• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் - 30

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
அத்தியாயம் -30

பெற்றோர்களிடம் சிறு பெண் போல் அவள் கொஞ்சி கொண்டு இருக்க அதை ரசித்தபடியே நீதி மன்றத்திற்கு கிளம்பினான் தேவா.வெகுநாட்களுக்கு பிறகு அந்த வீட்டில கலகலப்பான பேச்சு சத்தம் கேட்க தேவாவின் மனம் நிறைவாக இருந்தது.

“ரோஜா நீ அப்பா அம்மாவை வெளியே அழைத்து செல்ல டிரைவரை அனுப்பி வைக்கிறேன் ......முதலில் அவர்களுக்கு ஓய்வு கொடு” என சொல்ல

சேகரோ “இல்லை மாப்பிள்ளை நாங்க இன்றே கிளம்புகிறோம்” என்றார்.

“என்னது இன்றே வா என கேட்ட ரோஜா என்னப்பா நீங்க” என கோபித்து கொள்ள

“இல்லம்மா அங்க கடையை யார் பார்த்து கொள்வது.....அப்புறம் தோட்டத்துல கொஞ்சம் வேலை இருக்கு...ராம் அவசரமாக வர சொன்னான் அதனால் உடனே கிளம்பி வந்திட்டோம் “ என்றார் சேகர்.

“என்ன மாமா நீங்க...எங்களுக்கு திருமணம் முடிந்து இப்பதான் வரீங்க ...அதுவும் வந்த உடனே கிளம்புனா எப்படி...இருந்து இரண்டு நாள் தங்கி ஓய்வு எடுத்திட்டு போங்க” என உரிமையுடன் சொன்னான்.

உடனே மரகதம் “இல்ல தம்பி ...நாங்க போகணும்...எனக்கு வெளியல அதிகம் தங்கி பழக்கம் இல்லை என சொன்னவர் இரவுதான் கிளம்புவோம் நீங்கள் உங்கள் வேலையை முடித்து விட்டு வாருங்கள்” என்றார்.

அதற்குள் தேவாவிற்கு அழைப்பு வர அவர்களிடம் சொல்லிவிட்டு கிளம்பினான். அவனை வெளியில் சென்று வழியனுப்பிவிட்டு வந்தாள் ரோஜா.

ரோஜாவோ “என்ன பாட்டி நீங்க ......என் கூட இருக்கிறதுக்கு உங்களுக்கு பிடிக்கலையா” என முகத்தை தூக்கி வைத்து கொண்டவள்

“அம்மா நீங்களும் உடனே கிளம்பனுமா....கொஞ்ச நாள் என் கூட இருங்களேன்” என்றாள்.

பார்வதியோ சேகரின் முகம் பார்க்க

அவரோ மாரகதத்தை பார்க்க அவர் வேண்டாம் என்று கண் அசைத்ததும் மனைவியிடம் திரும்பியவர் பார்வதியின் பார்வையில் பஸ்பம் ஆகமால் தலை குனிந்து கொண்டார்.

பின்னர் “இல்லை ரோஜா திடிரென்று கிளம்பி வந்ததால் எல்லாம் அப்படியே போட்டுவிட்டு வந்துவிட்டோம்.அதனால் என்ன திருமண ஏற்பாடுகள் நடைபெறும்போது இங்கே வந்து தங்கி சேர்ந்து செய்யலாம்” என கணவரை முறைத்து கொண்டே பதில் சொன்னார் பார்வதி.

“என்னமா நீங்க....போங்க என்னோட பேசாதிங்க “ என சலித்தபடி சொல்ல

“சரி சரி இப்போதுதான் நான் முதல் முறை உன் வீட்டிற்கு வருகிறேன்...வீட்டை நான் சுற்றி பார்க்க வேண்டும்” என பார்வதி கேட்க

அதற்குள் அங்கு வந்த ரதி “நீங்க வாங்க அம்மா நான் காட்டுகிறேன்” என அழைத்து சென்றாள்.

பாட்டி கால் வலிக்குது என சொல்ல சேகரும் பார்வதியும் சென்றனர்.

அவர்கள் சென்றது பாட்டியின் அருகில் வந்து அமர்ந்த ரோஜா “ஹே எம்ரால்டு என்னது இது திடீர்னு தட்டோடு பொண்ணு கேட்டு வந்திட்டிங்க ...என்கிட்டே சொல்லவே இல்ல” என கேட்டவள் இந்த மாம்சும் எனக்கு சொல்லலை....இருக்கட்டும் அதை கவனிச்சுகிறேன்” என அவள் சொல்ல

அவளது பேச்சில் சிரித்த மரகதம் “இல்லடா செல்லம் என்கிட்டே நேத்து தான் அவன் சொன்னான்......இன்னைக்கு பெண் பார்க்க போகணும்...நீங்கதான் இரண்டு பக்கமும் பேசி முடிக்கணும்னு என சொன்னான் ...பொண்ணை பற்றி விபரம் சொன்ன பிறகு எனக்கே முதலில் அதிர்ச்சி தான். ...ஏன் ரோஜா அந்த பொண்ணுக்கும் ராம் மேல விருப்பம் தானே” என கேட்டார் பாட்டி.

ரோஜாவோ “ஆமாம் பாட்டி ...அவளுக்கு விருப்பம் தான் என்றவள் ஊருக்கு மட்டும் தான் உபதேசம் இல்லை பாட்டி “என அவள் மரகதத்தை ஆழ்ந்து பார்க்க

“அவரோ அப்படி எல்லாம் இல்லை ரோஜா......எனக்கு உன் மேல் நம்பிக்கை இருந்தது.மேலும் நீ வீட்டிற்கு வரும்போது எல்லாம் தேவா தம்பியை பத்தி தான் சொல்லிட்டு இருப்ப......நீ எப்பவும் உனக்கு ஒரு விஷயம் பிடிச்சுடுசுனா அதை பத்தி பேசிட்டே இருப்ப......உன் பேக்கில் இருந்தே உனக்கு தேவாவை பிடிக்கும் அப்டின்னு தெரிஞ்சுகிட்டேன்......மேலும் அப்ப நீ இருந்த மனநிலையில் உன்னால எந்த முடிவும் சரியாக எடுத்திருக்க முடியாது.அதான் நானே முடிவு எடுத்திட்டேன்...... எப்படியும் நீ சந்தோசமா வாழ்வேன்னு எனக்கு தெரியும் என்று சொன்னவர் மேலும் தேவா சொன்ன காரணம்” என சொல்லி நிறுத்தி அவள் முகம் பார்க்க

“என்ன சொன்னார் பாட்டி” என அவள் வேகமாக கேட்டதும்

தேவா உண்மையை சொல்லி இருப்பானா மாட்டான என தெரியாமல் உலறகூடது என நினைத்தவர் “ஒன்றும் இல்லை ரோஜா....அவர் உன்னை ரொம்ப பிடித்து இருக்கு என்று சொன்னார்...அதான்” என பேச்சை மாற்றினார்.

