• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் - 18

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
அத்தியாயம் -18



சில நிகழ்வுகள் எப்படி என உணர்வதற்கு முன்பே நடந்து முடிந்து விடும்.அது போல் தான் தேவா ரோஜா வாழ்வில் நடந்த திருமணமும்....அவளை திருமணம் செய்யவேண்டும் என முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை வேகமாக செய்து இப்போது திருமணமும் முடித்து விட்டான்.....இதற்கு பின்பு என்ன செய்வது ?ரோஜா கேட்கும் கேள்விகளை எப்படி எதிர்கொள்வது என யோசித்து யோசித்து குழம்பி போனான் தேவா.பலபல எண்ணங்கள் அவனை போட்டு குழப்ப வெகுநேரம் யோசித்தவன் இறுதியில் ஒரு முடிவோடுதான் உறங்க சென்றான்.

ரோஜாவும் ரதியும் புறப்படுவதற்குள் அம்மாவை அழைத்து வந்து விடுவதாக சொல்லி ராமும் வீட்டிற்கு கிளம்பி சென்றவன் காவேரி அம்மாவையும் அழைத்து வந்தான்.தேவா வீட்டிற்குள் நுழைந்ததும் வீட்டை ஒரு முறை சுற்றி பார்த்தவர் .....ம்ம்ம்ம் வீடு பெரியதாக இருந்து என்ன பிரயோஜனம் ....மனுசங்க மனசும் அப்படி இருக்கணுமே என வாய்க்குள் முனகியபடி திரும்ப அவரின் பின்னே தேவா சிரித்தபடி நின்று கொண்டு இருந்தான்.

தேவாவை பார்த்ததும் ஒரு நிமிடம் அதிர்ந்த காவேரி அம்மா பின்னர் அவரும் சிரித்தபடியே “என்ன தேவா பார்த்து கொண்டே நிற்கிறாய்.....வந்தவர்களை வாங்க என்று கூட சொல்ல மாட்டியா” என ஒரு மாதிரி குரலில் கேட்க



அவனோ “உங்கள் மகன் வீட்டில் உங்களுகே வரவேற்பா ...என்ன அம்மா இது” என புன்னகை மாறாமல் கேட்க....காவேரி அம்மா எதுவும் சொல்லாமல் நடந்தவர் ரோஜா எங்கு இருக்கிறாள் என்றார். தேவா அறையை காட்ட அங்கு சென்றார்.

ரோஜாவின் அறைக்கு சென்றவர் அங்கு அவள் சிந்தனையுடன் அமர்ந்திருந்தாள்..உள்ளே நுழைந்ததும் அவள் அமர்ந்திருந்த நிலையை பார்த்ததும் காவேரி அம்மா கண்கள் கலங்க “எப்படி இருந்த பெண்....இவளுக்கு மட்டும் ஏன் ஆண்டவன் இவ்ளோ கஷ்டத்தை கொடுத்தான்.....எல்லாம் அந்த மரகதம் பண்ற வேலை” என முனக ........அவர் சொல்வது மரகதம் பாட்டியைதான். ஏனெனில் பார்வதி குடும்பத்தை கண்டாலே மரகதத்திற்க்கு பிடிக்காது......அதனால் தான் திட்டம் போட்டு ரோஜாவை தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என அவர் நினைத்தார்....அதற்கு ஏற்றாற்போல் ரோஜாவும் என்னை வற்புறுத்தி திருமணம் செய்து வைத்து விட்டார்கள் என சொன்னது அவரது நினைப்பை உறுதி படுத்தியது.

மெதுவாக ரோஜாவின் அருகில் சென்றவர் ....அவள் தலையை அன்பாக கோதிவிட்டவர் ....”என்ன ரோஜா இது......எல்லாம் நடந்து முடிந்து விட்டது......இனியும் அதை நினைத்து ஏன் கவலை படுகிறாய்” என ஆறுதல் சொல்ல

திருமணம் நடந்ததில் இருந்து தன் மனதில் உள்ளதை யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்து கொண்டிருந்த ரோஜாவிற்கு காவேரி அம்மாவின் ஆறுதல் பேச்சு அவளை முழுவதும் இழக்க செய்ய அவரது மடியில் விழுந்து கதறி அழுது விட்டாள்ரோஜா.......அந்த நேரத்தில் காவேரி அம்மாவை பார்க்க வந்த தேவா அவர்களின் நிலையை கண்டு மனம் வேதனைப்பட எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தான்.

நேரமாகிவிட்டது அம்மாவை அழைத்து வருகிறேன் என சென்ற தேவா முகம் சுருங்கி திரும்பி வர .....அதை கண்ட ராம் ....”ஏன் தேவா என்ன ஆச்சு” என பதற

ராமின் அருகில் வந்து அமர்ந்த தேவா ......அவன் முகத்தை பார்த்து “ராம் நீ என்னை நம்புகிறாய் தானே .....நான் ரோஜாவை நன்றாக பார்த்து கொள்வேன்......ரோஜாவிடம் அனுமதி கேட்டு இருந்தால் அவள் இந்த திருமணத்திற்கு கண்டிப்பாக ஒத்து கொண்டிருக்க மாட்டாள்....ஆனால் எனக்கு ரோஜா வேண்டும் .....அதனால்தான் இப்படி அவசர திருமணம் ஏற்பாடு செய்தேன்.......எல்லாமே என் பக்கமாக மட்டுமே யோசித்து ரோஜாவை நான் நினைக்கவில்லையோனு எனக்கு இப்ப தோணுது என்றவன் மீண்டும் ராமின் கைகளை பிடித்து கொண்டு என்னை நம்புங்கள் ...அவளை எந்த சூழ்நிலையிலும் நான் கைவிடமாட்டேன்” என மனதின் வலியை மற்றும் அவள் மேல் கொண்ட அன்பை அவன் வார்த்தையில் வெளிபடுத்த

