• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Lashmi Ravi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
145
அத்தியாயம் -23



மோதலின் அடுத்த கட்டம் கூடலில் தான் தொடங்கும்.....ரோஜாவின் அருகாமை தேவாவின் ஆசைகளை தூண்டிவிட அவளின் வரவுக்காக காத்து கொண்டு இருந்தான்.அவளிடம் சொல்லவேண்டிய வார்த்தைகள் எல்லாம் பேசி சரிபார்த்து கொண்டு எதிர்பார்த்து இருந்தான்.....



ரோஜாவிற்கு தேவாவின் நேசமும் நெருக்கமும் பிடித்து இருந்தாலும் மனதிற்குள் ஏதோ ஒன்று குழப்பமாக இருக்க தலையில் கைவைத்தபடி சோபாவில் அமர்ந்திருந்தாள்.

ரோஜாவை அழைத்தும் பதில் இல்லாமல் போக பாலை எடுத்து கொண்டு வெளியே வந்த பார்வதி ரோஜா அமர்ந்திருந்த நிலை பார்த்து வேகமாக அவள் அருகில் சென்றவர்...”ரோஜா என்னம்மா பண்ணுது....தலை வலிக்குதா......அச்சோ நான் அப்பாவும் சொன்னேன்...அவளுக்கு பொங்கல் வைக்க தெரியாதுனு ..உங்க பாட்டி கேட்டாங்களா ...இப்போ பாரு” என அவரே ஒரு காரணத்தை சொல்லி கொண்டு புலம்ப

“அம்மா” என அழுத்தமாக சொன்னவள் “அப்படி எல்லாம் இல்லை” என்றாள்.

மெதுவாக அவள் தலையை வருடி கொடுத்தபடியே “ரோஜா நீ இப்போ என்ன மனசுக்குள்ளே நினச்சுட்டு இருக்கேனு எனக்கு தெரியாது.......ஆனா நீயும் மாப்பிள்ளையும் உள்ள சந்தோசமா வந்தத பார்த்திட்டு உன் அப்பாவும் பாட்டியும் மனநிறைவோட தூங்க போனாங்க .........அதுல மண் அள்ளி போற்றாதடி.......ஏற்கனவே ரொம்ப கஷ்டபட்டுடோம்......ஏதோ இப்பதான் கடவுள் கண்ணை திறந்து இருக்கிறார்......நான் கூட மாப்பிள்ளை எப்படி இருப்பாறோன்னு பயந்திட்டே இருந்தான்......ரொம்ப தங்கமான மனுசனா தெரியறார்.....நீ படிச்ச பொண்ணு இதுக்கு மேல நான் சொல்லி உனக்கு தெரியனம்னு கிடையாது.......நீயே புரிஞ்சு நடந்துக்கோ” என ஒரு தாயின் பரிதவிப்பை அவர் அவளுக்கு புரிய வைக்க

அவளோ வாடிய முகத்தோடு தாயை நிமிர்ந்து பார்க்க ...”ரோஜா என் தங்கமே என தன் நெஞ்சோடு அணைத்து கொண்டவர் உன்னை வருத்துவதற்காக இதை சொல்லவில்லை ரோஜா.......எங்கள் அனைவர்க்கும் நீ ஒருத்தி தான் உயிர்.......நீ நன்றாக சந்தோசமாக இருந்தாள் தான் நாங்கள் நிம்மதியாக இருக்க முடியும்.......உனது தாத்தா திதி அடுத்த வாரம் வருகிறது.......அவரோட ஆசை என்ன தெரியுமா? நீ எப்போதும் சந்தோசமா இருக்கனும் அப்படிங்கிறது தான்......அதை நீ நிறைவேத்த மாட்டியா” என சூழ்நிலை தெரியாமல் அவர் உணர்ச்சி வேகத்தில் அவளது தாத்தாவை நியாபக படுத்த

அவளோ அதிர்வோடு தாயை பார்த்தவள் தேதி காலண்டரை பார்க்க ...அப்போது தான் பார்வதிக்கு தான் சொன்னது உரைக்க .....ரோஜா ..”ரோஜா இங்க பாரு தாத்த எப்போதும் உன் கூட இருந்து உன்னை பார்த்துகிட்டே இருப்பார்...நீ கண்டதை நினைச்சு குழப்பிக்காத “ என அவளை பார்வதி சமாதனபடுத்த தாயின் மடியில் படுத்தவள் குலுங்கி அழுவ பார்வதியோ தான் ஒன்று நினைத்து சொல்ல இப்படி ஆகிவிட்டதே என மனதிற்குள் புலம்பியவாறு அவளை எப்படி சமாதனபடுத்துவது என் தெரியாமல் விழித்த படி அமர்ந்திருந்தார்.

வெகுநேரமாக பேச்சு சத்தம் கேட்டு வெளியே வந்த மரகதம் அங்கு ரோஜா பார்வதியின் மடியில் படுத்து அழுது கொண்டு இருப்பதை பார்த்தவர் தனது மருமகளை பார்க்க ..மருமகளோ மாமனாரின் போட்டவை பார்க்க மரகதத்திற்கு புரிந்து விட .....உடனே “என்ன பார்வதி எப்போ இருந்து பால் கொண்டுவானு சொல்லிட்டு இருக்கேன்... எனக்கு கொஞ்சம் தலை சுத்தர மாதிரி இருக்கு...இன்னும் என்ன பண்ற.......அந்த மாத்திரையை எடு” என அவர் அப்போது தான் வந்தவர் போல் அருகில் வர

பாட்டியின் சத்தத்தை கேட்டு எழுந்தவள் அவர் சொன்னதை கேட்டதும் தனது அழுகையை நிறுத்திவிட்டு வேகமாக பாட்டியின் அருகில் சென்றவள் ...”என்ன பாட்டி ...என்ன பண்ணுது” பதறியபடியே அவர் அருகில் சென்றாள் ரோஜா.....”ஒண்ணுமில்லை ரோஜா ...லேசான வலிதான்..... ஆமா நீ இன்னும் தூங்கபோகலையா” என கேட்க

“அவளோ இப்போ போறேன் பாட்டி” என தடுமாறி சொன்னவள் தாயின் முகத்தை பார்க்க

அவரோ தனது மாமியாருக்கு மாத்திரை எடுத்து கொண்டு இருக்க

அங்க மாப்பிளை காத்திருப்பார் கிளம்பு என பாட்டி அதட்ட பாலை எடுத்து கொண்டு வேகமாக அறைக்குள் நுழைந்தாள் ரோஜா.....

