• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் - 13

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
அத்தியாயம் -13



மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்ததில் இருந்து ரோஜா மிகவும் உற்சாகமாக இருந்தாள். விடுதியில் தங்கி படிக்க அவள் மறுத்துவிட்டாள். அதனால் கொளத்தூரில் இருந்து கல்லூரி தொலைவில் இருந்ததால் கல்லூரிக்கு அருகே வீடு எடுத்து அவள் தங்கி படிக்க ஏற்பாடு செய்தார் சேகர்.மரகதம் அல்லது பார்வதி இருவரில் ஒருவர் மாற்றி அங்கு இருந்தனர்......அவளது தாத்தா எப்போதும் போல் அவளுடன் இருந்தார். மருத்துவகல்லூரி எப்படி இருக்கும் என தோழிகளிடம் கேட்டு ஓரளவு தயார் நிலையில் தான் இருந்தாள் ரோஜா.

ஆனால் முதல் நாள் கல்லூரியில் நுழையும்போதே ரோஜாவிற்கு மனதில் சிறிது நடுக்கம் தான்.சேகர் உடன் வந்து கல்லூரி வாயில் வரை விட்டு செல்ல உள்ளே நுழைந்ததும் அங்கு இருக்கும் மாணவர்களை பார்த்து கொஞ்சம் மிரண்டு போனாள் ரோஜா.

சுற்றும் முற்றும் பார்த்து கொண்டே அவள் மெதுவாக நடக்க ...”ஹே பச்சைக்கிளி என குரல் கேட்க ...அவளோ அதை கவனிக்காமல் மறுபடியும் நடக்க ...”ஹே பச்சைக்கிளி உன்னைதான் ....நான் கூப்பிடுகிறேன்....நீ கண்டு கொள்ளாமல் போகிறாய்” என மறுபடியும் அதட்டுவது போல் ஒரு குரல் கேட்க அப்போது அவள் பின்னல் ஒரு கை அவள் தோள்மேல் விழ பயந்து அவள் திரும்பி பார்க்க ...அங்கு ஒரு மாணவி உன்னைத்தான் அவர்கள் அழைகிறார்கள்..... சீனியர் மாணவர்கள் பார்த்து நடந்து கொள்” என கேட்காமலே அறிவுரை வழங்கிவிட்டு சென்றுவிட்டாள்.

சீனியர் ராக்கிங் இருக்கும் என்று அவளும் கேள்விப்பட்டு இருந்தாள்.ஆனால் இப்போது அவள் நேரில் பார்த்ததும் கொஞ்சம் பயந்து தான் போனாள்.அவள் மெதுவாக அவர்கள் அருகில் செல்ல “என்ன கூப்பிட்டால் வரமாட்டியா என ஒரு மாணவன் கேட்க ...என்ன முதல் நாளே ரொம்ப திமிரா...சீனியர் இருக்கோம்ல ...விஷ் பண்ணிட்டு போகணும்னு தெரியாது” என இன்னொருவன் எகிற ...அங்கு இருந்த ஒருவனின் இரண்டு கண்கள் அவளது முகத்தை பார்த்து கொண்டே இருக்க அவள் பயத்தில் தனது விழிகளை உருட்டியபடி “இல்லை...இல்லை நான் கவனிக்க வில்லை...மேலும் நீங்கள் பச்சை கிளி என்று சொன்னீர்கள் ....நான் என்றவள் என் பெயர் ரோஜா அதான் நீங்கள் வேறு யாரையோ அழைப்பதாக கருதி சென்றேன்” என திக்கி திணறி சொல்லி முடித்தாள்.

“என்னது உனது பெயர் ரோசாவாஆஆஅ என ஒருவன் இழுக்க அப்போ உன்னை இனி ரோசாப்பூ ரவிக்கைகாரின்னு சொல்லலமா” என கிண்டல் செய்ய

அவளோ மிரண்டு போய் முழிக்க

அதற்குள் கண்களால் அளவெடுத்தவன் “சரி சரி விடுங்கடா.....புள்ள பயப்படுது” என அதட்ட இல்லை விக்டர் அது வந்து என ஒருவன் அவன் முகம் விக்டர் அவனை முறைத்து பார்க்க மற்றவர்கள் அனைவரும் அமைதியாகினர்.சரி அந்த பெயர் வேண்டாம் என யோசித்தவன்

“ம்ம்ம் இங்கு இந்த பச்சை நிறத்தில் ஆடை அணிந்திருப்பது நீ ஒருத்திதான்....அதனால் நீ தான் பச்சைக்கிளி....இனி உன்னை அப்டிதான் அழைப்போம் புரிந்ததா” என ஒருவன் சொல்ல ...அவள் ஏதும் சொல்லாமல் சரி என்று தலை ஆட்டினாள்.

அதற்குள் ஒருவன் “மாப்பிள்ளை இவளை என்ன செய்ய சொல்லலாம் ...பெயரை கேட்காமலே சொல்லிவிட்டது......அடுத்தது என அவன் யோசிக்க ....அதற்குள் விக்டர் “டேய் போதும் விடுங்கடா ...அப்புறம் ஏதாவது பிரச்சனை ஆகிடபோவுது”....என அவளை அவர்களிடம் இருந்து காக்க முயற்சி பண்ண...

