அத்தியாயம் -11
மறுநாள் எப்போதும் போல் அவள் அலுவலகத்தில் நுழைய சிரித்து கொண்டே குட்மார்னிங் சொல்லும் பட்டாபி ஏதும் சொல்லாமல் அமர்ந்திருக்க இவளும் ஏதும் பேசாமல் வந்து அமர்ந்து தன் வேலையை தொடர்ந்தாள்.
தேவா அழைப்பதாக மணி வந்து சொன்னதும் எழுந்து உள்ளே சென்றவள் அங்கு தேவா முன் ஒருவன் அமர்ந்திருக்க ரோஜாவை பார்த்ததும்........ “ம்ம்ம் ரோஜா இவரிடம் இவர் வழக்கு சம்பந்தமான விபரங்களை குறிப்பெடுத்து கொண்டு அதற்கான டாக்குமென்ஸ் எல்லாம் வாங்கி வைத்து விடு என்றவன் அவரிடம் திரும்பி நீங்கள் கவலை படாதீர்கள் சார் ....அந்த இடம் உங்களுக்கு தான் என சொன்னவன் ஆனால் நான் கேட்கும் பீஸ் சொன்னபடி எனக்கு வந்து விடவேண்டும் என்றவன் நீங்கள் வெளியே சென்று அமருங்கள் ....சிறிது நேரத்தில் எனது ஜூனியர் வக்கீல் உங்களை அழைப்பார் என சொல்லி அவரை அனுப்பியவன் அவன் சென்றதை உறுதி செய்தபின் இங்கு உட்கார் ரோஜா” என்றான்.
ஏதாவது தவறு செய்து விட்டோமோ என பயத்துடன் அவன் முன்பு அமர .... அவனோ அவளை ஆழமாக பார்த்து கொண்டே ”ஆமாம் ரோஜா நீ எப்போதும் இப்படி தானா .....இல்லை என்னிடம் மட்டும் இப்படி நடந்து கொள்கிறாயா” என கேட்டான்.
அவன் என்ன சொல்கிறான் என தெரியாமல் திரு திருவென அவள் விழிக்க
“நேற்று நீ செய்த வேலையை சொன்னேன்......என் சித்தி உன்னை பற்றி என்னிடம் அப்படி புகழ்ந்து பேசினார்....ஆனால் உன்னை பார்த்தால் அப்படி தெரியவில்லயே” என அவன் முகத்தை சுருக்கியபடி சொல்ல
தன்னை கிண்டல் செய்கிறான் என அவளுக்கு புரிய சில வினாடிகள் ஆனாலும் உடனே சமாளித்து “என்ன சார் பண்றது உங்களை போன்ற தத்திகள் என்றவள் பின்னர் ஹிஹிஹி இல்லை உங்களை போன்ற சிடுமூஞ்சிகளை பார்த்து கொண்டிருந்த அவருக்கு என்னை போன்ற சிட்டு குருவிகளை பார்த்ததும் ஒரே சந்தோசமாக இருந்திருக்கும்....அதை தான் உங்களிடம் பகிர்ந்திருப்பார்” என அவனுக்கு சரியான பதிலடி கொடுக்க
அவளுடைய பதிலில் அவன் கண்ணில் ஒரு மெச்சுதல் தோன்றி மறைய.....”ம்ம்ம்ம் சந்தடி சாக்கில் என்னை பல பேர்களில் என் முன்னே நீ அழைக்கிறாய் என்றவன் ஆனால் ரோஜா இது போன்ற வெட்டி பேச்சுகளில் உன்னோடைய திறமைய காட்டாமால் ஏதாவது உபயோகமாக செய்யாலாமே” என்றான்.
