அத்தியாயம்-14
புது வருட கொண்டாட்டம்......எங்கு எப்போது என்ன நடக்கும்....என பரபரெவென்று சுற்றிகொண்டிருக்கும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் இந்த செய்தி பரவ அவர்கள் அங்கு வந்து புகைப்படம் எடுக்க அங்கு இருந்த கும்பலில் ரோஜாவும் சேர்த்து நிற்கவைக்கப்பட்டாள்.
பின்னர் நண்பர்கள் அவளை தேடி ஹோட்டலுக்கு வர அவள் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று இருகிறார்கள் என கேள்விபட்டதும் வேகமாக காவல் நிலையம் செல்ல ஆனால் அங்கு ரோஜாவை அவர்கள் பார்க்க முடியவில்லை.....
அதற்குள் அங்கிருந்த காவலர் ஒருவர்” நீங்கள் எதற்கு இங்கு வந்தீர்கள்...பின்னர் உங்களையும் சேர்த்து உள்ளே வைத்து விடுவார்கள்....அந்த பெண்ணை அங்கு கையும் காலூமாக பிடித்து இருக்கிறார்கள்...அதனால் அவளை வெளியே விடமுடியாது......நீங்களும் இங்கே இருந்தீர்கள் என்றால் மாட்டிகொள்வீர்கள்...பின்னர் உங்கள் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்” என எச்சரிக்கை செய்தவர் ...ஒன்றும் பிரச்சனை இல்லை...நாளை அவர்களை விட்டு விடுவார்கள்....நீங்கள் கவலைபடாமல் செல்லுங்கள்” என சொல்ல அந்த நேரத்தில் விக்டரை மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாக தகவல் வர உடனே அவர்கள் வேகமாக அங்கு சென்றனர்.
இறைவனின் விளையாட்டுகளை சில நேரம் யாராலும் கணிக்க முடியாது.....அங்கு திருப்பதியில் பெருமாள் தரிசனம் பெற்றவர்கள் செய்து கொண்டிருக்க ,இங்கு அவர்களின் மகளோ சிறைகைதியாய் குற்றவாளிகளோடு குற்றவாளியாக நிற்க, உதவி செய்ய வந்த நண்பர்களோ தங்களது எதிர்காலம் இதனால் கேள்விகுறிஆகிவிடும் என யோசித்து நிற்க....காப்பாற்ற நினைத்த விக்டரோ மயக்கமாக மருத்துவமனயில் இருக்க இதில் யாரை குற்றம் சொல்வது..... தாத்தாவோ அவளை தேடி நேராக ஷோபி வீட்டிற்கு வந்தவர் அங்கு ஷோபி சொன்னதை கேட்டு அவர் அதிர்ச்சியில் மயக்கம் அடைய அடுத்த நிலை என்ன என்பது கேள்விக்குறியாக நின்றது.
பின்னர் தாத்தாவிற்கு மயக்கம் தெளிவித்து அவரை காவல் நிலையத்திற்கு ஷோபியின் தந்தை அழைத்து செல்வதற்குள் அதிகாலை ஆகிவிட்டது.காவல் நிலையத்திற்கு சென்றவர் விபரத்தை சொல்லி கேட்க இப்போது எதுவும் செய்யமுடியாது.....இன்ஸ்பெக்டர் வந்ததும் பேசிகொள்ளுங்கள்......இந்த தகவல் கொடுத்தவர் இன்ஸ்பெக்டருக்கு வேண்டப்பட்டவர்......அதனால் நாங்கள் ஏதும் செய்யமுடியாது என சொல்லிவிட்டனர்......அங்கிருந்து தாத்தா ராம்சரனுக்கு அலைபேசியில் அழைக்க இரவு முழுவது விழித்து இருந்து வேலை பார்த்தால் அலைபேசியை சைலென்ட் மோடில் வைத்துவிட்டு படுத்து உறங்கிவிட்டான் அவன்... அப்போது பயிற்சி ஆபிசராக இருந்தான்.
