• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் - 25

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
அத்தியாயம் -25



சிறுபிள்ளை போல் அவனிடம் சண்டைபோட்டு வந்தவள் பட்டாபி சொன்னதை கேட்டதும் சற்று கலவரம் அடைந்தாள்.அவளுக்கு தேவாவின் குணத்தை பற்றி நன்றாக தெரியும்.......எதை வேண்டுமானாலும் பொறுத்து கொள்வான்....ஆனால் தோல்வி எனபது அவனால் ஏற்றுகொள்ள முடியாது...கோழைகள்தான் தோல்வியடைவார்கள் என எப்போதும் சொல்வான்......இன்றோ அவளால் அவனுக்கு அந்த நிலைமை வந்து விடுமோ என பயந்து போனாள்.அப்படி நடந்தால் அவன் தாங்கி கொள்வானா என நினைத்தவள் அதை நினைக்கும்போதே அவளது உடலில் ஒரு அதிர்வு வந்து சென்றது.

பட்டாபியோ மிகுந்த வருத்தத்துடன் “தெரியலை ரோஜா.......இன்னும் ஒரு வாய்தா மட்டுமே இருக்கிறது....அதிலும் சாட்சி எதிர்தரப்பிடம் இருக்கிறான்.......அவன் தான் முக்கியமான சாட்சி இப்போது என்ன செய்யறதுனு ஒன்னும் புரியலை.....நான் அவசரம் அப்டினுதான் சார்க்கு தகவல் அனுப்புனேன்......அவர்தான் வந்து பார்க்கிரேனு சொன்னார்....இப்போ என்னை பிடிச்சு திட்றார்” என்றவன் “எப்போதும் இப்படி இருக்க மாட்டோம் .......இந்த முறைதான் கொஞ்சம் கவனம் பிசகிடுச்சு , என்னை செய்யறதுனே புரியலை” என புலம்பிகொண்டே நகர்ந்தான்.

ரோஜாவோ அவளால் தான் அவனுக்கு இந்த நிலை என புரிய என்ன செய்வது என அவளும் தெரியாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.பின்னர் பட்டாபி பலமுறை தேவாவின் அறைக்கு சென்று வர சென்று வர அவனிடம் தேவாவின் மனநிலையை கேட்டவள் அவன் மிகவும் கோபத்தில் இருக்கிறான் என்பதையும் தெரிந்து கொண்டாள்.

என்ன செய்வது என தெரியாமல் யோசித்து கொண்டு இருந்தவள் பின்னர் பட்டாபியிடம் “எனக்கு ஒரு உதவி செய்வியா பட்டாபி என கேட்டாள்.

“என்ன ரோஜா என்ன வேணும் என்றவன் பப்ஸ் ஏதாவது வாங்கிவரட்டுமா” என்றான்.

அவனை முறைத்தவள் “எனக்கு அந்த கேஸ் பத்தின விபரங்கள் வேணும்” என்றாள்.

உடனே பாட்டபி “என்னோட மேஜைல இருக்க அந்த பெரிய பைல் தான் அது......எல்லா விபரமும் அதில் இருக்கும்....நான் சார் கொஞ்சம் போன் பண்ண சொன்னார்...பேசிட்டு வந்திடறேன்” என சொல்லிவிட்டு அவன் செல்ல ரோஜா அந்த வழக்கு விபரங்கள் சம்பந்தபட்ட பைலை பார்த்து சில குறிப்புகளை எடுத்து கொண்டாள்.

தேவாவும் அது சம்பந்தமாக பலபேரை தொடர்பு கொண்டும் பல ஆவணங்களை பார்த்து கொண்டு இருந்ததால் நேரம் போனதே தெரியவில்லை.....பட்டாபியும் அது சம்பந்தமாக அலைந்து கொண்டு இருக்க ......ரோஜாவும் அந்த வழக்கின் விபரங்களை தொடக்கத்தில் இருந்து படித்து கொண்டு இருந்ததால் இரவு ஏழு மணிவரை யாரும் சாப்பிடவும் இல்லை.....ஓய்வும் எடுக்கவில்லை.

மாலை ஏழுமணி ஆனவுடன் ரோஜாவின் முகம் பசி மற்றும் வேலையில் கலைத்து விட அசதியில் அவள் மேஜை மீது தலை சாய வெளியே சென்ற பட்டாபி அப்போது தான் உள்ளே நுழைந்தவன் அவளை பார்த்ததும் பாவமாக இருக்க அவளை எழுப்பியவன் “நீ வீட்டிற்கு கிளம்பு ரோஜா ...நாங்கள் பார்த்து கொள்கிறோம்” என்றான்.

