• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Lashmi Ravi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
145
அத்தியாயம் -32



ரதியின் திருமண பேச்சில் இருந்தே தேவா கொஞ்சம் குழம்பி போய் இருந்தான். யாரும் இல்லாமல் தனியாக தவித்து கொண்டு இருந்தவனுக்கு அணைத்து உறவுமாக வந்தவள் ரதி. அவளை தன் சொந்த தங்கை போல் தான் அவன் நினைத்து இருந்தான்.இந்த விதத்தில் ஒரு பிரச்சனை வரும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.இனி அடுத்தது என்ன செய்வது என அவன் யோசித்து கொண்டிருந்த வேளையில் ரோஜா அவளது வழக்கு சமபந்தமாக சில சந்தேகங்களை கேட்க அவன் அறைக்கு வந்தாள்.

“அத்தான் இது எனக்கு புரியலை” என சொல்லி கொண்டே உள்ளே நுழைந்தவள் அவன் சிந்தனையில் இருந்ததை பார்த்து “என்ன அத்தான் ...என்ன யோசனை” என கேட்டாள்.

அவனோ சிரித்து கொண்டே “ஒன்றும் இல்லை அம்லு என சொல்லி சமாளித்தவன் பின்னர் என்ன சந்தேகம் உனக்கு என்றான்..

வாணியின் கணவரிடம் இருந்து விவாகரத்திற்கு பிறகு நாம் ஜீவனாம்சம் வாங்க முடியுமா ? ஏன்னா இது வாணிதான் விவாகரத்து வேணும்னு கேட்டு இருக்கா ...அவனுக்கு இஷ்டம் இல்லை.....நம்ம வற்புறுத்தி வாங்கும்போது ஜீவனாம்சம் கிடைக்குமா என அவள் கேட்டதும்

“ஏன் ரோஜா ...அந்த பொண்ணுதான் நல்ல வேலையில இருக்குள்ள ...அப்புறம் எதற்கு ஜீவனாம்சம்..மேலும் குழந்தைகளும் இல்லை.இதற்கு தான் சொன்னேன் விவாகரத்து என்பது எந்த பிரச்சனைக்கும் தீர்வு இல்லைனு....இந்த காலத்து பசங்க எங்க சொன்னா கேட்கிறாங்க” என அவன் சலித்து கொள்ள

உடனே அவள் ஹஹஹாஹ் என சிரிக்க

“இப்போ எதுக்கு சிரிக்கிற நீ” என அவன் கேட்டதும்

“இல்லை நீங்க என்னமோ அந்த காலத்து ஆளு மாதிரியும் இப்போ இருக்க பசங்களை சொல்லிட்டு இருக்கீங்க” என்றாள்.

அவனும் சிரித்து கொண்டே “அப்படி இல்லை ....முடிந்த அளவு போராடவேண்டும்.....அதற்கு பின்பு தான் இது போன்ற முடிவு எடுக்க வேண்டும்” என்றான் தேவா.

உடனே அவள் “வேகமாக எனக்கு இதில் உடன்பாடு இல்லை அத்தான். எதற்கு போராட வேண்டும்.....அந்த போராட்டத்தை ஆண்கள் செய்வார்களா?......பெண்கள் என்றாலே போராடத்தான் பிறந்தார்களா?.....இந்த சூழ்நிலை அவர்களுக்கு வந்தால் அவர்கள் போராடிக்கொண்டு இருப்பார்களா ? இவர்கள் எல்லா தவறுகளையும் செய்து விட்டு கடைசியில் சாரி என்ற ஒரு வார்த்தையில் அணைத்து தவறையும் மறந்து விட சொல்வார்கள்.பாதிக்க பட்ட பெண்ணும் எல்லாம் மறந்து என் கணவன் நல்லவன் என சொல்லி அவனுடன் வாழனும்....திருமணம் என்பததே ஒருவர் மேல் ஒருவர் வைத்து இருக்கும் நம்பிக்கைதான் ராகன்.

என்னை பொறுத்தவரை நான் கொலை செய்தவனை கூட ஏற்றுகொள்ளலாம்....ஆனால் நம்பிக்கை மோசம் செய்தவனை மன்னிக்கவே முடியாது.வாணியின் கணவர் செய்தது நம்பிக்கை மோசம்.அதற்கான தண்டனை கண்டிப்பாக அவன் அனுபவித்தே ஆகவேணும்.உடலாலும் ,மனதாலும் ஏன் பணத்தாலும் அனுபவிக்கனும்.அதற்காகத்தான் கேட்கிறேன் ஜீவனாம்சம் வாங்கலாமா என்று “ என ஆக்ரோஷமாக கோபத்தில் முகம் சிவக்க தொண்டை நரம்புகள் புடைக்க அவள் பேச முதன் முறையாக இந்த ரோஜாவே அவன் இப்போது தான் பார்க்கிறான்..

