• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் - 24

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
அத்தியாயம்-24



தனது காதல் தேவதையை பார்த்தவுடன் மனம் மகிழ்ச்சி கொள்ள தன் மனதில் உள்ளதை அவளிடம் சொல்ல இதை விட நல்ல தருணம் கிடைக்காது என நினைத்தவன் ...தனது காதலின் ஆழத்தை வார்த்தையால் வரைபடுத்தி அவளிடம் சொல்ல அவளோ அதற்கு மாறாக இது ஒத்துவராது என ஒரே சொல்லில் முடித்து சென்றதும் ராம் அசைவற்று நின்றான். நான் ஏதாவது தவறாக சொல்லிவிட்டனோ என யோசித்து பார்த்தவன் அப்படி ஏதும் இல்லையே ...திருமணம் செய்து கொள்கிறேன் என்று தானே சொன்னேன் அதற்கு ஏன் இவள் இப்படி பதில் சொல்லிவிட்டு போகிறாள் என அவன் குழம்பி கொண்டிருந்தான்.

அறைக்குள் வந்த ரோஜா அவன் சுவற்றை வெறித்து கொண்டு இருப்பதை பார்த்து ....”மாம்ஸ் என்னது இது ...நீயுட்டன் ஆப்பில் மரத்தில இருந்து புவிஈர்ப்பு விசையை கண்டு பிடிச்ச மாதிரி மாதிரி நீ சுவற்றை பார்த்து எதாவது கண்டு பிடிக்கிரிங்களா.......அதேவே பார்த்திட்டு இருக்கீங்க ” என கிண்டலாக சொல்லிகொண்டே அருகில் வந்தாள்.

ரோஜாவின் பேச்சில் சுயநினைவிற்கு வந்தவன் ...”ம்ம்ம் என்ன ரோஜா “என அவன் அவளிடம் திரும்ப

அவனது முகசுருக்கம் அவளுக்கு ஏதோ உணர்த்த கிண்டலை கைவிட்டு “என்ன ராம்...என்ன பிரச்சனை...ரதிகிட்ட பேசினிங்களா” என்றாள்.

“ஆம்” என்று அவன் தலை ஆட்ட

“ அவள் என்ன சொன்னாள்” என்றாள்.

அவள் சொன்னதை அவன் சொல்ல ..”ஏன் மாம்ஸ் உங்களுக்கு அறிவு இருக்கா....அவளை இப்போது தான் பார்த்து இருக்கீங்க...உடனே உன்னை திருமணம் பண்ணிக்கிறேனு சொன்னா எந்த பொண்ணா இருந்தாலும் கண்டிப்பா அதிர்ச்சி அடைவா.......படிச்சு இருந்தும் ஏன் இப்படி நடந்துகிரிங்க....அப்போ உங்களுக்கும் தேவாவுக்கும் என்ன வித்தியாசம் .....அவரும் இதே தான் செஞ்சாரு......நீங்க நினைக்கிறத உடனே நடத்திடனும்னு ஆசபட்ரிங்க...அதே அந்த பொண்ணு மனசுல என்ன இருக்குதுன்னு கொஞ்சமாவது நினச்சு பார்க்கிறீங்களா” என வேகமாக சொன்னவள் அவன் முகம் சுருங்கியதை கண்ட உடன் “அவசரபடாதிங்க மாம்ஸ்...கொஞ்சம் பொறுத்து இருங்க......நீங்க வேணா மனசுக்குள்ள எட்டு வருசமா அவளை நேசிச்சு இருந்திருக்கலாம்...ஆனா அவளுக்கு அது இப்பதானே தெரியும்.......கொஞ்சம் பொறுமையா இருங்க....அவளுக்கும் யோசிக்க டைம் கொடுங்க “என அவனுக்கு பொறுமையாக எடுத்து கூறினாள்.

அவளையே சிறிது நேரம் பார்த்து கொண்டு இருந்தவன் “நீ சொல்றது எல்லாம் எனக்கு புரியுது ரோஜா......ஆனா இந்த மனசுக்குள்ள அவ மட்டுமே முழுசா நிரம்பி இருக்கா என சொல்லும்போதே அவனது காதலின் ஆழம் வார்த்தையில் வெளிவர அது அவளை நேரில் பார்த்திட்டா எனது கட்டுபாட்டிலே இருக்க மாட்டேன்குது......நான் என்ன பண்ணட்டும்.......அவளை காணாமல் நினைவுகளில் வாழ்ந்த நான் இப்போ அவளை கண்ணெதிரில் வைத்து கொண்டு என்னால் தள்ளி செல்ல முடியவில்லை ரோஜா என்னை அறியாமல் அவள் மீது அதிக உரிமை எடுத்து கொள்கிறேன்......அவளை பார்த்து விட்டாலே எனக்கு சொந்தமானவள் அப்படிங்கிற எண்ணம் தான் எனக்கு வருது...அதை மீறி என்னால ஏதும் யோசிக்க முடியலை” என மனதில் இருப்பதை மறைக்காமல் வெளியே சொன்னவன் நான் சொல்றது உனக்கு புரியுதா ரோஜா என மனதின் உணர்வுகளை தனது தோழி போல் இருக்கும் ரோஜாவிடம் கொட்டி தீர்த்தான் ராம்.

ரோஜாவோ அவனை வியப்போடு பார்த்து கொண்டு இருந்தவள் “ராம் என்னது இது...நான் புத்தகம், திரைபடத்தில் தான் பார்த்து இருக்கிறேன்...காதல் என்பது உயிர் கொல்லி நோய் அப்டின்னு சொல்வாங்க ....அதை இப்போ தான் நேர்ல பார்க்கிறேன் ........எனக்கு தெரிந்த ராம் வீரத்தில் அர்ஜுனன் ,கோபத்தில் ருத்ரன்,பாசத்தில் லட்சுமணன் ,அன்பில் தருமன் இப்படி பல அவதாரமா பார்த்து இருக்கேன்...ஆனால் காதலில் இது எந்த மாதிரி எனக்கு தெரியலை ராம் என்றவள் ஆனால் உன்னை நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு சொல்லும்போதே அவளது முகம் பெருமிதத்தில் மின்ன எங்கள் வீட்டு பெண் மிகவும் கொடுத்து வைத்தவள் மாம்ஸ் என மனநிறைவோடு சொன்னவள்....கண்டிப்பா என்னால் முடிந்த உதவி உங்களுக்கு செய்யறேன் மாம்ஸ்” என சொல்லிவிட்டு ஆனால் என நிறுத்தியவள் அவன் நிமிர்ந்து அவள் முகம் பார்த்ததும் உங்க கல்யாணத்துல எனக்கு பிடிச்ச ரவா உருண்டை இருக்கனும் சரியா” என சொல்லி சிரிக்க அதுவரை அவள் ஏதோ சொல்கிறாள் என ஆர்வமுடன் கேட்டவன் இதை கேட்டது பக்கென்று அவனும் சிரித்து விட்டான்.