“அது எப்படி மாப்பிளை விடறது...நீ சும்மா இரு......சரி நீ பல் டக்டர்க்கு தான படிக்க வந்திருக்க......அப்போ பாம்பிற்கு பல் இருக்கா ...எத்தனை பல் இருக்கு பதில் சொல்லு” என ஒருவன் புத்திசாளிதனமாக கேள்விகேட்டது போல் நினைத்து கொண்டு நண்பர்களை பார்க்க அவர்கள் அவனை முறைத்து விட்டு ...ஆஆ.....தூஊஊஉ என துப்ப...... ஹிஹிஹிஹி என வழிந்தவன் இல்லை மச்சான் டக்குன்னு இதான் தோனுச்சு என சொல்ல ........

ஆனால் அதற்கே ரோஜாவோ யோசிப்பது போல் நிற்க......உடனே அவன் ம்ம்ம் சொல்லு என அதட்ட .....”அவளோ கால் இருக்கும்னு தெரியும் என சொல்ல ...அதற்குள் ஒருவன் என்னது பாம்புக்கு கால் இருக்கா என கேட்க ...அதான அதுக்கு எங்க கால் இருக்கு என சொல்ல ........டேய் ஆமாண்டா இருக்கும்டா என அவர்களுக்குளே அவர்கள் விவாதம் பண்ண ...நடுவில் இருந்தவன் அடபாவி அவளை கேள்வி கேட்டு இப்போ நீங்க அடிச்சுகிரிங்க......அம்மா பரதேவதை நீ ரொம்ப விவரம் தான் என்றான். ஊர்ல அப்படிதான் சார் எல்லாரும் சொல்வாங்க” என அவள் மீண்டும் சொல்ல அவள் சொன்னவிதத்தை பார்த்து உண்மையாக சொல்கிறாளா இல்லை நக்கலாக சொல்கிறாளா என தெரியாமல் அந்த கும்பல் முழிக்க உடனே அவளோ “இல்லை சார் பாம்பின் கால் பாம்பு அறியும்னு பெரியவங்க சொல்லிருக்காங்க அத வைத்து சொன்னேன்” என்றாள்.



அப்போது விக்டர் “ஆனாலும் நீ கொஞ்சம் அபயாகரமான பெண் தான் என சொல்ல ....உடனே ஒருவன் அப்படியா....அப்படி எல்லாம் இருக்க விடக்கூடாதே ...... அப்போ அடுத்த என்ன செய்ய சொல்லலாம் தரையிலே நீச்சல் அடிக்க சொல்லலமா என்றவன் அது பழசு ...பிறகு” என யோசிக்க ஆரம்பித்தான்.

“உனக்கு வேறு என்ன தெரியும்..பாட தெரியுமா? ஆட தெரியுமா? இல்லை கவிதை” என கேட்க

“ம்ம்ம்ம் ...கவிதை தெரியும் சார்” என அவள் உற்சாகமாக சொன்னாள்

உடனே அவர்களும் “அப்படியா அப்போ ஒரு கவிதை சொல்லு” ஏன கேட்க

அதற்குள் ஒருவன்” நீ எப்போ இருந்து கவிதை எழுதற” என முன்னெச்சரிக்கை முனுசாமியாக கேட்டான்.

உடனே அவள் “ஐந்தாம் வகுப்பில் இருந்து சார்” என பெருமையாக சொல்ல

“அப்டியா...அப்போ பெரிய கவிதாயினின்னு சொல்லு என்றவன் சரி சரி ஆரம்பி “என்றான்.

உடனே அவள் “சார் ஒரு சூப்பர் கவிதை சார்....அதுக்கு முடிவு தெரியாம ரொம்பா நாள் தவிச்சுட்டு இருக்கேன் ...அதை வேண்டுமானால் சொல்லட்டுமா” என கேட்க

“எங்கே சொல்லு பார்க்கலாம்” என அவர்கள் ஆவலுடன் அவள் முகம் பார்க்க

அவள் உடனே தொண்டையை கனைக்க

உடனே நண்பர்கள் “ஹே கவிதை தான சொல்ற...அதுக்கு எதுக்கு கச்சேரி பண்றமாதிரி ஆக்சன் பண்ற” முதல்ல கவிதைய சொல்லு என்றனர்.



உடனே அவள் “இதோ இப்போ சொல்றேன் சார்”....என்றவள்

இரண்டு கைகளிலும் ஒவொவொரு விரலை நீட்டி கொண்டு

அவளும் நோக்கினாள் என்றவள் இல்லை சார் வேண்டாம் என கைகளை மடக்கி விட்டு பின்பு மீண்டும் அதே போல் வைத்து கொண்டு

“அவளும் பார்த்தாள்

அவனும் பார்த்தான்”

உடனே நண்பர்கள் கோரசாக “ம்ம்ம்ம் அப்புறம் “ என கேட்க

“அவளும் ஓடினாள்

அவனும் ஓடினான்” “இந்த இடத்துல மூணு புள்ளி வரணும் சார்...அது ரொம்ப முக்கியம் சார்” என்றவள்

“அவள் ஓடினால் ஓடினாள்

அவன் ஓடினான் ஓடினான் இங்கும் மூணு புள்ளி சார்” என்றவள்

சரி அடுத்தது சொல்லு என அவர்கள் அவள் முகத்தையே பார்த்திருக்க

அவ்ளோ மிகவும் கவனமாக

“ஓடினாள் ஓடினாள் ஓடினாள்

ஓடினான் ஓடினான் ஓடினான்” எனமீண்டும் சொல்ல

“அதான் முதல்ல சொன்னியே ...அப்புறம்” என அவர்கள் கேட்க

அதான் சார் எனக்கும் தெரியலை......எங்க போய் நிருத்தறதுன்னு என முகத்தை சோகமாக வைத்துகொண்டு சொன்னவள் ஐந்தாம் வகுப்புல இருந்து இந்த கவிதையா முடித்து விடலாம் என்று முயற்சி செய்கிறேன்...என்னால முடியவில்லை சார் என சொல்லிவிட்டு உங்களுக்கு ஏதாவது தோணுதா சார்....இருந்தா சொல்லுங்க......அந்த கவிதையின் கீழ் உதவின்னு போட்டு உங்க பேர் போடறேன்......நாளைக்கு வரலாறு உங்க பேரு சொல்லும் சார்.....” என கண்களை உருட்டி தலை ஆட்டி கொண்டு அவள் பேசுவதை கேட்ட அவர்கள் தலை சுற்றி நின்றனர்......

