• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Lashmi Ravi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
145
அத்தியாயம் -26



முக்கியமான அறுவை சிகிச்சையில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் அனைவரும் குழுமி இருந்தனர் . அப்போது ரதியை பார்க்க யாரோ வந்திருப்பதாக ஒருவர் வந்து சொல்ல யாராக இருக்கும் என்ற யோசனையோடு சென்றவள் அங்கு ராம் அவளை பார்த்தவாறே நின்று கொண்டு இருந்தான்.

ராமை பார்த்ததும் இதயம் வேகமாக துடிக்க உடலில் பதட்டம் தோன்ற கண்களில் ஒரு பயத்தோடு பார்த்தாள் ரதி.

அவனோ அவளை தூரத்தில் இருந்து வரும்போதே கவனித்தவன் அவளின் மாற்றங்கள் அவனுக்கு வேதனையை ஏற்படுத்த என்னை கண்டு ஏன் பயப்படுகிறாய் முல்லை மலர் என மனதிற்குள்ளே புலம்பியவன் ஆனால் முகத்தில் எந்த உணர்வையும் வெளிபடுத்தாமல் அமைதியாக நின்று இருந்தான்.

அவனது பார்வை அவளை துளைக்க அவளும் அமைதியாகவே அவன் அருகில் வந்து நின்றாள்.அதற்குள் அங்கு வந்த மருத்துவ ஆசிரியர் ஒருவர் “என்ன சார் இந்த பக்கம் ஏதாவது கேஸ் விஷயமாவா” என ரதியை ஒரு மாதிரி பார்த்து கொண்டே கேட்க

அவனோ “இல்லை சார்...என்னோட கசின்.....பார்த்திட்டு போலாம்னு வந்தேன் என சிரித்து கொண்டே சொல்ல அவரும் தலை அசைத்தபடி சென்று விட்டார். பின்னர் ரதி கொஞ்சம் உன்கூட பேசணும் வா போலாம்” என்றான் ராம் .

அவளோ சுற்றிலும் பார்வையை ஓடவிட்டவள் “எதா இருந்தாலும் இங்கே பேசுங்க.....எனக்கு கிளாஸ் இருக்கு” என எரிச்சலாக சொன்னாள்.

“நான் பேச ரெடி ...ஆனால் இப்போ நீயே பார்த்தில.....ஏதோ கேஸ் விஷயமா உன்கிட்ட விசாரிக்கிறதா நினச்சுகுவாங்க ...உனக்கு சரினா எனக்கும் சரிதான்” என அவன் அசால்ட்டாக சொன்னான் ராம்.

மிரண்டு அவனை நிமிர்ந்து பார்த்தவள் “என்ன நீங்க இப்படி எல்லாம் மிரட்ரிங்க......நான் வரமாட்டேன்...நான் இப்போ அண்ணனுக்கு போன் பண்றேன் ” என கோபமாக மிரட்டுவது போல் சொல்ல

அவனோ “நல்லதா போச்சு நீ போன் பண்ணு ...எப்படி இருந்தாலும் நம்ம விஷயம் அவனுக்கு தெரியத்தானே போகுது.....அது இப்பவே தெரிஞ்சாலும் எனக்கு சந்தோசம் தான்” என சொல்லிவிட்டு அருகில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்தான்.

“நீங்க வம்பு பண்றதுகுனே வந்து இருக்கிங்களா என்றவள் சட்டென்று பேச்சின் சுதி குறைந்து ப்ளீஸ் ராம்...என்னை விட்ருங்க...இது நமக்கு ஒத்துவராது” என கெஞ்சுவது போல் சொன்னாள்.

“அதை நாம பேசி முடிவு பண்ணிக்கலாம் நீ வா” என அவள் பதிலை எதிர்பாராமல் கையை பிடித்து அவன் இழுத்தான். அங்கு இருப்பவர்கள் அவளை ஒரு மாதிரி பார்க்க அவளோ “என்ன பண்றிங்க...முதல்ல கையை எடுங்க நானே வரேன்” என சொன்னவள் வேகமாக அவன் பிடியில் இருந்து கையை உருவியவள் அவன் பின்னே அமைதியாக நடந்தாள்.

அவளை அருகில் இருக்கும் கோவிலுக்கு அழைத்து சென்றவன் அங்கு அதிகம் கூட்டம் இல்லாததால் உள்ளே சென்று கடவுளை வணங்கிவிட்டு வெளியே வந்து அமர்ந்தனர்.

“என்ன இது.....இப்படி பண்றிங்க......நான் தான் என் முடிவை சொல்லிட்டேன் இல்லயா.....மறுபடியும் ஏன் தொல்லை பண்றிங்க” என அவள் ராமை பார்த்து சலிப்புடன் கேட்டாள் ரதி .