“எல்லாரும் புறப்படுகிறமா” என அவள் வேகமாக கேட்க

“இல்லை ரோஜா ...சார் இதற்கு தீர்வு தெரியாமல் இடத்தைவிட்டு நகரமாட்டார்.....நான் இருக்கிறேன் ...நீ கிளம்பு” என்றான்.

“அவரும் வரட்டும் பட்டாபி எல்லாரும் சேர்ந்தே போலாம் என்றவள் ...என்ன வேறு ஏதாவது வழிகள் கிடைத்ததா” என ஆர்வமுடன் கேட்டாள் ..

இல்லை என தலை ஆட்டியவன்...”இது ரொம்ப முக்கியாமான சாட்சி ரோஜா...அதான் சார் ரொம்ப டென்ஷன் ஆகிறார் என்றவன் கொஞ்சம் கஷ்டம்தான்” என்றான்.

இதுவரை தோல்வி என்பதே அறியாதவன் முதன் முதலாக தன்னால் அது அவனுக்கு ஏற்படுவதா என நினைக்கும்போதே அவளின் மனம் மிகுந்த வேதனை அடைந்தது. .

அப்போது தேவா பட்டாபியை அழைக்க உள்ளே சென்றவன் தான் கொண்டு வந்த கோப்புகளை அவனிடம் கொடுத்தான்.

அதை பார்த்த தேவா “நாம் எதிர்பார்க்கும் தகவல் இதில் இல்லை பட்டாபி....திட்டம் போட்டு காய் நகர்த்தி இருக்காங்க......இந்த சாட்சியை நான் நம்பினேன்...அதுதான் பெரிய தவறு என அவனிடம் புலம்பியவன் சரி நீ நம்ம அமிர்தலிங்கம் ஆபீஸ்க்கு போ...அங்கு சுப்ரீம் கோர்ட்டில் 1996 ல் இதுபோன்ற ஒரு வழக்கின் தீர்ப்பு நகல் இருக்கும்...அதை வாங்கிட்டு வா” என்றான்.

“சார்” என பட்டாபி ஏதோ சொல்ல

வேகமாக நிமிர்ந்த தேவா அவன் பார்வையில் அனல் கக்க...ஏன் இன்னும் இங்கே நிற்கிறாய் ..... எனக்கு நம்பிக்கை இருக்கிறது...... பார்க்கலாம் நானா இல்லை அவனா என்று” என சொல்லும்போதே கோபத்தில் அவனது நரம்புகள் துடிக்க முகத்தில் கோபத்தின் ஜூவாலை கொழுந்துவிட்டு எரிய ஒரு நிமிடம் பட்டாபியே நடுங்கி போனான்.

எதுவும் சொல்லாமல் சிறிது நேரம் பட்டாபி அங்கே நின்று கொண்டு இருந்தான் .

நிமிர்ந்து பார்த்த தேவா “இன்னும் செல்லாமல் இங்கு என்ன பண்ணற” என எரிச்சலுடன் கேட்டான்.

ஒரு நிமிடம் சொல்லலமா வேண்டாமா என்று யோசித்த பட்டாபி பின்னர் மெதுவாக “இல்லை சார் அது வந்து நம்ம ரோஜா இங்கே இருக்காங்க...மதியமும் ஏதும் சாப்பிடலை ...இப்பவும் நேரமாகிடுச்சு...பாவம் ரொம்ப கலைச்சு போய்ட்டாங்க அதான் அவங்களை வீட்டுக்கு அனுப்பிட்டிங்கனா “ என ஒருவழியாக சொல்லி முடித்தான்.

“என்னது ரோஜாவா” என்றவன் அப்போதுதான் அவளை அழைத்து வந்தது நியாபகம் வர “அவள் இன்னும் வீட்டிற்கு போகலையா என சொல்லிகொண்டே வேகமாக எழுந்தவன்அவளை யாரு இங்கு இருக்க சொன்னா” என கத்திகொண்டே அறையை விட்டு வெளியே வந்தான் . அப்போது ரோஜா சோர்வில் மேஜையில் படுத்து இருந்தாள். அதை பார்த்ததும் தேவாவிற்கு ஆத்திரம் அதிகமாக வர

