• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் - 2

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
அத்தியாயம் -2



வீட்டிற்குள் நுழையும் முன்பே வெளியில் நிற்கும் காரை வைத்து யார் வந்திருப்பார் என ஊகித்தவள் முகத்தில் சிந்தனையும் சந்தோசமும் கலந்த கலவையாக உள்ளே நுழைந்தவள் அங்கு அவளது மாமாவை பார்த்ததும் ஓடி சென்று அவன் அருகில் அமர்ந்தவள் “ஹே ராம் மாம்ஸ் எப்ப வந்திங்க என மகிழ்ச்சியுடன் கேட்டவள் சட்டென்று முகம் திருப்பி கொண்டு போங்க மாம்ஸ் நான் உங்க கூட பேச மாட்டேன்.....நீங்க போன முறை வந்தப்ப என்னை ஐஸ்க்ரீம் கடைக்கு கூட்டிட்டு போகிறேனு சொல்லிட்டு ஏமாத்திட்டு போய்ட்டிங்க” என சிறுபிள்ளை போல் முகத்தை தூக்கி வைத்து கொள்ள

“என்னது இது ......என் ரோஸ் இப்படி கோபபடறாங்க....எனக்கு பயமா இருக்கே என பயந்தவன் போல் சொன்னவன் பின்னர் அவள் அருகில் அமர்ந்து அவளது தலையை தடவிகொன்டே மாம்ஸ்க்கு கொஞ்சம் வேலை இருந்ததுடா ...அதான் உடனே போக வேண்டியதா போச்சு......என தகுமானம் சொல்லிகொண்டிருந்தான். பின்னர் சரி இன்னைக்கு அவசியம் கூட்டிட்டு போறேன்” என்றான்.

“உன்னாலதான் ராம் அவ கெட்டு போகிறாள் .......சொல்ற பேச்சை கேட்கிறது இல்லை.....எதிர்த்து பேசறா” என பார்வதி புகார் கடிதம் வாசிக்க

“என் பேத்தி வக்கீலுக்கு படிச்சிருக்கா ....அதுனால அப்படிதான் பேசுவா...அவன் தான படிக்க சொன்னான் அதான்” என மரகதம் பேத்திக்கு உதவி கரம் நீட்டினார். .

“அவன் படிக்கதான் சொன்னான் ...இப்படி பேசவுமா சொன்னான்” என தன் அண்ணன் மகனுக்கு சார்பாக பார்வதி பேச

இருவரும் வாதாடி கொண்டிருக்க இதில் சம்பந்தபட்டவளோ அதை கண்டு கொள்ளாமல் அவன் என்ன தீனி வாங்கிகொண்டு வந்திருக்கிறான் என அருகில் இருந்த பையில் துளவிகொண்டிருந்தாள்.

“சரி விடுங்க அத்தை.......ஆமாம் பாட்டி வக்கீல்னா கண்டிப்பா பேசணும்....அதும் உங்களை மாதிரி தெளிவா,சரியா யார்கிட்ட எப்படி பேசறதுன்னு பேசி கத்துகிறது நல்லது தான” என அவன் மரகதத்தை தூக்கி வைத்து பேச அவரின் முகத்திலோ பெருமை தாங்கவில்லை.



இது தான் ராம் ....எந்த இடத்தில் யாரிடம் எப்படி பேசவேண்டும் என தெரிந்து பேசுபவன்.அதனால்தான் சேகர்க்கு இவனை ரொம்ப பிடிக்கும்.





மாலை ரோஜா கிளம்பி இருக்க சரியான நேரத்திற்கு வந்தான் ராம் .இருவரும் கிளம்பி செல்ல சிறிது தூரம் சென்றதும் “சொல்லுங்க மாமஸ் என்ன பேசணும்” என மிகவும் அமைதியாக அழுத்தமாக கேட்டாள்.

சட்டென்று வண்டியை நிறுத்தியவன் அவளை கூர்ந்து பார்க்க

“சொல்லுங்க மாமா .........அப்பாதான உங்களை இங்க வர சொன்னார்” என்றாள்.

அவன் சிரித்து கொண்டே “ஆனாலும் நீ இவ்வளவு புத்திசாலியா இருக்க கூடாது ரோஜா என்றவன் அப்பா சொல்லலைனாலும் நான் உன்னை பார்க்க வரகூடாதா” என கேட்டான்.