அவனின் மன உணர்வுகளை புரிந்து கொண்ட ராம்.......”தேவா நீ செய்தது சரிதான்......எல்லாம் நடந்து முடிந்து விட்டது.......இனி அதை பற்றி பேசாதே......இனி உங்கள் இருவர் வாழ்க்கை பற்றி மட்டும் யோசி.........அவள் எந்த அளவு வேகமாக கோபபடுகிறாலோ அதே போல் சீக்கிரம் கோபமும் தணிந்து விடும்.......அவள் நிச்சயமாக உன்னை புரிந்து கொள்வாள்” என ஆறுதல் கூறினான்.



அங்கு ரோஜா தனது உணர்வுகளை அழுகையின் மூலம் கொட்டி கொண்டிருக்க காவேரி அம்மாவோ மனதிற்குள் பொருமி கொண்டு இருந்தார். ரோஜாவின் திருமணம் என காரில் வரும்போது ராம் சொன்ன உடன் அவர் அதிர்ச்சியில் “என்ன உளறுகிறாய் ராம்.......என் கிட்ட சொல்லாம எப்படி பண்ணலாம்” என கேட்க

அவனோ “அம்மா சூழ்நிலை புரிந்து கொள்ளுங்கள்....மீண்டும் ரோஜாவிற்கு பழைய மாதிரி உடல் நிலை ஆகிவிட்டது....அதனால் இப்படி அவசரமாக திருமணம் பண்ண வேண்டிய சூழ்நிலை ... அத்தையும் மாமாவும் உங்களிடம் சொல்ல வேண்டும் என்றுதான் சொன்னார்கள்...நான் தான் வேண்டாம்....அம்மா சொன்னால் புரிந்து கொள்வார்கள் என்று சொன்னேன்” என்றான்.

“அது எப்படி ராம்....இது வரைக்கும் தான் நாம் அவர்கள் சொன்னதை கேட்டு கொண்டு இருந்தோம்....இனியும் அப்படி இருக்க முடியுமா ? மாப்பிளையின் அம்மாவிற்கு சொல்லாமல் எப்படி அவர்கள் முடிவு பண்ணலாம்” என அவர் ராம் தான் மாப்பிள்ளை என்ற எண்ணத்துடன் கோபமாக கேட்க

ராமோ அவர் சொல்வதை நன்றாக கவனியாமல்...”விடுங்கள் அம்மா......ரோஜாவிற்கு நல்லது நடந்தால் உங்களுக்கு சந்தோசம் தானே” என அவன் சொல்ல

“அதும் சரிதான்...அப்புறம் ராம் நம்ம சொந்தகாரர்கள் அனைவர்க்கும் சொல்லி விட்டாய் அல்லவா ...அப்புறம் “என அவர் யோசிக்க

“இல்லம்மா ......யாருக்கும் சொல்லவில்லை....ரொம்ப எளிமையாக வைத்து விட்டார்கள்......நம்ம பக்கம் இருபது பேர்......மாப்பிள்ளை பக்கம் இருபது பேர் “என அவன் சொல்ல

“அது எப்படி ராம்.....எனது ஒரே மகன் திருமணம்...நாம் அனைவரையும் அழைத்து செய்யவேண்டாமா ....அதெல்லாம் முடியாது...எல்லாம் அந்த மரகதம் பண்ற வேலையா ......நான் ஒத்துகொள்ள மாட்டேன்” என அவர் சொல்ல

“என்னம்மா பேசறிங்க ....தேவா ஒத்துகிட்டான்.....அது இல்லாம என் திருமணத்தில் வேண்டுமானால் அப்படி வைத்து கொள்ளலாம் இது அவன் திருமணம்” என்றான்.

“என்னது தேவா திருமணமா.....அப்போ ரோஜாக்கும் உனக்கும் இப்போ இல்லயா “ என அவர் இழுக்க

“அச்சோ அம்மா .....என்ன உளறீங்க.......திருமணமே ரோஜாவிற்கும் தேவாவிர்க்கும் தான்” என ராம் சொல்ல

“என்னதுஊஊஊஉ என அதிர்ந்த காவேரி அம்மா ...என்னடா நீ உளறுகிறாய்......அப்போ உனக்கும் ரோஜாவிற்கும் திருமணம் இல்லையா” என கேட்டார். அவர் இதுவரை ராமிற்கும் ரோஜாவிற்கும் திருமணம் என்ற எண்ணத்திலே பேசிக்கொண்டு இருந்தார்.

“அம்மா என அதிர்வது இப்போது ராமின் முறை ஆனது......என்ன நீங்க சொல்றிங்க ......நான் எப்படி ரோஜாவை திருமணம் செய்து கொள்வது......அம்மா அவள் எனக்கு குழந்தை போல ......என்னம்மா இது உங்கள் மனதில் எப்படி இந்த எண்ணம் வந்தது” என அவன் கோபமாக கேட்டான்.

