• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் - 12

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
அத்தியாயம் -12

அனைவரும் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருக்க.....உள்ளே மருத்துவர் தனது பணியை செய்து கொண்டு இருந்தார்.

ஒரு சில நேரங்களில் கடக்கும் நொடிகள் கூட நமக்கு கண யுகமாக தோன்றும்....தேவாவின் மனநிலையும் அதே போல்தான் இருந்தது....ஏன் மரகதம்,பட்டாபி,நாதன் அனைவரும் அவசரசிக்கிசை பிரிவு அறையை பார்த்து கொண்டிருக்க...தேவாவோ கண்ணை மூடிகொண்டு அமர்ந்திருந்தான்....மனம் முழுவதும் ரோஜாவிற்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.

தன் மீது ஒரு கை பட சட்டென்று வேகமாக எழுந்தவன் ...”ஹே நான் தான் தேவா” என நாதன் அவன் தோள்களை அழுத்த அப்படியே அமர்ந்தான் தேவா.......இதுபோன்ற தேவாவை நாதனும் இது வரை பார்த்தது இல்லை......ரோஜாவை ஊருக்கு அழைத்து செல்வது என முடிவு பண்ணியதும் நாதனை தான் முதலில் அழைத்தான் தேவா......ஏனெனில் அவனுக்கு மட்டும்தான் தெரியும்....தேவா எந்த சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்வான் என்று...மேலும் தேவாவிற்கும் ஒரு துணை தேவைபட்டது.அதனால் நாதனை வரசொன்னான்.அவன் வந்தது நல்லதற்குத்தான்........ஆம்புலன்சில் வரும் வழயில் ரோஜா திடீரென்று அலறி...இல்லை...இல்லை ...நான் வரலை....என்னை விட்டு விடுங்கள் என கத்த தேவாவோ துடிதுடித்து போய்விட்டான்.ரதி உடன் இருந்ததால் அவளுக்கு முதல் உதவி செய்து உறங்க வைத்தாலும் ...அய்யோ என்னால் தான் ரோஜாவிற்கு இப்படி ஆகிவிட்டது....அவள் வரமாட்டேன் என்றுதான் சொன்னாள்....நான்தான் வற்புறுத்தி அழைத்து சென்றேன் என சொல்லி அவன் அழுக ....நாதன் தான் அவனை தேற்றினான்.

அதற்குள் வெளியே வந்து மருத்துவர் “ரோஜாவிற்கு ஏதும் பிரச்சனை இல்லை....ஆனால் கண் விழிக்க நேரமாகும் அவருக்கு முழு ஓய்வு தேவை என சொன்னவர்....சேகர் எப்போது வருவார்” என மரகதத்தை பார்த்து கேட்டார்.

ஆம் சேகரும் பார்வதியும் காவேரி சென்ற திருமணத்திற்கு சென்று இருந்தார்கள்......அங்கும் அலைபேசி எடுக்கவில்லை......

மரகதமோ இரண்டு நாட்களில் வந்து விடுவார்கள் என்று சொன்னவர்...”.ஏன் டாக்டர் என்ன விஷியம்....எதா இருந்தாலும் என்கிட்டே சொல்லுங்க” என்றார்.

“பயப்படும்படி எதுவும் இல்லை......சேகரிடம் சிறிது பேசவேண்டும் அதான் கேட்டேன் என்றவர்.......சரி ரோஜாவை நாங்கள் பார்த்து கொள்கிறோம் ....நீங்கள் வீட்டிற்கு சென்று விட்டு வாருங்கள்..........முதலில் நீங்கள் ரத்த கொதிப்பிற்கு மாத்திரை எடுத்து கொண்டீர்களா” என குடும்ப மருத்துவராக இருப்பதால் மரகதத்தின் உடல் நிலையை அவர் அக்கறையாக விசாரித்தார்.

“ இல்லை டாக்டர் ...ரோஜா கண் விழிக்காமல் நான் எங்கும் செல்ல மாட்டேன் என பிடிவாதமாக சொல்லிவிட்டார் மரகதம்.... ....பின்னர் மருத்துவர் சுற்றிலும் பார்த்தவர் இவர்கள் எல்லாம் யார் என தேவாவை பார்த்து மரகதத்திடம் கேட்க இவரிடம் தான் ரோஜா ஜூனியராக வேலை பார்க்கிறாள்” என மரகதம் தேவாவை அறிமுகம் செய்து வைத்தார்.....

