• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் - 16

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
அத்தியாயம் -16



காலை நேரம் அனைவரும் சுறுசுறுப்பாக பொருட்களை எல்லாம் எடுத்து வைத்து கொண்டிருக்க......”பார்வதி அந்த நகைபெட்டியை மறக்காமல் எடுத்துவைத்து விடு ......அப்படியே கூறை சேலையை கோவிலில் தான் கொடுக்கணும்...அது பத்திரம் என சொல்லிகொண்டே ...சேகர் மாப்பிள்ளை அழைப்புக்கு கார் அனுப்பிட்டியா என கேட்க அவரோ இல்லம்மா மாப்பிளை நேராக கோவிலுக்கு வந்து விடுகிறோம் என்று சொல்லிவிட்டார்கள் என செல்ல ....ஏய் சோலையம்மா தட்டு எல்லாம் சரியா இருக்கானு பார்த்தியா ...அங்க வந்து இது இல்லை...அது இல்லை ...குறையுது என்று சொல்ல கூடாது” என அனைவற்க்கும் உத்தரவு போட்டபடி வீட்டின் வரவேற்ப்பரையில் நின்று கொண்டிருந்தார் மரகதம்.

அப்போது “பார்வதி...பார்வதி ஐயர் கோவிலுக்கு வந்து விட்டாராம்.....சீக்கிரம் வா” என சொல்லி கொண்டே சேகர் உள்ளே வர

அவரை பார்த்ததும் ஏதும் பேசாமல் பார்வதி முறைக்க

“ஆஹா இன்னும் சாமி மலை இறங்கலையா என மனதில் நினைத்தவாரே ...ஹிஹிஹி என வலிந்து கொண்டே பார்வதியின் அருகில் வந்தவர் ....இந்த புடவை உனக்கு ரொம்ப நல்லா இருக்கு பாரு.......நம்ம கல்யாணம் பண்ணும்போது எப்படி இருந்தியோ அப்படியே இருக்க பாரு “ என சொல்ல

உடனே பார்வதி “ம்ம்ம்ம்....இன்னைக்கு எல்லாம் அப்படிதான் இருப்பேன்....ரொம்ப வழியுது தொடச்சுக்குங்க என நக்கலாக சொன்னவள் .......நீங்க சொன்னாலும் சொல்லலைனாலும் அதான உண்மை......இது வரைக்கும் உங்கள் அம்மா பேச்சு தான சபை ஏறுது ......நான் சொல்றத யார் கேட்கிறா....என் பொண்ணோட திருமணம் கூட நான் நினைச்ச மாதிரி இல்லே...அந்த உரிமை கூட எனக்கு இங்கே இல்லையே “ என தனது மனதின் ஆதங்கத்தை சேகரிடம் கொட்ட

“என்ன பாரு நீ ....அம்மாதான எல்லாம் விளக்கமா சொன்னாங்க இல்லயா .....எனக்கும் ராம்சரண் மருமகனா வந்திருந்தால் நன்றாகத்தான் இருக்கும்னு தோனுது...ஆனால் அதுக்கு அவங்க இரண்டு பேருமே சம்மதிக்கவில்லயே என்றவர் ...அன்று நீயும் தானே கூட இருந்தாய்” என்றார்.

“ம்ம்ம்ம் இருந்தேன்...இருந்தேன்......ஆனா அதுக்கு முன்பே உங்க அம்மா ஆஸ்பத்திரியிலே அவளுக்கு வேது அடிச்சுல்ல கூட்டிட்டு வந்திருந்தாங்க”....என்றாள்.

ஆம் தேவா கிளம்பியதும் ராம் சரண் வந்த பிறகு முதலில் பாட்டியும் ராம்சரனும் மருத்துவரிடம் ரோஜாவின் உடல் நிலை விசாரிக்க முன்பு இருந்த நிலைக்கு இப்போது பரவாயில்லை....வெகு சீக்கிரமாக கண்விழித்து விட்டாள்......இது முன்னேற்றத்திற்கான அறிகுறி தான்.....என்றவர் ராமை பார்த்து பாட்டி உங்களிடம் நான் சொன்னதை சொன்னார்களா” என கேட்டார்.

