• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் - 17

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
அத்தியாயம் -17



நடப்பது எதுவுமே புரியாத நிலையில் மந்தரித்து விட்டவள் போல் ஐயர் சொன்ன எல்லா சாங்கீதங்களையும் செய்தாள் ரோஜா.......பின்னர் மணமக்கள் இருவரும் கோவிலை மூன்று முறை வளம் வரவேண்டும் என அவர் சொல்ல......... ரதி ரோஜாவுடன் வர ராம் தேவாவுடன் வந்தான்.நாதன் முக்கியமான வேலை இருந்ததால் அவன் திருமணத்திற்கு வரவில்லை.

முதல் முறை இருவரும் கோவிலை வலம் வர தேவா முன்னதாக செல்ல ரோஜா பின்னால் அமைதியாக வந்து கொண்டிருந்தாள்.....பெரியவர்கள் அனைவரும் உள்ளே செல்ல இவர்கள் மட்டுமே கோவிலை வளம் வந்தனர்......... ....இரண்டாம் சுற்றின் போது கொஞ்சம் தேங்கிய தேவா ரோஜாவுடன் இணைந்து நடந்தான்....சூழ்நிலையை புரிந்து கொண்ட ராம் மெதுவாக பின்தங்கினான்.....ரோஜாவின் முகத்தை தேவா பார்க்க.... அது எந்தவிதமான உணர்வும் இன்றி நிர்மலமாக இருந்தது..... அவளுடன் இணைந்து நடந்தவன் மெதுவாக அவள் கைகளை தன் கைகளோடு இணைக்க அவளோ அதை உணரும் நிலையில் கூட இல்லை..... ஆனால் அவளது கைகள் சில்லிட சிறு நடுக்கம் அவளது விரல்களில் இருந்தது.......அவளது மன உணர்வுகளை கைகள் சொல்லிவிட மூன்றாவது சுற்றின் போது அவளது கைகளை பிடித்து அவளது நடையை அவன் நிறுத்த ரதியோ தேவாவை பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் அங்கிருந்து நகர ரோஜா ஏதும் பேசாமல் தலை குனிந்த படியே நின்று கொண்டிருந்தாள்.

அவளை பார்க்கும் போதே நெஞ்சில் ஈரம்கசிய .....இதே இவளது சம்மதத்துடன் இந்த திருமணம் நடந்திருந்தால் இந்நேரம் எத்தனை பேச்சு பேசி இருப்பாள் என் அம்லு என மனதில் நினைத்தவன்.... முதலில் இப்போது இருக்கும் சூழ்நிலையை சரி செய்வோம் என நினைத்து “ரோஜா ...ரோஜா என அவன் அழைக்க ....அவளோ அப்படியே சிலை போல் நிற்க ...ரோஜா என அவள் தோளை பிடித்து குலுக்கியதும் அவள் சிலிர்த்து...ம்ம்ம்ம்...என்ன ...என்ன என பதற......அவளது பதட்டம் தேவாவிற்கு வலிக்க என்ன நடக்கிறது என கூட தெரியாமல் நிற்கிறாளே என வருந்தியவன் பின்னர் நிதானமாக

“ரோஜா இங்க பார்...இங்க பார் என அவன் இரண்டு முறை சொன்ன பின்பே நிர்மர்ந்தவள் அப்போதும் அவன் முகம் பார்க்கவில்லை......ரோஜா என அவன் அழுத்தமாக அழைக்க ...அவள் சட்டென்று அவன் முகத்தை பார்க்க அதில் தோன்றிய உணர்ச்சி பயமா,இல்லை வருத்தமா,இல்லை அதிர்ச்சியா ,இல்லை ஏமாற்றமா என அவனாலே கண்டுபிடிக்க முடியவில்லை...எத்தனயோ குற்றவாளிகளை பார்வையாலே கதறவைக்கும் ராகதேவான் ரோஜாவின் இந்த பார்வையின் அர்த்தம் தெரியாமல் அவன் தினறிபோனான் .

பின்னர் சுதாரித்து கொண்டு “ரோஜா இங்க பார்.......என்னுடன் நீ ஆறு மாதம் பழகி இருகிறாய்.......எப்போதாவது தவறான முறையில் உன்னை நான் பார்த்து இருப்பேனா நீயே சொல்.......மேலும் தவறாக ஒரு வார்த்தை பேசி இருப்பேனா?......நான் எது செய்தாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கும் என உனக்கும் தெரியும் தானே “ என கேட்க

அவளோ பதில் ஏதும் சொல்லாமல் அவனையே பார்த்துகொண்டு நின்று இருந்தாள்.