“ஓ நீங்கள்தான் கிரிமினல் லாயர் இராக தேவானா ....உங்களை பற்றி நிறய கேள்விபட்டிருக்கேன்........உங்களை சந்தித்ததில் மிகவும் சந்தோசம்” என அவர் கை நீட்ட அவனோ அதை எல்லாம் உணரும் மன நிலையில் இல்லை.....பின்னர் நாதன் தான் அவனை உலுக்கி கைகுலுக்க வைத்தான்.சரி நான் கிளம்புகிறேன்.....ரோஜா கண் விழித்ததும் எனக்கு தகவல் கொடுங்கள்” என சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார்.

சிறிது நேரம் அனைவரும் அங்கு அமர்ந்திருக்க...ரதியோ ரோஜாவிற்கு துணையாக உள்ளே இருந்தாள்.

பின்னர் நாதன் பட்டாபியிடம் ...”பட்டாபி நீ பாட்டியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு செல் என்றவன் .......அவரிடம் சென்று பாட்டி ரோஜாவை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.......நீங்கள் சென்று உணவும் மாத்திரையும் சாப்பிட்டு விட்டு வாருங்கள்....அதற்குள் ரோஜா விழித்தால் நாங்கள் உங்களுக்கு தகவல் தருகிறோம் என பொறுமையாக சொன்னான்.

மரகத்ததிற்கும் சற்று உடல்நிலை தொந்தரவு செய்வது போல் தோன்ற....ஏனெனில் அவர் இரவு சாப்பிடவே இல்லை.......சேகரும் பார்வதியும் ஊருக்கு சென்றுவிட்டதால் டிவியில்எல்லா நிகழ்ச்சியும் பார்த்துவிட்டு பின்னர் சாப்பிடலாம் என நினைத்து இருந்தார்.......ஆனால் அப்படியே உறங்கிவிட்டார்......விடியல் காலை இரண்டு மணி அளவில் வீட்டு கதவை தட்ட ..... துணை இருக்கும் ஒரு பெண் எழுந்து கதவை திறந்தவள் ஆம்புலன்ஸ் நிற்பதை பார்த்ததும் ...என்னவென்று தெரியாமல் முழிக்க......அதற்குள் மரகதம் “யாரு சோலையாம்மா” என கேட்டு கொண்டே வெளியே வந்தார்.

அப்போது காரில் இருந்து வேகமாக இரங்கி வந்த நாதன் “இங்கு சேகர் அவங்க வீடு” என கேட்க ....ஆமா என சொன்ன மரகதம்....கண்கள் ஆம்புலன்சே பார்க்க...மனம் படபடக்க ......”ஏன் என்ன வேணும்” என்றார்....அப்போது அவர் குரலின் தடுமாற்றத்தை புரிந்து கொண்ட நாதன்........”இல்லை ரோஜாவிற்கு” என்றதும்....”என்னது ரோஜாவிர்க்கா” என அவர் அதிர்ந்தவர் வேகமாக ஆம்புலன்ஸ் அருகில் வர ...அதற்குள் ரதி இறங்கி “இல்லை பாட்டி ...ரோஜாவிற்கு சிறிது மயக்கம்....அதான் என்றவள்” தான் மருத்துவர் என்றும் தன்னை அறிமுகபடுத்த....வேகமாக உள்ளே சென்று ரோஜாவை பார்த்தவர் ...அப்படியே மயக்கம் அடைய பின்னர் அவரை தெளியவைத்து நாதனும் ரதியும் அவர்க்கு நிலைமை சொல்லி புரியவைத்து அவள் முன்பு பார்த்த மருத்துவரின் விபரங்களை கேட்டு அந்த மருத்துவமனயில் அவளை கொண்டு வந்து சேர்த்தனர்......

மரகதமும் ஆம்புலன்சில் வருவதாக சொன்னதால் ரதி ஆம்புலன்சில் இருந்து இறங்கி காரில் ஏறி கொள்ள.நாதன்,பட்டாபி ரதி மூவரும் காரில் வர மரகதம் ரோஜாவின் அருகில் அமர்ந்தார்.

இங்கு இவ்வளவ்வு விஷயங்கள் நடந்து கொண்டிருக்க தேவாவோ ரோஜாவை விட்டு இம்மியும் அசையவில்லை.......அவளை விட்டு நகர மறுத்து விட்டான்....தன்னால் தானே ரோஜாவிற்கு இந்த நிலைமை என அவன் மனதிற்குள் மருங்கி புளுங்கினான்.

