• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் - 29

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
அத்தியாயம் -29



அதிகாலை நேரம் ரோஜா கண் விழித்து பார்க்க மணி ஐந்து என இருந்தது.உறக்கம் வராததால் புரண்டு படுத்தவள் ரதியை பார்க்க அவளோ நன்றாக உறங்கி கொண்டு இருந்தாள்.அவள் முகத்தின் இறுக்கம் மறைந்து ஒரு அமைதி நிலவ அதை பார்த்த ரோஜா மிகவும் சந்தோசம் அடைந்தாள் .

இனியாவது இந்த பெண்ணிற்கு வாழ்க்கையின் வசந்தங்கள் முழுவதும் கிடைக்க வேண்டும் என மனதில் நினைத்தவள் சட்டென்று அவள் மனம் அதை நீ சொல்கிறாயா ....நீயும்தானே இது போல் குழம்பி கொண்டு இருந்தாய் என கேட்க மனம் கனக்க படுக்கையில் இருந்து எழுந்தவள் நேராக மாடிக்கு சென்றாள்.

அறைக்குள் நுழைந்ததும் தேவாவை பார்த்த உடன் மனதின் துக்கம் மறைய ,அவன் தலயனையயை கட்டி பிடித்து படுத்து இருப்பதை பார்த்தவள் இதழில் புன்னகை தோன்ற அவன் அருகில் சென்றாள்.அவன் நன்றாக உறங்கி கொண்டு இருக்க அவன் தலையணை அருகில் அமர்ந்தவள் அவனை சிறிது நேரம் பார்த்து ரசித்தவள் பின்னர் “முகத்தை இப்படி அப்பாவியா வச்சுக்கிட்டு ஆனா பண்ற வேலை எல்லாம் அழிச்சாட்டியம் என செல்லமாக கொஞ்சியவள் தூங்கும்போது கூட உன் முகத்தை வைத்து எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை,அழுத்தகாரண்டா நீ........பல நல்ல விஷயங்களை செஞ்சுட்டு அமைதியா இருக்கிறான்” என அவள் உரிமையாக அவனிடம் பேசிகொண்டே மெதுவாக அவன் கன்னத்தை பிடித்து கிள்ள,அவனிடம் இருந்து எந்த அசைவும் இல்லாமல் இருக்க ,”இங்க ஒருத்தி வந்து இவ்ளோ ஆசையா பேசிட்டு இருக்காளே அதை ரசிச்சு கேட்போம் அப்டின்னு இல்லாம தூங்கிறத பாரு .....உன்னை எல்லாம் நம்பி” என சொல்லி முடிக்கும் முன்பே புயல் போல் இரு கைகள் இழுத்து எலும்புகள் நொறுங்க அணைக்க ...ஹேய் ய்ய்ய்ய் என அவள் கத்த வாய் திறக்கும் முன்பே அவனது இதழ்களால் சிறைசெய்யபட்டது.

சிலமணி நேரம் அவளை முழுவதுமாக ஆக்கிரமித்தவன் அவள் மூச்சு விடகூட அவகாசம் கொடுக்கவில்லை.”அத்தான் போதும் ...போதும்” என சொல்ல சொல்ல “சும்மா இருடி வந்ததுல இருந்து லொட லொடன்னு பேசிட்டே இருக்க”.......என சொல்லிகொண்டே மேலும் மேலும் அவன் முன்னேற

“அப்போ நீங்க தூங்கலையா .......நான் பேசறதை கேட்டுகிட்டுத்தான் இருந்திங்களா .......ஆனா நீங்க நல்ல தூங்கிட்டு இருந்த மாதிரிதான இருந்தது என சொல்லி முடிக்கும் முன்பே டேய் திருடா ....அப்போ இரண்டு நாட்களுக்கு முன்பு நீங்கள் என்னை அணைத்தது தெரிஞ்சுதானா” என சொல்லிவிட்டு பொய் கோபத்துடன் அவனை முறைக்க...அவனோ “டேய் ராகன் பொல்லாத போக்கிரிடா நீ “என அவள் சொன்னது போலவே சொல்லிகாட்ட ...”அச்சோ போங்க அத்தான்” என வெட்கத்தால் அவன் மார்பிலே அவள் தஞ்சம் அடைந்தாள்.

“ஹே அம்லு இன்னொருமுறை ராகன் சொல்லேன் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு என அவன் சரசமாக கெஞ்ச அவளோ என்ன அத்தான் இது...நான் மாட்டேன்” என்றபடி அவன் மார்புக்குள் முகத்தை மறைத்து கொண்டவள் பின்னர் வெகு நேரத்திற்கு பிறகே அவளை அவன் விடுவிக்க இருவரும் குளித்து கிளம்பி கீழே வந்தனர்.

அதற்குள் ரதியும் கல்லூரிக்கு தயாராகி வெளியே வர அவளை பார்த்ததும் அவள் அருகில் வந்து தாலையை தடவி கொடுத்தபடி “இப்போ எப்படி இருக்கு ரதிம்மா” என பாசத்தோடு கேட்டான் தேவா. ,”லேசான தலைவலி தான் அண்ணா ...இப்போ சரிஆகிடுச்சு ...சாரி அண்ணா உங்களையும் ரோஜாவையும் ரொம்ப பயமுறுத்திட்டனா” என அவள் வருத்துட்டன் கேட்க

“அப்படி எல்லாம் இல்லை ரதி” என்றாள் ரோஜா.

“ஆமா உன்னை யாரு தலைவலி வர அளவுக்கு படிக்க சொன்னா ....நேத்து ராம் எல்லாம் என்கிட்டே சொல்லிட்டான்....எத்தனை முறை சொல்லிருக்கேன்......உன்னால் முடிந்த அளவு படி....ரொம்ப கஷ்ட்டபடாதேனு” என அவன் செல்லமாக அவளை திட்ட

ராமின் பெயரை கேட்டதும் ரதியின் முகம் மாற அதற்குள் ரோஜா “சரி...சரி உனக்கு கல்லூரிக்கு நேரமாகிவிட்டது சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பு” என அவளை அங்கிருந்து கிளப்பினாள்.