வெகுநேரம் காத்திருந்த தேவா அவள் உள்ளே நுழைந்ததும் பேசவேண்டிய வார்த்தைகளை மறந்து கோபம் முன்னாடி வந்துவிட...”மகராணி உள்ளே வர இவ்ளோ நேரமா” என உரிமையுடன் கேட்டான்.

ஏற்கனவே யோசனையில் இருந்த ரோஜாவோ அவனது முகத்தை கவனிக்காமல் அவனது கோபமான பேச்சு மட்டுமே அவளுக்கு கேட்க வேகமாக திரும்பி “நான் ஒன்னும் உங்க வீட்டு வேலைகாரி கிடையாது ...நேரத்திற்கு வருவதற்கு என சொல்லிவிட்டு இனி இப்படி அதிகாரம் பண்ற வேலை எல்லாம் வேண்டாம்” என சொல்லிவிட்டு வேகமாக தலையணை எடுத்து கீழே போட

“ஏய் இப்போ நான் என்ன சொல்லிட்டேனு நீ இப்படி பேசற......என்னை பத்தி உனக்கு தெரியும் தான” என அவன் ஆரம்பிக்க

“எனக்கு எப்படி தெரியும்...தெரிஞ்சிருந்தா இந்த திருமணமே நடந்து இருக்காதே....என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டு மிரட்டல் வேற” என அவனை திட்டியபடி அவள் படுத்தாள்.

நல்ல மூடில் இருந்த தேவா அவள் மீண்டும் பழைய பல்லவியை ஆரம்பித்ததும் அவனுக்கும் கோபம் வர “இப்போ என்னடி நடந்து போச்சு...நான் என்ன உன்னை ரேப்பா பண்ணிட்டேன் ..கல்யாணம் தான பண்ணிகிட்டேன்......எதோ நான் தப்பு பண்ணின மாதிரி பேசாற ....இப்போ உனக்கு என்னடி குறைச்சல் ...உன்னை பத்தி எல்லாம் தெரிஞ்சும் நான் உன்னை கல்யாணம் பண்ணது தான் தப்பா” என கோபத்தில் அவன் வார்த்தையை விட

படுத்து இருந்தவள் வேகமாக எழுந்து அவன் முன்னே கண்களில் கோபம் கொப்பளிக்க நரம்புகள் புடைக்க “இதான்...இதான்.....இதுக்குதான் சொன்னேன்......இப்படி சொல்லியே என்னை குத்தி காயபடுத்துவிங்க.......காசுக்காக எதையும் செய்யற ஆள் ஆச்சே நீங்க......உங்களுக்கு மனச பத்தி என்ன தெரியும்.....நான் கேட்டனா உங்களை என்னை திருமணம் செஞ்சுக்க சொல்லி......வாழ்நாள் முழுவதும் இப்டிதான் பேசுவிங்க...இதுக்குதான் சொன்னேன் எனக்கு கல்யானமே வேண்டாம்னு யாரும் கேட்கலை... எங்க தாத்தாவும் என்னை விட்டு போய் ....அவரோட எல்லாமே போய்டுச்சு...இனி எனக்கு ஏதும் இல்லை” என அவள் கதறி அழுக

காலையில் இருந்து பார்த்த ரோஜாவா என தேவா அதிர்ந்து போய் நின்றான்.....அந்த அளவிற்கு அவள் முகம் கோபத்தில் சிவந்திருக்க ஆத்திரமும் அழுகையும் போட்டிபோட்டுக்கொண்டு அவள் முகத்தில் தெரிய சீரும் பாம்பினை போல் நின்று கொண்டு இருந்தாள் ரோஜா.

அவளது நிலையை பார்த்தவன் அவளது ஆத்திரம் தீரும் வரை பேசட்டும் என நினைத்து அமைதியாக அமர்ந்திருந்தான்.....அவன் பேசியதும் சற்று அதிகப்படிதான் என்றாலும் அவனது மனநிலையில் அந்த வார்த்தை வந்துவிட அதை இவளோ பெரியதாக எடுத்து கொள்வாள் என அவன் நினைக்கவில்லை . அவள் என்ன நேரத்தில் என்ன மூடில் இருப்பாள் என்று தெரியாததால் வேறு எப்படி பேசுவது என்றும் அவனுக்கும் புரியவில்லை......அவள் பேசுவதை அவன் பார்த்து கொண்டு அமைதியாக அமர்ந்திருக்க அவனது அமைதி அவளது ஆத்திரத்தை சிறிது மட்டு படுத்த மூச்சு வாங்கி கொண்டு அவள் சற்று நிதானப்பட ...அவன் வேகமாக எழுந்து வெளியே சென்றான். ...

ரோஜாவோ அவன் சென்ற பின்பு கோபம் குறைந்து தான் பேசியதை நினைத்து பார்த்தவள் அவனை எந்த அளவிற்கு மட்டமாக பேசமுடியுமோ அந்த அளவிற்கு பேசி இருக்கோம் என அவளுக்கு புரிந்தது. அதனால் தான் கோபமாக வெளியே செல்கிறான்...இனி என்ன நடக்குமோ என பயத்துடன் அவள் அந்த இடத்திலே நின்றாள்.