அவளது தலையை மெதுவாக வருடி விட்டவன் “ரோஜா குட்டி தினமும் மகாபாரதம் டிவில பார்க்கிறியா..அர்ஜுன் தர்மனு டயலாக் சும்மா அள்ளிவிடற என சிரித்து கொண்டே சொன்னவன் பின்னர் உன்னை சின்ன பொண்ணுன்னு நினைச்சேன்....ஆனா நீ இப்போ பேசறத பார்த்தா எனக்கே ஆச்சரியாமா இருக்கு” என அவளது பேச்சில் வியந்து அவன் சொல்ல

“நானும் முதல்ல அப்படிதான் இருந்தேன்....அதான் நீங்க எல்லாம் சேர்ந்து என்னை மாத்திட்டிங்கலே....அதுனால எனக்கும் ஓரளவுக்கு புரியும் ராம்” என சொல்லிகொண்டே அவள் அவன் தோளில் சாய

சிறிது நேரம் அந்த இடத்தில் அமைதி நிலவ ...பின்னர் ராம் மெதுவாக “ரோஜா நான் இதுவரை இதை பற்றி ஏதும் பேசியது இல்லை....ஏன்னா பாட்டி எடுக்கும் எந்த முடிவும் தப்பாகாது என்பது எனக்கும் தெரியும்...உனக்கும் தெரியும்......ஆனால்” என அவன் நிறுத்த

“நடந்ததை நான் குறை சொல்லவில்லை ராம்......ஆனால் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் ....அதும் தேவா தான் மாப்பிள்ளை என்று என்னிடம் நீங்கள் சொல்லாதது எனக்கு வருத்தம் தான்” என்றாள்.

“தேவா ரொம்ப நல்லவன் ரோஜா ....என்ன சற்று கோபம் வரும் அவ்ளோதான்....இன்றும் நீதிமன்றத்தில் கேட்டு பார்.......அவன் பெயரை சொன்னாலே போதும் எவளவ்வு மரியாதை இருக்கும் தெரியுமா” என அவனை பற்றி புகழாரம் சூட்ட

“எனக்கும் அது தெரியும் ராம்....அது தான் எனக்கு பயமே.......அப்படிபட்டவருக்கு நான் ஒத்து வருவேனா.....நாளைக்கு எனது கடந்த கால நிகழ்ச்சியால் அவருக்கு ஏதாவது பிரச்சனை இல்லை அவமானம் வந்தால்” என சொல்லிகொண்டே சாய்ந்து இருந்தவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.

அவளை ஆழ்ந்து பார்த்தவன் அந்த முகத்தில் பயமா...இல்லை ரணத்தின் வலியா என அறியமுடியாதபடி அவள் முகம் வேதனையில் நிறைந்து இருக்க

“வேண்டாம் ரோஜா....நீ அதை மறந்து விடு....அது போன்ற நிகழ்வுகள் தினமும் நான் இங்கு பார்த்து கொண்டு இருக்கிறேன்......நீ தான் இதை பெரிது படுத்தி குழப்பிகொள்கிறாய்” என அவளுக்கு ஆறுதல் சொன்னான்.

“எது ராம்...என்னால் எனது தாத்தவின் உயிர் போனதே அதுவா......தலை நிமிர்ந்து வாழ்ந்த என் அப்பா சில காலம் வீட்டிற்குள்ளே அடைந்து கிடந்தாரே அதுவா...... எதை மறக்க சொல்கிறாய்........இப்போது தேவா அவருடைய பெயருக்கும் திறமைக்கும் முன்னாள் நான் எப்படி அவருக்கு பொருத்தமாக இருப்பேன் என்றவள்....... என் வம்சத்தின் முதல் பெண் வாரிசு ...இவளை சீரும் சிறப்புமாக வளர்த்தி ஊர் போற்றும் அளவிற்கு நல்ல நிலைக்கு கொண்டு வருவேன் என சொல்லிகொண்டிருந்த தாத்தா என்னால் தானே” என முடிக்கும் முன்பே அவள் கண்களில் கண்ணீரும் தேம்பலும் வர

“என்ன ரோஜா இது ......மறுபடியும் மறுபடியும் அதை நினைத்து வேதனையை அதிகபடுத்துவதால் என்ன பயன்......பிறந்த எல்லாரும் ஒரு நாள் இறப்பவர்கள் தான்......தாத்தாவின் இறப்பும் அது போல் தான் நீ போட்டு குழப்பிக்காத என அவளை சமாதனபடுத்தியவன் ......ரோஜா இங்கு பார்...என்னை பார் என்றவன் ...நீ தேவாவிடம் இதை பற்றி பேசினாயா” என கேட்டான்.

அவள் இல்லை என்று தலை ஆட்டியதும்

“நீ பேசு ரோஜா ...அவனிடம் நீ மனம் விட்டு பேசு...அவன் கண்டிப்பாக உன்னை புரிந்து கொள்ளுவான்” என சொல்ல

“இப்பவும் அவர் என் மேல் உயிராகத்தான் இருக்கார் ராம்....ஆனால் என்னால் தான்” என சொல்லி நிறுத்தியவள் ...”அச்சோ உங்கதையை கேட்க வந்து என் கதையை சொல்லிட்டு இருக்கேன்” என்றவள் .