ரதி சென்றபிறகு தேவா கிளம்ப “அத்தான் நான் இன்று நீதி மன்றம் வரட்டுமா” என கேட்டாள் ரோஜா.சிறிது நேரம் யோசித்தவன் “சரி கிளம்பு...ஆனால் முதலில் அன்னை இலவச சட்ட ஆலோசனை மையம் போகணும்...அங்கு சென்று வெகுநாட்கள் ஆகிவிட்டது “என்றான் அவன்.

அந்த பெயரை கேட்ட உடன் அவள் முகம் சுளிக்க “அய்யோ அந்த இடத்துக்கா.....அங்க இருகிறவங்கள பார்த்தாலே எனக்கு பயமா இருக்கும்” என குற்றவாளிகளை மனதில் வைத்து அவள் சொல்ல

“என்ன ரோஜா நீ....குற்றவாளிகளும் மனிதர்கள் தான்.....பிறக்கும்போதே யாரும் அப்படி பிறப்பதில்லை......நாம் இப்போ அங்குதான் போகிறோம்...நீ என்னுடன் வருகிறாய்” என அவன் உறுதியாக சொல்ல தவிர்க்க முடியாமல் அவனுடன் சென்றாள் ரோஜா.

காரை விட்டு கீழே இறங்கியதும் அந்த கட்டிடத்தை பார்த்ததும் ஏதோ ஒரு பய உணர்வு தோன்ற தேவாவுடன் உள்ளே நுழைந்தாள்.அங்கு சின்ன சின்ன தடுப்பாணைகள் மூலம் பல பிரிவுகள் இருக்க அதில் கிரிமினல் ,சிவில்,வரதட்சணை மற்றும் சில பிரிவுகள் இருந்தன.அவற்றை எல்லாம் வாய் பிளந்து பார்த்துகொண்டே உள்ளே செல்ல அவளை ஒரு அறைக்குள் அழைத்து சென்றான் தேவா.....அதில் தேவாவின் தாய் தந்தை படம் இருக்க தலைவர் mr இராகதேவன் என்ற பெயர் பலகை அவர்களை வரவேற்றது.

உள்ளே நுழைந்ததும் வியப்பில் அவனை திரும்பி பார்க்க “இந்த அன்னை இலவச சட்ட ஆலோசனை மையம் இந்த இளம் வழக்கறிஞரை அன்புடன் வரவேற்கிறது “என அவன் இரண்டு கைகளை விரித்து சிரித்து கொண்டே சொன்னான்.

அந்த செய்கையில் அவளுக்கும் சிரிப்பு வர “என்ன அத்தான் இது .......நான்தான் முன்பே சொல்லி இருந்தேன் அல்லவா...எனக்கு இதில் விருப்பம் இல்லை என்று வீட்டில் இருப்பவர்களுக்காக தான் இதை படித்தேன்” என அவள் சொல்லி கொண்டு இருக்கும்போதே

“ஐயா விடுங்க என்னை...நான் சாரை பார்க்கணும்......என்னை விடுங்க” என ஒரு குரல் கேட்க திரும்பி பார்த்த தேவா அவரை உள்ளே விடுமாறு சொன்னான்.வேகமாக வந்த அந்த பெரியவர் “ஐயா நீங்கள் தான் எங்களை காப்பத்தனும்” என சொல்லியவாறே அவன் காலில் விழ ரோஜாவும் தேவாவும் பதறி நகர்ந்தனர்.”பெரியவரே என்ன இது...நீங்கள் போய் என் காலில்” என தேவா வேகமாக அவரை தூக்கி நிறுத்த

“துன்பம் வரும்போது காப்பவன் தெய்வம் தானே தம்பி.......ஆனால் அந்த தெய்வம் எங்களை கைவிட்டு விட்டது.......நீங்கள் தான் இனி எங்களுக்கு தெய்வம் தயவு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள்” என்றார்.

“கொஞ்சம் அமைதியாக அமருங்கள் ...உங்களுக்கு என்ன வேண்டும்...விளக்கமாக சொல்லுங்கள்” என்றான் தேவா.

“தம்பி நான் என் மனைவி மற்றும் என் ஒரே பேத்தியுடன் வசித்து வருகிறேன்.என் பேத்திக்கு பதினைந்து வயது ஆகிறது.அவளுக்கு அம்மா அப்பா இல்லை.எங்கள் தெருவில் சில கயவர்கள் என் பேத்தியை கிண்டல் செய்கிறார்கள்...அதை தட்டி கேட்டதற்கு என்னை அடித்து விட்டார்கள்.அப்போது போலிஸில் புகார் செய்தேன்......அதனால் கோபமடைந்து நான் இருக்கும் வீடு புறம்போக்கு இடம் என சொல்லி என்ன அங்கிருந்து காலி பண்ண சொல்கிறார்கள்.முப்பதுவருடமாக குடி இருக்கிறேன் தம்பி.....இதுவரை எந்த பிரச்னையும் இல்லை...இப்போது இவர்கள் வீட்டை காலி பண்ணு...இல்லை உன் பேத்தியை” என அவர் சொல்ல முடியாமல் முகத்தில் கையை வைத்து கொண்டு அழுக

இப்படியும் இருப்பார்களா என அதிர்ச்சியில் ரோஜா நின்று கொண்டு இருக்க தேவாவோ கோபத்தில் முகம் சிவக்க “நீங்கள் கவலை படாதீர்கள் ...இதை பற்றி முழு விபரங்களை அலுவலகத்தில் கொடுங்கள்.....மற்றதை நான் பார்த்து கொள்கிறேன்” என சொன்னான்.

அவனது பேச்சை கேட்டதும் அந்த பெரியவரின் முகத்தில் சிறிது நம்பிக்கை வர “ஆனால் தம்பி அவர்கள் ஏதோ பெரிய இடம் ,தாதாகும்பல் என்று சொல்கிறார்கள் அதனால் பார்த்து செய்யுங்கள் என்றவர் மேலும் இதனால் என் பேத்திக்கு எந்த பிரச்சனையும் வராது இல்லயா” என கேட்க அவரின் பயம் ரோஜாவிற்கு புரிய மெல்ல அவரின் அருகில் சென்றவள் “பெரியவரே நீங்கள் எதற்கும் கவலை படவேண்டாம்.உங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நாம் இந்த கேஸில் ஜெயித்து விடலாம்” என அவருக்கு நம்பிக்கை வார்த்தைகள் சொல்ல அவரும் தலை அசைத்தபடியே நகர்ந்தார்.