தனது பேத்தியை பார்க்க முடியாமல் தாத்தா வெளியே தவிக்க உள்ளே ரோஜாவின் நிலையோ மிகவும் மோசமானதாக இருந்தது.......இது போன்ற ஒரு நிலைமையை அவள் கனவில் கூட நினைத்தது இல்லை.....கொஞ்ச நேரம் பொறுத்திருந்தால் கிளம்பி இருப்பாள் ரோஜா.....மேலும் தாத்தாவை நினைக்க அவளுக்கு அழுகை அழுகையாக வந்ததது......தன் மீது எவ்வளவவு நம்பிக்கை இருந்தால் அவர் விட்டு சென்று இருப்பார்....அவரை ஏம்மாற்றியதற்கு தனக்கு இந்த தண்டனை தேவைதான் என மனதில் நினைத்து துடித்தவள் அப்போதும் அம்மா சொன்னார்....ரோஜா உன் நண்பர்கள் பழக்கவழக்கம் வேறு...நீ வளர்ந்த விதம் வேறு.....அவர்கள் நல்லவர்கள்தான்...ஆனால் உன்னை போல் வெகுளி இல்லை......இடத்திற்கு ஏற்ப மாறிகொள்வர்கள்...நீ அப்படி இல்லை என பலமுறை எச்சரித்தும் நான் கண்டு கொள்ளாமல் அப்போது எல்லாம் அவர்களை கிண்டல் செய்தேன்.......இப்போது அனுபவிக்கிறேன் என நினைத்து நினைத்து அழுது கரைந்து கொண்டிருந்தாள்.
அதற்குள் ராம்சரண் அலைபேசியில் தாத்தவை அழைக்க அவர் விபரம் சொன்னதும் உடனே காவலரை அழைத்து பேசினான் அவன்...அவர்களோ இன்ஸ்பெக்டர் வரும் முன்னர் தங்களால் எதுவும் செய்யமுடியாது...மேலும் மறுநாள் விடுமுறை என சொல்லிவிட பின்னர் தாத்தவிடம் பேசியவன் “தான் கிளம்பி அங்கு வருவதாகவும் .....அவர் கவலைபடவேண்டாம்” என ஆறுதல் சொல்லிவைத்து விட்டு மதியத்திற்குள் வந்து சேர்ந்தான்......அதற்குள் அவர்களின் மேல் கேஸ் எழுதிவிட பின்னர் ராம்சரண் வந்து மேலிடத்தில் பேசி அவளை வெளியே அழைத்து வந்தான்.
ராம்சரண் முதலில் ரோஜாவை சென்று பார்த்ததும்......”மாமாஆஅ என கத்தியவள் பின்னர் தன்னை சுற்றிலும் பார்த்துவிட்டு தேம்பி தேம்பி அழ...அவனோ வேகமாக அவள் அருகில் சென்றவன் ரோஜா நீ கவலைபடாதே....நான் பார்த்துகொள்கிறேன்” என சொல்லிவிட்டு இன்ஸ்பெக்டரிடம் பேச அவனோ விடமுடியாது என சொல்லிவிட பின்னர் மேலிடத்தில் பேசி அவளை வெளியே கேஸ் இல்லாமல் அழைத்து வந்தான்.
அவளை பார்த்ததும் தாத்தா வேகமாக சென்று அவளை கட்டிக்கொண்டு அழுக ...”அவளோ தாத்தா என்னை மன்னித்து விடுங்கள்....நான் செய்த தவறுக்கு தண்டனை....அய்யோ நான் இப்படி எல்லாம் நடக்கும் என்று நினைக்கவே இல்லை தாத்தா....... ரொம்ப கேவலமா பேசறாங்க தாத்தா” என கதற .....
அவரோ “அய்யோ இல்லை ரோஜா இல்லை...நான் தான் தப்பு செய்து விட்டேன்....உன்னை அப்போதே அழைத்து வந்திருக்க வேண்டும்..... நீ குழந்தை உனக்கு என்ன தெரியும்....... எல்லாம் என்னாலதான் என அவர் அதைவிட அரற்ற
ராம்சரனோ “உன்னை யார் அங்கு போக சொன்னா ரோஜா” என கோபமாக கேட்டான்.
அவளோ அழுது கொண்டே “நான் இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை ராம் என நடந்த நிகழ்வை சொன்னவள் ........நண்பர்கள் அனைவரும் உடன் இருந்தனர்....வேகமாக அனைவரும் சிதறி ஓடும்போது விக்டர் தான் இந்த பக்கம் செல் என்றான்......அதான் சென்றேன்.....அப்போது அந்த காவலர் ...காவலர் என தேம்பியவள் .......நான் சத்தியமாக குடிக்கவில்லை ராம் “என சொல்லும்போதே ஆத்திரமும் அழுகையும் வர அவள் அழுது துடிப்பதை பார்த்து தாத்தாவின் நெஞ்சில் ரத்தம் வடிந்தது.......”அய்யோ என் குலகொழுந்து இப்படி துடிக்க நானே காரணமாகிவிட்டேனே” என அவர் கதற ராமோ என்ன செய்வது என தெரியாமல் திகைத்து போய் நின்றான்.