மீண்டும் உள்ளே வந்த தேவா தண்ணீர் பாட்டிலை அவளுக்கு குடிக்க குடித்தான்.அவள் அதை வாங்காமல் அவனையே பார்க்க.....”அப்புறம் உன் அத்தனை சைட் அடிக்கலாம் ...இப்போ முதல்ல இந்த தண்ணீரை குடி” என்றவன் அருகில் இருக்கும் பாலை எடுத்து அவளுக்கு கொடுக்க ..அவன் சொன்னதும் மறுபேச்சு இல்லாமல் தண்ணீரை குடித்தவள் பால் கொடுத்தும் அதையும் குடித்துவிட்டாள்.....அவள் முடிக்கும் தருவாயில் “எல்லாமே குடிச்சிட்டியா.....எனக்கு கொஞ்சம் தருவேன்னு நினைச்சேன்” என அவன் ஏக்கத்தோடு கேட்க

அவள் இருந்த நிலை மறந்து அவனது ஏக்கம் அவளை ஏதோ செய்தது....”அச்சோ நான் எல்லாமே குடிச்சுட்டேன்...இருங்க எடுத்திட்டு வரேன்” என அவள் திரும்ப

“வேண்டாம்..வேண்டாம்...என் அம்லு குடிச்சா நான் குடிச்ச மாதிரி” என்றவன் அதை வாங்கி அருகில் வைத்துவிட்டு “இங்கே வா” என்றவன் ...அவள் வராமல் அப்படியே நிற்க அவள் கைபிடித்து இழுத்துவந்தவன் ..அவன் ஏதோ சொல்லபோகிறான் என அவனது முகம் பார்க்க ... அவனோ அவளுக்கு தலையணை எடுத்து வைத்தவன் “கொஞ்ச நேரம் கண்ணை மூடி தூங்கு...எல்லாம் சரியாகிடும்” என சொன்னான்.


“இல்லை அது வந்து என அவள் ஆரம்பிக்க ..ஸ்ஸ்ஸ் பேசக்கூடாது தூங்கு” என அவன் மெதுவாக அதே நேரத்தில் சற்று அழுத்தமாக சொல்ல பதில் ஏதும் சொல்லமுடியாமல் கண்களை மூடினாள் ரோஜா.காலையில் இருந்து சுற்றிய களைப்பு மேலும் மனதில் உள்ள ஆத்திரத்தை தேவாவிடம் கொட்டிய நிம்மதியில் அவளுக்கு படுத்த உடன் உறக்கம் வந்து விட்டது.
 

Lashmi Ravi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
145
நிம்மதியாக அவள் உறங்க அவளது வருகைக்காக ஆவலுடன் காத்திருந்த தேவா ரோஜாவின் செயலில் கலக்கமுற்றவன் .....இவள் எப்போது தெளிவாகி என்னுடன் வாழ்வது என மனதிற்குள் புலம்பியவன் காலையில் அவள் இருந்த மனநிலை சிறிது நேரத்திற்குள் என்னதான் நடந்திருந்தாலும் எப்படி தன் மீது இவ்வளவு குற்றசாட்டுகளை அவளால் சொல்ல முடிகிறது ...அப்படி என்றால் இன்னும் அவள் என்னை மனதார ஏற்க வில்லையா என நினைத்தவன் அந்த நினைப்பே அவனை கலவரபடுத்த அப்போ என் அம்லு எனக்கு சீக்கிரம் கிடைக்க மாட்டாளா என சிறுபிள்ளை போல் புலம்பியவன்

அப்போது தேவா நீ ஒரு பெரிய வக்கீல்......எத்தனை பேர் கண்களை பார்த்தே அவர்களை எடை போடுபவன்...உன்னால் இந்த சிறுபெண்ணின் மனதை மாற்ற முடியாதா என்ன என அவனது மனம் அவனை கேட்டது.

முடியும்...முடியும்......நான் நினைத்தால் எதையும் சாதித்து காட்டுவேன் என அவனுள் இருக்கும் இராகதேவன் முழித்து கொள்ள ......இது தான் இந்த நம்பிக்கை தான் எப்போதும் வேண்டும்...இப்போது யோசி...உனக்கு வழி கிடைக்கும் என அவன் மனம் அவனை உற்சாக படுத்த தேவாவின் முகத்தில் ஒரு தெளிவு பிறக்க சிறிது நேரம் யோசித்தவன் இனி இது தான் முடிவு என உறுதியுடன் நிம்மதியாக உறங்க சென்றான்.

மறுநாள் காலை முகத்தை உர்ர்ர் என்று வைத்து கொண்டு ரோஜா அமர்ந்திருக்க .....பார்வதியும் மரகதமும் பம்பரமாக சுற்றிக்கொண்டு இருந்தனர்....”ரோஜா லட்டு. ரவா உருண்டை எல்லாம் இந்த டின்ல இருக்கு....அப்புறம் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி எல்லாம் இந்த பைல வச்ருகேன்”..என சொல்லிகொண்டே அவளுக்கு தேவையானதை எடுத்து வைத்து கொண்டு இருந்தனர் இருவரும்....அவர்கள் வேலை செய்வதை பொறுமலுடன் பார்த்து கொண்டிருந்த ரோஜா “இந்த சொர்ணாக்கா என்னை அனுப்பரதிலே குறியா இருக்கா என்றவள் இந்த பாட்டியும் கூட சேர்ந்துகிட்டு இப்படி பண்ணுது...எம்ரால்டு இனி உனக்கு நான் லட்டு கொடுக்க மாட்டேன்...இனி என்னோட எதிரி நீ” என அவர்கள் அவளை ஊருக்கு கிளம்ப சொன்ன கோபத்தில் அவள் திட்டி கொண்டிருக்க கொண்டிருக்க அப்போது அங்கு வந்த தேவா “அத்தை எதுக்கு இதெல்லாம்....சென்னைல எல்லாமே கிடைக்கும்” என்றான். ....”இல்ல மாப்பிளை ரோஜா கொஞ்சம் தீனினா விரும்பி சாப்பிடுவா அதான்” என பார்வதி இழுக்க