அவனோ ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தான்.ரோஜா சொன்னதை அவனும் இரண்டு நாட்களாக யோசித்து பார்த்தான்...ஆனால் ரதியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை...ஏனோ அவன் மனம் அவளின் அருகாமைக்காக ஏங்க இன்று அலுவலகம் வந்த பின்னும் அவள் நினைவே சுற்றி வர அங்கு விடுப்பு கடிதம் கொடுத்துவிட்டு ரதியை பார்க்க கல்லூரிக்கே வந்துவிட்டான்.இது வரை இருந்த வேகம் அவளை பார்த்த உடன் மாயமாக மறைந்து போக அவள் திட்டுவது அவனுக்கு அவள் கொஞ்சுவது போல் தோன்ற அமைதியாக அவள் பேசுவதையே பார்த்து கொண்டு இருந்தான்.

அவனிடம் கெஞ்சி பின்பு கோபமாக திட்டி பின்பு மரியாதை இல்லாமல் பேசிய பிறகும் அவன் பதில் சொல்லாமல் தன்னையே பார்த்து கொண்டு இருப்பதை பார்த்த ரதி குழம்பி போய் அவளே அமைதியானாள்.

அவள் பேச்சை நிறுத்தியதும் அவன் சிரித்துகொன்டே” உனக்கு ழ ள வராதா ரதி” என கேட்க

முதலில் அவன் என்ன கேட்கிறான் என புரியாமல் விழித்தவள் பின்னர் அவனது கேள்வி புரிய “நான் உங்களை திட்டிகிட்டு இருக்கேன்...நீங்க எதை ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கீங்க” என கோபமாக கேட்டாள்.

அவனோ அதை கண்டு கொள்ளாமல் “ இங்க பாரு முல்லை மலர் முதல்ல தமிழ் நல்லா கத்துக்கோ ...அப்போதானே நம்ம குழந்தைக்கு தாலாட்டு பாட முடியும்...நீ தப்பா பாடி அதை கேட்டு என் பொண்ணு நாளைக்கு அவ பாடும்போது தப்பு வந்திச்சுனா அது நல்ல இருக்காதுல” என அவன் சொல்லிக்கொண்டு போக

அய்யோயோயோயாய்!!!! என கத்தியவள் “நீங்க என்ன லூசா ....நான் சொல்றது உங்களுக்கு புரியலையா “என எரிச்சலுடன் அவன் முகத்தை பார்த்தவள்...அவனது புன்னகை அவளின் கோபத்தை குறைக்க மெதுவாக அவனிடம் “இங்க பாருங்க ராம்......நீங்க இருக்கிற பதவிக்கும் நீங்க இப்படி நடந்துகிறது நல்லாவா இருக்கு .....எனக்கும் உங்களுக்கும் எப்பவும் ஒத்து வராது....அதுமட்டும் இல்லாம நான் திருமணமே செஞ்சுக்க போறதில்லை.......என் வாழக்கையை நான் மருத்துவதுறைக்கே அர்பணிக்கலாம்னு இருக்கேன் ......தயவு செய்து புரிஞ்சுக்குங்க என்னை” என அவனிடம் கெஞ்சுவது போல் சொன்னாள் ரதி.

அவளின் இந்த அமைதியான பேச்சு அவன் மனதிற்கு மகிழ்ச்சி கொடுக்க அவளின் கைகளை எடுத்து தன் கைகளுக்கு அடக்கி கொண்டவன் “உனது விரல்கள் எல்லாம் மென்மையாக இருக்கு உன்னை போலவே “ என அது தான் முக்கியம் என்பது போல் சொன்னவன் உடனே அவள் வேகமாக அவன் கைகளுக்குள் இருந்து தனது கைகளை இழுக்க அவனோ இறுக்கமாக பிடித்து இருந்தான்.

“என்ன ராம் இது என அழுவது போல சொன்னவள் வேண்டாம் ராம் என்னால முடியலை” என சொல்லும்போதே கண்களில் கண்ணீர் நின்றது.

“என்னாலயும் தான் முடியல ரதி......இப்படி எல்லாம் நடந்துக்க கூடாதுன்னு அறிவுக்கு தெரியுது. ஆனால் காதல் கொண்ட இந்த மனசுக்கு புரிய மாட்டேன்குது...நான் என்ன பண்ணட்டும்.....நீ சொல்வது சரிதான்...எனது பதவிக்கு இது அழகில்லை தான்...ஆனால் காதல்னு வந்திட்டா பதவி பணம் அந்தஸ்த்து எல்லாம் மறஞ்சு போய்டுது....எனக்கு இப்போ இது எல்லாம் தேவை இல்லை...நீ மட்டும் இருந்தா போதும் என சொன்னவன் அவள் கைகளை எடுத்து தனது நெஞ்சில் வைத்தவன் சற்று அமைதியாக எனது இதயத்துடிப்பை கேட்டு பாரு ரதி அது முல்லை மலர்னு உன் பெயரை மட்டும்தான் சொல்லும்......நீ என்னை புரிஞ்சுகோ குட்டிமா...... நீ இல்லாத வாழக்கை என்னால நினச்சே பார்க்க முடியலை.....உனக்கு வேண்டுமானால் நான் சொல்வது உளற மாதிரி இருக்கலாம். ஆனால் இது வாய்ல இருந்து வரும் வார்த்தை அல்ல...இங்கிருந்து என தந்து நெஞ்சை தொட்டு காட்டியவன் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு முல்லை மலர் ” என அவனும் தன் மனதில் உள்ளதை அவளுக்கு புரியும் வண்ணம் விளக்கமாக எடுத்து கூறினான்.