டேய் முதலில் வண்டியை நிறுத்து.......என்ன நடக்கிறது என்பதை சொல் என அவர் கேட்க ராம் அனைத்தயும் சொன்னான்.... ஆனால் தேவா சம்பந்தப்பட்ட விபரத்தை அவரிடம் சொல்லவில்லை....கேட்டதும் அதிர்ச்சியில் அப்படியே அவர் உறைந்து இருக்க ...ராமோ “அம்மா புரிந்து கொள்ளுங்கள்......எனக்கோ இல்லை ரோஜாவிற்கோ அந்த எண்ணமே இல்லை.....எங்கள் இருவரிடமும் கேட்ட பின்புதான் பாட்டி இந்த முடிவு எடுத்தார்கள்” என சொல்ல

“நீ வாயை மூடு ராம்......ரோஜா என்னிடம் சொன்னாளே ....நான் இந்த வீட்டின் ராணி என்று .....இந்த மரகதம் தான் ஏதாவது சொல்லி அவளை குழப்பி இருப்பார்......நான் ஒருவாரம் இல்லை அதற்குள் இத்தனை நடந்துவிட்டதா...... நான் ரோஜாவை பார்த்து பேசவேண்டும் ...நீ வண்டி எடு” என அவசரபடுத்த

“அம்மா புரியாமல் பேசாதீர்கள்.....எனக்கும் இதில் விருப்பம் இல்லை.....மேலும் அவர்களுக்கு திருமணம் முடிந்து விட்டது”..என சொல்லிகொண்டே அவன் காரை எடுத்தான்......வரும் வழியில் அவன் அவரை பலவேறு பேசி சமாதானபடுத்த காவேரி அம்மாவோ எதுவும் பேசவில்லை........வீட்டிற்கு வந்தவர் எதுவும் பேசாமல் அப்படியே அமர்ந்திருக்க அப்போது தான் ரோஜாவும் தேவாவும் ஆரத்தி எடுத்து உள்ளே வந்தனர். உள்ளே நுழைந்ததும் ரோஜா அழுகவும் காவேரி அம்மாவின் கோபம் மேலும் அதிகமாகியது.அதனால்தான் இரவு தேவா வீட்டில் தங்க அவர் மறுத்துவிட்டார். ரோஜா அழுது முடியும் வரை அவர் அவளை தடுக்க வில்லை .....

அவள் அழுது ஓய்ந்ததும் மெதுவாக அவளை தூக்கி அவள் முகத்தை கையில் ஏந்தியவர் “இங்கு பார் ரோஜா நீ எதற்கும் கவலை படாதே........உனக்கு பிடித்தால் மட்டுமே நீ இங்கே இரு...இல்லை என்றால் நீ உடனே கிளம்பி வந்து விடு......நானும் ராமும் உனக்கு இருக்கிறோம்......உன்னை நாங்கள் பார்த்து கொள்கிறோம்....யாருக்கும் பயப்படாதே”....... என அவளுக்கு தைரியம் சொன்னவர் ரோஜா திருமணம் என்பது இறைவன் ஏற்கனவே இவருக்கு இவர்தான் என முடிவு செய்து வைத்து இருப்பார்.....அது யாராலும் மாற்ற முடியாது.....முடிந்த வரை நீ அதை புரிந்து நடந்து கொள்......உனக்கு இருக்க பிடிக்கவில்லை என்றால் நாங்கள் இருக்கிறோம்...... கவலைபடாதே என அவளுக்கு ஆறுதல் சொல்லி கொண்டிருக்க அவளோ குலுங்கி அழுது கொண்டிருந்தாள்......

வெகுநேரமாகியும் ரோஜா வராததை கண்டு ராம் அழைத்துவருவதாக செல்ல தேவாவும் உடன் சென்றான்......அறையின் கதவு திறந்து இருக்க உள்ளே சென்ற ராம் ரோஜா அழுது கொண்டிருப்பதை பார்த்தவன் சட்டென்று கோபம் வர ..”.ரோஜா இங்கு என்னை பார்.......உன்னிடம் சம்மதம் கேட்டுதானே இந்த திருமணம் நடந்தது......இப்போது ஏன் இப்படி அழுகிறாய்....உன் மனதில் என்ன நினைத்து கொண்டு இருகிறாய்.......தேவாவிற்கு என்ன குறைச்சல் ........எங்கள் மீது உனக்கு நம்பிக்கை இல்லயா .....நானும் பாட்டியும் உனக்கு தவறான துணையை தேர்ந்து எடுப்போமா.......நீ இன்னும் சிறு குழந்தை கிடையாது..... முதலில் அழுகையை நிறுத்து...முதலில் போய் முகம் கழுவி கொண்டு வா என அவளை ஒரு அதட்டல் போட....

