• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் - 28

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
அத்தியாயம் -28



சிறிது நேரத்தில் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்க மெதுவாக அவளிடம் இருந்து எழுந்தவன் சென்று பார்க்க அங்கு கோவிந்தன் நின்று கொண்டு இருந்தான்.

“மன்னிக்கணும் சார் மணி நான்கு ஆகிவிட்டது.......நீங்கள் மதிய உணவிற்கும் வரவில்லை...அதுதான் இப்போது எதாவது வேண்டுமா என கேட்க வந்தேன்” என்றான்.

“அச்சோ மதியம் செய்த உணவு வீணாகிவிட்டதா” என தேவா கவலை பட

அது ஒன்றும் பிரச்சனை இல்லை சார்......இரவு உணவிற்கு ற்கு சரி பண்ணிவிடலாம்....இப்போது உங்களுக்கு டிபன் ஏதாவது” என அவன் கேட்க

உடனே தேவா “ஆமா கோவிந்தன்...சோலாபூரி செய்துவிடு...அப்புறம் இங்கு ரவாலட்டு யாருக்கு செய்ய தெரியும்” என கேட்டான் தேவா.

“நம்ம சரசம்மாவுக்கு எல்லா இனிப்பு பலகாரமும் தெரியும் சார்” என அவன் சொல்ல

“சரி அதையும் செஞ்சுட்டு எனக்கு போன் பண்ணு....நானே வருகிறேன்” என சொல்ல கோவிந்தனும் சரி என்றான்.

பின்னர் தேவா உள்ளே செல்ல படுக்கையில் ரோஜா இல்லை.குளியல் அறையில் இருந்தாள்.

அவன் அருகில் இருக்கும் நாற்காலில் அமர்ந்தவன் மனம் முழுவதும் சந்தோசம் ததும்பி வழிய அப்படியே கண் மூடி இருந்தவன் ரோஜாவின் முகம் அவன் கண்ணில் வர எவ்ளோ மென்மையானவள் இவள்..... இவள் எனக்கு மனைவியாக வர நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என நினைத்தவன்

நினைவுகள் மனதிற்கு சுகம் தர அதே நேரத்தில் அவள் விழித்த உடன் அவளது முகத்தை பார்க்காமல் விட்டுவிட்டோமே......இந்த நிகழ்வு இருவரும் எதிர்பார்க்காதது தான் என்றாலும் அவளின் மனநிலை என்ன என தெரியாமல் நாம் நடந்து கொண்டது தவறோ என திடிரென்று ஒரு எண்ணம் அவனுக்கு தோன்றியது.

ஆனால் அவனது அறிவோ நீ என்ன முட்டாளா....அவளது ஒத்துழைப்பு இருந்ததால் தான் இந்த அளவு உன்னால் நடந்து கொள்ள முடிந்தது.....ஒரு பெண் வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டாள் யாராலும் அவளிடம் நெருங்க முடியாது.......அது எந்த சூழ்நிலையாக இருந்தாலும் சரி.....இயற்கையாகவே அவளிடம் இருக்கும் தற்காப்பு உணர்வுகள் அவளுக்கு அதை உணர்த்தி விடும்........அதனால் நீ தேவை இல்லாமல் போட்டு குழப்பி கொள்ளாதே என அவனை தலையில் தட்டி அமைதிபடுத்தியது.

இப்படி பல யோசனையுடன் அவன் அமர்ந்திருக்க கதவை திறந்து கொண்டு ரோஜா வெளியே வர திரும்பியவன் இமைக்க மறந்து அவளையே பார்த்து கொண்டிருக்க

அதிகாலை நேரத்தில் மலரின் இதழில் படிந்திருக்கும் பனித்துளி போல் அவள் முகத்தில் ஆங்காங்கே நீர்த்துளிகள் இருக்க,வெட்கத்தால் அவள் கன்னம் சிவந்திருக்க ,நாணத்தால் தலை குனிந்து நின்றவளின் அருகில் மெல்ல வந்தவன்

இதுவரை மலர்கள் மலரும்

நேரத்தை நான் கண்டதில்லை

இப்போது கண்டுகொண்டேன்

தயவு செய்து மலர்களின் அருகில்

நீ சென்றுவிடாதே

உந்தன் முன்னால் அவைகளின்

மதிப்பு குறைந்துவிடும்....

இயற்கையின் கொடையை

என்னவள் அழித்ததாக

நாளை வரலாறு பதிந்துவிடும்

வேண்டாம் ரோஜா

பாவம் அவைகள் பிழைத்து போகட்டும்!!!!!!



“இப்போது உன்னுடைய தோற்றம் எனக்கு இந்த வரிகளை நியபாக படுத்துகிறது ரோஜா” என சொன்னவன் அவளது முகத்தை கையில் ஏந்தி அவள் கண்ணோடு தனது கண்களை கலக்கவிட அவளோ அதன் வேகம் தாங்காமல் தலை குனிந்தவள்...”என்ன அத்தான் இது என்னனமோ உளறிங்க” என வெட்கபட்டுகொன்டே வாய்க்குள் முனகினாள்.

உடனே தேவா “அடிபாவி எவ்ளோ கஷ்டப்பட்டு ஒரு கவிதை சொல்றேன்....அதை உலரேனு சொல்ற நீ” என அவன் முகத்தை சோகமாக வைத்து கொண்டு சொல்ல

அதை கேட்டதும் “என்னது கவிதையா” என வேகமாக கேட்டுகொண்டே அவள் நிமிர்ந்தவள் அவன் முகத்தை பார்த்ததும் பேச்சு வர மறுக்க ...அவனோ “ம்ம்ம் ஏன் உனக்கு தெரியாதா” என காதலோடு கேட்டுகொண்டே அவள் அருகில் நெருங்கி வந்தான்.