மரகதமோ இன்னும் இல்லை என சொன்னவர் இனிதான் பேசணும் என்றவர் ராம்சரனை வெளியே அனுப்பி விட்டு மருத்துவரிடம் சிறிது நேரம் பேசினார் மரகதம்.....பின்னர் ராம்சரனும் பாட்டியும் ரோஜாவின் அறைக்கு சென்றனர்.....அங்கு அவள் நல்ல உறக்கத்தில் இருக்க ...பாட்டி நடந்த அனைத்தையும் ராமிடம் சொன்னார்..........

அனைத்தயும் கேட்ட ராம் எதுவும் சொல்லாமல் அமைதியாக சில மணித்துளிகள் அமர்ந்திருந்தவன்....பின்னர் மரகதத்தின் முகத்தை பார்த்தவாறே “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் பாட்டி” என்றான்.

அவரோ “அது நீ சொல்லும் பதிலை பொருத்து இருக்கிறது ராம்...உனக்கு சம்மதம் என்றால் எனக்கும் சம்மதம்....உன்னைவிட ரோஜாவை வேறு யாரால் பாசமாக,அன்பாக பார்த்து கொள்ள முடியும்” என அவர் சொல்ல

“பாட்டி நான் ரோஜாவின் மேல் வைத்துள்ள பாசம் ,அன்பு எல்லாம் ஒரு சகோதரி அப்படி என்று கூட சொல்லமுடியாது.......அவள் எனக்கு குழந்தை போல....அவளை எப்படி” என நிறுத்தியவன்

“நான் மாமா அன்று இதை பற்றி பேசிய போதே சொல்லியிருப்பேன்...ஆனால் ஏற்கனவே பல மன உலச்சல்களில் அவர் இருந்தார்....இதை சொன்னால் தாங்கி கொள்ளமாட்டார்....மேலும் நீங்களும் ரோஜாவை இந்த அளவு என்னை நம்பி அனுப்பி இருக்க மாட்டீர்கள்அதனால்தான் நான் சொல்லவில்லை” என்றவன்

“பாட்டி ரோஜாவை திருமணம் செய்யும் எண்ணம் எனக்கு துளிகூட இல்லை...ஆனால் அதே நேரத்தில் அவளுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய பொறுப்பும் எனக்கு இருக்கு....இன்னும் சிறிது நாட்கள் பொறுத்திருங்கள்....நானே ரோஜாவிற்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து சொல்கிறேன்.....என்னை மன்னித்து விடுங்கள் பாட்டி.....திருமண எண்ணம் எனக்கு துளிகூட இல்லை....ரோஜாவிற்கும் அப்படிதான்”.....என சொல்லி நிறுத்தி அவர் முகத்தை பார்க்க

பாட்டியும் சிறிது நேரம் அமைதியாக இருந்தவர் பின்னர்...ராமிடம் ராம் நீ சொல்வதும் எனக்கு புரிகிறது.........நான் ஒன்று சொல்கிறேன் ...நீ அதை சரியா தவறா என்று கூறு என்றவர் .........நேற்று அந்த தேவா தம்பி இங்கு இருந்தார் இல்லயா....அவர் செல்லும்போது ரோஜாவை தனக்கு திருமணம் செய்து கொடுங்கள் என கேட்டார்.......அவளை அவர் விரும்புகிறாராம்......நன்றாக பார்த்து கொள்வேன் என்கிறார் மேலும் “என தேவா சொன்னவற்றை அவர் ராமிடம் சொல்ல ....ராமிற்கோ அது பெரும் அதிர்ச்சி தான்....

“என்ன பாட்டி சொல்றிங்க என கேட்டவன் ...ஆமாம் ராம்...அந்த தம்பி தான் சொன்னார் என சொல்லிவிட்டு நான் ரோஜா உனக்குத்தான் என சொல்லிவிட்டேன்....ஆனால் அவர் கண்டிப்பாக ராம் ஒத்துகொள்ள மாட்டான்...அவன் மறுத்து விட்டால் ரோஜா எனக்கு தான்..... தெரிந்தோ தெரியாமலோ அவளின் இந்த நிலைமைக்கும் நானும் ஒரு காரணம் அதை சரி செய்யும் கடமையும் எனக்கு இருக்கிறது.......... .....மேலும் எனக்கு அவளை பிடிக்கும்....விரும்பி தான் கேட்கிறேன் ....ரோஜாவை எனக்கு மனம் செய்து கொடுங்கள் என கேட்கிறார் ” என்றார் மரகதம்.