தனது ஆற்றாமையை அழுகையால் கொட்டி கொண்டு இருந்தவள் அவன் இப்படி சொன்னதும் பொங்கி எழுந்துவிட்டாள்......திருமணம் என்று சொன்னீர்களே ....மாப்பிள்ளை தேவா என்று சொன்னீர்களா ......உங்கள் மீது முழு நம்பிக்கை வைத்து தானே நான் அமைதியாக இருந்தேன்....ஆனால் நீங்கள்...நீங்கள் என தேம்பியவள் .....என்னால் முடியவில்லை ராம்......தேவா எப்படி......அய்யோ அதும் என்னை பற்றி அவருக்கு தெரிந்தால் என அவள் தன் தலையை இரு கைகளால் பிடித்தபடி அமர்ந்திருக்க

அவளின் நிலைமை ராமிற்கு வேதனை அளிக்க மெதுவாக அவளின் அருகில் அமர்ந்தவன்.....”ரோஜா குட்டி இங்க பாருடா........தேவா ரொம்ப நல்லவண்டா......உன்னை நல்ல பார்த்துக்குவான் ....அப்புறம் எப்படி சொல்றது என இழுத்தவன் ரோஜா நடந்த விஷயங்கள் எல்லாம் தேவாவிற்கும் தெரியும்” என சொல்ல

“என்னது தெரியுமா என அதிர்ந்தவாரே வேகமாக எழுந்தவள் ....என்ன ராம் சொல்ற .....தெரிஞ்சு தான் என்னை திருமணம் செய்து கொண்டாறா” என கேட்க ....

ராம் ஆம் என்று தலை ஆட்ட......”போச்சு....எல்லாம் போச்சு......அந்த ஆளை பத்தி உங்களுக்கு என்ன தெரியும் .....அய்யோ எல்லாரும் எனக்கு தெரியாம என்ன வேலை பண்ணி வச்சிருக்கிங்க....அவரை பத்தி முழுசா தெரியாம இப்படி பண்ணிட்டிங்கலே“ என அவள் கத்த

காவேரி அம்மாவோ அவளை சமாதனபடுத்தியவர் “இங்கு பார் ரோஜா......இப்போது எதுவும் தவறாக நடக்கவில்லை......எல்லாம் சரியாகத்தான் நடக்கிறது.......நீ போட்டு குழப்பி கொள்ளாதே .......உனக்கு எதாவது தவறு என்று தோன்றினால் நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன் அல்லவா ....நாங்க இருக்கிறோம்.......இப்போ நீ கொஞ்சம் அமைதியாக இரு என அவளுக்கு ஆறுதல் சொன்னவர்...நீ சென்று முகம் கழுவி வா என்று அவளை அனுப்பி வைத்தார்..

சட்டென்று அவர் அருகில் அமர்ந்த ராம்......”அம்மா நான் சொல்வதை நீங்களும் கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்......ஏற்கனவே தேவா குழம்பி போய் இருக்கிறான்......இப்போது இவளும் அழுது கொண்டு இருந்தாள் பாவம் அவன் என்ன செய்வான்.....மேலும் தேவாவும் நல்ல பையன் தானே......உங்களுக்கும் தெரியும் தானே....அப்புறம் என்னம்மா பிரச்சனை......நீங்கள் அவளுக்கு அறிவுரை சொல்வீர்கள் என்று நினைத்தால் அவளை அழவைத்து கொண்டு இருக்கிறீர்கள் ...அதான் ரோஜாவை அப்படி திட்டிவிட்டேன் ” என பொறுமையாக சொன்னான்.

“ராம் நான் உனக்கு அம்மா தான்......ஆனால் அதையும் மீறி நானும் ரோஜா போல் ஒரு பெண்...ஒரு பெண்ணின் மனதில் திருமணத்தின் போது என்ன மாதிரி உணர்வு இருக்கும் என்பது எனக்கும் தெரியும்......ஆனால் ரோஜாவின் நிலைமை எனக்கு ரொம்பவும் பயமாக இருக்கிறது......அவள் குழந்தைடா....அவளும் எவ்ளோ வேதனைகளை தாங்குவாள் ”.....என அவரின் மனதில் இருப்பதை அவர் சொல்ல அதற்கு என்ன சொல்வது என தெரியாமல் ராம் முழித்து கொண்டு இருந்தான்.

ராமுடன் வந்த தேவா உள்ளே வராமல் வெளியே நின்று கொண்டிருக்க அவர்கள் பேசியது அனைத்தும் கேட்டவன்......ரோஜாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனை உறுத்த சொல்ல முடியாத வேதனை நெஞ்சை அடைக்க வேகமாக அங்கிருந்து நகர்ந்தான்.

மனம் பலவாறு குழம்ப வந்தவன் எதிரில் ரதி “அண்ணா கோவிலுக்கு நான் ரெடி” என சொல்ல.....

“இல்லை ரதிம்மா ...எனக்கு மனது சரியில்லை......வேறு ஒரு நாள் பார்த்து கொள்ளலாம்” என சொல்லிகொண்டே காரை நோக்கி நடந்தான்.

.திருமணம் முடிந்த அடுத்த நாளே தேவா அலுவலகம் வருவான் என்று பட்டாபி எதிர்பார்க்கவில்லை......நடந்த நிகழ்வு எதுவும் அவனுக்கு தெரியாததால் ரோஜாவும் விருப்பட்டுத்தான் திருமணம் செய்து இருக்கிறாள் என அவன் நினைத்து கொண்டிருந்தான்.

அலுவலகத்திற்கு வந்த தேவா பட்டாபியிடம் இன்று பார்க்க வேண்டிய வழக்கு விபரம் மேலும் ஒரு வாரமாக திருமணவேலையில் பெண்டிங் இருந்த அனைத்து வழக்குகளும் தன் முன்னாள் இருக்கவேண்டும் என சொல்லிட்டு தனது அறைக்கு சென்றான்.