“டேய் மாப்பிள்ளை நான் கல்லூரிக்கு நான்கு நாள் லீவுடா......முதல்ல பழனிக்கு பொய் மொட்ட போட்டாதான் இந்த கிறுகிறுப்பு நிற்கும்” என அவளிடம் கவிதை கேட்டவன் கடுப்பாகி எழுந்து செல்ல

மற்றவர்களோ கோபாமாக அவளை முறைக்க ...அதற்குள் ஒருவன் “ஹே என்ன எங்ககிட்டே லந்தா ....... என உதட்டை மடக்கி பிச்சுடுவோம்” என மிரட்ட



அப்போது ரோஜா அவர்களிடம் “இங்க பாருங்க நான் யாருன்னு தெரியாம என்கிட்டே பேசிட்டு இருக்கீங்க ....எனக்கு பயமா இருக்கு .....மயக்கம் வருவது போல் இருக்கு என சொல்லி அப்படியே மயங்கி சரிய ......உடனே விக்டர் வேகமாக எழுத்து அவளை தாங்கி பிடிக்க ......அதற்குள் மாணவர் கும்பல் டேய் மாப்பிள்ளை இங்க பாருடா நம்ம விக்டர...இவ்ளோ பாசமா போய் பிடிக்கிறான் என கிண்டல் பண்ண......முட்டாள் உலராத....இங்க ராகிங் தடை பண்ணிருக்காங்க ....இந்த பொண்ணுக்கு எதாவது ஆச்சு...அப்புறம் நம்ம நிலைமை என அவன் நிதர்சனத்தை சொல்ல அதற்குள் அங்கு கல்லூரி ஆசிரியர் ஒருவர் வர டேய் மாப்பிள்ளை புரபசர் வருகிறார்டா....அப்படியே எஸ் ஆகிடுங்க” என சொல்லிகொண்டே அனைவரும் நிமிடத்தில் மறைந்தனர் .

ரோஜாவை கையில் பிடித்திருந்த விக்டர் என்ன செய்வது என தெரியாமல் முழித்து கொண்டு இருந்தான்..... ...அதற்குள் அவர் அருகில் வர ....”என்ன விக்டர் யார் இந்த பெண்” என கேட்டார்.

உடனே அவன் “என் உறவினர்தான் சார் “என்றவன் அதற்குள் அவருக்கு அலைபேசி அழைப்பு வர அவர் பேசிகொண்டே நகர்ந்தார்.

விக்டருக்கு போன உயிர் திரும்பி வந்தது... ஷ் என பெருமூச்சு விட்டவன் அவளை அப்படியே மரத்தடியில் அமரவைத்தான். ....அப்போது அவன் காதருகில் “எல்லாரும் போயிட்டாங்களா” என மெதுவாக ஒரு குரல் கேட்க

அதிர்ந்து அவள் முகத்தை பார்த்தவன் ரோஜா ஒற்றை கண்ணை மூடிக்கொண்டு அவனை பார்த்து சிரித்தாள்.. ...”ஹே அப்போ உனக்கு மயக்கம் இல்லியா என அவன் கேட்க......அவளோ ஹஹஹஹா என சிரித்தவள் எனக்கா மயக்கமா என்றவள் .......பின்னர் நீ கீழே விழுவது போல் என அவன் தடுமாற்றத்துடன் கேட்க .........இல்லை என் ப்ரிண்ட்ஸ் தான் சொன்னங்க......அங்க ராகிங் இருக்கும்.....அப்போ உன்னால சமாளிக்க முடியலைனா அப்படியே மயக்கம் வர மாதிரி நடி....அந்த கும்பல்ல எதோ ஒரு இளிச்சவாயன் உன்னை உடனே வந்து பிடிப்பான்....மத்தவங்க எல்லாம் அமைதி ஆகிடுவாங்க......எத்தன சினிமால பார்த்திருக்கோம் ....நீ அப்படியே பண்ணுனு சொன்னங்க...அதான் பண்ணிபார்த்தேன் ...அவங்க சொன்ன மாதிரியே நீங்க பிடிச்சுட்டிங்க...எல்லாரும் பயந்து போய்ட்டாங்க” என அவள் சந்தோசத்தில் சொல்லிகொண்டிருக்க விக்டரோ கோபத்தில் அவளை முறைத்து கொண்டிருந்தான்.