இது வரை ரோஜா இதழின் மென்மையை மட்டுமே அவளிடம் பார்த்து கொண்டு இருந்தவன் முதன் முதலாக அதன் முட்களை பார்க்கிறான்.

அவளது கோபத்தில் ஒரு நியாயம் இருக்க அது அவனுக்கு புரிந்தாலும் அவனும் வக்கீல் அல்லவா...அதனால் “அப்படி இல்லை ரோஜா ...குடும்பம் எனபது இருவர் சமந்தபட்டது அல்ல......இதில இரண்டு பக்கத்தின் பெற்றோர்கள் உடன் பிறந்தவர்கள் உறவினர்கள் மற்றும் நம் கலாச்சாரம் எல்லாம் அடங்கி இருகின்றது..இவர்கள் அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகளால் அனைவரும் பாதிக்கபடுவர்...அதனால் தான் சொல்கிறேன்” என சொல்ல

“இது தான் ராகன் பெண்களுக்கு பிடித்த சாபகேடு.அவர்கள் ஒரு பிரச்சனைக்கு தீர்வு தேடினால் அதில் குடும்பம்,பாண்பாடு,கலாச்சாரம் எல்லாம் இணைந்து விடுகின்றது.இதே ஒரு ஆண் தேடினால் அதில் அவன் மட்டுமே இருக்கிறான்.அவனால் தனிப்பட்ட முறையில் எந்த ஒரு முடிவும் எடுக்க முடிகிறது.அதனால் தான் இன்று பல ஆண்கள் தவறு மேல் தவறு செய்கின்றனர்” என அவள் பொரிந்து தள்ள

பேச்சு வேறுபக்கம் திசை திரும்பவது உணர்ந்த தேவா “சரி சரி அம்லு...நீ எதுக்கு இவளோ ஆவேசபட்ற.......உனக்கு இது முதல் வழக்கு அப்டிங்கிறதால இப்படி எல்லாம் தோணுது.....இதைவிட பெரிய பிரச்சனைகள் எல்லாம் வரும்.அப்போது உனக்கு இதெல்லாம் சாதரணமாக தெரியும்” என அவளை சமாதனபடுத்தினான்.

“இல்லை அத்தான் என்னை பொறுத்தவரை கணவன் மனைவிக்குள் ரகசியங்கள் இருக்க கூடாது.முடிந்த வரை திருமணத்தின் போதே சொல்லிவிட வேண்டும்.இல்லை அவளுடன் வாழ தொடங்கியவுடன் அதை சொல்லிவிடவேண்டும்...அதை விட்டு மறைத்து சில காலம் குடும்பம் நடத்திவிட்டு பின்னர் சொல்வது அந்த பெண்ணை மிகவும் கேவலபடுத்தியது போல் ஆகும்.அதாவது நீ என்னுடன் வாழ்ந்துவிட்டாய்.இனி உனக்கு வேறு கதி இல்ல என்ற ஆணவத்தில் அது சொல்வது போல் இருக்கும்”....என அவள் அவளது கருத்துகளை சொல்ல தேவாவின் மனமோ ஒருநிமிடம் நின்று துடித்தது.

அவள் பேசிகொண்டிருக்க தேவாவோ விகிர்த்து போய் நின்று இருந்தான். சிறிது நேரம் பேசியவள் பின்னர் “என்ன அத்தான் அப்படியே நிற்கிரிங்க......என்னடா உங்க அம்லு இப்படி பேசாரானு ஆச்சரியமா இருக்கா...எல்லாம் உங்களை பார்த்து தான் அத்தான்....நீங்கதானே சொல்வீங்க உனக்கு சரி என்று படுவதை நீ சொல்லிவிடு....சில நேரங்களில் அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்னு...அதனாலதான் இப்போது எல்லாம் என் மனதிற்கு சரி என்று பட்டால் உடனே சொல்லிவிடுகிறேன்” என அவன் சொன்னதை அவள் அவனுக்கே திருப்பி சொல்ல

