• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் - 31

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
அத்தியாயம் -31





பின்னர் நாட்கள் செல்ல ரோஜா வாணியின் வழக்கை குடும்ப நீதிமன்றத்தில் முறையாக தாக்கல் செய்தாள்.

முதன் முதலாக நீதி மன்றத்திற்கு தனியாக செல்கிறாள் ரோஜா.காலை எழுந்ததில் இருந்தே படபடப்புடன் இருந்தவள் பொருட்களை அங்கும் இங்கும் வைத்து தடுமாறிக்கொண்டு இருந்தாள்.

அவளது இந்த படபடப்பு தேவாவிற்கு சிரிப்பை ஏற்படுத்தினாலும் முதல் நாள் தானும் இதே போல் இருந்ததை உணர்ந்தவன் அவள் கண்ணாடி முன் நின்று ஏதோ பேசி பயற்சி செய்து கொண்டு இருக்க அவள் அருகில் வந்த அவளது தோளை பிடித்து இணையாக நிற்க கண்ணாடியில் அதை பார்த்தவள் அவளை அறியாமல் ஏதோ புது பலம் வந்தது போல் முகம் தெளிவடைய ,திரும்பி அவன் முகத்தை பார்த்தவள் அவனோ ....ஆல் தி பெஸ்ட் என சிரித்து கொண்டே சொல்ல அந்த வார்த்தை அவளுக்கு பெரிய தைரியத்தை கொடுத்தது.

உடனே அவள் திரும்பி கண்ணாடி முன் “நான் ரோஜா இராகதேவன் ...எதற்கும் பயபடமாட்டேன்.....தைரியாமாக இருப்பேன் “ என நம்பிக்கையுடன் மனதிற்குள் சொல்லி கொண்டவள் மறுபடியும் என்ன பேசவேண்டும் என்பதை ஒத்திகை பார்த்து கொண்டாள்.தேவா ஏதும் சொல்லாமல் கிளம்பி கீழே சென்றுவிட்டான்.

இருவரும் கிளம்பி அலுவலகம் செல்ல ரோஜாவோ கேஸ் சம்பந்தமான விபரங்களை பார்த்து கொண்டே வந்தாள்.இந்த கேஸில் தேவா தலையிட விரும்பவில்லை என்று சொல்லிவிட்டான்.பட்டாபி தான் அவளுக்கு எல்லா விபரங்களையும் சொல்லி தந்தான்.

அலுவலகத்தில் தேவா இறங்கி கொண்டு ரோஜாவை தனியாக நீதிமன்றம் அனுப்ப ஏனோ மனதில் சிறு நடுக்கம் அவளுக்கு ஏற்பட்டது.குடும்ப நீதி மன்றத்தில் நுழைந்ததும் வாணி நின்று கொண்டு இருக்க ரோஜாவை பார்த்ததும் வேகமாக வந்தவர் “மேடம் உங்களை நம்பித்தான் இருக்கேன்..அந்த ஆளு கிட்ட இருந்து எப்டியாவது எனக்கு விடுதலை வாங்கி கொடுத்திடுங்க ” என அழுது கொண்டே சொல்ல

ரோஜாவிற்கும் இது முதல் அனுபவம் என்பதால் என்ன சொல்வது என தெரியாமல் அதே நேரத்தில் கவலைபடாதீங்க வாணி...இப்போது தானே வந்து இருக்கிறேன்... என சொல்லிவிட்டு வேகமாக உள்ளே சென்றாள்.அங்கு இருக்கும் வழக்கறிஞர்கர்களை பார்க்கையில் மீண்டும் பயம் வர அந்த நேரத்தில் அவளின் அருகில் “ஆரம்பத்தில் இப்படிதான் இருக்கும் பயப்படாதே” என குரல் கேட்க திரும்பி பார்த்த ரோஜா அங்கு சிரித்தபடி பட்டாபி நின்று கொண்டு இருந்தான்.

அவனை பார்த்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டவள் ...”ஹே பட்டாபி நீ எப்படி இங்க ....அவருக்கு தெரியுமா? நான் நேற்றே உன்னை அழைத்து செல்கிறேன் என்று கேட்டதற்கு என்னை திட்டிவிட்டார்.நீயே இப்போது தான் முதல் வழக்கை சந்திகிறாய்.அதற்குள் உனக்கு ஒரு ஜூனியரா என்று....அதான் உன்னை கூப்பிடல்லை” என அவள் அவனை அழைத்து வராததற்கு சமாதனம் சொல்ல .

“எனக்கும் தெரியும் ரோஜா நானும் கேட்டேன் ...சார் மறுத்துவிட்டார்.இப்போது ஒரு கேஸ் விஷயமாக வெளியே போகவேண்டும் என்று சொல்லிவிட்டு தான் இங்கு வந்தேன்.....இது உனக்கு முதல் வழக்கு இல்லயா.......எப்படி பேசுகிறாயோ என்று ரொம்ப கவலையா இருந்திச்சு. அதான் கிளம்பி வந்திட்டேன்...நீ கவலை படாதே தைரியமாக பேசு” என அவன் அவளை உற்சாக படுத்த

அவனது அன்பை நினைத்து ரோஜாவின் மனம் நெகிழ......அவனை பாசத்துடன் பார்த்தவள்” தேங்க்ஸ் பட்டாபி” என ஆத்மார்த்தமாக சொல்ல

அவனோ சிரித்து கொண்டே “ஹே ரோஜா ஓவர் செண்டிமெண்ட் உடம்புக்கு ஆகாது......நீ முதல்ல வழக்கை கவனி “என சொன்னான்..

முதல் நாள் வழக்கு விசாரிக்கப்பட்டு அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.முதல் வாழக்கை தனியாக சந்தித்தது அவளுக்குள் ஒரு பெரிய மாற்றத்தையும் நம்பிக்கையும் கொடுத்தது.

ராம், ரதிதேவியின் காதல் நாளும் பொழுதுமாக வளர இங்கு தேவாவோ ரோஜாவின் மேல் அன்பை பொழிந்து கொண்டு இருந்தான்.

எல்லாம் நல்லவிதமாக போய் கொண்டு இருக்க அன்று காலை எப்போதும் போல் அனைவரும் கிளம்பி கொண்டு இருக்கையில் பிரசாதத்தோடு ராம் வந்து நின்றான்.