பட்டாபியும் எல்லாம் கொண்டு வந்து வைத்தவன் ...பின்னர் தயங்கி நிற்க

தேவாவோ என்ன என்று அவனை பார்க்க

“சார் ரோஜா நல்லா இருக்காளா இல்லை நல்ல இருக்காங்களா ...இப்போ வருவாங்களா” என தேவாவிற்கு கொடுக்கும் மரியாதையை அவளுக்கு கொடுத்து அவன் கேட்க

“தெரியலை பட்டாபி “என அவன் இருக்கும் மனநிலையில் கேள்வியை சரியாக கவனிக்காமல் ஏதோ பதிலை சொல்ல பட்டாபியோ குழம்பியபடியே தனது இருக்கைக்கு வந்தான்.

தேவாவும் தனது பணியில் மூழ்கி இருக்க....இடைவிடாது ஒலித்த அலைபேசி அவன் கவனத்தை திசை திருப்பியது...சலிப்புடன் எடுத்து பார்த்தவன் நாதன் பெயர் வர அதை ஆன் செய்த உடன் “என்னடா புது மாப்பிள்ளை......எப்படி இருக்க......தொந்தரவு பண்ணிட்டனோ .......மச்சான் அறையை விட்டு வெளியே வந்தியா இல்லயா......சென்சார் பிரச்சனை இருந்தா சொல்லு ...நான் உன்னை அப்புறம் கூப்பிட்றேன்” என உற்ச்சாகமாக பேசிகொண்டே போக...


 

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
தேவாவோ சட்டென்று “ம்ம்ம்ம் இப்போ செருப்புல அடிக்காத குறை ஒண்ணுதான் இல்லை ....மத்தது எல்லாம் இருக்கு” என கோபமாக வார்த்தை கொட்ட

“மச்சான் என்னாச்சுடா...ஹலோ ...தேவா தான என” அவன் மீண்டும் சரிபார்க்க

“ஆமாண்டா......எல்லாம் தெரிஞ்சும் நீயும் இப்படி பேசுனா எப்படிடா” என தேவா சலித்து கொள்ள

“ஏண்டா...என்னடா ஆச்சு....இந்நேரம் நீ இந்நேரம் எல்லாம் சரி பண்ணிருபேனு நினச்சேன்......சாரிடா......நீ ரோஜாகிட்ட பேசுனியா......எல்லா விஷயத்தயும் சொன்னியா இல்லயா ” என வரிசையாக கேள்வி கேட்க

“ஏண்டா ....எங்கடா என்ன பேசவிட்ரிங்க என்றவன் நானும் ரோஜாவும் இன்னும் இத பத்தி பேசவே இல்ல நாதன்......அவ மனசுக்குள்ள ரொம்ப மருகிறாலோனு தோணுது.......ஏண்டா நான் அவசரபட்டுடனோ” என அவன் ஆதங்கத்தோடு கேட்க

நாதனோ எதுவும் பேசாமல் இருக்க

“நாதன்..நாதன் என தேவா அழைத்ததும் ...நீ இப்போ எங்க இருக்க” என கேட்டான்.”நான் ஆபிஸ்ல இருக்கேன்” என தேவா சொன்னதும் “இன்னும் பத்து நிமிடத்தில் நான் அங்க வரேன் “என சொல்லிவிட்டு சொன்னபடி வந்து சேர்ந்தான் நாதன்.

நாதன் உள்ளே நுழைந்ததும் “வாடா.....சாரி கேட்க மறந்திட்டேன்.....அந்த கேஸ் என்னாச்சு...வெற்றிதான” என தேவா கேட்க

“அதெல்லாம் வெற்றிதான் என்றவன்......என்ன தேவா......நேற்று திருமணம் இன்று ஆபிஸ்ல வந்து உட்கார்ந்திருக்க” என கேட்டதும்

“என்னடா பண்ண சொல்ற......அங்கே எல்லாம் ஒரு அழுகை மயமா இருக்கு...எனக்கு பிடிக்கவே இல்லை..... அதான் கிளம்பி வந்திட்டேன்” என்றான்.நாதனுக்கு தேவாவின் நிலை புரிந்தது......தேவாவிற்கு இந்த அழுகை,அனுதாபம் இது எல்லாம் பிடிக்காது...கோழைகளின் ஆயுதம் இவை என்று சொல்லுவான்.....அதானலே அவனுக்கு நட்பு வட்டம் மிக மிக குறைவு.....

“தேவா என்ன நடந்தது....திருமணத்தில் ஏதும் பிரச்சனை இல்லையலை...நாம் திட்டமிட்டபடிதானே நடந்தது ” என நாதன் கேட்க

“அதெல்லாம் பிரச்சனை இல்லை ......எல்லாம் நல்லபடியா முடிந்தது......ஆனால் இனிதான் ஆரம்பிக்க போவதுபோல் எனக்கு தோணுது என்றவன்.....ஏன்டா ரோஜாவுக்கு என்னை பிடிக்கலையா என ஏக்கத்துடன் நாதனை பார்த்து கேட்க

எங்கு கேட்கவேண்டிய கேள்வியை இவன் என்கிட்ட கேட்கிறான் என நினைத்த நாதன் அப்படி என்றால் அவன் எந்த அளவிற்கு குழம்பி போய் இருக்கிறான் என்பதையும் புரிந்து கொண்டான்.”தேவா முதலில் என்ன நடந்தது” என அவன் கேட்க காலையில் வீட்டில் நடந்ததை சொன்னவன் “அம்மா கூட என்னை தப்பா நினைக்கிறாங்கடா.....நான்தான் ரோஜாவிடம் சொல்லி இருந்தேன் தான.......அப்புறம் எதற்கு இப்படி அழுது எல்லாரிடமும் அனுதாபம் தேடுகிறாள்......என்னால ஏத்துகவே முடியல” என தேவா புலம்ப

