.

“ரோஜா நீயும் வந்து சாப்பிடு” என பார்வதி அழைக்க

“எனக்கு வேண்டாம் அம்மா.....பசிக்கலை” என்றாள்.

“அது எப்படி பசிக்காமல் போகும் சாப்பிடு ரோஜா” என சேகர் ஒரு அதட்டல் போட பேசாமல் அமர்ந்து சாப்பிட்டாள்.

“இன்னைக்கு என்ன பூஜை வேண்டுதல்னு வீட்டை அமர்க்கலபடுத்திட்டு இருக்க” என சாப்பிட்டு கொண்டே கேட்டார் சேகர்.

“அது வந்துப்பா இன்னைக்குதான் செம் ஆரம்பிக்குது......கடைசி வருஷம் வேற....பாஸாகனும்ல அதான்” என்றாள் மெதுவாக.....

“என்னது இன்னைக்கு பரீட்சையாயாயயாய என அதிர்ந்தவர் அப்புறம் நேத்து ஆரம்பம் சினிமாவுக்கு போயிட்டு வந்த” என கேள்வியுடன் அவளை பார்க்க

“அதான்பா பரிட்சை ஆரம்பிக்குதுல...அதான் சென்டிமென்ட்டா ஆரம்பம் படத்துக்கு போனேன்....சும்மா தல அதுல கலக்கிருக்கார்ப்பா என அவள் படத்தை பற்றி பேச ஆரம்பிக்க...சேகர் அவளை பார்க்க...அமைதியானாள் ரோஜா.

உடனே “அதான் நான் ஆரம்பித்துல இருந்து சொல்லிட்டு இருக்கேன்...... செல்லம் கொடுக்காதீங்கனு ..........பாருங்க பரீட்சை அன்னைக்கு படத்துக்கு போயிட்டு வந்திருக்கா” என பார்வதி புலம்ப

“ஏன் ரோஜா இப்படி பண்ற .......நான்கு வருஷம் படிச்சுட்ட...இதும் கடைசி செம் ....இதுல எந்த அரியரும் இல்லாம முடிச்சாதானம்மா அடுத்தது என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்” என்றார் சேகர்.

அம்மாவை முறைத்து கொண்டே “இல்லப்பா கண்டிப்பா இந்த முறையும் பாசாகிடுவேன்.....மதிப்பெண் அதிகம் வராது அவ்ளோதான்.......எவ்ளோநேரம் உட்கார்ந்து எழுதறது......போர் அடிக்குது” என சொல்லிகொண்டே எழுந்தவள் கையை கழுவிக்கொண்டு கிளம்பினாள்.



“ரோஜா எல்லாமே எடுத்துக்கமா....எதையும் மறந்திட்டு போய்டாத என சொல்லிகொண்டே அவள் முறைத்தாலும் மனம் கேட்காமல் பார்வதி அவள் பின்னே வந்தவள் அவளிடம் எதவாது படிச்சுருக்கியா கண்ணு” என மெதுவாக கேட்டாள்.

“அச்சோ அம்மா படிச்சு பரீட்சை எழுதறது அந்த காலம்...படிக்காமலே பாஸாவறது இந்த காலம்......நீ அந்த காலம்...நான் இந்த காலம்....என்ன அம்மா நீ......பாஸ் என்கிற பாஸ்க்கரன் படம் பார்த்தியா ....அதுல அந்த ஹீரோவின் அம்மா எவ்வளவு நல்ல வார்த்தை சொல்லி வழி அனுப்புவாங்க....நீயும் தான் இருக்கியே ......என சலித்தபடியே மீண்டும் வந்து சாமி கும்பிட்டு கல்லூரிக்கு கிளம்பினாள்...

இது ரோஜாவின் நெடுநாள் பழக்கம்.சிறுவயதில் ரோஜா பள்ளி செல்ல அடம்பிடிக்க அவளது தாத்தா தான் தகுமானம் சொல்லி அழைத்து செல்வார்.ஒருமுறை மூன்றாம் வகுப்பு படிக்கும்போது அவளுக்கு காய்ச்சல் வர தேர்விற்கு படிக்கவில்லை.இதனால் பள்ளி செல்ல அடம்பிடிக்க அவளது தாத்தா அவளை சாமி அறைக்கு அழைத்து வந்து இந்த சாமிய வேண்டிகிட்டு நீ பரீட்சை எழுத்தினா பாசாகிடலாம் என சொல்ல அவளும் அப்படியே செய்ய எட்டாவது வரை எல்லாரும் பாஸ் என்பது அவளுக்கு தெரியாத காரணத்தினால் அவள் பாசானதும் சாமிதான் காரணம் என முடிவு செய்தவள் அதில் இருந்து எப்போது தேர்வு வந்தாலும் வீடே பக்தி மயமாக காட்சி அளிக்கும்.இன்றும் அதே தான் நடந்து......இப்படி தெய்வங்களின் துணையுடன் நமது நாயகி BL இறுதியாண்டு தேர்வு எழுத சென்றாள்..