அவர் சென்ற பிறகு யோசனையுடன் அவள் அப்படியே நிற்க பெரியவருக்கு தேவையானதை செய்து கொடுத்து விட்டு அறைக்குள் வந்த தேவா ரோஜாவை பார்த்ததும் சிரிப்பு வர “என்ன ரோஜா சிலை மாதிரி அப்படியே நிற்கிற” என கேட்டுகொண்டே அருகில் வந்தான்.

அவனது குரலை கேட்டதும் நிதானத்திற்கு வந்த ரோஜா” இல்ல அத்தான் அந்த பெரியவரின் நிலையை நினைச்சு பார்த்தேன்....என் தாத்தாவின் வயது தான் இருக்கும் அவருக்கும் ...அவர் போய் நம்ம காலில் என சொல்லி நிறுத்தியவள் மனதிற்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அத்தான்” என்றபடி அருகில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்தாள்.

அவளை ஆழமாக பார்த்தவன் அது தான் நமது தொழிலின் சிறப்பு ரோஜா...... நீதித்துறை நினைத்தால் நல்லவனையும் குற்றவாளியாக்க முடியும்......குற்றவாளியும் நல்லவன் என சொல்லி வாழ வைக்க முடியும்.அதனால்தான் நீதி மன்றத்தில் உறுதிமொழி எடுத்தபிறகே எந்த ஒரு வழக்கையும் ஆரம்பிப்பார்கள்.

இது எல்லாம் எதற்கு உனக்கு சொல்கிறேன் தெரியுமா ? அந்த மாதிரி புனிதமான படிப்பைத்தான் நீ படித்து இருகிறாய்.ஆனால் அதை பற்றி அறியாமல் நீ எனக்கு இந்த துறையில் விருப்பம் இல்லை என பிதற்றிக்கொண்டு இருகிறாய்.இங்கு பாரு ரோஜா இன்று எத்தனை பேர் தனக்கு நீதி கிடைக்காதா என போராடிக்கொண்டு இருகின்றனர் தெரியுமா ?அது போன்ற நபர்களுக்கு உன்னை போன்ற ஆட்கள் நிச்சியம் தேவை ...நன்றாக யோசித்து பார் என்றவன் சரி...சரி வந்த உடன் நானும் உனக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்து விட்டேன்.....நீ சிறிது நேரம் இங்கே அமர்ந்திரு....நான் மற்ற இடங்களை எல்லாம் பார்த்து விட்டு வருகிறேன்......இதோ இங்கிருந்து பார்த்தால் டிவியில் இங்கு நடக்கும் அனைத்தும் தெரியும்.நீ பார்த்து கொண்டிரு” என சொல்லிவிட்டு அவன் கிளம்பினான்.

சிறிது நேரம் அமர்ந்து அங்கு நடப்பதை பார்த்தவள் அங்கு அமர்ந்திருந்த ஒவ்வொருவரின் மனநிலை,தங்களது கவலைகள் எப்போது தீரும் என்ற எதிர்பார்ப்போடு அவர்கள் அங்கு அமர்ந்திருக்க,ஒரு சிலர் அழுதபடி அங்கு அமர்ந்திருக்க ,வயாதனவர்கள்,சிறுமிகள் என பலரும் வந்து இருந்தனர்.அங்கு இருக்கும் வக்கீல்கள் அவர்களின் குறைகளை கேட்டு அதற்கு தீர்வு சொல்லி கொண்டு இருந்தனர்.

மேஜையின் மீது ஒரு பைல் இருக்க எடுத்து விரித்து பார்த்தவள் அது அந்த மையம் சம்பந்தமான எல்லா விபரங்களும் இருந்தன.....இலவசமாக பணி செய்ய பதினைந்து வக்கீல்கள்,மற்றும் சட்டம், பெண்கள் ,சொத்து தொடர்பான ஆலோசனைகள் தர பத்து விதமான ஆலோசகர்கள் இவர்கள் கவுன்சிலிங் மட்டுமே கொடுப்பவர்கள் மேலும் சில அரசு அலுவலர்களும் இலவசமாக இங்கு சேவை செய்து கொண்டிருந்தனர்.இவர்கள் அனைவரும் இந்த மையத்தின் உறுப்பினர்கள் .அதைத்தவிர மிக சிறந்த வழக்கறிஞர்கள்கர்கள் சிலர் தேவை படும்போது அவர்களுக்கு பணம் கொடுத்து அழைத்து வரப்பட்ட விபரங்களும் இதில் இருந்தது.

ஆனால் இந்த மையம் பணவசதி இல்லாதவர்கள்,வயதானவர்கள்,எதிரிகளால் அச்சுறுத்தபடுபவர்கள் மொத்தத்தில் ஆதர்வற்றோர்க்குக் உதவும் அமைப்பாக இருந்தது.அதை படித்து பார்த்தவள் தேவாவின் இந்த செயல்கள் அவள் மனதில் அவனை பல மடங்கு உயர்த்த இப்படி பட்டவன் என் கணவனா என நினைக்கும்போதே அவள் மனம் பெருமிதம் கொண்டது.

ரதி எப்படி இருக்கிறாள் என தெரியாமல் இங்கு ராமின் மனம் அல்லாடிகொண்டு இருந்தது.இந்த நேரத்தில் அவள் கல்லூரியில் இருப்பாள் என்று தெரிந்தாலும் அவளை பார்க்க வேண்டும் என மனம் துடிக்க நேராக கல்லூரிக்கே வந்தான் ராம்.

ராமை பார்த்ததும் ரதி சற்று பயந்தாலும் ரோஜாவின் வார்த்தைகளில் சிறிது நம்பிக்கை வந்து இருப்பதால் மெதுவாக அவனிடம் வந்தவள் “சாரி நேற்று கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன்...அதான் மயக்கம்......உங்களுக்கும் சிரமத்தை கொடுத்திட்டேன்” என வார்த்தைகளை திக்கி திணறி சொல்ல

“உன்னோட சாரிய நீயே வச்சுகோ......இப்போது உனக்கு தேர்வு எதுவும் இல்லேதானே” என அவன் அதிகாரத்துடன் கேட்டான்.

“ இப்போது இல்லை.....ஏன்?” ...என கேட்டபடி குழப்பத்துடன் அவனை பார்த்தாள் ரதி.