இப்படி ஒரு சூழ்நிலை வரும் என்று தெரிந்து இருந்தால் நான் அதை சொல்லியே இருக்க மாட்டேன் ரோஜா என மனதில் நினைத்தவன் .....”சரி சரி...இப்போது எதற்கு இந்த பேச்சு...இதற்குதான் சொன்னேன்...இந்த விவாகரத்து கேஸ் எல்லாம் எடுக்க வேண்டாம்னு....என சலித்து கொண்டவன் எனக்கு தலை வலிக்கிறது...ஒரு காபி அம்லு” என கேட்க

“அச்சோ சாரி அத்தான்....ஏற்கனவே நீங்க ஏதோ குழப்பத்தில் இருந்தீங்க...நானும் குழப்பி விட்டுட்டேன்.....சரி...சாரி...இதோ இப்போ கொண்டுவரேன்” என சொல்லிவிட்டு கீழே சென்றாள். 1



தேவாவின் மனமோ இப்போது நிலை இல்லாமல் தவித்து கொண்டு இருந்தது.வெகுநாட்களுக்கு பிறகு ஏதோ ஒரு பயம் மனதில் சூழ அந்த விஷயம் தன்னை,ராம் , பாட்டியை தவிர வேறு யாருக்கும் தெரியாது என்றாலும் ஏனோ ஒரு அச்சம் மனதில் எழுந்தது. ரோஜா காபியோடு உள்ளே வந்ததும் “அம்லு இன்னைக்கு அன்னை குடில் போயிட்டு வரலாமா” என கேட்டான் தேவா.

“என்ன அத்தான் திடீர்னு” என்றவள் பின்னர் அவன் முகத்தை பார்த்ததும் “சரி அத்தான் இதோ கிளம்பறேன்” என்றாள்.

காரில் செல்லும் வழயில் தேவா ஏதும் பேசாமல் வர ரோஜாதான் பேசிகொண்டே வந்தாள். சிறிது நேரம் கழித்து “அத்தான் ஏன் அமைதியா வரீங்க” என அவள் கேட்க

அவன் சிரித்து “கொண்டே அப்டி எல்லாம் இல்லை...அதான் எனக்கு பதிலாக நீ பேசுகிறாயே” என்று சொன்னான்.

அவளோ “அத்தான் உங்களிடம் ஒரு முக்கியாமான விஷயம் சொல்லணும் என்றவள் நம்ம பட்டாபி இருக்கான் இல்லயா ...அவனை பற்றி என்ன நினைக்கிறீங்க” என கேட்டாள்.

அவனோ “என்ன ரோஜா அவனை உனக்கு அறிமுகபடுத்தியதே நான்தான் என்னிடமே அவனை பற்றி கேட்கிறாய்” என கிண்டலாக சொல்ல

“இல்லை அத்தான் நான் ஒரு முடிவு பண்ணிருக்கேன்...இனியும் பட்டாபியை இப்படியே விடக்கூடாது ...அதான் என்றவள் அவளுடைய திட்டத்தை சொல்ல தேவாவோ என்ன ரோஜா இது ஒத்து வருமா” என கேட்டான்.

“எல்லாம் வரும் அத்தான்.தரணியிடம் சொன்னேன்.அவள்தான் இதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறாள்.நீ கவலை படாதே ...நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டாள்” என்றாள்.

“எனக்கு கொஞ்சம் சந்தேகம்தான் ரோஜா...இது எந்த அளவுக்கு சரியாகும்னு தோணலை.....அப்படியே விட்றேன் அவனை” என அவன் சொல்ல

“அப்படி எல்லாம் விடமுடியாது அத்தான்.தரணியிடம் கேட்டுவிட்டு தான் இந்த முடிவு எடுத்தேன்....அவனிடம் சொல்லவேண்டாம்.....அவனுக்கு சர்பரைசாக இருக்கட்டும்” என அவள் கண்கள் விரித்து சந்தோசமாக சொல்ல

அவளது சந்தோசத்தில் தன்னை தொலைத்தவன் மற்றவர்களுக்கு நல்லது மட்டுமே நினைக்கும் இவளை எந்த நிலையிலும் நான் இழக்க மாட்டேன் என மனதில் சூளுரைத்து கொண்டான்.



மறுநாள் காலையில் எப்போது போல் பட்டாபியும் தரணியும் வேலை பார்த்து கொண்டு இருக்க தேவா ஒரு வழக்கு சமபந்தமாக வெளியூர் சென்று இருந்தான்.

ரோஜாவின் குறும்பில் தரணியை பார்த்து மிரண்டு இருந்த பட்டாபி பின்னர் தரணியே தன்னை பற்றி சொன்ன பிறகு அவளுடன் நட்பாக பழக ஆரம்பித்தான் பட்டாபி.