சிறிது நேரம் யோசித்தவன் “தேவாவை பொறுத்தவரை நான் தெரிந்து கொண்ட அளவு நல்லபடியாகத்தான் சொல்கிறார்கள்......ஆனால் இன்று எனக்கு அவகாசம் கொடுங்கள்...மேலும் அவனை பற்றி விசாரித்து சொல்கிறேன் என ஒரு பொறுப்பான ஆண்மகனாக அவன் சொல்ல மரகதமோ.சரி ராம் நீ விசாரித்து சொல்....அவரை மாப்பிள்ளை என்று முடிவு செய்து விட்டால் இன்னும் மூன்று நாட்களில் திருமணம் நடந்து விட வேண்டும்.....அந்த தம்பி தான் சொன்னார்.... இல்லை என்றால் ரோஜா ஒத்துகொள்ளமாட்டாள்.....அதைவிட நான் மாப்பிள்ளை என்பதே அவளுக்கு தெரியாமல் பார்த்து கொள்வது இன்னும் நல்லது” என்றும் சொன்னார் என அவர் சொல்ல

ராமோ சிரித்துகொன்டே “பாட்டி தேவா ரோஜாவை சரியா எடை போட்டு வைத்து இருக்கிறான்...... அது வேண்டுமானால் உண்மை ...நாட்களை தள்ளிபோட அவள் வேறு எதாவது குழப்பத்தை ஏற்படுத்தி விடுவாள் என்றவன் இது ஒன்றே போதும்...அவன் ரோஜாவை எந்த அளவு புரிந்து வைத்திருக்கிறான் என்று தெரிகிறது.........ஆனாலும் நான் விசாரித்துவிட்டு சொல்கிறேன்.....பின்னர் நீங்கள் ரோஜாவிடம் திருமணத்தை பற்றி பேசுங்கள் “என்று சொன்னான்.

இங்கு பார்வதியும் சேகரும் வீட்டிற்கு வந்தவர்கள் செய்தி கேட்டு பதறி மருத்துவமனைக்கு செல்ல அதற்குள் ரோஜா சற்று கண் விழித்து இருந்ததால் நடந்த நிகழ்ச்சியின் வீரியம் அவர்களுக்கு முழுவதும் தெரியவில்லை.எப்போதும் போல் அங்கு மயக்கம் அடைந்து விட்டாள்.....இங்கு கொண்டு வந்து சேர்த்து இருக்கிறோம் என ராம்சரண் சொல்ல மரகதம் தலையாட்ட அவர்களும் ரொம்பவும் பதறவில்லை.ஆனாலும் மீண்டும் ரோஜாவிர்க்கு இப்படி ஆகிவிட்டதே என்ற வருத்தம் பெற்றவர்களுக்கு இருந்தது.

இரண்டு நாட்களில் ரோஜா குணமாகி வீட்டிற்கு வர ஆனால் அந்த நினைவுகள் அவளிடம் இருந்து கொண்டே இருந்தது.....மரகதத்தை பார்க்கும் போது எல்லாம் ....”பாட்டி தாத்தா என்னால் தானே” என சொல்லி அழ ஆரம்பித்து விடுவாள்.மரகதமும் அவளுக்கு ஆறுதல் சொல்லியும்,சில நேரங்களில் மிரட்டியும் தூங்க வைப்பார்.

ராமும் தேவாவை பற்றி விசாரித்து நல்ல பதிலாக சொல்ல சேகரிடமும் பார்வதியிடமும் இதை பற்றி பேசினார் மரகதம்....முதலில் பார்வதி ஒத்துக்கொள்ளவில்லை......ராம்சரனுக்குதான் ரோஜாவை திருமணம் செய்யவேண்டும் என சொல்ல,சேகரும் சொந்தத்தில் இருந்தால் நமக்கும் நல்லது என மனைவி சார்பாக பேச ஆனால் இவர்கள் இருவரையும் ராம் சரணின் பதில் வாயடைக்க வைத்து விட்டது.