“ம்ம்ம்ம் ...நான் நாளை பெண் பார்க்க வருகிறேன் ...அதற்கு தான் சொன்னேன் ...அப்புறம் இந்தா நான் பெண் பார்க்க வரும்போது இந்த புடவை உடுத்திக்கொண்டு வந்து நில்லு...இந்த கலர் எங்க அம்மாவுக்கு சென்டிமென்ட்டா ரொம்ப பிடிக்கும்” என ஒரு பார்சலை கொடுத்தான் ராம்..

இதை சற்றும் எதிர்பார்க்காத ரதி....”என்ன உளறிங்க நீங்க.......புரியறமாதிரி சொல்லுங்க” என சொல்ல

“இது வரைக்கும் உளறிட்டு தான் இருந்தேன்.......இனி அப்படி இல்லை ....நானும் எத்தனை முறைதான் என்னை கல்யாணம் பண்ணிகிறயானு கேட்கிறது....பாரு கேட்கிறவங்க எல்லாம் கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.....இவனுக்கு வேற பொழப்பே இல்லைனு.......கொஞ்சமாவது அடுத்த ஸ்டெப்க்கு வாடாணு சொல்றாங்க.....இனி உன்னிடம் பேசி பிரயோஜனம் இல்லை...நான் எதாவது சொல்ல அப்புறம் நீ மயங்கி விழ சொன்னதுக்கே நீ மயங்கி விழுந்தேன்னு யாருக்கு தெரியபோகுது.......மத்தவங்க எல்லாம் வேற மாதிரி நினச்சுட்டங்கனா அதான்” என அவன் ஏதோ முக்கியமாக பேசுவது போல் ஆரம்பித்து கிண்டலில் முடிக்க

“இங்க பாருங்க ராம்.... அவசரபடாதிங்க...நான் உங்களிடம் கொஞ்சம் பேசணும்” என அவள் ஆரம்பித்ததும் “நீ ஏதும் பேசவேண்டாம்.இனி நாம் பேசுவது என்றால் நமது முதல் இரவில் மட்டுமே என்றவன் ...ம்ம்ம்ம்ம்ம் அச்சோ அங்கு பேச்சுக்கு என்ன வேலை ...வேண்டாம் எல்லாம் திருமணம் முடிந்து இரண்டு நாட்களுக்கு பிறகு பேசிக்கொள்ளலாம்....இப்போது பொறுப்பாக இந்த அனாட்டமி படிப்பை எல்லாம் ஓரம் கட்டி வைத்து விட்டு நம்ம திருமணத்திற்கு எப்படி தயாராகுவது அப்டின்னு மட்டும் யோசி” என படபடவென பேசிவிட்டு நிற்காமல் திரும்பி நடந்தான் ராம்.

ராம் இந்த அளவு உரிமையாக பேசியது ஒருபுறம் சந்தோசமாக இருந்தாலும் ஆனால் தனது நிலையை அவனுக்கு விளக்கிய பின்பே அதும் தனது கண்டிசனுக்கு அவன் ஒத்துகொண்டால் மட்டுமே திருமணம் என்பதில் ரதி தெளிவாக இருந்தாள்.

ரதியிடம் ஒரு வேகத்தில் பேசிவிட்டு வந்த ராம் இனி அடுத்தது என்ன பண்ணவேண்டும் என யோசிக்க ஆரம்பித்தான்.இரண்டு பக்கமும் தான் பேசினால் பிரச்சனைதான் வரும் என்று நினைத்தவன் இதை எல்லாம் மிக எளிதாக சமாளிக்கும் ஒரே ஆள் அவனுக்கு நியாபகம் வர முதலில் அலைபேசியில் அந்த எண்ணை அழுத்தினான்.

அவன் சொன்னதை முழுவதும் கேட்ட பிறகு எதிர்புறத்தில் சிறிது நேரம் மௌனமாக இருக்க பின்னர் “உனது முடிவில் நீ உறுதியாக இருகிறாய் அல்லவா?” என்ற கேள்வி வந்தது. “நான் மாறமாட்டேன்” என்று அவன் சொன்னதும் சில கேள்விகள் மேலும் வர அவன் அனைத்திற்கும் பதில் சொன்னான். “உங்களை நம்பித்தான் இருக்கேன். நாளைக்கே பெண் பார்க்க போகணும்.....நீங்கதான் எனக்கு எப்படியாவது இதை நல்லபடியாக முடித்து தர வேண்டும்” என கெஞ்சலில் முடித்தான் ராம்..

“சரி...சரி இப்படி திடுதிப்னு சொல்லிட்டு அதும் நாளைக்கேனு சொல்ற...என்ன பண்றது ...சரி விடு...நான் யோசிச்சு உனக்கு மதியம் போன் பண்றேன்” என சொல்லிவிட்டு அலைபேசி வைக்கப்பட்டது..இப்போது தான் ராமிற்கு நிம்மதியாக இருந்தது.இனி எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து கொள்ளலாம் என நம்பிக்கையோடு இருந்தான் ராம்..

இந்த மனிதமனம் இருக்கிறதே தான் நினைத்தது நடந்துவிடும் என தெரிந்த உடனே அதன் விளைவுகளை பற்றி யோசிக்காமல் கனவில் மிதக்க ஆரம்பித்து விடும்.நினைத்தது எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற நம்பிக்கையில் அவன் இருக்க ஆனால் விதியோ நான் இருக்க அது நடந்து விடுமா என மர்ம புன்னகையுடன் அவனை பார்த்து சிரித்து கொண்டு இருந்தது.

தேவா வரும்வரை நடப்பவைகளை பார்த்து கொண்டிருந்த ரோஜா மனதில் பலவகையான எண்ணங்கள் வட்டமிட யோசனையுடனே அமர்ந்திருந்தாள்.பின்னர் தேவா வந்ததும் இருவரும் கிளம்பி அலுவலகம் செல்ல அப்போதும் ரோஜா இயல்பு நிலையில் இல்லை.அவளது முகத்தை வைத்தே அவள் சரியில்லை என புரிந்து கொண்ட தேவா அவளை வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.

இரவு வீட்டிற்கு வந்தவன் ரோஜாவின் முகம் சற்று தெளிவுடன் இருக்க அப்போதுதான் அவன் நிம்மதி பெருமூச்சு விட்டான்.