“அப்போ உங்களிடம் நான் இப்போது பேசிக்கொண்டு இருப்பது உபயோகமற்ற வேலை என்கிறீர்களா” என அவள் அவனை போலவே கண்களை சுருக்கி கொண்டு கேட்க
அவளை முறைத்தவன்....”உன்னை எல்லாம்” என ஆரம்பிக்க
உடனே அவள் “சாரி சார்.....உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனக்கு இந்த தொழில் பிடிக்கவில்லை.......ராம் மாம்ஸ் சொன்னாரே என்பதற்காகத்தான் உங்களிடம் நான் ஜூனியராக சேர்ந்தேன்......அதனால் தான் சார் என்னால் இதில் ஈடுபாடு காட்டமுடியவில்லை” என்றாள்.
“பிடிக்காத படிப்பை தேர்ந்தெடுத்து ஏன் படித்தாய்?” என அவன் கோபமாக கேட்க
அவ்ளோ நிதனமாக “சூழ்நிலை என்னை இந்த படிப்பிற்கு தள்ளிவிட்டது” என சொல்லும்போதே அவள் குரல் உள்ளே செல்ல ... தேவாவின் முகத்தில் ஒரு அதிர்வு தோன்றி மறைந்தது.......
சிறிது நேரம் அவளை பார்த்து கொண்டு இருந்தவன்......” பின்பு நீ என்ன திட்டத்தில் இருகிறாய் ரோஜா ....திருமணம் செய்து கொண்டு” என அவன் ஆரம்பிக்க
அதற்குள் “திருமணமா ...எனக்கா ...என சலிப்புடன் கூறியவள் அதெல்லாம் நடக்காத காரியம் சார் என்றவள் நான் எப்போதும் நாளை பற்றி யோசிப்பது இல்லை சார்.......அதெல்லாம் என்னுடைய பள்ளி படிப்புடன் முடிந்து விட்டது........உயிரோடு இருப்பதை வெறுத்து கொண்டு இருக்கிறேன்......இதில் எங்கே எதிர்காலத்தை பற்றி சிந்திப்பது என்றவள் ....விட்டுடுங்க சார்......பழைய விஷயங்களை மறக்கத்தான் இங்கு வந்தேன்” என சொல்லி விட்டு அவள் எழுந்து வெளியே சென்றாள்.
“ரோஜா ...ரோஜா “என அவன் அழைக்க அவள் காதில் அது விழவில்லையா ....இல்லை அவளது நினைவுகள் அவளது கட்டு பாட்டில் இல்லயா என்பது தெரியவில்லை...... தனது இருக்கையில் சென்று அமர்ந்தாள் ரோஜா.
தேவாவோ ஒன்றும் புரியாமல் குழம்பி போனான்.......சிறுபிள்ளை தனமாக நடந்து கொள்கிறாள்.......வயதிற்கு ஏற்ற பக்குவம் இல்லை என அவளுக்கு அறிவுரை சொல்வதற்காக அவன் அவளை இருக்க சொல்ல ஆனால் அவள் பேசியது அவனின் மறு உருவத்தை பார்த்தது போன்று இருக்க.......இது எப்படி சாத்தியம்....தனது வாழ்க்கையில் தான் சந்தித்த அனுபவங்கள் அவனை அப்படி சிந்திக்க வைத்தது....ஆனால் இந்த சிறுபெண் இந்த வயதில் ஏன் இவ்வளவு விரக்தியாக பேசுகிறாள்.....இவளை எப்படி புரிந்து கொள்வது......சிறுபெண் என்று எண்ணி பேசினால் பெரியவர் போல் வேதாந்தம் பேசுகிறாள் என யோசித்து யோசித்து குழம்பி போனான்.
அதற்குள் அவனது தொழில் தொடர்பான அலைபேசி அழைப்புகள் வர பின்னர் அதை மறந்து போனான்.
