• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Lashmi Ravi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
145
அத்தியாயம் -19

எதிர்பார்க்காத சம்பவங்கள் நடக்கும்போது அந்த நொடியில் மூளை செயல் இழந்து போவது இயற்கையே .......ராம் தன் காதலை சொன்னதும் அப்படியே உறைந்து போனவள் பின்னர் சுதாரித்து அவனது வார்த்தை மூளைக்கு செல்ல சுறு சுறுவென கோபம் வர........முகம் வெடிக்க...கண்கள் துடிக்க ஒற்றை விரலை நீட்டி ....”ஏய் மிஸ்டர் என்ன உளறிங்க.....யார் கிட்ட என்ன பேசிட்டு இருக்கீங்க ..........இனி இந்த மாதிரி பினாத்திகிட்டு இருந்தீங்க...... இனி என் வாய் பேசாது சொல்லிட்டேன்” என அவனிடம் கோபமாக சொல்லிவிட்டு நெருங்கி இருந்தவனை தள்ளி விட்டு தனது அறையை நோக்கி ஓடினாள் ரதி தேவி .

அவளை பார்த்ததும் தன் நிலை மறந்து ராம் காதலை சொல்லிவிட அவள் அதிர்ந்து நின்ற போதுதான் தான் சொன்னது அவனுக்கு புரிந்தது.அவளிடம் அவன் விளக்க முற்பட அதற்குள் அவள் கோபத்துடன் பேசிவிட்டு அவனை தள்ளி விட்டு சென்றுவிட்டாள்.ராமிற்கோ மிகவும் கஷ்டமாக போக என்ன செய்வது என தெரியாமல் அப்படியே அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்தான்.

நடந்தவைகளை நினைத்து பார்த்தவன் தான் எவளோ பெரிய முட்டாள் தனமான வேலையை செய்து இருக்கோம் என அவனுக்கு புரிந்தது......முதலில் அவளுக்கு முத்தம் கொடுத்ததே தவறு......நல்லவேளை அவள் அதை தேவாவிடம் சொல்லவில்லை....ஆனால் இப்போது செய்து இருப்பது ...அய்யோ தகுதியை விட்டு இப்படி கீழே இறங்கி கல்லூரி பையன் போல் சிறுபிள்ளை தனமாக நடந்து கொண்டமே என அவன் புலம்பி தவிக்க

அவன் காதல் மனமோ அதெல்லாம் தவறு இல்லை ராம்......நீயும் எவ்ளோ நாள் தான் மனதிற்குள்ளே காதலை புதைத்து வைப்பாய் ......அளவு மீறினால் இப்படிதான்....அதும் மட்டுமில்லாமல் காதல் என்று வந்துவிட்டால் ஐபிஸ் ஆக இருந்தாலும் அன்னகாவடியாக இருந்தாலும் எல்லாருக்கும் ஒரே உணர்வுதான்..........நீயும் திருமணத்தில் இருந்து அவளிடம் பலவழிகளில் உன் மனதை சொல்லி முயற்சி செய்தாய்..........சூழ்நிலை அமையவில்லை ............இனியும் நீ அமைதியாக இருந்தால் அவளும் அப்படியே இருப்பாள்.நீ செய்தது சரிதான்.....கண்டிப்பாக அவள் இப்போது யோசிப்பாள்.....குளம்பிய குட்டையில் தான் மீன் பிடிக்க முடியும்......நீ கவலைபடாதே ...எல்லாம் சரி ஆகிவிடும் என அவனுக்கு சார்பாக பேச

அப்போ நாம் செய்தது சரிதான என அவன் மீண்டும் சமாதானம் அடைய அதற்குள் அவனது இன்னொரு மனம் இல்லை தவறு....என்ன இருந்தாலும் நீ அவளிடம் அவசரப்பட்டு சொல்லி இருக்க கூடாது என அவனை குழப்ப அய்யோ என தலையை கைகளில் பிடித்த படி சாய்ந்தான்.

“ராம் என்ன ஆச்சு......ஏன் இப்படி இருக்க......என் மீது ஏதாவது கோபமா” என ரோஜாவின் குரல் கேட்க

அவன் சட்டென்று “இல்லை...இல்லை ரதி....நான் செய்தது தான் தவறு ....”என சொல்லிகொண்டே வேகமாக எழுந்தவன் எதிரில் ரோஜாவும் காவேரி அம்மாவும் நின்று கொண்டு இருந்தனர் .

ராமோ திரு திருவென முழிக்க

ஆனால் காவேரி அம்மா ராம் சொன்னதை சரியாக கவனிக்கவில்லை...... அதனால் “ஏண்டா எங்களை சொல்லிவிட்டு நீ இப்படி உட்கார்ந்து இருக்க......எங்க தேவா கோயிலுக்கு போகவேண்டாமா” என கேட்டார்.

ராமோ என்ன சொல்வது என தெரியாமல் “அம்மா அது வந்து...போய்..வந்து” என உளற

அவனது தடுமாற்றம் ரோஜாவிற்கு சிரிப்பு வர ....ராமின் அருகில் வந்தவள் “மாம்ஸ் அத்தை நீங்க சொன்னத கவனிக்கலை......நீங்களே உளறி காட்டி கொடுத்திடாதிங்க என அவனிடம் முனகியவள் ....பின்னர் சிரித்து கொண்டே எப்பவும் என்னை பத்தி மட்டுமே ராம் நினைச்சுட்டு இருக்கான் அத்தை.......பாசக்கார மாம்ஸ்” என பல்லை கடித்துக்கொண்டு சிரித்து கொண்டே சொன்னாள்.

உடனே காவேரி அம்மாவும் “ஆமாண்டா.....நானும் ரோஜாவிற்கு புத்தி மதி சொல்லி இருக்கேன்......சரி தேவா எங்கே” என கேட்க

ராமோ “இல்லம்மா அவன் வந்து என்றவன் இல்ல அவசரமா ஒரு போன் வந்தது ....கிளம்பி போனான்....சீக்கிரம் வந்திடறேன் சொல்லிட்டு போனான்” என சமாளிக்க

காவேரிஅம்மாவோ “இல்லை ராம்......நல்ல நேரம் முடிந்து விட்டது ...இனி நாளை பார்த்து கொள்ளலாம்.....சரி நானும் மாத்திரை எடுத்து வரலை....அதனால் வீட்டிற்கு கிளம்பலாம் “என்றார். .