வேகமாக அருகில் வந்தவன் அவள் கைகளை பிடித்து எழுப்பி நிறுத்தியவன் “உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா......நேரமாச்சுனா கிளம்பி வீட்டுக்கு போகவேண்டியது தான....இது என்ன ஆபிசா இல்லை நீ தூங்கிற இடமா .......அவனவன் இங்கே எவ்ளோ பெரிய சிக்கல்ல மாட்டிகிட்டு முழிச்சுட்டு இருக்கான்.......நீ தூங்கிட்டு இருக்க......வேலை செய்யத்தான் நீ உன்னால் முடியாது...உபத்திரவம் செய்யாம இருக்கலாம்ல .......நீ சாப்பிடாம இருக்கிறதால இங்க ஏதும் நடந்திடபோறதில்லை ...இந்த மாதிரி சிம்பத்தி கிரீயேட் பண்றத விட்டு வேற வேலைய பாரு என கோபத்தில் பேசிகொண்டே சென்றவன் பட்டாபி இவளை கொண்டு வீட்ல விட்டுட்டு வேண்டாம் இவள் ஆட்டோவில் போகட்டும்...நீ போய் அந்த நகலை வாங்கிட்டு வா என சொல்லிவிட்டு நீ இடத்தை காலி பண்ணு முதல்ல...இருக்கிற பிரச்னை பத்தாதுன்னு நீ வேற” என சலித்தபடியே ரோஜாவை பார்த்து சொன்னவன் திரும்பி பார்க்காமல் அறைக்குள் நுழைந்தான்.

சோர்வில் சற்று கண் அசந்தவள் அவன் வேகமாக எழுப்பியதில் முதலில் அவன் சொல்வது புரியாமல் முழித்தவள் சிறிது நேரத்திற்கு பின்தான் அவன் தன்னை திட்டுகிறான் என தெரிய அவள் என்ன சொல்கிறான் என உணரும் முன்பே அவன் பேசிமுடித்து விட்டு உள்ளே சென்றுவிட்டான்.

சிறிது நேரத்தில் அவனது அறைகதவை யாரோ தட்ட இந்த நேரத்தில் யாரு என சலித்தவாரே ...”உள்ளே வாங்க” என சொல்லிவிட்டு தனது வேலையை தொடர்ந்தான்.

சிலமணித்துளிகள் சத்தம் ஏதும் இல்லாமல் இருக்க நிமிர்ந்து பார்த்தவன் அங்கு ரோஜா நின்று கொண்டு இருந்தாள்.

“ஹே நீ இன்னும் போகலையா......ஏன் இப்படி பண்ற...என்னை நிம்மதியா வேலை செய்ய விடமாட்டியா” என சலித்துகொண்டவன் பட்டாபிஈஈஈ” என கத்த



‘நான் உங்களோடதான் வந்தேன்...நீங்க கிளம்பும் போது தான் நானும் கிளம்புவேன் ” என அழுத்தமாக அவன் முகத்தை பார்த்து சொன்னாள் ரோஜா.

கத்திக்கொண்டு இருந்தவன் சட்டென்று அமைதியாகி அவள் முகத்தை பார்க்க அதில் இருந்த உறுதி மற்றும் அவள் கண்களில் தெரிந்த கெஞ்சல் அவனை ஏதோ பண்ண...”இங்க பாரு ரோஜா உனக்கே தெரியும் வேலைனு வந்திட்டா நான் நானாவே இருக்க மாட்டேன்...........அதும் இப்போ என நிறுத்தியவன் அதற்கே ஏற்ற மாதிரி நீயும் இப்படி பண்ற ரோஜா .......நீ மேஜைல அப்படி படுத்து இருந்ததை பார்த்ததும் மனசுக்கு ரொம்ப கஷ்டமா போய்டுச்சு....அதான் கோபத்துல பேசிட்டேன். சரி உட்கார் கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சுட்டு வந்திட்றேன்” என சற்று பொறுமையாக சொன்னவன் அந்த அரைமணி நேரத்திற்குள் அவனுக்கு ஐம்பது அலைபேசியழைப்பு வர பேசிகொண்டே கணினியில் தேவையான விபரங்களை பார்த்து கொண்டு இருந்தான்.

காலையில் சாபிட்டதுதான்...நடுவில் டீ கூட அருந்தவில்லை......ஆனால் முகத்தில் சற்றும் களைப்பு தெரியாமல் எப்படி இவனால் இப்படி வேலை செய்யமுடிகிறது என அவள் ஆச்சிரியத்தோடு அவனை பார்த்து கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்திற்கு பிறகு அவன் பார்வை அவள் புறம் திருப்ப அவளோ அவனை பார்த்து சிரிக்க அந்த நேரத்தில் தேவாவிற்கு அது தேவையாக இருக்க அவனும் லேசான புன்னகையுடன் தனது இழுவை நாற்காலி மூலம் அவளின் அருகில் வந்தவன் “ஏண்டா ரொம்ப பசிக்குதா...நீ கிளம்பி வீட்டிற்கு போலாம் தானே” என கரிசனத்துடன் கேட்டான் தேவா .