உள்ளே நுழைந்ததும் ரோஜாவை பார்த்தவர் அவளது ஒரு கை தேவாவின் கைபிடிக்குள் இருக்க...அது அவளை என்றும் கைவிடபோவதில்லை என்பது போல் அழுத்தி பிடித்திருந்தான் தேவா......உள்ளே நுழைந்ததும் அதை பார்த்த மரகதம் பின்னர் தேவாவிடம் எதுவும் பேசவில்லை... ...என்ன நடந்தது என்ற விபரம் எதுவும் அவர் தேவாவிடம் கேட்கவில்லை......

“வீட்டிற்கு செல்வதற்கு முன் நான் மருத்துவரை பார்க்க வேண்டும்” என்று சொன்ன மரகதம் “அவர் இருக்கும் அறைக்கு என்னை அழைத்து செல்லுங்கள்” என்றார்.நாதன் அவர் துணைக்கு வர சட்டென்று எழுந்த தேவா “இல்லை நானும் மருத்துவரிடம் பேசவேண்டும்....உங்கள் உடன் வருகிறேன்” என அவருடன் சென்றான்.

மருத்துவர் மரகதத்தை பார்த்ததும் ...”என்னம்மா நீங்கள் இன்னும் வீட்டிற்கு செல்ல வில்லயா” என கேட்க

“இல்லை டாக்டர் ....நீங்கள் உணமையை சொல்லுங்கள் .....இப்போது ரோஜாவிற்கு எப்படி இருக்கிறது....மீண்டும் பழயது போல” என ஆரம்பிக்க

“அதே போல்தான்ம்மா....ஆனால் அந்த அளவிற்கு சீரியஸ் இல்லை.... மிகவும் பயந்து இருக்கிறாள் என்றவர்....நான் தான் உங்களிடம் படித்து படித்து சொன்னேன்......அவளுக்கு அந்த நினைவு வராமல் பார்த்து கொள்ளுங்கள் என்று........இப்போது பாருங்கள்...அனைவற்க்கும் சிரமம் தானே” என அவர் கடிந்து கொள்ள

தேவாவோ எதுவும் புரியாமல் பார்த்து கொண்டிருந்தவன்...”அப்போ ஏற்கனவே இது போல் ரோஜாவிற்கு நடந்து இருக்கிறதா” என கேட்டான்.

மரகதமும் மருத்தவரும் சேர்ந்தாற்போல் தேவாவை பார்த்தவர்கள்......எதுவும் சொல்லாமல் “சரிம்மா நீங்கள் சேகர் வந்ததும் என்னை வந்து பார்க்க சொல்லுங்கள்......இந்த ராம்சரண் எங்கே போனான்”.....என விசாரித்தார்.

“அவன் வேலை விஷியமாக டெல்லி சென்று இருக்கிறான் டாக்டர்” என தேவா சொல்ல அவர் அவனை மீண்டும் ஒரு பார்வை பார்த்தவர் பின்னர் மரகதத்திடம் திரும்பி “ சீக்கிரம் சேகரோ அல்லது ராம் சரணோ என்னை வந்து பார்க்க சொல்லுங்கள்” என்றார்.

உடனே மரகதம்” டாக்டர் நீங்கள் எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லுங்கள்.......நீங்கள் என்ன சொன்னாலும் எனக்கு எதுவும் ஆகாது...பயப்படவேண்டாம்....இதைவிட பெரிய அதிர்ச்சி எல்லாம் பார்த்துவிட்டேன்...இது என்ன” என அவர் சொல்ல

தன் மனதில் இருப்பதை கண்டுபிடித்துவிட்ட மரகதத்தின் புத்திகூர்மையை மெச்சிய மருத்துவர் “அது வேறு ஒன்றும் இல்லை என கூறிவிட்டு தேவாவை பார்த்து....நீங்கள் கொஞ்சம் வெளியே இருங்கள்” என்றார்.

தேவாவும் ஏதும் பேசாமல் மரகதத்தை பார்க்க அவரோ கொஞ்சம் வெளியே இருங்கள் தம்பி என சொல்ல...அவன் ஏதும் பேசாமல் வெளியே வந்தான். பின்னர் அரைமணி நேரம் கழித்துதான் மரகதம் வெளியே வந்தார்.....முதலிலே சற்று வாடியது போல் இருந்த அவரது முகம் இப்போது மேலும் சோர்ந்து போய் இருந்தது.