ராமோ இந்த சூழ்நிலையில் இருந்து தப்பித்தால் போதும் என நினைத்தவன் “சரிம்மா...இதோ கிளம்பலாம் “என வேகமாக நடந்தான் .

ரோஜாவோ சிரித்து கொண்டே “மாம்ஸ் அது மேல மாடிக்கு போகும் வழி......வெளியே போறதுக்கு வழி இந்த பக்கம்” என சொல்ல

“இல்ல இப்படி “என முழித்தவன் ரதி அவனை தள்ளி விட்டு வேகமாக தன் அறையை நோக்கி ஓடிய வழியிலே தானும் சென்றதை அப்போது தான் உணர்ந்தவன் நக்கை கடித்து நெற்றியை சுளித்தவன்....”ஹிஹிஹி அது வந்து ரோஜா” என வழிய

ரோஜாவோ “அத்தை நீங்கள் காரில் இருங்கள்...நான் ராமிடம் சில பொருட்களை கொடுக்கவேண்டும்......எடுத்து வருகிறேன்” என சொல்ல ...அவர் வெளியே சென்ற உடன் ...”ஹப்பா ரோஜா நல்ல வேலை தப்பிச்சேன்” என்றவன்........”மாம்ஸ் நீங்க ரதினு சொன்னதை நானும் கவனிக்கலை” என இரண்டு கைகளையும் விரித்து கண்களை உருட்டி அவள் சொன்னாள்.

“அச்சோ ரோஜா என்றவன்......இல்ல ரோஜா நான் உன்னை பற்றி தான் “என அவன் ஆரம்பிக்க

யாரு ....நீ என்னை பத்தி......சரி ராம் நான் நம்பிட்டேன் என சொன்னவள் ....அவனிடம் வந்து நீ முல்லை மலரிடம் பேசுனியா” என ரகசிய குரலில் கேட்டாள்.

அவளது செய்கையும் பேசும் விதமும் அவனுக்கு சிரிப்பை வரவழைக்க ....”ஆனாலும் ரோஜா இந்த ரணகலத்தலையும் எப்படி உன்னால் இப்படி குதூகலமாக பேச முடியுது” என அவன் ஆச்சிரியமாக கேட்டான்.

“எல்லாம் உங்க கிட்ட இருந்து கத்துகிட்டதுதான் என கண்ணடித்தபடி சொன்னவள் .... இப்போ நீ செஞ்ச மாதிரிதான் என்றவள் சரி ராம் பினாத்தாம அத்தையை பார்த்து கூட்டிட்டு போ” என பெரிய மனுசி போல் சொன்னாள்.

“சரிங்க மகராணி.....நீங்க சொல்ற மாதிரியே செஞ்சிடறேன்” என அவனும் குனிந்து வளைந்து சொல்ல ...அதை பார்த்ததும் ரோஜா மனம் விட்டு சிரிக்க ...வெகுநாட்களுக்கு பிறகு அவளது முகத்தில் புன்னகையை பார்த்தவன் அவளது கைகளை பிடித்து தனது கைகளுக்குள் வைத்து கொண்டவன் “ரோஜா குட்டி உன்னை இப்படி பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு.......நீ எப்பவும் இதே மாதிரி சிரிச்சுட்டு சந்தோசமா இருக்கணும்டா” என தனது அன்பை அவன் வார்த்தையில் கொட்ட

ரோஜாவோ அவன் தோளில் சாய்ந்தவள்.....”மாம்ஸ் நீங்க எல்லாம் வருத்தபட்றமாதிரி நான் எப்பவும் நடந்துக்க மாட்டேன்....போதும் ஒருமுறை உங்களை மீறி நான் நடந்து கொண்டதுக்கு எனக்கு கிடைத்த சன்மானம்”....என அவள் சொல்லும்போதே குரல் கரகரக்க

ராமோ அவளது வாயை மூடியவன் “போதும் ரோஜா....இனி இதை பற்றி பேசாதே.....அது போல் ஒன்று நடக்கவே இல்லை என்று நினைத்து கொள்......புரிகிறதா” என கண்டிபோடும் அன்போடும் சொல்ல...அவளோ தலையை மட்டும் ஆட்ட...”.சரிடா நான் கிளம்பறேன்.......அம்மா வெளியே இருக்காங்க......உனக்கு ஏதாவது தேவை என்றால் எனக்கு போன் பண்ணு” என சொல்லிவிட்டு நடந்தவன்

பின்னர் தயங்கி ரோஜா என மெல்ல அழைக்க ...அவள் பார்த்ததும் “தேவா ரொம்ப நல்லவன் ரோஜா...அவனிடம் மனசு விட்டு பேசு”....என சொல்ல ...அவளோ அவனை ஆழ்ந்து பார்த்தவள் பின்னர் ஏதும் சொல்லாமல் தலை ஆட்ட ராமும் ஒன்றும் பேசாமல் சென்றுவிட்டான்.

நாதனிடம் பேசிவிட்டு வீட்டிற்கு வந்த தேவா வீடு அமைதியாக இருப்பதை கண்டவன் .....ம்ம்ம் திருமண வீடு போலவா இருக்கிறது என ஒரு ஆயாச எண்ணம் தோன்ற அப்படியே சோபாவில் சரிந்தான்.