“அதற்க்கு சொல்லவில்லை....ஆனால் இப்போது எலக்சன் நேரத்துல நீங்க சென்னைல இருந்து இங்க வந்து என்கூட இவ்ளோ நேரம் இருக்கிங்கனா அதான் சந்தேகமா இருக்கு “ என்றாள்.

சிறிது நேரம் அவளையே பார்த்து கொண்டிருந்தவன் பின்னர் “நேரிடையாகவே விஷயத்திற்கு வருகிறேன்.படிப்பு முடிஞ்சுடுச்சு ...அடுத்தது என்ன செய்யறதா இருக்க” என்றான்.

அவள் ஏதும் பேசாமல் காரின் கண்ணாடியை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் “நீ உன் முடிவை சொல்லு....இல்ல நாங்க எடுக்கிற முடிவை நீ ஒத்துக்கோ......இப்படி எதுவுமே சொல்லாம இருந்தா எப்படி ரோஜா “என அக்கரையாக கேட்டான்.

“எல்லாம் தெரிஞ்ச நீங்களுமா” என அவள் ஆரம்பிக்க

“ரோஜா என கோபமாக கத்தியவன்.......அதை பத்தி பேசாதேன்னு உன்கிட்ட பலமுறை சொல்லி இருக்கேன்” என்றான்.

அவனது கோபத்தில் தடுமாறியவள் “எனக்கே அடுத்தது என்ன செய்யறதுனு தெரியலை” என கூறினாள்..

“அப்போ நாங்க எடுக்கிற முடிவுக்கு நீ ஒத்துகொள்” என்றான் அவன்.

“நீங்க என்ன முடிவு எடுத்திருக்கிங்க” என கேட்டாள் ரோஜா .

“வீட்ல உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு சொல்றாங்க......அதுக்குதான் என்னை வர சொல்லிருக்காங்க” என்றான் ராம்.

“என்னது கல்யாணமா மாமாமமமா என அதிர்ந்தவள் இதற்கு நீங்க என்னை கொன்னிருக்கலாம் என வேகமாக சொன்னவள் .....ஏன் ராம் நான் இருக்கிறது அவங்களுக்கு அவ்ளோ பாரமாவா இருக்குது........அப்டினா சொல்லுங்க நான் எங்காவது ஆசிரமத்துக்கு போய்டறேன்......யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை....இப்பதான் படிப்பே முடிச்சிருகேன்” என பேசிகொண்டே போக

“சும்மா உளறாதே ரோஜா........பெண்ணை பெற்றவர்கள் பண்ணுகிறதை தான் உன் அப்பாவும் அம்மாவும் பண்ணுகிறார்கள் .....அதும் உன் அனுமதி கேட்டு” என கேள்வியோடு அவன் பார்க்க

“ஏன் ராம் மற்ற பெண்கள் மாதிரியா நான் என சொன்னவள் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக கொட்ட எனக்கு எல்லாமே வெறுத்திடுச்சு” என அவள் வேதனையுடன் சொல்ல கேட்டவன் மனதிலோ ரத்தம் கசிந்தது.

மலரை போன்ற மென்மையான பெண்ணை இப்படி முள்ளாக மாற்றியது யார் குற்றம் ....அறியாமையா...இல்லை விதியா.......இல்லை படித்திருந்தும் கோழையாக இருக்கும் இப் பாவையின் குற்றமா என அவன் மனம் வருந்தியவன் அதற்க்கான தீர்வை பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.