பின்னர் பட்டாபி அவரை வீட்டிற்கு அழைத்து சென்றான்.மாலை ஐந்து மணி அளவில் தான் ரோஜா கண் விழித்தாள்.அவள் கண் விழித்ததும் முதலில் பார்த்தது ரதியை தான்......அவளை பார்த்ததும் மெதுவாக புன்னகைத்தவள் எதோ சொல்ல நினைக்க ஆனால் அவளால் பேசமுடியவில்லை.....அவளது எண்ணத்தை புரிந்து கொண்ட ரதி....”உனக்கு எதுவும் இல்லை ரோஜா ...நீ நன்றாக இருகிறாய்......இதோ உன் பாட்டி கூட இருக்கிறார் வரசொல்கிறேன்” என சொல்லிவிட்டு ரதி வேகமாக நகர ரோஜாவின் கண்களோ அதிர்ச்சியில் நிலைகுத்தி போனது.

ரோஜா மயக்க நிலையில் இருந்தாலும் தேவா பேச பேசிய சில சில வார்த்தைகள் அவள் காதில் விழுந்தது....அதை வைத்து அவள் தன் நிலை என்ன என்பதை புரிந்து கொண்டாலும் அவளது மனம் அந்த பயத்தில் அவளது கட்டுபாட்டில் வர மறுத்தது...அதனால் தான் அவள் சுயநினைவு இழக்க வேண்டியாக இருந்தது....பின்னர் தூக்க மருந்து கொடுத்து மருத்துவர்களும் அவளை ஓய்வு எடுக்க வைத்ததால் அவளால் ஏதும் சொல்லமுடியாமல் செய்ய முடியாமல் போனது.

இங்கு பாட்டி இருகிறார்கள் என்றதும் அய்யோ ...அவர்கள் எப்படி இங்கு வந்தனர்....என்னை இந்த நிலையில் பார்த்தால் உயிரே விட்டு விடுவார்களே ....அப்பா அம்மா நிலை என அவளது மனக்குதிரை வேகமாக ஓட ........அதுவே அவளுக்கு மயக்கம் வருவது போல் இருக்க

அதற்குள் மரகத்ததை அழைத்து வந்தாள் ரதி.....ஆனால் ரோஜா பயந்த அளவிற்கு மரகதம் பதறாமல் நிதானமாக வந்தார்......அவள் அருகில் வந்து நின்றவர் அவள் தலையை மெதுவாக கோதி விட.... அவள் “பாட்டி!!!!!!” என ஈனக்குரலில் அழைக்க

அந்த சத்ததை கேட்டதும் அவரின் கண்களில் இருந்து அவரை மீறி கண்ணீர் கொட்ட ...அவளோ அதை பார்த்ததும் மேலும் அழுக...பாட்டி என ரதி அவர் காதருகில் சொன்னதும் கண்ணை துடைத்து கொண்டவர் “உனக்கு ஒன்றும் இல்லை ரோஜா.....நம்ம டாக்டர் பார்த்துவிட்டார்...நீ நன்றாக இருகிறாய் “என சொன்னார்.

“இப்போ நம்ம ஊரிலா இருக்கோம் என மெதுவாக சைகையில் அவள் கேட்டதும் ஆமாம் என்றவர் இன்னும் அப்பாவும் அம்மாவும் ஊரில் இருந்து வரவில்லை...அவர்கள் வருவதற்குள் நீ எழுந்து வீட்டிற்கு வந்துவிடு ரோஜா.....இதை பார்த்தல் உன் அப்பா தாங்கமாட்டான்” என அவர் சொல்ல சொல்ல குரல் உடைந்து அவர் அழுக

அவர்கைகளை பிடித்து அழுத்தி கொடுத்தவள் ....நான் சீக்கிரம் வீட்டிற்கு வந்து விடுவேன் என சைகையில் சொல்ல அதற்குள் ரதி “சரி பாட்டி ...இன்னும் ரோஜாவிற்கு மருந்து கொடுக்க வேண்டும் நீங்கள் கொஞ்சம் வெளியே இருங்கள்” என்று அனுப்பி வைத்தாள்..

பின்னர் ரோஜா அதிகம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவரும் சொல்லிவிட்டதால் யாரும் அவளை தொந்தரவு செய்யவில்லை........பாட்டி வந்த பிறகு பட்டாபி சென்று பார்க்க...அவனை பார்த்ததும் ரோஜா உணர்ச்சிவசப்பட அதை கண்டதும் ரதி அவனை வெளியே போக சொல்லிவிட்டாள்..இனி யாரும் அவளை பார்க்க வேண்டாம் என்று மருத்துவரும் சொல்லியதால் தேவாவும் நாதனும் ரோஜா உறங்கிய பிறகு அவளை சென்று பார்த்தனர்.