மனதிற்குள் வருத்தம் இருந்தாலும் பார்வதி சரி என்று ஒத்துகொள்ள ,பின்னர் திருமணத்தை பற்றி ரோஜாவிடம் பேச அவள் முடியவே முடியாது கத்தி ரகளை பண்ணி நான் வீட்டை விட்டு வெளியே சென்று விடுவேன் என மிரட்ட தொடங்கினாள்.அதற்கு எல்லாம் அசந்து விட்டால் அப்புறம் மரகதம் ரோஜாவின் பட்டி அல்லவே ........சிறிது நேரமம் அமைதியாக இருந்தவர் பின்னர் மறுபடியும் அவளிடம் வாழ்க்கையின் நிதர்சனத்தை எடுத்து கூறி “நீ எங்களின் ஒரே வாரிசு...உனது திருமணம் எங்களது அனைவரின் ஆசை.....பெண்குழந்தைகளை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்து அவள் சந்தோசமாக இருப்பதை பார்ப்பதே பெற்றவர்களுக்கு பெருமை.....உன்னால உன் பெற்றோர் பல கஷ்டங்களை அனுபவித்தனர்....அதற்காகவாது நீ இதற்கு ஒத்து கொள்ள கூடாதா ரோஜா என கேட்க ....இதை கேட்டதும் அமைதியான ரோஜா எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்கள் பாட்டி ....நான் யோசித்து சொல்கிறேன்” என்றாள்.



ஆனால் அவள் ரொம்ப யோசித்தால் பிரச்சனை என நினைத்த மரகதம் அடுத்து ராமை அனுப்பி பேச சொன்னார்...அவனோ நேராக அவளிடம் ...”ரோஜா நீ இப்போது திருமணதிற்கு சம்மதிக்க வில்லை என்றால் நம் இருவர் வாழ்வும் நாசமாகிடும் என்றவன் தனக்கும் அவளுக்கு திருமணம் செய்ய அத்தை கேட்கிறார் “என சொல்ல

“என்ன ராம் லூசு மாதிரி உளறுகிறாய் என ரோஜா எரிச்சல் பட......இது நான் சொல்லவில்லை....உன் குடும்பத்தார்தான்......அதான் சொல்கிறேன்...நீ இப்போது திருமணத்திற்கு சம்மதித்தால் அனைவரும் அமைதி ஆகிவிடுவர்....இல்லையென்றால் நாம் இருவரும் இப்படியே இருக்க வேண்டியதுதான்.....இப்போது எனது வாழ்க்கையும் உன் கையில் தான்” என அழுத்தமாக சொல்லிவிட்டு எழுந்து சென்றான்.

அனைவரும் திருமணத்தை பற்றி பேசினார்களே தவிர மாப்பிள்ளை யார் என்று சொல்லவில்லை....பின்னர் அன்று மாலையே “தான் திருமணத்திற்கு சம்மதிப்பதாகவும் ......எல்லாம் உங்கள் விருப்பம் போலே இருக்கட்டும் ...... மணமேடைக்கு செல்லும்போது மட்டும் சொல்லுங்கள் ...நான் வருகிறேன்...வேறு எந்த தகவலும் எனக்கு சொல்லவேண்டாம் ....என்னை தொந்தரவு செய்யாதிர்கள்” என சொல்லிவிட்டு அறைக்குள் சென்று மறுபடியும் முடங்கி கொண்டாள்.

கேட்டதும் அனைவரும் மகிழ்ச்சி அடைய ஆனால் பார்வதிக்கு மட்டும் கொஞ்சம் வருத்தமே....அதனால் அவர் ரோஜாவிடம் சென்று “இந்த கவரில் மாப்பிளை படம் மற்றும் விபரங்கள் இருக்கு நீ பார்த்து சொல்” என சொல்லிவிட்டு வந்தார்......ரோஜா சரி என்று சொன்னது தேவாவிற்கு உடனே தகவல் செல்ல அவனோ வார்த்தையால் சொல்ல முடியாத சந்தோசத்தை அடைந்தான்.

ராமிற்கு அலைபேசியில் அழைத்து நன்றி சொன்னவன் பின்னர் மரகதத்திர்க்கும் நன்றி சொல்லிவிட்டு சேகரிடமும் சிறிது நேரம் பேச அனைவருக்குமே திருப்தியாக இருந்தது..... ஆனால் தேவாவை அவர்கள் பார்த்தது இல்லை.......அம்மாவிடம் கேட்கவேண்டும் என சேகர் யோசித்து கொண்டிருகும்போதே அடுத்த நாள் அவனது புகைபடத்துடன் விபரம் அடங்கிய கவர் அவர்களது வீட்டிற்கு வர தேவாவின் செயலை கண்டு அவர்கள் ஆச்சிரியமடைந்தார்கள்.....அதை தான் பார்வதி ரோஜாவிடம் கொடுத்தார்.....ஆனால் அவளோ அதை பிரித்து கூட பார்க்கவில்லை....