“சரி மாம்ஸ் நீ இப்போ என்ன பண்ற..... இன்னைக்கு நீ ரதிகிட்ட பேசினதை நம்ம கொண்டாடுகிறோம் சரியா.......எங்க போலாம் பானிபூரி வாங்கிறதுக்கு ....இந்த தேவா இது எல்லாம் வாங்கி தர மாட்டேன்கிறான் .....அவன் வாங்கி தர நியூட்ரிசன் தீனி எனக்கு அது பிடிக்களை ராம்........நீ நம்ம அங்கண்ணன் பிரியாணி செண்டருக்கு என்னை கூட்டிட்டு போ...அங்க பிரியாணி சாப்பிட்டு எவ்ளோ நாள் ஆச்சு “ என சந்தடி சாக்கில் அவனது பர்ஸ்க்கு வேட்டு வைத்தாள் ரோஜா

“ஹஹஹா என சிரித்த ராம் அதான பார்த்தேன் என்னடா கருத்து கண்ணாயிரம் மாதிரி பேசறாளே...இது நாம் ரோஜாவானு கொஞ்சம் சந்தேகம் வந்திச்சு.......ஆனா இப்போ அது கிளியர் ஆகிடுச்சு ஆரம்பிச்சுட்டியா என சிரித்து கொண்டே சொன்னவன் அது எப்படி ரோஜா எந்த விஷயம் பேசினாலும் கடைசில உன்னக்கு தேவையானதை கொண்டு வந்து அதுக்கு முற்றுப்புள்ளி வச்சிட்ற என்றவன் இந்த வேலை எல்லாம் என்கிட்டே வேண்டாம் அம்மா உனக்காக எல்லாம் செஞ்சு வச்சிருக்காங்க சீக்கிரம் கீழே வா சாப்பிட போலாம்” என சொல்லியபடியே அவன் அங்கிருந்து கிளம்ப

உடனே “ஆமா ராம்...உன்னை சாப்பிடதான் கூட்டிட்டு போக வந்தேன்......நீ தான் மொக்க போட்டே நேரத்தை வீணாக்கிட்ட...அப்புறம் இந்த விஷயம் நமக்குள்ளே இருக்கட்டும்...தேவாகிட்ட போட்டு கொடுத்திடாத ...அப்புறம் என்னை எங்கயும் கூட்டிட்டு போகமாட்டாரு” என அவனிடம் சிணுங்கி கொண்டே சொல்ல

“அடிபாவி இவ்ளோ நேரம் என்னோட லவ் ஸ்டோரிய தலையை ஆட்டி ஆட்டி கேட்டுட்டு இப்போ மொக்கைனு சொல்றியா...... இரு தேவாகிட்ட சொல்றேன்...... உனக்கு பிரியாணியும் கிடையது “என சொல்லிவிட்டு அவன் முகத்தை திருப்பி கொண்டு செல்ல .....

“மாம்ஸ் என்ன இப்படி சொல்லிடிங்க ......... தெய்வீக காதல் மாம்ஸ் உன்னோடது...ஏன் அதையும் தாண்டி புனிதமானது நான் ஒத்துகிறேன்.......ஆனால் அதுக்காக பிரியாணில கை வச்சுடாதிங்க” என கத்திகொண்டே அவன் பின்னால் ஓடி வந்தாள் ரோஜா.

பின்னர் இருவரும் சிரித்தபடி இரங்கி வர ரதியோ தேவாவை ஒட்டி அமர்ந்தவள் வேறு யாரு முகத்தையும் நிமிர்ந்து பார்க்கவில்லை.சாப்பிடும்போதும் ராம் எப்போதும் போல் சகஜமாக பேச ஆனால் ரதி பதில் சொல்லாமல் அமைதியாக சாப்பிட தேவா தான் அவளுக்கு சேர்த்து பேசினான்.பின்னர் அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு மூவரும் கிளம்பினர்.

காரில் வரும்போது ரோஜா ரதியிடம் பேச்சு கொடுக்க அவளோ சரியாக பதில் சொல்லாமல் யோசனை உடனே வர ... தேவா “ஏன் ரதி அவர்கள் வீட்டிற்கு சென்றது உனக்கு பிடிக்கவில்லையா” என கேட்டான்.

“அய்யோ அப்படி எல்லாம் இல்லை அண்ணா என வேகமாக மறுத்தவள் நாளைக்கு ஒரு பரீட்சை இருக்கிறது ...அதை பற்றி நினைத்து கொண்டு வந்தேன்” என சமாளித்தாள்.


“அப்படியா சரி...சரி ...நாங்கள் தான் உன்னை வெளியே அழைத்து வந்து தொந்தரவு பண்ணிவிட்டோம் சாரிடா” என தேவா சொன்னவுடன் அதெல்லாம் இல்லை அண்ணா.....நான் படித்துவிட்டேன்”....என அவள் சிரித்து கொண்டே சமாளிக்க அதை பார்த்த ரோஜா மனதிற்குள் சிரித்துகொண்டாள்.
 

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
பின்னர் வீட்டிற்கு சென்றதும் வேகமாக உள்ளே சென்ற ரதி அப்படியே கட்டிலில் விழுந்தாள்..ராமின் நடவடிக்கைகள் அவள் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்து இருந்தது. ரோஜா தேவா திருமணத்தின் போதே அவள் ராமை கவனித்து கொண்டுதான் இருந்தாள்.....எப்போதும் புன்னகையும் சந்தோசமாக அவன் அந்த இடத்தை வலம்வர ஒரு IPS அதிகாரி என்று எந்த விதமான பந்தாவும் இல்லாமல் எப்படி இருக்கிறார் என அவனை நினைத்து வியந்து தான் அவனை பார்த்து கொண்டு இருந்தாள்..அவள் கவனித்த போது ராம் அவளை பார்க்கவில்லை.