இருவரும் தங்கள் மனதில் உள்ளதை தெளிவாக சொல்ல ராம் பேசியதும் அவனது குரலில் இருந்த ஏக்கமும் காதலும் ரதியின் மனதை ஊடுருவ

அவனது பேச்சில் தன்னை மறந்தவள் “ராம் என அவன் தோளில் சாய்ந்தவள் கண்ணீர் அருவி போல் கொட்ட ....ஏன் ராம் என்னை இப்படி சித்ரவதை பண்றிங்க......என்னாலயும் முடியலை ராம்......ஆனால் உங்களுக்கு... உங்களுக்கு... என்னைவிட நல்ல துணை கிடைப்பாங்க நான் வேண்டாம் ராம்” என அவள் வார்த்தைக்கு வார்த்தை ராம் ராம் என சொல்ல அவனோ சிறகில்லாமல் வானத்தில் பறந்தான்.

அவளின் தலையோடு தன் தலையைய முட்டியவன் “எனக்கு வேறு துணை தேவையில்லை...இந்த முல்லை மலர் மட்டும் இருந்தால் போதும் என சிரித்து கொண்டே சொன்னவன் இன்றைக்கு இது போதும் ரதி......நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்......நீ என்னை எப்போது வேண்டுமானாலும் காதலி...ஆனால் என் காதலை புரிந்து கொண்டாய் அல்லவா அது போதும்.......இதற்காகத்தான் நான் உன்னை இங்கு அழைத்து வந்தேன்.இனி நாம் கிளம்பலாம் என்றவன் ஆமா உனது போன் நம்பர் என்ன?” என கேட்டான்.

“எதற்கு அதெல்லாம் நான் தரமாட்டேன்......என்னிடம் அலைபேசியே இல்லை” என சொல்லிவிட்டு அவள் முகத்தை திருப்பி கொள்ள

“ம்ம்ம் போலீஸ்காரனிடமே ஏமாற்று வேலையா என சிரித்தவன் சரி வேண்டாம்......இது எனது எண்” என்றவன் தனது நம்பரை அவளுக்கு கொடுக்க அவளோ அதை வாங்காமல் அப்படியே நிற்க அவளது கைப்பையில் அதை போட்டான் ராம்.பின்னர் அவளை கல்லூரிக்கே அழைத்து வந்தவன் அவள் இறங்கியதும் “இங்கு பார் முல்லை மலர் இன்று இரவு நீ என்னிடம் போனில் பேசுகிறாய்...இல்லை நாளை நான் இதே போல் கல்லூரிக்கு வந்து விடுவேன்” என மிரட்டிவிட்டு சென்றான்.

முதல் நாள் போல் இன்றும் அந்த கேஸ் தொடர்பான வேளைகளில் தேவா மூழ்கி இருக்க ரோஜாவும் அவனை தொந்தரவு செய்யாமல் நேற்று படித்த விபரங்களை மீண்டும் படித்து கொண்டு இருந்தாள்.

“என்ன ரோஜா உனக்கு பொழுது போகலையா அதையே திருப்பி திருப்பி படிக்கிற .......அதெல்லாம் வேலைக்கு ஆகாது......அந்த சாட்சிக்கு எல்லாம் இரண்டு கட்ட விசாரணையும் முடிந்து விட்டது. இவன் ஒருவன் மட்டுமே முதல் முறை சொன்னதோடு அப்படியே இருக்கு...முக்கியமான சாட்சி என்பதால் சார் தான் கடைசியாக இவனை விசாரிக்கலாம் என்றார்......ஆனா என நிறுத்தியவன் பழைய ரெக்கார்டுகளை பார்க்கிறப்ப இது போன்ற கேஸ்களில் கடைசி நேரத்தில் சாட்சி மாறும்போது மற்ற சாட்சிகளையும் கவனித்து தான் தீர்ப்பு வழங்கி இருகின்றனர்.....அதை வைத்து பார்க்கும் போது நமக்கு கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது...மற்றதை நீதிபதி தான் முடிவு செய்யவேண்டும்” என்றான் பட்டாபி..

அவள் தலை அசைத்துகொண்டே அதை மீண்டும் மீண்டும் படித்து பார்த்து கொண்டு இருந்தாள்.அதில் அவளுக்கு சில விபரங்கள் குழப்பமாக இருக்க அந்த பைலை எடுத்து கொண்டு தேவாவின் அறைக்கு சென்றாள் ரோஜா..

அங்கு அவனோ கேஸ்தொடர்பான விபரங்களை பார்த்து கொண்டு பிசியாக இருந்தான்.உள்ளே நுழைந்தவள் “சார் சார்” என அழைக்க சலித்து கொண்டே நிமிர்ந்து பார்த்தவன் “என்ன ரோஜா ...என்ன வேணும்...தயவு செய்து என்னை தொந்தரவு பண்ணாத...கொஞ்சம் உனது இடத்திற்கு போ.......எனக்கு நிறைய வேலை இருக்கு” என சொல்லிகொண்டே தனது வேலையை தொடர்ந்தான்.