வீட்டில் ரதியோ ராமின் அதிரடி தாக்குதலில் நிலை குலைந்து போனவள் தனது அறைக்குள் சென்று அழுது புலம்பி கொண்டு இருந்தாள்...... ஒரு நாளில் அடுத்து அடுத்து தாக்குதல்.........அவன் தன்னை தொட்ட பொழுதே தடுத்து இருக்க வேண்டும்....ஏன் நான் செய்யாமல் விட்டேன்....அய்யோ என்ன இது...... நானா இப்படி இருந்தேன்.........ஏன்????? ஏன்????? இல்லை இல்லை நல்ல பதவியில் இருக்கிறார்....ரோஜாவின் உறவினர் அப்டின்னு நினைத்து தான் பேசினேன்......என்னிடம் தவறு இல்லை........ ரோஜாவிர்காக தான் நான் அண்ணாவிடம் சொல்லாமல் விட்டேன் என தான் செய்த தவறை ராமின் மேலே சொல்லி தன்னை அவள் நியாயபடுத்தி தன் மனதோடு போராடி கொண்டு இருந்தாள்....

ராமின் எட்டு வருட காதல்......அவளுடன் மனதிலே அவன் வாழ்வது ....அதனால்தான் அவளை அவனால் எளிதில் தொடமுடிந்தது...... இவை எல்லாம் ரதிக்கு தெரியாது......ஆனால் பார்வையாலே மற்றவர்களை பத்தடி தள்ளி நிற்க வைக்கும் தான் எதனால் இவனிடம் மட்டும் அமைதியாக இருக்கிறோம் என அவள் யோசித்து இருந்தாள் அவளின் மனதிலும் ஏதோ ஒரு இடத்தில் ராம் இருக்கிறான் என்பது அவளுக்கு புரிந்து இருக்கும்.......ஆனால் இவை எல்லாம் உணரும் மனநிலையில் அவள் இல்லை.

ரோஜாவோ ராம் சென்ற பிறகு ரதியும் இல்லாமல் வெறுமையாக இருக்க சிறிது நேரம் டிவி பார்த்தவள்..... பின்னர் தனது அறைக்குள் சென்றவள் ...உள்ளே நுழைந்து தனிமை அவளை சூழ ஆத்திரமும் அழுகையும் வர அப்படியே படுக்கையில் விழுந்தவள் பழையது யாவும் நினைவு வர அழுது கரைந்து கொண்டிருந்தாள்.

அப்போது அவளது அலைபேசி ஒழிக்க அவள் எடுத்து பார்க்க அதில் மரகதத்தின் பெயர் வர எடுத்து காதில் வைத்தவள் “சொல்லுங்க பாட்டி” என்றாள்.

அவளது குரலை வைத்தே அவளது நிலையை உணர்ந்து கொண்டவர்......ஆனால் அதை வெளிபடுத்தாமல் “எப்படி இருகிறாய் ரோஜா...புது இடம் உனக்கு பிடித்து இருக்கிறதா......காலையில் மாப்பிள்ளை எங்களிடம் பேசினார்............காவேரியும் நீயும் பேசிக்கொண்டு இருப்பதாக சொன்னார்.....அதான் நான் தொந்தரவு செய்யலை என்றவர் நீ நன்றாக இருக்கிறாய் தானே” என கேட்க

ரோஜா ஏதும் பதில் சொல்லாமல் இருக்க

“ரோஜா ...ரோஜா என்றவர்........ரோஜா இதுவரை உன் பாட்டி உன்னிடம் ஏதும் கேட்டதில்லை....இப்போது கேட்கிறேன்.......நமது குடும்பம் சந்தோசமாக இருக்கவேண்டும்....உன்னை நினைத்து நினைத்து உன் பெற்றவர்கள் இரவில் அழுது கொண்டு இருந்தது எனக்கு தான் தெரியும்......மேலும் உனது தாத்தாவின் ஆசை உன்னை படிக்கவைத்து நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்கவேண்டும் என்று சொல்லுவார்......அதை தான் நான் இப்போது செய்தேன்......இப்போது தான் சேகரின் முகத்தில் சற்று நிம்மதியே வந்து இருக்கிறது......ரோஜா இதெல்லாம் நான் சொல்வதால் எங்கள் கவலையை உன் மீது திணிப்பதாக நினைக்கவேண்டாம்......தேவாவும் ரொம்ப நல்ல பையன் .....உன்னை நன்றாக பார்த்து கொள்வான் ......எனக்கு நம்பிக்கை இருக்கு.....உனக்கு உன் பாட்டி மீது நம்பிக்கை இருந்தால் தேவாவை நம்பு.....வேறு எதையும் போட்டு குழப்பி கொள்ளாதே” என அவளிடம் பொறுமையாக எடுத்து சொன்னார்.

அவரது வார்த்தைகள் அவளது மனதிற்கு ஏதோ செய்ய.....”பாட்டி நான்...நான்...இல்ல எனக்கு இங்க பிடிச்சு இருக்கு.......நீங்க கவலைபடாதிங்க.......நீங்க வருதப்படறமாதிரி நான் நடந்துக்க மாட்டேன்” என சொல்ல

அதுவரை மனதில் அடக்கி வைத்திருந்த உணர்சிகள் வெளிபட....”ரோஜா.....என் தங்கமே” என மரகதம் விம்மி வெடித்து அழுக

அதை கேட்டதும் ரோஜாவும் அழுக.....சிறிது நேரம் அழுதவள் பின்னர்...”என்ன பாட்டி என்னை சொல்லிட்டு நீங்க அழறிங்க......என் எம்ரால்ட் எப்போது சிரிச்சுகிட்டு கம்பீரமாதான் இருக்கணும்...புரிஞ்சுதா......அப்புறம் பாட்டி கல்யாணத்திற்கு அம்மா ராவா உருண்டை செஞ்சாங்களா ....அதை கொடுத்து அனுப்பவே இல்லை.........நைட் தான் பார்த்தேன்.......அதை முதல்ல அனுப்புங்க ....நீங்களே சாப்ட்ராதிங்க” என அவள் பேச்சை மாற்ற

மரகதமோ சிரித்து கொண்டே .....”நீ கவலை படாத ரோஜா ...நான் எடுத்து வச்சிருக்கேன்.......உனக்கு அனுப்பி வைக்கிறேன்” என சொல்ல......”சரி பாட்டி” என்றவள் பின்னர் சிறிது நேரம் அமைதியாக இருக்க “என்ன ரோஜா” என மரகதம் கேட்க...”பாட்டி நான் அம்மாகிட்ட பேசணும் போல இருக்கு” என்றாள்.