“எப்படி பாட்டி நேத்து ராம் சொல்லி இன்னிக்கு காலையில இங்க இருக்கீங்க.....நீங்க எல்லாம் அத்தை வீட்டுக்கு எப்ப வந்தீங்க” என கேட்டாள் ரோஜா.

“நேற்று மதியம் மதுரை வந்து இரவுக்குள் ப்ளைட்டில் எங்களை இங்கு அழைத்து வந்திட்டான்” ராம் என்றார் மரகதம்.

“ம்ம்ம் மாம்ஸ் ஒரு முடிவோட களத்துள இறங்கிட்டாப்ள இருக்கு “ என அவள் சொல்ல

ஆமா ரோஜா நான் கூட இவன் இப்படி பண்ணவான்னு நினைக்கவே இல்லை......ரொம்ப அமைதியான பையன் நினைச்சா என்ன காரியம் பண்ணிற்க்கான் பாரு என்றவர் ஆனால் உங்க அத்தைக்கு இதில் விருப்பம் இல்லாதது போல் தெரிகிறது...என்ன நடக்குமோ பார்க்கலாம்” என அவர் நிறுத்த

“ஏன் பாட்டி ...அத்தை ஏதாவது சொன்னாங்களா “என ரோஜா கேட்டதும்

“நான் வந்து விஷயம் சொன்னபிறகே உன் அத்தைக்கு எல்லாம் தெரியும்.அதுவே முதல் அதிர்ச்சி ...யாரிடமும் சரியாக பேசவில்லை.எங்களை தவிர்க்கவும் முடியாமல் இப்போது வந்து சென்று இருக்கிறாள்” என்றார் மரகதம்.

“அது ஒன்றும் பிரச்சனை இல்லை பாட்டி... நம்ம அத்தை தானே சமாளித்து கொள்ளாலாம் “ என அவள் சாதரணமாக சொல்ல மரகதம் எதுவும் சொல்லவில்லை.

அன்று முழுவதும் பெற்றோர்களுடன் உற்சாகமாக பேசிக்கொண்டு இருந்தவள் அவர்கள் கிளம்பவும் அவள் முகம் சுருங்க

அவளின் அருகில் வந்த பார்வதி ....ரோஜா எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு....மாப்பிள்ளை உன்னை பத்தி எப்படி புகழ்ந்து சொல்றார் தெரியுமா ?நீயும் அதற்கு ஏற்றார் போல பொறுப்பா நடந்துகோ “என புத்திமதி சொல்ல

ரோஜாவும் சரி சரி என தலை அசைக்க

“விடு பார்வதி...அவளுக்கு எல்லாம் தெரியும்...நேரமாச்சு கிளம்பலாம்” என சொல்லி அங்கிருந்து பார்வதியை நகர்த்தியவர் “வரேன் ரோஜா..உடம்பை பார்த்துக்கோ “என்று சொல்ல .மரகதமோ எதுவும் சொல்லாமல் பேத்தியை அணைத்து முத்தம் கொடுத்துவிட்டு கிளம்பினர்.







மறுநாள் காலை வீட்டில் எப்போதும் போல் வேலை நடந்து கொண்டு இருக்க ரோஜா தான் அவ்வப்போது வந்து ரதியை கிண்டல் செய்து கொண்டு இருந்தாள்.

அவள் ஏதோ சொல்ல ,ரதி வெட்கபட்டு வெளியே ஓடிவர தேவாவை பார்த்ததும் “இங்க பாருங்க அண்ணா...இவள் என்னை ரொம்ப கிண்டல் பண்றா” என சிணுங்கலுடன் சொல்லிவாறு அவன் தோள்களை பிடித்து கொண்டு தொங்கி கொண்டு நிற்க

தேவாவோ வெகு நாட்களுக்கு முன் ரதி இது போல் சந்தோசமாக தன்னுடன் சிரித்து விளையாண்டது ...மீண்டும் இப்போது தான் என நினைத்தவன் அதற்கு காரணமான தன்னவளை பார்த்ததும் மனதில் பெருமிதம் பொங்க சிரித்தபடியே நின்று கொண்டு இருந்தான்.

“அத்தான் நீங்க கொஞ்சம் நகருங்க...மேடம் கண்ணாடி முன்னாடி நின்னுகிட்டு என்ன பாட்டு தெரியுமா பாடறா”....... என்றவள்

“அச்சோ ரோஜா வேண்டாம் சொல்லாத” என ரதி கெஞ்ச

உன்னை காணாத நான் இன்று நான் இல்லையே

விதை இல்லாமல் வேறு இல்லேயே

அதிலும்


அவ்வாறே நோக்கினால் எவ்வாறு நாணுவேன்
கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டேன்
ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம்
ஒத்திக்கைகள் செய்து எதிர்பார்த்திருந்தேன்



“அப்டின்னு அபிநயத்தோட மேடம் பாடறத பார்க்கணுமே” என சொல்லி சிரித்தவள் அவள் போல் அபிநயம் பிடிக்க

“அச்சோ இங்க பாருங்க அண்ணா என ரதி வெட்கத்தால் முகம் சிவந்தவள்..போடி” என சினுங்கியவாரே தனது அறைக்குள் செல்ல தேவாவோ விருட்டென்று வெளியே கிளம்பினான்.