அவள் உடல் நிலையில் முன்னேற்றம் என கேட்ட பின்பே தேவாவிற்கு மனம் நிம்மதி அடைந்தது.அன்று முழுவதும் அனைவரும் மருத்துவமனை வசமே இருக்க அந்த நேரத்தில் ராம் அலைபேசியில் அழைக்க அவனுக்கு விபரங்கள் சொல்லப்பட்டது.....ஆனால் முக்கியமான மீட்டிங்கில் இருப்பதால் அவனால் உடனடியாக வர முடியவில்லை.......தேவாவிடம் விபரம் சொல்லி நாளை வந்து விடுவதாகவும் அது வரை பார்த்து கொள்ளும்படியும் கேட்டு கொண்டான்.தேவாவும் நான் இருந்து பார்த்து கொள்கிறேன்....நீ கவலைபடாதே என அவனுக்கு ஆறுதல் சொன்னான்.

ரதிக்கு கல்லூரி இருப்பதால் அவள் அன்று மதியமே கிளம்ப மருத்துவமனையில் நாதனும் தேவாவும் இருந்தனர்.....இரவில் இருந்து தேவா ஏதும் சாப்பிடதததால் அவனை வற்புறுத்தி சாப்பிட அழைத்து சென்றான் நாதன்.அங்கு அவன் யோசனையுடனே உணவை பிசைந்து கொண்டிருக்க உடனே நாதன்....”டேய் தேவா என்ன இது....இப்படி சின்னபையன் போல் நடந்து கொள்கிறாய் .....அதான் ரோஜாவுக்கு ஏதும் ஆபத்து இல்லைனு சொல்லிட்டாங்கள அப்புறம் என்ன” என அவனை கடிந்து கொண்டான்.

“இல்ல நாதா.....என்னால் தானே இப்படி.......அவள் எப்போதும் நான் எது செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடிப்பாள்......இல்லை நக்கல் பேசுவாள்......அதுபோல் தான் அன்றும் வர மறுக்கிறாள் என்று நான் அவளை கட்டாயபடுத்தி இழுத்து சென்றேன்.........ஆனால் அது இவ்ளோ பிரச்சனை ஆகும் என்று நினைக்கவில்லை.......என சொன்னவன் அவள் பயத்தில் நடுங்கியது இன்னும் என் மனதைவிட்டு அகலவில்லை நாதா......குழந்தை மனம் கொண்ட அவளிடம் இப்படி ஒரு முகத்தை நான் எதிர்பார்க்க வில்லை” என புலம்ப

“சரி விடு தேவா.......உன் மனம் அறிந்து நீ இச்செயலை செய்யவில்லை.......பின் ஏன் குழப்பி கொள்கிறாய்.......உனக்கு அப்படி திருப்தி இல்லை என்றால் அவள் விழித்து இருக்கும்போது அவளிடம் சென்று மன்னிப்பு கேட்டுகொள்” என்றான் நாதன்.

“இல்லை நாதா...... வேண்டாம் என்றவன் அவள் பட்டாபியை பார்த்ததுமே உணர்ச்சிவசப்பட்டு மயக்கம் அடைந்தாள்....என்னை பார்த்தால் அவ்ளோதான்......மீண்டும் பழைய நிலைக்கே சென்றுவிட்டால் என சொல்லும்போதே அவன் குரல் நடுங்க...வேண்டாம்டா ....போதும்......அவள் என்னை பார்க்கவே வேண்டாம்......அவள் நன்றாக கண் விழித்து எழுந்து அமர்ந்ததும் நாம் இங்கிருந்து சென்றுவிடலாம்....அதற்குள் ராம்சரனும் வந்து விடுவான்” என்றான்.

அவனை வியப்புடன் பார்த்த நாதன்...”தேவா நீயா இப்படி பேசுவது........பாறை என நினைத்திருந்த உன் மனதிற்குள் இப்படி ஒரு மென்மையா....ஆச்சரியமாக இருக்கிறது.....என்றவன் ரோஜா உன்னை ரொம்ப பாதித்து இருக்கிறாள்” என அடிக்குரலில் அவன் கூற

சாப்பிடுவதற்கு குனிந்த தேவா கண்களை மட்டும் உயர்த்தி அவனை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தவன் பின்னர் எதுவும் சொல்லாமல் அமைதியாக சாப்பிட நாதனுக்கு அவனின் மனம் புரிந்து போனது.