அவளது பார்வைக்குள் தனது விழிகளை நிறுத்தியவன் “இங்கு பார் ரோஜா......இந்த திருமணம் ஒரு சம்பிரதாயம் மட்டுமே....மற்றபடி நீ முன்பு எப்படி இருந்தாயோ அதே போல் இருந்து கொள்ளலாம்.......நான் எந்த விதத்திலும் உன்னை தொந்தரவு செய்யமாட்டேன்......ஆனால் இப்போது நடக்கும் எந்த நிகழ்வுக்கும் நீ தடை சொல்லிவிடாதே......எல்லாம் முடிந்து இங்கிருந்து வீட்டிற்கு சென்ற பின்னர் மறுபடியும் நீ பழைய ரோஜா தான் ....என்னை நம்பு....நான் எப்போது சொன்ன வாக்கை மீறுவதில்லை.....உன் அனுமதியின்றி ,விருப்பம் இன்றி எதுவும் நடக்காது......இப்போது நடந்த அனைத்திற்கும் கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கிறது....அதை உனக்கு நான் பிறகு பொறுமையாக சொல்கிறேன் ....என்ன நான் சொல்வது உனக்கு புரிகிறதா “ என அழுத்தமாக அவன் சொல்ல அவன் எண்ணத்தின் உறுதி வார்த்தையில் தெரிய அவனை பார்த்துகொண்டே தலைய மட்டும் ஆட்டினாள் ரோஜா .

சந்தோசத்தில் அவனது முகத்தில் புன்னைகை வர அவளது தலையை தட்டி கொடுத்தவன்......”அம்லு கடைசி வரைக்கும் இதே மாதிரியே இருந்திருடா”.....என சிரித்து கொண்டே சொல்ல

அவள் அவனை முறைக்க

ஆஹா தேவா அடக்கி வாசு.....இவ்ளோ நேரம் மூச்சு விடாம பேசினா டயலாக்கை பேசி நீயே உனக்கு மண் அல்லிபோட்டுகாதே என அவனது மூளை அவனை எச்சரிக்க ...உடனே “சரி...சரி வா ரோஜா போலாம்” என்றவன் இதுவரை கைகளை பிடித்து இருந்தவன் இப்போது தோளின் மேல் கைபோட ....ரோஜா திரும்பி அவன் முகத்தை பார்த்தவாறே கைகளை தள்ளிவிட .”..ஓ ...சரி...சரி” என சொல்லியபடி மீண்டும் அவள் கைகளை பிடிக்க ...ஆனால் முன்பிருந்த நடுக்கம் இல்லாமல் அவளது பிடியும் இறுக இப்போதைக்கு இது போதும் என நினைத்த படியே கோவிலினுள் சென்றனர்.....

பின்னர் அனைத்தும் நல்லபடியாக நடக்க விருந்து எல்லாம் முடிந்து அனைவரும் வீட்டிற்கு கிளம்பினர்.வீட்டிற்கு மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து அவர்களை உள்ளே அனுப்ப....... வேகமாக வீட்டிற்க்குள் நுழைந்த ரோஜா அங்கு வரவேற்பறையில் காவேரியை பார்த்ததும் சந்தோசமும் அழுகையுமான மனநிலையில் அத்தை என்று ஓடி தழுவி கொண்டவள் “பாருங்க அத்தை என்னை மிரட்டி கல்யாணம் செய்து வைத்து விட்டார்கள்” என அவள் அழுது கொண்டே சொல்ல ....... “என் செல்லமே” என அவளை அணைத்து கொண்டார் காவேரி .......பார்வதி சேகர் மரகதம் எல்லாம் அதற்கு பின்னல் வந்தவர்கள் காவேரியை பார்த்ததும் வா காவேரி என அனைவரும் வரவேற்க காவேரியோ தலையை ,மட்டும் ஆட்டியவர் பதில் ஏதும் சொல்லவில்லை.