அதே சமயத்தில் வீட்டில் முதன்முதலாக அவன் அவளுக்கு முத்தம் கொடுத்தபோது கோபத்திற்கு பதிலாக அதிர்ச்சி தான் அவளுக்கு இருந்தது.....அவள் கோபபட்டிருந்தால் நேராக தேவாவிடம் தான் போயிருப்பாள்.ஆனால் அவள் அப்படி செய்யவில்லை...இதை பலமுறை அவளே அவளுக்குள் கேள்விகேட்டு அதற்கு விடை தெரியாமல் அமைதியாகிவிட்டாள்.மீண்டும் ராம் அவளிடம் நெருங்க அப்போது ஒரு தற்காப்பு உணர்ச்சி தான் அவளிடம் இருந்ததே தவிர அவனை தேவாவிடம் சொல்லவோ இல்லை தவறாக நினைக்கவோ அவளால் முடியவில்லை.....அந்த சமயத்திலும் குழம்பியவள் இவர் ரோஜாவின் உறவினர்.....இவரை பற்றி ஏதாவது சொன்னால் பின்னர் ரோஜாவிற்கும் அண்ணாவிற்கும் ஏதாவது பிரச்சனை வந்தால் என்ன செய்வது என நினைத்தே அவள் அமைதி கொண்டதாக அவளுக்கு அவளே சமாதானபடுத்திகொண்டாள்.

இப்போது ராம் அவளை எட்டு வருடத்திற்கு முன்பு பார்த்த நிகழ்வை சொன்னபோது அது அவள் கண்முன் மங்கலாக வந்து செல்ல அவரா இவர் அவன் சொல்லும்போது மனதில் ஒரு துள்ளல் வந்ததும் பின்னர் அவனது அணைப்பு அவளுக்கு சுகம் கொடுத்தும் அதே நேரத்தில் அவன் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கேட்டதும் கொஞ்சம் பயமாக இருந்தாலும் அவள் அமைதியாக இருக்க ஆனால் கடைசியில் அவன் சொன்ன வார்த்தை கல்யாணம் ஆகாமல் குழந்தை பெற்றுகொண்டாலும் எனக்கு சரிதான் என அவன் சொன்னது அவளது மனதில் பூகம்பத்தை ஏற்படுத்த சட்டென்று அனைத்து சந்தோசங்களும் மறைந்து மனதில் கலக்கம் புக அவனிடம் கோபமாக பேசிவிட்டு வேகமாக வெளியே வந்துவிட்டாள்.

மின்விசிரியை போல் அவள் நினைவுகளும் சுற்ற அவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டிருக்க “ராம் நீங்கள் எதிர்பார்க்கும் தகுதி எனக்கு இருக்கிறதா......அய்யோ இதுவரை நான் என்னை பற்றி வருந்தியதே இல்லை...ஆனால் இப்போது வருந்துகிறேன்...நான் ஏன் இப்படி பிறந்தேன் ....வேண்டாம் ராம்.....நான் வேண்டாம் உங்களுக்கு...உங்களுக்கு ஏற்ற சந்தன மாலை நான் அல்ல” என வாய் விட்டு புலம்பியவள் அப்படியே தலையணையில் முகம் புதைத்து மனதில் இருக்கும் வேதனைகளை கண்ணீரால் கரைத்து கொண்டு இருந்தாள்.

இங்கு தேவாவின் அறையில் தூங்காமல் உலவிக்கொண்டு இருந்த ரோஜா லேசாக பசிக்க அங்கு ராமிடம் பேசிகொண்டே அவள் சரியாக சாப்பிடவில்லை... மேலும் எங்கு படுப்பது என தெரியாமல் முழித்தவள் சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள். ...அந்த நேரத்தில் ராம் சொன்ன வார்த்தைகள் நினைவிற்கு வர தேவாவிற்கு என்ன குறை ரோஜா...அவன் மிகவும் நல்லவன்...உன் மீது உயிரே வைத்து இருக்கிறான் என்ற வார்த்தை அவள் மனதில் ரீங்காரமிட்டு கொண்டே இருக்க....”ராம் சொல்ல வரது எனக்கும் புரியுது ....ஆனால் என்னாலதான்....நான் எப்படி தேவாவிற்கு பொருத்தமாக இருப்பேன்” என போட்டு குழப்பிகொண்டிருந்தாள். தேவாவோ அவனது அலுவலக அறையில் இருந்தான்.

சிறிது நேரம் கழித்து அவன் வெளியே வர அரவம் கேட்டதும் வேகமாக ஒரு புத்தகத்தை எடுத்து அவள் எதோ வெகுநேரம் படிப்பது போல் நடிக்க அவள் புத்தகம் படிப்பதை பார்த்து அவள் அருகில் வந்து நின்றவன் அவன் அருகாமை அவள் உணர்ந்தாலும் தெரியாதவள் போல் மும்மரமாக படித்து கொண்டிருக்க ...”ரோஜா” என அவன் அழைக்க அவளோ நிமிராமல் புத்தகத்திலே கவனம் இருப்பது போல் அமர்ந்திருக்க......” ரோஜா” என அவன் அழுத்தி அழைத்ததும் அவள் அப்போதுதான் கேட்டவள் போல் வேகமாக நிமிர்ந்து “ம்ம்ம் கூப்டிங்களா “என கேட்டாள்.

“அது இப்பதான் உனக்கு தெரிகிறதா” என அவன் அவளை கூர்ந்து பார்த்துகொண்டே கேட்டான்

அவளோ “நான் ஒரு அருமையான கதை படித்து கொண்டு இருந்தேன்...அதான் நீங்கள் வந்ததை கவனிக்கவில்லை” என அது தான் காரணம் போல் சொல்ல

“நீ புத்தகத்தை தலைகீழாக வைத்து கொண்டு படிப்பதை பார்த்த போதே நான் புரிந்து கொண்டேன்...மேலும் அது சட்டவிதிகள் தொடர்பான புத்தகம்...கதை எல்லாம் அதில் இருக்காது என்றவன் ஏன் இன்னும் தூங்கவில்லையா” என கேட்டான்.

அப்போது தான் அவள் அதை கவனித்தவள் “ஹிஹிஹிஹ்” என வலிந்து கொண்டே அப்படியா என பெயரை பார்க்க அதில் பிஸினெஸ் லா என்று இருக்க.......அதை பார்த்ததும் அவள் “அய்யோ இந்த புக்ஸா” என வேகமாக கீழே போட்டவள் தலை குனிந்து கொண்டே “தூக்கம் வரலை” என்றாள்.

யாருக்கு உனக்கு தூக்கம் வரலையா ...இங்க பாரு நிக்கும்போதே கண்ணு சொருகுது என அவன் சிரித்து கொண்டே சொன்னான்.