இது தான் ராம்........எந்த சூழ்நிலையிலும் மற்றவர்கள் இடத்தில் தன்னை பொருத்தி தீர்வு சொல்வான்.ராமின் முழு பெயர் ராம் சரண் ....ராம்சரண் IPS....காவல் துறை அதிகாரியின் மிடுக்குடன் சராசரி உயரத்திற்கும் சற்று அதிகமான உயரம் கொண்டவன்.பார்வதியின் அண்ணன் மகன்.தந்தை இல்லை.தாய் மட்டுமே ....சென்னை இருப்பிடம்......ரோஜாவிற்கு மாமா பையன் என்றாலும் சிறு வயதில் இருந்தே அவளுடனே வளர்ந்ததால் இருவருமே வீட்டிற்கு ஒரே பிள்ளைகள் என்பதால் அவளிடம் அதிக பாசம் கொண்டவன்.ரோஜாவும் ராமிடம் தான் அதிக உரிமை எடுத்து பழகுவாள்.மரகத்திர்க்கு பார்வதி குடும்பத்தாரை கண்டால் பிடிக்காது...... கொஞ்சம் வேகமாக பேசுவார்.அதும் ரோஜா வக்கீலுக்கு படிக்க வேண்டும் என்று ராம் சொன்னதும் முதலில் மறுத்தவர் மரகதம்தான். அவருக்கு அதில் விருப்பம் இல்லை....ஆனால் நடந்த சூழ்நிலைகளை விளக்கி ராம் தான் அதற்கு ஒத்து கொள்ள வைத்தான்.மேலும் ராம் எது சொன்னாலும் ரோஜா கேட்பாள்.அதே சமயத்தில் ரோஜாவிற்கு பிடிக்காததை ராம் சொல்லமாட்டன். வீட்டில் மட்டுமே மாம்ஸ் என்பாள்... பெயர் சொல்லி அழைப்பது மரகத்திற்கு பிடிக்காது.......வயது ,முறை இரண்டிற்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்பார்.வெளியில் வந்து விட்டால் ராம் அவளுக்கு செல்லம்.பெயர் சொல்லி தான் அழைப்பாள்.

சிறிது நேரம் யோசனையில் இருந்தவன் “முடிவா நீ என்ன சொல்ற ரோஜா” என்றான்.

“எனக்கு தெரியலை ராம் .....நான் ஆசைப்பட்டது முடிவு பண்ணியது எல்லாம் நான்கு வருடத்திற்கு முன்பே முடிந்து விட்டது.இப்போ என்ன பண்றதுன்னு தெரியலை.......ஆனால் நான் இங்கிருந்து வெளியே வரமாட்டேன்.....எனக்கு பயமா இருக்கு” என சொல்லும் போதே உடல் நடுங்க முகம் வெளிர காரின் சீட்டிலே ஒண்ட

உடனே அருகில் சென்று தன் தோளோடு அவளை அணைத்தவன் “சரிடா...சரிடா....நான் பார்த்துகிறேன்........இனி உன்னை யாரும் ஏதும் கேட்கமாட்டோம்” என சொல்லியபடியே வண்டியை கிளப்பினான்.

சீட்டில் சாய்ந்து அமர்ந்து அவள் கணைகளை மூடி இருக்க அதை பார்த்தவன் ஆனாலும் கடவுள் இவ்ளோ பெரிய தண்டனயை இப் பெண்ணிற்கு கொடுத்திருக்க வேண்டாம் என நினைத்தான்.

கார் நின்றது கூட தெரியாமல் அவள் தன்னை மறந்து இருக்க அவளை தட்டி எழுப்பியவன் “ஒரு சின்ன வேலை ரோஜா..... என் நண்பன் இங்க எனக்காக வெயிட் பண்றான் பத்து நிமிடம் தான் முடிச்சுட்டு வந்திடலாம்” என்றவன் வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கினான்.

சரி என்று கீழே இறங்கியவள் நிமிர்ந்து பார்க்க ஹோட்டல் பார்க் அவன்யூ என பெயர் இருக்க பார்த்ததும் கால்கள் நகர மறுக்க ,கைகள் சில்லிட ராமின் கைகளை அழுத்தி பிடித்தவள் “வேண்டாம் ராம்......நான் வரலை எனக்கு பயமா இருக்கு போய்டலாம்” என நடுங்கும் குரலில் சொல்ல

“என்ன ரோஜா இது...... நீ இன்னும் மாறலையா என கேட்டவன் அதெல்லாம் முடியாது வா” என அவளை இழுக்க

“வேண்டாம் ராம் ...நான் வரலை ...வா வீட்டுக்குபோய்டலாம்” என சொல்லிகொண்டே இருந்தவள் அங்கிருந்து ஒரு அடிகூட நகரவில்லை அவன் சொல்வது எதையும் காதில் வைத்து கொள்ளவில்லை. அவள் சொன்னதையே சொல்லிகொண்டிருந்தாள். கைகால்கள் நடுங்கின .......சிறிது நேரம் அவளிடம் போராடியவன் எல்லாரும் அவர்களை பார்ப்பதை கண்டு சரி நாம் போகவேண்டாம் காரில் ஏறு என சொல்லிவிட்டு வேகமாக காரை எடுத்தான்.