அதற்குள் நண்பரிடம் பேசிவிட்டு உள்ளே வந்த தேவா காவேரி அம்மாவை பார்த்ததும் அம்மா என ஓடி சென்று அவர் அருகில் நின்றவன் ....”என்னம்மா நீங்க.......கொஞ்சம் முன்னாடியே வந்திருக்கலாம் இல்லயா .....எங்கள் திருமணத்தையும் பார்த்து இருக்கலாம் என சொல்ல...அவரோ ஏதும் சொல்லாமல் ராமை பார்க்க உடனே ராம்....தேவா நீங்களும் ரோஜாவும் அந்த அறைக்கு செல்லுங்கள்.......உறவினர்கள் எல்லாம் இருக்கிறார்கள்....நாம் பிறகு பேசிக்கொள்ளலாம்” என சொல்லி அவர்கள் இருவரையும் தனி அறையில் விட்டு விட்டு வந்தான் ராம். 1

பின்னர் வந்த உறவினர்கள் அனைவரும் சென்றுவிட அன்றே ஊருக்கு கிளம்ப வேண்டும் என சொல்லிவிட்டான் தேவா.......மரகதம் சேகர் என அனைவரும் எடுத்து சொல்லியும் அவன் கேட்கவில்லை......அவர்களிடம் “தான் ஊருக்கு செல்வது தான் நல்லது....இங்கு இருந்தால் தாத்தாவின் நினைப்பு அவளுக்கு வரும்........இப்போதும் அவள் அறையில் தாத்தா...தாத்தா என சொல்லி அழுது கொண்டு இருக்கிறாள் என சொன்னவன் அதனால்தான் உடனே செல்ல வேண்டும் என சொல்கிறேன் “என அவர்களுக்கு விளக்கினான் தேவா............பின்னர் ராம் தானும் உடன் செல்வதால் பார்த்து கொள்வதாக கூற அதற்கு பின்பே சம்மதித்தனர்......மேலும் இரண்டு நாட்களில் சென்னையில் வரவேற்பு வைக்க வேண்டும் வேலை இருக்கிறது என தேவா சொல்ல அவர்களும் ஒத்துகொண்டனர்.

பலநாட்கள் பழகி இருந்தாலும் இந்த பத்து நாட்களில் தேவா ரோஜாவின் வாழ்க்கையில் பலவிஷயங்கள் நடந்து முடிந்து விட்டது.......நினைத்தே பார்க்காத நிகழ்வுகள் எல்லாம் ரோஜா வாழ்வில் நிகழ, அரை உயிராக இருந்தவள் உயிர் பிழைத்தால் போதும் என தவிப்போடு அவளை அழைத்து வந்தவன் இன்று அவளே தன உயிராக ஏற்று மீண்டும் அழைத்து செல்கிறான்.....நாளை என்ன நடக்கும் என தெரியாமல் படைத்தவன் ஆடும் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தில் பகடைகாய்களாக மனித மனம்தான் அல்லாடிபோகிறது ......

அனைவரிடமும் விடைபெற்று அவர்கள் சென்னை வந்து சேர இரவு நேரமாகிவிட்டது....... ரதி முன்பே எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்து இருந்தாள். அவர்கள் வந்த உடன் முறைப்படி ஆரத்தி எடுத்து தனது முதல் அடியை தான் வாழபோகும் இல்லத்தில் எடுத்து வைத்தாள் ரோஜா .

மணபெண்ணிற்கு உரிய சந்தோசம் மறைந்து மனதில் சின்ன கலக்கம் சூழ்ந்து கொள்ள ,புது இடம் ,புது உறவு என அனைத்தும் அவளை பயமுறுத்த ஆனால் இதற்கெல்லாம் அவசியம் இல்லை என்பது போல் உள்ளே நுழைந்ததும் தேவா மாலையை கலட்டி வைத்து விட்டு முதலில் ராமிற்கு தங்குவதற்கு ஏற்பாடு செய்தான்...பின்னர் தன் உடன் வந்திருக்கும் ஒரு சில உறவினர்களுக்கு தேவையான எல்லாவற்றியும் செய்து கொடுத்து விட்டு அவர்களையும் அனுப்பி விட்டு வர அந்த வரவேற்ப்பு அறையில் ரோஜா மட்டும் தனியே நின்று கொண்டிருந்தாள்.