இரண்டு நாட்களுக்குள் திருமணம் முடித்து விடவேண்டும் என தேவா சொன்னதால் திருமண ஏற்பாடுகள் வெகு வேகமாக நடந்து கொண்டிருந்தன.....

இப்போது தான் மருத்துவமனையில் இருந்து அவள் வந்து இருப்பதால் கோயிலில் வைத்து எளிமையாக திருமணம் முடித்து கொள்ளலாம்....பிறகு அவளது மன நிலையை பொறுத்து வரவேற்பு வைத்து கொள்ளலாம் என தேவா சொல்லிவிட்டான்.அனைவர்க்கும் அதுவே சரியென பட ஒத்து கொண்டனர்....காவேரியம்மாள் இன்னும் திருமண வீட்டில் இருந்து வராத காரணத்தால் அவருக்கு இந்த திருமணத்தை பற்றி தெரியவில்லை.ராமும் தேவையில்லை அம்மாவிற்கு தேவாவை ரொம்ப பிடிக்கும்...அதனால் பிரச்சனை இல்லை என சொல்லிவிட்டான்.தேவா கேட்டதற்கும் இதே பதிலை சொன்னான்.ஆனால் இதுதான் பெரிய பிரச்சனை ஆகபோகிறது என்பதை பாவம் யாரும் உணரவில்லை.

அன்று காலை கோயிலில் திருமணம் என முடிவு செய்யப்பட்டு அனைவரும் கிளம்பி கொண்டு இருந்தனர்......ரோஜா திருமணத்தை பற்றி எந்த விபரமும் கேட்டுக்கொள்ளவில்லை......அவளால் என்ன செய்வது என யோசிக்க கூட நேரம் கொடுக்கவில்லை மரகதம்.....இரண்டு நாட்களில் வேலைகள் நடந்து முடிய இதோ இன்று திருமணம்......குடும்ப நபர்கள் மட்டும் இருந்ததால் மொத்தம் ஐம்பது பேர்தான் இருந்தனர்.

அந்த இரண்டு நாட்களில் மணப்பெண் அலங்காரம் செய்து தான் ரோஜா தனது அறையை விட்டு வெளியே வந்தாள்.அவளை பார்த்ததும் அனைவரும் வாயடைத்து நிற்க ....பார்வதியோ மகளின் அழகில் தன்னை மறந்து அவள் அருகில் வந்தவர் இந்த புடவை உனக்கு ரொம்ப அழகாக இருக்கு ரோஜா...என் கண்ணே பட்டுவிடும் போல இருக்கு என நெட்டி முறிக்க.......மரகதமோ தனது பேத்தியின் இந்த மணகோலம் அவரது மனதை மேலும் குளிரூட்ட சந்தோஷ மனநிலையில் அவர் ரோஜாவை பார்த்து கொண்டே நிற்க ....சேகரின் மனநிலையும் அதே போல் தான் இருந்தது.

வெளியே வந்த ரோஜா அனைவரும் தன்னையே பார்ப்பது அவளுக்கு எதோ போல் இருக்க .....எதுவும் பேசாமல் அமைதியாக தலை குனிய .....”என்ன ரோஜா வெட்கமா “என ஒரு புதிய குரல் காதில் கேட்க

சட்டென்று அவள் நிமிர்ந்து பார்க்க அங்கு ரதி நின்று கொண்டிருந்தாள்......ரதியை பார்த்தது ரோஜா ஆச்சிரியமும் சந்தோசமும் கலந்த குரலில் “ஹே ரதி நீங்க எங்க இங்க.” என கேட்க

ரதிக்கு எந்த விஷயமும் தெரியாததால் ...”நான் வராமல் வேறு யார் வருவார் ரோஜா .......பெண் அழைப்பிற்கு நான் தானே வர வேண்டும்” என கிண்டலாக சொன்னாள்.

அதற்குள் நேரமாகிவிட்டது அனைவரும் வாருங்கள் என அழைக்க எல்லாரும் காரில் ஏறினார்...பின்னர் செல்லும் போது பார்வதி ரதியின் படிப்பை பற்றி கேட்டு கொண்டிருக்க அவளும் பதில் சொல்ல இடையில் ரோஜா எதோ சொல்ல இறுகின மன நிலை கொஞ்சம் மாறி கலகலப்பான சூழ்நிலைக்கு வந்தாள் ரோஜா.