பின்னர் அவர்களை சமாதானபடுத்தி வீட்டிற்கு அழைத்து வந்தான் ராம்.......... வரும் வரை அவளது தாத்தா யார்கூடவும் பேசவில்லை.......வீட்டிற்க்குள் நுழைந்ததும் அவள் ஓடிசென்று தன் அறையில் அடைந்துகொள்ள அப்போதுதான் தாத்தாவை கவனித்தான் ராம்சரண் ..
“தாத்தா அதான் ரோஜாவை பாதுகாப்பாக அழைத்து வந்து விட்டோமே ...இனி என்ன கவலை........நீங்கள் கவலைபடாதீர்கள் மேலிடத்தில் எனது சீனியர் ஆபிசரிடம் சொல்லி அவளது புகைப்படம் செய்திதாளில் வராமல் பார்த்து கொள்கிறேன் என்றவன் தாத்தா ...தாத்தா” என அவரை உலுக்க அவரோ எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தார்.
பின்னர் அத்தை, மாமா, பாட்டி எல்லாம் எப்போ வருவார்கள் என்று கேட்டவன்.... இரவு வந்துவிடுவார்கள் என அவர் சொல்ல .......அவர்களிடம் எதுவும் சொல்லவேண்டாம் ........அவர்கள் வந்ததும் பக்குவமாக சொல்லிகொள்ளலாம் என அவன் சொன்னான்.
ஆனால் மனிதன் ஒன்று நினைக்க இறைவன் ஒன்று நினைக்கிறான்......செய்திதாள்களில் அவளது புகைப்படம் வரகூடாது என ராம்சரண் சொல்லி இருந்தாலும் இணையத்தில் கும்பலில் அவளது புகைபடமும் வந்திருந்தது........ அதில் ஒன்று சேகரின் நண்பர் கைகளுக்கு செல்ல அவர் மறுநிமிடம் சேகரை அழைக்க இரவு வரவேண்டியவர்கள் விமானத்தை பிடித்து மதியமே வந்து சேர்ந்தனர்.....சில அலைபேசி அழைப்புகள் வீட்டிற்க்கும் வர ராம்சரண் அலைபேசியை அனைத்து வைத்து இருந்தான்.
வீடிற்கு அவர்கள் தொடர்பு கொள்ள....அது அணைக்க பட்டிருக்க சேகர் பதறி கிளம்பி வீட்டிற்கு வர அங்கு தன் மகளை பார்த்ததும் பார்வதி வேகமாக சென்று அவள் கன்னத்தில் அறைந்தவர்...”அடிபாவி மகளே இப்படி பண்ணிட்டியே” என திட்ட மரகதமோ வேண்டாம் என தடுத்து அவளை வெளியே இழுத்து வந்தார்......ஏற்கனவே அப்பா அம்மா என்ன சொல்வார்களோ என பயத்தில் இருந்த ரோஜா.......பார்வதி வந்து என்ன நடந்தது என கேட்காமலே அடித்ததும் அவள் அதிர்ந்து நிற்க
உள்ளே நுழைந்த சேகர் தந்தையிடம் என்ன நடந்தது என கேட்டார். அவரோ எதுவும் சொல்லாமல் விட்டத்தை பார்த்துகொண்டே இருக்க......”சொல்லுங்கப்பா என்ன நடந்தது...ஏன் எனக்கு தகவல் கொடுக்கவில்லை......என் நண்பன் சொல்லி எனக்கு தெரிகிறது.......அப்போ அவன் சொன்ன செய்திகள் எல்லாம் உண்மையா ...........ரோஜா குடித்து இருந்தாளா........உங்களை நம்பிதானே விட்டு சென்றேன்......இப்படி கொண்டு வந்து நிறுத்திட்டிங்கலே”என அவர் ஆத்திரத்தில் வார்த்தைகளை கொட்ட ]
ராம் சரனோ “மாமா கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்றவன்...நடந்ததை சொன்னவன் இதில் யார் மீதும் தவறு இல்லை.....கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள் ...மேலும் இனி ரோஜாவின் பெயர் வெளியே வராது...அதற்கான ஏற்பாடுகளை நான் பண்ணிவிட்டேன்” என்றான்.