“ஹஹஹா அதான் பார்த்தாலே தெரியுதே...நல்ல சாப்ட்டு சாப்ட்டு குல்பி ஐஸ் மாதிரி இருக்காலே ....இன்னும் இதெல்லாம் சாப்பிட்டா அப்புறம் அவளோதான் நான் என் பொண்டட்டியை என் வீட்டு வாசலை இடிச்சுதான் உள்ள கூட்டிட்டு போகணும்” என அவளை ஒரு பார்வை பார்த்துகொண்டே பார்வதியிடம் அவன் நக்கல் அடிக்க பார்வதியும் மரகதமும் சிரிக்க ரோஜாவோ அவனை பார்வையாலே எரித்து கொண்டு இருந்தாள்.

ஒருவழியாக எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு தேவா விடைபெற ..பாதி அழுகையும் பாதி கோபமுமாக ரோஜா அங்கிருந்து கிளம்பினாள்..போகும் வழியில் ரோஜாவும் தேவாவும் பேசிக்கொள்ள வில்லை......ஆனால் நேற்றைய நிகழ்வுகள் இருவருக்குள்ளும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது... ரோஜாவை பற்றிய ஒரு முடிவை தேவா எடுத்து இருந்தான்.ரோஜாவிற்கும் தேவாவின் மேல் சற்று நம்பிக்கை ஏற்பட்டு இருந்தது...ஆனாலும் அவளது பிடிவாதம் அதை வெளிபடுத்த தயங்கியது .

ரதியை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தவர்கள் அன்று அரசு விடுமுறை ஆனதால் உள்ளே நுழைந்ததும் ரதி தனது அறைக்கு செல்ல.... தேவா ரோஜாவிடம் திரும்பி “உனது அறையில் இருந்து அனைத்து பொருளையும் என்னோட அறைக்கு எடுத்திட்டு வா” என சொல்லிவிட்டு மேலே சென்றான்.

“அங்க எதுக்கு..நான் இங்கே தானே இருக்கேன்” என அவள் சொல்ல

திரும்பி அவளை முறைத்தவன்” நீ என் மனைவிதான....என் கூடதான இருக்கணும்”..... என கேட்க

அவள் அவனையே பார்க்க...அவனோ சொல்லிவிட்டு வேகமாக மேலே சென்றான்.

“பெரிய இவரு....இவரு சொன்னா நாங்க உடனே செஞ்சிடனுமா” என முனகினாலும் அவன் பேச்சிற்கு கட்டுப்பட்டு அவனது அறைக்கு தனது பொருட்களுடன் சென்றாள்.

அந்த அறையை வெளியே இருந்து தான் பார்த்து இருக்கிறாள்.இப்போது தான் முதன் முறையாக அவனது அறைக்குள் நுழைகிறாள்.உள்ளே நுழைந்ததும் அதன் பிரமாண்டத்தை பார்த்து மலைத்து போய்விட்டாள்.அதுவும் அவனது அறையில் அவர்களது திருமண புகைப்படம் மிக அழகாக பிரேம் செய்து வைக்க பட்டு இருந்தது.அதன் அருகில் சென்றவள் அதை தொட்டு பார்த்து...”ஹே ரோஜா சூப்பரா இருக்கடி என தனக்கு தானே சொல்லி கொண்டவள் நீங்களும் நல்ல இருக்கீங்க என்றவள் நாம் இரண்டு பேரும் சூப்பரா இருக்கோம்ல” என சந்தோசத்தில் சொல்லிகொண்டே அவன் முகத்தை பார்க்க அவனோ அதை கண்டு கொள்ளாமல் அவளுக்கு உடைகளை வைக்க கபோர்ட் தயார் பண்ணிக்கொண்டு இருந்தான்.

அவளது சந்தோசம் சட்டென்று வடிய ...”கல்லுளி மங்கன் ...வாய்யை திருந்து சொன்னா முத்தா உதிர்ந்திடும்” என மனதில் திட்டிகொண்டே அவன் அருகில் சென்று நிற்க அவனோ இங்கு பார் ரோஜா இனி உன் உடைகள் பொருட்களை இங்கு வைத்து கொள்.....அப்புறம் இங்கு ஒரு சிறிய அறை இருக்கு...எனது அலுவலக அறை...உனக்கு கணினி தேவை என்றால் நீ பயன்படுத்திகலாம்” என்றவன் பின்னர் பால்கனிக்கு அழைத்து சென்று காட்ட அங்கிருந்து பார்க்கும் போது அவனது வீட்டின் முழு கார்டன் அழகு கண்ணுக்கு விருந்தாக இருந்தது....அதை பார்த்ததும் மகிழ்ச்சியில் “ரொம்ப அழகா இருக்கு சார்” என அவள் சொல்லி முடிக்கும் முன்பே அவன் அவளை இழுத்து இதழோடு இதழ் இணைக்க ஒரு நிமிடம் தடுமாறியவள் அதற்குள் அவன் விலகி “நான் முன்பே சொல்லி இருக்கேன்.......இனி உன் வாயில் அத்தான் மட்டுமே வரவேண்டும் “என சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.சிறிது நேரம் அப்படியே நின்ற ரோஜா தேவாவிடம் ஏதோ ஒரு மாற்றம் இருபது அவளுக்கும் புரிந்தது.......பழைய தேவாவை திரும்ப பார்ப்பது போல் அவளுக்கு தோன்றியது.இது சரியில்லே என நினைத்தவள் இனி இவன் இருக்கும் இடத்தில் மிக கவனமாக இருக்கவேண்டும் என முடிவுடன் அவன் பின்னே நடந்தாள்.