முதலில் அவனை பார்த்த ரோஜா “ஹே மாம்ஸ் என்னது இந்த நேரத்தில வந்து இருக்கிங்க” என ஆச்சிரியமாக கேட்க

சத்தம் கேட்டு வந்த தேவா “ஹே ராம் வா வா என்றவன் உட்கார்...காபி சாப்பிட்ரியா” என உபசரிக்க

“அதெல்லாம் வேண்டாம் தேவா......அம்மா ஊர்ல இருந்து வந்திட்டாங்க ...அதான் பிரசாதம் கொடுத்திட்டு போலாம்னு வந்தேன்” என்றவன் பேச்சு மட்டுமே அங்கு இருக்க கண்களோ தன்னவளை தேட

“உன்னை கண் தேடுதே...காணாமலே மனம் வாடுதே” என ரோஜா திடிரென்று பாட

தேவா அவளை திரும்பி பார்த்ததும் “ஹிஹிஹி இல்லை அத்தான் ரேடியோல அந்த பாட்டு பாடுச்சு அதான்” என வழிய

ராமின் முகத்திலே அதைவிட அதிகமாக அசடு வழிந்தது.

அதற்குள் தேவா “சரி ராம் ...நான் வந்து அம்மாகிட்ட திருமணம் விஷியமா பேசறேன் என்றவன் கொஞ்சம் வேலை இருக்கு வந்திடறேன்” என சொல்லி கிளம்பினான்.

ராமின் பார்வை ரதியின் அறைப்பக்கம் செல்ல

“அங்க எல்லாம் ஆள் இல்லை......ஏதோ படிக்கிறது இருக்குனு நேரமே கிளம்பி போயாச்சு” என ரோஜா சொன்னதும்

ராமின் முகம் வாட......”அவளை பார்க்கலாம்னுதான் நேரமே வந்தேன்...... என சொன்னவன் முதல்ல கல்யாணத்தை முடிக்கணும்” என சொல்லிகொண்டே வாசல் பக்கம் திரும்ப

“அதெல்லாம் இல்லை மாம்ஸ்...ரதிக்கு படிப்பு முடியற வரை திருமண பேச்சு இல்லை” என்ற குரல் வர

“என்ன கொடுமை இது...அதுக்கு இன்னும் ஆறு மாதம் இருக்கு என அதிர்ந்தவன் ரோஜாவிடம் இங்க பாரு ரோஜா குட்டி.....மாமா உனக்கு எத்தன முறை பீட்சா எல்லாம் வாங்கி கொடுத்து இருக்கேன்.....நீ கேட்டது எல்லாம் செஞ்சு கொடுத்திருக்கேன்......இப்போ எனக்கு ஒரு கஷ்டம்னு வரும்போது நீ இப்படி பண்ணலாமா ...உன் மாம்ஸ் பாவம் இல்லையா ...கொஞ்சம் கருணை வைச்சு உன் அத்தான்கிட்ட சொல்லி சீக்கிரம் திருமணத்தை வைக்க சொல்லு” என கெஞ்ச

“என்ன மாம்ஸ் இது...ஒரு IPS ஆபிசர் மாதிரியா நடந்துகிரிங்க......இப்படி இறங்கிட்டிங்கலே” என அவள் கிண்டலாக சொல்லிகொண்டே அவனை பார்த்து சிரிக்க

“எல்லாம் என் நேரம் என்ன பண்றது...சில்வண்டுகிட்ட எல்லாம் இப்படி சிக்கிட்டு முழிக்கிறேன்” என அவன் சலித்தபடி சொல்ல

“அப்போ மாம்ஸ் கல்யாணம் ஒரு வருடம் கழித்து தான் ” என அவள் உறுதியாக சொல்ல

“தெய்வமே” என அவள் அருகில் வந்தவன் ......ரோஜாகுட்டி நீயும் ஏண்டா இப்படி பழி பண்ற.......ஏற்கனவே எட்டு வருஷம்” என அவன் ஆரம்பித்ததும்

“போதும் மாமா போதும்......நீ இப்டி புலம்பி கேட்டு கேட்டு அங்க பாரு எல்லார் காதிலையும் ரத்தம் வந்திடுச்சு......போதும்...இப்போ உனக்கு என்ன வேணும் ...கல்யாணம் சீக்கிரம் வைக்கணும் அவ்ளோதான ..சரி விடு வைச்சுடலாம் ...ஆனா” என அவள் இழுக்க

“நீ என்ன சொன்னாலும் செய்யறேன் ரோஜா” என மறுபடியும் கீழ இறங்க

“என்ன மாம்ஸ் இது......இப்படி ஆகிட்ட.....எனக்கு அசிங்கமா இருக்கு என சொன்னவள் சரி சரி இன்னைகே வந்து பேசிட்றோம்” என அவள் சிறிது கொண்டே சொன்னாள்.

அதற்கு பின் அவள் கேட்ட அனைத்து தீனி வகைகளையும் வாங்கி கொடுத்த பின்பே ராம் அங்கிருந்து கிளம்பினான்.



தேவாவின் ஜூனியராக தரணி சேர்ந்து விட இப்போது பட்டாபியும் தனியாக சில வழக்குகளை பார்த்து கொண்டு இருந்தான்.

அன்று விடுமுறை நாள் ...ஆனால் வேலை இருப்பதால் அனைவரும் அலுவலகம் வந்து இருந்தனர்.

கொஞ்ச நாட்கள் வெளியூர் சென்று இருந்த நாதன் அன்று தான் தேவாவின் அலுவலகம் வந்து இருந்தான்.அவன் எப்போதும் போல் வேகமாக உள்ளே நுழைய

“ஹலோ மிஸ்டர் எங்க போறீங்க......இங்க ஆள் இருக்கிறது உங்களுக்கு தெரியலே” என அதிகாரமாக ஒரு குரல் வர

அதிர்ந்து திரும்பி பார்த்த நாதன் அங்கு தரணி நின்று கொண்டு இருக்க

அவளை பார்த்ததும் ஷாக் அடித்தது போல் நின்றவன்

“இது என்னடா .....அலுவலகம் மாறி வந்திட்டமோ .....தேவா ஆபிசில் மறுபடியும் பெண்ணா ...அதும் இவ்ளோ அழகான பொண்ணா” என மனதில் நினைத்தவன் அந்த பெண்ணின் கண்கள் அவனை நகர விடாமல் நிறுத்த அவளையே பார்த்து கொண்டு இருந்தான் நாதன்.

தரணியோ “ஹலோ யார் நீங்க என்ன வேணும்.......இப்போ எதுக்கு ஆபிஸ்ல அனுமார் சிலை மாதிரி நின்னுட்டு இருக்கீங்க “என கேட்டதும்

நாதனோ “என்னங்க இப்படி சொல்லிட்டிங்க” என வேகமாக கேட்க

“பின்ன நீங்க பாட்டுக்கு பதில் சொல்லாம நின்னா வேற எப்படி சொல்வாங்க” என அவள் திரும்ப அவனை கேள்வி கேட்டாள்.