ஹாலில் அமர்ந்திருந்த ரோஜா “அத்தான் சீக்கிரம் முகம் கழுவிட்டு வாங்க...இன்னைக்கு உங்களுக்கு ஒரு சர்பரைஸ் காத்திருக்கு” என சொல்ல

“என்னது அம்லு அது” என ஆர்வமுடன் கேட்டவன் ......நீங்களே கண்டு பிடியுங்கள்” என்றாள் ரோஜா.

என்ன விஷயம் என யோசித்தவன் ம்ம்ம்ம்...”நீ இன்று மதியம் தூங்கலையோ என்றவன் இல்லியே நான் கிளம்புபோதும் உன் குறட்டை சத்தம் கேட்டுச்சே அப்புறம் நீ தீனி சாப்பிட்ரதை விட்டுட்டியா....அய்யோ அது எப்பவுமே நடக்காத விஷயம், வேற என்ன?” என அவன் யோசிக்க

அவனை ஒரு முறை முறைத்தவள் “போங்க அத்தான்” என கோபமாக முகத்தை திருப்பி கொள்ள

“அச்சோ அம்லு இப்டி திடிர்னு கேட்ட நான் என்ன சொல்றது” என அவளுடன் பேசிகொண்டே ரதியிடம் கண் அசைவில் என்ன என்று கேட்க

அவளோ தெரியாது என்று சொல்ல

“அண்ணனும் தங்கையும் ஒன்னும் ரகசியம் பேசவேண்டாம்......முகம் கழுவிட்டு வாங்க நானே சொல்றேன்” என அவள் சலித்து கொண்டே சொன்னாள் ரோஜா.

“இது குட் கேர்ள் என அவள் கன்னத்தை கில்லியவன் ஐந்து நிமிடத்தில் வந்து விடுகிறேன்” என சொல்லிவிட்டு வேகமாக படி ஏறினான்.

அவன் கீழே வந்ததும் “இப்போது சொல்லுங்கள் என்ன சர்பரைஸ் என்று...ஆனால் எதா இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க...எனக்கு ரொம்ப பசி சாப்பிடனும் ...அதுனால சீக்கிரம் சீக்கிரம்” என அவன் அவசரபடுத்த

“பொறுங்க அத்தான்......நிஜமாவே ரொம்ப பசில இருக்கிங்களா...அப்போ சூப்பர்....அத்தான் இன்னைக்கு நான் தான் டிபன் செய்தேன் என சொல்ல

“என்னது நீயாயாயயாய என தேவா அதிர்ந்து மேஜையை விட்டு இரண்டு அடி நகர்ந்தவன் .....ஓ சரவணபவன் சாப்பாடா” என சொல்லிபடியே சமாதானமாகி வந்து அமர்ந்தான்.

“இல்லை அத்தான்...நானே சமைத்தேன்.....மதியம் முழுவதும் இண்டர்நெட்ல பார்த்து சூப்பர் ரெசிபி செஞ்சிருக்கேன்” என்றாள்.

“அப்படியா” என அவன் ஆச்சரியபட “ரதியும் சீக்கிரம் என்னனு சொல்லு ரோஜா” என அவசரப்பட அவளோ பல பில்டப்புக்ளுக்கு பிறகு திறந்து காட்ட அங்கு நூடுலஸ் இருந்தது.

“நூடூல்சா” என நொந்து நூடலஸ் ஆனா இருவரும் “இதற்குதான் இத்தனை ஆர்பாட்டமா என தேவா சொல்லவும்

“எவ்ளோ கஷ்டப்பட்டு டூ மினிட்ஸ் சமையல் அறையில நின்னு இதை பண்ணிருக்கேன்” என அவள் கோபித்து கொள்ள

அவளது செய்கையில் சிரிப்பு வந்தாலும் தனக்கு செய்து தரவேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு வந்ததில் அவன் மனம் மகிழ்ச்சி கொள்ள ...”இல்ல அம்லு சும்மா சொன்னேன்...சூப்பரா இருக்கு” என சொல்லி ரசித்து சாப்பிட்டான் தேவா. உணவு வேளை முடித்ததும் ரோஜா பால் கொண்டு வந்ததும் அதை குடித்தவன் பொதுபடையாக பேசிக்கொண்டு இருக்க திடீரென்று “ரதி உனக்கு இந்த வருடதோடு படிப்பு முடியுது இல்லயா” என்றான் தேவா .

“ஆமாம் அண்ணா...இன்னும் இரண்டு மாதங்கள் தான் இருக்கின்றன......அதற்கு பிறகு கொஞ்சம் நாட்கள் மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும் அவ்ளோதான்...ஏன் அண்ணா” என அவள் கேட்க

“இல்ல ரதிம்மா.....உனக்கு திருமணம் செய்து விடலாம்னு நினைக்கிறேன்.இப்போதே நிறைய பேர் தங்கையை வைத்து கொண்டு நீ திருமணம் செய்து கொண்டாய் என்று கேட்கிறார்கள்....மேலும் ஒரு நல்ல வரன் வந்திருக்கு அதான்” என சொல்லி நிறுத்தியவன்

“நீ என்ன நினைக்கிறாய் ரோஜா” என சொல்லிகொண்டே ரோஜாவை பார்க்க

ரோஜாவும் ரதியும் அதிர்ச்சியில் அப்படியே அமர்ந்திருந்தனர்.

“நான் சந்தோசமான விஷயம் தானே சொன்னேன்...அதற்கு ஏன் இரண்டு பேரும் இப்படி இருக்கிறிங்க” என அவன் கேள்வி எழுப்ப

முதலில் இயல்பு நிலைக்கு வந்த ரோஜா..”.ம்ம்ம்ம் இல்லை அது வந்து ...ம்ம்ம் செய்யலாம் அத்தான்....ஆனால் படிப்பு இன்னும் முடியவில்லை அதுதான்” என இழுக்க

ரதியும் “ஆமாம் அண்ணா ....நான் படிப்பை முடித்து விடுகிறேன் “என வேகமாக சொன்னாள்.