“இல்லை சார்...எனக்கு ஒரு சந்தேகம் அதான்” என அவள் நிற்க

“ஏன் இப்படி பண்ணுகிறாய் ரோஜா...நான் தான் சொல்கிறேன் அல்லவா...வேலை இருக்கிறது என்று....நீ முதலில் இங்கிருந்து கிளம்பு” என அவன் முகத்தை சுள்ளென்று காட்ட அவள் தலை குனிந்து கொண்டே அமைதியாக வெளியே வந்தாள்.

பின்னர் மதியம் அவள் மறுத்தும் அவளை கட்டாயபடுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தான் தேவா.....

இங்கு ராமிடம் பேசிவிட்டு வந்தவள் வகுப்புக்குள் நுழைந்ததும் அதில் மூழ்கிவிட அவன் சொன்னதை மறந்தே போனாள் ரதி.

.இரவு தேவா தாமதமாக வர ரோஜா ,ரதி இருவருமே உறங்கி இருந்தனர்.

மறுநாள் கண்விழித்தவள் அருகில் தேவா உறங்குவதை கண்டவள் “இவன் எப்போது வந்தான்.....அச்சோ இரவு சாப்பிட்டானா இல்லயா” என புலம்பியவாறே வேகமாக எழுந்தவள் சமையல் அறைக்குள் சென்று காபி பொடியை தேடி கொண்டு இருக்க அப்போது அங்கு வந்த ரதி “என்ன வேண்டும் ரோஜா” என கேட்டவள் அவள் காபி என்றது அவளுக்கு எடுத்து கொடுத்து தேவாவிற்கு எப்படி போடவேண்டும் என்பதையும் கற்று கொடுத்தாள்.அண்ணாவுக்கு எப்பவும் டிக்கேசன் கொஞ்சம் திக்கா இருக்கனும் ரோஜா என்று சொன்னாள் ரதி..

அதை எடுத்து கொண்டு மேலே சென்றவள் படுக்கையில் அவன் இல்லாதை பார்த்தவள் குளியல் அறையில் சத்தம் கேட்கவும் “ஹப்பா அய்யா செம ஸ்பீடான பார்ட்டி தான்” என மனதிற்குள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே வேகமாக வெளியே வந்தவன் நேற்று போல் அவன் ஏதாவது செய்வானோ என அவள் சற்று மிரள அவனோ அவள் இருப்பதை கூட கவனிக்காமல் வேகமாக கிளம்பினான்.

“அத்தான் காபி” என அவள் சொல்ல வேகமாக அதை வாங்கி குடித்தவன் தேங்க்ஸ் கூட சொல்லாமல் மீண்டும் தனது வேலையை தொடர்ந்தான்.

“என்ன அத்தான் இன்னைக்கு இவ்ளோ சீக்கிரம் கிளம்பரிங்க” என கேட்டாள் ரோஜா.

“இன்னைக்கு மாணிக்கம் கேஸ் கோர்ட்டுக்கு வருது ரோஜா.....எல்லாமே ரெடி பண்ணனும் ....நானும் ஓரளவு தயாராகத்தான் இருக்கேன் .எதிர்த்தரப்பு சாட்சி பலமா இருக்கு பார்க்கலாம்” என்றான்.

“சாரி அத்தான் “என அவள் மறுபடியும் ஆரம்பிக்க அவன் ஏதும் சொல்லாமல் தனது பையில் எல்லாம் எடுத்து வைத்து கொண்டு இருந்தான்.

அவன் கிளம்புவதை பார்த்து கொண்டு இருந்தவள் “அத்தான் நானும் உங்களோடு கோர்ட்டுக்கு வரட்டுமா” என தயங்கி தயங்கி கேட்டாள்.

“ நீ வேண்டாம் ரோஜா நான் பார்த்துகொள்கிறேன் “ என சொல்லிகொண்டே நிமிர்ந்து பார்த்தவன் அவள் கெஞ்சலோடு அவனை பார்க்க “சரி சீக்கிரம் கிளம்பி வா” என்றான்.

வேகமாக கிளம்பி வந்தவள் “போலாம் அத்தான் நான் ரெடி” என்றாள். இருவரும் ரதியிடம் சொல்லிவிட்டு கிளம்ப அவளோ காலை டிபன் ரெடி ஆகிவிட்டது ....சாப்பிட்டு செல்லுங்கள்” என்றாள்.

“இல்லை ரதிம்மா எனக்கு எதுவும் வேண்டாம்..ரோஜா நீ வேண்டுமானால் சாப்பிட்டு வா” என்றான்.

அவளும் வேண்டாம் என சொல்லிவிட்டு அவன் பின்னால் நடந்தவள் காரில் ஏறியபிறகு “ஒரு நிமிடம் அத்தான் இதோ வந்து விடுகிறேன் “ என சொல்லிவிட்டு வேகமாக வீட்டிற்க்குள் சென்றாள்.