அது தானே பெண் குழந்தை........எந்த ஒரு பெண்ணும் திருமணம் முடிந்து தான் மாமியார் வீட்டிற்கு சென்றபிறகு அவள் மனம் முதலில் தேடுவது அவள் தாயை தான்......அவளது உணர்வுகளை சொல்லமால் அம்மா என்ற அழைப்பிலே புரிந்து கொள்ள தாயை தவிர வேறு யாரால் முடியும்.

“அம்மா கோவிலுக்கு போயிருக்கா ரோஜா...வந்ததும் பேசசொல்றேன்.....காலையில அவளும் மாப்பிளைகிட்ட கிட்ட பேசினாள் .....என்றவர் ரோஜா உடம்பை பார்த்துகொள்......நாங்க இரண்டு நாட்களில் வந்து விடுகிறோம் என்று சொல்லிவிட்டு போனை வைத்தார் “மரகதம் .

பாட்டியிடம் பேசியது மனதிற்கு சற்று இதமாக இருக்க.......மேலும் தேவா பாட்டியிடம் பேசியது கேட்டதும் அவளுக்கு ஒரு நிம்மதி வந்தது. ஆனால் அதே நேரத்தில் ....இதெல்லாம் இவருக்கு சொல்லிய கொடுக்கணும்......ஆளுக்கு ஏத்த மாதிரி வேஷம் போடறதிலே கில்லாடியாச்சே........ஆனா என்னை எதுக்கு கல்யாணம் பண்ணிகிட்டார்.....காரணம் இல்லாமல் சோழியன் குடுமி சும்மா ஆடாதே .......ம்ம்ம் என்னவாக இருக்கு என அவளது மூளையின் கிளைகள் பலவாறு பிரிய அதில பல எண்ணங்கள் பயணம் செய்தன......



சிறிது நேரம் தனியாக அமர்ந்திருந்த தேவா.......நாதன் சொன்னது நினைவு வர ரோஜாவிடம் பேசுவதற்காக அவள் அறைக்கு வந்தான். அவளோ தனக்கு தானே பேசிக்கொண்டு கைகளை அசைத்து கொண்டிருக்க....அவளது நிலையை பார்த்ததும்...நல்லா தானே இருந்தா......ரொம்ப முத்திடுச்சோ என அவன் பயந்து அருகில் வர.......ஆள்வரும் அரவ கேட்டதும் திரும்பியவள் தேவாவை பார்த்ததும் சட்டன்று எழுந்து நின்றாள்..

பரவாயில்லே நம்மளை பார்த்த உடனே மரியாதையா எழுந்து நிற்கிறா என அவன் நினைக்கும் முன்பே அருகில் இருக்கும் சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்த ரோஜா..... அவனை மேலும் கீழும் பார்க்க

அவனுக்கோ சட்டென்று கோபம் வந்தாலும் அடக்கி கொண்டு......என்ன என்பதை போல் புருவம் உயர்த்த

“மற்றவர் அறைக்குள் வரும்போது கதவை தட்டி விட்டு உள்ளே வரவேண்டும் என்றும் .... ....... மரியாதைனா என்னனே தெரியாதவங்க தான் இப்படி வருவாங்கனு எனக்கு மரியாதையை கரைத்து குடித்த ஒரு மாமனிதர் சொன்னார்......உங்களுக்கு தெரியுமா சார்” என ஏற்ற இறக்கத்துடன் அவள் சொல்ல

ஆஹா அன்னைக்கு ஆபிஸ்ல நடந்ததை மனசில வச்சுட்டு இன்னைக்கு பழிவாங்கறா என மனதில் நினைத்தவன்....”சரி...சரி வா சாப்பிடலாம்” என்றான்.

அவள் ஏதும் பேசாமல் அமைதியாக இருக்க

“ரோஜா” என அவன் அவள் அருகில் வர

“அவளோ இங்க பாருங்க சார்.......எனக்கு இப்போ ஏகப்பட்ட குழப்பம்.....அது எல்லாம் முதல்ல சரிஆகனும்.......அப்புறம் தான் சாப்பாடு” என அவள் வேகமாக சொல்ல

“இங்க பாரு ரோஜா நீ இங்க தான் இருக்க போறா.....என் கூடத்தான் இருக்க போற ....நமக்கு இன்னும் நிறிய நேரம் இருக்க...அப்போ பேசிக்கலாம்.....இப்போ வா” என அவன் பொறுமையாக சொல்ல

அவளோ “அதெல்லாம் முடியாது சார்” என மீண்டும் ஆரம்பிக்க

தேவாவோ “ஹே நிறுத்து...நிறுத்து...அது என்ன சார்...சார்னு கூபிட்ற .......அது எல்லாம் ஆபீசோட நிறுத்திக்கோ........இங்க” என அவன் முடிக்கும் முன்பு

“அப்போ வாடா ...போடான்னு” கூப்பிட்லமா சார் என அவள் வேகமாக கேட்டவள் ....பின்னர் எப்போதும் போல் நாக்கை கடித்து கொண்டு அவனை ஒரு கண்ணில் பார்க்க

“ஓ சார் தவிர உனக்கு அந்த வார்த்தை தான் தெரியுமா....வேற ஏதும் தெரியாதா.......யாரோ இதுக்கு முன்னாடி மரியதை பத்தி எனக்கு சொன்னதாக நியாபகம்” என அவன் நக்கலாக அவளை பார்த்து கேட்க

“மரியாதை ஒருவரின் நடத்தையை பார்த்து மத்தவங்க கொடுக்கணும்.......இப்படி எல்லாம் கேட்டு வாங்க கூடாது” என அவள் சற்று கோபமாக சொல்ல