“இல்லைங்க சொல்றதான் சொல்றிங்க..ஒரு கண்ணன்,முருகன் ,ஏன் நம்ம மகாபாரத அர்ஜூனன கூட சொல்லலாம்..அவருக்கும் நிறைய பொண்டாட்டி இருக்காங்க ....ஆனா இப்படி பொசுக்குனு அனுமார் சிலைன்னு சொல்லிட்டிங்களே ...அதான் என்னால தங்க முடியல” என அவன் நெஞ்சில் கைவைத்து சோகமாக சொல்வது போல் அவன் நடிக்க

தரணியோ “என்னது இது..... இந்த ஆபீஸ்க்கு வரவங்க எல்லாம் அரை லூசாவே வராங்க என நினைத்தவள் ...சார் உங்களுக்கு என்னதான் வேணும்..... கேஸ் விஷயமா வந்து இருக்கிங்களா .....சொல்றதா இருந்தா என் கிட்ட சொல்லுங்க...இல்ல கிளம்புங்க.....இப்படி மொக்க போட்டு என் வேலையும் கெடுக்காதிங்க” என கோபமாக சொன்னாள்.

அப்போது தான் உள்ளே நுழைந்த தேவா நாதனை கண்டதும் “டேய் மச்சான் எப்படா வந்த ஊர்ல இருந்து” என கேட்டுகொண்டே வர

உரிமையுடன் தேவா அழைக்கவும் ...அய்யோ சாருக்கு தெரிந்த நபரோ.....நாம் வேறு ஏதோ ஏதோ பேசிவிட்டோமே என முகத்தில் சற்று பயத்துடன் தரணி நாதனை பார்க்க

“நான் இப்பதாண்டா வந்தேன்...உள்ளே நுழைந்ததும் உன் ஆபிசில் நல்ல வரவேற்ப்பு” என தரணியை பார்த்து கொண்டே சொன்னான் நாதன்.

“என்னடா சொல்ற” என தேவா புரியாமல் கேட்க

“இல்லை சார் அது வந்து” என தரணி தடுமாற்றதுடன் ஆரம்பித்ததும்

அதற்குள் தேவா நாதனிடம் “மச்சான் இவங்க பேர் தரணி......ரோஜாவோட தோழி......இப்போ நம்மகிட்ட ஜூனியரா புதுசா சேர்ந்து இருக்காங்க...ரொம்ப நல்ல பொண்ணு...மரியாதை தெரிஞ்ச பொண்ணு “ என தரணிய அறிமுகபடுத்தினான்.

“ம்ம்ம் அதான் பார்த்தானே அவங்களோட மரியாதைய” என நாதன் ஒரு மாதிரி குரலில் சொல்ல

தரணியோ பயத்தில் தேவாமுகத்தையும் நாதன் முகத்தையும் மாறி மாறி பார்த்து கொண்டு இருந்தாள்.ஏற்கனவே ரோஜா சொல்லி இருந்தாள் .தேவாவிற்கு எப்போதும் மரியாதை மிக முக்கியம்....இல்லயென்றால் அவரிடம் வேலை பார்க்க முடியாது என்று......இப்போ நாதன் ஏதாவது சொல்ல தேவா தன்னை திட்டுவாரோ என பயத்துடன் அவள் முழித்து கொண்டு இருக்க

அவளது அலைபாயும் கண்களில் தன்னை முழுவதும் தொலைத்தது போன்ற உணர்வு நாதனுக்கு ஏற்பட

“அது வந்து சார்” என தரணி மறுபடியும் ஆரம்பிக்க

அதற்குள் தேவா “சரி வா மச்சான்...உள்ள போய் பேசலாம் என்றவன் திரும்பி அப்புறம் தரணி நீ எதோ இன்று சினிமா போகணும்னு சொன்னியாம்.....ரோஜாவுக்கு கொஞ்சம் வேலை இருக்குதாம் ...அதுநாள வரலைன்னு சொல்லிட்டா...உன்னை அந்த டிக்கெட் கேன்சல் பண்ண சொல்லிட்டா என்றவாறே உள்ளே சென்றான்.

சிறிது நேரத்தில் வெளியில் வந்த நாதன் தரணியின் அருகில் செல்ல

அவனை பார்த்ததும் அவள் எழுந்து நின்றாள்.

“அந்த டிக்கெட் கேன்சல் பண்ணவேண்டாம்...நான் இருக்கேன்” என அவன் சொல்ல

சிறிது நேரத்திற்கு பிறகே அவன் என்ன சொல்கிறான் என அவளுக்கு புரிய கோபத்தில் நிமிர்ந்து பார்த்து முகத்தை சுளிக்க



அப்போது என்று அவனது அலைபேசியில்


உசுரே போகுது உசிரே போகுது
உதட்ட நீ கொஞ்சம் சுளிக்கையிலே

ஓ மாமேன் தவிக்குறேன்,
மடி பிச்ச கேக்குறேன்,
மனச தாடி என் மணிக்குயிலே



என்ற பாடல் ஒலித்தது.

நாதனே இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை..... சிச்சுவேஷன் சாங் போல் அது அமைந்து விட “வாவ் சூப்பர் என அவன் சொல்ல

“என்னது” என அவள் வேகமாக கேட்டதும்

“இல்லைங்க உங்க பாட்டு சூப்பர்னு சொன்னேன்” என்றான்.

“ம்ம்ம் உங்க அலைபெசியில் இருந்து தான் இந்த பாட்டு வருது” என அவள் எரிச்சலுடன் சொல்ல

“அட ஆமாம் இல்லை.......ஹிஹிஹி இன்னிக்குதான் மாத்தி வைச்சேன்...அதான் தெரியலை” என வழிந்தவன்

“இந்த பாட்டு வச்ச நேரம் சூப்பர்ங்க” என அவளை ஒரு மாதிரி பார்த்தபடி சொன்னவன் அதற்குள் பட்டாபி வந்ததும் அவனுடன் பேசியபடியே வெளியே நடந்தான் நாதன்.

வீட்டில் “அத்தான் நான் சொல்லிட்டே இருக்கேன்......நீங்க கண்டுக்கவே மாட்டேனு சொல்றிங்க” என ரோஜா கத்திக்கொண்டு இருந்தாள்

“என்ன அம்லு நீ தான் சொன்னா புரிஞ்சுக்க மாட்டேன்கிற .... அம்மா வந்த உடனே எல்லாம் பேசிக்லாம்னு சொன்னாங்க......வந்து இரண்டு நாள் தானே ஆகுது ஏன் அவசரபட்ற” என்றான் தேவா.