அவனோ கேஸ் பற்றிய நினைப்பில் இருந்தவன் இவள் இது போல் தாமதம் பண்ண அவனுக்கு எரிச்சல் வர அவள் ஒரு பைலை எடுத்து கொண்டு வந்தவள் “சாரி அத்தான் இதை மறந்திட்டேன்” என சொல்லிபடியே உள்ளேஅமர்ந்தாள்.

“இதுக்குதான் சொன்னேன் நீ வரவேண்டாம்னு...இப்போ இது ரொம்ப முக்கியமா...கிளம்பும்போது இப்படி லேட் பண்ற நீ” என அவளை திட்டியவாறே வண்டியை செலுத்தினான்.அவளோ “சாரி அத்தான்” என தலைகுனிந்து கொண்டே சொன்னவள் அதற்கு பின்பு அவனிடம் எதும் பேசவில்லை.

அலுவலகத்திற்கு சென்று பட்டாபியும் அழைத்து கொண்டு நீதிமன்றம் சென்றான் தேவா.....வெகுநாட்களுக்கு பிறகு நீதிமன்றம் வருகிறாள் ரோஜா .தேவாவை பார்த்ததும் வக்கில்கள் அவனுக்கு வணக்கம் சொல்ல அவனும் தலை அசைத்தவாறே தனது அலுவலக அறைக்கு வந்தான்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த நாதன் பட்டாபியிடம் “தேவா எங்கே என கேட்க அவனோ சார் உள்ளே இருக்கிறார்....ஆனால் யார்வந்தாலும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்” என்றான்.

அதற்குள் இன்னொரு வக்கீல் உள்ளே வந்தவர் வந்த உடன் “என்னப்பா இப்படி பண்ணிட்டிங்க...நம்ம தேவா சார் எப்போதும் கவனத்துடன் இருப்பார்...எப்படி இந்த சாட்சியை நழுவவிட்டார் என கேட்டவன் இன்றைய நீதிமன்ற விவாதத்தை எல்லாரும் எதிர்பார்த்திட்டு இருக்காங்க . சட்டத்தின் அனைத்து நுணுக்கங்களையும் தனது சட்டைப்பையில் வைத்திருக்கும் mr இராகதேவனா இல்லை அதிக அனுபவமும் திறமையும் பலமான சாட்சிகளும் உள்ள எதிர்தரப்பா யாருக்கு வெற்றி கிடைக்கும்னு ரொம்ப எதிர்பார்ப்போட இருக்காங்க” என அவர் பீதியை கிளப்பிவிட

நாதனும் “நானும் கேள்விபட்டேன்.....ஒரு போட்டியே நடந்து இருக்கிறது தேவா ஜெயிப்பார் என்று ஒரு சிலரும் தோர்ப்பார் என்று ஒரு சிலரும் பெட் கட்டி இருக்கிறார்கலாம் என்றான். மேலும் சிலர் வந்து பட்டாபியிடம் பல கதைகளை சொல்லிவிட்டு போக “நல்ல வேலை சார் யாரையும் சந்திக்க மறுத்து இருந்தார் .இல்லையென்றால் அவரையும் குழப்பி இருப்பார்கள்” என்றான் பட்டாபி .

இவையெல்லாம் கேட்க கேட்க ரோஜாவிர்க்கோ மனதில் பெரிய பதட்டம் உருவாகியது. எப்படியாவது இவர் ஜெயித்து விடவேண்டும் என அவள் அனைத்து கடவுளிடமும் வேண்டிக்கொண்டு இருந்தாள்.

அடுத்தது மாணிக்கம் வழக்கு என்று சொன்னபிறகே தேவா தனது அறையில் இருந்து வெளியே வந்தான்.

மனதில் ஆயிரம் போராட்டம் இருந்தாலும் எப்போதும் போல் நிமிர்ந்த நடையுடன் முகத்தில் புன்னகை தவிழ தனது நாற்காலியில் சென்று கம்பிரமாக அமர்ந்தான் தேவா .

அவனது எதிர் தரப்பு வக்கீல் அவனை பார்த்து நக்கலாக சிரிக்க அவனோ அதற்கும் தனது சிரிப்பை மட்டுமே பதிலாக தந்தபடி அமர்ந்திருந்தான். அவனது நிமிர்வும் முதல் இரண்டு சாட்சிகளை அவன் கண்டு கொள்ளாமல் இருந்ததையும் பார்த்து அவர்களே குழம்பி விட்டனர்.தோற்று விடுவோம் என தெரிந்தும் இவன் எப்படி இப்படி அமர்ந்து இருக்கிறான் என புரியாமல் தவித்தனர்.இது தான் தேவா......எந்த ஒரு விஷயத்தையும் சட்டென்று தாக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை குழப்பி அவர்கள் அசந்த நேரத்தில் தனது வாதத்தின் மூலம் வென்று விடுவான்.