அவள் உடனே கண்ணை கஷ்டப்பட்டு உருட்டி முழித்து கொண்டு நிற்க

உடனே அவன் “இப்போ எதுக்கு உன் முட்டை கண்ணை இப்படி உருட்டிகிட்டு நிக்கிற ...... தூக்கம் வந்தால் தூங்க வேண்டியது தானே.....எதற்கு இந்த ஏமாற்றுவேலை என கேட்டவன் வா வந்து படு” என சொல்லிவிட்டு முன்னே சென்றான்.பின்னர் திரும்பி “ஆமா அத்தானுக்கு பால் இல்லயா” என கேட்க

அவளோ திரு திருவென முழித்து கொண்டே எந்த அத்தானுக்கு என முடிக்கும் முன்பே நாக்கை கடித்தவள் அவனை பார்க்க

.....”ம்ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும் ......போய் பால் எடுத்து வா” என அதிகாரமாக சொல்லிவிட்டு அவன் குளியல் அறைக்கு செல்ல அவளோ அவனை முறைத்து கொண்டே சமையல் அறைக்கு சென்றாள்..

“இப்பதான் சின்ன குழந்தை...பால் வேணுமா...இவ்ளோ நாள் யார் கொடுத்தா.....நானே பால் குடிக்கலை...இவருக்கு வேணுமா அதும் பணிவா கேட்டா பரவாயில்லை...ரொம்பதான் மிரட்றான்”.....என அவனை திட்டிகொண்டே பாலை காய்ச்சி எடுத்தவள் சர்க்கரைக்கு பதிலாக உப்பை எடுத்தவள் ...”ம்ம்ம் இது பழைய டெக்னிக் ...வேண்டாம் கண்டுபிடிச்சுடுவான்..வேற என்ன செய்யலாம்” என அவள் தீவிரமாக யோசித்து கொண்டிருக்க

“தெரியும் நீ இப்படி ஏதாவது செய்வேன்னு என சொல்லிகொண்டே அங்கு வந்த தேவா அவள் கையில் இருந்து உப்பு டப்பாவை வாங்கி கீழே வைத்தவன் ...அவளை ஒரு பார்வை பார்த்தபடி “உன்னை பத்தி எனக்கு தெரியாதா” என சொல்லிகொண்டே அவளுக்கு சேர்த்து பாலைஆற்றியவன் “இந்தா” என அவளுக்கும் கொடுத்துவிட்டு தானும் அருந்தினான். பின்னர் “ உங்க அத்தை வீட்டிலும் கொஞ்சம் தான் சாப்பிட்ட இரவு உனக்கு பசிக்கும் இல்லையா ...அதனால் தான் பால் கேட்டேன்” என சொல்ல அவன் வருகையை எதிர்பார்க்காத ரோஜா சற்று அதிர்ந்தாலும் தன் பசி அறிந்து அவன் நடந்து கொண்டது அவன் மேல் தனி மரியாதையை ஏற்படுத்தியது .

பின்னர் இருவரும் மேலே செல்ல அவன் என்ன சொல்வானோ அவள் தயங்கி நிற்க ....”படுத்துக்கோ ரோஜா...ஏசி உனக்கு எவ்வளவு வேணுமோ அந்த அளவுக்கு குறைச்சு வச்சுகோ என சொல்லிவிட்டு அவன் படுத்து கொள்ள அவளோ இதை சற்றும் எதிர்பார்க்காததால் ஒரு நிமிடம் திகைத்து நின்றவள் பின்னர் நிஜமாவே நல்லவனோ என மனதில் நினைத்தவாறே மறுபுறம் படுத்தாள்.

மறுநாள் காலை தேவா எழுந்து வாக்கிங் செல்ல ரோஜாவோ குறட்டைவிட்டு தூங்கி கொண்டு இருந்தாள்.வாக்கிங்கில் தேவா நாதனை பார்க்க “என்ன மச்சான் எப்போ ஊர்ல இருந்து வந்த” என கேட்டான்.

“நேத்து வந்தேண்டா என்றவன் சொல்லிவிட்டு உன்னிடம் முக்கியமான விஷயம் பேசணும்” என்றவன் அங்கு ஓரிடத்தில் அமர்ந்தவர்கள் ...”நாதன் நான் இல்லாதப்ப இந்த மாணிக்கம் கேசுல என்ன நடந்தது....என்னோட சாட்சி ஒன்னு கைமாறி அவங்ககிட்ட போய் இருக்கு...எப்படி இது சாத்தியம்” என கேட்டான்.ஒரு அரசியல்வாதி வழக்கில் தேவா ஆஜராகி இருந்தான்.அது சம்பந்தமாக அவன் சேகரித்து வைத்திருந்த செய்திகள் வெளியே கசிந்து அவனது எதிர்தரப்பிற்க்கு சாதகமாக அமைந்துவிட்டது.அதை பட்டாபி மெயில் அனுப்பி இருக்க அதை பார்த்ததும் பயங்கிற அதிர்ச்சி..ஆனாலும் உடனே வர முடியாததால் முடிந்த அளவு அவன் வேகமாக கிளம்பி வந்ததும் இதற்காக தான்.

.நாதனும் “ஆமாம் தேவா...எனக்கும் புரியலை ஒருவேளை இப்படி இருக்குமோ என அவன் மனதில் பட்டதை சொல்ல பின்னர் இருவரும் சிறுது நேரம் பேசிவிட்டு கிளம்ப அப்போது நாதன் “எப்படி இருக்காங்க ரோஜா” என சிரித்து கொண்டே கேட்டான்.

அதுவரை இறுக்கமாக இருந்த தேவா முகம் மாறி முகத்தில் சந்தோசம் வர “அவளுக்கு என்ன எப்போதும் போல எல்லாரயும் கலாய்ச்சுகிட்டு சூப்பரா இருக்கா “ என சொன்னான்.

அவனது சந்தோசம் நாதனையும் தொற்றிக்கொள்ள “அப்போ மச்சான் புல் ட்ரீட் உண்டு தான” என சிரித்து கொண்டே கேட்க ...

அவனோ லேசான புன்னகையுடன் “அது இல்லை...ஆனா சீக்கிரம் கொடுத்தறேன் என்றவன் அதற்கான முயற்சி தான் இப்போ நடந்துகிட்டு இருக்கு” என்றான்.