பின்னர் ரோஜா நல்ல உறக்கத்தில் இருக்க ரோஜாவின் பெற்றோரை அழைத்து வருவதாக தேவா பாட்டியிடம் கேட்டதும்....”இல்லை வேண்டாம்.......என் மகன் இந்த நிலையை பார்த்தால் தாங்கமாட்டான்....ராம்சரண் வந்து விடட்டும்....பின்னர் அவர்களை அழைத்து வந்து விடலாம்” என சொல்லி விட்டார்.அதான் ரோஜாவிற்கு ஆபத்து எதுவும் இல்லை என்று மருத்துவர் கூறிவிட்டரே என்றவர் பின்னர் ராம்சரனிடமும் இதை பற்றி சொல்ல அவனும் தான் வந்த பிறகு எதா இருந்தாலும் பேசிக்கொள்ளலாம் என சொல்லிவிட்டான்.

பின்னர் அவன் தேவாவிடம் பேசும்போது “பாட்டி என்ன சொன்னாலும் அதை செய்து விடுங்கள் தேவா.....அவர் எடுக்கும் முடிவு எப்போது தவறாகாது” என சொன்னான்.அவன் சொல்வதற்கு முன்பே தேவாவும் அவரை பார்த்த உடனே கணித்துவிட்டான்தேவா ...அவரின் தெளிவான பார்வை ,மருத்துவரிடம் பேசும்போது அவரின் அந்த திடம் அவை அனைத்தும் அவனுக்கே ஆச்சிரியத்தை ஏற்படுத்தி இருந்தது.இப்போது ராம் சரண் சொன்னதும் அதை உறுதி படுத்தி கொண்டான்.

அன்று இரவு மருத்துவமனையில் ஒருவர் மட்டுமே அனுமதி என சொல்ல ,பாட்டி இருக்கமுடியாது,தேவாவும் நாதனும் இருக்க முடியாததால் பட்டாபி அங்கு இருப்பதாக சொன்னான்.அவனுக்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துவிட்டு நாதனும் தேவாவும் அருகில் இருக்கும் ஹோட்டலில் தங்கி கொள்வதாக சொன்னார்கள்.ஆனால் மரகதம் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை....அவர்கள் தன்னுடன் வந்து தங்கள் வீட்டில் தங்க வேண்டும் என வற்புறுத்தி அழைக்க வேறு வழியின்றி தேவாவும் நாதனும் பாட்டியுடன் வீட்டிற்கு சென்றனர்.

அப்போதுதான் முதன் முதலாக தேவா ரோஜாவின் வீட்டிற்க்குள் வருகிறான்.அவன் உள்ளே நுழைய உடனே நாதன் “மச்சான் முதன் முதலாக மாமியார் அச்சோ ரோஜா வீட்டுக்கு வருகிறாய்.....பார்த்து அப்படியே அந்த வலது காலை எடுத்து வச்சு வா “என அவன் சிரித்து கொண்டே சொல்ல

தேவா அவனை திரும்பி பார்த்து முறைக்க

“இல்லைடா எந்த வீட்டுக்கு முதல் முறை போனாலும் வலது காலைதான் எடுத்து வைத்து போகணும் என சொன்னவன் இல்லை பாட்டி” என அவரை பார்த்து கேட்க

அவரோ திரும்பி அவனை பார்த்து “கால்களை மட்டும் உள்ளே வைங்க...வாலை வெளியே சுருட்டி வச்சிட்டு வந்திடுங்க” என சொல்லிவிட்டு உள்ளே செல்ல ...நாதனின் முகத்தில் அசடு வழிய தேவாவை திரும்பி பார்க்க ...அவனோ இது தேவையா என அவனை ஒரு பார்வை பார்க்க ........ஹிஹிஹீஹ் அரசியல்ல இது எல்லாம் சாதரணமப்பா என்றவான் மெதுவாக அவனிடம் குனிந்து ஆனாலும் இந்த வயசிலயும் இந்த கிழவிக்கு குசும்பு குறையலடா என்றவன் எண்ணம்மா டைமிங் கமெண்ட்ஸ் கொடுக்குது பாரு......உன் நிலைமை ரொம்பாஆஅ கஷ்டம்” என்றான்.

“டேய் சும்மா இருடா......வந்ததுல இருந்து தொன தொனனு பேசிட்டு......எனக்கு என்ன கஷ்டம் ...நாளைக்கு கிளம்ப போறோம்......அப்புறம் இந்த ரோஜா என நிறுத்தியவன் இனி அவள் வேலைக்கு வருவது கஷ்ட்டம் என்றவன் பேசிகொண்டே வரவேற்பறையில் இருக்கும் சோபாவில் அமர்ந்தார்கள் இருவரும்.