“உனக்கு அறிவிருக்கா ....எதையும் யோசித்து செய்யமாட்டியா.....யாரும் கேட்காமலே உன் பெயரை சொல்லும்போதே நினைத்தேன் ...நீ ஒரு அவசரகுடுக்கைன்னு .... இப்போது தான் தெரிகிறது முழு லூசு என்று .......... அதற்காக இப்படியா பண்ணவது.......நானாக இருந்ததால் தப்பித்து கொண்டாய்...இதே தவறான நபர்கள் பிடித்து இருந்தால்” என நிறுத்தியவன்

அவள் அவனை பயத்துடன் பார்க்க.....”ஆம் இப்போ முழி என்றவன் இது போல் அசட்டு துணிச்சல் வேண்டாம்....என்ன புரிகிறதா” என சொல்லிகொண்டிருக்க அதற்குள் கல்லூரி ஆரம்ப மணி அடிக்க...சரி சரி சீக்கிரம் வகுப்புக்கு செல்” என சொல்லிவிட்டு அவனும் வகுப்பை நோக்கி நடந்தான்.

முதல் நாளில் சற்று தயக்கத்துடன் ரோஜா இருந்தாலும் ஒரு வாரத்திற்குள் அவளது வகுப்பு மாணவர்களிடம் நன்றாக பழகி கொண்டாள்.மேலும் அவளது துடுக்குத்தனம் மற்றும் அசட்டுதைரியமும் அவளுக்கு நண்பர்களை தேடித்தந்தது........மேலும் அவர்கள் பயன்படுத்தும் நவீன எலக்ட்ரானிக் பொருட்கள் எல்லாம் ரோஜாவையும் அவர்கள் பக்கம் இழுத்தன......அவளுடன் படிக்கும் மாணவிகள் அனைவரும் கொஞ்சம் வசதி படைத்தவர்கள் ........வாரத்திற்கு ஒருமுறை ஹோட்டல் ,ஐஸ்கிரீம் பார்லர் செல்பவர்கள்......ஆனால் ரோஜா அங்கு எல்லாம் செல்ல மாட்டாள்.கல்லூரிக்குள் மட்டுமே அவர்களுடன் பழகுவாள்.அதற்கு பின் அவளது தோழன் அவளது தாத்தா மட்டும் தான்.

சிறிது நாட்களில் விக்டரிடமும் அவளுக்கு நல்ல பழக்கம் ஏற்பட அவனின் நண்பர்களும் அவளுக்கு நண்பர்கள் ஆகினர்.....மேலும் ரோஜாவின் வெகுளித்தனம் விக்டருக்கு மிகவும் பிடிக்க அனைவருமே நட்புடன் அவளிடம் பழகினர்.....



ஆரம்பத்தில் இருந்து பெண்கள் பள்ளிகளிலே படித்ததால் அவளால் இந்த மாணவர்களின் செயலை கண்டதும் ஒரே ஆச்சரியமாகவும் அதே சமயத்தில் மற்றவர்கள் எல்லாம் ம்ம்ம்ம் சீனியர் விக்டர் ...காலேஜ் டான் அவன் உன்னுடைய பிரண்ட் என மேலும் உசுபேத்திவிட ரோஜாவோ வானில் கயிறு இல்லாத பட்டம் போல் பறந்து கொண்டு இருந்தாள்.

வீட்டில் அவளது குறும்புத்தனம் மேலும் அதிகமாகியது.......சுடிதார் அணிந்தவள் ஜீன்ஸ் போட்டதும் பார்வதிக்கு பிடிக்கவில்லை....தலை முடியை அவள் மாற்றி கொண்டதும் அவளுக்கு பிடிக்கவில்லை...அதைவிட கணினியில் எப்போது பார்த்தாலும் அவள் சாட்டில் இருப்பது பார்வதிக்கு எரிச்சலை எற்படுத்தியது........ஆனால் இவை அனைத்தும் ரோஜா தாத்தாவின் ஒப்புதல் உடனே தான் செய்வாள்.அவர் வேண்டாம் என்றால் ரோஜா செய்யமாட்டாள்......அதனால் திட்டினாலும் தாத்தா பார்த்து கொள்வார் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.....அவளது தாத்தாவும் இருக்கும் இடத்திற்கு ஏற்றார் போல் நாம் நடந்து கொள்ள வேண்டும்.....அதே சமயத்தில் அவை நம் வரைமுறைக்கு ஏற்றார் போல் இருக்க வேண்டும் என சொல்லுவார்......அதற்க்கு ஏற்றார் போல் ரோஜாவும் எதிலும் ஒரு கட்டுபாடுடன் தான் நடந்து கொண்டாள்.

நாட்கள் ஓடின...முதல் செமஸ்டரில் அவள் 70 சதவீதம் மதிப்பெண் வாங்க அனைவருக்கு மகிழ்ச்சி.......கிராமத்தில் படித்து கொண்டிருந்த பெண் அங்கு சென்று இந்த அளவு மதிப்பெண் பெற்று இருக்கிறாள் என்றால் கண்டிப்பாக பாராட்ட வேண்டும் என்று அவளது கல்லூரி ஆசிரியர்களும் சேகரிடம் சொல்ல அவரோ தன் பெண்ணின் பெருமையில் மனம் குளிர்ந்து போனார்.அதற்கு அவளது நண்பர்களும் ஒரு விதத்தில் உதவியாக இருந்தனர்......அவளுக்கு சந்தேகம் ஏற்பட்ட போது எல்லாம் விக்டர் மற்றும் மற்ற தோழிகளும் அவளுக்கு உதவி செய்தனர்.அதனால் அவளால் படிப்பில் நல்ல மதிப்பெண் பெற முடிந்தது.