அவனது வேகத்தை பார்த்து அவன் பின்னே ஓடி வந்தவள் “என்ன அத்தான் கிளம்பிட்டிங்க...நானும் உங்களுடன் வரேன்” என சொல்ல

நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தவன் ஏதும் சொல்லாமல் தலையை அசைக்க அவனை யோசனையுடன் பார்த்தவாறே காரில் சென்று அமர்ந்தாள் ரோஜா.

அலுவலகம் வந்ததும் தேவா எப்போதும் போல் தன் அறைக்குள் செல்ல ரோஜா பட்டாபியோடு அரட்டை அடித்து கொண்டு இருந்தாள். அப்போது அவசரமாக வெளியே வந்த தேவா” நான் அன்னை ஆலோசனை மையம் வரை சென்று வருகிறேன்” என சொல்லிவிட்டு கிளம்பினான்.ரோஜாவும்” நானும் வருகிறேன் அத்தான்” என்று அவனுடன் கிளம்பினாள்.

உள்ளே சென்றதும் அவனை எதிர்பார்த்து ஒருவர் அமர்ந்திருக்க அவருடன் பேசிகொண்டே அறைக்கு சென்றான் தேவா. ரோஜாவும் அங்கு இருக்கும் வரவேற்பு அறையில் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள்.சிறிது நேரம் கழித்து ஒரு வழக்கறிஞரின் அறையில் இருந்து இரண்டு பெண்கள் வெளியே வர அவர்களை பார்த்ததும் ரோஜாவின் முகம் சந்தோசத்தில் விரிய “ஹே தரணிஈஈஈஈ “என வேகமாக அழைத்தவாறே அவளை நோக்கி ஓடிவர

அந்த இடத்தில் ரோஜாவை எதிர்பார்க்காத அதிர்ச்சியில் தரணியும் சற்று தடுமாறி பின்னர் “ஹே பஞ்சுமிட்டாய் என சொல்லிகொண்டே அவளும் வர இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து தங்களது சந்தோசத்தை பகிர்ந்து கொண்டனர்.

பின்னர் அவளை விடுவித்து ......”இங்கு எல்லாரும் நம்மையே பார்க்கிறாங்க ...வா அங்கே அமர்ந்து பேசலாம் “என அவளை அழைத்து சென்றாள் ரோஜா.வெகுநாட்களுக்கு பின் சந்திக்கும் தோழிகள் இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டு என்ன தரணி கல்லூரியில் படிக்கும்போது உளுந்த வடை சைசில் இருந்த ...இப்போ முட்டை போண்டா சைசில் வந்திட்ட என சொல்ல

அடிபாவி உதரணத்திற்கு கூட சாப்பிடற பொருளைத்தான் வச்சு சொல்லனுமா.....வாங்கி சாப்பிட்றது நீ...கூட என்னையும் சேர்த்து சாப்பிட வச்சு இப்போ என்னையே கிண்டல் பண்ற என செல்லமாக அவள் காதை பிடித்து திருகியவள் ...பாவம் அண்ணாச்சி நமக்கு முட்டை போண்டா செஞ்சு கொடுத்தே மனுஷன் போண்டி ஆகிட்டார்” என தரணி வருத்தமாக சொல்ல

“ஏன் தரணி என்னாச்சு ....நம்ம அண்ணாச்சி கடை இல்லயா “என ரோஜா வேகமாக கேட்க

தெரியலை ரோஜா...ஆனா கல்லூரி பக்கத்துல இப்போ கடை இல்லை வேற பக்கம் மாத்தியாச்சுனு சொன்னங்க என்றவள் ம்ம்ம்ம் அதெல்லாம் எவ்ளோ சந்தோசமான நினைவுகள்” என சொன்னாள்.

“உண்மைதான் தரணி என தலை ஆட்டிய ரோஜா

“ஆமா நீ எங்கே இங்க “என இருவருமே ஒரே நேரத்தில் கேட்க

“ஆஹா மறுபடியுமா...கல்லூரி குறும்பு அப்படியே என கிண்டலாக சொன்ன தரணி ஹே பஞ்சுமிட்டாய் இவ்ளோ நாள் எங்க போன.......இரண்டு முறை மெயில் பார்த்தேன்.......இந்த ஆறு மாதமாக அதுவும் இல்லை.......வீட்டை விட்டு வெளியே வரமாட்டாய் .....இங்க சுத்திட்டு இருக்க” என சிரித்து கொண்டே கேட்டாள்.

“அத நீ சொல்லாதே தரணி...நீ தான் படிப்பு முடிந்ததும் அக்கா வீட்டிற்கு செல்கிறேன் என்று பாரின் போய்விட்டாய்.கொஞ்ச நாள் உன்னிடம் இருந்து எந்த தகவலும் இல்லை......ஆமாம் இப்போதும் நீ சேலத்தில் தானே இருகிறாய்...நம்ம ப்ரிண்ட்ஸ் எல்லாரும் எப்படி இருக்காங்க.......நம்ம கல்லூரி வாலு சுகந்தி, யாரயும் முழுசா பேர்சொல்லாம அடைமொழி சொல்லியே கலவறபடுத்தும் நம்ம மதுமதி,சனா,சரோஜினி,அனிதா,ராதா ஸ்ரீதர் , ஆர்வகோளாறு பாரதிகென்னடி,உமா ஸ்டாலின்,இன்னும் என அவள் யோசிக்க

“ஹஹஹஹா ஹே ரோஜா போதும் போதும் நீ இன்னும் மாறவே இல்லை “என சொல்லி சிரித்த தரணி “ம்ம்ம்ம் நானும் இப்பதான் ஆறுமாதம் முன்பு வந்தேன் .........இனிதான் எல்லாரயும் பார்க்கணும்.......தல, தளபதி இரண்டு பேரும் நேற்று கூட பேசுனாங்க என சொன்னவள் நீ தான் தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்ட்ட” என செல்லமாக அவளிடம் கோபித்து கொள்ள

சட்டென்று முகம் மாற “அப்படி எல்லாம் இல்லை தரணி.....ம்ம்ம் இந்த இரண்டு வருடத்திற்குள் என்னனேன்மோ நடந்திடுச்சு என்றவள் சரி அந்த கதை எல்லாம் பிறகு விளக்கமாக சொல்கிறேன் ...ஆமாம் நீ எங்கே இந்த பக்கம்” என சொல்லிகொண்டே அப்போது தான் அருகில் இருக்கும் பெண்ணை கவனித்தாள் ரோஜா.