“ இல்லை அத்தான் ....நல்ல காரியத்தை ரொம்ப நாளைக்கு தள்ளி போடகூடாது .........நீங்க நாளைக்கு வரீங்க...போய் பேசறோம் அவ்ளோதான்” என அவள் மிரட்டுவது போல் சொல்ல

அதற்கு “தங்கள் உத்தரவு அம்மணி” என தேவா குனிந்த படி சொல்ல

“என்ன அத்தான் நீங்க” என வெட்கபட்டபடி அவன் நெஞ்சினிலே சரணடைந்தால் அவன் மனையாள்.

மறுநாள் இருவரும் கிளம்பி காவேரியாம்மாள் வீட்டிற்கு சென்றனர்.ரோஜாவை பார்த்தது அவரது முகம் மலர “ஹே ரோஜா குட்டி வாடா என்றவர் தேவாவையும் வா தேவா” என அன்போடு வரவேற்றார்.

“என்ன அத்தை கடவுள்கிட்ட எல்லா வரத்தையும் வாங்கிட்டிங்களா” என அவள் சிரித்து கொண்டே கேட்க

“ம்ம்ம் லொள்ளுடி உனக்கு” என சொன்னவர் “பிரசாதம் எல்லாம் ராம் கொடுத்தானா ....எனக்கு ரொம்ப களைப்பா இருந்ததா...அதான் அவனிடம் கொடுத்து விட்டேன்” என்றார்.

“அதெல்லாம் வந்திடுச்சு அத்தை.... நாங்க எல்லாம் பிள்ளயார் மாதிரி ...உட்கார்ந்த இடத்திலே வரம் வாங்குவோம்ல” என அவள் பெருமையாக சொல்ல

“ஆமா ஆமா ஆளும் அப்டிதான் இருக்க ...இப்பதான் நீ உண்மை பேசி இருக்க ரோஜா “என தேவா அவளை பார்த்து கிண்டலாக சொன்னதும்

“இங்க பாருங்க அத்தை ...நான் குண்டா இருக்கேன்னு சொல்லாம சொல்றார்” என அவள் காவேரியிடம் புகார் செய்தாள்.

“சரி விடுடா...தேவா எப்பவும் பொய் சொல்லமாட்டான்” என அவர் பேச்சு வாக்கில் சொல்ல

“ரோஜாவோ அதான் நல்ல சொல்லுங்க” என முடிக்கும் முன்பே அதன் அர்த்தத்தை உணர்ந்தவள்

“அத்தை நீங்களுமா” என சிணுங்கலுடன் முகத்தை திருப்பி கொள்ள

“சரி அம்லு...விடு...பாரு உனக்கு பிடிச்ச ஸ்வீட்ஸ் எல்லாம் அம்மா வச்சு இருக்காங்க சாப்பிடு” என அவன் காவேரி கொண்டு வந்து வைத்திருந்த பலகாரத்தை காட்டியதும் அவனை முறைத்து கொண்டே “எல்லாம் எங்களுக்கு தெரியும்” என முகத்தை திருப்பியபடி அமர்ந்திருந்தாள் ரோஜா .

அதற்குள் தேவா காவேரி அம்மாவிடம் “அம்மா திருமணத்தை பற்றி பேசத்தான் வந்தோம்.எப்போது வைத்து கொள்ளலாம்” என்று கேட்டான்.

“இப்போது சித்திரை மாதம் தேவா ....நல்ல காரியங்கள் செய்யமாட்டார்கள்.அதனால் அடுத்த மாதம் வைத்து கொள்ளலாம் என்று சொன்னவர் ரதியின் ஜாதகத்தை கொடுத்தால் நான் இரண்டு பேர் ராசிக்கும் நல்ல நாள் எது என்று ஐயரிடம் கேட்டு குறித்து வருகிறேன்” என்றார் அவர்.

“அம்மா அதில் ஒரு சிக்கல்” என அவன் ரோஜாவின் முகம் பார்க்க

அவளோ சாப்பிடுவதில் மும்முரமாக இருக்க

ரதியின் முழுவிபரத்தையும் அவரிடம் சொன்னான் தேவா.

அவன் சொல்ல சொல்ல காவேரி அம்மாவின் முகம் மாற அவன் சொல்லி முடித்த போது அதிர்ச்சியில் சிலையாக அமர்ந்திருந்தார் அவர்.

தேவாவிற்கு அவரின் நிலை புரிய ரோஜாவை பார்க்க

அவளும் தேவா சொல்ல ஆரம்பித்ததில் இருந்து நடந்தை பார்த்து கொண்டு இருந்தவள் காவேரி அம்மாள் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருப்பதை பார்த்து “நானும் இப்டிதான் அத்தை ரதி சொன்ன உடனே அதிர்ச்சி ஆகிட்டேன்.எவ்ளோ கஷ்டபட்ருக்கா அந்த பொண்ணு” என வருத்தமாக சொன்னவள் “நல்லவேளை அத்தான் அவளை சொந்த தங்கை போல நல்லபடியா பார்த்துகிட்டார்” என சொல்ல

தேவா வேண்டுமானால் அந்த பொண்ணை தங்கையாக ஏத்துக்கலாம்.ஆனால் நான் மருமகளாக ஏற்றுகொள்ள முடியாது என காவேரி அம்மாள் அமைதியாகவும் அழுத்தமாகவும் சொல்ல

ரோஜாவோ அத்தை என அதிர

ஆனால் தேவா முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.ஜாதகம் என்றதுமே அவன் மனதில் சின்ன சலனம் இருந்தது.அதனால் அவன் கொஞ்சம் பிரச்சனயை எதிர்பார்த்து இருந்தான்.

ஆனால் ரோஜாவோ “என்ன அத்தை நீங்க இப்படி சொல்றிங்க...ரதி எவ்ளோ நல்ல பொண்ணு தெரியுமா......என்னை விட நல்ல பொண்ணு அத்தை.....நம்ம குடும்பத்துக்கு ஏற்ற பொண்ணு” என அவள் ரதியின் குணங்களை எடுத்து சொல்ல

ஆனால் அவரோ “குலம் கோத்திரம் தெரியாத பெண்ணை எல்லாம் என் வீட்டு மருமகளாக என்னால் ஏற்று கொள்ள முடியாது ரோஜா “என அவர் உறுதியடன் சொன்னார்.