பட்டாபி ஏதும் பேசாமல் தன் வேலையை செய்து கொண்டு இருந்தான்.ஆனால் மனமோ உண்மையை சொல்லிவிட்டோம்....ரோஜா தன்னை பற்றி என்ன நினைப்பாள் என அவன் தவியாய் தவித்து கொண்டு இருக்க
அப்போது ரோஜாவின் அலைபேசி ஒலிக்க எடுத்து காதில் வைத்தவள் “ஹே தரணி எப்படி இருக்க........டூர் எல்லாம் முடிச்சுட்டு வந்துட்டியா என ஆரம்பித்தவள் சில பல கதைகளை பேசிவிட்டு எனக்கு இங்கு ஒன்றும் பிரச்சனை இல்லை தரணி .... உன்னை மாதிரியே என்னை நல்ல பார்த்துக்கிற என தோழன் பட்டாபி இருக்கான்.......நீ நம்பமாட்டாய் .......ஆண்களில் இப்படி மனிதர்கள் இருகிறார்களா என அவனை பார்த்து நீயே ஆச்சிரியபடுவாய்...... ரொம்ப நல்லவன் தரணி அவன்.......... நேற்று அவனுக்கும் எனக்கும் ஒரு வாக்குவாதம்...அதில் அவனை பற்றி தெரியமால் நான் ஏதோ ஏதோ பேசிவிட்டேன்...அதனால் அவன் என் மேல் கோபமாக இருக்கிறான் போல் தெரிகிறது .......தெரியாமல் பேசிவிட்டேன் ...இனி அப்படி பேசமாட்டேன் என்பதை அவனிடம் சொல்ல பயமாக இருக்கு..அதான் எப்படி சொல்வது என்று யோசித்து கொண்டு இருக்கிறேன்” என பட்டாபியை பார்த்து கொண்டே அவள் பேச
தன் பெயரை அவள் சொன்னதும் அவளை நிமிர்ந்து பார்த்த பட்டாபி அவள் பேசியதை கேட்டதும் மனம் சந்தோசத்தில் துள்ளி குதிக்க அவள் பேசி முடித்து அலைபேசியை வைத்ததும் பட்டாபி அவளை பார்க்க அவளோ புருவத்தை உயர்த்தி என்ன என்பது போல் கேட்டாள்.
அவன் ஒன்றும் இல்லை என தலையை ஆட்ட ....”டேய் அம்மாஞ்சி மாதிரி இருந்துகிட்டு ......எப்ப பார்த்தாலும் இப்படி ஒன்றை கண்ணுல லுக்கு விட்டுடே இருக்காத ” என அவள் எப்போதும் போல் நையாண்டி பேச உடனே பட்டாபி சிரித்து விட அவளும் சேர்ந்து சிரித்தாள்.
பின்னர் பட்டாபி அவளிடம் வந்தவன் “ரோஜா நான் குற்றவாளின்னு என அவன் ஆரம்பிக்க அவன் வாயை பொத்தியவள் அப்படி ஒன்றே நடக்கவில்லை பட்டாபி....என்னை பொறுத்தவரை நீ எப்போதும் என் நலம் விரும்பும் தோழன் சரியா என சொல்லிவிட்டு இதை உடனே கொண்டாடனும் பட்டாபி......எனக்கு பப்ஸ்மற்றும் டொரினோ குடிக்கணும் போல இருக்கே” என அவள் சொல்ல
ஹஹஹா என சிரித்த பட்டாபி “ஆனா ரோஜா ....உன்னை எப்படித்தான் உங்க வீட்ல வச்சு சமாளிசாங்களோ என்றவன் இதோ வாங்கிட்டு வரேன் என கிளம்பினான்.டேய் பட்டாபி அன்னைக்கு ஒரு நாள் வாங்கிட்டு வந்தாயே அந்த கடையிலே வாங்கு” என அவள் சொல்ல
“எப்போது” என அவன் யோசிக்க
“அதான் நீ சார் கூட நீதிமன்றம் செல்லும்போது” என அவள் விளக்க
“அச்சோ ரோஜா அன்று நான் வாங்கவில்லை....வாங்க வேண்டும் என்று சாரிடம் சொன்னேன்....அவர் என்னை முறைத்துவிட்டு நீ வீட்டிற்கு செல் என்றார்.நான் சென்றுவிட்டேன்” என்றான்.