இருதரப்பினறிடியே கடுமையான விவாதம் ஆரம்பிக்க தேவாவின் கேள்விகளில் எதிர் தரப்பு சாட்சிகள் திணறி போயினர். எதிர் தரப்பினரும் அவனுக்கு ஈடு கொடுத்து வாதம் செய்தனர்......நீதிபதியே சில நிமிடம் இவர்களது கேள்வி திறனை பார்த்து அசந்து விட்டார். இவர்களை இப்படியே பேசவிட்டால் மறுபடியும் கேஸ் ஆரம்பத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்று நினைத்தவர் “இந்த கேஸ் தொடர்பான கால அவகாசம் முடிந்து விட்டது...அதனால் விரைவில் உங்கள் விவாதத்தை சுருக்கமாக முடியுங்கள் என்றவர் இடைவேளை முடிந்ததும் மீண்டும் விவாதம் தொடரும்” என்றார்.

தேவா வெளியே வரவும் ஒரு சிலர் “சாட்சிகளிடம் நீங்கள் கேட்ட கேள்வி அருமை சார்” என புகழ ஒரு சிலரோ “என்ன தேவா சார் கடைசியில் பனங்காட்டு நரி கதை போல் தானா உங்கள் நிலைமை “ என சொல்லி சிரிக்க தேவாவின் கட்சிகாரர் மாணிக்கம் அவன் அருகில் வந்தவர் “சார் எல்லாம் என்ன என்னமோ சொல்றாங்க சொத்தை எல்லாம் வித்து தான் இந்த கேஸ் நடத்திறேன்...நான் உங்களை நம்பறேன் ...... ஜெயிச்சிடுவோம்ல” என கவலையுடன் கேட்டார்.

அவனது தோளில் கை வாய்த்த தேவா “நம்பிக்கை மோசம் என்பது எனக்கு பிடிக்காத ஒன்று.....கண்டிப்பாக ஜெயித்து விடுவோம் என அழுத்தமாக சொன்னவன் நீங்கள் நிம்மதியாக இருங்கள் “என சொல்லிவிட்டு தனது அலுவலகத்திற்கு வந்தவன் மீண்டும் வழக்கு தொடர்பான தகவல்களை படித்து பார்த்தான்.

அவன் பின்னே வந்த பட்டாபியும் ரோஜாவும் அவன் எதிரில் நிற்க “பட்டாபி நீ சென்று நாதனை அழைத்து வா” என்றான்.

அவன் சென்றுவிட ரோஜா மட்டும் நின்று கொண்டு இருந்தாள்.அவள் முகம் கவலையில் வாடி இருக்க அவளை பார்த்தவன் லேசாக சிரித்தபடி “என்ன ரோஜா பசிக்கிறதா.....டீ வடை வேண்டுமா “என கேட்டான்.






 

Lashmi Ravi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
145

அவளோ “எப்படி அத்தான் இந்த சூழ்நிலையிலும் உங்களால் இப்படி இருக்க முடிகிறது......எப்படி அத்தான் சமாளிக்க போறீங்க.......என அவள் அழுபவள் போல் கேட்டவள் எனக்கே தெரியுது நம்மிடம் சாட்சிகள் பலம் இல்லை என்று அப்புறம் எப்படி இவ்ளோ நம்பிக்கையா இருக்கீங்க” என கேள்வியுடன் அவனை பார்க்க

அவனோ லேசாக சிரித்தபடி ரோஜாவின் அருகில் வந்தவன் “ரோஜா வக்கீல் தொழிலில் என்பது சாதரண தொழில் மாதிரி கிடையாது. ஒரு வழக்கில் எந்த நேரமும் எந்த நொடியிலும் மாற்றம் வரலாம். போனவாரம் வரை நமது சாட்சியாக இருந்தவன் இப்போது எதிர்த்தரப்பிற்கு மாறவில்லையா அது போலதான்.....வக்கீல் எப்போதும் தனது வாத திறமையில் நம்பிக்கை வைக்க வேண்டுமே தவிர மற்றவர்கள் மீது வைக்க கூடாது........எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது......சாட்சி என்பவன் அடையாளமே தவிர அவனை ஆட்டுவிப்பவனும் வக்கில்தான் என சிரித்து கொண்டே சொன்னவன் எதிரியின் சாட்சியில் இருந்து கூட நமக்கு தேவையான விளக்கங்களை நாம் எடுக்கலாம்....அதற்கு சூழ்நிலையை தன் வசபடுத்தும் திறன் இருந்தால் போதும் என சொன்னவன் இப்போதும் எனக்கு நம்பிக்கை இருக்கு.நான் ஜெயிப்பேன் என்று என அவன் அவனின் அழுத்தமான வார்த்தைகள் அவனது உறுதியை வெளிபடுத்தியது.

அவனது மனதிடத்தை பார்த்து அவள் மனம் பெருமிதம் அடைய “ஆனால் எல்லாரும் கோர்ட்டில் தேவா ஜெயிப்பது கடினம்...முக்கியமான சாட்சியே இப்போது எதிர்தரப்பில் இருக்கிறது...நீதிபதிக்கு சாட்சி தான் முக்கியம் அப்டின்னு சொல்றாங்க அத்தான்” என அவள் கவலையாக கேட்க .