காரில் ஏறி அமர்ந்தவள் அவன் முகத்தையே பார்த்து கொண்டிருக்க அதில் இருந்த கோபம் அவளுக்கு புரிய “சாரி ராம்” என மெதுவாக சொல்ல

திரும்பி அவளை முறைத்தவன் ஏதோ சொல்ல வருமுன் அலைபேசி அழைக்க எடுத்து காதில் வைத்தவன் “சாரிடா .....அதுக்குள்ள கொஞ்ச வேலை அதான் திரும்பிட்டேன்” என சொல்லிகொண்டிருக்க அதற்கு எதிர்பக்கம் ஏதோ சொல்ல “மச்சான் புரிஞ்சுகோடா....நான் தான் சொல்றேன்ல...ஹோட்டல் வரை வந்தேன்....அதுக்குள்ள சின்ன பிரச்சனை என சொன்னவன் அதற்க்கு எதிர்புறம் இருந்து மீண்டும் ஏதோ பதில் அதை கேட்டதும் ராமின் முகம் சுருங்க சாரிடா” என அவன் வருந்தும் குரலில் மீண்டும் சொன்னான்.


 

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
இதை அருகில் அமர்ந்து பார்த்து கொண்டிருந்த ரோஜா தன்னால் தானே இப்படி என வருந்தியவள் சட்டென்று அவனிடம் இருந்து அலைபேசியை வாங்கியவள் “சார் எங்க ராம் மாமா வரேனுதான் சொன்னார்.நான் தான் அவரை வேண்டாம்னு தடுத்திடேன்.தயவு செய்து எனக்காக அவரை திட்டாதிங்க என்றவள் எதிர்புறத்தில் இருந்து எந்த சத்தமும் இல்லாமல் இருக்க ஹலோ ஹலோ” என இவள் அழைக்க

வண்டி ஓட்டிகொண்டிருக்கும்போது தன்னிடம் இருந்து அவள் அலைபேசியை பறித்ததும் சட்டென்று தடுமாறியவன் அவள் என்ன செய்வாள் என ஊகிக்கும் முன்பே ரோஜா பேசி முடித்திருந்தாள்..”என்ன மாமா ஏதும் பேச மாட்டேன்கிறாங்க” என கேட்டுகொண்டே அவனை பார்க்க

அவன் அவளை முறைத்து கொண்டிருந்தான்.”என்ன பழக்கம் ரோஜா இது.....படிச்ச பொண்ணு மாதிரியா நடந்துக்கிற.....யாரு என்னனு தெரியாம இப்படிதான் வாங்கி பேசுவியா....அதும் நீ ஒரு வக்கீல்” என ராம் திட்ட

உடனே “இல்ல....என்னாலதான நீங்க அவரை பார்க்க போக முடியலை அதான்...நான் தான தப்பு பண்ணேன் அதான் நானே மன்னிப்பு கேட்டேன் அவர்கிட்ட என்றவள் மறுபடியும் சாரி ராம் “ என்றாள்.

சரி அந்த போனை கொடு என வாங்கியவன் அது அனைக்கபடாமல் இருக்க அவன் காதில் வைக்க எதிர்புறத்தில் இருந்து ஏதோ சொல்ல உடனே சந்தோசத்துடன் தேங்க்ஸ் மச்சான் என்றான்.

அவன் முகத்தில் சந்தோசத்தை பார்த்தவள் “யார் மாம்ஸ் அவரு” என கேட்க

“என்னோட நண்பன் ரோஜா....அவனும் வக்கீல் தான்.பார்த்து ஆறு மாசம் ஆச்சு.ஒரு கேஸ் விஷியமா சேலம் வந்திருக்கான். நேத்து FB ல சொன்னான்....இன்னைக்கு இந்த ஹோட்டல்ல பார்க்கலாம்னு சொன்னான்........ பார்த்து பேசி ரொம்ப நாள் ஆச்சா .....நான் வரலைன உடனே ரொம்ப கோபபட்டான்.இப்போ கிளம்பிடுவானம்.ஆனா சென்னைலதான் இருக்கானாம் ....நான் நாளைக்கு ஊருக்கு போய் பார்த்துகிறேன்” என்றான்.