“அப்படி என்றால் அன்று மணி கொண்டு வந்து கொடுத்தது” என அவள் கேட்க
“ஹே அப்போ அது சார் வாங்கி இருப்பார் என்றவன் பரவயில்லை ரோஜா...... உன்னை திட்டினாலும் உனக்கு தேவையானதை சார் பார்த்து பார்த்து செய்கிறார் என்றவன் அன்று அவருடை கார் சர்வீஸ்கு போய்விட உனக்காக வாடகை கார் ஏற்பாடு பண்ணினார் ....இப்போவாவது நம்ம சார் எவ்ளோ நல்லவர் என்று புரிந்து கொள்” என்றான்.
“ஆமாம் .....அந்த ஆளுதான என்றவள் பின்னர் இல்லை இல்லை அவருதான் வேலை சொன்னார்.....அப்போ அவர்தான் அது எல்லாம் செய்யவேண்டும் என கொஞ்சம் மரியாதை கொடுத்து அசால்ட்டாக சொன்னவள் சரி இப்போ நீ வாங்கி வருகிறாயா...இல்லை பேசியே நேரத்தை போக்குக்கிறாயா” என அவனை மிரட்டி கடைக்கு அனுப்பினாள்.
நாட்கள் நகர்ந்தன..... முன்பு போல் இல்லை என்றாலும் வாரத்திற்கு இரண்டு நாட்களாவது தேவாவிற்கும் ரோஜாவிற்கும் சண்டை வந்து விடும்......பட்டாபி தான் எப்போதும் போல் இருவரையும் சமாளிப்பான்.இதில் இரண்டு கேஸில் பட்டாபி தனியாக வாதாடி வெற்றி பெற்றான். தேவா ரோஜாவிற்கு வாய்ப்பு கொடுக்க ரோஜா வேண்டாம் என்று மறுத்து விட்டாள்.
ராம் வீட்டிற்கு வரும்போது எல்லாம் ரதியை சந்தித்தாயா என்றுதான் ரோஜாவை கேட்பான்.அதற்கு இல்லை என்று மட்டுமே அவளிடம் இருந்து பதில் வரும்.சில சமயம் என்ன ரோஜா நீ என அவன் சலித்து கொள்வதை பார்க்க ரோஜாவிற்கு பாவமாக இருக்கும்.ஆனால் வேறு வழியில்லை......இங்கு தேவாவிடம் சண்டைபோடவே அவளுக்கு நேரம் சரியாக இருந்தது.மேலும் குடும்ப விஷயங்களை தேவா அலுவலகத்தில் பேசி ரோஜா கேட்டதில்லை.அதனால் அதற்கான வாய்ப்பு வரவில்லை.
ஒரு முக்கியமான மீட்டிங் சம்பந்தமாக ராம் டெல்லியில் இருந்தான்.இங்கு காவேரி அத்தை அவர்களது நெருங்கிய உறவினர் திருமணம் என்று அன்று காலை கிளம்பினர். ரோஜாவும் இரண்டு நாள் விடுமுறை என்பதால் ஊருக்கு செல்வதாக சொல்லி இருந்தாள்.அன்று இரவு ரோஜா கிளம்புவதாக இருந்தது. எப்போதும் போல் வேலை முடித்து விட்டு அப்படியே ரயில்நிலையம் செல்லும் யோசனையில் வரும்போதே தன்னுடைய பொருட்கள் அனைத்தயும் எடுத்து வந்து விட்டாள் ரோஜா .அத்தையை வீட்டு சாவியை எடுத்து போக சொல்லி விட்டாள்.
எப்போதும் போல் இல்லாமல் இன்று வேலை விரைவாக முடிந்து விட மேலும் மழை வருவது போல் காற்று வேகமாக வீச தேவா இருவரையும் வீட்டிற்கு கிளம்ப சொன்னான்.பட்டாபி ரோஜாவிடம் “இன்னும் ரயிலிற்கு நேரம் இருக்கிறது......நீ என்ன செய்யபோகிறாய் ரோஜா” என கேட்டான்.