அவள் கைகள் அவளை அறியாமல் கழுத்தில் இருந்த மாலையின் பூக்களை ஒவ்வொன்றாக பிய்த்து போட்டு கொண்டிருக்க முகமோ எந்த உணர்வையும் காட்டாமல் சோர்ந்து இருந்தது.

மெல்ல அவள் அருகில் வந்தவன் ...”ரோஜா” என அழைக்க

அவள் அதிர்ந்து நிமிர்ந்து பார்க்க

அவன் சிரித்து கொண்டே ....”பரவாயில்லேயே உனக்கு பயப்படகூட தெரியுமா” என கேட்டவன் .....

அவள் எதுவும் பேசாமல் நிற்க

“இதற்கு பெயர்தான் எதோ கையில் கொடுத்த பூமாலை என்பார்களா “என அவள் பூக்களை பிய்த்து கொண்டு இருப்பதை காட்டி கிண்டலாக சொல்ல

உடனே அவள் வேகமாக பழைய நினைவில் “என்ன சார் பண்றது.......எந்த இடத்தில் நாம் இருக்கிறமோ அதற்கு ஏற்றார் போல்தான மாறிகொள்ளவேண்டும்......என்னை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் அது போல் இருக்க நான் மட்டும் எப்படி மனிதராக நடந்து கொள்ள முடியும்” என அவனுக்கு எதிர் கவுன்ட்டர் கொடுத்தவள்....சட்டென்று சூழ்நிலை உணர்ந்து நாக்கை கடித்து அச்சோ என சொல்ல

அவனோ “ஆஹா ....அதான எங்க எங்க பழைய ரோஜா காணாம போய்ட்டானு நினச்சேன்......அதும் என்னை பார்த்து பயபடுகிறாயோனு நினைத்தேன்” என அவனும் நக்கலாக சொன்னவன்..பின்னர் கீழே ரதியின் அறை இருக்கிறது ...நீ அங்கு சென்று ஓய்வு எடுத்து கொள்.......எதையும் போட்டு குழப்பி கொள்ளாதே.......நாளை உனக்கு எல்லாவற்றியும் விவரமாக சொல்கிறேன்” என சொன்னான்.

அவளோ “இல்லை சார் நான் உங்களிடம் பேசியாக வேண்டும்” என அவள் அழுத்தமாக சொல்ல

“இங்கு பார் ரோஜா ........மீண்டும் சொல்கிறேன்........என்னால் உனக்கு எந்த தொந்தரவும் வராது......என்னை நம்பு......இப்போது அனைவரும் களைப்பாக இருக்கிறோம்...இந்த நேரத்தில் பேசுவது நல்லதல்ல......நீ போய் நிம்மதியாக உறங்கு......நாளை பேசிகொள்ளலாம்” என்றவன் அவள் பதிலை எதிர்பார்க்காமல் ரதியை அழைத்து அவளிடம் ரோஜாவிற்கு தேவையானதை செய்து தர சொல்ல...ரதிக்கு நிலைமை ஓரளவிற்கு புரிந்து இருந்தாதால் அவள் ரோஜாவை அழைத்து சென்றாள்..

ஹப்பா இன்று இரவு எப்படியோ தப்பித்து விட்டோம்......இனி நாளை என நினைக்கும்போதே தேவாவிற்கு மயக்கம் வர அப்படியே அமர்ந்தவன்......சரி விடு எவளவோ பார்த்து விட்டோம்...இதையும் சமாளிப்போம் என சொல்லிகொண்டே எழுந்து தனது அறைக்கு செல்ல அங்கு எதிரில் ராம் நின்று கொண்டிருந்தான்.

தேவாவை பார்த்ததும் ராம் ...”தேவா நான் உன்னிடம் பேசவேண்டும்” என சொல்ல

“அடகடவுளே இப்பதான் அவகிட்ட தப்பிச்சு இங்க வந்தால் இவன் நிற்கிறான்......நானும் எத்தனபேரதான் சமாளிகிறது” என மனதிற்குள் புலம்பியவன்

ராமிடம் சிரித்து கொண்டே “சொல்லு ராம்” என கேட்க

அவன் முகத்தை பார்த்துகொண்டே ராம்....”நீ என்ன நினைக்கிறாய் என தெரிகிறது தேவா.....ஆனால் அவள் எங்கள் வீட்டு தேவதை....அவளது சந்தோசம் எங்களுக்கு மிகவும் முக்கியம்....அவளது முகம் சிறிது வாடினாலும்” என சொல்லி நிறுத்த