 

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
இவர் யார் என கேள்வியுடன் தரணிய பார்க்க

“இவங்க எனது அக்காவின் தோழி...எனக்கு மிகவும் வேண்டப்பட்டவங்க......ஒரு பிரச்சனை....அதற்காகத்தான் இங்க வந்தோம்” என சொன்னாள் தரணி.

“இன்னும் நீ மத்தவங்க பிரச்சனைய தூக்கி உன் தலையில் போட்டுகிறதை நிறுத்தலையா” என அவள் காதை கடித்த ரோஜா

“ஹிஹி என வழிந்த தரணி இல்லை ரோஜா...ரொம்ப நல்லவங்க இவங்க.....பாவம் உதவிக்கு ஆள் இல்லாம தடுமாறுனாங்க ..அதான் நான் வந்தேன்” என்றாள் தரணி.

“ஏன் தரணி என்ன பிரச்சனை இவங்களுக்கு...ஏதாவது பணம்” என மெதுவாக சொல்லியவாரே அவர் முகத்தை பார்க்க

“அது எல்லாம் இல்லை ரோஜா என வேகமாக மறுத்த தரணி “முதல்ல இவங்களை பத்தி சொல்லிடறேன்” என்றாள்.

இவங்க பேரு வாணி...ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறாங்க. கொஞ்சம் ஏழ்மையான குடும்பம்...இன்னும் இரண்டு தங்கைகள் இருக்காங்க.....இரண்டு வருடத்திற்கு முன்னாடி தான் திருமணம் ஆச்சு..... காதல் திருமணம்.திருமணம் முடிந்த பின்புதான் தெரிஞ்சுது அவன் ஒரு சைக்கோனு.......ஆனால் அவனும் நல்ல வேளையில் இருப்பவன்தான். ஒருவரின் மகிழ்ச்சியில் நிறைவு அடைபவர் பலர் ...ஒரு சிலர் மற்றவர்களின் வேதனையில் சந்தோசபடுவார்கள்.இவன் அது போன்ற குணம் உடையவன். இனியும் அவனுடன் தொடர்ந்து வாழ முடியாது என தெரிந்து டைவேர்ஸ் முடிவு எடுத்தார் இவர்.

ஆனால் அவனோ டைவேர்ஸ் தரமுடியாது......என்னுடன் வாழ்ந்தே ஆகணும்னு காட்டாயபடுத்தறான்.மீறினால் இரண்டு பேரும் நெருக்கமா இருக்க போட்டோவ இண்டர்நெட்ல போட்ருவேனு மிரட்றான் என்றாள்.

“என்ன தரணி இது என கோபமாக கேட்ட ரோஜா இப்படியும் மனுசங்க இருப்பாங்களா ...எவனாவது கட்டின மனைவிய இப்டியா சொல்லி மிரட்டுவாங்க” என முகம் சுளிக்க

“அவன் அப்டிதான் ரோஜா......மேலும் அவன் பணபலம் ஆள் பலம் உள்ள ஆள்.அதனால் யாரும் அவனுக்கு எதிரா வாதாட வர மறுக்கிறாங்க. மேலும் இவனால் தங்கைகள் வாழ்க்கை பாதிக்கபடுமோனு கவலை படறாங்க.....அதான் இந்த மையத்தை பத்தி கேள்விபட்டேன்.உடனே இவங்களை அழைச்சிட்டு வந்தேன் என்றாள்.

.அதற்குள் தேவா அறையில் இருந்து தரணிக்கு அழைப்பு வர கொஞ்சம் பொறு ரோஜா..”.நான் சாரை பார்த்து விட்டு வருகிறேன்” என சொல்லிவிட்டு உள்ளே சென்றவள் சிறிது நேரத்தில் சோகமான முகத்துடன் திரும்பி வந்தாள்.

“என்ன நடந்தது தரணி என கேட்டதும் .....எல்லாரும் சொன்ன பதிலைத்தான் இவரும் சொல்கிறார் ரோஜா...மேலும் அவர் எப்போது டைவேர்ஸ் கேஸ் எடுப்பதில்லையாம்.முடியாது என்று மறுத்துவிட்டார்.வேண்டுமானால் கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறுகிறார்.அதை நாங்களே செய்து பார்த்து விட்டோம் ரோஜா.....ஆனால் எந்த பயனும் இல்லை.அதற்கும் சேர்ந்த அடிக்கிறான்.இவர்கள் எல்லாரும் ஆண்கள் இனம் தானே ...அதான் ஒரே மாதிரி யோசிக்கிறார்கள் என மனதின் கோபத்தை அவள் வார்த்தையில் கொட்ட

“இவரைத்தான் மலை போல் நம்பி வந்தோம்......இனி நான் என்ன பண்ணுவது” என அந்த பெண் அழுக

“ரோஜாவோ கவலைபடாதீங்க.....கண்டிப்பாக தீர்வு கிடைக்கும் என்றவள் நான் உள்ளே சென்று பேசிவிட்டு வருகிறேன்” என்றபடி எழுந்தவள் வேகமாக தேவாவின் அறைக்குள் சென்றாள்.

சிறிது நேரத்தில் வெளியில் வந்தவள் “தரணி நீ எதற்கும் கவலைபடாதே ......உங்கள் வழக்கை நான் எடுத்து நடத்துகிறேன்......யார் வந்தாலும் எனக்கு கவலை இல்லை” என கோபமாக சொல்ல

தரணியோ “ஹே ரோஜா இது கொஞ்சம் சிக்கலான கேஸ்... கொஞ்சம் அரசியல் தலையீடும் இருக்கிறது.......மேலும் நீ பார்கவுன்ஸில் மெம்பெர் ஆகிட்டியா” என கேட்க

“அதெல்லாம் எப்போவோ ஆகிட்டேன் தரணி என்றவள் ....தரணி எனக்கு ஒரு உதவி பண்ணு நீயும் நானும் சேர்ந்து இந்த கேசை நடத்துவோம்” என்றாள் ரோஜா.