அதுவரை பொறுமையாக இருந்த தேவா சட்டென்று.....”என்னோட நடத்தையில் நீ என்ன குறை கண்டாய் ரோஜா......வார்த்தையில் கவனம் வைத்து பேசு....யாரிடம் பேசிக்கொண்டு இருக்கேன்னு உனக்கு தெரியுதா” என அவன் சீற

“என்ன சார் மிரட்ரிங்க......இந்த வேலை எல்லாம் எங்ககிட்ட வேண்டாம்.......உங்களுக்கு தெரியும்தானே ....எனக்கும் உங்களுக்கும் எப்போதும் ஆகாதுனு ........நம்ம இரண்டு பேரும் பெரியாரும் ,பின்லேடனும் மாதிரி ...புரிஞ்சுக்குங்க........என்னை எதுக்கு நீங்க கல்யாணம் பண்ணிங்க........எனக்கு இதுக்கு காரணம் தெரியாமே மண்டையே வெடிசிட்ற மாத்ரி இருக்கு என அவள் கோபமும் ஆத்திரமும் கலந்து சொல்ல

அவளது நிலை அவனுக்கு புரிய ....மெதுவாக அவளின் அருகில் சென்றவன்....ரோஜா ...ரோஜா இங்க பாரு.........உன்னை என் மனசுக்கு பிடிச்சு தான் நான் திருமணம் பண்ணிகிட்டேன்........அதுக்கு காரணம் கேட்டா எப்படி சொல்றது” என தடுமாறியவன் .... ஏனனில் அவனே இன்னும் தெளிவாகத நிலையில் எப்படி சொல்வான்........மருத்துவரும் இதை பற்றி பேச்சை இப்போது தவிர்த்திடுங்கள் என்று சொல்லி இருந்தார்.......... அதனால் சட்டென்று “அது என்ன பெரியாரும் பின்லேடனும் மாதிர்னு நம்ம இரண்டு பேரும் சொல்ற” என அவன் பேச்சை மாற்ற

உடனே அவள் “அதுவா......இரண்டு பேரும் தாடி வச்சு இருகிறதால இரண்டு ஒன்றாகிடுவான்களா....அது மாதிரி நீங்களும் நானும் வக்கிலா இருகிறதால ஒன்றாகிட முடியுமா........நீங்க பணத்தை வச்சு எல்லாரயும் கணக்கு போடுவிங்க...நான் மனசை வச்சு எல்லாரயும் கணிப்பேன்” என அவள் அதற்கு விளக்கம் கொடுக்க

அவனோ அவளது விளக்கத்தில் தன்னை மறந்து சிரித்தவன் “அடபாவி.......பெரியார் எங்கே ...பின்லேடன் எங்க....எங்க கொண்டு போய் நீ இவங்க இரண்டு பேரையும் சேர்கிறா....ஆனாலும் ரோஜா இந்த மாதிரி விளக்கம் எல்லாம் உன்னால மட்டும்தான் கொடுக்க முடியும்”......என அவன் சூழ்நிலை மறந்து அவன் சிரிக்க

ரோஜாவோ “பேச்சை மாத்தாதிங்க சார்...இல்லை...தேவா...இல்லை mr.இராகதேவன்” என அவள் பேரை சொல்ல அவள் தடுமாற

“சரி...சரி....இப்போ இது போதும் நீ சாப்பிட வா “ என அவன் அழைக்க

அவள் முகம் மாற....குரல் கம்ம “இல்லை...வேண்டாம் எனக்கு மனசு சரியில்லை......நீங்க சாப்பிடுங்க....இப்பதான் அத்தை கொஞ்சம் பழங்கள் கொடுத்தாங்க ....போதும் எனக்கு”......என சொல்லிவிட்டு சோபாவில் கண்மூடி சாய

அவள் அருகில் அமர்ந்தவன் .....”ரோஜா உனக்கு எப்படி சொல்லி புரிய வைப்பதுன்னு எனக்கு தெரியலை....ஆனால் ஒன்றை புரிந்து கொள்.......உன்னை ராணி மாதிரி வச்சு பார்த்துக்கணும்னு ஆசைபட்டுதான் திருமணம் செய்துகிட்டேன்.......... ....இதில் எந்த வித மாற்றமும் இல்லை....அதே சமயத்தில் இந்த கல்யாணம் இவ்ளோ அவசரமாக நடந்ததற்கு ஒரே காரணம் நீ தான்” என அவன் சொல்லி நிறுத்த

அவள் வேகமாக” நானா...நான் என்ன செய்தேன்” என அவள் வேகமாக கேட்க

“இதே தான்...இந்த வேகம் தான்.......நான் பயந்தேன்.......நான் தான் மாப்பிள்ளை என்றால் நீ கண்டிப்பாக ஒத்து கொள்ள மாட்டாய்......அதனால்தான் இப்படி செய்ய வேண்டியாதா போய்டுச்சு” என அவன் நடந்தவைக்கு விளக்கம் சொல்ல

“அதான் எனக்கும் புரியலை.....அப்படி எதற்கு நீங்க என்னை கல்யாணம் பண்ணனும் .......என்ன காரணம் .........உங்க திறமைக்கும் புகழுக்கும் ஏகபட்ட பேர் பெண் கொடுப்பாங்க ....நீங்க ஏன் வந்து என்னை” என அவள் வார்த்தை தடுமாற

அவளது முகத்தை பார்த்தவன் அவள் அதிகமாக சிந்திப்பதை கண்டு மருத்துவர் சொன்ன அறிவுரை நினவு வர .....உடனே “அப்படியா ரோஜா....யாரோ எனக்கு சைனால தான் பெண்கிடைக்கும்....இங்க எல்லாம் கிடைக்காதுன்னு சொன்ன மாதிரி நியாபகம் ......அதான் நான் அதே மாதிரி இங்க இருக்கிற பெண்ணை பிடிச்சுட்டேன்” என சிரித்து கொண்டே சொல்ல