பின்னர் சமையல் கட்டிற்கு சென்றவள் உதவி செய்கிறேன் பேர்வழி என்று ரதியிடம் பேசிகொண்டே நேரத்தை அங்கே ஓட்டினாள் ரோஜா......மதியம் அனைவரும் சாப்பிட்ட பின்னர் ரோஜா மெதுவாக தேவாவிடம் “நான் அத்தை வீட்டிற்கு போகணும்” என்றாள்.

“இப்போ தானே ஊரில் இருந்து வந்தோம் அதற்குள்ள அங்க எதுக்கு” என சொல்லிகொண்டே அவளை பார்த்து முறைக்க

“இல்லை...அம்மா கொஞ்சம் காய்கறி எல்லாம் கொடுத்து விட்டு இருக்காங்க ....அதான் கொண்டு போய் கொடுத்திட்டு வந்திடலாம்னு” என அவள் இழுக்க

“ராமிற்கு சொன்னால் அவனே வந்து வாங்கிட்டு போகிறான்” என அவன் சொல்ல

“எங்க மாமஸ் ஒன்னும் சும்மா இல்லை...அவருக்கு எவ்ளோ வேலை இருக்கு...அதுமில்லாம அவரு வந்து வெளிஊர்ல இருக்காரு...இப்போ என்ன எங்க அத்தை வீட்டிற்கு போறதுக்கு இப்படி கேள்வி கேட்கிறிங்க “என அவள் குரலை உயர்த்த “சரி..சரி நாமும் இன்னும் திருமணமாகி அங்கு போகவே இல்லை......எல்லாரும் போகலாம்” என்றான் தேவா .2

“ஹே தேங்க்ஸ் அத்தான்” என ரோஜா சந்தோசமாக சொல்ல ரதியோ வேகமாக “நான் வரலை அண்ணா ...நீங்கள் சென்று வாருங்கள்” என சொன்னாள்.

உடனே ரோஜா அவளிடம் திரும்பி”ஏன் ரதி நீயும் வாயேன்...எங்க அத்தை ரொமாலி ரொட்டி பன்னீர் பட்டர் மசாலா செய்வாங்க சூப்பரா இருக்கும்.....நான் போன் பண்ணி சொல்லிடறேன்...வந்து சாப்பிட்டு பாரு...அப்புறம் அந்த வீட்டை விட்டு வரவே மாட்ட” என அவள் சொல்லிகொண்டே செல்ல

“சரி போதும் ...ரதிம்மா வேலை செய்யற அம்மா இல்லை...நீ தனியாக இருக்க வேண்டாம் ...எல்லாரும் போகலாம்” என சொல்லிவிட்டு தேவா மாடிக்கு சென்றுவிட ரதியோ என்ன சொல்வது என தெரியாமல் முழித்து கொண்டு இருந்தாள்.

மெதுவாக ரோஜாவிடம் வந்தவள் “ஏன் ரோஜா அங்க அத்தை மட்டும் தானே இருப்பாங்க” என கேட்டாள்.

அவளோ சிரித்துகொன்டே “வீட்ல இருக்கிறதே இரண்டு பேர்தான் ரதி அத்தையும் ராமும் இருப்பாங்க” என சொல்ல

“என்னது ராம் இருப்பாரா என வேகமாக கேட்டவள் பின்னர் சமாளித்து இல்லை நீதான ராம் ஊருக்கு போய்ட்டாங்க சொன்ன” என கேட்டாள்.

“போயிருக்கலாம் ....போகாமலும் இருக்கலாம்......நான் அப்படி சொல்லலயினா உங்க அண்ணா என்னை கூட்டிட்டு போக மாட்டாருல அதான்” என அவள் கண்ணடித்து கொண்டே சொல்ல ரதிக்கு உள்ளுக்குள் வேர்த்து கொட்டியது....

அவள் அப்படியே நிற்பதை பார்த்த ரோஜா மனதிர்க்குள்ளே சிரித்துகொண்டு பாவம் மாம்ஸ் ரொம்ப மிரட்டிட்டாரோ என நினைத்தவள் பின்னர் ரதியின் கைகளை பிடித்து கொண்டு “ரதி அங்கு இருப்பவர்கள் எல்லாம் ரொம்ப நல்லவர்கள்......மேலும் நானும் உடன் இருக்கிறேன்...நீ சீக்கிரம் கிளம்பி வா” என அவளை அனுப்பிவிட்டு இவளும் கிளம்ப சென்றாள்.



தனது அறைக்குள் சென்ற ரதி ஒரு புறம் மனதில் சிறு பயம் இருந்தாலும் ஏனோ ஒரு மகிழ்ச்சியான உணர்வு தோன்ற அழகிய மஞ்சள் வண்ண நிறத்தில் ஒரு சுடிதார்அணிந்தவள் அதை கண்ணாடி முன்னாடி நின்று பார்த்தவள் ..”என்ன ரதி இது வரைக்கும் இப்படி பண்ணியதே இல்லை ...இப்போது என்ன புதிதாக” என கண்ணாடியில் இருந்த உருவம் கேட்க

“இல்லை...இல்லை இந்த சுடிதார் இப்போது தான் போடுகிறேன் அதான்” என அவள் சமாதனம் சொல்ல

“பொய் சொல்லாதே...இதை நீ கல்லூரிக்கு அணிந்து சென்றபோது அனைவரும் நன்றாக இருக்கிறது என சொன்னதால் தான் இப்போது ராம் வீட்டிற்கு போகும்போது இதை அணிகிறாய்” என அந்த உருவம் சிரித்து கொண்டே சொல்ல