“நான் என யோசித்த தரணி நான் இன்னும் பார்கவுன்ஸில் மெம்பெர் இல்லை ரோஜா” என சொல்ல

“நீ கவலைபடாதே.....அதற்கு பிதாமகனிடம் சொல்லி நான் ஏற்பாடு செய்கிறேன்” என்றாள் ரோஜா.

“ம்ம்ம் ஹே அது யாரு” என கேட்டதும்

அப்போதுதான் தான் சொன்னதை உணர்ந்தவள் ஹிஹிஹி mr இராகதேவன் சாரை தான் சொல்கிறேன் என அவள் சொல்ல

“அவரை உனக்கு தெரியுமா...ஹே ரோஜா...எப்படியாவாது அவரிடம் ஜூனியராக வேலை வாங்கி தரமுடியுமா..... என் சீனியர் அந்த சொட்ட தணிகாசலம் சரி இல்லடி ..ப்ளீஸ் “என கெஞ்ச

“தரணி கண்டிப்பா சொல்றேன்” என சொன்னவள் அதற்குள் “மேடம் சார் வீட்டிற்கு போலாமான்னு கேட்கிறார்” என ஒருவன் வந்து சொல்ல

யாரு என தரணி குழம்பி போய் அவளை பார்க்க

“ஒரு நிமிடம் தரணி என சொல்லியவாரே” தேவா அறைக்குள் சென்றாள் ரோஜா.

அவள் சாதரணமாக அவன் அறைக்குள் செல்வது தரணிக்கு வியப்பை கொடுக்க அந்த நபரை அழைத்து “தேவா சார் ரோஜாவை எதற்கு வீட்டிற்கு போலாம்னு கேட்டார்” என கேட்டாள்.

“மேடம் சாரோட தான் வந்தாங்க ...அதான் கிளம்பலானு கூப்பிட்றார்” என சொல்ல

அப்போ இவங்க என அவள் கேள்வியோடு நிற்க

ராகதேவன் சாரோட மனைவி என சொல்லியவன் அதற்குள் அழைப்பு வர சென்றுவிட்டான்.



ரோஜா சிறிது நேரத்தில் வெளியில் வந்தவள் தரணி அவளை பார்த்து முறைக்க ...காரணம் ரோஜாவிற்கு புரிந்து விட “தரணி சாரி ஸாரி நான் சொல்லனும்னு நினச்சேன்.....நீ அவங்க பிரச்சனயை சொல்லிட்டு இருந்தியா...அதான் “ என அவளிடம் கெஞ்சுவது போல சொல்ல

தரணியோ சட்டேன்று நெகிழ்வான குரலில் “ரொம்ப சந்தோசமா இருக்கு ரோஜா.....எங்கே நீ கல்லூரியில் படிக்கும்போது சொல்லிட்டு இருந்த மாதிரி தனியாவே இருந்திடுவியோனு பயந்திட்டு இருந்தேன்.....நல்லவேளை உன் நல்ல மனசுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சுடுச்சு.....சரி நான் கிளம்பறேன்” என கிளம்ப

“ஹே எங்க கிளம்பற....ரொம்ப நாளைக்கு பிறகு சந்திக்கிறோம்......நான் அவர்கிட்ட சொல்லிட்டேன்...இன்று முழுதும் உன்னோடுதான் என்றவள் வாணியிடம் திரும்பி நீங்கள் கவலை படாதீர்கள்......என் தோழியின் தோழி எனக்கும் தோழி என சொல்லிவிட்டு தரணியை பார்த்து கண்ணடித்து சிரித்தவள் ..இது எனது அலுவலக முகவரி...அங்கு பட்டாபி என்று ஒருவர் இருப்பார்.அவரிடம் வழக்கின் விபரங்களை கொடுத்து விட்டு செல்லுங்கள் ...நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்றவள் நீ வா தரணி” என் சிறுபிள்ளைபோல் அவளை இழுத்து கொண்டு சென்றாள் ரோஜா.

இருவரும் மகிழ்ச்சியாக கல்லூரி வாழ்க்கையை பேசியபடி காரில் சுற்றியவர்கள் பின்னர் தரணியை அலுவலகத்திற்கு அழைத்து வந்தாள் ரோஜா.

பட்டாபியை அவனுக்கு அறிமுகபடுத்த பட்டாபியோ சந்தோசத்தில் உன்னை விட உன் தோழி ரொம்ப அழகா இருக்காங்க ரோஜா என சொல்ல...அவனை முறைத்தவள் பின்னர் அவன் அருகில் சென்று “பட்டாபி கனவு உலகத்துக்கு போகாத.........ஆள் பார்க்கத்தான் சாதுவா இருக்கா.....கோபம் வந்தது சேதுவா மாறி உன்னை கடிச்சு குதறிடுவா....அப்புறம் கராத்தே தெரியும் அவளுக்கு” என்றதும்

பட்டாபியோ “எது நம்ம சிவ கார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படமா” என அப்பாவியாக கேட்க

அவனை முறைத்தவள் “நீ இவகிட்ட அடிவாங்காம அடங்கமாட்ட...ம்ம்ம் ப்ருஸ்லீ போடுவாருல்ல சண்டை அதை சொல்றேன்.......அதுல ப்ளாக் பெல்ட் வாங்கி இருக்கா” என தரணியை பற்றி கண்களை உருட்டி முகத்தில் அபிநயத்தை மாற்றி மாற்றி அவள் சொல்ல

அதை கேட்டதும் ஏதோ பேயை கண்டு நடுங்குபவன் போல் பீதியில் மிரண்டவன் ...”ஏன் ரோஜா இப்படி பட்ட ஆள் கூட எல்லாம் எதுக்கு பிரிண்ட்சிப் வச்சுகிற நீ...இங்க வேற கூட்டிட்டு வந்து இருக்க” என்றவன் தரணியை பார்த்து “வாங்க தங்கச்சி ....உட்காருங்க தங்கச்சி” .... என அவன் உளற

தரணியோ நடந்தது தெரியாமல் ரோஜாவிடம் “என்னடி வக்கீல் ஆபிஸ்ல அரை லூஸ் எல்லாம் வேலைக்கு வச்சு இருக்கீங்க.....தங்கச்சி அப்டின்னு பினாத்தறான்” என சந்தேகமாக கேட்டாள்.