“இல்லை மச்சான்” என நாதன் ஆரம்பிக்க அதற்குள் மரகதம் அவர்களை சாப்பிட அழைக்க இருவரும் உள்ளே சென்றனர்.சிறிது நேரம் மூவரும் அமைதியாக சாப்பிட தேவா தான் முதலில் ஆரம்பித்தான்.....”பாட்டி அன்று என்ன நடந்தது என்றால்” என ஆரம்பிக்க

அவரோ “தேவை இல்லை தம்பி...பட்டாபி அனைத்தும் சொல்லிவிட்டான் என்றவர் உங்களை குற்றம் சொல்ல முடியாது....நீங்கள் தெரிந்து இப்படி செய்யவில்லை......எல்லாம் என் பேத்தி வாங்கி வந்த வரம் என வருத்தமாக சொன்னவர் நீங்கள் சாப்பிட்டு விட்டு உள்ளே அந்த அறை உங்களுக்காக தயார் செய்து வைக்கபட்டிருக்கு.நீங்கள் சென்று படுங்கள்...எது வேண்டும் என்றாலும் இங்கே வரவேற்பு அறையில் சோலையம்மா இருப்பாள்...அவளிடம் கேட்டு கொள்ளுங்கள்” என்றவர் சாப்பாட்டில் பாதியிலே எழுந்து உள்ளே சென்று விட்டார்.

தேவாவும் சட்டென்று எழ உடனே நாதன் “டேய் உட்காரு....உன்னை நம்பி நான் வந்திருக்கேன்......கேடீன்ல நீ சாப்பிட்டு நீ எழுந்து வந்திட்ட.....நான் சாப்பிட்னான்னு ஒரு வார்த்தை கேட்டியா .........உன்கூட பேசிட்டே நான் சாப்பிடவே இல்ல........ஒரு மனுசனை கூட்டிட்டு வந்தா ஒரு வேலையாவது சோறுபோடுங்கப்பா” என சொன்னவன் அவனையும் அமர்த்தி சாப்பிடவைத்தான்.

பின்னர் இருவரும் உள்ளே செல்ல நாதன் படுத்த உடன் உறங்கிவிட்டான்.தேவா உறக்கம் வராமல் வெளியே வர அங்கு மரகதம் பாட்டியின் அறையில் விளக்கு எரிய..... யோசனையுடன் அவரின் அறைக்கு சென்றான்.

அங்கு மரகதம் உறங்காமல் ஒரு போட்டோ முன்பு அழுது கொண்டு நிற்க......உள்ளே போகலாமா வேண்டாமா என ஒரு நிமிடம் தயங்கியவன் பின்னர் வேகமாக உள்ளே செல்ல ......அரவம் கேட்டதும் திரும்பி பார்த்த மரகதம் கண்களை துடைத்து கொண்டு” என்ன தம்பி ...ஏதாவது வேண்டுமா....இங்கு ஏ சி எல்லாம் கிடையாது....கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிகொள்ளுங்கள்” என சொன்னார்.

“அச்சோ அது எல்லாம் இல்லை பாட்டி...எனக்கு உறக்கம் வரவில்லை...அதான்” என்றவன் கண்கள் போட்டோவை பார்க்க ,பாட்டியோ அவனை பார்க்க ...சிறிது நேரம் அந்த இடத்தில அமைதி நிலவியது.

பின்னர் தேவாவே “இவரு ரோஜாவின் தாத்தாவா பாட்டி...ஜாடை அது போலே உள்ளது” என கேட்க

அதை கேட்டதும் ....”அவரும் இதே தான் சொல்வார் தம்பி என அவர் சொல்லும்போதே கண்களில் கண்ணீர் பெருக ...என் பேத்தி...என் வாரிசு...என்னை போலவே இருக்கிறாள் என அவளை குழந்தையில் இருந்தே உச்சி முகர்ந்து கொஞ்சி கொண்டே இருப்பார் என்றவர் இப்போது இந்த இக்கட்டான சூழ்நிலையில் என்னை தனியே விட்டு விட்டு அவரும் சென்று விட்டார்” என சொல்லி அழ