“அப்படி எல்லாம் இல்லை.......ஏதோ முன்னாடி இருந்தது அதனால் எடுத்து அணிந்தேன் வேண்டுமானால் மாற்றி விடுகிறேன்” என சொல்லிகொண்டே அவள் நிற்க

அதற்குள் “ரதி ரெடியா “என கேட்டுகொண்டே உள்ளே வந்த ரோஜா அவளை பார்த்ததும் அசந்து போய் நின்றாள்......”ரதி இந்த ட்ரெஸ்ல சூப்பரா இருக்கீங்க......இவ்ளோ அழகா நீங்க ...ஆஹா இன்னைக்கு மாம்ஸ் நிலைமை கொஞ்சம் கஷ்டம் தான் “என அவள் சொல்ல

“என்னது” என ரதி வேகமாக கேட்க

“ஹிஹிஹி இல்லை ரொம்ப அழகா இருக்கீங்கனு சொன்னேன் “என்றாள்..

“ரோஜா நான் வேண்டுமானால் வேறு உடை மாற்றிகொள்ளட்டுமா” என அவள் கேட்க

“அச்சோ நீ முதல்ல வா...அங்க உங்க அண்ணா வந்தாருனா அவ்ளோதான்” என சொல்லிகொண்டே அவளை பிடித்து இழுத்து வந்தாள் ரோஜா.

பின்னர் தேவாவும் கிளம்பி வர மூவரும் காவேரி அம்மா வீட்டிற்கு சென்றனர்.

முதலிலே ரோஜா போன் செய்துவிட்டதால் அவர்களை எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தார் காவேரி.அவர்கள் வந்ததும் சந்தோசத்துடன் வரவேற்றவர் ரோஜாவின் முகத்தை பார்த்ததும் மனதில் சிறு வருத்தம் வந்து போனாலும் அவரின் அனுபவம் அவருக்கு உதவ சிரித்து கொண்டே அவர்களை உள்ளே அழைத்து வந்தார். “அம்மா எங்க ராமை காணோம் என தேவா கேட்க அவன் வெளியே போய் இருக்கான் தேவா” என்றவர் “என்ன சாபிட்ரிங்க இருங்க டீ எடுத்திட்டு வரேன்” என சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.சுற்றிலும் பார்த்த ரதி ராம் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லாததால் மனம் ஒரு புறம் நிம்மதி அடைந்தாலும் சற்று ஏமாற்றமும் இருந்தது.

ரோஜா வேகமாக உள்ளே சென்ற “அத்தை ஏன் என்னை பார்க்க நீங்க வரவே இல்லை” என சண்டைபிடிக்க ...அவரோ “இல்லை ரோஜா கொஞ்ச நாள் உடம்பு சரியில்லை...ராமும் வெளியூர் சென்றுவிட்டான்...அதான் என்றவர் நீ எப்படி இருக்க...சந்தோசமா இருக்கியா” என அக்கறையுடன் விசாரித்தார்.

அவளோ “நான் நல்லா இருக்கேன் அத்தை......நீங்க எப்படி இருக்கீங்க...இப்ப எல்லாம் ராம் அதிகம் போன் பண்றதே இல்லை” என அவன் மேல் குற்றபத்திரிக்கை வாசிக்க

“எங்க ரோஜா அவன் வீட்ல இல்லை.....தேவா உன்கிட்ட நல்ல நடந்துகிறாரா” என அவர் கேட்கும்போது தேவா உள்ளே வந்துவிட “என்ன அம்மா உங்களையும் வந்து தொல்லை பண்றாளா” என அவன் சிரித்து கொண்டே கிண்டலாக கேட்க

“பாருங்க அத்தை இப்படிதான் என்னை ரொம்ப கிண்டல் பண்றார்...அப்புறம் என்னை திட்றார்...மிரட்ராறு” என அவள் விளையாட்டுத்தனமாக அவன் மேல் புகார் சொல்ல

காவேரியோ அதை உண்மை என நம்பி ...”இங்க பாரு தேவா நாங்க பொண்ணை எங்க கண்ணுக்குள்ள வச்சு வளர்த்தி இருக்கோம் ......அவங்க அப்பா எல்லாம் அவளை மிரட்னது கூட கிடையாது......நீ இந்த மாதிர் எல்லாம் அவகிட்ட நடந்துக்காத” என கொஞ்சம் கோபமாகவும் அதே சமயத்தில் அறிவுரையாகவும் அவர் சொல்ல தேவாவோ என்ன சொல்வது என தெரியாமல் முழித்தவன் “சரிங்கம்மா “என சொல்லிவிட்டு மீண்டும் வரவேற்பறைக்கு வந்து அமர்ந்து கொண்டான்.

“என்ன அத்தை நீங்க ...நான் சும்மா சொன்னேன் ...அதுக்கு போய் அவரை திட்டிட்டிங்க” என அவள் பதறி கேட்க

அவரோ “நீ தான ரோஜா சொன்ன அதான் கேட்டேன்......நீ எதுக்கும் பயப்படாத.....உன்னை ஏதாவது சொன்னாங்கனா என்கிட்டே வந்து சொல்லு” என அவர் அவளுக்கு தைரியம் சொல்ல அவளும் சரி என்று தலை ஆட்டினாள்.

பின்னர் டீ பலகாரங்களை எடுத்து கொண்டு அத்தையும் ரோஜாவும் வர தேவா ஏதும் பேசாமல் டிவியில் கவனத்தை செலுத்தினான்.

ரதியோ வீட்டை சுற்றி பார்க்க மிகவும் எளிமையாக அதே நேரத்தில் நேர்த்தியாக இருந்தது.சுற்றிலும் பார்த்தவள் காவல் சீருடையில் இருக்கும் ராம் சரணின் போட்டோவில் அவள் கணகள் அப்படியே நிற்க தேவாவும் ரோஜாவும் காவேரி அம்மாளிடம் ராமை பற்றி விசாரிக்க அவன் இப்போது வந்துவிடுவான் என்றவர் பின்னர் பொதுபடையாக பேசிக்கொண்டு இருந்தனர்.