ரோஜாவோ வந்த சிரிப்பை கட்டு படுத்தி கொண்டு அதெல்லாம் அப்டிதான் என சொன்னவள் அதற்குள் தேவா அழைக்க இருவரும் உள்ளே சென்றனர்.

தரணியை அறிமுகபடுத்தியவள் பின்னர் “தரணி உங்களிடம் ஜூனியராக வேலை செய்ய ஆசைபடுகிறாள் அத்தான்...எனக்காக ப்ளீஸ்” என கெஞ்ச

அவளை முறைத்தவன் நேராக தரணியை பார்த்து “மிஸ் தரணி எனது மனைவியின் தோழி என்ற முறையில் உங்களின் மேல் எனக்கு மதிப்பு இருக்கிறது.ஆனால் குடும்பம் வேறு..தொழில் வேறு .. .நான் எப்போதும் ஜூனியர் வைத்து கொள்வதில்லை.....உங்களது விபரங்களை நாளை அலுவலகத்தில் கொடுங்கள் பார்க்கலாம்” என அமர்த்தலாக சொல்ல அவனை பற்றி தெரிந்து இருந்தும் முன் அறிவிப்பு இல்லாமல் அழைத்து வந்துவிட்டோமோ என ரோஜா கவலை பட

ஆனால் தரணியோ “கண்டிப்பா சார்.என்னோட ரெஸ்யூம் நாளைக்கு கொண்டு வரேன்......எனக்கு நம்பிக்கை இருக்கு...நீங்க என்னை கண்டிப்பா ஜூனியராக ஏத்துகுவிங்கனு” என அவளும் உறுதியாக சொல்ல ஒரு நிமிடம் தேவா அசந்து போனான்.

“உங்களுடைய தன்னம்பிக்கையை நான் பாராட்டுகிறேன் தரணி.நீங்கள் கொடுங்கள் பார்க்கலாம்” என்றான்.பின்னர் ரோஜாவிடம் சொல்லிவிட்டு விடைபெற்றவள் பட்டாபியிடம் அருகில் வர அவனோ குனிந்த தலை நிமிரவில்லை.

எல்லாம் நல்லபடியாக முடித்த சந்தோசத்தில் ராம் கனவுலகில் சிறகடித்து பறந்து கொண்டு இருந்தான்.கல்லூரி முடிந்து அனைவரும் சென்று கொண்டு இருக்க சட்டென்று ஒரு கை நீண்டு அவளை காரினுள் இழுத்து போட

அதிர்ச்யில் சத்தம் போடா வாய் திறந்தவள் “ஹே கத்தாதடி...நான் தான்” என சொன்னவன் அவளை ஒரு கையில் பிடித்து ஒரு கையில் வண்டி ஓட்டினான்.

“என்ன ராம் இது...இப்படியா பண்ணுவிங்க......யாராவது பார்த்து இருந்தா ...பயத்துல நான் கத்தி இருந்தா என்னாகறது” என அவள் கோபமாக பேச

“என்ன பண்றது...போலீஸ்காரன் ப்ளே பாய் ஆகிருப்பான்” என அவன் கிண்டலாக சொல்ல

“ம்ம்ம்ம்...பொழப்புதான் நினைப்பை கெடுக்குது..........ஆமா நீங்க வேலைக்கு போகாம இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க” என அவனை முறைத்தவாரே கேட்டாள் ரதி.

“ஹே இங்க பாருடா...பொண்டாட்டி மாதிரி இப்பவே கேள்வி எல்லாம் கேட்க ஆரம்பிச்சுட்டா என்றவன் மேடம் நாங்க எல்லாம் லெப்ட்ல இன்டிகாட்டர் போட்டு ரைட்ல வண்டிய திருப்புற ஆளுங்க......பார்க்கதான் சும்மா சுத்தர மாதிரி இருக்கும் ஆனா வேலை அது பாட்டுக்கு நடக்கும் தெரியும்ல” என ரஜினி ஸ்டைலில் சொன்னான். .

“ஆமா ஆமா இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை “என அவள் சலித்து கொள்ள

“அப்போ வேற எதுக்கு குறைச்சல்” என அவன் கேட்க

“அச்சோ கொஞ்சம் சும்மா இருங்க ராம்” என அவள் அதட்ட

“நான் தான் ஏதும் செய்யலயே ...ஓ அதான் பிரச்சனயா” என்றவன் வண்டியை ஓரம் கட்டி அவள் தோளில் கைபோட்டு தன் அருகில் இழுக்க

“அய்யோ என்ன இது நடு ரோட்ல இப்படி பண்றிங்க......யாரவது பார்க்க போறாங்க” என ரதி பதற

“இந்த ரோட்ல யாரும் அதிகம் வரமாட்டாங்க...அப்படி வருகிறவர்களும் நம்மளை மாதிரி ஆளுங்கதான்” என அவன் அவளை பார்த்து சிரித்து கொண்டே சொன்னான்.

“ம்ம்ம் ரொம்ப தான் ஆசை எண்டவள் அதற்குள் அவன் கைகள் அவள் உடலில் நடனமாட என்ன ராம் இது “என அவள் நெளிய

“ஏண்டி முன்னாடிதான் கிட்ட வராம தள்ளி நின்னே கடுபேத்துன...இப்பதான் எல்லாமே உறுதி ஆகிடுச்சுல...அப்புறமும் ஏன் பிகு பண்ற...நீ இப்டி பண்ண பண்ணத்தான் எனக்கு உன் மேல ஆசை அதிகம் ஆகுது” என்றவன் சட்டேன்று அவள் கன்னத்தில் முத்தம் கொடுக்க அடுத்த நொடி அவனது கன்னத்தில் ரதியின் கைவிரல் பதிந்து இருந்தது.

இருவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து போய் அமர்ந்திருக்க ரதியோ கண்ணில் கண்ணீர் வர...”சாரி...சாரி ராம் நான்...நான்” என அவள் தடுமாற

அவனோ ஏதும் பேசாமல் அவளையே வெறித்து பார்க்க

“இல்லை ராம்.....எனக்கு என்னாச்சுனு தெரியலை....ஏதோ படபடப்பா இருக்கு...பயமா இருக்கு அதான்” என அவள் திக்கி திணறி சொன்னாள்.

அவனோ எதுவும் பேசாமல் வண்டியை எடுத்தான்.

“ராம் ப்ளீஸ் ப்ளீஸ் எதாவது பேசுங்க.....இல்லை என்னையும் அடிச்சுடுங்க.......ஆனா பேசாம இருக்காதிங்க...எனக்கு பயமா இருக்கு ராம்.......இந்த திருமண பேச்சு ஆரம்பிச்சதுல இருந்தே ஒரு பயம் இருந்துகிட்டே இருக்கு......அதான் “என அவள் நிலைமையை விளக்க

மீண்டும் வண்டியை நிறுத்தியவன் ஏதும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.

“ராம் ஸாரி....நீங்க முதல் முறை இப்படி பண்ணும்போது” என அவள் ரோஜாவின் அறையில் நடந்ததை நினைத்து சொல்ல ஆரம்பிக்க

அவன் திரும்பி அவள் முகம் பார்க்க

வெட்கத்தில்அவள் முகம் சிவக்க “அப்போ கூட இந்த மாதிரி பயம் இல்லை...ஆனா இப்போ” என அவள் நிறுத்தியவள்

“இந்த கல்யாணம் நடக்குமா ராம்.....என்னை எந்த காரணத்திற்காகவும் கைவிட்டுவிட மாட்டிங்கலே” என அவள் ஏக்கத்தோடு கேட்க

வேகமாக அவளை இழுத்து இறுக்க அணைத்தவன் அந்த அணைப்பே அவனது மனதை சொல்ல சிறிது நேரம் அப்படியே இருந்தவன் பின்னர் அவளை விடுவித்து அவள் முகத்தை கரத்தில் ஏந்தியவன் “என்னோட உடல் உயிர் தெய்வம் எல்லாம் என் அம்மாதான்.அதற்கு பின்னால் நீ தான் முல்லை மலர்.அம்மா என் இதயத்தில் ...ஆனால் நீயோ என் ரத்தத்தில் இருக்கிறாய் .........நான் இறந்தால் மட்டுமே நீங்கள் இருவரும் என்னை விட்டு பிரிய முடியும்” என அவன் சொல்ல

“வேண்டாம் ராம்...அப்படி சொல்லாதிங்க...நம்ம ரொம்ப நாளைக்கு சந்தோசமா வாழனும்” என அவன் பேச்சை தடுத்தவள்

சிறிது நேரம் அவள் கண்களை அவன் ஆழ்ந்து பார்க்க அவளோ வெட்கத்தால் இமை மூட


விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே

உன் விழியே போதுமடி மனம் மயங்கும் மெய் மரக்கும்
புது உலகின் வழி தெரியும் பொன்விளக்கே தீபமே



என்ற பாடல் அந்த நேரத்தில் காரில் ஒலிக்க இருவரும் தங்களை மறந்து பார்த்து கொண்டே இருக்க வார்த்தைகள் இல்லாத உணர்வு பரிமாற்றம் அங்கு நிகழ்ந்து கொண்டு இருந்தது.

இரவு தனது அறையில் தேவா சிந்தனையில் அமர்ந்திருக்க அவன் அருகில் வந்து அமர்ந்த ரோஜா ...”என்ன அத்தான் என்ன யோசனை “என்றாள்.

அவளை திரும்பி ஒரு நிமிடம் பார்த்தவன் “ஒண்ணுமில்லை ரோஜா” என சொல்லிவிட்டு எழுந்து பால்கனி சென்றான்.

“ஏன் அத்தான் என் மேல் ஏதாவது கோபமா என்றவள் ஓ அந்த வாணி வழக்கு நான் எடுத்து வாதாடுகிறேன் என்று சொன்னனே அதனால கோபமா” என கேட்டாள்.

அவனுக்கே அது செய்தி புதிதாக இருக்க அதிர்ச்சியுடன் திரும்பியவன் “என்னது நீ எடுத்து வாதட போறியா” என கேட்டான்.

“ஆமா அத்தான் நீங்கதான் டைவேர்ஸ் கேஸ் எல்லாம் எடுக்க மாட்டேனு சொல்லிடிங்க ....அதான் நானே எடுத்து பார்க்கலாம்னு என நிறுத்தியவள் ஏன் அத்தான் நான் இந்த கேசை எடுக்க வேண்டாமா” என கேட்டதும்

“அப்படி எல்லாம் இல்லை ரோஜா என அவசரமாக மறுத்தவன் ஆனால் இது உன்னோட முதல் கேஸ் ...அதுவும் டைவேர்ஸ் கேஸ் அதான் யோசிக்கிறேன்” என்றான்.

“என்ன கேஸ் அப்டிங்கிறது முக்கியம் இல்லை அத்தான்...ஒரு பொண்ணுக்கு கொடுமை நடக்கும்போது அதை நாம் கண்டிப்பாக தட்டி கேக்கணும்......அவன் பணம் அரசியல் பலத்தை வைத்து எல்லாரயும் விலைக்கு வாங்கி விடுகிறான்.அதனால் தான் நானே இதை எடுத்து நடத்தலாம் என முடிவு பண்ணேன்.நீங்கள் நேற்று சொன்னதில் என் மனதிலும் ஒரு சின்ன ஆசை இருந்து கொண்டு இருந்தது.யார்க்காவது நல்லது செய்யணும்னு அதான்” என அவள் சொல்ல

“அவனோ ரொம்ப சந்தோசம் ரோஜா.....நீ எடுத்து செய்....வெற்றி உனக்கு என்று என்னால் சொல்லமுடியாது.ஏன்னா நான் எப்பவும் டைவேர்ஸ் ஊக்குவிக்கிறது இல்லை. நீ சிறப்பாக செய்தால் எனக்கு மகிழ்ச்சி தான்” என தன் நிலையில் இருந்து மாறாமல் அதே நேரத்தில் அவள் மனதையும் காயபடுத்தாமல் சொன்னான் தேவா.