அனைத்தும் நல்லபடியாக போய்கொண்டு இருந்தது........ஒரு சில நண்பர்களை அவள் தாத்தாவிற்கும் அறிமுகபடுத்தி வைத்தாள் ரோஜா.மாற்றம் என்பது எல்லாருக்கும் ஒரு காலகட்டத்தில் எற்படகூடியாதே....ஆனால் அந்த மாற்றத்தை நாம் ஏற்றுகொள்ள வேண்டுமானால் அதற்க்கு மனதளவிலும் தயார் நிலையில் இருக்கவேண்டும்.......ரோஜாவை சுற்றி அனைத்தும் நல்லதாகவே இருக்க...அன்பான குடும்பம்,பாசமான உறவினர்,இனிமையான நண்பர்கள் ,மனதிற்கு பிடித்த வாழக்கை தரம் இவை அனைத்தும் சிறப்பாக அமைந்ததிருந்தது. அதனால் நல்லது, கெட்டது என்பதே தெரியாமல் வளர்ந்துவிட்டாள். பார்க்கும் அனைத்தையும் முழுவதும் நம்பிவிட்டாள்.

புது வருடம் ஆரம்பிக்க இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் சேகர் அன்று மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்தார்....அன்று விடுமுறை நாள் ஆனதால் அனைவரும் ஓரிடத்தில் இருந்தார்கள்.......சேகர் வந்தவர் தன் தந்தையிடம் சென்று “ புத்தாண்டு அன்று திருப்பதி போவதற்கு ஐந்து வி ஐ பி டிக்கெட் கிடைத்து இருப்பதாகவும் நாம் அனைவரும் போகலாம்” என சொன்னார்.....அனைவரும் மகிழ்வுடன் தலை ஆட்ட ரோஜாவோ “தனக்கு கடைசி பரீட்சை என்றும் வரமுடியாது என்றும் சொன்னாள்.உடனே அனைவரின் முகமும் வாடிவிட அதற்குள் அவள் தாத்தா வேண்டுமானால் நீங்கள் அனைவரும் சென்று வாருங்கள்....நானும் ரோஜாவும் இங்கு இருந்து கொள்கிறோம்” என்று சொன்னார்.இலவசமாக அதும் புத்தாண்டு அன்று பெருமாள் தரிசனம் கிடைப்பதால் அதை விட மனமின்றி மூவரும் அதற்க்கு ஒத்து கொண்டனர்.

நடக்கும் நிகழ்வுகள் அனைத்திற்கும் ஆண்டவனே பொறுப்பு....ஆனால் சில நேரங்களில் கடவுள் முன் கை கூப்பி நிற்ப்போரின் நிலைகளும் துன்பத்தில் மூழ்க இதற்க்கு யாரை குறைசெல்வது....செய்த முன்வினை,கர்மா என்று நாம் சொன்னாலும் சராசரி மனிதர்களாக அந்த கடவுள் மேல் கோபம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

முதல் நாள் காலை அவர்கள் கிளம்பி செல்ல அன்று பரீட்சை எழுதிவிட்டு வந்த ரோஜா யோசனையிலே அமர்ந்திருந்தாள்.வீட்டில் இருவர் மட்டுமே இருந்ததால் அவளை கவனித்த அவள் தாத்தா ரோஜாவிடம் “என்ன ரோஜா....என்ன யோசனையில் இருக்கிறாய்” என்று கேட்டார்.

அதற்கு ரோஜா “ஒன்றும் இல்லை தாத்தா என கொஞ்சம் மழுப்ப ...இல்லை ரோஜா என்ன வேண்டும் சொல்.......ஏதாவது சாப்பிட செய்து தரட்டுமா......இல்லை எங்காவது கடைக்கு செல்லலாமா” என கேட்டார்.

“இல்லை தாத்தா அது வந்து “என அவள் இழுக்க

“சொல்லு ரோஜா.....இந்த தாத்தாவிடம் என்ன பயம் உனக்கு” என கேட்டார்.

“இல்லை தாத்தா....நம்ம ஷோபி இருக்கா இல்லயா ...அவங்க வீட்ல புதுவருடம் இரவு கேக் வெட்டி கொண்டாடுவார்களாம்......தோழிகள் அனைவரும் செல்கிறார்கள் ........என்னையும் அழைத்தார்கள் ...நான்தான் மறுத்துவிட்டேன்...அதனால் இப்போது அலைபேசியில் அழைத்தால் அவள் என்னுடன் பேச மாட்டேன் என்று சொல்கிறாள்” என்றவள்

“ஏன் தாத்தா ......இங்கு எல்லாம் அப்படிதான் கொண்டாடுவார்களா”.....என அவள் ஆசையுடன் கேட்க

“அப்படி எல்லாம் இல்லை ரோஜா....ஒவ்வொருவரும் ஒரு மாதிரி கொண்டாடுவார்கள்.....ஆனால் உன் அப்பா அம்மா வேறு வீட்டில் இல்லை...இந்த நேரத்தில் நாம் எப்படி அங்கே செல்வது.....அதும் இரவு நேரத்தில் என அவர் தயங்க” ... அவர் என்னதான் முற்போக்குவாதி என்றாலும் வயது வந்த பெண்ணை எப்படி இரவு நேரத்தில் அனுப்புவது என யோசித்தார்......