உடனே நாதன் “பார்த்து மச்சான் எதா இருந்தாலும் யோசித்து செய் என்றவன் ....காலையிலே காபிக்கே முறுக்கு கொடுத்த ஊருடா அது” என அவன் ஒரு மாதிரி குரலில் சொல்ல தேவாவிற்கு முகம் மாற ...”ஆனாலும் நண்பா நீ அன்னைக்கு செஞ்ச உதவி என பல்லை கடித்தவன் இப்போ நல்ல மூட்ல இருக்கேன்...நீ தப்பிச்சுட்ட” என வார்த்தையை மென்னு துப்ப

அவன் பேச ஆரம்பித்ததும் சற்று அவனிடம் இருந்து தள்ளி நடந்த நாதன் அவன் பேசி முடித்த பின்பே அருகில் வந்தான்..”சரி மச்சான் அதை விடு என அதில் இருந்து அவன் கவனத்தை மாற்றி இப்போ இந்த கேஸ் விஷயம் ரோஜா விஷயம் எல்லாம் சமாளிச்சுடுவியா......இல்லை கேஸ் வேணா நான் பார்த்துகட்டுமா” என ஒரு நல்ல நண்பனாகா அவனுக்கு உதவி செய்ய கேட்டான்.

“வேண்டாம் நாதன் நான் சமாளிச்சுடுவேன்.....ரோஜாவை பொறுத்தவரை எல்லாமே ஒரளவுக்கு சரிஆகிடுச்சு....அவ தேவை இல்லாம மனசில நிறைய விஷயங்களை போட்டு குழப்பிட்டு இருக்கா....அதுக்கு முக்கிய காரணம் அவங்க குடும்பம்.....மேலும் அவளுக்கு வெளியுலக தொடர்பு அதிகம் இல்லை......அதுநாள சின்ன விஷயங்களுக்கு கூட ரொம்ப யோசிக்கிறா......முதல்ல அவளை அந்த கூண்டுக்குள்ள இருந்து வெளியே கொண்டுவரணும்....அதுக்கான முயற்சி தான் இப்போ எடுத்திட்டு இருக்கேன்......அவளை பொறுத்தவரை பழைய இராகதேவன் தான் அவளுக்கு சரியா வரும்......இனி அவ என்னோட ஆபிஸ்க்கு அழைச்சிட்டு வரபோறேன்.....கொஞ்சம் கொஞ்சமா அவளை மாத்தனும் பார்க்கலாம் என்றவன் அந்த மாணிக்கம் கேஸ் நானே பார்த்துகிறேன் நாதன் என சொல்லிவிட்டு சரி நேரமாகிடுச்சு கிளம்பலாம்” என இருவரும் புறப்பட்டனர்.

வீட்டிற்கு வந்ததும் சமையல் அறையில் வேலை செய்யும் பெண் சமைத்து கொண்டிருக்க ரோஜாவோ அவளோடு வழவழவென பேசிக்கொண்டு இருந்தாள்.உள்ளே வந்த தேவா “ரோஜா டீ” என சொல்லிவிட்டு சோபாவில் அமர்ந்தான்.அவள் கொண்டு வர” நீ சாப்ட்டியா” என கேட்க அவள் ஓ என வேகமாக தலை ஆட்ட அவன் அவளையே பார்த்து கொண்டு இருக்க...”ஈஈஈஈஈ என பல்லை இளித்து காட்டியவள் பல்லு விளக்கிட்டேன்” போதுமா என சொல்ல அவன் வந்த சிரிப்பை அடக்கி கொண்டு “இங்கே வா” என அவளை அருகில் அழைத்தவன் “இனி இப்படி வேலை செய்யும் நபரிடம்எல்லா விஷயங்களையும் பேசிக்கொண்டு இருக்காதே.......வீட்டு விஷயங்கள் இது போன்ற நபர்கள் மூலம் தான் வெளியே செல்லும்....என்ன புரிகிறதா” என அவன் அழுத்தி சொல்ல அவள் புரிந்தது போல் தலைய ஆட்டினாள்.

பின்னர் “ஆமா ரதி எங்கே” என அவன் கேட்க

“இன்று ஏதோ பரீட்சை இருக்காம்...இப்பதான் கிளம்பி போனாள்” என சொல்லிவிட்டு அவள் உள்ளே செல்ல அவன் “சரி ரோஜா நீயும் சீக்கிரம் கிளம்பு....நாம் ஆபிஸ் போகணும்” என சொல்லிவிட்டு மாடி ஏறினான்.

அவன் சொன்னது புரியாமல் “என்ன சொன்னீங்க” என அவள் மறுபடியும் கேட்க

“நீயும் என்கூட ஆபிஸ் வர” என அவன் அழுத்தி சொல்ல

அவளோ சந்தோசமாக “நிஜமாவா சொல்றிங்க எனகேட்டவள் “ஹே...விடுதலை விடுதலை.....விடுதலை” என குதித்து கொண்டே அவனை இடித்து தள்ளிக்கொண்டு மாடியில் அவர்களின் அறைக்குள் சென்றவள் வேகமாக எல்லாம் எடுத்து கொண்டு குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

பின்னர் இருவரும் கிளம்பி அலுவலக வர ரோஜாவை பார்த்ததும் பட்டாபி சந்தோஷத்தில் “ஹே ரோஜா” என்றபடி அருகில் வந்தவன் தேவாவை பார்த்ததும் அமைதியாக பின்னே செல்ல

“ஹே பட்டாபி” என அவளும் உற்சாகமாக அவன் அருகில் தேவாவோ அவளை ஒரு பார்வை பார்த்தவாறே அவன் தனது அறைக்குள் சென்றுவிட்டான்.ரோஜாவோ அதை கண்டுகொள்ளாமல் அவன் அருகில் சென்றவள் “ஏன் பட்டாபி இத்தனை நாளா நீ என்னை பார்க்க வரலை” என அவனோடு சண்டை போட அவனோ” இல்லை ரோஜா என்றவன் சாரி மேடம் நீங்க இப்போ நம்ம சாரோட மனைவி” என அவன் மரியாதையுடன் பேச

அலுவலகத்தில் நுழைந்த உடன் மனதில் ஒரு உற்சாகம் பிறக்க அதுவும் பட்டாபியை பார்த்துடன் அது அதிகமாக பழைய ரோஜா மீண்டும் வர அவன் மேடம் என்றதும் முகம் சுருங்க “...இங்க பாரு பட்டாபி எனக்கு எப்பவும் அவரு பிதாமகன் தான் ......நான் எப்ப



வும் உன் தோழி ரோஜா தான்.... ஹே உனக்கு தெரியுமா” என அவன் அருகில் ரகசியம் சொல்வது போல் வந்தவள் “நம்ம வச்ச பேர் எல்லாம் அவருக்கும் தெரியும்” என கண்களை உருட்டி சொன்னாள்.