“எனக்கா கவிதை தெரியாது......நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே” என அவள் ஆரம்பித்ததும்

“அம்மா தாயே போதும் ...வேண்டாம்......என்னால மொட்டை எல்லாம் அடிக்க முடியாது என அவன் முகத்தை பாவமாக வைத்துகொண்டு கண்களில் சிரிப்போடு சொன்னான்.

“மொட்டையா” என யோசித்தவள் “அத்தான்...பாட்டி ஏதாவது சொன்னாங்களா “ என ஒற்றை விரலை காட்டி அவனை முறைக்க

அவன் சிரித்து கொண்டே .... ஆமாம் இல்லை என இரண்டு பக்கமும் தலை அசைத்தவன் ”உன் அத்தான் பாவம்ல விட்டுடுமா” என கெஞ்சியவாரே அவள் அருகில் வந்தான்.

“வேண்டாம் அத்தான்....இப்பதான் குளிச்சேன்.....வேண்டாம் என சொல்லிபடியே” அவள் பின்னால் செல்ல

“அதனால என்ன அம்லு...இன்னொருமுறை உன் அத்தான் உனக்கு குளிச்சுவிட்றேன் என சொல்லிகொண்டே அவளை இழுத்து அணைத்தவன் ஹே அம்லு மயக்கறடி....அதும் இந்த உடையில்” மாற்று துணி இல்லாததால் அவள் வெறும் துண்டை மட்டுமே கட்டி இருந்தாள்.

“வேண்டாம் அத்தான் போதும் கிளம்பலாம்” என அவன் அணைப்பில் நெகிழ்ந்து கொண்டே சொல்ல

“இன்னொருமுறை அம்லு ப்ளீஸ்..ப்ளீஸ் “ என்றவன் அவள் பதிலை எதிர்பாராமலே தனக்கு வேண்டியத்தை எடுத்து கொண்டான் அந்த ராகன் .



இருவரும் களைப்பில் மீண்டும் உறங்கிவிட இப்போதும் தேவா தான் முதலில் விழித்தான்.அவளது உச்சந்தலையில் ஒரு முத்தத்தை பதித்தவன் “தேங்க்ஸ் அம்லு” என்றவாறே எழுந்து குளியல் அறை நோக்கி சென்றான்.

அவன் கிளம்பி வந்த பின்பும் அவள் உறங்கி கொண்டு இருக்க அவள் அருகில் அமர்ந்து அவள் தலையை மெதுவாக கோதிவிட்டவன்.....”.வெகு நாட்களுக்கு பிறகு ரொம்ப திருப்தியா சந்தோசமா இருக்கேன் அம்லு...தேங்க்ஸ்டா ......எனக்கு உன்கிட்ட பிடிச்சதே உன்னோட குறும்புதான் அம்லு......ஆனால் இப்போ” என சொல்லி தனக்குள்ளே சிரித்து கொண்டவன் “என் செல்ல அம்லு...என் புஜ்ஜு அம்லு ” என கொஞ்சிவன் அதற்குள் கோவிந்தன் அவனை அழைக்க டிபனை தனது இடத்திற்கே கொண்டு வர சொன்னான் தேவா.

பின்னர் ரோஜாவை எழுப்பி அவளும் குளித்த பின் இருவரும் சாப்பிட அமர்ந்தனர்.

இந்த முறை ரோஜா தேவாவிடம் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க அவளுக்கு தேவையானதை கேட்டு அவன் தான் பரிமாறினான்.சாப்பிட்டு முடித்ததும் சரி கிளம்பலாம் என வெளியே வந்தவள் இருட்டி இருக்க அப்போது தான் அவள் கடிகாரத்தை பார்த்தாள்.மணி ஏழு என்று இருக்க “அச்சோ இவ்ளோ லேட் ஆகிடுச்சு .......ரதி வேற தனியா இருப்பாளே” என ரோஜா பதற

தேவாவோ “நான் போன் பண்ணி சொல்லிட்டேன் ரோஜா...வேலைக்கார அம்மா கூட இருப்பாங்க” என்றவன் பின்னர் இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.

வீட்டில் அழைப்பு மணி ஓசை கேட்டு வேகமாக வந்து கதவை திறந்த ரதி எதிரில் பூ செண்டோடு நிற்பவனை பார்த்து அதிர

அவனோ “நான் உள்ளே வரலாமா ரதிதேவி மேடம்” என சிரித்து கொண்டே கேட்டான் ராம்.

அவளோ “வாங்க ...வாங்க” என சொல்லியபடி நகர்ந்தவள் அவன் உள்ள வந்த பின்னரும் அவள் கதவின் அருகிலே நின்றாள்..

அதற்குள் வேலை செய்யும் பெண்மணி அங்கு வர “எங்கு ரோஜாவை காணோம்” என ரதியிடம் கேட்டான் ராம்.

அதற்குள் அந்த பெண்மணி “ஐயாவும் அம்மாவும் வெளியே போயிருக்காங்க...இப்போ வந்திடுவாங்க ...இருங்க உங்களுக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வரேன்” என சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

“ஓ யாரும் இல்லயா சரி ... இன்று நடந்த வழக்கில் தேவா ஜெயித்து விட்டான். அதற்கு வாழ்த்து சொல்ல வந்தேன் ...பரவாயில்லை நாளை பார்த்து கொள்கிறேன் நான் கிளம்புகிறேன்” என சொல்லிவிட்டு அவன் எழ

“ஏன் அதுக்குள்ள கிளம்பரிங்க” என வேகமாக ஒரு குரல் வர

அவனோ ஆச்சரியத்துடன் திரும்பி பார்க்க

அங்கு நாக்கை கடித்தபடி ரதி நின்று கொண்டிருந்தாள்.