மணப்பெண் கார் வருகிறது என சொன்ன உடன் தேவாவின் மனநிலையோ ஒரு நிலையில் இல்லை.......ஒரு வேகத்தில் முடிவு எடுத்து எல்லாம் செய்து விட்டான்.....ஆனால் தன்னை பார்த்ததும் ரோஜா என்ன செய்ய போகிறாளோ என அவன் மனதில் ஒரு நடுக்கம் இருந்து கொண்டே இருந்தது......

மணப்பெண் கார் முதலில் வர மற்றவர்கள் வண்டி கொஞ்சம் தாமதமாக ..காரில்இருந்து முதலில் ரோஜா இறங்க அவளது வரவை எதிர்பார்த்து கொண்டிருந்தவனின் மனம் படபடக்க ...அவன் உடலில் சிறிது நடுக்கம் ஏற்பட அவளை பார்த்தவன் ......

இளம் சிவப்பு நிறத்தில் லேசான ஜரிகை கொண்டு ...அளவான அலங்காரத்தில் அமைதியான தோற்றத்தில் ரோஜாவை பார்த்தவன் அப்படியே சிலையாகி நின்றான்.சில மணித்துளிகள் அவன் மனம் அவனிடம் இல்லை......அவனுக்கு ரோஜாவை குறும்புத்தனம் மற்றும் அவளது வெகுளித்தனம் அவனுக்கு பிடிக்கும்....ஆனால் அவளை அழகு என எண்ணி அவன் பார்த்தது இல்லை....அது போல் அவள் நடந்து கொண்டதும் இல்லை.......எப்போது துருதுருவென இருப்பவள்...அவளது மிகப்பெரிய கண்கள் அவளது செயல்களுக்கு மேலும் அழகூட்டும்...மேலும் அவளின் இந்த நிலைமைக்கு அவன்தான் காரணம் என்ற எண்ணமே ........அது மட்டுமே அவன் மனதில் இருந்தது.........இன்றுதான் முதன் முதலாக தனக்கு பிடித்தமானவளை வேறு ஒரு கோணத்தில் அவன் பார்க்கிறான்.

அவளது முக அழகில் அவனது மனம் கவிழ்ந்து விட,அவளது இடை அழகில் அவனது ஆண்மை சற்று தடுமாற ,அவளது நடை அழகில் அவனது மொத்த திமிரும் நொறுங்கி போக விழி அசையாமல் அவளையே பார்த்து கொண்டிருந்தான். மற்றது எல்லாம் மறந்து போக காதல் மட்டுமே அவன் கண்களில் பொங்கி வழிந்தது.....

ரோஜாவிற்கு பின்னால் ரதி இறங்க....அந்த காட்சியை இரண்டு கண்கள் இடைவிடாமல் படம் பிடிக்க அதற்குள் ஊர் பெரியவர்கள் வந்து விட ரோஜாவை உள்ளே அழைத்து வர சொன்னனர்.

அதுவரை அமைதியாக இருந்த ரோஜா மனதில் ஒரு சலனம் தோன்ற எதோ சொல்வதற்கு நிமிர்ந்தவள் எதிரில் தேவாவும் பட்டாபியும் இருப்பதை பார்த்ததும் சட்டென்று முகத்தில் ஒரு சந்தோஷ மின்னல் வர

“சார் என அழைத்தவள் ....நீங்களும் வந்து இருக்கீங்களா என்றவள் பின்னர் பட்டாபியை பார்த்ததும் டேய் பட்டாபி என உற்சாகமாக அழைத்தவள் ...நான் எதிர்பார்க்கவே இல்லை ....நீங்கள் எல்லாம் வருவீர்கள் என்று என சொன்னவள் வேகமாக ரதியை விட்டு பட்டாபியின் அருகில் வந்து பேச ரதியோ எதுவும் புரியாமல் நிற்க ...தேவா மெதுவாக ரதியிடம் இங்கு எது நடந்தாலும் நீ வாய் திறக்காதே....எல்லாம் பின்பு விபரமாக சொல்கிறேன்” என சொன்னான்.