“அம்மாஆஆஅ என தேவா வேகமாக பேச ஆரம்பித்தவன் பின்னர் அவர் முகத்தை பார்த்ததும் சற்று தணிந்த குரலில் “அம்மா அவளை சிறுவயதில் இருந்தே எனக்கு தெரியும்...மேலும் அவள் அம்மா செய்த தவறுக்கு அவள் என்ன செய்வாள் பாவம் ...ஒருவகையில் அவர்களும் எங்கள் சொந்தம்தானே” என அவன் விளக்க

அதற்கு அவர் “தேவா எனக்கு இருப்பது ஒரே பையன்.என் வீட்டிற்கு வரும் மருமகள் சொத்து சுகம் ஏதும் கொண்டு வரவேண்டாம்......நல்ல குடும்பத்தில் அவள் பிறந்தவளாக இருக்க வேண்டும்...அப்பா யார் என்றே தெரியாது......அம்மாவும் இறந்து விட்டார் ....அப்படிப்பட்ட பெண்ணை நான் எப்படி என் மருமகளாக ஏற்று கொள்ள முடியும்.

ஒரு வீட்டின் மருமகள் அந்த வீட்டின் மகாலட்சுமி ...அந்த குலத்தை வாழவைக்க வந்தவள் ...வம்சத்தை தழைக்க வைக்க வந்தவள்.....அப்படிப்பட்ட பெண் தான் பிறந்த குலமே எது என தெரியாமல் இருக்கும்போது அவளிடம் எங்கள் குலம் தழைக்க நான் எப்படி” என அவர் சொல்லி நிறுத்த

“அத்தை நீங்களா இப்படி பேசறிங்க......என்னால் நம்பமுடியலை .....ரதி ரொம்ப நல்ல பொண்ணு அத்தை ........தயவு செய்து வேண்டாம்னு சொல்லிடாதிங்க” என அவள் கெஞ்சுவது போல் பேச

“ஒவ்வொருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை ரோஜா...உன் திருமணத்தை பற்றி உன் வீட்டாருக்கு ஒரு எண்ணம் இருந்தது...அதே போல் என் மகன் திருமணத்தை பற்றி எனக்கு ஒரு எண்ணம் இருக்கும் அல்லவா ....நீ சிறுபெண்...உனக்கு இதெல்லாம் சொன்னால் புரியாது” என்றவர்

“தேவா நீ என்னை தப்பா எடுத்து கொள்ளாதே...ஒரு அம்மாவின் ஸ்தானத்தில் இருந்து நினைத்து பார்...நான் சொல்வது உனக்கு புரியும்” என சொல்ல

தேவாவின் முகம் இறுக சட்டென்று சோபாவில் இருந்து எழுந்தவன் “சரிம்மா நாங்க கிளம்பறோம்” என சொல்லிவிட்டு விருட்டென்று வெளியே வந்து விட்டான்.

ரோஜாவோ காவேரியிடம் “அத்தை நீங்க மறுபடியும் யோசனை பண்ணி பாருங்க......அன்னைக்கு எல்லாம் பார்த்து பேசி சரின்னு சொல்லிட்டு இப்போ இப்டி சொல்றிங்க” என சொன்னதும்

“என்னிடம் யாரும் இதை பற்றி சொல்லவில்லை ரோஜா.....உனக்கும் தெரிந்து இருக்கிறது ...இது ராம்க்கு தெரியுமா?” என அவர் கேட்க

“தெரியும் அத்தை...ஆனா நீங்க இதை பெருசா எடுத்துக்க மாட்டிங்கனு நினைச்சோம் ...ஆனா இப்போ இப்டி சொல்றிங்களே ......பாவம் அத்தை இரண்டு பேரும் மனசுல ஆசையை வளர்த்துகிட்டாங்க இப்போ இப்படி சொன்னா தாங்க மாட்டங்க” என அவள் வேதனயுடன் சொல்ல

“எனக்கும் கஷ்டமாகத்தான் இருக்கு ரோஜா...ஆனால் திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் ...அதில் சிறு நெருடல் இருந்தாலும் பிரச்சனைதான்...சரி சரி தேவா வெளியே நிற்கிறான்...நீ கிளம்பு....நாம் போனில் பேசிக்கொள்ளலாம்” என சொல்லி அவளை அனுப்பி வைத்தார் காவேரி .

காரில் வரும் வழியில் தேவா ஏதும் பேசவில்லை.......சிறிது நேரம் அமைதியாக இருந்த ரோஜா பின்பு மெதுவாக “அத்தான் நீங்க தப்பா எடுத்துகாதிங்க ....அத்தை புரியாம பேசிட்டு இருக்காங்க...ராம் மாம்ஸ் வந்து சொன்னா புரிஞ்சுக்குவாங்க” என சொல்லி முடிக்கும் முன் வேகமாக திரும்பி தேவா அவளை முறைக்க வெகுநாட்களுக்கு பிறகு தேவாவின் அந்த முகத்தை பார்த்தவள் சட்டென்று அமைதியானாள்.

வீட்டிற்கு அருகில் வந்த உடன்” இங்கு நடந்த எதையும் நீ ரதியிடம் சொல்லவேண்டாம்......இப்போது நாள் சரியில்லையாம்......பிறகு பார்த்து சொல்றேன்னு சொல்லிட்டாங்கனு மட்டும் சொல்லு” என அவன் சொல்ல, “சரி “என்றாள் ரோஜா.

ரோஜா உள்ளே நுழைந்ததும் வேகமாக ஓடி வந்த ரதி பின்னால் தேவா வர சற்று அமைதியானவள் அவன் மேலே செல்ல ரதியோ ரோஜாவை கையை பிடித்து தனது அறைக்கு இழுத்து வந்தாள்.

“ஹே ரோஜா என்ன சொன்னாங்க ராம் அம்மா.......நாள் குறிச்சாச்சா.....எப்போ...என்ன தேதி ........... என் எக்ஸாம் அப்போ இல்லைதான” என கேள்வி மேல் கேள்வி கேட்க

“இல்ல ரதி அது வந்து” என ரோஜா ஆரம்பிக்க

அதற்குள் தேவா “ரோஜா” என்றதும் “உங்க அண்ணன் கூப்பிட்றார் வந்திடறேன் “என சொல்லிவிட்டு அவளிடம் இருந்து தப்பி வெளியே வந்தாள்.