“இல்லை கொஞ்ச நேரத்துல அண்ணா வந்திடுவேன்னு சொன்னாக..அதான்” என அவள் இழுக்க

அவனோ “நீ சொன்னபிறகு நான் மறுப்பேனா முல்லை மலர் என கொஞ்சும் குரலில் சொன்னவன் ....எவ்ளோ நேரம் ஆனாலும் இருந்து பார்த்திட்டே போறேன்” என சொல்லிவாரே சாய்ந்து அமர்ந்தான்.

சற்று நேரம் அங்கு அமைதி நிலவ ...”ஏன் ரதி என்னை பார்த்தால் கதவு திருடன் போல் தெரிகிறதா ......அதை விடாமல் பிடித்துகொண்டே நிற்கிறாய்” என அவன் கிண்டலாக கேட்டான்.

உடனே அங்கிருந்த நகர்ந்தவள் “அதெல்லாம் இல்லை......சும்மாதான் என்றவள் எனக்கு கொஞ்சம் படிக்கிற வேலை இருக்கு.....நான் போகிறேன்” என சொல்லிவிட்டு அவள் நகர

“எனக்கும் கொஞ்சம் போனில் sms பண்ற வேலை இருக்கு ....நானும் ஆரம்பிச்சிடறேன்” என அவன் அவளை ஓரகண்ணால் பார்த்த படி சொன்னான்.

அவளோ “வேண்டாம்...வேண்டாம்...நான் இங்கே இருக்கேன்” என பயந்து அருகில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்தாள் ரதி.

“ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும் “என அவன் அழுத்தி சொல்ல

அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தவள் அவன் புருவத்தை உயர்த்தி என்ன என கேட்க உடனே தலைகுனிந்து கொண்டாள்.

அன்று கல்லூரியில் ராம் அவளை போன் பண்ண சொல்ல அவள் மறந்து விட்டாள்.மறுநாள் மீண்டும் அவன் கல்லூரிக்கு வந்து விட்டான்.இந்த முறை பிரின்சிபால் அவனை பார்த்து என்ன விஷயம் என கேட்க அவனும் அதே பதிலை சொன்னான்.ரதியை அவர் ஒரு பார்வை பார்த்து கொண்டே அவரும் செல்ல

“அய்யோ என்ன ராம் நீங்க...ஏன் இப்படி பண்றிங்க...பாருங்க ப்ரின்சி என்னை சந்தேகமா பார்க்கிறார்.......என்னை விட்டுடுங்களேன் ப்ளீஸ்” என கெஞ்சினாள்.

“இங்கு பாரு ரதி...நான் நேற்றே உன்னிடம் சொன்னேன்...நீ எனக்கு போன் செய்யலைனா கல்லூரிக்கு வந்திடுவேன்னு சொன்னேன்...நீ எனக்கு போன் செய்யலை...அதுநாள் இங்க வந்தேன்” என அவன் அசால்ட்டாக சொல்ல

“கடவுளே......உங்களுக்கு என்ன சொல்லி புரிய வைக்கிறது” என அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே “ஹே ரதி அனாட்டமி வகுப்பு இப்போ நீ வரலியா” என ஒரு குரல் கேட்க

“இதோ வந்திடறேன் என்றவள் சரி இன்னைக்கு கூப்பிட்றேன்...முதல்ல இடத்தை காலிபன்னுங்க” என சொல்லிபடி அங்கிருந்து ஓட அவனும் சிரித்துகொன்டே “உனக்கு எல்லாம் அதிரடி வைத்தியம் தான் முல்லை மலர் ஒத்துவரும்” என சொல்லிகொண்டே திரும்பி நடந்தான்.

அதன் பின்னர் அவள் அலைபேசியில் அழைக்க ராம் மட்டுமே பேசிக்கொண்டு இருப்பான்.அவளிடம் இருந்து ம்ம்ம் என்ற பதில் மட்டுமே வரும். ஆனாலும் அவன் தினமும் ஹலோ என்ற அந்த ஒரு வார்த்தைக்காக அவளுக்காக காத்திருப்பான். அதனால் சில நேரம் sms அனுப்புவான்.

அங்கு சிறிது நேரம் அமைதி நிலவ “ரதி நான் சொன்னதை யோசிச்சு பார்த்தியா” என ராம் தனது பேச்சை ஆரம்பிக்க

அவளோ திடுகேன்று நிமிர்ந்து சுற்றிலும் பார்த்தவள் வேலை செய்யும் அம்மா இல்லை என்ற தெரிந்த பின்னர் நிம்மதியுடன் அவன் முகம் பார்த்தவள் ...அவள் வாய் பேசவில்லை என்றாலும் கண்களில் என்னை விட்டுவிடுங்களேன் என்ற கெஞ்சல் தெரிந்தது.

அதை பார்த்த ராமின் மனம் வேதனை பட ...”ரதிம்மா இங்கே வா” என தன் அருகில் அழைத்தான் ராம்.அவன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அவன் அருகில் இருக்கும் மற்றொரு சோபாவில் அமர்ந்தவள் ...”என்ன ராம்” என்றாள்.

“என்னை உனக்கு பிடிச்சு இருக்கு தானே” என அவன் கேட்க

அவளோ “ஆம்” என்று தலை ஆட்டியவள் நிமிர்ந்து கண்களில் கண்ணீர் நிற்க அவனை ஒரு பார்வை பார்த்தாள்.

“அப்போ நம்ம இரண்டு பேரும் திருமணம் செய்யறதுல என்ன பிரச்சனை.......தேவாவை நினைச்சு பயபட்ரியா...நான் அவன்கிட்ட பேசறேன்” என்றான் ராம்.