“அடகடவுளே நான் என்ன உடனே திருமணம் செய்கிறேன் என்றா சொன்னேன் .....பாட்டி எனக்கு போன் செய்து இருந்தார்..ஒரு நல்ல வரன் இருக்கு.....நம்ம ரதிக்கு பார்க்கலாமா என்றார்......அதான் நான் உங்களிடம் கேட்டுவிட்டு சொல்கிறேன் என்று சொன்னேன் அவ்ளோதான் “ என்றான்.

“என்னது பாட்டி போன் பண்ணாங்களா என கேட்டவள் என்னிடம் எதுவுமே சொல்லலை...இந்த பாட்டிக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை” என மனதில் திட்டிகொண்டே

“முதலில் படிப்பு முடியட்டும் அதான் பிறகு பார்த்து கொள்ளலாம் அத்தான்....நான் பாட்டியிடம் பேசிகொள்கிறேன்.....வயதான காலத்தில் சும்மா இருக்க முடியவில்லை அவர்களுக்கு...இருக்கட்டும் காலையில் போன் செய்து அவர்களிடம் பேசுகிறேன்” என வாய்க்குள் முனக

“பெரியவர்கள் சொன்னால் அது நல்லதற்கு தான் ரோஜா ...பாரு எனக்கு இந்த எண்ணம் வரவில்லை......அதற்குதான் பெரியவங்க வேண்டும் என்பது” என அவன் பாட்டி புகழ் பாட

“இந்த மாதிரி ஒரு கும்பலை வச்சுக்கிட்டு எம்ரால்டு நீ பண்ற அட்டுழியம் தாங்க முடியலை..... காலையில் இருக்குது உனக்கு கச்சேரி “ என மனதிற்குள் திட்டியவள் வெளியில் சிரித்து கொண்டே ஆமாம் ஆமாம் அத்தான்” என்றாள்.

அதற்குள் ரதி தூக்கம் வருகிறது என சொல்லி வேகமாக அவள் அறைக்கு சென்று விட இவர்கள் இருவரும் மாடிக்கு சென்றனர்.

உள்ளே சென்றதும் ரோஜா ரதி பத்தின யோசனையில் இருக்க ...தேவாவோ அவள் காலையில் பார்த்ததை நினைத்து குழப்பி கொண்டு இருக்கிறாள் என நினைத்தவன் மெதுவாக அவள் அருகில் வந்து ...”சாரி ரோஜா...காலையில் உன்னை மையத்திற்கு அழைத்து சென்று உன் மனதை வேதனை படுத்திவிட்டேன்.உனக்கு பிடிக்கவில்லை என்றால் விட்டு விடு....இனி அங்கு செல்லவேண்டாம்” என சொல்ல

அவன் சொன்னதை சிறிது நேரத்திற்கு பின்பே அவளுக்கு புரிய “அப்படி எல்லாம் இல்லை அத்தான். அங்கு எத்தனை பேர் எவ்ளோ மன கஷ்டங்களுடன் வந்து அமர்ந்திருந்தார்கள்.அவர்கள் வக்கீல்களை பார்ப்பதே ஏதோ தெய்வத்தை பார்ப்பது போன்று பயபக்தியுடன் வக்கீல் சொல்வதை கேட்கிறார்கள். அதை பார்க்க பார்க்க எனக்கே வக்கீல் தொழில் மீது பெருமையாக இருந்தது” என்றாள்.

 

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
“உண்மைதான் ரோஜா...இன்று ஏழைகளுக்கும் வயதானவர்களுகும் சட்டம் ஒரு எட்டா கனியாகவே இருக்கு..... அந்த நிலை மாறனும்......அதற்கான சின்ன முயற்சிதான் இது” என அவன் சொல்ல

“சூப்பர் அத்தான் ...இதான் எங்க தாத்தாவும் சொல்வார்.நீ டாக்டர் ஆனதுக்கு அப்புறம் கண்டிப்பாக ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கணும் ரோஜாகுட்டி.......எத்தனை பேர் வசதி இல்லாமல் விபரம் தெரியாமல் சிறு நோய்களை கூட சரியாக கவனிக்காமல் இறந்து விடுகின்றனர்.அதனால் நீ படித்து பெரிய மருத்துவராகி நிறைய இலவசமா வைத்தியம் பார்க்கணும்னு சொன்னார்..ஆனால் அவர் கண்டது கனவாகவே போய்விட்டது” என சொல்லும்போதே அவள் குரல் தடுமாற



“இங்கு பாரு ரோஜா....உனக்கு நடந்தை போல் இன்று பல இடங்களில் இது போல் நடக்கிறது...அதற்கு எல்லாம் பெண்கள் அச்சப்பட்டு உள்ளே இருந்தால் பின்னர் பாரதி கண்ட புதுமை பெண் எப்படி வருவாள்.அன்று உனக்கு நடந்தது எதிர்பாராத ஒன்று......உண்மையாக தப்பு செய்து இருந்தால் கூட நீ பயபடுவதில் நியாயம் இருக்கு...தப்பே செய்யாத நீ எதற்காக இப்படி பயப்படுகிறாய்” என அவளின் மனதின் பயத்தை போக்க அவன் நமபிக்கையுடன் பேச

“உங்களுக்கு என்னோட முழு கதையும் தெரியாது அத்தான்” என அவள் சொல்லி முடிக்கும் முன்பே” எனக்கு எல்லாம் தெரியும் அம்லு..... எல்லா விபரங்களையும் உனது பாட்டி என்னிடம் சொல்லிவிட்டார்கள்.....அதை எல்லாம் தெரிந்த பிறகே உன்னை திருமணம் செய்தேன் என்றவன் ஆனால் அதில் எனக்கும் என சொல்லி நிறுத்தியவன் சற்று தடுமாறி பின்னர் மறுபடியும் சொல்றேன் அம்லு...உன்னை விரும்பியே திருமணம் செய்தேன்..பரிதாபத்தில் அல்ல அதை நன்கு புரிந்து கொள்” என அழுத்தமாக சொல்ல

அத்தான் என கேவியபடியே அவன் மார்பில் சாய்ந்தவள் வெகுநேரம் அழுக தேவாவும் அதை தடுக்கவில்லை.....சிறிது நேரத்தில் அவள் அழுகை நின்று விட அம்லு..அம்லு என அவன் அவளை அழைக்க பதில் இல்லை.வேகமாக நிமிர்த்தி பார்த்தவன் அவள் நன்றாக உறங்க அதை பார்த்ததும் சிரிப்பு வர”நீ குழந்தையா,குமரியானே தெரியலை அம்லு” என கொஞ்சிபடியே அவளை படுக்கையில் படுக்க வைத்தான் தேவா.