ஹே பட்டாபி என அவள் அருகில் வந்ததும்......பட்டாபியும் அவளது அழகில் ஒரு நிமிடம்தடுமாறியவன் பின்னர் சுதாரித்து பின்பு “நான் இல்லாமலா ரோஜா....நீதான் எனக்கு அழைப்பிதழை அனுப்பவில்லை.... என அவன் கோபபடுவது போல் சொல்ல

அதற்குள் ரோஜா “அப்படி இல்லடா என்றவள் ...சரி சரி அப்படி இல்ல பட்டாபி இங்கு எல்லாம் பெரியவங்க பார்த்துகிட்டாங்க ...அதனால் என உளறி சமாளித்தவள் சட்டென்று இந்த சர்வாணி உடையில் நீ மிக அழகாக இருக்கிறாய் பட்டாபி” என அவனிடம் சொல்ல

உடனே பட்டாபி வெட்கத்தில் முகம் சிவக்க

“நீயும் தான் ரோஜா ரொம்ப அழகாக இருக்கிறாய்” என சொன்னான்.

அருகில் இருந்த தேவாவிற்கு சுருசுர்வென கோபம் வர ...”என்ன ரோஜா எங்களை எல்லாம் வாங்க என்று சொல்ல மாட்டாயா” என சிரித்து கொண்டே கேட்டான்.

“அப்படி எல்லாம் இல்லை சார்....எல்லாம் உங்கள் மேல் ஒரு மரியாதைதான்....எல்லாரும் வாங்க “ என அவள் சொல்ல

அவனோ யாரு...நீ எனக்கு மரியாதை கொடுக்கிறாய் என அவன் நக்கலாக கேட்க

“ஹிஹிஹிஹ் அது வந்து சார்” என ஆரம்பிக்க அதற்குள் மாப்பிள்ளை வர சொல்லுங்க என ஒரு குரல் ஒலிக்க

சட்டென்று தேவா அங்கிருந்து நகரந்தான்.




 