“இல்லை ராம்....என்னோட கவலைய வேற அது சொன்னா உங்களுக்கு புரியாது....விட்டுடுங்க ப்ளீஸ்” என அவள் அழுதுகொண்டே அவள் சொல்ல .

“உனக்கு என்ன பைத்தியமா ரதி” என கோபத்தில் அவன் வேகமாக கேட்க

“அச்சோ ஏன் இப்படி கத்தரிங்க” என சுற்றிலும் பார்த்தபடி அவன் வாயின் மேல் அவள் கைவைத்தவள்

அவளது தொடுகை அவனுள் கோபத்தை தனித்து சந்தோசத்தை ஏற்படுத்த அவள் கையை தன் வாயில் இருந்து எடுத்தவன் தன் கைகளுக்குள் அடக்கி கொண்டான்.

ரதியோ “வேண்டாம் ராம்.......ப்ளீஸ் கையை விடுங்க....வேலை செய்யற அம்மா பார்த்திட போறாங்க” என கெஞ்ச

அவனோ “அப்போ நீ சொல்லு...என்ன பிரச்சனை உனக்கு ...எதுக்கு திருமணம் வேண்டாம்னு சொல்ற.....எதா இருந்தாலும் நான் பார்த்துகிறேன்.....உன்னை பத்தி எனக்கு எல்லாம் தெரியும்......நீ உண்மைய சொல்லு” என்றான்.

...”அதான் பிரச்சனயே என வேகமாக சொன்னவள் என்னை பத்தி என்ன தெரியும் உங்களுக்கு நான் யாருன்னு தெரியுமா?” என வேகமாக கேட்க

“அது ஊருக்கு தெரியுமே” என்றான் ராம்.

“அது ஊருக்கு மட்டும்தான் ...உண்மையாவே நான் ராகதேவன் தங்கை அல்ல” என அவள் சொல்ல ராமும் ஒரு நிமிடம் திகைத்துவிட்டான்.

“என்ன சொல்ற ரதி நீ” என அதிர்ந்து கேட்டவன் “அப்போ நீ” என நிறுத்த

“நான்...நான்.....அதான் எனக்கே தெரியலை” என சொல்லும்போதே அவள் வெடித்து அழுக

“ரதிஈஈஈ என வேகமாக அவள் அருகில் சென்றவன் என்ன உளற...இல்லை நீ பொய் சொல்ற.......ஹே இங்க என்னை பார் என அவளின் அருகில் சென்றவன் அவளோ தனது கைளில் முகத்தை மூடிகொண்டு கதற என்ன செய்வது என தெரியாமல் அப்படியே நின்று கொண்டு இருந்தான்.

சத்தம் கேட்டு வெளியே வந்த வேலை செய்யும் அம்மா அவனை ஒரு மாதிரி பார்க்க....”ஒண்ணுமில்லை கொஞ்சம் தண்ணீர் எடுத்து வாங்க” என்றான் ராம்.

அவர் எடுத்து வந்ததும் அவளை கட்டாயபடுத்தி குடிக்க சொன்னவன் “ரதி இங்கு பார்...நீ எதுவும் சொல்லவேண்டாம்.......நீ இப்போ போய் தூங்கு...எதா இருந்தாலும் காலையில் பேசிக்கொள்ளலாம்” என சொன்னவன் வேலை செய்யும் பெண்மணியிடம் அவளை பார்த்துக்க சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.



வீட்டிற்கு வந்தவன் மனம் முழுவதும் ராதியின் வேதனை நிறைந்த முகமே நிறைந்து இருக்க...அப்படி என்ன அவள் வாழ்க்கையில் நடந்து இருக்கும்......இராகதேவன் அவளோட அண்ணன் இல்லைனு சொல்றா அப்டினா என அவனது சிந்தனை எங்கெங்கோ செல்ல ராகதேவனை பற்றி ராமிற்கும் ஒரளவு தெரியும்.....இங்கு எல்லாரும் ரதியை தேவாவின் தங்கை என்றுதான் சொல்கிறார்கள்......ஆனால் இவள் இப்படி சொல்கிறாள் என யோசித்தவன் ஒன்றும் புரியாமல் குழம்பி போக இறுதியில் எது எப்படி இருந்தாலும் முல்லை மலர்தான் என் மனைவி அது உறுதி என்ற முடிவோடு உறங்கி போனான்..

இரவு காரில் வரும் வழியில் தேவா ரோஜா இருவரும் ஏதும் பேசவில்லை.இருவருமே சந்தோசமான மனநிலையில் இருந்தாலும் அதன் வெளிபாடு மௌனமாக இருந்தது.வீட்டிற்குள் நுழைந்ததும் வேலைக்கார பெண்மணி தேவாவிடம் விஷயத்தை சொல்ல அருகில் இருந்த ரோஜா வேகமாக ரதியின் அறைக்கு சென்றாள்.

இருவரும் உள்ளே சென்று பார்த்த போது ரதி நல்ல உறக்கத்தில் இருந்தாள்..... அதை பார்த்ததும் தேவா “பாவம் அசந்து தூங்குகிறாள் நாளை அவளிடம் பேசிக்கொள்ளலாம்” என சொல்லிவிட்டு வெளியே வந்தான்.ஆனால் ரோஜாவிற்கோ அவள் முகம் பயத்தில் வெளிறி போயிருப்பதை கண்டு கொண்டாள். மேலும் ராம் வந்து சென்றான் என சொல்லவும் ரோஜாவிற்கு ஏதோ நடந்திருக்கிறது என புரிந்துவிட்டது.