“புரியாம பேசாத தேவா.......உன்னை பொறுத்தவரை திருமணம் என்பது நீ எந்த நோக்கத்தில் எடுத்துகொண்டாயோ தெரியாது......ஆனால் பெண்களை பொறுத்தவரை அது தான் அவர்களின் வாழ்க்கை ...அதில்தான் அவர்கள் தங்களின் கனவுகளுக்கு,உணர்வுகளுக்கு உருவம் கொடுப்பார்கள்.....அந்த திருமணம் ரோஜாவின் வாழ்வில் எப்படி நடந்து இருக்கிறது.....நீயே யோசித்து பார்.....மாப்பிள்ளை யார் என்றே தெரியாமல் திருமணம் ...நினைத்து பார்...அது எவளோ கொடுமை” என சொல்ல

“என்னடா நீயும் இப்டி பேசுகிறாய்...நான் என்ன ரோஜாவை கொடுமை படுத்தவா திருமணம் செய்தேன்.....அவளை ராணி போல் வைக்கத்தானே இந்த அவசர திருமணமே” என தேவா வேகமாக சொன்னான்.

“புரிகிறது தேவா.....ஆனால் இது எதுவும் ரோஜாவிற்கு தெரியாது இல்லயா .......நீ ரொம்ப குழப்பத்தில் இருகிறாய்.....அதனால் உன்னால் யோசிக்க முடியவில்லை.....நீ ரோஜாவை உன் மனைவியாக பார்க்காமல் ஒரு சராசரி பெண்ணாக நினைத்து பார்......உன் மனம் தெளிவடையும்.....அப்போது உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை நீ செய்.......இந்த குழப்பத்தில் எந்த முடிவும் எடுக்காதே” என அவனுக்கு சற்று சூழ்நிலையை விளக்கினான் நாதன் .

நாதன் சொல்வது சரி என தோன்ற தேவாவும்” சரிடா.....நான் யோசிக்கிறேன்.....ஆனா அவள் அழுதால் என்னால தாங்க முடியலடா .....அதான் என்றவன் சரி இப்போ திருமண வரவேற்பு வைக்கலாமா வேண்டாமா” என கேட்டான் தேவா.

“அடபாவி ஏண்டா இப்படி......அதை நம்பிதான நான் திருமணத்துக்கும் வரலை.....டேய் கஞ்சாமூட்டி உன்னோட கஞ்ச தனத்தை இதுல காட்டாத......ஆனா இன்னும் ஒரு பத்து நாள் பொறுத்து வை.....அதுக்குள்ள நீ ரோஜாவிடம் பேசி ஒரளவு அவளை இயல்பு நிலைக்கு கொண்டு வா ....அவளும் இந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவந்து சந்தோசத்தோடு வரவேற்பில் நிற்க வேண்டும் புரிந்ததா” என அவன் சொல்ல

“ஆஹா அவளிடம் பேசணுமா...நினைக்கும்போதே நெஞ்சுவலி வரமாதிரி இருக்கே......சரிடா முயற்சி பண்றேன் என சிரித்து கொண்டே சொன்னவன் ...தேங்க்ஸ் நாதன் ...இப்போ தான் கொஞ்சம் ரிலாக்ஸ்டா பீல் பண்றேன்” என்றான்.

“சரி மச்சான் ட்ரீட் எப்போ” கண்ணடித்தபடி நாதன் கேட்க

“ ட்ரீட் தான வைச்சுட்டா போகுது இன்னைக்கு நம்ம எப்பவும் வர ஹோட்டலுக்கு வந்திடு” என தேவாவும் சிரித்து கொண்டே சொல்ல

“வேண்டாம்...வேண்டாம்...எல்லாம் முடியட்டும் மொத்தமா சேர்த்து வாங்கி கொள்கிறேன்” என ஒரு மாதிரி பார்வை பார்த்து கொண்டே சொல்லிவிட்டு நாதன் எழ

தேவாவோ “ச்சே போடா “ என வெட்கப்பட

“அச்சோ தேவா வெட்கபட்டாண்டோ என கத்திய நாதன் மச்சான் உனக்குள்ள இப்படி ஒரு காதல் மன்னன் இருக்கானா ...தெரியாம போச்சே “என நாதன் கிண்டல் பண்ண மகிழ்ச்சியில் மனம் விட்டு சிரித்தான் தேவா .



“ஹே தேவா நிஜமா சொல்றேன்.....இப்பதாண்ட உன் முகத்தில் புது மாப்பிள்ளை களை வந்திருக்கு......இந்த வேகத்தில போன ...ம்ம்ம்ம்ம்ம்” என நாதன் அழுத்தி சொல்ல

“டேய் அடங்குடா என பற்களை கடித்தபடி சொன்னவன் சட்டென்று சிரித்துவிட்டு ....இந்த அனுபவமும் நல்ல தான் இருக்கு” என சொல்ல

“ம்ம்ம்ம் இன்னும் ரோஜாகிட்ட பேசிட்டு அதுக்கு அந்த பொண்ணு கொடுக்கும் பாரு கவுன்ட்டர் அது இதைவிட நல்ல இருக்கும்”...... என நாதன் நக்கலாக சொன்னான்.