 

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
அதற்குள் தேவா அங்கு வந்துவிட ரதியை பார்த்தவன் முகத்தில் சந்தோசமும் உற்சாகமும் பொங்க அவள் நின்று கொண்டு இருந்தாள். வேதனையை முகத்தில் காட்டாமல் மறைத்தவன் எப்போதும் போல் சாதரணமாக “ரதிம்மா உனக்கு எக்ஸாம் இருக்கு இல்லயா ...நீ போய் படி” என சொல்லிவிட்டு ரோஜாவை அழைத்து கொண்டு மீண்டும் மாடிக்கு சென்றான்.

சிறிது நேரம் கழித்து அரை கதவு தட்டும் சத்தம் கேட்க திறந்த ரோஜா அங்கு ரதி நின்று கொண்டு இருந்தாள்.

“என்ன ரதி” என அவள் கேட்கும்போதே குரல் தடுமாற

ரதியோ உள்ளே பார்த்தவள் தேவா படுத்திருக்க அவளை வெளியே அழைத்து “உன் போன் என்னாச்சு......எடுக்கவே மாட்டேங்கிறியாம்.. அதுனால ராம் என்னை கூப்பிட்டார் ...இந்தா லைன்ல இருக்கார்” என கொடுத்தவள்

“ரோஜா ஏதும் பிரச்சனை இல்லில...உன் முகம் ஏன் வாடி இருக்கு” என கேட்டாள் .

“அதெல்லாம் இல்லைரதி...நான் நல்லா தான் இருக்கேன்” என சொல்லி கொண்டே போனை எடுத்து கொண்டு அவள் நகர

அவர்களது பேச்சை கேட்டு கொண்டு இருந்த ராம்......”ஹே ரோஜா உன் போன் என்னாச்சு......சரி அம்மாட்ட பேசுனிங்களா ...என்ன சொன்னாங்க...எப்போ கல்யாணம் வச்சுக்லாம்னு சொன்னாங்க.....ஹே ரோஜாகுட்டி கொஞ்சம் சீக்கிரம் வைக்க சொல்லுடா” என அவன் சொல்ல



“இந்த அவசரம் தான் இப்ப பிரச்சனயே” என கத்தியவள் அது வரை அடக்கி வைத்து இருந்த ஆத்திரம் எல்லாம் வெளியே வர......”நான் உன்கிட்ட அவ்ளோதூரம் சொன்னேன்ல... அவசறபடாதிங்கனு இப்போ பாருங்க ........ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லிட்டு நீங்க பெண் பார்க்க வந்து இருக்கலாம் ...நான் அத்தைகிட்ட முன்னாடியே ரதியை பத்தி சொல்லி இருப்பேன் ... இப்போ ஜாதகம் குலம் கோத்திரம் அப்டின்னு அத்தை வேண்டாம்னு சொல்றாங்க ...எல்லாம் உங்க அவசர புத்தியினால வந்தது ” என ஆத்திரமும் கோபமுமாக அவள் வெடிக்க

“என்னாச்சு ரோஜா...அம்மா என்ன சொன்னாங்க...இல்லை ரோஜா பாட்டி சொன்ன கேட்பாங்கன்னு தான் என்றவன் ரோஜா அம்மா என்ன சொன்னாங்க உண்மைய சொல்லு” என அவன் பதற

நடந்த அனைத்து விஷியங்களியும் சொன்னவள் “ என்னால் நம்ப முடியலை ராம்.அத்தைக்கு இதுல எல்லாம் நம்பிக்கை இருக்குனு தெரியும்.....ஆனா இந்த அளவுக்கு என நிறுத்தியவள் .....எனக்கு பயமா இருக்கு ராம்.அத்தை ரொம்ப தெளிவா சொல்லிட்டாங்க இந்த திருமணம் நடக்காதுன்னு” என சொல்லி கொண்டே திரும்ப

அங்கு ரதியோ அதிர்ச்சியில் சிலையென நின்று கொண்டு இருந்தாள்.

“ரதி நீ கீழே போகலையா” என கேட்டவாறே ரோஜா அவள் அருகில் வர

ரதியோ ஏதும் சொல்லாமல் கண்ணில் இருந்து கண்ணீர் வந்து கொண்டே இருக்க அப்டியே நின்று இருந்தாள்.

ரதி ரதி என அவள் கத்தவும்

அங்கு ராம் “என்னது ரதி அங்க இருக்காளா” என அவன் எதிர்புறத்தில் அவன் கத்தி கொண்டு இருக்க

“ரதி இங்க பாரு...எந்த பிரச்சனையும் இல்லை...எல்லாம் சரி பண்ணிடலாம்,....கண்டிப்பா இந்த திருமணம் நடக்கும் ” என அவள் அருகில் சென்று ரோஜா தோளோடு அணைத்து சொல்ல

அதற்குள் ராம் “ரோஜா ரோஜா நீ ரதியிடம் போனை கொடு” என்றதும்

“இந்தா ரதி ராம் உன்கிட்ட பேசணுமாம்” என அவள் கொடுக்க

போனையே சில வினாடிகள் வெறித்து பார்த்தவள் பின்னர் அழுது கொண்டே கீழே ஓடிவிட்டாள்.

இங்கு ராம் “ரதி ரதி “என அழைத்து கொண்டு இருக்க .....”அவள் அழுதுகிட்ட போய்ட்டா ராம் ...நான் உங்களிடம் பிறகு பேசுகிறேன்” என சொல்லிவிட்டு ரதியை தேடி சென்றாள் ரோஜா.

ராமோ அம்மா இப்படி சொல்வார்கள் என சற்றும் எதிர்பார்க்கவில்லை. ரோஜா சொன்னதை கேட்டதும் நம்ப முடியாமல் வீட்டிற்கு வந்தான்.

“அம்மா அம்மா “என்றபடி அவன் உள்ளே நுழைந்ததும் காவேரி அம்மாள் வெளியே வந்தவர் “என்ன ராம் அதுக்குள்ள வந்திட்ட......நான் இன்னும் டிபன் ரெடி பண்ணலையே ...கொஞ்ச நேரம் பொறு இப்போ செஞ்சிடறேன்” என சொல்லிவிட்டு சமையல் அறைக்குள் புகுந்து கொண்டார்.

அவர் பின்னாடியே சமையல் அறைக்கு வந்தவன் “ஒன்னும் அவசரம் இல்லம்மா ...மெதுவா செய்யுங்க என சொல்லிவிட்டு ...வேற என்னமா இன்னைக்கு ஸ்பெசல்” என கேட்டான்.