இந்த நேரத்திலும் அவன் தன்னை அக்கறையாக விசாரிப்பது அவளுக்கு மகிழ்ச்சியை கொடுக்க இல்லை ஆமா என்று இரண்டு புறமும் தலை ஆட்டியவள் “சாரி அத்தான் “என்றாள்.

“எதுக்கு சாரி” என அவன் கேட்க

“இல்லை என்னாலதான இவ்ளோ கஷ்டம் உங்களுக்கு ... நான் மட்டும் ஊருக்கு போகாம இருந்திருந்தா நீங்க இங்கேயே இருந்திருப்பிங்க......இவ்ளோ டென்ஷன் இருந்திருக்காது என சொன்னவள் மீண்டும் சாரி அத்தான்” என சொல்ல


அவளது இந்த பேச்சு அவனது கோபத்தை குறைக்க “ஆஹா என்னது இது என் அம்லு இப்படி எல்லாம் பேச ஆரம்பிச்சுட்டிங்க “என்றவன் சட்டென்று முகம் கடினமுற .....”எது நடக்கணும்னு இருக்கோ அது நடந்தே தீரும் ரோஜா ......அதை நாம் தடுக்க முடியாது....இதுவும் நல்லதுக்குதான் .......எப்பவும் எதிராளிய நம்ம குறைவா எடை போட கூடாது.......அதே நேரத்தில சாதரண சாட்சினு நம்ம அசால்ட்டா இருக்கவும் கூடாது...இதெல்லாம் இது மூலமா நான் கத்துகிட்ட பாடம்” என அழுத்தமாக சொன்னான்.
 

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
“ஏன் அத்தான் நம்ம இந்த கேஸ்ல ஜெயிக்க வழியே இல்லையா” என அவள் கவலையாக கேட்க

அவனது முகம் மாற “ஜெயிக்கணும் ரோஜா...நான் ஜெயிப்பேன்....இன்னும் ஒரு வாய்தா இருக்கு....கண்டிப்பா அதுக்குள்ள நான் இதுக்கு ஒரு தீர்வு கண்டுபிடிச்சுடுவேன்” என சொல்லும்போதே அவனது உறுதி அவளை வியக்க செய்தது.

“நீங்க கண்டிப்பா ஜெயிப்பிங்க அத்தான்” என அவளும் சொல்ல அவன் சிரித்து கொண்டே “இதெல்லாம் உன் அத்தானோட வேலை.......நீ வேற ஏதும் நினைக்காம வீட்டுக்கு போய் நிம்மதியா தூங்கு” என அவன் மென்மையாக சொன்னான்.

“அவளோ இல்லை அத்தான்......நீங்க இல்லாம நான் போகமாட்டேன்” என சொல்லிக்கொண்டு இருக்கும்போதே பட்டாபி உள்ளே நுழைந்தான்.

அவர்கள் இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பதை பார்த்தவன் சற்று தயங்க “வா பட்டாபி” என தேவா அழைக்க உள்ளே வந்து அந்த நகலை கொடுத்தான்.

“சரி பட்டாபி நீ கிளம்பு மீதியை நாளை பார்த்து கொள்ளலாம் என அவனை அனுப்பிவிட்டு ரோஜாவிடம் நீயும் கிளம்பு ரோஜா.....நான் வேலை முடித்துவிட்டு வருகிறேன்” என்றான்.

அவளோ மீண்டும் ஏதும் பேசாமல் தலை குனிந்தவாறே அமர்ந்திருக்க அவனும் பட்டாபி கொண்டுவந்த நகல்களை பார்த்தவன் “எதோ கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கு ...பார்க்கலாம்” என்றபடி எழுந்தவன் “பிடிவாதம் ரோஜா உனக்கு” என சொல்லியபடியே அவளையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்க்கு வந்தான்.

வரும் வழியில் அவள் பல முறை அவனிடம் மன்னிப்பு கேட்டு விட்டாள்.

உள்ளே நுழைந்ததும் அவர்களுக்காக காத்திருந்த ரதி “என்னாச்சு அண்ணா .......இவ்ளோ நேரம் ஆகிவிட்டது” என்றாள்.