“கண்டிப்பாக ரோஜா அவர்கள் சொல்வதும் சரிதான்.....ஆனால் அந்த சாட்சியை உடைப்பதற்கான வழிகள் இருக்கிறது...என்ன ஒரு குறை அவன் முதலில் சொன்ன சாட்சி விபரத்தை இப்போது மாற்றி சொல்கிறான்.....கேட்டால் அப்போது தனக்கு உடல்நிலை சரில்லை ...என்னை மிரட்டி சொல்ல சொன்னார்கள் என்று சொல்றான்.அது தான் இப்போ பெரிய பிரச்சனை” என்றான்.

“அத்தான் நான் ஒன்று சொன்னால் தப்பாக எடுத்து கொள்ளமாட்டீர்கள் தானே என்றவள் என்னிடம் ஒரு டாக்குமென்ட் இருக்கிறது.....அது உங்களுக்கு பயன்படுமா என்று பாருங்கள்” என அவள் கொண்டு வந்திருந்த பைலில் இருந்து அதை எடுத்தவள் ......”இது அந்த சாட்சி நமது அலுவலகத்திற்கு வந்த போது நீங்கள் இல்லை...அப்போது பட்டாபி அவன் சொல்வது புரியாமல் எழுதி கொடுக்க சொல்லி இருக்கிறான்.வெள்ளை தால் இல்லாததால் அருகில் இருக்கும் பாண்டு பேப்பரில் அவன் எழுதி கொடுத்துவிட்டு அமர்ந்திருக்க அதற்குள் நீங்கள் வந்து விட்டதால் பட்டாபி இதை அப்படியே விட்டு விட்டான்....அந்த சாட்சியும் உங்களிடம் பேசிவிட்டு சென்றுவிட்டான்.இனி இது தேவைபடாது என்று பட்டாபி ஓரத்தில் வைத்துவிட்டான்..நான் இந்த கேஸ் சமபந்தமாக எல்லா விபரங்களையும் பார்க்கும்போது எனக்கு இது கிடைத்தது.பட்டாபியிடம் கேட்டதற்கு இந்த விபரத்தை சொன்னவன் இது பயன்படாது என சொல்லிவிட்டான்.ஆனால் எனக்கு என்னமோ இதை வைத்து நாம் எதாவது பண்ணாலம் என்று தோனுகிறது” என அவள் சொல்ல சொல்ல

அவன் கண்கள் வியப்பில் விரிய “ஹே ரோஜா ........ஏன் இதை முன்னாடியே சொல்லலை” என வேகமாக அதை வாங்கி படித்து பார்த்தவன் அதில் அந்த சாட்சி தனது கருத்தை விபரமாக எழுதி இருந்தான்..ஆனால் அந்த பத்திரம் பதிவு செய்யபடாமல் இருந்தது.இதை எந்த அளவு சாட்சியாக எடுத்து கொள்வார்கள் என தேவாவிற்கு புரியவில்லை...ஆனாலும் என்ன செய்வது என தெரியாமல் தவித்து கொண்டு இருந்தவனுக்கு இந்த பத்திரம் பெரிய தைரியத்தை கொடுத்தது.

“இதை தான் நான் உங்ககிட்ட கொடுக்க நேற்று எடுத்துவந்தேன்...நீங்கதான் திட்டி அனுப்பிடிங்க” என அவள் அவன் மேல் புகார் சொல்ல

“அச்சோ சாரி ரோஜா...எனக்கு எப்படி தெரியும் நீ இதைதான் கொண்டு வந்திருக்கேன்னு....இது போதுமே எனக்கு...இனி பார் உன் அத்தானின் திறமையை என உற்சாகமாக சொன்னவன் அதை வைத்து எப்படி கேள்விகளை எழுப்புவது என யோசிக்க ஆரம்பித்தான்.அதற்குள் நாதன் வந்துவிட அவனும் இதை பார்த்ததும் மச்சான் வெற்றி நமக்கு தான்” என்றான்.

பின்னர் இடைவேளைக்கு பிறகும் மீண்டும் கோர்ட் ஆரம்பிக்க தேவா அங்கு சென்றுவிட ரோஜா பட்டாபியிடம் தான் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு செல்ல பட்டாபி மட்டும் தேவா உடன் இருந்தான்.

இறுதியாக சாட்சிகள் முழுவதும் அளித்த தொகுப்பினை எடுத்து கூற நீதிபதி வாய்ப்பு அளிக்க அப்போது தேவா இந்த பத்திரத்தின் நகலையும் சேர்த்து கொண்டவன் இதை பற்றிய விபரங்களை விசாரிக்க மீண்டும் ஒரு முறை அந்த சாட்சியை குறுக்கு விசாரணை செய்யவேண்டும் என்றான்.

சில நிமிடம் யோசித்த நீதிபதி இதுவே கடைசி வாய்ப்பு என சொல்லி அனுமதி அளித்தார்.அதற்கு பின்பு அந்த சாட்சியிடம் தேவா கேள்வி மேல் கேள்வி கேட்டு அவன் தான் இதை எழுதிகொடுத்தான் என அவன் வாக்குமூலமாகவே ஒத்துகொள்ள வைத்தான்.இறுதி திருப்பமாக யாரும் இதை எதிர்பார்க்கவில்லை.எனினும் இன்று நடந்த அனைத்து வாதத்தையும் வைத்து தான் நீதிபதி தீர்ப்பு வழங்குவார் என்பதால் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் அமர்ந்திருந்தனர்.