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
உடனே ரோஜா பட்டாபியிடம் “ஏன் பட்டாபி மாப்பிளையை அழைத்தால் இவர் ஏன் போறாரு என கேட்டவள் ஆமாம் இவர் என்ன எல்லா கல்யாணத்துக்கும் இவரு மாப்பிளை மாதிரி பட்டு வேஷ்டி சட்டை போட்டுட்டு வந்திட்றார்....மனுஷன் ரொம்ப காஞ்சு போய் இருக்காரோ..... யாரும் பெண் கொடுக்க மாட்டேன்கிறான்களோ ...... இங்க யாரவது சிக்குவாங்கலானு இப்படி பட்டு வேஷிடியோட வந்திட்டாரா....ஆனால் எங்க ஊர்ல எல்லாரும் விவரம் .......ரோபோவுக்கு எல்லாம் பொண்ணு கொடுக்கமாட்டாங்க..........அதுக்கெல்லாம் சைனாலதான் இவருக்கு பொண்ணு தேடனும்.......ஆனா இன்னைக்கு மனுஷன் கொஞ்சம் உற்சாகமாகத்தான் தெரியறார் ” என சிரித்து கொண்டே அவள் சொல்ல
பட்டாபியோ திரு திருவென முழித்தவாரே “என்ன ரோஜா உளற உனக்கு மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா தெரியாதா” என கேட்க
அதற்குள் அங்கு தேவா வந்துவிட
“யாரா இருந்த என்ன பட்டாபி.....அவன்தலையெழுத்து என்கிட்டே மாட்டிகிட்டு முழிக்கனும்னு இருக்கு...பாவம் யாரு பெத்த புள்ளையோ....தானா வந்து தலைய விடுது.....” .....என அவள் நக்கலாக சொல்ல
பட்டாபி தேவாவை பார்த்து சார் என இழுக்க
தேவாவோ “சரி...சரி ரோஜா உன்னை கூப்பிட்றாங்க பார் ” என அவளை கிளப்ப முயன்றான்.
அதற்குள் பார்வதி அங்கு வந்து “இங்க என்னடி அரட்டை எல்லாரும் அங்க இருக்காங்க” என கடிந்து கொண்டே அவளை அழைத்து சென்றாள்.
அங்கு கூறப்புடவையை ரதி கையில் கொடுத்து ரோஜாவிடம் கொடுக்க சொல்ல ...அவளோ யோசனையுடனே அதை வாங்கி கொண்டு உள்ளே சென்றவள் உடன் வந்த பார்வதியிடம் ...”அம்மா ரதி ஏன் புடவை கொடுக்கிறாங்க......மாப்பிளை சொந்தகாரங்க யாரும் வரலையா” என கேட்டாள்.
பார்வதியோ எல்லாரும் வந்திருக்காங்க.....ரதி கொடுக்காம வேறு யார் கொடுப்பா....இவ்ளோ நேரம் அங்க தான இருந்து பேசிகிட்டு இருந்த “என முழுவதும் சொல்லாமல் பாதியாக சொல்ல அவளும் தலை ஆட்டிகொண்டே ஏதும் கேட்கவில்லை.
பின்னர் மணமேடையில் அவளை அழைத்து வர தலை குனிந்து கொண்டே வந்தவள் மணமகன் அருகில் சென்று அமர...அதற்குள் ரதி ரோஜாவிடம் “என்ன ரோஜா ரொம்ப வெட்கப்ட்ற.. அங்க அந்த பேச்சு பேசின கொஞ்சம் நிமிர்ந்து எங்க அண்ணாவையும் பாரேன்” என சொல்ல......அவளோ மெல்ல நிமிர்ந்து பார்க்க அங்க தேவா அவளையே பார்த்து கொண்டிருக்க
“சார் என்னது இது... நீங்க எங்க இங்க” என அலறியவாறே அங்கிருந்து எழுந்தாள் ரோஜா .
அப்போது அங்கு வந்த ராம் “ரோஜா அமைதியா இரு......எல்லாரும் பார்க்கிறாங்க என அவள் காதில் மெதுவாக சொன்னவன்....தேவா தான் மாப்பிளை ....மீதி விபரம் எல்லாம் திருமணம் முடிந்ததும் பேசிக்கொள்ளலாம்” என சொல்லி அவளை கைபிடித்து அங்கே அமரவைத்தான்.
அதற்குள் அருகில் இருந்த ஒரு பெரியவர்....”ஏன்மா ஏதாவது பிரச்சனையா “என கேட்க
உடனே தேவா அருகில் இருந்த அவளிடம் மெதுவாக ...”ரோஜா நடப்பது எல்லாம் நல்லதுக்குதான்....என் மீது நம்பிக்கை இருக்கிறது அல்லவா...அமைதியாக இரு .....திருமணம் முடிந்ததும் எல்லாம் விளக்கமாக சொல்கிறேன்” என சொல்ல
அதற்குள் அருகில் வந்த பார்வதி “என்னடி பண்ற நீ...மணவறையில் வந்து குழப்பம் பண்ணுகிறாய் என அவள் காதை கடித்தவள் .......நான் தான் மாப்பிளை போட்டோ கொடுத்தானே ...நீ பார்க்கவில்லையா” என கேட்டார் .
ரோஜாவிர்க்கோ எதுவுமே புரியவில்லை....சுற்றிலும் ஒவ்வொருவர் ஒன்றை சொல்ல ...மரகதமோ அந்த நேரத்தில் மருத்துவரின் அருகில் நின்று கொண்டு ரோஜாவின் முக மாற்றத்தை கவனித்து கொண்டே இருந்தார்.....அதிர்ச்சியில் ரோஜாவிற்கு மறுபடியும் ஏதாவது ஆகிவிட்டால் என்ற பயம் அவருக்கு.......ஆனால் அந்த மாதிரி எதுவும் நடக்காமல் அவள் சிலை போல் அமர்ந்திருக்க .....சுபயோக சுப நேரத்தில் ரோஜாவின் கழுத்தில் மூன்று முடுச்சு போட்டான் ராகதேவான்......அதற்க்கு பின்பே அவனால் மூச்சு விடமுடிந்தது......ஹப்பா ஒரு வழியாக திருமணத்தை முடித்துவிட்டோம் என நினைத்து அவன் ஆசுவாசபட ...அது அவனது வாழ்க்கையை எந்த அளவு சூறாவளியாக சுழற்றி அடிக்க போகிறது என்பதை அவன் அறியவில்லை......


பாலைவனத்தில் பூ பூக்குமா?
அலைகடல் ஓய்வு எடுக்குமா ?
கொஞ்சும் நிலா கையில் வருமா?
ஆனால் பெண்ணே
என்னவள் என நினைத்து
உன்னை பார்த்த நொடி
இவையெல்லாம் நடந்தடி!
நெஞ்சத்தில் நிலைத்தவளே
கல்லாய் இருந்த என்னை
கவிஞனாய் மாற்றினாயே!

உனது ஒற்றை பார்வையில்
எனது அந்தமும் அடங்கிபோனதடி..!!