இனியும் இதை இப்படியே விடக்கூடாது என்ற எண்ணத்துடன் அவள் மேலே வர தேவா அலைபேசியில் ராமிடம் பேசிக்கொண்டு இருந்தான்.ரோஜாவை பார்த்ததும் “இதோ ரோஜா வந்துவிட்டாள் அவளிடம் பேசிவிடு” என அலைபேசியை கொடுக்க அதை வாங்கி காதில் வைத்தவள் எதிர்புறம் இருந்து எந்த பேச்சும் வரமால் இருக்க

“நான் அவ்ளோதூரம் உங்ககிட்ட சொன்னேன்ல மாம்ஸ்...அவசரபாடதிங்கனு” என அவள் ஆரம்பிக்க

ராமோ “சாரி ரோஜா நான் ஏதும் சொல்லல....கல்யாணம் செஞ்சுகலாமா அப்டினுதான் கேட்டேன் என்றவன் அலைபேசியில் நடந்ததை சொல்ல அவளோ அதை கேட்டதும் இப்படிதான் இருக்கும்னு நானும் நினச்சேன்” என்றாள்.

உடனே ராம் “என்ன நினச்சே ரோஜா.....ரதி யாருன்னு உனக்கு தெரியுமா ...அப்போ நிஜமாவே தேவா தங்கை இல்லயா அவ” என வேகமாக கேட்டான்.

“எனக்கும் முழு விபரம் தெரியாது மாம்ஸ்.....அவரே இன்னைக்குதான் என்கிட்டே அவரோட அம்மா அப்பாவ பத்தி சொன்னாரு.....அப்போ அவரு ஒரே பையன் தான் சொன்னாரு.....அப்போ இந்த ரதி அந்த பாட்டி” என அவள் இழுக்க

“என்ன ரோஜா...என்ன சொல்ற நீ” என அவன் புரியாமல் கேட்க

அதற்குள் “ரோஜா” என தேவா அழைக்கவும் “நான் நாளைக்கு எல்லாம் விபரமா சொல்றேன் மாம்ஸ்.....இப்போ தேவா கூப்பிட்றார்” என சொல்லிவிட்டு அலைபேசியை அனைத்தாள் ரோஜா.

யோசனையுடனே அவள் உள்ளே வரவும் “என்ன ரோஜா என்ன யோசனை” என்றான் தேவா.

இவனிடம் கேட்டால் முழுவிபரம் கிடைக்காது என நினைத்தவள் “ஒண்ணுமில்லை அத்தான்..... நான் வேண்டுமானால் இன்று ரதி உடன் படுத்து கொள்ளட்டுமா” என கேட்டாள் ரோஜா.

“ஏன்”.... என வேகமாக வார்த்தை வெளிவர

ரோஜா நிமிர்ந்து தேவாவை பார்க்க

அவனோ “இல்லை அம்லு......அங்க போய் படுத்தே ஆகணுமா என்று முகம் வாட கேட்டவன் ...சரி அம்லு ரதியும் சின்ன பொண்ணு ...ராம்கிட்ட ரொம்ப நேரம் படிச்சதால் தலை சுத்தறமாதிரி இருக்குனு சொன்னாளாம்....சரி நீ போய் அவளுடன் படுத்துகொள்” என கொஞ்சம் சோகமாக சொன்னவன் அவளுடன் வந்து ரதியின் அறையில் இருவருக்கும் தேவையானதை செய்து கொடுத்திவிட்டு தனது அறைக்கு திரும்பினான்.

சிறிது நேரத்தில் ரதியிடம் இருந்து தூக்கத்தில் “...ராம்...ராம் ......கடவுளே இந்த உண்மை உங்களுக்கு தெரிஞ்சா...வேண்டாம்...வேண்டாம் “என உளற ரோஜாவோ அவள் அருகில் சென்று அமர்ந்தவள் “ரதி...ரதி என்னாச்சு......என்ன வேண்டாம்” என அவளை உலுக்கினாள்.

“நீ வேணும் ராம் எனக்கு...நீ வேணும் என மீண்டும் உளறியவள் ....விடமாட்டேன்...உன்னை விடமாட்டேன்” என கத்திகொண்டே வேகமாக படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தாள் ரதி .

அவளது செய்கை ரோஜாவிர்க்கே சிறிது பயத்தை வரவழைக்க ...”ரதி இங்கு பாரு...ஒன்றுமில்லை...இங்குபார் “ என அவளை உலுக்கி முகத்தில் சிறிது தண்ணீர் அடித்து நிதானத்திற்கு கொண்டுவந்தாள் ரோஜா.

சில்லென்று தண்ணீர் பட்டுதும் இயல்புநிலைக்கு வந்த ரதி சுற்றிலும் பார்க்க அருகே ரோஜா அமர்ந்திருப்பதை பார்த்தவள் ...அவள் கழுத்தில் கைபோட்டு கட்டி பிடித்து கொண்டு எதுவும் சொல்லமால் கத்தி அழுக ரோஜாவோ அவள் முதுகை தடவி கொடுத்தபடியே “ஒன்றுமில்லை ரதி......நாங்கள் இருக்கிறோம்...நீ எதற்கும் பயப்படாதே” என ஆறுதல் சொல்லிக்கொண்டு இருந்தாள் ரோஜா .