உடனே பார்வதி “அடிபாவி மகளே......எத்தனை முறை சொல்லி இருக்கேன்...அவர்களோடு சேராதே என்று ......இப்போ பார்த்தாய் அல்லவா ....அவர்கள் எல்லாம் தப்பித்து கொண்டார்கள்......நீ மாட்டிகொண்டாய்....அய்யோ இதற்கா மருத்துவம் படிக்கிறேன் என்று வந்தாய்.........பெருமாளே உன்னை தேடி நாங்கள் வர இன்று என் பிள்ளை இப்படி சீரழிந்து இருக்கிறதே......உனக்கு இது தகுமா “என தனது ஆத்திரத்தை மற்றவரிடம் காட்ட முடியாமல் பார்வதியின் பெற்ற மனம் கதறி துடிக்க
“உன்னை புத்திசாலி என்று நினைத்தேன்...ஆனால் இப்படி பண்ணிவிட்டாயே ரோஜா என மரகதம் ஆரம்பித்தவர் திரும்பி தன் கணவரை பார்த்து ஒரு வயதுக்கு வந்த பெண்ணை அடுத்தவர் வீட்டில் இரவு நேரத்தில் இப்படிதான் பொறுப்பில்லாமல் விட்டு வருவீர்களா....நீங்கள் எல்லாம் என்ன பெரிய மனிதர்.......நான் ரோஜாவை குறை சொல்லபோவதில்லை...எல்லாம் உங்கள் தப்பு...உங்களால் தான் என் பேத்தி இப்போது இந்த நிலைமைக்கு ஆளாகிவிட்டாள்.......அவளை நான் பார்த்துகொள்கிறேன்....நான் பார்த்துகொள்கிறேன் என்று சொல்லிவிட்டு நீங்களே இப்படி பலி கொடுத்து விட்டீர்களே” என தனது ஆற்றாமையை வார்த்தைகளில் பேத்தியை திட்ட முடியாமல் தனது கணவரை அவர் திட்டி தீர்க்க
“ஏன் மாமா உங்கள் பேத்திய விட தூக்கம் தான் உங்களுக்கு பெரிதாக போய்விட்டதா......ஒரு நாள் இரவு உங்களை நம்பி விட்டதற்கு இப்படி பண்ணிவிட்டீர்களே” என பார்வதி மனம் ஆற்றாமையில் அவரை குறை சொல்ல
சேகரோ எதுவும் பேசாமல் அப்படியே சிலையாக அமர்ந்திருந்தார்.
அவர்களது ஆதங்கத்தை கொட்டி தீர்க்கட்டும்....ஏனெனில் எந்த பெற்றோர்களுக்கும் இது ஜீரணிக்க முடியாத விஷயம் ...அதனால் அவர்கள் பேசுவதை பொறுமையாக கேட்டு கொண்டிருந்தான் ராம்சரண்.
அவளை குறை சொல்லாமல் அனைவரும் அவளின் தாத்தாவை குறைசொல்வதை தாங்கமுடியாமல் ரோஜா “தாத்தாவை ஒன்று சொல்லாதீர்கள்...எல்லாவற்றிகும் நான் தான் காரணம் என சொல்லி அழ பார்வதியோ அவளை திரும்ம்பி பார்த்து முறைத்தவள் நீ இனி எங்களுடன் பேசாதே.....அதான் எல்லாம் முடிந்து விட்டதே.... எங்களை சந்தி சிரிக்க வைத்து விட்டாயே .....இன்னும் எதற்கு பேசிக்கொண்டு இருகிறாய்” ...நான் அப்போதும் சொன்னேன் இந்த படிப்பு எல்லாம் வேண்டாம் என்று.......இப்போது துன்பபடுவது யார் நாங்கள்தானே”....என அவளை மீண்டும் திட்ட
அதற்குள் சேகருக்கு மறுபடியும் அலைபேசி அழைப்பு வர அதில் ரோஜாவை பத்தி விசாரிக்க சேகரோ என்ன சொல்வது என தெரியாமல் திணற இதை பார்த்த ரோஜா,தாத்தா இருவர் கண்ணிலும் கண்ணீர் நிற்காமல் வந்து கொண்டிருந்தது.அலைபேசியை அனைத்து மூலையில் எறிந்தவர் என் மானமே போச்சு...... இன்னும் எத்தனை பேர் இப்படி கேட்கபோகிறார்களோ ...அய்யோ என் மகள் டாக்டர் என பெருமை பட்டு கொண்டிருந்தனே.... இப்போது குடிகாரி என பெயர் வந்து விட்டதே .......... கண்ட கனவு எல்லாம் கானல் நீராக போய் விட்டதே”........ என வேதனையில் நொந்து தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார் .
சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்த தாத்தா எழுந்து தனது அறைக்கு சென்றார்......அழுது,அழுது ரோஜாவும் அப்படியே அசதியில் உறங்கிவிட்டாள்.பின்னர் மற்றவர்கள் கொஞ்சம் தெளிவடைந்ததும்...சரி நடந்தது நடந்து விட்டது....அடுத்து என்ன செய்யலாம்” என மரகதம் கேட்க
,”இனி இதை பற்றி எதுவும் பேசவேண்டாம்....இனி ரோஜாவின் பெயர் எந்த செய்தித்தாள்,தொலைகாட்சியிலும் வராது ....அதற்கு நான் பொறுப்பு என ராம் உறுதி கொடுத்தவன் பின்னர் இது போன்ற நிகழ்சிகள் கல்லூரி வாழக்கையில் சாதாரணம் .....பெரிது படுத்தவேண்டாம்......அந்த மாணவர்கள் நகரத்தில் வாழ்ந்தவர்கள் ....அதனால் தப்பித்து கொண்டார்கள்...ரோஜாவிற்கு அந்த வேகம் வரவில்லை...அதான் பிரச்சனை என்றவன் இனி இதை பற்றி பேசவேண்டாம்......ரோஜா வெளியே எதுவும் சொல்லவில்லையே தவிர மனதளவில் மிகவும் பாதிக்க பட்டு இருக்கிறாள்.....அவளது கண்களை பார்த்தீர்களா ஒரு நிலை இல்லாமல் அலைபாய்கிறது....அப்படி இருந்தாலே ஆபத்து...அதனால் நீங்கள் அவளை மேலும் எதுவும் சொல்லவேண்டாம்” என அவர்களுக்கு ஆறுதல்களையும் அறிவுரைகளையும் சொன்னான் ராம்சரண்.
வேதனைகள் நெஞ்சில் நிரம்பி வழிந்தாலும்.....இனி கவலைப்பட்டு மாறபோவது எதுவும் இல்லை என்ற நிதர்சனம் புரிய சேகர் அமைதியாக இருக்க ,பார்வதியோ அழுது கொண்டே இருக்க,மரகதமோ தன் கணவரால்தான் ரோஜாவிற்கு இந்த நிலைமை... என எண்ணி எண்ணி வேதனை அடைய யோசித்தவர்கள் அப்படியே இருந்த இடத்திலே கண் அசந்தனர்..
விடிகாலை பொழுது சூரியன் எட்டிப்பார்க்க முதலில் கண்விழித்த மரகதம் “பார்வதி விடிந்து விட்டது.......பால்காரர் வந்து விடுவார்...... ....பாவம் இரவு யாரும் எதுவும் சாப்பிடவில்லை ....நீ முதலில் சமையல் செய்” என சொல்ல ...பார்வதியோ எதுவும் சொல்லாமல் அமைதியாக எழுந்து சென்றார்.
சில நிமிடங்களில் “அய்யோ என்னங்க இங்க ஓடிவாங்காஆஆஆஆ!!!!!!!!!!!!! “என பார்வதியின் அலறல் கேட்க வீட்டில் இருந்த அனைவரும் குரல் வந்த திசை நோக்கி ஓடினர்.
அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்க .........ரோஜாவோ அப்படியே சிலையாக நின்றாள்.
மருத்துவர் வந்து பார்த்துவிட்டு...சிவியர் அட்டாக் வந்திருக்கு முடிந்து வெகுநேரம் ஆகிவிட்டது என சொல்லிவிட்டு செல்ல “அய்யோ!!!! என்னை இப்படி தனியா விட்டுட்டு போய்ட்டிங்கலே” என மரகதத்தின் கூக்குரல் அனைவரயும் அதிர செய்தது......