“ஏன்டா என அலறியவன்......இப்பவே பீதிய கிளப்புற...... நானே கொஞ்சம் தெளிஞ்சு பேசலாம்னு போறேன்...நீ வேற குழப்பாதடா” என கெஞ்சுவது போல் சொல்ல

“அடபாவி எத்தனபேர கூண்டுல நிக்க வச்சு எப்படி எல்லாம் திணற அடிப்ப......இப்போ உனக்கே தண்ணி காட்ட ஆள் வந்திடுச்சு ....சூப்பர் மச்சான்......இனி வீட்ல ஒரே கும்மாகுத்து தான் சாரி கொண்டாட்டம் தான்” என நாதன் கிண்டல் பண்ண

“டேய் ரொம்ப ஓவரா பேசாத....என் அம்லு அப்படி எல்லாம் இல்லை ...நான் சொன்னா கேட்பா” என அவன் தலை ஆட்டி சொல்ல

“நானும் பார்க்கதானே போறேன்” என அவனும் அதே போல் சொல்ல ....... ....பின்பு அவனிடம் தணிந்த குரலில் “தேவா இது போன்ற பிரச்சனைகள் எல்லாம் வரும் என்று நினைத்து தானே எல்லாம் செய்தோம்......இப்போது ஏன் இப்படி கலங்கிபோற......விடுடா.......உள்ளே நுழைந்தும் உன்னை பார்த்த போது எப்படி இருந்தாய் தெரியுமா .......சிங்கம் மாதிரி இருக்க வேண்டியவன் சுண்டளிபோல் சுருங்கி போய் அமர்ந்து இருந்தாய்......எனக்கே எதோ போல் இருந்தது....எல்லாம் சரி ஆகிவிடும்...கண்டிப்பாக நீ ரோஜாவோடு சந்தோசமாக குடும்பம் நடத்த போற பாரு” என அவனுக்கு நம்பிக்கை ஊட்டினான் நாதன்.....

“ எனக்கும் புரியுதுடா..... ஆனா ரோஜாவை என்னால இந்த மாதிரி பார்க்க முடியல அதான் என்றவன் இனி நான் பார்த்துகொள்கிறேன்” என சொல்ல

“உனக்கு நல்லதே நடக்கும் தேவா” என அவனை அணைத்து அவனுக்கு தைரியம் சொன்னவன் பின்பு சிரித்துகொன்டே “சரிடா நான் கிளம்பறேன்.......நீயும் வரியா” என கேட்க இருவரும் பேசியபடி வெளியே வந்தனர்.

தேவா சென்றதும் ரதி விகித்தபடி நின்று இருக்க ரோஜாவை சீக்கிரம் கிளம்ப சொல்லிவிட்டு வெளியே வந்த ராம் தேவாவை காணாமல் தேட அப்போது கதவின் ஓரத்தில் ரதி நிற்பதை பார்த்தவன் அவளிடம் சென்று ...”தேவா எங்கே ரதி” என கேட்க

தேவா செல்வதை வேடிக்கை பார்த்து நின்று கொண்டு இருந்தவள் ....திடிரென்று தன் அருகில் ஒரு குரல் கேட்டதும் அரண்டு திரும்ப ...வெகு அருகில் ராம் நின்று கொண்டிருக்க

அவனை பார்த்ததும் பயத்தில் என்ன பேசுவது என தெரியாமல் அவள் விழிக்க

அவளது அந்த மிரண்ட பார்வை அவனுக்கு பழைய நிகழ்வுகளை நினைவு படுத்த ....... அவள் முகத்தையே பார்த்து கொண்டே “இந்த பார்வை தாண்டி எட்டு வருசமா என்னை பாடா படுத்துது.......அப்படியே என் மனசுல ஆணி அடிச்சா மாதிரி உன் பார்வை பதிஞ்சுடுச்சு.....ஹே முல்லை மலர் உன்னை பார்க்காம எட்டு வருஷம் இருந்திட்டேன்......ஆனா இனி அது ரொம்ப கஷ்டம்.......அது எப்டிடி உன் கண்ணாலே என்னை கட்டி போட்ற....எல்லாரும் என்னை பார்த்து பயப்படறாங்க ...ஆனா நான் உன் கண்ணை பார்த்து பயபட்றேன்......என்னை அது ரொம்ப இம்சிக்குது “......என அவளை கண்டதும் தன்னை மறந்து ராம் உளற

அவன் சொல்வது ஏதும் புரியாமல் ரதியோ விழித்து நிற்க...ஆம் ரதிக்கு ராம்சரனை அடையாளம் தெரியவில்லை.......அவளை பொறுத்தவரை ராம் ரோஜாவின் உறவினர் என்றுதான் நினைத்து இருக்கிறாள்.ராம் அவளை முத்தமிட்டபோது கூட அவளுக்கு கோபம் வந்தது.....ஆனால் ஏனோ தேவாவிடம் சொல்லவேண்டும் என் அவளுக்கு தோன்றவில்லை.... அவள் நன்றாக யோசித்து இருந்தாள் பின்னால் வரும் பிரச்னைகளை தவிர்த்து இருக்கலாம்.