சிறிது நேரம் அழுது முடித்தவள் பின்னர் வேகமாக எழுந்து முகம் கழுவிக்கொண்டு வந்து அமர்ந்தவள் ....”சாரி ரோஜா......ஏதோ கெட்ட நினைவுகள் என சொல்லும்போதே குரல் தடுமாற அதான் கொஞ்சம் உணர்ச்சி வசப்ட்டுடேன்......நீங்க தப்பா எடுத்துகாதிங்க......நீங்க எப்போ வந்தீங்க.....அண்ணா எங்க” என சாதரனமாக கேட்பது போல் கேட்க

“நாங்க அப்பவே வந்திட்டோம்...இப்போ மணி ஒன்று......நன்றாக தூங்க வேண்டிய நேரத்தில் நீ இப்படி உளறிட்டு இருக்க.....பரவாயில்லை ரதி......என்னை உன் அண்ணியாக நினைக்கவேண்டம் தோழியாக நினைத்தால் என்னிடம் மனம் விட்டு பேசு” என அவளின் நிலை அறிந்து ரோஜா ஆறுதலாக பேச

அப்படி எல்லாம் எதுவும் இல்லை ரோஜா என சிரிக்க முயன்று வராமல் ரதி தடுமாறினாள்.

“சரி ரதி....உன்னை தொந்தரவு பண்ணவில்லை...நீ படுத்து தூங்கு...ஆனால் தூங்கும்போது ஒன்றை நினைவு வைத்துகொள்......உனக்கு எந்த கஷ்டம் வந்தாலும் உனது தோழி ரோஜா என்று ஒருத்தி இருக்கிறாள் என்பதை மட்டும் மறந்து விடாதே” என ஒவ்வொறு வார்த்தையும் அழுத்தி சொல்ல சட்டென்று அவள் கைகளை பிடித்த ரதி “என்னை மன்னிச்சுடு ரோஜா.....இது சொல்லி ஆறுதல் தேடும் பிரச்சனை அல்ல......என் மனதிற்குள்ளே மருகி என்னோடு மண்ணோடு மண்ணாக புதைந்து போகும் விஷயம் ...அதனால் தான்” என அவள் இழுக்க

“உனது பிரச்னையை கேட்டு தீர்வு சொல்வதற்காக நான் இதை கேட்க வில்லை ரதி ....அதை சொல்லும் வயதும் அனுபவமும் எனக்கு இல்லை...ஆனால் பகிர்ந்து கொள்ளலாம் இல்லையா.....ரொம்பவும் மனதிற்குள்ளே புதைத்தால் ஒரு நாளில் அது வெடித்து விளைவுகள் விபரீதமாகிவிடும்......இது என் பாட்டி எனக்கு அடிகடி சொல்வது ரதி......நானும் உன்னை போல்தான்......என் வாழ்விலும் பல துன்பங்கள் இருக்கின்றன...ஆனாலும் எனது துன்பத்தை சிலுவை போல் சுமக்க ராம்சரண் என்ற ஒரு நல்ல மனிதனை ஆண்டவன் எனக்கு கொடுத்து இருக்கிறான்.

அதனால்தான் சொல்கிறேன்...உன் நிலையில் இருப்பவள்தான் நானும்..... வலி வேதனை அனுபவிப்பவர்கள் மட்டுமே உணரகூடியது என்று எனக்கும் தெரியும் .....ஆனால் எதுவுமே அளவுக்கு மீறும்போது அதை வெளியே கொட்டிவிடவேண்டும்......அதற்கான குப்பைத்தொட்டியாக என்னை நீ நினைத்து கொள்” என அவள் சொல்ல


 

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
“என்ன ரோஜா நீ ...குப்பை தொட்டி என்று எல்லாம் சொல்கிறாய்...நீ எங்கள் வீட்டு மகாலஷ்மி என சொன்ன ரதி ஆனால் இது எப்படி ஆரம்பிப்பது என்றுதான் எனக்கு புரியவில்லை” என அவள் தடுமாற

அவளது தடுமாற்றத்தின் காரணத்தை உணர்ந்த ரோஜா “ராம் மாம்ஸ் என்கிட்டே இப்போ பேசினார்” என அவள் கண்களை பார்த்துகொண்டே சொன்னாள்.

ரதியோ அதிர்வுடன் அவளை பார்க்க

ரோஜாவோ “எனது திருமணதிற்கு முன்பே உன்னை பற்றி ராம் என்கிட்டே சொல்லி இருக்கார்” என்றவள் அவன் சொன்னதை சொல்ல சொல்ல அவனின் காதலின் ஆழத்தை உணர்ந்த ரதியின் முகத்திலோ பெருமிதமும் சந்தோசமும் நிறைந்து இருந்தது. ஆனால் சட்டென்று முகம் வாட

“வேண்டாம்...வேண்டாம் ரோஜா...அதற்கான தகுதி எனக்கு இல்லை என வேகமாக சொன்னவள் ...நான் இதுவரை அதிர்ஷ்ட்டகாரி என்று தான் என்னை நினைத்து கொண்டு இருந்தேன்...இன்றுதான் நான் எவ்ளோ பெரிய துரதிஷ்ட்டவாளினு எனக்கு புரிஞ்சுது “என வேதனையோடு சொன்னாள் ரதி.