.உடனே ரோஜா மெதுவாக அவர் அருகில் வந்து அமர்ந்தவள் அவரது தாடையை பிடித்து கெஞ்சியவாரே “ப்ளீஸ் தாத்தா.......பக்கத்துலதான அவங்க வீடு...நான் போயிட்டு சீக்கிரம் வந்து விடுகிறேன் என்றாள்.எனக்கும் அதை பார்க்கணும் போல ஆசையாக இருக்கிறது.......அம்மா இருந்தாள் கண்டிப்பாக விடமாட்டார் ...அதனால நான் சீக்கிரம் வந்துவிடுகிறேன்...பிளீஸ்...ப்ளீஸ் என கெஞ்சியவள் வேண்டுமென்றால் நீங்களும் உடன் வாருங்களேன்” என அவரையும் அவள் அழைக்க...அவளது முகத்தை பார்த்ததும் அவர் மனமும் கரைய சரியென தாத்தாவும் பேத்தியும் கிளம்பி ஷோபி வீட்டிற்கு சென்றனர்.....

அங்கு அவள் தோழிகள் அனைவரும் வந்திருக்க விக்டர் நண்பர்களும் வந்து இருந்தனர்.....பின்னர் அனைவரும் மகிழ்ச்சியாக பேசிகொண்டிருக்க ...அதற்குள் சோபியின் தந்தை அவளது தாத்தாவிடம் பேசிக்கொண்டு இருந்தார்.நேரம் கடந்து கொண்டிருக்க அதற்க்கு மேல் தாத்தாவால் அங்கு அமர்ந்திருக்க முடியவில்லை......ரோஜாவை அழைத்து கிளம்பலாம் என சொல்ல அவளோ அந்த சந்தோஷத்தில் இருந்து கிளம்ப மனம் இல்லாமல் ப்ளீஸ் ...இன்னும் கொஞ்ச நேரம் தாத்தா என கெஞ்சி கெஞ்சியே மேலும் ஒருமணிநேரம் அங்கு இருந்தாள்.அதற்கு மேல் அவரால் முடியாமல் அவர் ரோஜாவை அழைக்க உடனே தோழிகள் அனைவரும் “அவள் இருக்கட்டும்....நாங்கள் கொண்டுவந்து விடுகிறோம்” என சொல்ல......எப்போதும் எச்சரிக்கையாக இருக்கும் அவர் அன்று உடல் ஆசதியா...இல்லை பேத்தியின் மகிழ்ச்சியான அந்த மனநிலையை குலைக்க மனமில்லையா இல்லையா .......இல்லை அங்கு இருப்பவர்கள் பாதி பேர் அவருக்கு தெரிந்தவர்கள் அவளின் நண்பர்கள் என்பதால் அவர் சரி என்று சொன்னவர் ஆனால் ரோஜாவை அழைத்து மிகவும் கவனம்....அரை மணிநேரத்திற்குள் நீ வீட்டிற்கு வந்துவிட வேண்டும்” என சொன்னவர் அவர் மட்டும் கிளம்பி வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.

சில நேரங்களில் விதி விளையாடுவதற்க்கு அதிக காலநேரம் எடுத்து கொள்வதில்லை......தாத்தா கிளம்பவும் விக்டரின் நண்பன் ஒருவன் உள்ளே வரவும் சரியாக இருந்தது.....உள்ளே வந்தவன் “டேய் மச்சான் எங்க மாமா ஹோட்டல புது வருட கொண்டாட்டம் இருக்கும்.......சினிமா பாடகர் வந்து இருக்காங்களாம்...... எனக்கு டிக்கெட் இருக்கு....எல்லாரும் அங்கு போகலாமா” என கேட்க

உடனே விக்டர் “அது சின்ன ஹோட்டல்தான்டா அங்க எப்படி” என கேட்க .......

“அந்த பாடகர் மாமா நண்பராம்......அதனால் வந்திருக்கார் “என்றான் அவன்.

. அப்படியா அப்போ போகலாம் என சொல்ல நண்பர்கள் அனைவரும் ஓ என்று ஆரவார ஒலி எழுப்பியவர்கள் அனைவரும் கிளம்ப ரோஜாவும் தனது வீட்டிற்கு கிளம்பினாள்......

அதற்குள் அங்கு வந்த விக்டர் “ஏன் ரோஜா நீ மட்டும் கிளம்புகிறாய்.... ஹோட்டல் அருகில்தான் இருக்கிறது...... மேலும் நம்ம ரவியின் மாமா ஹோட்டல் ....அதனால் ஏதும் பயம் இல்லை......எப்போதும் வீட்டில் தானே கொண்டாடுகிறோம்.......இன்று ஒரு நாள் அங்கு சென்று கொண்டாலாம் ......மேலும் இன்னும் சிறிது நேரத்தில் புத்தாண்டு பிறந்து விடும்........பன்னிரண்டு மணிக்கு கேக் வெட்டியதும் நானே உன்னை கொண்டு வந்து வீட்டில் விட்டு விடுகிறேன்” என்றான்.ஆனால் ரோஜா அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை...”இல்லை எனக்கு ஹோட்டல் வந்து பழக்கம் இல்லை.....நான் கிளம்புகிறேன்” என சொல்ல அதற்குள் தோழிகள் அனைவரும் அவளை சூழ்ந்து கொண்டு அவளை வற்புறுத்த ஹே “நாங்க எல்லாம் செல்கிறோம் ...நீயும் மட்டும் என்ன.....அதும் நம்ம ரவி மாமா ஹோட்டேல்தானே” என சொல்லி கும்பாலக சேர்ந்து அவளை நெருக்க அவள் மனிதிலும் ஆசை வந்தது.......ஆனால் “தாத்தா திட்டுவார் அவரிடம் சொல்லிவிட்டு சென்று விடலாம்” என அவள் சொல்ல அதற்குள் அங்கு வந்த விக்டர் ரோஜா உங்க தாத்தா தான் அரைமணி நேரத்திற்குள் வர சொல்லி இருக்கிறார் இல்லயா ....அதற்குள் சென்றுவிடலாம் வா” என எல்லாரும் சேர்ந்து அவளை இழுத்து சென்றனர்.