“கொஞ்சம் வேலை ரதிம்மா என்றவன் நான் ரெப்ரெஷ் பண்ணிட்டு வந்திடறேன் “என சொல்லிவிட்டு ரோஜா என்றபடி திரும்ப அவளோ “சாப்பிட்டு போய்டலாம் அத்தான் “என கெஞ்சுவது போல் சொல்ல அவன் சரி என தலை அசைக்கும் முன்பே சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து இருந்தாள் ரோஜா .

“ரதி ரோஜா மதியமும் சாப்பிடலை ...முதலில் அவளுக்கு சாப்பாடு வை” என்றான்.ரோஜாவோ “உங்க அண்ணாவும் தான் சாப்பிடலை அவர்க்கும் சாப்பாடு வை ரதி” என சொல்ல “ஆஹா என்னப்பா நடக்குது இங்க......உங்களுக்காக நான் ஒருத்தி சாப்பிடாம இருக்கேன் ....அது உங்களுக்கு தெரியலை” என அவள் கிண்டலாக சொல்ல ...”என்னது நீ இன்னும் சாப்பிடலையா என கேட்ட தேவா எத்தனை முறை சொல்லி இருக்கேன்....நான் வர நேரமாகிவிட்டால் நீ சாப்பிட்ருனு என்ன ரதிம்மா “என்றவன் பின்னர் மூவரும் சேர்ந்து சாப்பிட ரோஜா சாப்பிடுவதில் இருந்தே அவள் எந்த அளவு பசியோடு இருந்திருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்ட தேவா இனி இதில் கவனமாக இருக்கவேண்டும் என நினைத்து கொண்டான்.

பின்னர் ரதி தன் அறைக்கு செல்ல இருவரும் மாடிக்கு சென்றனர்.உள்ளே சென்றதும் “ரோஜா எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு...நான் ஒரு குளியல் போட்டுட்டு வந்திடறேன் நீ தூங்கிறதுனா தூங்கு “என சொல்லிவிட்டு சென்றான்.

அவன் திரும்பி வந்த பார்த்த போது அவள் நன்றாக தூங்கி கொண்டு இருக்க காலையில் இருந்து அலுவலகத்திலே இருந்ததன் களைப்பு அவள் முகத்தில் தெரிய அவள் அருகே வந்தவன் மெதுவாக அவள் தலையை தடவிகொண்டே “அழுத்தக்காரி .....சொன்ன மாதிரியே என்னையும் கிளம்ப வச்சுட்ட” என சிரித்து கொண்டே சொன்னவன் என்றவன் மெதுவாக அவள் உச்சந்தலையில் ஒரு முத்தம் மிட அவளோ புரண்டு படுக்க சட்டென்று அவளை விட்டு விலகியவன் இப்போது தான் ஓரளவுக்கு தேறி வருகிறாள்.மீண்டும் குழப்பம் வேண்டாம் என்ற முடிவோடு தனது கணினி அறை நோக்கி சென்றான்.

அதிகாலை மூன்று மணி அளவில் விழிப்பு வர கண் விழித்தவள் அருகில் தேவா இல்லாததை கண்டு சுற்றிலும் பார்க்க கணினி அறையில் வெளிச்சம் இருப்பதை பார்த்து வேகமாக எழுந்து சென்றாள்.

அங்கு கணினி மேஜையின் மீதே தேவா படுத்து உறங்க அவன் அமர்ந்திருந்த நிலை பார்த்து அவளுக்கு பரிதாபமாக இருந்தது. ...எவ்ளோ நேரமா இப்படி தூங்கிரானு தெரியலே என்றபடி “அத்தான்...அத்தான்” என அவனை எழுப்பினாள்.

அவனோ பாதி தூக்கத்தில் “இல்லை யுவர் ஆனர்......இந்த சாட்சி எனது தரப்பில் இருந்தவர்” என அவன் உளற

அவளோ “என்னது இது....தூக்கத்திலும் இதே நினைப்பா என்றபடி அவனை பிடித்து உலுக்க சட்டென்று கண் விழித்தவன் “என்ன ரோஜா நீ தூங்கலையா ...போய் தூங்கு நான் கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சுட்டு வந்திடறேன்” என்றபடி மீண்டும் கணினியை ஆன் செய்ய

“என்ன அத்தான் சொல்றிங்க........இப்போ விடிய போகுது...நீங்க இரவு முழுவதும் தூங்கலியா” என்றவள் அவனது சிவந்த கண்களும் அவனது வீங்கிய முகமும் அவளுக்கு ஆம் என்று பதில் சொல்ல அவனோ “என்ன அதுக்குள்ள விடிஞ்சுருச்சா என்றவன் சரி விடு......இந்த கேஸ் சம்பந்தமா இரண்டு மூன்று தகவல்கள் கிடைத்து உள்ளது ...அதை வைத்து ஜெயித்து விடலாம் “என்று சந்தோசமாக சொன்னான்.