“ஏன் ரதி அப்படி சொல்கிறாய்.....உனக்கு ராம் மாம்ஸ் பிடிக்கலையா” என ரோஜா கேட்க

“அய்யோ என்ன வார்த்தை சொல்லிவிட்டாய் ரோஜா.......அவரை யாருக்காவது பிடிக்காமல் போகுமா.....ஆனால் அவருக்கு மனைவி ஆகும் தகுதி எனக்கு இல்லை” என சொல்லும்போதே அவள் முகம் வேதனையில் சுருங்க

“ஏன் அப்படி சொல்கிறாய் ரதி....உனக்கு என்ன குறை......நல்ல அழகு ,நல்ல படிப்பு,நல்ல குடும்பம்” என சொல்ல

“ஆனால் நான் நல்லவள் இல்லே ரோஜா என வேகமாக சொன்ன ரதி......நான் நல்லவள் இல்லே ....என்னோட பிறப்பு ஒரு அசிங்கம் ரோஜா.......அப்பா யார் என்றே எனக்கு தெரியாது என்றவள் நிமிர்ந்து ரோஜாவின் முகத்தை பார்த்து இப்போது எனக்கு இருக்கும் அடையாளம் தேவா அண்ணன் எனக்கு போட்ட பிச்சை என சொன்னவள் நான் தேவா அண்ணனின் கூடபிறந்த தங்கை இல்லை ரோஜா” என கூற

ரோஜாவோ அதை முன்பே அறிந்து இருந்ததால் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் அவள் பேசுவதை கேட்க ரதியும் மடை திறந்த வெள்ளம் போல் தனது மனதில் உள்ள பாரத்தை கொட்டி தீர்த்தாள்.

“தேவா அண்ணனின் தூரத்து சொந்தம் நாங்கள்.அதும் என் பாட்டி தான் உதவிக்காக அண்ணன் வீட்டிற்க்கு வந்தார். அப்போது என் அம்மா படித்து கொண்டு இருந்தார்.அதற்க்கு அண்ணனின் அம்மா தான் உதவி செய்து இருக்கிறார். படிக்கும் வயதில் ஒரு கயவனின் மாய பேச்சில் மயங்கி அவனுடன் சென்று விட்டாள்.சிலகாலம் வைத்து இருந்தவன் பின்னர் அம்மாவை கொடுமைபடுத்த அப்போது நான் அவரின் வயிற்றில் இருந்தேன்.....நம்பி வந்தவன் மோசமானவன் என்று தெரிந்த அதிர்ச்சியில் அம்மாவின் மனம் மிகவும் பாதிக்கப்ட பிரசவநேரத்தில் அவன் என் அம்மாவை விட்டுவிட்டு சென்றுவிட்டான்.பிரசவம் பார்க்க யாரும் உடன் இல்லாமல் அம்மா மிகவும் சிரமப்பட நான் பிறந்த சில நாட்களில் அவர்கள் முழு மனநோயாளியாகி விட்டனர்.பின்னர் பாட்டிக்கு விபரம் தெரிந்து எங்களை அழைத்து வந்தார். சொந்த காரர்கள் அனைவரும் கேவலமாக எங்களை பார்த்தனர். காசு பணம் இல்லை என்றாலும் மானம் மரியாதையை இருக்க வேண்டும் அல்லவா....அதுவும் எங்களிடம் இல்லை .......அந்த நேரத்தில் அண்ணாவின் அப்பாவும் அம்மாவும் அப்போது தான் காலமானார்கள்.அதனால் நாங்கள் அங்கே இருக்க மற்றவர்கள் தடை சொல்லவில்லை .சிறிது காலம் அப்படியே இருந்தோம். பின்னர் அண்ணன் சென்னை செல்வதாக சொல்ல பிழைப்புக்கு வழி தெரியாமல் நாங்கள் நிற்க அப்போது தான் பாட்டி அண்ணனிடம் எங்க குடும்ப விபரத்தை சொன்னார்.

அண்ணனும் அவர்கள் அம்மாவை போல நல்ல உள்ளம் படைத்தவர்.... அதனால் ”நீங்கள் கவலைபடாதீர்கள்.......நான் உங்களை என் உடனே வைத்து கொள்கிறேன்......இப்போது உங்கள் பேத்தி எட்டாம் வகுப்பு படிக்கிறாள்.அது அப்படியே தொடரட்டும்....சென்னை சென்ற பிறகு ரதி தேவியை என் தங்கையாக நான் ஏற்றுகொள்கிறேன்.....அங்கு அனைவரிடமும் இதே சொல்லுங்கள்......அவள் பிறப்பு பற்றி எந்த பிரச்சனையும் வராது “என சொன்னார்.எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லாதால் அவர் சொன்னதை கேட்டு அவருடன் வந்துவிட்டோம்.

இங்கு வந்த பிறகு நிஜமாக சொல்கிறேன்....கூட பிறந்த அண்ணன் இருந்திருந்தால் கூட இப்படி பார்த்திருக்க மாட்டார்.தேவா அண்ணா என்னை நல்ல பள்ளியில் சேர்த்து அதற்காக அவர் பகுதி நேர வேலை செய்து சம்பாரித்து எங்களை பார்த்து கொண்டார்.சிறிது நாளில் அம்மா இறந்துவிட்டார்.எனக்கும் தேவா அண்ணாவை ரொம்ப பிடிக்கும்.கல்லூரி விட்டு வந்தவுடன் என்னுடன் சிறிது நேரம் ஜாலியாக பேசிக்கொண்டு இருப்பார்.வெளியே அழைத்து செல்வார்.அவருக்கு கிடைப்பதில் பாதி எனக்கும் கிடைக்கும்.உடன் பிறந்தவர்களாகவே பழகிவந்தோம்.

அப்படி சென்ற சமயத்தில் நான் ஒரு பொம்மை கேட்க அதை அண்ணன் வாங்கி கொடுக்க மறுக்க கோபத்தோடு அண்ணனிடம் வீட்டிற்கு வந்து சண்டை போட்டு கொண்டு இருந்தேன்.அவரும் என்னை பல வழிகளில் சமாதனபடுத்த முயற்சி செய்தார்.நான் அழுகையை நிறுத்தவில்லை. சிறிது மரியாதையை குறைவாகவும் பேசி விட்டேன்.......அப்போது தான் என் பட்டி என்னை அடித்து அழைத்து சென்று உனது பிறப்பின் தரம் தெரியாமல் நீ ரொம்ப ஆடாதே....அவர் உனக்கு தெய்வம் மாதிரி......அவரின் காலுக்கு நீ செருப்பாக இருக்கவேண்டுமே தவிர அதிக உரிமை எடுத்து கொள்ளாதே என கண்டித்து எனது பிறப்பின் ரகசியத்தை சொல்ல ஏனோ அதை கேட்ட பின்பு அண்ணனினின் மீது பாசம் உரிமை மறந்து ஒரு மரியாதையும் பணிவும் தான் வந்தது.