“ஹப்பா ஒரு பிரச்சனை முடிஞ்சுடுச்சு என்றவள் ராம் எனக்கு அது வேணும்” என கேட்க

அவள் கை நீட்டிய இடத்தில் பஞ்சுமிட்டாய் இருக்க அவன் சிரித்து கொண்டே “இன்னும் குழந்தையாவே இரு நீ” என சொல்லிவிட்டு தன் அத்தை மகள் ஆசைப்பட்டதை வாங்க சென்றான்.

அப்போது காரில் இருந்த அவனின் அலைபேசி மீண்டும் ஒலிக்க முதலில் அவள் எடுக்கவில்லை.மறுபடியும் அது ஒலிக்க அவள் முகத்தில் குறும்பு கூத்தாட அலைபேசியை எடுத்தவள் நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் தொடர்பு எல்லைக்கு அருகில் உள்ளதால் இனிமேல் அவரை தொடர்பு கொள்ள வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்” என சொல்லிவிட்டு அலைபேசியை அணைத்தவள் அதற்குள் ராம் பஞ்சுமிட்டாய் வாங்கி வர அதை சாப்பிடும் மும்மரத்தில் போன் வந்த விஷயத்தை சொல்ல மறந்து போனாள்.

பின்னர் இருவரும் வரும் வழயில் உள்ள அனைத்து நொறுக்கு தீனிகளையும் வாங்கி சாப்பிட்டபடி வீட்டிற்கு வந்தனர்.

வீட்டில் மூவரும் அவர்களை எதிர்பார்த்து காத்திருக்க உள்ளே நுழைந்தவள் “ஹே சபையர் மரகத்ததை தான் அவள் சந்தோசமாக இருக்கும்போது இப்படி அழைப்பாள்.நான் இன்னைக்கு பஞ்சுமிட்டாய் சாப்பிடேன் அப்புறம் கம்மங்கூல் குடிச்சேன் அப்புறம் என அவள் சாப்பிட்டதை கணக்கு போட” வெகு நாளைக்கு பிறகு அவள் முகத்தில் சந்தோசத்தை பார்த்த சேகர் நன்றியுடன் ராமை பார்க்க அவன் எல்லாம் நல்லதுக்கே என இமைகளை மூடி திறக்க பெற்றவரின் மனம் குளிர்ந்து போனது.

சிரித்து நேரம் அவள் வழவழவென பேசிகொண்டிருக்க “ரோஜா நேரமாச்சு போய் படு” என்றான் ராம்.

“என்ன மாம்ஸ் நீங்களே என்னைக்காவது ஒரு நாள் தான் வரீங்க.......கொஞ்ச நேரம் பேசலாம்னு பார்த்தா” என அவள் மறுபடியும் ஆரம்பிக்க

“அதெல்லாம் காலையில பேசிக்கலாம் ...இப்போ களைப்பா இருக்கும்....நானும் தூங்கபோறேன் ....நீயும் கிளம்பு மாமா ,அத்தை ,பாட்டி எல்லாரும் போய் படுங்க” என சொல்லிவிட்டு அவன் உள்ளே சென்றான்.

என்ன முடிவோடு வருகிறார்களோ என ஆவலோடு காத்திருந்த மூவரும் ராம் எழுந்து சென்றதும் என்ன நடந்திருக்கும் என தெரியாமல் முழித்திருக்க ரோஜாவும் உறங்க சென்றாள்.

பின்னர் சேகர் ராமின் அறைக்கு செல்ல அங்கு அவன் யோசனையாக அமர்ந்திருக்க அருகில் சென்று அமர்ந்தவர் “என்ன ராம் என்ன சொன்னாள் ரோஜா “என்றார்.அவர் பின்னால் பார்வதி மரகதம் இருவரும் வர அவர்களின் முகத்தை பார்த்தவன் அதில் தெரிந்த வேதனை அவனை வறுத்த “ஒன்னும் பிரச்சனை இல்லை மாமா....அவ தெளிவாகதான் இருக்கா ...நம்ம கொஞ்சம் காத்திருக்கணும் அவ்ளோதான்” என்றான்.