“அழுகாதிங்க பாட்டி...... தாத்தா எங்கும் போகலை....இங்கே உங்களுடன்தான் இருப்பார்...நீங்கள் நம்புங்கள்” என அவரை தன் தோளோடு சாய்த்து அவன் ஆறுதல் சொல்ல....அதுவரை திடமாக இருந்த மரகதம் அவன் தோளோடு அணைத்ததும் தன் பலத்தை இழந்து கதறி அழுதவர் ...”என்னால முடியலை தம்பி.........எங்களோட ஒரே வாரிசு...எங்க வீட்டு குல தெய்வம் ரோஜா.....அவள் இப்படி இருப்பதை என்னால் பார்க்க முடியலை” என சொல்லி அழ

அதை கேட்டதும் அவனது குற்ற மனப்பான்மையும் அவனை உறுத்த.......”அதற்க்கு நான்தானே பாட்டி காரணம்....நான் தானே அவளை வற்புறுத்தி அழைத்து சென்றேன் என சொல்லி அவனும் அழ

“இல்லை தம்பி...உங்க மேல தப்பில்லை......உங்களுக்கு தெரியுமா அவளுக்கு இது போல் பிரச்சனை இருக்கும் என்று.......நீங்கள் எல்லாரும் செய்வது போல் அவளை அழைத்து சென்றீர்கள்...ஆனால்” என சொன்னவர் அதற்க்கு மேல் பேச முடியாமல் தேம்ப

உடனே அவன் “ஆமாம் பாட்டி இது போல் ரோஜாவிற்கு முன்பே வந்து உள்ளதா...... எத்தனை முறை வந்துள்ளது.......சிறுவயதில் இருந்தே இருக்கா இப்படி?” என கேட்க

“இல்லை தம்பி இல்லை....அவள் சிறுவயதில் சிறகடிக்கும் பட்டபூசி போல் சுற்றிகொண்டிருந்தாள் என்றவர் இது எல்லாம் எப்போது அவள் மருத்துவ கல்லூரியில் சேர்ந்தாலோ அப்போது பிடித்த சனியன்” என்றவர் சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்து பேச்சை நிறுத்தி கொண்டார்.

அவரை கட்டிலில் அமர வைத்த தேவா பாட்டி நீங்கள் என்ன நினைக்கறீர்கள் என்று எனக்கு புரிகிறது....என்னை நம்புங்கள்.......நானும் ராம்சரண் போல்தான் உங்களுக்கு” என்றவன் அவர் அருகில் அமர்ந்து “மேலும் எனக்கும் ரோஜாவை பற்றி தெரியவேண்டும்” என்று அழுத்தமாக சொல்ல அவனை நிமிர்ந்து பார்த்த மரகதம் அவனை ஆழ்ந்து நோக்கியவர் பின்னர் அன்று நடந்ததை சொல்ல ஆரம்பித்தார்.

பல் மருத்துவத்தில் இடம் கிடைத்ததும் ரோஜாவின் கற்பனை குதிரை கடிவாளம் இல்லாமல் பறந்து கொண்டிருந்தது.நான் டாக்டர் என அனைவரிடமும் சொல்லிக்கொண்டு இருந்தாள்.

அன்று கல்லூரியின் முதல் நாள்.....எங்கள் குடும்பத்திற்கு அன்றுதான் கஷ்ட்டம் ஆரம்பித்தது”என்றார்.

“என்னது ரோஜா மருத்துவகல்லூரி மாணவியா” என அதிர்ச்சியுடன் கேட்டவன் ஓ அதான் அன்று சூழ்நிலையால் இந்த படிப்பு படித்தேன் என்று சொன்னாளா ....பின்னர் ஏன் அதை தொடராமல் இந்த படிப்பு படித்தாள்” என தொடர்ந்து கேள்வி கேட்க

“உனக்கு முழுமையாக சொன்னால்தான் புரியும் தம்பி” என்றவர் அந்த நாட்கள் அவர் கண் முன்னாள் விரிய அவர் சொல்வதை கேட்டு தேவா விகிர்த்து போய் நின்றான்.



மண்ணிற்குள் புதையுண்ட விருட்சம்

அதற்கான நேரத்தில் தடைகளை மீறி

முட்டி மோதி வெளிவருவதை போல்

ஆழ்மனதில் புதைத்து வைத்திருந்த அன்பு

தன்னவளுக்கு துன்பம் எனும்போது

அவனையும் மீறி வார்த்தைகளால் வெளிவந்தது.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் !!!!!!!!!

பூப்போல் அவளை தாங்க வேண்டியவன்

புயலில் சிக்கிய பட்டம் போல்

சிக்குண்டு போனானே !!!!!!!
 
  • Like
Reactions: Kajol Gajol