............ரதி தேவாவிற்கு நேர் எதிர் குணம்......அவன் கிழக்கு என்றால் இவள் மேற்கு .....மிகவும் அமைதி......அதிர்ந்து பேசமாட்டாள்.....பிரச்சனைகளை கண்டால் விலகிவிடுவாள்.....எதிர்த்து நிற்க மாட்டாள்.அதே நேரத்தில் மிகவும் இளகிய மனம் படைத்தவள்......அவள் மருத்துவ படிப்பு எடுத்ததே தேவாவின் விருப்பம் தான்.....அவள் எதிர்காலத்திற்கு நல்லது என தேவா தான் எடுக்க சொன்னான்.அவளை பொறுத்தவரை தேவா தான் அவளுக்கு எல்லாம்.......ஏனெனில் அவளின் பிறப்பு ஆண்டவனின் கட்டளை என்றாலும் மறுபிறப்பு அளித்தவன் தேவா தான்......அதனால் அவளுக்கு தேவா தெய்வமாக இருந்தான்.



ஆனால் ஆண்கள் யாராவது தவறாக நெருங்கினால் அவர்கள் தொலைந்தார்கள்.......சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது ரதிக்கு பொருந்தும்...........ஆனால் ஏனோ ராம் அப்படி செய்தும் ரதி தேவாவிடம் ஒன்றும் சொல்லவில்லை......அவளுக்கும் அது புரியவில்லை.......அவன் பேசுவது ஏதும் புரியாமல் முழித்தவள் பின்னர் சுதாரித்து ...”இங்க பாருங்க......நீங்க..நீங்க.....என்ன இப்படி எல்லாம் பேசறீங்க.....எனக்கு இதெல்லாம் பிடிக்காது.....ரோஜாவின் உறவினர்னு நினைத்துதான் நான் அமைதியா இருக்கேன்......இல்லை...என் அண்ணன் கிட்ட சொல்லிடுவேன்” என அவள் கோபமாக பேசுவது போல் ஆரம்பித்து அவன் முகத்தை பார்க்க பார்க்க குரல் உள்ளே செல்ல கடைசியில் சொன்ன வார்த்தை அவளுக்கே கேட்கவில்லை...



அவளது நிலைமை புரிந்து கொண்ட ராம்......”சரி இன்று இது போதும் நான் அடிகடி வருவேன்...........நின்று பேசவேண்டும்” என ,மிரட்டுவது போல் சொல்ல அவனது குரலில் இருந்த அந்த கம்பீரம் மேலும் அவனது தோற்றமும் அவளுக்குள் பயத்தை உண்டு பண்ண தலையை மட்டும் அசைத்தாள். “சரி எங்கே தேவா” என கேட்க ...ரதியோ “அண்ணா அலுவலகம் சென்று விட்டார்” என்றாள். “என்னது ஆபிஸ் போய்ட்டானா “என கேட்டு கொண்டே அவனை அலைபேசியில் அழைத்தான்....தேவாவிடம் பேசிவிட்டு “சரி தேவா நான் அம்மாவிடம் சொல்லி விடுகிறேன்” என்றவன் அலைபேசியை அனைத்து விட்டு நிமிர ...எதிரில் ரதி படபடப்புடன் நின்று கொண்டு இருந்தாள்.



....அந்த நிலை அவனை ஏதோ செய்ய மெதுவாக அவள் அருகில் செல்ல ...அவளோ பின்னால் சென்று அப்படியே சுவரில் சாய.......அவளது மூச்சு காற்றும் இவனது மூச்சு காற்றும் ஒன்றாக கலக்க ... அவள் முகம் பயத்தில் வேர்க்க ...உடல் நடுங்க...விழிகள் அங்கும் இங்கும் அலைபாய அதை கண்டதும் தன் நிலை மறந்தவன் “ஹே முல்லை மலர் ஐ லவ் யூ” என எட்டு வருடமாக தன் மனதில் புதைத்து வைத்திருந்த காதலை அவளை பார்த்த இரண்டே நாட்களில் சொல்லிவிட்டான் ராம்....இது அவனே எதிர்பார்க்காதது.......அவளை பார்க்கும்போது எல்லாம் அவள் மேல் உள்ள காதல் அதிகமாக அந்த வேகத்தில் தான் மனதில் உள்ள காதலை வார்த்தையில் அவன் வெளிபடுத்த இதை சற்று எதிர்பாராத ரதி அப்படியே உறைந்து போய் நின்றாள்..







பல வண்ண முகங்கள் எனக்குள் உண்டு.

ஆனால் பெண்ணே என்று உன்னை

என்னவளாக கண்டேனோ

அன்றே அம்முகங்கள் முழுவதும் தொலைந்து

முகவரியற்ற மனிதனாக நிற்கிறேன்....

பலாயிரம் பேர் எனக்காக காத்திருக்க

ஆனால் நானோ இன்று உன் கடைக்கண்

பார்வைக்கு காத்திருகிறேனடி!

வாழ்க்கை ஓட்டத்தில் கண்ணை மூடி

ஓடிகொண்டிருந்த நான்

உன் கரங்களை எப்போது பிடித்தனோ

அப்போதே எனக்கு நடைமறந்து முடமானேன் !

நான் தனித்துவமானவன் என்று எண்ணியிருந்த நான்

எப்போது உன்னை கண்டனோ அன்றே

என் தனித்துவம் மறைந்து

உன்னில் கரைந்ததை நீ அறிவாயா..!

போகட்டும் பெண்ணே

உனக்கு முன்னாள் நான் அடிமையானாலும்

உன் இதயத்தின் ராஜனாக நான் இருப்பதே


என் மனம் விரும்புகிறது...!!!