அவளோ “அதான் பட்டாபி யோசிக்கிறேன்.......மழை வேறு வரும் போல் இருக்கிறது”.......என அவள் சொல்ல
“நான் வேண்டுமானால் இருந்து உன்னை ரயில் ஏற்றிவிட்டு பின்பு கிளம்புகிறேன் “ என சொன்னான் பட்டாபி.அவள் சிரித்து கொண்டே ஆபிஸின் பின்புறம் இருக்கும் ரயில் நிலையத்திற்கு நீ துணை வருகிறாயா ...ஏன் பாட்டபி......நீ முதலில் கிளம்பு.....நான் இங்கேயே இருக்கிறேன்...அங்கு பார் நம்ம பிதாமகன் புத்தகத்திற்குள் தலையை விட்டு தேடிக்கொண்டு இருக்கிறார்....எப்படியும் இப்போதைக்கு அதில் இருந்து வெளியே வரபோவது இல்லை......அதனால் நான் இங்கு இருக்கிறேன் நீ கிளம்பு “என அவனை வற்புறுத்தி அனுப்பி வைத்தாள்.அவனிடம் பிஸ்கட்டும் சாக்லட்டும் வாங்கிகொண்டே அனுப்பினாள்.
பின்னர் ரெஸ்ட் ரூம் சென்று தன்னை சற்று புதுபித்து கொண்டவள் அலைபேசியில் கேம் விளையாடிக் கொண்டிருந்தாள். .........”நீ வீட்டிற்க்குசெல்லாமல் இன்னும் என்ன செய்து கொண்டு இருகிறாய் “என ஒரு குரல் கேட்க நிமிர்ந்து பார்த்தவள் தேவா நின்று கொண்டிருந்தான்.வாயில் சாக்லட் இருக்க பேசமுடியாமல் அவள் முழிக்க தேவாவிற்கு சிரிப்பு வந்து விட்டது.தன் தலையை லேசாக தடவிகொண்டே உன்னை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது என்றே தெரியவில்லை என சொன்னவன் சரி சரி அதை சாப்பிட்டு விட்டு பேசு” என்றான்.
அவள் சாப்பிட்டு முடித்ததும் .......”அது வந்து சார் நான் இன்று ஊருக்கு செல்கிறேன்......அதான் இங்கிருந்து அப்படியே ரயில் நிலையம் சென்று விடலாம் என்று என அவள் இழுக்க......அதற்கேற்றார் போல் அருகில் அவளது பை இருக்க ....சரி சரி எத்தனை மணிக்கு ரயில்” என்றான்.
“இரவு ஒன்பது மணிக்கு சார்......எப்படியும் வேலை முடிய எட்டு மணி ஆகிவிடும்...அதான் இப்படியே சென்றுவிடலாம் என்று எடுத்து வந்தேன் என்றவள் ஆனால் இன்று நீங்கள் ஆறு மணிக்கே விட்டு விட்டீர்கள்” என அவள் சொல்ல
“ம்ம்ம்ம் தாமதமாக வீட்டிற்க்கு அனுப்பினால் முனகி கொண்டே வேலை செய்வது....சீக்கிரமாக அனுப்பினால் அதற்கும் திட்டுவது......ஆக என்னை திட்டுவதே உனது முழுநேர தொழிலாக வைத்து இருக்கிறாய் என சிரித்து கொண்டே சொன்னவன் அதற்குள் இடிஇடிக்க அவளது உடல் ஒரு முறை சிலிர்த்து நிற்க அதை பார்த்த தேவா சரி நீ இங்கு தனியாக இருக்க வேண்டாம்......நான் நமது அன்னை இல்லத்திற்குதான் செல்கிறேன்....அங்கு சிறிது நேரம் இருந்தால் பின்னர் ரயில் புறபடும் நேரம் நானே உன்னை அழைத்து வருகிறேன்” என கூறினான்.