உடனே அவள் “பேச்சை மாத்ததிங்க......உண்மைய சொல்லுங்க” என அவள் அதிலே நிற்க

காலையில் இருந்து அதிகம் சிந்தித்து கொண்டு இருந்ததாலும்....அவனிடம் எப்படி கேட்பது என அவள் யோசனை பண்ண பண்ண அவள் முகம் வேர்த்து கைகள் சற்று நடுங்க ...உடனே தேவா வேகமாக எழுந்தவன்.....அவளுக்கு சில மாத்திரைகளை எடுத்து கொடுத்து ...”ரோஜா இங்க பார்....நீ எதுவும் பேசவேண்டாம்....முதலில் இதை சாப்பிடு” என கொடுக்க

அவள் அவனை முறைத்து பார்க்க

“முதலில் சாப்பிடு...பிறகு விளக்கம் சொல்கிறேன் என்றவன் அவள் சாப்பிட்டதும் இங்க பாரு ரோஜா....நமக்குள் திருமணம் முடிந்து விட்டது.......இனி நீ தான் என் மனைவி......என்னில் பாதி நீ........உனக்கு எல்லாமும் தெரியனும்..........ஆனால் இப்போதே அதற்கான எல்லா விளக்கமும் சொல்ல முடியாது.......நாம் இரண்டுபேரும் சேர்ந்து ரொம்ப நாள் சந்தோசமாக வாழ போறோம்.......அப்போது கண்டிப்பா சொல்றேன்......இப்போ போட்டு குழப்பிக்காத ...நீ தூங்கு” என அவன் பேசி முடிக்கவும் அவள் மருந்தின் உதவியால் கண் மூடவும் சரியாக இருந்தது..........

அவள் நன்றாக உறங்கிய பின் அவளை இமை மூடாமல் பார்த்து கொண்டு இருந்தவன் ........அம்லு ஏன்.?ஏன்? கேட்கிரியடா ....எப்படி சொல்வேன் நான்.......உன்னோட இந்த நிலைமைக்கு நானும் ஒரு வகையில் காரணம்........நான் அதை சொன்னால் அதற்கு பின்பு நீ என்னை மன்னிப்பாயா ..... அதை சொல்ற தைரியம் கூட எனக்கு இல்லை அம்லு.......நீ மறக்கணும்...எல்லாத்தியும் மறக்கணும்.......அதுக்காக தான் இந்த கல்யாணமே......நான் திருமணத்திற்கு சம்மதம் சொல்லும்போது கூட நீ என்னை இந்த ளவு பாதிப்பை என்று நினைக்கவில்லை..........ஆனால் இப்போது என் மனதில் உன்னை அன்றி வேறு எந்த நினைவும் இல்லை.......இந்த இரண்டு நாட்களில் உன்னோட ஒவொவொரு அசைவும் எனக்குள் பெரிய மாற்றத்தை எற்படுத்திடுச்சு....... எப்படி இருந்த என்னை இப்படி மாற்றி விட்டாய் அம்லு என் மனதிற்குள் புலம்பியவன் சிறிது நேரம் அங்கே இருந்து விட்டு எழுந்து தனது அறைக்கு சென்றான்..





வெகுநேரமாகி எழுந்தவள் மாலை பொழுது ஆகிவிட முகம் கழுவி கிளம்பி சோபாவில் அமர்ந்தவள் நடந்தது எல்லாம் நினைத்து பார்க்க இவன் ஏன் தன்னை திருமணம் செய்துகொண்டான் என்ற எண்ணம் அவளது அனைத்து சிந்தனைகளையும் முடக்க .... காரணம் இல்லாமல் இவன் எதையும் செய்ய மாட்டான்........பாட்டி சொல்வதை பார்த்தால் அனைவரும் இவனை நல்லவனாக நம்பறாங்க......ஆனால் இவனை பற்றி எனக்கு தானே தெரியும்.......... கடைசி வரை காரணம் என்னனு சொல்லாமலே பேசி சமாளிச்சுட்டான் .......இது தான் இவனிடம் பிடிக்காத ஒன்று........சரியான பெவிகால்......அவனாக சொன்னால் தான் உண்டு........எப்படி இவனை நம்பறது....... என மறுபடியும் எண்ண குதிரையை வேகமாக தட்டி விட்டாள்.

அவளிடம் பேசிவிட்டு வந்தவன் சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு கீழே வர ரதி இரவு உணவிற்கு தயார் செய்து கொண்டு இருந்தாள்.





ரதி “ரோஜா எங்கே “எனக்கேட்க





அவள் அறையை விட்டு வெளியே வரவில்லை என அவள் சொல்ல மீண்டும் அவள் அறைக்கு சென்றான்....இப்போது தேவா கொஞ்சம் தெளிவாக இருந்ததால் கதவை தட்டிவிட்டு திறந்து கொண்டு உள்ளே செல்ல ரோஜாவோ கைகளை முழங்காலில் கட்டிக்கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தாள்.





அவள் அமர்ந்திருந்த தோற்றம் ஏதோ சின்ன குழந்தை கோபித்து கொண்டு அமர்ந்து இருப்பது போல் இருக்க........இதழில் சிறு புன்னகை தோன்ற......”என் அம்லு எப்பவும் குழந்தைதான் என மனதிற்குள்ளே செல்லம் கொஞ்சியவன் .....ரோஜா வா சாப்பிடலாம்” என்றான்.





அவளோ ஏதும் பதில் பேசாமல் அமர்ந்திருக்க

“ரோஜா உன்னை தான் வா சாப்பிடலாம்” என்றான்.....

நிமிர்ந்து அவனை முறைத்தவள் மீண்டும் வேறு புறம் திரும்பி அமர

அவளது செயல் அவனுக்கு சிரிப்பை வரவழைக்க .....”சிரித்தபடியே என்ன ரோஜா இது சிறுபிள்ளை போல் ....சீக்கிரம் வா....எனக்கும் பசிக்கிறது.....உன்னோடு சண்டை போட்டு நானும் மதியம் சாப்பிடவில்லை ” என்றான்.
 