இதுவரை ரோஜா தோழிகளுடன் ஹோட்டல் சென்றதில்லை... அவள் முதன் முறையாக இப்போதுதான் தோழிகளுடன் வருகிறாள். புத்தாண்டு கொண்டாட்டம் ஹோட்டலின் முகப்பிளே தெரிய வண்ண விளக்குகள் தோரணம் மற்றும் அலங்காரங்கள் அவள் கண்களை கவர அதுவரை மனதில் இருந்த நடுக்கம் குறைந்து அந்த சூழ்நிலையை அவள் ரசிக்க ஆரம்பித்துவிட்டாள். உள்ளே சென்றதும் அங்கு ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருக்க சந்தோசத்தில் உடன் வந்த தோழிகள் துள்ளி குதித்து ஆட ரோஜாவிர்க்கும் அதை பார்த்த உடன் ஆசை வந்துவிட அவளும் அந்த ஆட்டத்தில் கலந்து கொண்டாள்.கனவிலே நினைக்காத ஒரு நிகழ்ச்சி நடைபெறும்பொழுது எந்த மனமும் கட்டுபாட்டில் இருப்பதில்லை...ரோஜாவும் அதுபோலதான்.....உற்சாகத்துடன் துள்ளிகுதித்து ஆடிக்கொண்டு இருந்தாள்...... அவளின் வயதும் அதில் தோன்றும் உற்சாகமும் அவளை அனைத்தயும் மறக்க வைத்தது.........தன்னை மறந்து ஆடி கொண்டிருந்தாள்.........
 

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
அப்போது மணி பன்னிரண்டு ஆக அனைவரும் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிகொள்ள ஒருவரின் முகத்தில் மற்றவர் கேக் அள்ளி பூச அந்த உற்சாகம் உலகில் ரோஜா மூடி சூடா ராணியாக திளைத்து கொண்டிருந்தாள்.

அப்போது ஒரு சின்ன சலசலப்பு ஏற்பட இவள் உடன் இருக்கும் நண்பர்கள் என்னவென்று பார்க்க அங்கு விக்டருக்கும் வந்திருந்த வெளிநபர்களில் ஒருத்தருக்கும் சின்ன வாக்குவாதம் ஏற்பட பின்னர் இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அவர்களை எதிர்க்க அவர்கள் பேசாமல் சென்றுவிட்டனர்........மறுபடியும் அனைவரும் சிறிது நேரம் நடனம் ஆட...... கிளம்பலாம் என நினைத்திருந்த நேரத்தில் சட்டென்று இங்கு போலிஸ் வருகிறது...........இங்கு அனுமதி இன்றி மது அருந்தி ஆட்டம் ஆடுகிறார்கள் என தகவல் சென்றதால் அவர்கள் வருகிறார்கள் ...அனைவரும் சென்றுவிடுங்கள் என ஒரு செய்தி பரவ அந்த பதற்றத்தில் கூட இருந்த அனைவரும் ஆளுக்கு ஒரு மூலையாக திசை மாறி ஓட ..... விக்டர் ரோஜாவின் கையை பிடித்து இழுத்து கொண்டு ஓட அவன் சென்ற வழி கும்பலாக இருந்ததால் அதற்குள் ரோஜா கும்பலுக்குள் நசுங்க .......அவள் கத்த உடனே விக்டர் “ரோஜா அந்த மாடிபடிக்கு பின்புறம் ஒரு வழி இருக்கிறது...அங்கு கும்பல் இருக்காது...... நீ அதுவழியாக வெளியே வந்து விடு....நான் வண்டி எடுத்து கொண்டு வருகிறேன் என சொல்லிவிட்டு செல்ல அவளோ அந்த பதட்டத்தில் என்ன செய்வது என புரியாமல் வேகமாக ஒரு பக்கம் சென்று அந்த வாயிலில் நுழைய அப்போது அவள் தோளில் ஒரு கை விழ........ அவள்” விக்டர் “ என சொல்லியபடி திரும்பி பார்க்க ஆனால் அங்கு நின்றதோ ஒரு காவலர். “எங்கே தப்பித்து ஓட பார்க்கிறாய் “என அவள் கையை படித்து அவர் இழுத்து வர

இதை சற்று எதிர்பார்க்காத ரோஜா ஒரு நிமிடம் அவளுக்கு என்னவென்றே புரியவில்லை......சுற்றிலும் பார்த்தவள் அனைவரயும் காவலர்கள் பிடித்து கொண்டிருக்க அவளோ “நான் மருத்துவகல்லூரி மாணவி ...எனக்கு எதுவும் தெரியாது...நான் என் தோழிகளுடன் வந்தேன் என்னை விட்டு விடுங்கள்” என அவள் சொல்லி கதற அந்த காவலரோ அதை கேட்கும் மனநிலையில் இல்லை.......

“உங்களை எல்லாம் படிக்க பெற்றவர்கள் அனுப்பினால் நீங்கள் இப்படிதான் குடித்து கும்மாளம் போடுவிர்களா என சொல்லிகொண்டே அவர் அவளை இழுக்க......அய்யோ நான் அந்த மாதிரி பெண் இல்லை...என் தோழிகள் இங்கு இருக்கிறார்கள் ...ஷோபி,ரமா,விக்டர் “என அவள் சத்தமிட அதை கேட்பதற்கு அவர்கள் அங்கு இல்லை.