சற்று நேரம் அதே பார்த்து கொண்டு இருந்தவள் அவனின் கண்கள் அவளிடம் ஏதோ சொல்வது போல் இருக்க .....அவள் அருகில் அவன் நெருங்கி வருவது போல் இருக்க அமர்ந்திருந்தவள் வேகமாக தடுமாறி எழுந்தாள்....

அதை பார்த்தது பேசிக்கொண்டு இருந்த காவேரி “என்னம்மா ...என்ன வேணும்” என கேட்க

அவளோ என்ன சொல்வது என தெரியாமல் “வீடு...வீடு ரொம்ப நல்ல இருக்கு ஆன்ட்டி’ என்றாள்.

அவர் உடனே சிரித்துகொன்டே” நீ வேண்டுமானால் வீட்டை எல்லாம் சுற்றி பார் ...ரோஜா நீ கூட போ” என சொல்ல

ரதியோ “வேண்டாம் வேண்டாம் ஆன்ட்டி ...நீங்க பேசிட்டு இருங்க ...நான் பார்த்துகிறேன்” என்றவள் மெதுவாக அங்கிருந்து நகர்ந்தாள்.

ராமின் நினவுகள் அவளை சுற்றி வட்டம் போட திரும்பிய பக்கம் எல்லாம் அவனது புகைப்படமும் இருக்க ரதியோ தயக்கம் ஒரு புறம் இருந்தாலும் மனதிற்குள் அவை எல்லாம் ரசித்து கொண்டே சென்றாள்.மாடிக்கு சென்றவள் அங்கு இரண்டு அறைகள் இருக்க ...மெதுவாக ஒரு அறையை திறந்து பார்த்தவள் அது சிறிதும் கலையாமல் அப்படியே இருக்க “ஓ இதான் உறவினர் தங்கும் அறையா” என சொல்லிகொண்டே உள்ளே சென்றவள் படுக்கையின் மேல்புற சுவற்றில் ராமின் போட்டவை பார்த்த பிறகே இது அவனின் அறை என்று அவளுக்கு புரிந்தது..

அய்யோ அவரோட அறைக்கு வந்துவிட்டமோ என மனதில் நினைத்தவள் உடனே திரும்ப ஆனால் மனமோ “அவன் தான் இல்லைலே ..பின் ஏன் ஓடுகிறாய் என சொல்ல ...அதான நான் என்ன திருட்டுதனமாகவா வந்தேன்...அவர்கள் தான் பார்க்க சொன்னார்கள்” என சொல்லிகொண்டே அவள் சுற்றிலும் பார்க்க மிகவும் நேர்த்தியாக அடுக்கி வைக்கபட்டிருந்த உடைகள் மற்றும் சுவற்றிள் இருந்த விவேகானந்தரின் வாசகம் நிறைந்த படங்கள் மற்றும் பால்கனியில் வைத்திருந்த அழகான ரோஜா செடிகள் யாவும் அவளது மனதை கவர ...”பரவாயில்லை ரசனைமிக்க ஆள் தான் “ என சொல்லிகொண்டே திரும்ப

“அதனால் தான் உன்னை என் வாழ்க்கை துணையாய் தேர்ந்தெடுத்தேன் முல்லை மலர் “ என குரல் அருகில் கேட்க அப்படியே நின்றவள் அங்கும் மயக்கும் புன்னகையுடன் ராம் நின்று கொண்டு இருந்தான்.

அவனை பார்த்ததும் “அது வந்து இல்லை...நான் உங்க அறை...தெரியாம “என அவள் உளற

“ம்ம்ம் அப்புறம்” என சிரித்து கொண்டே அவன் அருகில் வர

அவளுக்கு பயத்தில் வேர்த்து கொட்ட ...”இங்க பாருங்க இது சரியில்லை...நான் உங்களே அன்னைக்கே எச்சரிக்கை பண்ணிருக்கேன் ...கிட்ட வராதிங்க” என அவள் சொல்லிகொண்டே பின்னால் சென்றவள் “நீங்க எப்போ வந்தீங்க ...நாங்க வந்த போது நீங்கள் இல்லை” என கேட்டுகொண்டே பால்கனிக்கு சென்று மற்றவர்கள் பார்க்கும் வண்ணம் நின்று கொண்டு “ஹப்பா” என பெருமூச்சு விட

வேகமாக ஒரு கை உள்ளே இழுக்க அவள் உணரும் முன்னே அவன் அணைப்பில் இருந்தவள் அவனை விட்டு விலகுவதற்கு திமிர ....”ஹே முல்லை மலர் கொஞ்சம் சும்மா இருடி......இப்போ எதுக்கு வெளியே போன நீ..... பேசாம இங்கே நில்லு நான் உன்னை ஒன்னும் பண்ணமாட்டேன்” என்றவன் அவளை அங்கு இருக்கும் நாற்காலியில் அமரவைத்துவிட்டு தானும் கட்டிலில் அமர்ந்தான்.

அவன் அவளை மேல் இருந்து கீழாக ரசனையோடு பார்த்து கொண்டு இருக்க

அவளோ அவன் கண்களை பார்க்க முடியாமல் தலை குனிந்து நின்றாள்.