Lashmi Ravi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
145
அவளோ வெடுகென்று “எனக்கு பசிக்கவில்லை “ என சொல்லிவிட்டு முகத்தை திருப்பிக்கொள்ள





“எப்படி பசிக்காமல் இருக்கும்....இப்போது நீ வருகிறாயா இல்லையா.......எனக்கும் பொறுமை ஒரு எல்லை தான்....அப்புறம்” என அவன் சற்று குரலை உயர்த்த





உடனே வேகமாக எழுந்து அவன் அருகில் வந்து....”பாருங்கள்...இதான்...இதான்.....இப்படி மிரட்டி மிரட்டி உங்கள் காரியத்தை சாதிச்சுகிறிங்க.......ஆனா என்கிட்டே அது நடக்காது....எனக்கு வேண்டாம்...வேண்டாம்...”என வீராப்பாக சொல்லிவிட்டு அவள் சென்று அமர





அவள் வந்த வேகத்தில் சற்று பயந்தவன் அவள் பேசிய டைலாக்கில் சிரிப்பு வர ...ஆனால் அதை மறைத்துக்கொண்டு இவள் கோபமாக பேசினால் வழிக்கு வந்துவிடுவாள் என முடிவு செய்தவன் .....





“ரோஜா இப்போ நீ வரபோறீயா இல்லையா... இங்க பாரு ரோஜா உன் வீட்டார் என்னை நம்பி அனுப்பி வச்சிருக்காங்க......இப்போ நீ சாப்பிட வரலைனா” என சொல்லிகொண்டே அவன் எதோ குறுஞ்செய்தி வர அதற்கு அலைபேசி எடுக்க





உடனே ரோஜா வேகமாக எழுந்து “என்ன எங்க வீட்டிற்கு போன் பண்ண போறிங்களா....ஏற்கனவே எங்க பாட்டி உடம்பு சரியில்லாம இருக்காங்க....இன்னும் நீங்களும் அவங்களை மேலும் கஷ்டபடுத்துங்க என்றவள்.......நீங்க யாருக்கும் சொல்ல வேண்டாம் நானே வருகிறேன்” என சொல்லிவிட்டு அவள் அவனை தள்ளி கொண்டு வெளியே செல்ல



தேவாவோ திகைத்து போய் நின்றான்....அவன் எதிர்பார்கவே இல்லை...அவன் குறுஞ்செய்தி பார்க்கதான் அலைபேசி எடுத்தான்....அதை எப்போதும்

போல் ரோஜா தனது அவசர புத்தியால் தன் வீட்டிற்குதான் போன் செய்கிறான் என எண்ணிக்கொண்டு அவனிடம் சண்டைபோட்டுக்கொண்டு சாப்பிடும் இடம் நோக்கி சென்றாள்..





ஆஹா இப்படி ஒரு வழி இருக்கா என தேவா மகிழ்ந்தவன் இனி இவளை இப்படி மிரட்டித்தான் வழிக்கு கொண்டுவரமுடியும் என நினைத்து கொண்டே வந்தவன்





அங்கு ரோஜா ரதியிடம் இன்னைக்கு என்ன டிபன் ரதி என கேட்க ......”சப்பாத்தி ...சென்னா மசாலா ரோஜா” என்றாள்.





“சப்பத்தியாஆஆ” என அவள் இழுக்க ...”ஏன் ரோஜா உனக்கு பிடிக்காதா என கேட்டவள் உனக்கு வேற என்ன பிடிக்கும் சொல்லு செஞ்சிடலாம்” என்றாள்.





“எனக்கு பூரி பிடிக்கும் ரதி....அதும் சோலா பூரினா ரொம்ப பிடிக்கும்...... அதும் சூடா இருந்து கூட சென்னா மசாலா இருந்து பக்கத்துல ரசகுல்லா இருந்ததுனா ஆஹா” என சொல்லும்போதே அவள் ரசித்து சொல்ல அவள் சொல்வதை அவள் மணாளன் ரசித்து கொண்டிருக்க......... இவள் ரசிப்பு தன்மை இவள் சொல்வதை வைத்தே மற்றவர்கள் அந்த ரசனையை அனுபவித்து விடுவார்கள்....இவளிடம் மட்டும் தான் அந்த திறமை இருக்கிறது என எண்ணி வியந்தான்.





ரதியோ அவள் சொல்வதை கேட்டு “ரோஜா நீங்க சொல்றத பார்த்தா நல்லா சமைப்பிங்க போல தெரியுது.......ஆனா எனக்கு அது எல்லாம் செய்யதெரியாதே......இதும் வேலை செய்யற அம்மா பாதி செஞ்சுடுவாங்க....கல்லுல போட்டு எடுக்கிறது தான் நான்”.......என சோகமாக சொல்ல





உடனே ரோஜா ....”என்ன ரதி இப்படி சொல்றிங்க...... அப்போ நீங்க என்னை மாதிரி இல்லையா என ஆச்சரியமாக கேட்க





ரதியோ “அப்போ நீங்க நல்லா சமைப்பிங்களா ....எனக்கு ரொம்ப தெரியாது” என எதோ தவறு செய்தவள் போல் தலை குனிய





தேவாவோ ரோஜாவை பெருமையாக பார்த்து கொண்டு இருந்தான்.





“சரி விடுங்க...விடுங்க......ஆனா இப்படி அரைகுறையா எதையும் செய்யகூடாது புரியுதா” என பெரிய மனுசி போல் சொன்னவள்



“இப்போ நான் செய்யறத நல்ல கவனிங்க ....ம்ம்ம்....கவனம் எல்லாம் இங்க இருக்கனும் என்றவள் அவளின் அருகில் சென்று .....இப்போ உங்களுக்கு சோலா பூரி சாப்பிடனும்னு தோணுச்சுனா உடனே இதை எடுக்கணும்” என்றவள் வேகமாக தன் அறைக்குள் சென்றாள்.





தேவாவும் ரதியும் அவள் என்ன செய்யபோகிறாள் என்பதை ஆவலுடன் பார்த்து கொண்டு இருந்தனர்.