“இல்லை சார் ...நான் இங்கே இருந்து கொள்கிறேன் உங்களுக்கு ஏன் வீண் சிரமம்” என அவள் அவசரமாக மறுக்க
அதற்குள் மழை தூறல் போட....அவன் அவளை பார்த்து முறைக்க சரி சார் என்றபடி அவன் பின்னால் நடந்தாள்.
இன்றுதான் முதன் முறையாக தனியாக தேவாவுடன் காரில் பயணம் செய்கிறாள்.எப்போதும் பட்டாபி உடன் இருப்பான்.பெரும்பாலும் பட்டாபியும் இவளும்தான் செல்வார்கள்...தேவா தனியாக தான் செல்வான்.
கார் வெளியே நின்றதால் அவர்கள் காரில் ஏறுவதற்குள் சிறிது நனைந்து விட்டாள் ரோஜா....காரில் ஏறி அமர்ந்தவன் கண்ணாடியை சரி பண்ணுவதற்காக அதை பார்க்க மழைத்துளிகள் அவள் முகத்தில் முத்துகளாக பதிந்திருக்க, அதில் ஒரு முத்து அவளது இதழில் படிந்திருக்க , அவ்ளோ வெளியில் மழையை வேடிக்கை பார்க்க, கண்களில் சந்தோசம் சதிராட, அதில் அவன் மனம் சிதறிப்போனது.......அதை சிறிது நேரம் ரசித்தவன் பின்னர் அவளிடம் “ஏன் ரோஜா உனக்கு மழை என்றால் ரொம்ப பிடிக்குமா” என கேட்டுகொண்டே வண்டியை எடுத்தான்.
“ரொம்ப ரொம்ப பிடிக்கும் சார்.....அதும் மழையில் நனைவது என்றால் கொள்ள இஷ்டம் என்றவள் நீங்க நனைந்து இருக்கிங்களா சார்......நல்ல மழையில் எங்கள் தொட்டிகட்டு வீட்டில் அந்த திட்டில அமர்ந்து கொண்டு சூடாக ஏதாவது சாப்பிட்டு கொண்டே நம்ம வாணி ஜெயராம் அம்மா பாட்டு கேட்டு பாருங்கள்......அப்படியே நம்மலே நாம் மறந்திடுவோம் என அவள் சொல்ல சொல்ல அவள் முகங்கள் காட்டும் அபிநயத்தை கண்ணாடியில் பார்த்து ரசித்தவன் அதை நீ எந்த அளவிற்கு ரசித்து இருகிறாய் என்பதே நீ சொல்லும் விதத்திலே தெரிகிறது ரோஜா........உன்முகத்தை பார்த்து கொண்டு இருந்தாலே அந்த உணர்வு வருகிறது என என்ன சொல்கிறோம் எனதை உணராமல் அவன் தன் மன உணர்வை வெளியிட அவளும் அதை உணராமல் ஆமாம் சார்” என தலை ஆட்டினாள்.
அதற்குள் அவனது அலைபேசி ஒலிக்க எடுத்து காதில் வைத்தவன்” சரி சார்....இங்கு பக்கத்தில் தான் இருக்கிறேன்.....உடனே வந்து விடுகிறேன்....ஆனால் பத்து நிமிடத்தில் கிளம்பி விடுவேன் என சொல்ல அதற்க்கு எதிர்புறம் வந்த பதிலில் இல்லை சார் கண்டிப்பாக வந்து விடுகிறேன்...இதோ அருகில் வந்துவிட்டேன்” என்றவன் சொல்லிகொண்டே அருகில் இருக்கும் ஒரு ஹோட்டலுக்குள் வண்டியை செலுத்தினான் தேவா.
சாலையில் சென்று கொண்டிடுருந்த கார் திடிரென்று யூ டர்ன் எடுத்து அருகில் உள்ள ஓட்டலுக்குள் செல்ல ஒன்றும் புரியாமல் பார்த்து கொண்டிருந்தாள் ரோஜா.