அவன் பேசுவதை பார்த்து கொண்டே இருந்த தேவா ........”அவள் என் உயிர் ....நானே அவள் ....அவளின் சந்தோசம் துக்கம் இரண்டுமே என்னோடது” என ஒவொவொரு வார்த்தையும் அழுத்தமாக சொன்னவன் இதற்க்கு மேல் உனக்கு விளக்கம் வேண்டுமா ராம்” என்றவன்

பின்னர் சட்டென்று சாதாரன குரலில் “இங்கு பாரு ராம்........இப்போ வரைக்கும் என் மனம் என்னிடத்தில் இல்லை...இந்த திருமணம் நன்றாக நடக்கவேண்டும் என்ற படபடப்பு இன்னும் எனக்குள் இருக்கிறது ,........எனக்கு ஓய்வு வேண்டும் ராம் ....ப்ளீஸ் புரிந்து கொள் “என சொன்னான்..

உடனே “சாரி தேவா.......எல்லாவற்றியும் விட ரோஜா எனக்கு ரொம்ப முக்கியம் அதான்” என அவன் மன்னிப்பு கோரும் குரலில் சொல்ல

தேவா சிரித்துகொன்டே “பரவயில்லை ராம்......உனது மனநிலை எனக்கும் புரிகிறது.......நான் உன்னிடம் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் ...மீண்டும் அதே சொல்கிறேன்.......அவள் என் கண்மணி......என் இதய ராணி....அவளை கண்ணிற்குள் வைத்து நான் காப்பேன்......நீ கவலை இல்லாமல் உறங்க செல்” என சொல்லிவிட்டு அவனும் உறங்க சென்றான்.

தேவா சொல்லிவிட்டு சென்று விட ரோஜாவோ இவனிடம் எப்போதும் இப்படிதான்...என்னிடம் ஒரு வார்த்தை கேட்டானா.....இவனாக முடிவு எடுத்து இவனாக செயல்படுகிறான்.......என புலம்பிகொண்டே ரதியின் பின்னால் சென்றாள்.

மறுநாள் காலை எப்பொதும் போல் அழகாக விடிய ரோஜாவோ தூக்கம் வராமல் இரவு முழுவதும் புரண்டு கொண்டிருந்தவள் விடியும் பொழுதுதான் நன்றாக உறங்க ஆரம்பித்தாள்.

யாரோ அறையின் கதவை தட்டும் சத்தம் கேட்க ...தூக்கத்தில் இருந்த ரோஜா “அத்தை உள்ள வாங்க” என சொல்லிவிட்டு மீண்டும் போர்வைக்குள் நுழைந்து கொள்ள ...”இன்னும் அத்தை வீடு நினப்புதானா ...இது உன் வீடு ரோஜா என சொல்லிகொண்டே ராம் உள்ளே வர ஹே மாம்ஸ் குட் மார்னிங் ......நைட் தூக்கமே இல்ல ராம்.....கொஞ்ச நேரம் தூங்கரனே”என கெஞ்ச

ராமோ “அது எல்லாம் கிடையாது...இன்று கண்டிப்பாக கோவில் செல்ல வேண்டும்......இது பாட்டி உத்தரவு.....அம்மா வந்து விடுவார்கள் ....அங்கு தேவா ரெடி ...நீயும் சீக்கிரம் கிளம்பு” என அவளிடம் சொல்லிகொண்டே சுற்றிலும் பார்க்க

“என்ன ராம் யார தேடற” என ரோஜா கேட்க

அவன் முகத்தில் சிறு புன்னகையுடன்” இல்லை...இல்லை....நீ முதலில் கிளம்பு” என சொல்ல

அவள் உடனே “உன் முல்லை மலர் இங்கு இல்லை.....பக்கத்து அறையில் இருக்கிறாள்......நான் தனியாக படுத்துகொள்கிறேன் என சொல்லி அவளை அனுப்பிவிட்டேன்” என சொல்ல

“அதான எங்க உன் குறட்டை சத்ததில் அவள் உறங்காமல் தவித்து போய் இருப்பாளே என இரவு முழுவது எனக்கு ஒரே கவலையாக இருந்தது....நல்லவேளை தப்பித்து விட்டாள் “ என ராம் சந்தோசமாக சொல்ல