‘ஸ்பெசல் எல்லாம் ஏதும் இல்ல ராம்...உனக்கு பிடிச்ச பால் பணியாரம் செய்யறேன்.....அதான்” என அவர் சிரித்து கொண்டே சொல்ல

அவர் முகத்தில் இருந்து எதையும் கண்டுபிடிக்க முடியாமல் ...”அம்மா அப்புறம்” என அவன் இழுக்க

“டேய் இப்போ உனக்கு என்ன வேணும்...எப்பவும் சமையல்கட்டு பக்கம் வராதவன் இப்போ வந்து நொய் நொய்னு பேசிட்டு இருக்க...முதல்ல போய் குளிச்சுட்டு வா போ” என அவர் அதட்ட

“சரிம்மா” என மெதுவாக சொல்லிகொண்டே நகர்ந்தவன் ..”அம்மா இன்னைக்கு யாராவது விருந்தாளிங்க நம்ப வீட்டுக்கு வந்தாங்களா “என மறுபடியும் உள்ளே வந்து கேட்டான்.

“யாரும் வரலையே “என சொல்லி கொண்டே தன் வேலையை தொடர்ந்தார் காவேரி அம்மாள் ..

அவனும் பலவிதத்தில் நடந்து என்ன என்பதை அவரே சொல்வார் என முயற்சி பண்ண அவரோ அவனுக்கு பிடிகொடுக்காமல் பேசிக்கொண்டு இருந்தார்.இறுதியில் “அம்மா இன்னைக்கு ரோஜா வந்தாளா” என அவன் கேட்டதும்

காவேரி அம்மாவோ சாதரனமாக “ஆமா அவள் வந்தாள்” என்றார்.

“அப்புறம் நீங்க ஏன் யாரும் வரலைன்னு சொன்னேங்க” என அவன் வேகமாக கேட்க

“அவ நம்ம வீட்டு பொண்ணுடா ....எப்ப வேணாலும் வருவா போவா...இதெல்லாம் சொல்லிட்டு இருப்பாங்களா என்றார்.

“வந்தவங்க ஏதாவது சொன்னாங்களா” என அவன் கேட்டதும்

காவேரி அம்மாள் நிமிர்ந்து அவன் முகத்தை ஆழ்ந்து பார்க்க

சட்டென்று தலை குனிந்தவன் “இல்லம்மா ......தேவா இன்னைக்கு கல்யாணம் விஷயமா உங்க கிட்ட பேசறதா சொன்னான் அதான்” என இழுக்க

அவரோ “இந்தா இந்த சட்னி சாப்பிட்டு பாரு...காரம் போதுமான்னு” என சமபந்தம் இல்லாமல் பேச

ராமோ ஏதும் பேசாமல் அமைதியாக நின்றான்.

“ஏண்டா ...நல்ல இல்லியா சட்னி என்றவர்....இப்போ என்னடா பிரச்சனை உனக்கு......ஆமா ரோஜா தேவா வந்தாங்க ...கல்யாணம் எப்போ வச்சுக்லாம்னு கேட்டாங்க.....ஆனா அந்த பொண்ணு தேவாவோட சொந்த தங்கை கிடையாதாம். ஏதோ அனாதையாம்....... குலம் கோத்திரம் தெரியாமல் எப்படி நம்ம திருமணம் செய்யறது........ ...அதான் இந்த பொண்ணு வேண்டாம்னு சொல்லிட்டேன்” என்றவர்” சரி சரி இந்தா பனியாரம் ரெடி நீ சாப்பிடு” என அவன் கையில் தட்டை கொடுக்க ராமோ அவர் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தான்.

“என்னை ஏண்டா பார்க்கிற.....உன் அம்மா உன் நல்லதுக்குதான் செய்வேன்......இதுவரை நீ கேட்டு நான் மறுத்து பேசி இருக்கேனா .....உனக்கு பிடிச்சது தானே செஞ்சிருக்கேன்.....இப்பவும் அதான் சொல்றேன்....இது நம்ம குடும்பத்துக்கு ஒத்து வராது. அம்மா சொன்னா அதுக்கு காரணம் இருக்கும்.....நான் சொல்லி உனக்கு தெரியனும்னு கிடையாது......இனி இதை பற்றி பேசாதே என சொல்லிவிட்டு நான் சாப்பிட்டுவிட்டேன்.....நீ சாப்பிட்டு எல்லாவற்றியும் எடுத்து வைத்து விட்டு வந்து படு” என அவனை பேசவிடாமல் அவன் பதிலை எதிர்பாராமல் சொல்லிகொண்டே தன் அறைக்குள் சென்று கதவை சாத்திவிட்டார் காவேரி அம்மாள்.

அதற்கு பின்பு பலமுறை ராம் அம்மாவிடம் பேச முயற்சிக்க அவரோ அதை தவிர்த்து கொண்டே இருந்தார்.

ஒருவாரமாக அம்மாவிற்கும் மகனுக்கும் பேச்சுவார்த்தை குறைந்து அதே நேரத்தில் சண்டை இல்லாமல் போய் கொண்டு இருந்தது.

ரதியோ அவள் பயந்தது போலவே நடந்துவிட்டதால் ராமை பார்க்க ,அவன் கூட பேச மறுத்து விட்டாள். ராமும் அவளை தொல்லை பண்ணவில்லை.ஆனால் திருமணம் என்று ஒன்று நடந்தால் அது உன்னோடுதான் என்பதை அவன் அவளிடம் அலைபேசியில் உறுதியாக சொல்லிவிட்டான்.

தேவாவோ கொஞ்ச நாட்களாக சிட்டு குருவி போல் சுற்றி திரிந்த தங்கை இன்று கூண்டில் அடைத்த பறவை போல் வாடி கிடப்பதை காண முடியாமல் துடித்து கொண்டு இருந்தான்.

ரோஜாவோ வாணியின் வழக்கு அவள் எதிர்பார்த்ததை போல் இல்லாமல் சாற்றி கடினமாக இருக்க அதற்கான வேலைகளையும் ,மேலும் ராமிற்கு தன்னால் எந்த உதவியும் செய்யமுடியாத நிலையை நினைத்து வருந்தி கொண்டு இருந்தாள். காவேரி அம்மாவிடம் திருமணம் பற்றி ரோஜா எதுவும் பேசக்கூடாது என தேவா சொல்லிவிட்டான்.காவேரி அம்மாவாக இருப்பதால் மட்டுமே அவர்கள் அன்று பேசியதற்கு நான் அமைதியாக இருந்தேன்...இல்லயென்றால் அன்று நடந்திருபதே வேறு என கோபமாக சொன்னவன் இனி இதை பற்றி நாம் பேசவேண்டாம் என முடிவாக சொல்லிவிட்டான்.அதனால் அதற்கு பின்பு அவள் பேசவில்லை.