அவளோ “என்ன அத்தான் அதற்காக இப்படியா நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்விங்க...நீங்க முதல்ல எழுந்தரிங்க.......கொஞ்ச நேரம் வந்து படுங்க” என அவனை உருட்டி மிரட்டி எழுப்பி படுக்கைக்கு அழைத்து வந்தாள்.

“முதல்ல படுங்க நீங்க என அவள் மிரட்ட ஆஹா என்னது இது இப்படி எல்லாம் மிரட்ட ஆரம்பிச்சுட்ட நீ......இதுக்கு முன்னாடி வாத்தியார் வேலை பார்த்திட்டு இருந்தியா “என அவன் கிண்டல் செய்தான்.

அவளோ “நான் என்னமோ பண்ணேன்...நீங்க படுத்து தூங்குங்க முதல்ல” என அவனை அதட்ட

“சரி...சரி என சிரித்து கொண்டே சொன்னவன் ரோஜா அப்படியே அந்த கபோர்ட்ல தலைவலி மருந்து இருக்கும் எடுத்துகுடேன்” என்றான்.

அதை எடுத்து வந்தவள் “ஏன் அத்தான் ரொம்ப தலை வலிக்குதா “என அக்கறையாக கேட்டாள்.

“ஆமா ரோஜா....தாங்க முடியலை....அதான் அப்படியே படுத்திட்டேன்”‘ என்றவன் அதை வாங்க கை நீட்ட

“நான் தேய்ச்சுவிடறேன் அத்தான் என்றவள் அவனது நெற்றிக்கு அதை தேய்த்து விட ...அவனோ அம்மா...வலிக்குதே” என முனக

“ரொம்ப வலிக்குதா...ஒன்னும் பண்ணது.... எல்லாம் சரி ஆகிடும் .....அதான் நான் மருந்து போட்றேன்ல ...இப்போ அத்தானுக்கு வழியே தெரியாதாம் ...கண்ணை மூடி தூங்குவாராம்” என அவள் சிறு குழந்தைக்கு சொல்வதை போல் கொஞ்சல் மொழியில் சொல்ல அந்த பேச்சில் மயங்கியவன் “அம்லு உன் மடில நான் படுத்துகிறேண்டி” என்றவன் அவள் பதிலை எதிர்பார்க்காமல் அவள் மடியில் தன தலையை வைக்க அவளோ “அத்தான்” என ஏதோ சொல்ல வாய் திறக்கும் முன் அவள் இடுப்பை சேர்த்து அணைத்தவாறு கண் மூடினான்.

அதுவரை அவனிடம் நன்றாக பேசிக்கொண்டு இருந்தவள் அவன் மடியில் தலை வைத்ததும் சற்று தடுமாற அதோடு அவன் இடுப்பில் தன் கைகளை கட்டி கொண்டதும் அந்த வினாடி ஒரு சிலிர்ப்பு உடலில் தோன்ற ஒரு மாதிரியான உணர்வு அவளுள் எழும்ப அப்படியே அமர்ந்திருந்தாள்.

இதுவரை இவள்தான் பாட்டி, அம்மா மடியில் படுத்து இருக்கிறாள்.முதன் முதலாக இவள் மடியில் தேவா படுத்ததும் அவளை அறியாமல் ஒரு சந்தோசம் வர ,அவனது தொடுகை அவளது உணர்வுகளை தூண்டிவிட ,மேலும் அனைவர்க்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும் தேவா தன் மடியில் குழந்தை போல் தனது இடுப்பை பிடித்துகொண்டு உறங்குவது அவளுக்கு ஒரு உற்சாகத்தை கொடுக்க அந்த உணர்ச்சியின் வேகத்தில் குனிந்து அவனது நெற்றில் ஒரு முத்தம் மிட்டாள் ரோஜா. 3

சிறிது நேரம் அவன் முகத்தை பார்த்த படியே அமர்ந்திருந்தவள்.......திருமணம் ஆனதில் இருந்து அவனது நடவடிக்கைகள் ஒவ்வொன்றாக நினைவிற்கு வர வேலை என்று வந்துவிட்டால் தீயாக வேலை செய்கிறான்......அதே நேரத்தில் சந்தோசம் சல்லாபம் என்று வந்துவிட்டால் அதற்க்கு ஏற்றார் போல் நடந்து எல்லாரையும் கவர்ந்து விடுகிறான்......”டேய் ராகன் நீ பொல்லாத போக்கிரிடா” என அவன் கன்னத்தை பிடித்து மெதுவாக கிள்ளியவள் பின்னர் அவனது கையை தனது இடுப்பில் இருந்து விலக்க முயற்சி செய்ய அதுவோ இரும்பு பிடியாக இருந்தது. அவள் சிரித்து கொண்டே “எப்படியே என்னை உன் பிடிக்குள் கொண்டு வந்திட்டடா நீ” என சொன்னவள் அவன் அருகிலே சரிந்து படுத்தாள்.