ராம் என அவன் மேல் தலையனை தூக்கி எறிந்தவள் “நீ போடா......நீ தான் குறட்டை விடுவாய்...நான் ஒன்று அப்படி இல்லை” என அவனிடம் காலையில் வம்பிழுத்து கொண்டிருக்க

அப்போது தேவா உள்ளே வரவும் சட்டென்று அவள் முகம் மாற ஏதும் பேசாமல் அவள் நிற்க தேவாவும் “இவ்ளோ நேரம் பேசிக்கொண்டு இருந்தாய்.....என்னை பார்த்த உடன் ஏன் அமைதி......சரி...சரி உங்கள் இருவருக்கும் இடையில் நான் வரவில்லை...நீ ராமிடமே பேசு...ஆனால் எனக்கு முக்கியமான வேலை இருக்கிறது...நீ சீக்கிரம் கிளம்பினால் கோவிலுக்கு போயிட்டு வந்து விடலாம்” என சொன்னான்.

அவள் அவனிடம் பதில் சொல்லாமல் தனது பெட்டியில் இருந்து துணிகளை எடுத்து கொண்டு குளியல் அறை நோக்கி சென்றாள்.. தேவா ராமின் முகம் பார்க்க ராமோ நான் சீக்கிரம் அழைத்து வருகிறேன் தேவா என சொல்ல அதற்குள் அவனை யாரோ அழைக்க அவர்களை பார்க்க சென்றான் தேவா .

“ரோஜா சீக்கிரம் வா...நான் கிளம்புகிறேன்” என ராம் சொல்ல

“இதோ கொஞ்ச நேரம் இரு ராம்...இல்ல அந்த பிதாமகன் மறுபடியும் வந்து விடுவார் என உள்ளே இருந்து சொன்னவள் நீ இங்கே இரு” என்றாள்.

அவனும் அருகில் இருக்கும் புத்தகத்தை எடுத்துகொண்டு முன்புறம் இருக்கும் சிறிய வரவேற்ப்பு அறையில் அமர்ந்திருந்தான்....

அப்போது “ரோஜா ...ரோஜா என சொல்லிகொண்டே வேகமாக உள்ளே வந்த ரதி நுழைந்ததும் கதவை தாழிட்டு விட்டு உள்ளே சென்றவள் அப்போது ஓரத்தில் புத்தகம் படித்து கொண்டிருக்கும் ராமை அவள் கவனிக்கவில்லை.....”ரோஜா என்ன பண்ற ...எனக்கு இந்த புடவை கட்ட தெரியவில்லை ...நீ கட்டி விடுகிறாயா” என பிளவுசும் உள்ளாடையுடன் சேலையை சுற்றிக்கொண்டு வந்தவள் அவளிடம் பேசிகொண்டே திரும்ப அங்கு ராம் அவளை பார்த்தப் படி அமர்ந்திருக்க ...



இதை எதிர்பார்க்காத ரதி அதிர்ச்சியில் நீங்கள் என சொல்லிகொண்டே கையில் வைத்திருந்த புடவியின் தலைப்பை கீழே விட அது முழு புடவையும் நழுவி விழ அச்சோ என குனிந்து அதை அவள் எடுக்க

அவனோ அந்த கோலத்தில் அவளை பார்த்தவன் அப்படியே சிலை போல் அமர்ந்திருக்க ......புடவையை எடுத்து தன மீது சுற்றிக்கொண்டு ,...நீங்கள் எப்படி இங்கு என அவள் திக்கி திணறி கேட்க

அவனோ அதை எல்லாம் உணரும் மன நிலைமையில் இல்லை......வெகுநாட்களுக்கு பிறகு தேவியின் தரிசனம் ...அதுவும் இந்தவிதமான தரிசனம் அவன் எதிர்பார்க்காதது......அந்த சந்தோசத்தில் அவன் திளைத்திருக்க

அவளோ கோபத்துடன் .....”நீங்கள் உள்ளே இருப்பதை ஏன் சொல்லவில்லை” என சொல்லிவிட்டு வேகமாக வெளிய வர முற்சித்தாள்.