காரில் ஏறியவள் சட்டன்று திரும்பியவள் “எங்கே பாட்டியை காணோம்” என கேட்க

தான் கேட்டதற்கு எடக்குமுடக்காக பதில் பேசிவிட்டு அவள் பாட்டியை கேட்டதும் பார்வதி ஏதும் பேசாமல் முகத்தை திருப்பி கொண்டார்.

அதற்குள் “இதோ வந்திடறேன் ரோசா ” என்ற படி மரகதம் வர

“சரி பாட்டி நான் கிளம்பறேன் என காரில் அமர்ந்தவள் அதற்குள் மரகதம் ஏன் ரோசா இன்னைக்கு என்ன பரீட்சைனாவது தெரியுமா?” என கேட்க

“யாருக்கு தெரியும்....கேள்வித்தாள் வாங்கி பார்க்கும் போது தான் தெரியும்.....அதெல்லாம் அவங்க பார்த்துக்குவாங்க.....நமக்கு எதுக்கு அதெல்லாம்” என சொல்லிகொண்டிரும்போதே கார் கிளம்பிவிட்டது.

“இப்படி பண்ணிட்டு இருக்காளே...... இவளை எப்படித்தான் சமாளிக்கிறது” என பார்வதி வாய் விட்டு புலம்ப

“மரம் வச்சவன் தண்ணீர் ஊத்துவான் பார்வதி...நீ கவலைபடாதே....எவ்ளோ பெரிய கஷ்டத்துல இருந்து வெளியே வந்திட்டோம்.....இத சமாளிக்க மாட்டோமா” .....என வீட்டுக்கு பெரியவராய் ஆறுதல் சொல்ல அவரை பாசத்துடன் பார்த்தாள் பார்வதி.



தனது கிராமமான குளத்தூரில் இருந்து தன் தந்தையுடன் தான் எப்போதும் கல்லூரிக்கு செல்வாள் ரோஜா.....இன்றும் அது போல் காரில் சேகரும் ரோஜாவும் சென்று கொண்டிருந்தனர்.

“இந்த வருசத்தோட படிப்பு முடியுது” ... என சேகர் ஆரம்பிக்க

“ம்ம்ம்...ஆமாம்ப்பா” என்றாள் ரோஜா.

“அப்புறம் என்ன செய்வதாக உத்தேசம் ரோஜா” என மெதுவாக பேச்சுவார்த்தயை தொடங்கினார் சேகர்.

ஆனால் அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை....முகம் இறுகி போய் அவள் அமர்ந்திருக்க இதை அவர் எதிர்பார்த்தது தான் என்றாலும் இனியும் இதை தொடரவிடகூடது என்று நினைத்து தான் பேச ஆரம்பித்தார்.

சிறிது நேரம் இருவரும் அமைதி காத்தனர்.
 

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
“இந்த வருசத்தோட படிப்பு முடியுது” ... என சேகர் ஆரம்பிக்க

“ம்ம்ம்...ஆமாம்ப்பா” என்றாள் ரோஜா.

“அப்புறம் என்ன செய்வதாக உத்தேசம் ரோஜா” என மெதுவாக பேச்சுவார்த்தயை தொடங்கினார் சேகர்.

ஆனால் அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை....முகம் இறுகி போய் அவள் அமர்ந்திருக்க இதை அவர் எதிர்பார்த்தது தான் என்றாலும் இனியும் இதை தொடரவிடகூடது என்று நினைத்து தான் பேச ஆரம்பித்தார்.

சிறிது நேரம் இருவரும் அமைதி காத்தனர்.

“ரோஜா நான் எதுக்கு சொல்றேனா “என அவர் மீண்டும் ஆரம்பிக்க

“அப்பா ப்ளீஸ்” என அவரை பார்த்தவள் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு நிற்க மகள் முகம் சுளித்தாலே பரிதவிக்கும் தந்தை அவளது கண்ணீரை பார்த்ததும் அந்த பேச்சை அதோடு முடித்து கொண்டார்.அதற்க்கு பிறகு இருவரும் பேசவில்லை.