அந்த கோபத்தில் வேகமாக ரோஜாவிடம் திரும்பிய பார்வதி “இப்போ உனக்கு சந்தோசமாடி......இப்போ இவரும் போய்விட்டார்...இனி வரிசையாக நாங்களும் போய் விடுகிறோம்.......இனி நீ உன் எண்ணம் போல் வாழலாம்” என ரோஜாவை வார்த்தையால் சுட்டெரிக்க
தாத்தா இறந்த அதிர்ச்சியில் பிரம்மை பிடித்தவள் போல் இருந்தவள் ரோஜா இந்த வார்த்தை கேட்டதும் தன்னால் தான் அவர் இறந்துவிட்டார் என முடிவு செய்தவள் வேகமாக அவர் அருகில் சென்று “தாத்தா நான் இனி எங்கும் செல்லமாட்டேன்....நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்பேன்...நீங்கள் என்னை விட்டு போகாதிங்க...எழுந்தரிங்க தாத்தா....எழுந்தரிங்க” என கத்தியவாரே அவரின் சடலத்தை உலுக்க
அருகில் இருந்த ஒரு பெரியம்மா “ரோஜா நீ கொஞ்சம் அமைதியாக இரு. என அவளை மிரட்ட....அய்யோ பாட்டி எனக்கு என் தாத்தா வேணும்...என் தாத்தா வேணும்” என மீண்டும் அவரின் கைகளை பிடிக்க ...அருகில் இருந்த சில பெண்கள் “அய்யோ இந்த பெண்ணிற்கு மண்டை மூளை ஏதாவது குழம்பி விட்டதா...இப்படி பிடித்து இழுக்கிறது என சொல்லியபடி அவளை பிடித்து தள்ளி நிறுத்த...அவளோ என்னை விடுங்கள் விடுங்கள்...என் தாத்தா என்னை விட்டு போகமாட்டார்” என கதறியபடியே சுவரில் சாய்ந்து சரிந்தாள்....... ,அந்த நேரத்தில் மரகதமோ ,பார்வதியோ ரோஜாவை கவனிக்கும் நிலையில் இல்லை.......தாத்தா இறந்த அதிர்ச்சியா,வந்தவர்களில் சில பேருக்கு விபரங்கள் தெரிய அதை பற்றி இவர்கள் காதுபடவே அவர்கள் பேச,அதுவும் சேகரிடம் சிலர் உண்மையா என விசாரிக்க...... அவரோ தந்தையின் இறப்பை நினைத்து கவலைபடுவதா ,இல்லை தன் குடும்பத்தின் மானம் காற்றில் பறப்பதை நினைத்து வருந்துவதா? என தெரியாமல் பிரம்மை பிடித்தவர் போல் அமர்ந்திருந்தார்..
மேற்கொண்டு என்ன காரியங்கள் செய்யவேண்டும் என்பதை ராம்சரண் தான் முன்னின்று செய்து கொண்டிருந்தான்.அதனால் ரோஜாவின் நிலைமை யாருக்கும் புரியாமல்போனது........அதற்க்கு ஏற்றாற்போல் அப்போது அருகில் ஒரு பெண் ரோஜாவிடம் ........”உன்னால்தான உங்க தாத்தா இறந்தார்....நீ நான்கு ஐந்து பையன்களுடன் குடித்து கும்மாளம் போட்டு கொண்டு இருந்தியாமே......செய்ததை தான் செய்தாய்...யாருக்கும் தெரியாமல் செய்வேண்டியது தானே....... குடி மட்டும் தானா இல்லை மற்றதுமா” என நரம்பு இல்லாத நக்கு என்பதால் ஈவு இறக்கம் இல்லாமல் அவர் வார்த்தைகளை கொட்ட
அதை கேட்டதும் அவளது முகம் மாற ,உடல் நடுங்க கைகளை தன் முழங்காலுடன் சேர்த்து கட்டிக்கொண்டு அப்படியே சுவரின் ஓரம் கூனி குறுகி அவள் ஒண்ட அதற்க்கு பிறகு ரோஜா ஒரு வார்த்தை கூட யாரிடமும் பேசவில்லை....விழிகளில் கருவிழிகள் இரண்டும் நிலைகுத்தி நிற்கஅப்படியே அமர்ந்திருந்தாள்....
இறுதியாக தாத்தாவின் முகத்தை பார்க்க ராம் வந்து அழைக்க அவனை வெறித்து பார்த்தவள் எதுவும் பேசாமல் அப்டியே அமர்ந்திருக்க ,அதற்குள் அங்கு வந்த சேகர் “ராம் என்னால் முடியவில்லை ...பலரும் பலவிதமாக பேசுகிறார்கள் என சொல்லி அழுக ... அது ரோஜாவை மேலும் தாக்க அப்படியே பிடித்து வைத்த மண் போல் அமர்ந்திருந்தாள். என்ன மாமா பண்றது.....இந்த நேரத்தில் நாம் அவர்களிடம் என்ன சொல்லி புரியவைப்பது.......விட்டு விடுங்க....இல்லையெனில் நீங்கள் உள்ளே அறைக்கு செல்லுங்கள்....நான் பார்த்து கொள்கிறேன்” என்றான்.
பின்னர் ரோஜாவை பார்த்தவன் அவள் அப்படி அமர்ந்திருந்ததும் ஒருவேளை அதிர்ச்சியில் இப்படி இருக்கிறாள்....பின்னர் சொல்லி சரிபண்ணிவிடலாம் என நினைத்து சென்றுவிட்டான் ராம். காவேரியாம்மால் தான் அனைத்தும் உடன் இருந்து செய்து கொண்டிருந்தார்......அவருக்கும் அரசால் புரசலாக விஷயம் தெரிய முழுவதும் தெரியவில்லை.