“நான் எதிர்பார்க்கவே இல்லை ...என மனம் கவர்ந்தவள் இப்போது எனக்கு எதிரில் எனது அறையில் அதுவும் எனது படுக்கையில்” என அவன் சொல்லும்போதே அவள் வேகமாக எழுந்துவிட

ஹே என அவன் கையை பிடித்ததும் அவள் திரும்பி அவனை முறைக்க அதில் தெரிந்த அனலில் அவன் அவளை விட்டு சற்று பின்னால் செல்ல “நீங்க ஒரு பொறுப்புள்ள பதவில இருக்கிற ஆபிசர் ....நீங்க இப்படி நடந்துகிறது உங்களுக்கு அசிங்கமா இல்லை......அப்புறம் இப்போது அண்ணாவின் நெருங்கிய உறவினர் நீங்க......வேண்டாம் இது....நான் ஏதாவது சொல்லி அது எனது அண்ணனின் மகிழ்ச்சியை குலைத்துவிட்டால் என்னால் தாங்கி கொள்ள முடியாது” என சொன்னவள் வேகமாக அங்கிருந்து நகர

அவளின் குறுக்கே சென்று நின்றவன் அவள் முகத்தை பார்த்துகொண்டே “ரதி தேவி உங்களுக்கு என்னை பார்த்தால் எப்படி தெரிகிறது...எதோ ரோடு சைடு ரோமியோ போல் தெரிகிறதா......நான் உங்களிடம் இந்த அளவு நெருங்குகிறேன் என்றால் என்னுடைய காதலின் ஆழம் உங்களுக்கு புரியலையா என கேட்டவன் இது இப்போது ஆரம்பித்த உணர்வு அல்ல...எட்டு வருடங்களுக்கு முன்பே என்னுள் பதிந்த என் தேவதை நீ.......எனது வாழக்கையில் திருமணம் ஒன்று நடந்தால் அது உன்னோடு மட்டும் தான் என அவன் அழுத்தமாக சொன்னவன் ..கண்டிப்பாக உன்னை திருமணம் செய்து கொள்வேன்” என்றான்.

அவன் சொல்வதை கேட்டு அவள் முழித்து கொண்டு நிற்க ....அவளது தோற்றம் அவனுக்கு சிரிப்பை கொடுக்க அவள் அருகில் வந்தவன் “என்ன டாக்டர் அப்படியே அதிர்ச்சி ஆகிட்டிங்க......உங்களுக்கு நியாபகம் இருக்கா...அப்போது நீங்க பதினொன்றாம் வகுப்பு படிச்சுட்டு இருந்தீங்க.....முதல் முறை ஸ்கூட்டி ஓட்டி ஒருத்தன் மேல இடிச்சிங்கலே” என அவன் சொல்ல

“ஆமா...ஆமா ...அதற்கு பிறகு நான் வண்டியே எடுக்கலை என அவள் வேகமாக சொன்னவள் ஆமா அது எப்படி உங்களுக்கு தெரியும்” என சந்தேகமாக கேட்க

“ம்ம்ம் வந்து இடிச்சதே என் மேலதான்” என்றவன் அன்று நடந்ததை சொல்ல ரதி கணகளில் ஒரு மின்னல் வந்து செல்ல ஆனால் இதை சற்று எதிர்பார்காத்தால் அதிர்ச்சியுடன் கேட்டு கொண்டு இருந்தவள் ....அப்போதில் இருந்தே இவன் என்னை நேசிக்கிரானா என்றே உணர்வே அவளுக்கு மகிழ்ச்சியை கொடுக்க ......முகம் முழுவதும் சந்தோசத்தில் விகாசிக்க அவனை பார்த்தவள் சட்டென்று “ஆனால் எனக்கு உங்கள் முகம் சரியாக நியாபகம் இல்லே” என கவலையுடன் சொன்னாள்.

“எப்படி இருக்கும்...நீதான் என்னை சரியாக பார்க்கவே இல்லே...அதற்குள் உன் தோழிதான் உன்னை இழுத்து சென்றுவிட்டாள் என்றவன் இங்கே பார் முல்லை மலர் இப்போது தான் ரோஜா தேவா திருமணம் முடிந்து இருக்கிறது...இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திரு ...நான் வீட்டில் பேசி நமது திருமணதிற்கு எற்பாடு செய்கிறேன்” என்றான்.

அவளோ “என்னது திருமணமா” என அதிர

“ஏன் வேண்டாமா எனக்கும் ஒன்னும் பிரச்சனை இல்லை......கல்யாணம் பண்ணாமலே பிள்ளைகுட்டி பெத்துக்கலாம்” என அவன் சிரித்து கொண்டே சொல்ல

அவள் முகம் மாற வேகமாக “இது ஒத்து வராது...நீங்க உங்க முடிவை மத்திக்கிங்க” என சொல்லிவிட்டு கீழே சென்றுவிடஅவனோ அதிர்ந்து அப்படியே சிலையாக நின்றான்.

கீழே வந்தவள் வேகமாக தேவாவின் அருகில் சென்று அமர அதற்குள் காவேரி “டிபன் ரெடி என்றவர் எங்க ராம் வந்திட்டு குளிச்சுட்டு வரேன் சொல்லிட்டு மேலே போனான் இன்னும் காணோம்” என கேட்க

ரோஜாவோ “அதான் அத்தை தூங்கிட்டாரோ என்னவோ நான் போய் பார்க்கிறேன்” என சொல்லிவிட்டு மாடிக்கு சென்றாள்





உன்னோடு பேச ஒரு நிமிடம்
கிடைத்தால் போதும் .......
கண்ணோடு இருக்கும் கண்ணீர்
மட்டும் அல்ல ...!
என்னோடு இருக்கும் கவலைகளும்
மறைந்து போகுதே
கனவிலே வந்து என்னை

அணுஅணுவாக சிதைத்தவள் நீ

நினைவிலே அருகில் இருந்தும்

நெருப்பாய் கொதிக்கிறாயே!

பார்க்கலாம் பெண்ணே

என்காதலின் வேகத்திற்கு

முன்னாள் உனது

இந்த பொய் கோபம்

எத்தனை நாள் என்று

நானும் பார்க்கிறேன்!!!!!!!!!!! ...
 
Top