ஆளுக்கு ஒரு மூலை தெறித்து ஓடியவர்கள் ஒவொவொருவரும் ஓரிடத்தில் இருந்தனர்..... விக்டர் வெளியே வண்டியுடன் அவளுக்கு காத்திருக்க அதற்குள் அங்கு வந்த ஒரு நண்பன் “மச்சான் போலிஸ் வறாங்கடா...சீக்கிரம் இடத்த காலி பண்ணு....அதும் மெடிக்கல் காலெக் ஸ்டுடென்ட்சானு கேட்டு பிடிக்கிரங்க” என சொல்ல

“இல்லைடா ரோஜா வருவாள்” என விக்டர் சொல்ல

“மச்சி உள்ளே நம்ம பிரண்ட்ஸ் யாரும் இல்லை...நான்தான் கடைசி ....அவள் ஷோபியோடு சென்று இருப்பாள் நீ கிளம்பு” என சொல்லிகொண்டிருகும்போதே காவல் துறையினர் அந்த இடத்தை நோக்கி வர ...”கிளம்பு மச்சான் கிளம்பு” என அவனை அவசரபடுத்த அவனின் கண்கள் ரோஜாவை தேட வண்டியோ அந்த இடத்தில் இருந்து நகர்ந்தது....

ஹோட்டலை விட்டு சிறிது தூரம் சென்று இருப்பான்....எதிர்புறத்தில் இருந்து ஒரு வாகனம் வர விக்டரோ ரோஜாவை தேடிகொண்டே அதை கவனிக்காமல் செல்ல அது நேராக விக்டரின் மேல் மோத அவனோ அந்த இடத்தில் அடிபட்டு கீழே விழுந்து விட்டான்.

இங்கு ரோஜாவோ எவளோ சொல்லியும் காவலர் விட மறுத்ததோடு மட்டும் அல்லாமல் அவளை சில தகாத வார்த்தைகள் சொல்லி திட்ட ... அதை தாங்க முடியாமல் துடிதுடித்து போனாள். பார்ப்பதற்கு துணிச்சளான பெண் போல் தோன்றினாலும் மலரைவிட மென்மையானவள் ரோஜா.......அதே போல் ரோஷமும் அதிகம்.......யாரவது திட்டிவிட்டால் அவ்ளோதான்....... வார்த்தை பொறுக்க மாட்டாள். அவர்களிடம் அதற்க்கு பிறகு பேச மாட்டாள் .......இந்த சூழ்நிலையை அவள் ஜீரனிக்கவே வெகு நேரம் ஆகிற்று

காவலர்கள் அவளை அழைத்து செல்ல அவளுடன் வேறு சில மாணவிகள் மற்றும் சில பெண்கள் ,ஆண்கள் மாட்டிகொண்டனர்...என்ன செய்வது என புரியாமல் திக் பிரமை பிடித்தவள் போல் ரோஜா நின்று கொண்டிருக்க....அப்போது அங்கிருந்த அவளுடன் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனும் அதில் அடக்கம்.....ஆனால் கொடுமை அவர்கள் அனைவரும் மது அருந்தி இருக்க அவர்களின் லிஸ்ட்டில் ரோஜாவும் சேர்க்கபட்டாள். அவள் எவ்வளவ்வோ மன்றாடியும் அந்த காவலர் அவளை விடுவிக்க மறுத்துவிட்டார்......

அதிர்ச்சியில் அவள் அதற்கு மேல் என்ன சொல்வது என தெரியாமல் திகைத்து போய் நிற்க நண்பர்களோ வீட்டிற்கு சென்ற பிறகு தாத்தா ஷோபாவிற்கு அலைபேசியில் அழைத்து ரோஜா இன்னும் காணோம் என்று கேட்ட பின்பே...... அவள் அனைவர்க்கும் அழைத்து கேட்க யாரும் ரோஜாவை அழைத்து வரவில்லை என சொல்ல அனைவரும் அதிர்ந்து போய் நின்றனர்.

அதற்குள் இங்கு ரோஜா காவல்துறை வாகனத்தில் ஏற்றபட்டாள்....உயிரற்ற உடலாக அவள் நின்று கொண்டிருக்க ......சுற்றி இருந்தவர்கள் எல்லாம் கேவலமாக பேச வாழ்வில் முதன் முறையாக மனிதர்களின் மறுபக்கத்தை பார்த்தாள் ரோஜா.



வாழக்கை என்பது ஒரு சதிராட்டம்.

சந்தோசமும் துக்கமும் இதன் காய்கள்.

நேரமும் காலமும் இதை ஆட்டுவிக்கின்றன....

தீபம் சுடர் விட்டு எறிவது அழகு

அதை மலர் கொண்டு அனைக்கலாம்

விரல் கொண்டு அனைக்க நினைத்தால்!!!!!!

எல்லாம் தெரியும் என்ற இறுமாப்பு

இறுதியில் எதுவும் இல்லாமல் செய்துவிடும்....

கண்ணை கவரும் காட்சிகள் எல்லாம்

ரசிப்பதற்கு நன்று

அதை அனுபவிக்க நினைத்தால்

வரபோகும் விளைவுகளை

ஏற்றுகொண்டுதானே ஆகவேண்டும்......

இவள் அதை ஏற்ப்பாளா? இல்லை

அதிலே கரைந்து விடுவாளா ?



உங்களை போல் நானும் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.....