“அச்சோ என்ன ரோஜா இப்படி சொல்ற உன்னை திட்னாரா” என பட்டாபி மிரண்டு போய் கேட்க

“யாரு இந்த ராகுகாலம் என்ன திட்டுதா “என அவள் பழைய ரோஜாவாக பேச பட்டாபிக்கு சந்தோசம் தாங்க முடியாமல் “நீ மாறவே இல்ல ரோஜா அப்படியே இருக்க என சொன்னவன் இனிமேல் நீ தினமும் வருவியா” என கேட்டான்.

“தெரியலை பட்டாபி...இன்னைக்கு திடிர்னு கிளம்பு ஆபிஸ் போலாம்னு சொன்னார்....உடனே கிளம்பி வந்திட்டேன்....நாளைக்கு” என அவள் யோசிக்க

“அப்போ நீ வரமாட்டியா “என அவன் கவலையுடன் கேட்க

“ என்ன பட்டாபி நீ உன்னை மாதிரி ஒரு அம்மாஞ்சி எனக்கு இருக்கும்போது அத மிஸ் பண்ணுவனா ...கண்டிப்பா வரேன்......பிதாமகன்கிட்ட சண்டை போட்டாவது வந்திடறேன்” என அவள் சொன்ன பின்பே அவன் சிரித்து கொண்டே தனது இருக்கையில் அமர்ந்தான்.

பின்னர் அவள் தேவாவின் அறைக்குள் வேகமாக கதவை திறந்து உள்ளே செல்ல

“உள்ளே வரும்போது அனுமதி கேட்டு வரும் பழக்கம்” என அவன் கோபமாக ஆரம்பித்தவன் முடிக்காமல் நிறுத்த அன்று அவள் சொன்னது நினவில் வர அவளை நிமிர்ந்து பார்த்தான்.

அவளோ ஆஹா பிதாமகன் வேலைய ஆரம்பிச்சுட்டாரு என நினைத்தவள் “சாரி சார் ...நான் எங்கே அமர்வது” என கேட்டாள்.

அவனோ “இதற்கு முன்னாள் நீ எங்கே அமர்ந்து வேலை பார்த்தாயோ அங்கேதான் என அமர்த்தலாக சொன்னவன் இனி இதுபோன்ற விஷயங்களுக்காக என்னை தொந்தரவு செய்யவேண்டாம்”என்றவன் “தயவு செய்து பேசி மற்றவர்களையும் தொந்தரவு செய்யாதே” என சொல்லிவிட்டு அவன் அந்த பைலில் மூழ்கிவிட முனகிகொன்டே தனது இடத்தில் சென்று அமர்ந்தாள் ரோஜா....

இதற்க்கு முன்னாள் அவள் அவனிடம் ஜூனியராக வேலை செய்த கொண்டு இருந்தாள்.இப்போதோ அவனின் மனைவியாக இங்கு வருகிறாள்.அதனால் அவனது அறையில் அவளை இருக்க சொல்வானோ என்ற எண்ணத்தில் அவள் கேட்க அவன் சொன்ன பதிலும் சொன்னவிதமும் அவளுக்கு கோபத்தை ஏற்படுத்த திட்டிகொண்டே வந்து அமர்ந்தாள்.

அதற்குள் மணி வந்து பட்டாபியை அழைக்க உள்ளே சென்ற பட்டாபி வேர்த்து விறுவிறுத்து வெளியே வந்தான்.....முகம் எல்லாம் சுண்டி போய் இருக்க தனது இருக்கையில் தொப்பென்று அமர்ந்தான்.

ரோஜாவோ தன கணினியை சிறிது நேரம் பார்த்து கொண்டு இருந்தவள் “டேய் பட்டாபி” என சொல்லி கொண்டே நிமிர்ந்தவள் அவனது நிலையை கண்டு பதறி” என்னாச்சு பட்டாபி” என அவன் அருகில் சென்றாள்.

அதற்குள் அங்கு வந்த ஆபிஸ் பாய் மணி “ஏன் சார் ...உங்களுக்கு வக்கீல் சாரை பத்தி தெரியும் தான ...கொஞ்சம் பார்த்து பேசி இருக்கவேண்டாமா என்றவன் சார் ஏதாவது டீ கூடிக்கிரிங்களா...வெளிலே இருந்தே எனக்கே அதை கேட்டு ஒரு மாதிரி படபடப்பு இருக்கு...உள்ளே அத்தனை பேச்சு வாங்கின உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்...இருங்க நான் போய் டீ வாங்கிட்டு வரேன்” என சொல்லிவிட்டு அவன் செல்ல ரோஜாவோ “என்னாச்சு பாட்டாபி” என கேட்டு அவனை உலுக்கி கொண்டு இருந்தாள்.

“உன்கிட்ட பேசிட்டு போனேன்ல சார் என்னை ரொம்ப கோபமா திட்டிட்டார் ரோஜா” என சொல்லி முடிக்கும்முன்பே அவன் கண்களில் கண்ணீர் வர அவளோ தன்னிடம் பேசியதற்குதான் அவன் பட்டாபியை திட்டி இருக்கிறான் என எண்ணியவள்

“என்னது உன்னை திட்டினாரா......எதுக்கு திட்னார் ....அதும் என் கூட பேசினதுக்கு .....வேலை ஆட்களுக்கும் உனக்கும் வித்தியாசம் இல்லயா நீ இரு ...நான் அவரை நாலு வார்த்தை கேட்டுட்டு வரேன்” என அவன் சொல்லவந்ததை முழுதாக கேட்காமல் வேகமாக தேவாவின் அறைக்கு சென்றாள் ரோஜா.