கார் நிறுத்தும் இடத்தில் வண்டியை நிறுத்தியவன் திரும்பி அவளை பார்க்க அவளோ புரியாமல் அவனை பார்க்க ....”ரோஜா நாம் கிளைன்ட் சுப்பு இருக்காரு இல்லயா ....அவரு இன்னைக்கு இரவு யூ எஸ் கிளம்பாராம்...கேஸ் சம்பந்தமாக ஏதோ பேசனுமாம்......இங்கே வரசொன்னார்......அதான் வந்தேன்......வா உள்ளே போய் அவரை பார்த்திட்டு உடனே கிளம்பி விடலாம் “என்றான்.
“என்னது ஹோட்டளுக்கு உள்ளேயா என அதிர்ந்தவள் இல்ல சார் நான் வரலை...நான்வரலை” என சீட்டில் ஒண்ட
“ஹே ரோஜா என்னது இது....அதான் நான் கூட இருக்கேன்ல ....மேலும் உனக்கு சுப்பு சாரை நல்ல தெரியும் அப்புறம் என்ன” என அவன் கேட்க
“இல்ல சார் நீங்க போங்க...நான் காரிலே இருக்கேன் என்றவள் முகம் பயத்தில் வேர்த்திருக்க அவள் திக்கி திணறி சொல்லிக்கொண்டு இருக்கும்போதே இடிஇடிக்க அவள் கண்களை மூடிக்கொண்டு காதையும் பொத்திக்கொள்ள.....அதை பார்த்ததும் தேவாவிற்கு கோபம் வர நீ ரொம்ப நல்ல பொண்ணுன்னு எனக்கும் தெரியும் ரோஜா...அதற்காக இப்படி எல்லாம் நடிக்க வேண்டாம்...இங்கு ஹோட்டலுக்கு வரும் பெண்கள் எல்லாம் மோசமானவர்கள் இல்லை......நீ என்னை தவறானவன் என்று நினைகிறாயா “ என அவள் வேண்டுமென்றே வர மறுக்கிறாள் என நினைத்து கோபத்தில் வார்த்தைகளை கொட்ட
“அச்சோ அப்படி எல்லாம் இல்லை சார்” என அவள் வேகமாக அதை மறுத்து சொல்லிக்கொண்டு இருக்கும்போதே
“ஹே தேவா வந்திட்டிங்களா...வாங்க...வாங்க ...நானும் வந்துவிட்டேன்...... என சொல்லியபடி அங்கு சுப்பு காரில் இருந்து இறங்கி நின்றார்.
அவரை பார்த்ததும் சிரித்துகொண்டே “நான் சொன்னபடி நடப்பவன் சுப்பு என்றவன் போகலாமா” என கேட்க
“ம்ம்ம் வாங்க” என சொல்லியபடி சுப்பு முன்னே செல்ல
தேவா சட்டென்று திரும்பி ரோஜாவை முறைத்தவன் ...”இப்போது நீ வருகிறாயா இல்லயா....பொது இடத்தில் என் மானத்தை வாங்காதே” என மெதுவாக அதே சமயத்தில் அழுத்தமாக கர்ஜிக்க அவன் முகத்தில் கோபத்தின் சுவாலை கொழுந்து விட்டு எரிய அதை கண்டு மேலும் நடுங்கிய ரோஜா நடுக்கத்துடன் கீழே இறங்க அவள் கைகளை படித்தவன் பின்னர் அவளை திருப்பி பார்க்காமல் முன் நடந்தான்...இல்லை அவளை இழுத்து கொண்டு சென்றான்.
ரோஜாவோ நடுக்கத்தில் நடக்க முடியாமல் தடுமாறி வர, பயத்தில் கண்கள் இருள, உள்ளே நுழைந்ததும் அங்கு ஏதோ ஒரு பார்ட்டி நடக்க, அதன் சத்தம் ரோஜாவை மேலும் அதிர்வடைய செய்ய உள்ளே நான்கு அடி எடுத்து வைத்திருப்பாள் ....அந்த ட்ரம்ஸ் சத்தை கேட்டதும் ....தன நிலை மறந்தவள் இல்லை இல்லை என வேகமாக கத்திக்கொண்டு அவன் கையை உதறிவிட்டு வேகமாக வெளியே ஓட எதிரில் வருபவர்களை எல்லாம் இடித்து கொண்டு அவள் ஓடியதை பார்த்ததும் அதிர்ந்த தேவா அவளின் பின்னால் ஓடினான்.