“இன்னும் எவ்ளோ நாளைக்கு ராம் .....மனசு விட்டு யார்கூடவும் பேசவதில்லை.......பயமா இருக்கு...மறுபடியும் பழையபடி ஆரம்பிச்சுடுவாளோனு” என பார்வதி கவலையாக சொல்ல

“என்ன அத்தை இது அவ அதை எல்லாம் மறந்திட்டா”என சொன்னவன் ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சி நினைவுக்கு வர அதற்கு பிறகு ஏதும் சொல்லாமல் அவன் அமைதியாக இருக்க

“ராம் உண்மைய சொல்லு...என்ன நடந்தது....அவ திருமணத்துக்கு சம்மதித்தாளா” என மரகதம் அழுத்தமாக கேட்க

அவரை நிமிர்ந்து பார்த்தவன் அவரின் கண்களை கண்டதும் “இல்லை பாட்டி” என்றவன் நடந்ததை சொன்னான்.

“அப்ப அவ பழசை இன்னும் மறக்கலை ....நம்மகிட்ட சந்தோசமா இருகிறமாதிரி நடிச்சுட்டு இருக்கா அப்படித்தான ராம்” என்றார் மரகதம்.

“ஆமாம் “என்று அவன் தலை ஆட்ட அவர் ஏதும் பேசாமல் யோசித்த படி அமர்ந்திருக்க ....

“நானும் சொல்லி பார்த்தேன் பாட்டி ....அவ எதுக்கும் ஒத்து வர மாட்டேன்கிறா.......சரி கொஞ்ச நாள் அவள் போக்குல விட்டு பார்ப்போம்னு கூட்டிட்டு வந்திட்டேன்” என்றான்.

சேகர் உடனே “இப்போ என்னம்மா பண்றது...........அவள் இன்னும் பழைய நினைப்பிலே இருந்தாள் அது எல்லாருக்கும் கஷ்டம் தான” என கவலையாக சொன்னான்.

அத்தை எப்படியாவது பேசி அவளை திருமணத்திற்கு சம்மதிக்க வச்சிடுங்க....என் பொண்ணை இப்படியே என்னால் ரொம்ப நாளைக்கு பார்த்திட்டு இருக்க முடியாது என அழுது கொண்டே பார்வதி சொல்ல

மரகதமோ ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தவர் சட்டென்று ராமை பார்த்து “ராம் நீ சொல்றதும் சரிதான்.இங்க காலேஜ் படிக்கும்போதும் எங்கும் வெளியே போகலை அவள். .காலேஜ் வீடு இரண்டு மட்டும் தான் அவள் உலகம்னு இருந்தாள்.அது ஏன்னு இப்பதான் தெரியுது. நீ எப்போ ஊருக்கு கிளம்பற” என கேட்டார்.

“நாளைக்கு காலையில கிளம்பறேன் பாட்டி” என்றான்.

“அப்போ நீ உன்கூட ரோஜாவை அழைத்து போ என சொல்லிவிட்டு எழுந்தவர் அவனை அழமாக ஒரு பார்வை பார்த்து கொண்டே உன்னை நம்பி என சொல்லும்போதே வார்த்தையில் அழுத்தம் கொடுத்தவர் அனுப்பிவைக்கிறேன்.அதற்கு மேல் அவளுக்கு என்ன செய்யணும்னு நீ நினைக்கிறியோ அதை செய்” என சொல்லிவிட்டு தனது அறையை நோக்கி நடந்தார்..

இதை சற்றும் எதிர்பார்க்காத சேகரும் பார்வதியும் அதிர்ந்து “அம்மா என்ன சொல்றிங்க...அவளை பத்தி தெரிஞ்சுமா இப்படி சொல்றிங்க.....அவ நம்மை விட்டு எப்படி இருப்பா” என சிறுகுழந்தை போல் சேகர் பதற ,பார்வதியோ தன் மாமியார் எது செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும் என உணர்ந்தபடியால் அதிர்ச்சி இருந்தாலும் ஏதும் பேசாமல் அமைதியாக இருக்க...திரும்பி பார்த்த மரகதம் “நாளைக்கு ஊருக்கு போக எல்லாம் ரெடி பண்ணுங்க” என சொல்லி விட்டு உறங்க சென்றார்.