மறுநாள் தேவாவின் நெஞ்சத்தை மஞ்சமாக கொண்டு ரோஜா உறங்கி கொண்டு இருக்க அலைபேசிமணி இருவருக்கும் இடையே பிரிவினை ஏற்படுத்தியது.

அலைபேசி ஒலித்ததும் எடுத்து பார்த்தவன் நம்பரை கண்டதும் “சொல்லு நண்பா என்ன இந்த நேரத்துல போன் பண்ணியிருக்க” என சொல்லியபடியே எழுந்து பால்கனி சென்றான்..... அந்த சத்தத்தை கேட்டு விழித்தவள் அவளும் எழுந்து குளியல்அறைநோக்கி சென்றாள்.தேவா பேசி முடித்து வருவதற்குள் ரோஜா கிளம்பி கீழே வந்தாள்.

“மணி என்ன ஆகுது இப்போ தான் எழுந்து கீழே வர நீ” என பழக்கமான அதட்டல் குரல் கேட்க குரல் வந்த திசையை பார்த்தவள் அங்கு மரகதம் சேகர்,பார்வதி காவேரி ராம் அனைவரும் நின்று கொண்டிருக்க ஒரு நிமிடம் அதிர்ச்சியில் புரியாமல் முழித்தவள் பின்னர் பாட்டி என கத்திகொண்டே ஓடி சென்று தாவி அணைத்தாள் ரோஜா.

“என் செல்லமே” என அவரும் உச்சு முகர அதற்குள் “எப்படி இருக்க ரோஜா” என சேகர் கேட்டதும் அப்பாவின் அருகில் வந்து செல்லமாக சாய்ந்து நின்று “உங்களைவிட கொஞ்சம் வளர்ந்து இருக்கேன்பா” என உயரத்தை தொட்டு காட்ட

அவரோ சிரித்துகொண்டே “என் பொண்ணு இல்லயா அதான்” என பெருமையாக சொல்ல

“ஏண்டி இதான் நீ குடும்பம் நடத்திற லட்சணமா ...மணி என்ன ஆகுது” என பார்வதி ஆரம்பித்ததும்

“ஹே பின்லேடி ஸ்டாப் ஸ்டாப்” என அவளை கட்டிபிடித்து செல்லம் கொஞ்சியவள் “வந்த உடனே உங்க அராஜகத்தை ஆரம்பிக்க வேண்டாம்.இங்க எல்லாம் இப்போதான் எல்லாரும் எழுந்தரிப்போம்” என சொல்லி முடித்தவள்

“அத்தை என ஆசையுடன் அவரின் அருகில் சென்றவள் யாரோ நேத்து எங்கோ ஊருக்கு போறேன் .....உன் வீட்டிற்கு வரமுடியாது அப்டின்னு சொன்ன மாதிரி இருந்தது ..உங்களுக்கு தெரியுமா” என அவள் கிண்டலாக கேட்க

காவேரியோ சிரித்து கொண்டே “இன்று இரவுதான் புறப்படுகிறேன் ரோஜா.....அதற்குள் அவசரம் ” என ராமை பார்க்க

ராமோ கெஞ்சும் பார்வை பார்க்க

அப்போது அங்கு வந்த தேவா “வாங்க பாட்டி ,அத்தை, மாமா,அம்மா என வரவேற்றவன் ....என்ன ராம் இப்போதான் வரேன்னு போன் பண்ண ...வந்து பார்த்தா வீட்ல நிக்கிறிங்க என சொன்னவன் முதல்ல எல்லாரயும் உட்கார சொல்லி காபி கொடு ரோஜா இதோ நான் பத்து நிமிடத்தில் கிளம்பி வந்துவிடுகிறேன்” என சொல்லி விட்டு செல்ல ”

உட்காருங்க உட்காருங்க என சொன்னவள் காபி என தயங்கி நிற்க

பார்வதியோ “இன்னும் நீ போட்டு காபி போட்டு பழகலையா” என அவளை முறைக்க

அதற்குள் ரதி காபி ரெடி ரோஜா என சமையல் அறையில் இருந்து குரல் கொடுத்தாள்.

உள்ளே வந்தவள் “ஹே நீ சீக்கிரம் எழுந்துட்டியா என்றவள் சரி இரு வரேன்” என சொல்லிகொண்டே “இதோ உங்களுக்கு சுட சுட சூப்பர் காபி “என சொல்லிகொண்டே ரோஜா வர ரதியோ சமையல் அறையிலே நின்று கொண்டு இருந்தாள்.

“விளையாட்டிற்கு சொல்கிறான் என்று நினைத்தால் சொன்னபடி வந்து நிற்கிறான் என அவள் விகிர்த்து போய் நின்று இருந்தாள்.அப்போ பாட்டி சொன்ன வரன் என அவள் யோசித்தவள் இதை தான் சொன்னாரே......சரியான கில்லாடி தான்.எங்கு சொன்னால் வேலை நடக்கும் என்று தெரிந்து அடிக்கிறான் என அவனை மனதினுள் மெச்சியவள் தேவாவிடம் இருந்து இனி நல்ல பதில்தான் வரும் என அவளுக்கு புரிந்து விட்டது.ஆனாலும் மனதில் ஒரு சலனம் இருந்து கொண்டே இருந்தது.

அங்கு வரவேற்பு அறையில் தேவாவும் வந்துவிட சிலமணி துளிகள் நலம் விசாரிப்பு முடிந்த அப்புறம் “மாப்பிள்ளை உங்ககிட்ட நேற்று சொல்லி இருந்தேன் இல்லயா” என பாட்டி ஆரம்பிக்க

ரோஜாவோ ராமை பார்க்க

அவனோ அலைபேசியில் எதோ பார்த்து கொண்டு அமைதியாக அமர்ந்திருக்க

“ம்ம்ம் ஆமாம் பாட்டி என்றவன் இரவுதான் ரதியிடம் பேசினேன் ...அவள் படிக்கணும் என்று சொன்னாள்” என்றான்.

“திருமணம் முடிந்த பின்பு படித்து கொள்ளட்டும் தம்பி என்றவர் காலா காலத்தில் நல்ல காரியங்களை செய்து விடவேண்டும்” என்றார்.