அவன் முன் நின்றவள் “உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க......நான் உங்க பொண்டாட்டினா அது வீடு வரைக்கும் தான்...இங்க எல்லாருக்கும் ஒரே மரியாதை தான்......என்னை நீங்க ஒரு ஜூனியர் வக்கீல் மாதிரித்தான ட்ரீட் பண்ணிங்க...அப்புறம் பட்டாபிய மட்டும் எதுக்கு அப்படி திட்ரிங்க... இங்க வந்திட்டா பட்டாபி நானும் இரண்டு பேரும் ஒண்ணுதான்.........அவன் என்கிட்டே எப்படி வேண்டுமானாலும் பேசுவான் ......அதை கேட்க நீங்க யாரு......வேலையல குறை இருந்தா திட்டலாம்......ஆனால் என்கிட்டே பேசினதுக்காக அவனை ஏன் திட்னிங்க “ என அவள் அவனை பேசவிடாமல் கோபமாக பேசிகொண்டே செல்ல

தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தவன் அவள் புயல் போல் உள்ளே நுழைய என்ன என கேட்கும் முன் அவள் படபடவென பொரிய முதலில் அவள் என்ன பேசுகிறாள் என புரியாமல் முளித்தவன் பின்னர் பட்டாபியை பற்றி பேசியதும் அவனுக்கு கோபத்தில் கண்கள் சிவக்க.......”ஹே நிறுத்து முதல்ல...என்ன நடந்துன்னு தெரியாம இங்க வந்து கத்திகிட்டு இருக்க ...இது என்ன ஆபிஸா இல்லை சந்தகடையா...........உன்கிட்ட இப்பதான் சொன்னேன் அனுமதி கேட்டுட்டு உள்ளே வரணும்னு ...முதல் இந்த அறையை விட்டு வெளியே போ” என அவன் கத்திக்கொண்டு இருக்கும்போதே அங்கு வந்த பட்டாபி “அச்சோ ரோஜா என்ன பண்ற நீ” என அவள் கையை பிடித்து வெளியே இழுத்து வந்தான்.

“என்ன காரியம் பண்ற ரோஜா நீ” என அவளை பார்த்து வேகமாக கேட்ட பட்டாபி “இப்போ எதுக்கு சார் கூட சண்டை போட்ற” என கேட்டான்.

“இல்லை பட்டாபி....என்கூட பேசினதுக்கு தான அவர் உன்னை திட்னார் அதான் எனக்கு கோபம் வந்திடுச்சு ” என அவள் கோபமாக சொல்ல

“அப்டின்னு யார் சொன்னது” என அவன் சொல்ல அதிர்ச்சியுடன் அவனை பார்த்த ரோஜா “அப்போ நீ அழுதிட்டு வெளியே வந்தது”.......

“ஆமா வந்தேன்...சார் திட்னாருனு சொன்னேன்.....ஆனா உன்கூட பேசினதுக்கு இல்லை அடகடவுளே என்ன ரோஜா நீ இன்னும் இந்த அவசர புத்தியை விடலையா என தலையில் கை வைத்து அமர்ந்தான்.

“என்னடா சொல்ற என கோபத்தில் மரியாதை பறக்க...அப்புறம் வேற எதுக்கு திட்னாரு” என இப்போது விளக்கம் கேட்டாள்.

“எல்லாம் அந்த மாணிக்கம் கேசுதான் என்றவன் அதை பற்றிய விபரம் சொல்லி என்னை நம்பித்தான் விட்டிருந்தார்...நானும் சரியாகதான் பண்ணேன்...எந்த இடத்துல அந்த சாட்சி நான் மிஸ் பண்ணேன்னு தெரியலை என சொன்னவன் அதுநாள எவ்ளோ பெரிய கஷ்டம் தெரியுமா ?இதுவரை ஒரு கேஸ்கூட நம்ம சார் எடுத்து ஜெயிக்காம விட்டது இல்லை......இதில தான் சாட்சி கைமாரிடுச்சு....அதான் சார் ரொம்ப கோபமா இருக்கார்...நான் கூட அதை இரண்டு நாளைக்கு முன்னாடி மெயில் பண்ணேன்...சார்தான் கொஞ்சம் அவசரவேலை ..நான் வந்து பார்த்துகிறேனு சொன்னார்” என்றான்.

இரண்டு நாள் முன்பு என்றால் எங்க ஊர்ல இருந்தோம் என யோசித்தவள் அவன் தன் தொழில் எந்த அளவு ஈடுபாட்டோடு இருப்பான் என அவளுக்கு தெரியும்.வேலை என்று வந்துவிட்டால் அவனுக்கு உலகமே மறந்துவிடும்...அதில் மட்டுமே கவனமாக இருப்பான். ..... அப்படிபட்டவன் இது போன்ற சூழ்நிலையில் அவன் தன்னிடம் அதை காட்டிகொள்ளாமல் வீட்டில் எல்லாரிடமும் சகஜமாக பழகியது அவள் நினைவில் வந்து செல்ல இப்போது பார்த்த தேவாவும் ஊரில் இருந்த தேவாவையும் நினைத்து பார்த்தவள் இவனை புரிந்து கொள்ளவே முடியலையே என குழம்பியவள்...கோபம் எல்லாம் வடிந்து அப்படியே அமர்ந்தவள் “இப்போ என்ன பண்றது பட்டாபி...நாம் ஜெயிக்கவழியே இல்லையா” என கவலையுடன் கேட்டாள்.



இரவு பகல் என தெரியாமல்

நினைவுகள் முழுவதும் நீயாக இருக்க

உன் அருகில் இருக்கும் நேரத்தில்

வெப்பமும் வென்பனியாக தெரிய

உன்னை காணாத போது

தாலாட்டும் தென்றலும்

தணலாக கொதிக்கிறது .

உனது விலகல் என் இதயத்தில்

விரிசலை ஏற்படுத்த

எனது உயிரோ அதை

தாங்க முடியாமல் தவிக்க

எனக்கு எதுவந்தாலும் பரவயில்லை

என்னிடம் இருப்பது உன் இதயம் அல்லவா?

அதற்கு ஒரு துன்பம் வந்தால் அது

என் ஜனனனத்தின் மரணம் அன்று தான்


என்பதை நீ அறிவாயா ?