அதன் பின்னர் அண்ணாவும் பல முறை சொல்லி பார்த்தார்.என்னால் பழையது போல் அவரிடம் உரிமை எடுத்து கொள்ள முடிவில்லை.....சில காலம் சொல்லிக்கொண்டு இருந்தவர் பின்னர் விட்டு விட்டார்.நான் என்ன செய்வது ரோஜா....என்னோட பிறப்பின் நிலை தெரிந்தும் என்னை தன் தங்கையாக இந்த சமுதாயத்திற்கு அறிமுகபடுதியவர் அவர்......அவரை பார்க்கும்போது அது தான் என மனதிற்கு தோன்றுகிறது.

நீயே சொல்....இப்போது நீங்கள் என்னுடன் பேசுவது பழகுவது எல்லாம் தேவாவின் தங்கை என்ற முறையில் தான்.......அதே நான் ஒரு அனாதை என தெரிந்தால் யார் என்னிடம் இப்படி பழகுவர். அதனால் தான் நான் ஒதுங்கியே இருந்தேன் .......ஆனால் ராம்...ராம் என சொல்லி நிறுத்தியவள் எனக்கு அந்த நிகழ்வு மறந்தே விட்டது...ஆனால் அவர் என சொல்லி அவளை நிமிர்ந்து பார்த்தவள்

அதுவும் ராம் திருமணம் பற்றி பேசும்போது நான் செத்து பிழைத்தேன் தெரியுமா? ?இதுவரை கடவுள் எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை தந்து இருக்கிறார் என்று சந்தோசப்பட்டு கொண்டு இருந்தேன்......ஆனால் இப்போதோ இந்த வாழ்க்கையினால் தானே ராம் என்னுள் நுழைந்தார்.அவரை விட்டு விலகவும் முடியாமல் சேரவும் தகுதி இல்லாமல் நெருப்பில் விழுந்த புழுவை போல் துடித்து கொண்டு இருக்கிறேன் ரோஜா என தன் மனதின் உணர்வுகளை வார்த்தையும் அழுகையுமாக அவள் சொல்ல

ரோஜாவோ இன்று என்ன அடுத்தடுத்து அதிர்ச்சியான நிகழ்வுகலாகவே வருகிறது என்று நினைத்தவள் சாந்தமான இந்த ரதிகுள் இப்படி ஒரு வேதனையா என நினைத்தவள் சிறிது நேரம் ஏதும் பேசாமல் அமைதியாக தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.

அவளது அமைதி கண்டு லேசாக சிரித்த ரதி....”பாரு ரோஜா இப்போது உனக்கே என்னிடம் பேசுவதற்கு யோசனையாக இருக்கிறது....அப்படி என்றால் ராம் இதை பற்றி தெரிந்தால்” என சொல்லி நிறுத்தி பயத்துடன் அவள் முகம் பார்க்க

“லூசு போல் உளறாதே ரதி என வேகமாக மறுத்தவள் ....நான் ஒன்றும் அப்படி நினைக்கவில்லை....அதே போல் ராம் அப்படிப்பட்ட ஆள் கிடையாது.நீ தேவை இல்லாமல் போட்டு குழப்பிகொல்கிறாய்” என அவளை கண்டித்தவள்

“உனக்கு தெரியுமா ...ராம் உன்னை முதன் முதலாக சந்தித்த போது அவருக்கு நீ தேவாவின் தங்கை என்பதே தெரியாது.......அப்போதே அவர் உன் மேல் ஆசை வைத்து விட்டார்........தேவாவின் தங்கை என்று தெரிந்த பின்பு சந்தோசபட்டாரே தவிர அதற்காக மட்டுமே அவர் உன்னை காதலிக்க வில்லை.அதை முதலில் தெளிவாக புரிந்து கொள். இந்த விஷயத்தை நீ ராமிடம் சொன்னால் அவரே சிரிப்பார் இதை பெரிதாக எடுத்து கொள்ள மாட்டார்.

இதற்காகத்தான் நீ இப்படி போட்டு குழப்பி கொண்டு இருக்கியா......போடி பைத்தியம்......நீ நாளை ராமிடம் இதை பற்றி பேசு...நான் ஏதும் சொல்லபோவதில்லை.....நீயே பேசு .... புரிந்து கொள்வார் என சிரித்து கொண்டே சொன்னவள் இப்போ நிம்மதியா படுத்து தூங்கு” என அவளை செல்ல மிரட்டலுடன் படுக்க வைத்தாள் ரோஜா.



.

வாழ்க்கையின் பார்வைகள்

மனிதர்களுக்கு மனிதர் வேறுபாடும்.

ஒருவருக்கு சிறியதான விஷயம்

மற்றவர்களுக்கு பெரியதாக தெரியும்.

எதையும் வெளிபடுத்தினால் மட்டுமே

உண்மை நிலை அறிந்து கொள்ள முடியும்.

தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும்.

தனது பிறப்பை அறிந்தால்

நாயகன் தன்னை வெறுப்பான் என

நாயகி நினைக்க

அவளது பிறப்பே தனக்காகதான் என

அவன் முடிவோடு இருக்க

உண்மை வெளிவரும்போது


முடிவில் மாற்றம் வருமா ??????????????