அனைவரின் முகத்திலும் பதட்டம் இருக்க தேவாவோ அமைதியாக தனது வேலையை பார்த்து கொண்டு இருந்தான்.சிறிது நேரத்தில் நீதிபதி தனது தீர்ப்பை வாசித்தவர் “இந்த வழக்கின் குற்றவாளி மாணிக்கம் என்பவர் தொடர்பான சாட்சிகளும் எதிர்தரப்பு தந்த சாட்சிகளும் வைத்து பார்க்கும் போது மாணிக்கத்தின் பக்கம் ஆதரங்கள் சற்று வலுவிழந்தாலும் இறுதியாக முக்கியமான சாட்சி ஆரம்பத்தில் ஒரு மாதிரி இறுதியில் ஒரு மாதிரி என மாற்றி மாற்றி பேசி இருப்பதால்,அவர்களை எதிர்க்கட்சி வக்கீல் மிரட்டியகாக இறுதியில் அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.அதை கவனத்தில் கொண்டு இது போல் மற்ற சாட்சிகளும் அவர்கள் இப்படி மிரட்டித்தான் வாங்கி இருப்பார்கள் என்ற சந்தேகம் வர அதை வழக்கு தொடர்ந்தவருக்கு சாதகமாக கொண்டு இந்த வழக்கில் மாணிக்கம் நிரபராதி என தீர்ப்பு அளிக்கிறேன். இறுதி நேரத்தில் மிக திறமையாக வாதாடி இந்த வழக்கின் போக்கை மாற்றிய mr இராகதேவன் அவர்களை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது.வக்கீலின் வாதம் திறமையாக இருந்தால் வழக்கின் போக்கை எந்த நேரத்திலும் திசை திருப்ப முடியும் என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம் என கூறியவர் இதை வளர்ந்து வரும் இளம் வழக்கரிஞர்களும் கற்றுக்கொள்ளவேண்டும் என சொல்லி இந்த தீர்ப்பை முடிக்கிறேன்” என்றார்.

தீர்ப்பு சொல்லி முடித்து அங்கு கைதட்டல் பலமாக எதிரொலிக்க , பனங்காட்டு நரி சலசலப்புக்கு சிங்கம் அஞ்சாதுன்னு தேவா நிருபிச்சுட்டார்...நான் கூட ஜெயிப்பது கஷ்டம்னு நினச்சேன்......மனுஷன் திறமையா வாதாடி வெற்றி பெற்று விட்டார் என பலர் அவனை வாழ்த்த

சந்தோசத்தில் பட்டாபி வேகமாக சென்று தேவாவின் கைபிடித்து வாழ்த்துக்கள் சொல்ல நாதன் அவனை அணைத்து தனது வாழ்த்தினை சொல்ல ,எதிர்க்கட்சி வக்கீலும்” இந்த முறையும் நீங்களே ஜெயித்து விட்டீர்கள் தேவா.......நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை.......எல்லா ஆதரங்கள் இருந்தும் ஒரு ஆதாரத்தில் எங்களை வென்றுவிட்டீர்கள்” என தனது ஆதங்கத்தை சொல்லிவிட்டு அதற்க்கு பின் வாழ்த்து சொன்னான்.

எப்போதும் போல் அனைத்து வக்கீல்களும் அவனை பாராட்ட தோற்று விடுவான் என்று சொன்னவர்கள் எல்லாம் இப்போது அது எப்படி இராகதேவன் தோற்ப்பார்...அவர் சட்டத்தையே கரைத்து குடித்தவராச்சே என மாற்றி பேசினார். அனைவரின் வாழ்த்துகளும் அவன் காதில் விழுந்தாலும் கண்களோ அதற்க்கு காரணமானவளை தேட அவனது முகத்தை வைத்து புரிந்து கொண்ட பட்டாபி வேகமாக அவன் அருகில் வந்து “ரோஜா கோவிலுக்கு போறேன்னு சொல்லிட்டு போனாங்க சார்” என்றான்.



முயன்றால் முடியாததது எதுவும் இல்லை

எப்பொழுதும் வெற்றி என்பது

சுனைக்குள் இருக்கும் நீரை போல

வெளியே தெரியாமல் மறைந்திருந்தாலும்

சரியான இடத்தில் அதை

தோன்டினால் சுவையான நீரை பருகலாம்.

சூழ்நிலைகள் அனைத்தும் பாதகமாக

இருந்தாலும் சோர்வடையாமல்

தனது இலக்கை மட்டுமே குறிவைத்தால்

வெற்றிக்கனி எப்போதும் நம் கையில்

அது தொழிலுக்கும் பொருந்தும்

காதலுக்கும் பொருந்தும் !!!!!!

உண்மைதானே தோழிகளே!!!!!!!!!!!!!!!!!!
 
Top