“என்ன பார்வதி இது” என சேகர் கேட்க,

“காரணம் இல்லாம் அத்தை ஏதும் செய்யமாட்டாங்க......நீங்களும் நல்ல யோசிச்சு பாருங்க இதான் சரின்னு தோணும் என்றவள் எனக்கு வேலை இருக்கு.....அவ ஊருக்கு போறதுக்கு எல்லாம் ரெடி பண்ணவேண்டும்” என சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் உள்ளே சென்றாள்.

இங்கு ராம்...... பாட்டி சொன்னதும் யோசித்தவன் சட்டென்று மனதில் ஒரு எண்ணம் தோன்ற அதற்க்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டான்.

மறுநாள் மெதுவாக எழுந்து வெளியே வந்த ரோஜா தன் தந்தை வரவேற்பறையில் யோசனையுடன் அமர்ந்திருப்பதை பார்த்தவள் ...”என்னப்பா காலையிலே யோசனையா....கடைக்கு போக சோம்பேரித்தனமா இருந்தா சொல்லுங்க...நம்ம இரண்டு பேரும் வெளியே போலாமா ....நேத்து ராம்...இன்னைக்கு நீங்க ...ஜாலி...ஜாலி” என சொல்லிகொண்டே அருகில் வந்து அமர்ந்தாள்.

அவளது சிரிப்பை ரசித்தபடி தலையை தடவி கொடுத்தவர் “இல்லடா கடைக்கு போகணும் என்றவர் எலெக்ட்ரிக்கல் சாமான்கள் கடை வைத்திருந்தார் சேகர்....அந்த ஊரிலே அவர்களது தான் கொஞ்சம் பெரிய கடை ..... நம்ம இருந்தா தான் வேலை ஒழுங்கா நடக்கும் என்றவர் அப்புறம் ரோஜா அங்க போய் சேட்டை அதிகம் பண்ணகூடாது......உனக்கு எவ்வளவு நாள் பிடிக்குதோ அவ்வளவு நாள் இரு....பிடிகலையினா வந்திடு” என சொன்னார்.

“எங்கப்பா நான் போறேன்......நீங்க வந்தா தான் எங்காவது போகணும்” அவள் வருத்தமாக சொல்ல

அதற்குள் அங்கு வந்த மரகதம் “இன்னும் நீ கிளம்பலயா .......நேரமாச்சு போய் சீக்கிரம் குளிச்சுட்டு புறப்படு .....அப்புறம் சேகர்.... ராம் அப்படியே ஸ்டேஷன் வந்து விடுகிறேனு சொல்லிட்டான் ....ரோஜாவ நீ தான் கூட்டிட்டு போகணும்” என்றார்.

“ஓ ராம் மாம்ஸ் ஊருக்கு போறாரா ....அதுக்குதான் போகனுமா” என அவள் கேட்க

“ம்ம்ம் நீயும் தான் போற......எல்லாம் எடுத்து வச்சாச்சு உனக்கு....சீக்கிரம் கிளம்பி வா” என்றார் அவர்.

“என்னது...நானா ......எந்த ஊருக்கு” என அவள் கிண்டலாக கேட்க

எல்லாம் சென்னைக்குத்தான் ...ராம் கூட நீ போற...எல்லாம் ரெடிபண்ணியாச்சு...அப்பாவும் அதுக்குதான் காத்திட்டு இருக்கார் என பார்வதி சொல்லி கொண்டே அவள் அருகில் வர

நிஜமாவா என அவள் தந்தையை பார்க்க......

அவர் ஆம் என்று தலையாட்ட

முடியாது....முடியாது....நான் எங்கும் போகமாட்டேன் என கத்தியபடியே உள்ளே ஓடினாள் ரோஜா.



தாவி ஓடும் மானை போல

துள்ளி குதிக்கும் மீனை போல

இந்த இளமை பருவம்

இப்படியே இருக்க கூடாதா என

மனம் ஏங்கதான் செய்கிறது.

வாழ்க்கை என்பது நதிபோல

ஓடிக்கொண்டு இருந்தால் மட்டுமே

தேடியது கிடைக்கும்.

இவள் எதை தேடிக்கொண்டு ஓடுகிறாள்??????





உங்களை போல் நானும் கேள்வியுடன் .
 

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
557
122
43
Dindugal
ரோஜா பயப்படுற அளவுக்கு அப்படி என்ன நடந்திருக்கும்.?