“என்னோடு என் தோழியும் இருக்கா அத்தான் ......அதான்” என அவள் அவனை திருப்தி படுத்த சொல்ல

“யார் இருந்தாலும் உனக்கு சரி என்று தோன்றியதை நீ தைரியமாக செய்” என அவளுக்கு தைரியமூட்டினான் தேவா.

“ஹஹஹா தேங்க்ஸ் அத்தான்...ராம் மாம்ஸ் இதை தான் சொல்வார் என்றவள் அதான் ரதி திருமணத்தை பத்தி என்ன முடிவு பண்ணிருக்கீங்க” என்று கேட்டாள்.

“படிப்பு முடிந்தால் பரவாயில்லை என்று நான் நினைக்கிறேன்.பார்கலாம் அம்மா வரட்டும் என்றவன் நீ கூட ரதியை ராம் காதலிக்கிற விஷயத்தை என்னிடம் சொல்லவே இல்லை “என அவன் ஆதங்கத்தோடு சொல்ல

“இல்லை அத்தான் அது வந்து என தடுமாறியவள் ...ராம் மாம்ஸ் லவ் பண்றார்னு தெரியும்...ஆனா நம்ம ரதிக்கு அப்படி” என அவள் முடிக்கும் முன்

“ராம் சொன்னான்.....நான் தான் ரதியை விரும்பறேன்...ஆனால் ரதி மனதில் என்ன இருக்கிறது என்று எனக்கு தெரியாது ...அவளை தப்பாக நினைக்க வேண்டாம்” என்று சொன்னான் என்றான் தேவா...

“அடபாவி மாம்ஸ் நீ கில்லாடிடா..... திருமணத்திற்கு பிறகு லவ் பண்ண விஷயம் தேவாக்கு தெரிஞ்சா தப்பா நினைப்பானு எப்படி சொல்லி இருக்கான் பாரு” என அவனை மனதில் திட்டிகொண்டே பெருமையாகவும் நினைத்தாள் ரோஜா.

“ஆமா அத்தான் மனதில் நினைத்தவளே மனைவியாக வரும்போது சோகம் கூட சுகம் ஆகும் சொர்க்கம் நம் வசமாகும் அப்டின்னு பாட்டே இருக்கே” என சொல்ல

அதை கேட்டதும் அவன் பதில் பேசாமல் வெளியே வெறித்தபடி நிற்க

“என்ன அத்தான் என் பாட்டில் ஏதாவது பிழை கண்டீரா ” என கிண்டலாக கேட்டுகொண்டே அவன் முன்னே வர

இறுகி இருந்த அவன் முகத்தை பார்த்தவள் ..”ஏன் அத்தான் நான் ஏதாவது தப்பா சொல்லிட்டனா” என கேட்டாள்.

அவனோ பதில் சொல்லாமல் கட்டிலில் அமர்ந்தவன் அவள் கையை பிடித்து இழுத்து தன் அருகில் அமரவைத்தவன் அவள் மடியில் படுத்து கொண்டு சிறிது நேரம் அவள் வயிற்றை கட்டி பிடித்து கொண்டு இருந்தான்.

“என்ன அத்தான் ....என்னாச்சு...ஏன் இப்படி பண்றிங்க” என்றவள் ஒன்றும் புரியாமல் அவனை பார்க்க

அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தவன் “சாரி அம்லு...உன்னோட நிறைய சந்தோசத்தை நான் பறிச்சுட்டேன்.....என்னோட சுயநலத்துக்கு உன்னோட மகிழ்ச்சியை அடகு வச்சுட்டேன் எனக்கு மன்னிப்பே கிடையாது” என அவன் புலம்ப

“அய்யோ என்ன உலறிங்க.....என்னாச்சு உங்களுக்கு” என அவள் கோபமாக கேட்க

“இல்லை ரோஜா.....காலையில நீ ரதிய கிண்டல் பண்ணும்போது அவ முகத்துல இருந்த சந்தோசம் ,மேலும் நீ இப்போ சொன்ன மாதிரி மனதிற்கு பிடிச்சவன் கணவனா அமைஞ்சா” என அவன் சொல்லி முடிக்கும் முன்

“போதும் அத்தான்......இது வரை நான் புலம்பிட்டு இருந்தேன்...இப்போதான் பழசை எல்லாம் மறந்து புது வாழக்கை ஆரம்பிச்சு இருக்கேன்......நீங்க அதை மறுபடியும் நியாபக படுத்தாதிங்க” என சொன்னவள்

“யார் சொன்னா உங்களை எனக்கு பிடிக்கலை அப்டின்னு......மாப்பிள்ளை யார்னு சொல்லாம திருமணம் செய்தது தான் எனக்கு பிடிக்களை...மத்தபடி இந்த மன்மத ராசாவ யார்க்காவது பிடிக்காம இருக்குமா” என அவன் முகத்தை நிமிர்த்தி அவன் மீசையை பிடித்து இழுத்து அவள் செல்லம் கொஞ்ச

“ஹே அம்லு ...என் செல்ல குட்டிம்மா” என சொல்லிகொண்டே வேகமாக அவளை இழுத்து அணைத்தவன் அன்றைய தேடல் அவனிடம் எப்போதும் இருப்பதை விட அதிகமாக அவளை தன்னோடு ஐக்கியபடுத்தி விடுபவன் போல் செயல்பட்டான்.



உயிரை கொடுக்கும் நட்பு

தன்னை உயிராக என்னும் துணை

அனைத்தும் நீயே என வாழும் குடும்பம்

நினைக்கும் போதே மனம் மகிழ!

இனி ஒரு துன்பமில்லை என

அவள் இறுமாந்திருக்க

மின்மினி பூச்சியின் வெளிச்சத்தை

விடிவெள்ளி என எண்ணி

ஏமாறும் இப்பெண்ணின்

அறியாமையை என் சொல்வது

என காலம் அவளை பார்த்து சிரித்தது !!!!!!!!!!!!!!