சேலம் சட்ட கல்லூரிக்குள் கார் நுழைந்ததும் அவளது தோழிகள் வந்து விட அதுவரை இருந்த மௌனம் களைந்து முகத்தில் சந்தோசம் பொங்க தந்தையிடம் விடைபெற்றுக்கொண்டு அவர்களுடன் சென்றாள் ரோஜா.

“ஹே எல்லாரும் படிச்சுட்டு வந்து இருக்கிங்களா” என அவள் கேட்டு கொண்டிருக்க ...அங்கு ஒரு மாணவன் திரு திருவென முழித்து கொண்டு நின்று கொண்டிருந்தான்.

தோழிகளிடம் பேசிகொண்டே அவனை பார்த்தவள் ...இவன் ஏன் இப்படி முழிக்கிறான் என கேட்டாள்.

உடனே அருகில் இருந்த தரணி “இன்னைக்கு நமக்கு பிசினெஸ் லா எக்ஸ்சாம்.....அதான் நமக்கு வராதே. இவன் நம்ம கல்லூரியில் இரண்டாவது வருடம் படிக்கிறான்.....தேர்வுல உனக்கு பக்கத்துலதான் இவன் உட்காறான்........அதுனால அவனோட சப்ஜெக்ட் படிக்காம நம்மோட சப்ஜெக்ட் பிசினெஸ் லா படிச்சுட்டு வர சொன்னோம்....அதான் பயபுள்ள இப்படி மிரண்டு நிற்குது” என்றாள்.

“ஓ...என்றபடி அவன் அருகில் சென்றவள் தம்பி இங்க வா” என அழைக்க அவனும் பயந்து கொண்டே வந்தான்.

“இங்க பாரு எதுக்கும் பயப்படகூடாது என அவனுக்கு ஆறுதல் சொல்வது போல் ஆரம்பித்தவள் ......நீ இப்பதான் இரண்டாவது வருடம் படிக்கிற ...உனக்கு இன்னும் இரண்டு வருடம் இருக்கு.......அடுத்த முறை எழுதி பாஸ் பண்ணிடலாம் ........ஆனா நாங்க அப்படியா................. இது கடைசி வருடம்.......அதுனாலதான் இப்படி செய்ய வேண்டியதா இருக்கு .........நாலு பேருக்கு நல்லது நடக்கணும்னா எதுவும் தப்பில்லை புரிஞ்சுதா ” என வேலு நாயாக்கர் டையலாக்கில் அவள் முடிக்க

ஏற்கனவே குழம்பி போய் இருந்தவன் மேலும் பயந்து மிரண்டு போனான்.

“சரி...சரி பையன் தெளிவாகறதுக்கு முன்னாடி பலி பீடத்திற்கு அச்சோ சாரி பரீட்சை அறைக்கு கூட்டிட்டு போங்க” என சொன்னவள் பின்னர் திரும்பி தரணியிடம் என்னடி இவன் இப்பவே இப்படி முழிக்கிறான்...தேருவானா என சந்தேகத்துடன் கேட்டாள் .

“ரோஜா ஆள் தான் இப்படி..............நல்ல படிக்கிற பையன்.... இவன் ரேங்க் கோல்டர்....... ........நம்ம சீனியர் பசங்களை வச்சு மிரட்டி இருக்கோம்......செக் பண்ணிட்டோம்...கேட்டதுக்கு எல்லாம் சரியா பதில் சொல்றான்......நீ கவலை படாதே.......இந்த தேர்வுல நம்ம கண்டிப்பா ஜெயிப்போம் ” என சந்தோசமாக சொன்னாள்.

“ம்ம்ம்ம்....பார்க்கலாம்.....இந்த சப்ஜெக்ட் மட்டும் தான் நம்மல இந்த பாடு படுத்தது....மத்தது எல்லாம் பிரச்சனை இல்லை” என சொல்லிகொண்டே உள்ளே சென்றாள் ரோஜா.....

இப்படி மிகவும் சிரமப்பட்டு கஷ்டப்பட்டு பல பேரை கலவரபடுத்தி BL இறுதியாண்டு தேர்வை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தாள் ரோஜா .



கவலைகளை மறந்து

கனவுக்கு வடிவம் கொடுத்து

அதில் தன்னை நிலை நிறுத்தும்

பருவமே கல்லூரி வாழ்க்கை.

பலருக்கு அது வாழ்க்கை

சொல்லி தரும் இடம்.

சிலருக்கோ வாழ்க்கையை

வாழ்ந்து பார்க்கும் இடம்!!!!!!!!!!!!!
 
  • Like
Reactions: Kajol Gajol