அவர் சொல்வதும் தேவாவிற்கு சரி என்று பட “சொல்லுங்கள் பாட்டி பையன் உங்களுக்கு தெரிந்தவரா” என கேட்டான்.

“நாம் எல்லாருக்கும் தெரிந்தவர்தான் என்றவர் நம்ம ராம் சரனுக்குதான் மாப்பிள்ளை ரதியை பெண் கேட்டு வந்து இருக்கோம்” என சேகர் சொல்ல

தேவாவோ “என்னது ராம்சரனா “என அதிர்ந்து அவன் முகம் பார்க்க

ராமோ தேவா என்ன சொல்வானோ என்ற எதிர்பார்ப்புடன் அவனை பார்க்க

“ஏன் அத்தான்...மாம்ஸ்க்கு என்ன குறை” என ரோஜாவும் கேட்க

காவேரியோ எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்.

ஆனால் தேவா மகிழ்ச்சியுடன் “நான் இதை எதிர்பார்க்கவே இல்லை.....ராம் சரண் என் தங்கைக்கு மாப்பிள்ளை என சொன்னவன் ரொம்ப சந்தோசம் மாமா.எனக்கு சந்தோசத்துல எப்படி பேசறதுன்னு தெரியலை .....டேய் ராம் என்னது இது......என அவன் அருகில் செல்ல அவனும் எழுந்து கைகளை விரிக்க இருவரும் கட்டி அணைத்து கொண்டவர்கள் நான் ரொம்ப சந்தோசமா இருக்கேண்டா” என மகிழ்ச்சியுடன் சொன்னான் தேவா.

“எதற்கும் பெண்ணிடம் ஒரு வார்த்தை கேட்டு விடுங்கள்” என மரகதம் சொன்னதும் “ஆமாம் ஆமாம் அவளோட சம்மதம் முக்கியம்” என சொல்லிவிட்டு தேவா உள்ளே செல்ல ரோஜாவோ பாட்டியை அர்த்தம் பொதிந்த பார்வை பார்க்க அவர் தலைகுனிந்து கொண்டார்.தேவாவிற்கு சம்மதம் என்றால் தனக்கும் சம்மதம் என்று ரதி சொன்னபிறகு அங்கு அனைவரும் சந்தோசமடைந்தனர்.பின்னர் சம்பிரதாயத்திற்க்காக ரதியை பலகாரம் எடுத்து வர சொல்ல ராம் கொடுத்த புடவையை அவள் கட்டி கொண்டு வர அதை பார்த்ததும் அப்போதுதான் காவேரி அம்மாவின் முகத்தில் சற்று சிரிப்பு வந்தது.

பின்னர் கிண்டலும் கேலியுமாக பேச ஆரம்பிக்க அதற்குள் தேவா சேகரிடம் “திருமணம் படிப்பு முடிந்ததும் வைத்து கொள்ளலாம்” என்று சொன்னான்..

சேகரோ “அது எல்லாம் பிறகு பேசி முடித்து கொள்ளலாம் மாப்பிள்ளை...இன்று ரொம்ப நல்ல நாள்.....காவேரி வேறு ஊருக்கு கிளம்புகிறார்...வருவதற்கு ஒரு வாரம் ஆகும்......பின்னர் சித்திரை தொடங்கிவிடும்...அதனால்தான் இன்று பேச்சை ஆரம்பித்து விடலாம் .மற்றதை மெதுவாக பார்த்து கொள்ளாலாம் என்று வந்தோம் “என்றார்.

மேலும் விபரங்களை அவர் காவேரி அம்மாவிடம் சொல்ல அவரோ சரி என்றவர் “நான் இன்று ஷீரடி கிளம்புகிறேன்...அங்கு சென்று வந்த பிறகு மற்றதை எல்லாம் பேசிக்கலாம்” என சொல்லிவிட அனைவரும் ஒத்துகொண்டனர்.



“பின்னர் காவேரியும் ராமும் அங்கிருந்து கிளம்ப மற்றவர்கள் அங்கயே இருந்து கொண்டனர்.அவர்களை வழி அனுப்ப வந்த தேவாவிடம் காவேரி ஏதோ சொல்ல தேவாவோ முகம் மாற அதற்குள் ராம் அழைத்ததும் கிளம்பிவிட்டனர் .அவர்களுடனே வெளியே வந்த ரோஜா அதை கவனித்து “என்ன அத்தான் அத்தை என்ன சொன்னாங்க” என கேட்டாள்.

“ம்ம்ம்ம் ரதியின் ஜாதகம் வேண்டும் என்று கேட்டார்கள்” என அவன் யோசனை உடன் சொல்ல .....

“ஏன் அத்தான் அவளுக்கு ஜாதகம் இல்லயா என்றவள் பின்னர் அச்சோ சாரி அத்தான்.......அது ஒன்றும் பிரச்சனை இல்லை.....என்ன அத்தைக்கு இதில் ஈடுபாடு அதிகம் ....... ஆனால் அத்தையிடம் எடுத்து சொன்னால் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என அவள் சாதரனமாக சொல்ல தேவாவும் சமதானமடைந்தான். வெகுநாட்களுக்கு பிறகு பெற்றோர்களை பார்ப்பதால் அவர்களிடம் செல்லம் கொஞ்சி கொண்டு இருந்தாள் அவர்களின் செல்ல புதல்வி.

நடந்து முடிந்த நிகழ்வுகள் எல்லாம் கனவு போல் இருக்க ரதிக்கோ சந்தோசத்தில் மனம் துள்ள புது பெண்ணின் கனவுகளோடு தனது அறைக்கு வந்தாள்.



என்னவனே

ஒவ்வொறு இரவும் உன் நினைவில் உறங்கி

இனிய கனவில் கண் விழிக்கிறேன்.

அல்லும் பகலும் உன் முகம்

என்னை கொல்லாமல் கொல்ல

மங்கள நாளை எதிர் நோக்கி

மனம் பதைத்திருக்க

தொடுத்த மாலைகளோ உன்

தினவெடுத்த தோள்களில்

இளைப்பாற காத்திருக்க

கனவுகள் நினைவாகும் தருனத்தின்

சுகத்தை அடைந்தேனடா


உந்தன் வழியே !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!