எங்கே செல்கிறோம் என்று தெரியாமல் கால் போன திசையில் அவள் ஓட அது ஹோட்டலின் வெளிவயிலில் வந்து நிற்க இவ்ளோ “இல்லை...இல்லை...நான் மாட்டேன்.....என்னை விட்டுட்டுங்க” என கத்தியபடி நடுரோட்டில் மழையில் ஓட நல்ல வேலை சாலையில் வாகனம் ஏதும் இல்லாததால் அவளை சீக்கிரமாக பிடித்து விட்டான் தேவா.
அவளை பிடித்தவன் “ரோஜா ரோஜா.....என்னாச்சு...ஏன் இப்படி ஓடுகிறாய்” என அவன் காத்த ...அவன் முகத்தை பார்த்தும் அப்படியே மயங்கி அவள் விழ ரோஜா...ரோஜா உனக்கு என்னாச்சு என பதறியவன் அவளை கைகளில் அள்ளிகொண்டு வேகமாக கார் நிற்கும் இடத்திற்கு ஓடினான்.
அவளை காரில் போட்டவன் பதட்டத்தில் மனம் படபடக்க கார் நேராக மருத்துவமனை வாசலில் நின்றது....உள்ளே அவசர சிகிச்சையில் அவளை அட்மிட் செய்து விட்டு அப்படியே அருகில் இருக்கும் சுவற்றில் சாய்ந்தவன் கண்களை மூடியதும் அவளது கதறல் மட்டுமே அவன் கண் முன்னால் வர “அய்யோ அம்லு ...என்னடா இது ...உனக்கு என்னடா ஆச்சு ......என்னை நீ அவமதிக்கிறாய் என்று நினைத்து தானே கட்டாயபடுத்தி அழைத்து சென்றேன்......அய்யோ எனக்கு ஒன்றும் புரியவில்லேயே” என அவன் வாய் விட்டு புலம்ப
அருகில் இருந்த ஒரு பெரியம்மா....”தம்பி கவலை படாதிங்க உங்க மனைவிக்கு ஒன்றும் ஆகாது”.......என ஆறுதல் சொன்னார்.
“அம்மா...அம்மா அவளுக்கு ஒன்று ஆகாது இல்லயா” என கண்களில் வலியையும் ,வார்த்தையில் வேதனையும் நிறைந்திருக்க சிறுபிள்ளை போல் அவரிடம் கேட்டவன்
அவரோ “ஒன்றும் ஆகாது தம்பி.... நீ கவலைப்பாதே என ஆறுதல் சொன்னவர் ஆமாம் உங்களுடன் வேறு யாரும் வரவில்லயா” என கேட்டார்.
அப்போது தான் அவனுக்கு உரைக்க ம்ம்ம்..இல்லை என்றவன் பின்னர் அலைபேசி எடுத்து தன தங்கைக்கு போன் செய்தவன் நீ உடனே கிளம்பி மருத்துவமனை வா என சொல்லிவிட்டு அப்படியே சாய்ந்தான்.
சிறிது நேரத்திற்குள் அங்கு வந்த ரதி “என்ன அண்ணா ...என்னாச்சு” என பதறி கேட்க
“ரதிமா...ரதிம்மா” என அவள் கைகளை பிடித்தவன் அவன் கணகளில் இருந்து அருவி போல் கண்ணீர் வர முதன் முதலாக தேவா அழுது இன்றுதான் பார்க்கிறாள்.அந்த அதிர்ச்சியில் “என்ன அண்ணா ...விஷயம் என்னனு சொல்லுங்க” என அவள் வேகமாக கேட்டாள்.