அவன் அருகில் படுத்தவள் அவனது ஸ்பரிசம் அவளை இம்சிக்க சற்று தடுமாறி போனாள். மேலும் வயதின் உணர்வு வேறு அவளை ஆட்டுவிக்க தானாகவே அவனோடு நெருங்கி படுத்தவள் இனியும் விழித்து இருந்தாள் நல்லதல்ல என எண்ணி கண்ணை இறுக்க மூடினாள்....... கனவில் அவனது முகம் மீண்டும் மீண்டும் வந்தது. ஆறு அடிக்கு அதிகாமன உயரமும், அதற்கு ஏற்றார் போன்ற அகன்ற தோள்களும், கம்பிரமான தோற்றமும் , இறுக்கமான முகமும் ,பேசும் கண்களும், கூர்மையான நாசியும், விரிந்த மார்பும் , நீண்ட கைகால்களும் கொண்ட அவனது தோற்றம் அவளை ஈர்க்க அதை எல்லாம் மீறும் வண்ணம் அவனது உழைப்பும் அவனது தன்னம்பிக்கையும் அவள் மனதில் நிறைய ...”டேய் ராகன் ஐ லவ் யூ டா” என கனவில் முத்தம் கொடுப்பதாக நினைத்து அருகில் இருக்கும் அவனது கன்னத்தில் கொடுத்து விட அடுத்த நொடி அவளது இதழ் அவனது இதழின் சிறைக்குள் இருந்தது.

சில மணித்துளிகள் கழிந்த பின்பே அவள் நடப்பதை உணர்ந்து தேவா முகம் பார்க்க அவன் கண்கள் மூடியபடியே இருக்க அவள் புரியாமல் முழித்தாள். சட்டென்று அவளை விடுத்தவன் அவளை இறுக்கி அணைத்தபடியே மீண்டும் உறங்கிபோனான்.

அந்த அணைப்பின் வேகம் அவளக்கு மூச்சு முட்டுவது போல் இருந்தாலும் சுகமாக இருந்தது., ஆனால் தேவாவோ கண்களை திறக்கவில்லை......இவன் தெரிந்து செய்கிறானா ...இல்லை தெரியாமல் தூக்கத்தில் இது போல் செய்கிறான என அவளுக்கு சந்தேகம் வந்துவிட மெதுவாக அவன் மூச்சுகாற்றில் கைவைத்தவள் அது சீராக வந்து கொண்டு இருந்தது. ஹப்பா என நிம்மதி அடைந்தவள் இவன் தூங்குகிறான். என்னை போல் அவனும் கனவில் ஏதாவது பண்ணுவதாக நினைத்து இப்படி நடந்து கொண்டிருப்பான் என தனக்கு தானே சாமாதானம் சொன்னவள் மீண்டும் அவனது அணைப்பிற்குல்லே படுத்து கொண்டாள்.

சிறிது நேரத்தில் அவனது அணைப்பின் சுகமோ இல்லை அவனது முத்தத்தின் இதமோ அவளுக்கு உறக்கம் வந்துவிட நன்றாக உறங்கிபோனாள்..மெதுவாக கண் விழித்த தேவா இதழில் ஒரு மந்திரபுன்னகையுடன் அவளை பார்த்தவன் “அம்லு ரொம்ப தேங்க்ஸ்” என்றவன் “இந்த மாதிரி ஒரு மருந்து உன்கிட்ட இருந்து அதுவும் உன் இதழில் என அவளது உதட்டை கைளால் தடவியவன் நான் நினைக்கவே இல்லை.......இவ்ளோ ஆசைகளை மனசில வச்சுக்கிட்டு என்னை தவிக்க வச்சுட்ட நீ ...........ராகன் பேர் சொல்லி கூப்பிட்ற நீ ம்ம்ம்ம் என சொல்லி சிரித்தவன்....இனி பார் உன் ராகனின் ஆட்டத்தை” என தனக்குள் சொல்லிவாறே ஒரு வேகத்தில் அவளது கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டான். அவளோ தூக்கத்தில் புரண்டு அவனிடம் இருந்து சற்று விலக வேகமாக மீண்டும் அவளை அணைத்தபடி உறங்கிபோனான்.

இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி உறங்க அன்றய பொழுது இருவருக்குமே சுகமாக விடிய முதலில் கண் விழித்தது தேவா தான்.அருகில் இருக்கும் தன்னவளை சில மணித்துளிகள் ரசித்தவன் பின்னர் மணியை பார்க்க அது எட்டு என காட்ட வேகமாக எழுந்தவன் குளித்து விரைவாக கிளம்பினான்.தண்ணீர் விழும் சத்தம் கேட்டு எழுந்த ரோஜா அவன் அருகில் இல்லாதததை பார்த்தவள் தலைவலியோடு படுத்து இருந்தவன் எழுந்துவிட்டான்.நான் தான் வெகு நேரம் தூங்கிவிட்டேன் போல என்றபடி எழுந்தவள் படுக்கையை மடித்து வைக்க அதற்குள் குளித்து விட்டு தேவா வெளியே வந்தான். அவனது சோப்பின் நறுமணமும் முகத்தில் அங்கங்கு இருக்கும் நீர்துவாளையும் கண்டவள் அவனை ரசித்து கொண்டே நிற்க தேவா தனது புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்க சட்டென்று முகம் சிவக்க தலை குனிந்தாள்.

அவளது வெட்கம் அவனுக்கு புதிய உற்சாகத்தை கொடுக்க அவளின் அருகில் அவன் நெருங்கி வர அவளோ லேசான நடுக்கத்துடன் நிற்க அவள் அருகில் முத்தமிடுவது போல் வந்தவன் சட்டென்று தலையை ஆட்டியதும் அதில் உள்ள நீர்துவாலைகள் அவள் முகமெங்கும் தெறிக்க அவளது உடல் சிலிர்க்க தடுமாறி அவள் பின்னால் சென்றாள்.

அவளது தடுமாற்றத்தை மனதிற்குள் ரசித்தவன் அவளிடம் “தேங்க்ஸ் ரோஜா...உன்னால்தான் எனக்கு தலைவலி சரி ஆகிடுச்சு.படுத்த உடன் தூங்கிவிட்டேன் ....என்ன நடந்து என்றே தெரியலை ...அதுக்குதான் இப்படி நன்றி சொன்னேன்” என மீண்டும் தலைஆட்டியபடியே சிரித்து கொண்டே சொன்னான்.

எங்கே இரவு நடந்தது எல்லாம் இவனுக்கு தெரிந்து விட்டதோ...அதனால்தான் அருகில் வருகிறானோ என அவள் மனம் கலக்கமுற நடுக்கத்துடன் நிற்க அவனோ தேங்க்ஸ் சொல்வதற்காக அப்படி செய்தேன் என சொன்னவுடன் நல்லவேளை இவனுக்கு இரவு நடந்தது எதுவும் நினைவு இல்லை தப்பித்தோம். இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் நானே காட்டி கொடுத்து விடுவேன் என நினைத்தவள் வேகமாக “பரவாயில்லை அத்தான்.......கொஞ்ச நேரம் பொறுங்கள் நானும் குளித்துவிட்டு வந்துவிடுகிறேன்” என சொல்லி வேகமாக அவனிடம் இருந்து தப்பி குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

அவள் அலுவலகம் வருவதாக சொல்ல “வேண்டாம் நேற்று போல் எனக்கு வேலை அதிகாமாக இருக்கும் உன்னை கவனிக்க முடியாது ...நீயும் சாப்பிடாமல் இருப்பாய்” என தேவா சொல்லியும் அவள் அடம்பிடித்து அவனுடன் சென்றாள்.



பூவுக்குள் பூகம்பம்

என் மனதினுள்ளே ஆரம்பம்

என் இதயதிரை மெல்ல விலக

நீ எனக்குள்ளே நுழைந்துவிட்டாய்.

பொல்லாத கள்ளனடா நீ!!!

இனி அணைபோட்டு தடுத்தாலும்

நிற்காது எந்தன் அன்பு!

நினைக்கும்போதே ஒரு சிலிர்ப்பு !

என்னுள்ளே ஒரு பரவசம்!

காத்திருக்கிறேனடா உந்தன் காதலில்

மூழ்கி முத்தெடுக்க !!!!!!!!!!!!!!!!!!!!!!!!