சிறிது நேரத்தில் வெளியில் வந்தவள் ..”.சரி சரி இங்க வாங்க என ரதியை அழைத்து சென்று ....இரண்டு பாத்திரம் தட்டு எல்லாம் வேகமாக வெளியே எடுத்து வர ......ம்ம்ம் என் பின்னாலே வராதிங்க தண்ணீர் எடுத்து வாங்க “என ரதியை அதட்ட அவளும் உள்ளே சென்று எடுத்து வந்தாள்.





“இப்போ தட்டு பாத்திரம் கரண்டி எல்லாம் ரெடியா என்றதும் ரதி எல்லாம் இருக்கு ரோஜா......இந்த பாத்திரம் போதுமா ....இல்லை வேற ஏதாவது வேணுமா என கேட்க ...இல்லை...இல்லை இது போதும்” என சொல்லிவிட்டு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தவள் ...ரதியை பார்த்து “உனக்கு எத்தனை பூரி என்றவள் தேவாவை பார்த்து ஏதும் சொல்லாமல் சரி ஒரு பத்து பூரி வர மாதிரி இருந்தா போதும் தானே என கேட்க ரதி சரி” என சொல்ல





என்ன செய்யபோகிறாள் என ஆவலுடன் தேவா அவள் முகத்தை பார்த்து கொண்டுஇருந்தான். ........ரதியோ “இப்போ அடுத்தது என்ன செய்யணும் ரோஜா......இரு நான் ஒரு நோட்ஸ் எடுத்துக்கிறேன்” என பேப்பர் பேனாவுடன் வர





ரோஜாவோ “சரி நல்லா நோட் பண்ணிக்கோ .......உனக்கு பூரி சாப்பிடனும்னு தோணுச்சுனா உடனே ஹோட்டல் சரவண பவனுக்கு இந்த மாதிரி போன் பண்ணா பத்துநிமிடத்தில் நம்ம வீட்டில் பூரி இருக்கும்......அதை எடுத்து இங்க இருக்கிற தட்டில் வைத்து ,சென்னா மசாலாவை இந்த பாத்திரத்தில் ஊற்றி சாப்பிட்டால் .....ஆஹா என்ன சுவை” என அவள் சப்பு கொட்டி சொல்ல





தேவாவும் ரதியும் கொலை வெறியுடன் அவளை பார்க்க.......தேவாவோ இந்த போனை எடுக்கத்தான் அறைக்குள் சென்றாயா ....நான் கூட எதோ ரெசிபி பார்த்து வருவாள் என நினைத்தனே என மனதிற்க்குள் திட்டியவன்





அவர்களை பார்த்தவள் அவர்களின் எண்ணம் புரிய...”ஹிஹிஹி எனக்கும் சமையல் தெரியாது.....என சொல்லிவிட்டு சரி...சரி நேரத்தை வீணாக்காம அந்த சப்பாத்தியை போடு” என்றவள் அவள் பதிலை எதிர்பாராமல் இவள் எடுத்து போட்டு சாப்பிட்டு விட்டு ....”ரொம்ப நல்ல இருக்கு ரதி” என சொல்லிவிட்டு நிமிர அவர்கள் சாப்பிடாமல் இவளையே பார்த்து கொண்டு இருக்க உடனே முகத்தை சீரியசாக வைத்து கொண்டு “சாப்பிடதான் சொல்லமுடியும் ....உங்க வயிற்றுக்கு நான் சாப்பிடமுடியாது” என சொல்லிவிட்டு எதோ அவர்கள் தவறு செய்த மாதிரியும் இவள் புத்திமதி சொல்வது போல் சொல்லிவிட்டு எழுந்து சென்றாள்.





அவளது செயலை பார்த்து என்ன சொல்வது என தெரியாமல் தேவா முழித்து கொண்டு இருக்க.......ரதி தேவாவிடம் “ஆனா அண்ணா இன்னைகே இரண்டு முறை இவங்ககிட்ட பல்பு வாங்கிட்டேன்.......ஹையோ சாமி என்னால முடியல ....இவங்க எல்லாம் அதையும் தாண்டி புனிதமானவர்கள் லிஸ்ட்ல வைக்கணும்னாஎன்றவள் சட்டென்று அவன் தவறாக நினைத்து விடுவானோ என அவன் முகத்தை பார்க்க .......இது உனக்கு புதுசு ரதிமா.......நான் கொஞ்சம் எதிர்பார்த்தது தான்......ஆனால் இந்த அளவிற்கு எதிர்பார்க்கவில்லை......எனக்கு சப்பாத்தி சாப்பிடும் ஆசையே போய்விட்டது......அவளை சாப்பிட அழைத்து வந்து இப்போது நான் பட்டினியாக படுக்கிறேன் என சோகமாக சொன்னவன்......இவளை திருமணம் செய்ததற்கு இப்போது ஒரு நேரம் சாப்பாடு கட் ....இன்னும் என்னனென நடக்க போகுதோ” என சொல்லிகொண்டே மாடிக்கு செல்ல





ரதியோ “ஆனா அண்ணா ரோஜா சோ கியூட்...எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு” என சிரித்து கொண்டே சொன்னாள்.





அவனும் சிரித்துகொண்டே “இன்னும் இருக்கு ரதி.......அவளுடன் பழகி பார்.......இந்த உலகமே உனக்கு புதுசா தெரியும்.........அழகான ராட்சசி அவள் என்றவன் ரதிம்மா நீ சாப்பிட்டு படு என ஒரு அண்ணனாக பாசத்துடன் சொன்னவன் ...அப்புறம் ரதி அவளுக்கு இரவு பால் வேண்டுமா என கேட்டுகோமா” என ரோஜாவின் மணாளனாக சொல்லிவிட்டு மாடிக்கு சென்றான்.





உன்னையும் என்னையும்
பார்த்து மலர்கள் எல்லாம்
பொறாமை பட்டது ................
நமது வாசத்தை விட
இவர்களின்
பாசம் அதிகம் என்று ......
அந்த மலருக்கு புரிந்தது
உன் மனதிற்கு புரியவில்லையா .....
 
Top