இரண்டு நாட்கள் ஓடிவிட்டன.....சேகர் மனமும்,உடலும் சோர்ந்து அமர்ந்திருக்க,,,மரகதமோ சடங்குகளினால் அவரும் அவரது அறையிலே அமர்ந்திருக்க,பார்வதியோ வந்தவர்களுக்கு பதில் சொல்லியபடி இருக்க ரோஜாவும் அவளது அறையை விட்டு வெளியே வரவில்லை.
உறவினர் அனைவரும் சென்ற பின்னர் ராமும் வேலை தொடர்பாக செல்ல வேண்டியது இருந்ததால் இரண்டு நாட்களில் திரும்பி விடுவதாக சொல்லி சென்றான்.............அவனும் ரோஜாவை தொந்தரவு செய்யவில்லை ....அன்று இரவு அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து உணவு உண்ண பார்வதி அழைக்க சேகரும் மரகதமும் வந்தனர்.
“எங்கே அந்த மகாராணி......அவளை தனியாக வெற்றிலை பாக்கு வைத்து அழைக்க வேண்டுமா” என பார்வதி கோபத்தில் கேட்க
“அச்சோ பார்வதி ...போதும் இனி ரோஜாவை ஏதும் சொல்லாதே .....ஒரு உசிரு நம்ம விட்டு போனது பத்தாதா ...மறுபடியும் அவள் ஆத்திரத்தில்” என சொல்லும்போதே மரகதத்தின் குரல் நடுங்க...ஏனோ அவர்க்கும் தனது கணவர் இறந்தது மனதை உறுத்த அப்படி சொன்னார்.
“அய்யோ அத்தை என் பதறிய பார்வதி.......இனி நான் எதுவும் சொல்லமாட்டேன் என்றவள் சேகரை பார்த்து நீங்க சென்று அவளை சாப்பிட அழைத்து வாருங்கள்......பசி தாங்கமாட்டாள் பாவம்” என சொல்ல
மரகதமும் “ஆமாம் நீ அழைத்தால் வந்து விடுவாள்......போய் அழைத்து வா” என்றார்.
சேகரும் ரோஜாவின் அறைக்கு சென்று அவளை இருமுறை பெயர் சொல்லி அழைக்க அங்கு எந்த பதிலும் இல்லை........உடனே கதவை அவர் தள்ள அது திறக்க அங்கு ரோஜா சுவற்றை வெறித்து பார்த்தவாறே அமர்ந்திருந்தாள்.பட்டாம்பூச்சி போல் பறந்து திரிந்து கொண்டிருந்த தன மகள் இன்று சிறகொடிந்து இப்படி அமர்ந்திருப்பதை பார்த்ததும் அவரின் மனம் வேதனையில் துடிக்க அவள் அருகில் சென்றவர் அவள் தலையில் கைவைத்து தடவி கொடுத்தபடி......ரோஜா என்னடா இது....நடந்தது நடந்து விட்டது......எங்களுக்கு உன் மேல் எந்த கோபமும் இல்லை .......நீ வீணாக மனதை போட்டு குழப்பி கொள்ளாதே .......சாப்பிடவா என அழைத்தார்.
அவளோ அப்படியே அமர்ந்திருக்க
“ரோஜா உன்னைத்தான் சொல்கிறேன் ....வா சாப்பிடபோகலாம்” என மீண்டும் அவர் அழைக்க
அவளிடம் அதற்கும் எந்த பதிலும் இல்லை....
உடனே அவர் ரோஜா என கத்தியபடி அவளை உலுக்க அவ்ளோ எந்த உணர்வும் இன்றி அப்படியே அமர்ந்திருந்தாள்.