சட்டென்று எழுந்தவன் அவள் கையை பிடித்து தடுக்க

அவள் பயத்தில் “என்னை விடுங்க...என்னை விடுங்க” என கத்த

ராமோ ...”அச்சோ ரதி...நான் ஒன்னும் செய்யமாட்டேன்...கொஞ்சம் அமைதியாக இருங்க” என சொல்ல

“இல்லை..இல்லை ரோஜா” என அவள் கூக்குரல் இட

அவன் கைகளினால் வாயினை மூட

அவள் இரண்டு கைகளை கொண்டு அவனை தள்ள

அவன் தன் கைகளால் அவளை பிடித்து நிறுத்தியவன் அவள் மீண்டும் சத்தம் போட

அவன் சட்டென்று தன் இதழ்களால் அவள் இதழ்களை சிறை செய்ய

அவள் கைகள் அவன் கைபிடிக்குள் இருக்க இதழ்களோ அவன் இதழ்களால் சிறைபட்டிருக்க ஒரு நிமிடம் ரதி திகைத்து போய் நின்றாள்.....அவளது உடல்இயக்கங்கள் அனைத்தும் அந்த வினாடியில் நின்று விட சிறிது நேரம் அப்படியே நின்றார்கள்.

அப்போது “ராம் என் போன் அடிக்குது பார் “என ரோஜா உள்ளே இருந்து குரல் கொடுக்க

அதைக்கேட்டதும் இருவரும் சட்டென்று விலக...கோபத்தில் ரதியின் முகம் சிவக்க ராமோ அவள் அருகில் சென்றவன் “ஹே முல்லை மலர் முறைக்கும்போது நீ ரொம்ப அழகா இருக்க என அவளை மேல் இருந்து கீழாக ரசித்து கொண்டே சொல்ல அவனது பார்வையின் போக்கை பார்த்தவள் தான் அரைகுறை ஆடையில் இருப்பதை பார்த்த உடன் வேகமாக வெளியே செல்ல ராமோ அவளை தன அருகில் இழுத்தவன் எட்டு வருடம் காத்திருப்பின் பலனை இப்போது தான் அடைந்தேன் என சொன்னவன் இனி இந்த மாமாவோட ஆட்டம் ஆரம்பம் ஆகும் முல்லையே” என அவளை பார்வையாலே அளந்துகொண்டே சொல்லிவிட்டு வேகமாக அறையை விட்டு வெளியேறினான் .

ரதியோ எதுவும் புரியாமல் விழித்து கொண்டு சிலையாக நின்றாள்.

ராமோ வெளியே வந்தவன் “நானும் நேற்றையில் இருந்து பார்க்கிறேன்......என்னை நிமிர்ந்து கூட இவள் பார்க்க வில்லை.. மனதில் என்ன நினைத்து கொண்டு இருக்கிறாள்......ஒருவன் எட்டுவருடமாக மனதிற்குள் இவளை நினைத்து உருகி கரைந்து கொண்டு இருக்கிறேன்.....இவளோ யாருக்கோ எதுக்கோ என்பது போல் நடந்து கொள்கிறாள்......சிரிக்கும்போது கூட அளந்து சிரிக்கிறாள்......இவளுக்கு எல்லாம் நம்ம போலீஸ் அட்டாக் தான் சரியாக இருக்கும் என மனதிற்குள் சொல்லிகொண்டவன் ......அடிபாவி ஒரு IPS ஆபிசர சின்ன பசங்க அளவுக்கு யோசிக்க வச்சுட்டா” என தனக்குத்தானே புலம்பி சிரித்துகொண்டான்.

“என்ன ராம் தானா சிரிச்சுட்டு வர” என தேவா கேட்க

அப்போதுதான் தான் வரவேற்பறைக்கு வந்து விட்டதை உணர்ந்தவன் “ஹிஹிஹி இல்ல தேவா அது வந்து “என தடுமாற

“என்ன உங்க வீட்டு தேவதை ஏதாவது சொன்னாளா” என அவனே எடுத்து கொடுக்க

“ஆமா தேவா...ஆமா தேவா என வேகமாக தலை ஆட்டிய ராம் ...தப்பிச்சோம்டா “என சொல்லியபடி சோபாவில் அமர்ந்தான்.

அங்கே ரதியோ கண்களை விரித்தபடி அப்படியே நின்று இருக்க ...ரோஜா அவளை அழைத்தது....என்ன நடந்தது என கேட்டது எதுவும் அவளுக்கு கேட்கவில்லை...