அன்று விடுமுறை நாள் என்பதால் ராம் டிவி பார்த்து கொண்டு அமர்ந்திருந்தான்.அவனின் அருகே வந்து அமர்ந்த காவேரிஅம்மாள் “ராம் இதை கொஞ்சம் பாரேன்” என்று மூன்று போட்டோகளை கொடுத்தார்.

பேசாமல் இருந்த அம்மா சாதரணமாக பேசியதும் சந்தோசமடைந்த ராம்......”என்ன போட்டோம்மா என்று வாங்கி பார்த்தவன் யாரும்மா இவங்க எல்லாம் நம்ம சொந்த காரங்களா” என கேட்டான்.

அவரோ சிரித்து கொண்டே ஆமா ராம் சீக்கிரம் நம்ம சொந்த காரங்க ஆகிடுவாங்க ....நம்ம சீனு மாமா இருக்காருல்ல ...அவருக்கு சொந்தம் இந்த இரண்டு பேரும்... என கும்பலில் இரண்டு பெண்ணை காட்டியவர் இது நம்ம மணி மாமா சொந்தம் என் தனியாக இன்னொரு பெண்ணை காட்டினார்.

“அப்டியாம்மா ...எங்க நான் அவங்களை எல்லாம் பார்த்து பல வருடம் ஆகிடுச்சு என்றவன் எல்லாமே நல்ல இருக்கு” என சொல்லிபடியே அவரிடம் திருப்பி கொடுத்தான் ராம்.

“உனக்கு பிடிச்சு இருக்கா ராம்” என அவர் கேட்டதும்

அவனோ புரியாமல் எதை கேட்கிறிங்க என்றதும்

போட்டோவில் பார்த்த பெண்களை என்றார் அவர்.

அவனோ ஏன்மா நல்லாதானே இருக்காங்க.....எதற்கு கேட்கிறிங்க என மீண்டும் கேட்டான்.



எனக்கு தெரியும்...உனக்கு பிடிக்கும்னு என சந்தோசமாக சொன்னவர் ......இந்த போட்டோல இருக்க பொண்ணு பேரு கார்த்திகா ...சொந்த ஊரு மதுரை....நல்ல படிப்பு நல்ல குணம் என்றவர் அடுத்து இந்த பொண்ணு பேரு நிவேதா அவளும் இவளை போலதான்.நல்ல படிப்பு குணம் . இரண்டு பேரும் மதுரைக்கார ஆளுங்க பாசமான ஆளுங்க .....அடுத்தது இந்த பொண்ணு பேரு ஸ்ரீஜா...ஊரு கோயமுத்தூர் .....இவளும் அதே மாதிரிதான்......கோயமுத்தூர் ஆளுங்க மரியாதையை தெரிஞ்ச மனுசங்க என ஒவொவொரு பெண்ணின் விபரங்களை அவர் அடுக்கி கொண்டே போக

அவனோ புரியாமல் “இதை எல்லாம் எதுக்கும்மா என்கிட்டே சொல்றிங்க” என கேட்டான்.

“இதுல நீ எந்த பொண்ண சொல்றயோ அதை பேசி முடிச்சிடலாம்” என்றார் காவேரி அம்மாள்.

“என்ன பேசி முடிக்கிறைங்க” என சொல்லும்போதுதான் அவர் என்ன சொல்ல வருகிறார் என அவனுக்கு புரிய அம்மாஆஆஅ என அதிர்ந்தவன் கோபமாக “உங்க மனசில என்ன நினச்சுட்டு இருக்கீங்க...அங்க ஒரு பொண்ணை பார்த்து பேசி நிச்சியம் பண்ணிட்டு இப்போ இங்க” என நிறுத்தியவன் “என்னம்மா இதெல்லாம் “என வேதனையுடன் கேட்க

“உளறாதே ராம்...நம்ம எங்க நிச்சியம் பண்ணோம்......போய் பார்த்திட்டு வந்தோம்.கல்யாணம் பண்றோம்னா நாலு பொண்ணுகளை பார்க்கத்தான் செய்வாங்க...பார்த்த பொண்ணை எல்லாம் திருமணம் செய்து கொள்ள முடியுமா ? நான்தான் அந்த பொண்ணு நம்ம குடும்பத்திற்கு ஒத்து வராது அப்டின்னு சொல்லிட்டேன்ல ...அப்புறம் அதை பற்றி ஏன் பேசற......நீ இந்த மூன்று பெண்களில் ஒரு பெண்ணை சொல்லு...இந்த நிவேதா வேண்டாம் விட்டு விடு...மற்ற இரண்டு பெண்களில் ஒன்றை சொல் முடித்து விடலாம்” என அவர் மீண்டும் அதையே சொல்ல

ராமோ கோபத்தின் உச்சத்திற்கு சென்றவன் ...”போதும் அம்மா இதோடு நிறுத்தி கொள்ளுங்கள்.....என் வாழக்கையில் திருமணம் என்று ஒன்று நடந்தால் அது ரதி தேவியோடுதான்” என அவன் உறுதியாக சொல்ல

“அது எந்த காலத்திலையும் நடக்காது...நான் ஒத்து கொள்ள மாட்டேன்” என அவரும் பிடிவாதமாக சொல்ல

“அப்போ நான் இப்படியே இருந்து விடுகிறேன்.எனக்கு திருமணமே வேண்டாம் ....இந்த பேச்சை இனி எடுக்காதீர்கள்” என கோபமாக சொல்லிவிட்டு வெளியே கிளம்பி விட்டான் ராம்.



மணநாளை எதிர்நோக்கி

மங்கை அவள் காத்திருக்க

வாக்கு கொடுத்த மன்னவனோ

அதை நிறைவேற்ற வழி தெரியாமல்

விழி பிதுங்கி நிற்க

உயிரில் கலந்த நேசத்துக்கு

உயிரை கொடுத்தவளே தடையாக இருக்க

பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லாதபோது

இடையில் வாழும் வாழ்க்கையில்

குலமும் கோத்திரமும் கொடியேற்ற

அன்பும் காதலும் மறைந்து

வம்சமும் பரம்பரையும் மட்டும்

இல்வாழ்வுக்கு போதுமா ?

இப்படி எத்தனையோ கேள்விகள்

மனதில் எழுந்தாலும்

தனகென்று வரும்போது எடுக்கும்

முடிவு தான் என்ன?????????



நீங்கள் சொல்லுங்கள் தோழிகளே