“அய்யோ பார்வதி இங்கே வா” என சேகர அலற
பார்வதியும் மரகதமும் ஓடிவர ஆனால் அதற்கும் அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை......அருகில் வந்த மரகதம் “என்ன சேகர் என்ன ஆச்சு” என பதறி கேட்க
“அம்மா ...அம்மா இவள் எதுவும் பேசமாட்டேன் என்கிறாள்...இங்கே பாருங்கள் விழிகள் அசைவில்லாமல் இருக்கின்றன......எனக்கு பயமாக இருக்கிறது” என அவர் உடைந்து அழ
“அய்யோ ரோஜா!!!! என பார்வதி வேகமாக ஓடி சென்று தன் வயிற்றோடு அவளை அணைத்தவள்.....என் தங்கமே.......என் உயிரே என்னடி ஆச்சு உனக்கு....அம்மா திட்டிவிட்டேன் என பேச மறுக்கிறாயா....அய்யோ நான் தெரியாமல் திட்டி விட்டேன்...இனி எதுவும் சொல்ல மாட்டேன் ...என்னிடம் பேசு ரோஜா ...பேசு “என பெற்ற மனம் பதற
ஆனால் மரகதமோ எதுவும் சொல்லாமல் அவளையே சிறிது நேரம் பார்த்து கொண்டிருந்தவர் “சிறு நெருப்பில் சிக்கியவளை நாம் முட்டாள்தனத்தால் பெரும் தணலில் தள்ளிவிட்டோம் சேகர் என அழுத்தமாக சொன்னவர் அவள் அருகில் வந்து அமர்ந்து பார்வதியிடம் இருந்து அவளை பிரித்து அவள் கைகளை பிடித்து அழுத்திகொண்டே ரோஜா இங்கு பார்....... என்னை பார்......உனக்காக உன் பாட்டி அப்பா,அம்மா எல்லாரும் இருக்கிறோம்...... உன் தாத்தா நம்மை விட்டு சென்று விட்டார்......எனக்கு இருந்த ஒரே ஆதரவும் என்னை விட்டு போய் விட்டது....ஆனால் அவர் அடிகடி சொன்னது நான் இல்லை என்றாலும் என் பேத்தி உன்னை நன்றாக பார்த்து கொள்வாள் என்றார்.......உன் தாத்தா சொன்ன சொல்லை நீ காப்பாற்றுவாயா” என அவளது மனதை படித்தபடியே அவர் ஒவொவொரு வார்த்தையாக அழுத்தமாக சொல்ல தாத்தவின் பெயரை கேட்டதும் கருவிழிகள் மாரகதத்தை நோக்கி திரும்ப...அவர் வா...வந்து சாப்பிடு ...நீ சாப்பிட்டால்தான் நானும் சாப்பிடமுடியும்” என சொல்ல அவள் எதுவும் பேசாமல் எழுந்து உடன் வந்தாள்.
நடப்பதை புரிந்து கொண்ட சேகரும் பார்வதியும் அவளுடன் வர பின்னர் அனைவரும் சேர்ந்து உணவு உண்ண அவளோ பேருக்கு கொறித்து விட்டு மீண்டும் தனது அறைக்குள் சென்றுவிட்டாள்.
அப்போது ரோஜாவின் நண்பர்கள் அவளை பார்க்க வந்தனர். அவள் அவர்களை பார்த்ததும் பயந்து அலறி ஓட விக்டரோ அந்த இடத்தில் அழுது விட்டான்...... “அங்கிள் நான் மருத்துவமனையில் இருந்தேன்.....இல்லை என்றால் ரோஜாவை இந்த நிலைக்கு கண்டிப்பாக விட்டிருக்க மாட்டேன் நம்புங்கள் அங்கிள்” என சொல்லி அழ
உடன் இருந்தவர்களும் “அங்கிள் நாங்கள் தெரிந்து இந்த தப்பு செய்யவில்லை.....அவளும் வெளியே வந்திருப்பாள் என்று நம்பித்தான் வீட்டிற்கு வந்தோம்....ஆனால் இப்படி ஆகும் என்று நினைக்கவில்லை என அவர்கள் சேகரிடம் மன்னிப்பு கேட்க அவரோ நடந்தது நடந்துவிட்டது....இனி தயவு செய்து இதை பற்றி பேசாதீர்கள்” என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
அப்போது அங்கு வந்த மரகதம் “இந்த காலத்து பிள்ளைகள் நட்பு சேருவதில் காட்டும் வேகத்தை அந்த நட்பிற்கு ஒரு துன்பம் வரும்போது தங்களை காப்பாற்றிக்கொள்ள நட்பை கொன்றுவிடுகின்றனர்” என சொல்லிவிட்டு நீங்கள் கிளம்புங்கள் என்றார். “நீங்கள் உண்மயாக நண்பர்களாக இருந்தால் இனி ரோஜாவை சந்திக்க வராதீர்கள்......உங்களை பார்த்தால் அவளுக்கு அந்த நினைவு மீண்டும் வந்துவிடும்” என சொல்லி அவர்களை அனுப்ப அவர்கள் அனைவரும் தலைகுனிந்து அங்கிருந்து வெளியேறினர்.