“ரதி...ரதி’ என ரோஜா அவளை உலுக்கிய பின்பே அவள் நினைவுலகிற்க்கு வர “...ம்ம்ம்...அது வந்து...இல்ல...இல்ல...நான் ஏதும் செய்யலை ...அவர்தான் “ என உளற

“என்ன ரதி என்னாச்சு...இப்போ எதுக்கு இப்படி அரைகுறையா நிற்கிற” என அவள் புடவையை பிடித்தபடி நிற்பதை ரோஜா சுட்டிக்காட்ட

ரதியோ கொஞ்சம் நிதானத்திற்கு வந்து “இல்லை ரோஜா எனக்கு புடவை கட்ட தெரியாது......நேற்று என் சித்தி கட்டி விட்டார்கள்......இன்று கோவிலுக்கு செல்வதால் புடவை கட்டவேண்டும் என்று சொன்னார்கள் ...அதான் உனக்கு தெரியுமா என எடுத்து வந்தேன் ...அப்போதுதான்” என அவள் இழுக்க

“ஓ புடவை கட்டனுமா....அது ரொம்ப ஈஸி ரதி......உனக்கு தெரியாதா” என ரோஜா கேட்க

“எனக்கு தெரியாது ரோஜா...நீங்க ஒரு முறை சொல்லிகொடுங்க.....நான் அதே போல் அடுத்தமுறை கட்டிகொல்கிறேன்” என்றாள்.

“ஆனா எனக்கு இரண்டு முறை சொல்லி தந்தால் தான் புரியும்” அதனால் என ரோஜா இழுக்க

“பரவயில்லை ரோஜா ....நான் புரிந்துகொள்வேன் என அவள் சொல்ல

“உலகம் இன்னுமா என்னை நம்புகிறது என சொல்லி சிரித்தபடியே ...ரதி ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவங்கப்பா ......நான் இவ்ளோநேரம் உங்கள் புடவையை தொடாமல் பேசும்போதே உனக்கு புரிந்திருக்க வேண்டாமா .....சரி விடுங்கள் நான் முதலில் நன்றாக சேலை கட்டி பழகிவிட்டு பிறகு உனக்கு சொல்லி தருகிறேன்” என சொல்லிவிட்டு அவள் சவகாசமாக அங்கு இருக்கும் ஒரு சுடிதாரை எடுத்து அணிய ரதியோ ஏற்கனவே ராமின் தாக்குதலில் குழம்பி இருந்தவள் இப்போது ரோஜாவின் பேச்சில் நொந்து பொய் விட்டாள்.

“சேலை கட்ட தெரியாதுன்னு சொல்றதுக்கு இவ்ளோ பேசணுமா” என அவள் வாயடைத்து நின்றாள்.

அவள் அருகே வந்த ரோஜா “என்ன இதுக்கே தலை சுற்றுகிறதா......இன்னும் நிறைய இருக்கு......உனக்கும் கற்றுகொடுக்கிறேன்” என சொல்ல ரதியோ ஒரு அதிர்ந்த பார்வை பார்த்தவள் ஏதும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டினாள்.



மண்ணில் பூக்கும் மலர்கள்

வானில் இருக்கும் கதிரவனின்

கதிர்வீசில் காதல் கொண்டு

தன் இதழ்களை விரிப்பதற்கு

இரவுமுழுவதும் காத்திருப்பது போல்

அவளின் கடைக்கண் பார்வைக்காக

அவன் வருடக்கணக்கில் காத்திருக்க

அவளோ தன் கடமையே கண்ணாக இருக்க

புதைந்திருந்த உணர்வுகள்

அவள் அருகில் வந்ததும்

காட்டாற்று வெள்ளம் போல்

பொங்கி எழ

காற்றுக்கு ஏது வேலி?

காதலுக்கு ஏது கட்டுபாடு?

மனதிலே அவளோடு வாழ்ந்தவன்

நேரில் பார்த்ததும் நிலை தடுமாறுவது

இயல்புதானே !!!!!!

இதுவரை மலர் கதிரவனுக்காக

காத்திருக்க

இங்கு தான் கதிரவன் இந்த முல்லை


மலருக்காக காத்திருக்கிறான்.......!!!!!
 
  • Like
Reactions: Kajol Gajol