ஒரு வழக்கு சமபந்தமாக சில விபரங்களை நாதனிடம் கொடுக்க சொல்லி இருந்தான் தேவா.பட்டாபி ஒரு அவசர வேலையாக வெளியே செல்ல வேண்டும் என்பதால் தரணியிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்து இருந்தான்.அன்று அது போல் பேசியபிறகு நாதன் பலமுறை இங்கு வந்து சென்று இருக்கிறான். அவளிடம் பேசமாட்டானே தவிர கண்கள் அவளையே தொடரும்.

அன்று எப்போதும் போல் வேலை முடித்து விட்டு அவள் கிளம்பும் நேரத்தில் அலைபேசி ஒலிக்க எடுத்தவள் நாதன் தான் பேசினான்.

சிறிது நேரத்தில் தான் அங்கு வருவதாகவும் அந்த டாக்குமெண்டஸ்கலை எடுத்து வைக்க சொன்னான். தரணியும் காத்திருக்க சில நிமிடங்களில் வந்தவன் சில விபரங்களை அவளிடம் கேட்டு தெரிந்து கொண்டவன் “ரொம்ப தேங்க்ஸ் தரணி........எல்லா பேப்பர்சும் சரியா இருக்கு என்றவன்...நான் எதிர்பார்த்த மாதிரியே நீ இருக்க “என அவன் சமபந்தம் இல்லாமல் பேச

அவளோ என்ன சொல்கிறான் என புரியாமல் முழிக்க

அவள் முகத்தின் அருகில் வந்தவன் “இப்படி முழிக்காத தரணி...உன் முட்டைகண்ணுல நான் அப்படியே முழுகி போய்டறேன்.....இந்த கண்ணுதான் என்னை தூங்க விடாம தொந்தரவு பண்ணுது...அப்டியே அதை புடுங்கி என அவன் உணர்ச்சி வசப்பட்டு பேசிக்கொண்டு இருக்க

“ஹே மிஸ்டர்...என்ன இது...ஆள் தெரியாம பேசிட்டு இருக்கீங்க” என அவள் கோபமாக சீர

அவனோ அவளிடம் நெருங்கி “இதுவரைக்கும் ஆள் யாருன்னு தெரியாம இருந்தது......ஆனா இப்போ என்னோட ஆள் நீ தானு முடிவு பண்ணிட்டேன்.......... உண்மையா சொன்னா உன்னை முதலில் பார்த்த உடனே என் மனம் என்னிடம் இல்லை தரணி......முதல் பார்வையிலே என்னை முழுவதுமாக வசியம் செய்து விட்டாய்” என அவன் தனது காதலை பற்றி சொல்லி கொண்டு இருக்க



“மிஸ்டர் எங்க பாஸோட நண்பர் என்கிற முறையில நான் மரியாதையா பேசறேன் இல்லை இந்நேரம்” என அவள் குனிந்து காலை பார்க்க

“முகம் பார்த்து பேசியவள்

ஏனோ வெட்கப்பட்டு

நிலம் பார்க்கிறாய் பெண்ணே”

என அவள் செருப்பை காட்டியதை மாற்றி அவன் சட்டென்று ஒரு கவிதை சொல்ல

தரணியோ கோபத்தில் அக்னி பார்வை வீச

“கவிதை...கவிதை டார்லிங்” என அவன் சொன்னது

“உன்னஈஈஈ” என அவள் கைகளை மடக்கி டென்ஷன் ஆக

அதற்குள் மீண்டும் பட்டாபி வந்து விட பேச்சுவார்த்தை தடைபட்டது.மனதிற்குள் அவனுக்கு நன்றி சொன்ன நாதன் அவனிடம் பேசிகொண்டு இருந்தான்.

கிளம்புபோது வேண்டுமென்றே அலைபேசியை எடுத்தவன் அப்போது அதில்

“எனகென பிறந்தவ இறக்கை கட்டி வளர்ந்தவ இவதான்” என்ற பாட்டு வர

அவளோ அவனை முறைக்க

நமட்டு சிரிப்புடன் கிளம்பினான் நாதன்.



ஒரு வாரமாக அம்மா மகன் இருவருக்கும் கண்ணுக்கு தெரியாத போராட்டம் நடந்து கொண்டு இருந்தது.

ரதியும் அதற்கு பின்பு அவனிடம் பேசமறுத்துவிட்டாள்.ரோஜாவும் தேவாவை மீறி எதுவும் செய்யமுடியாமல் தடுமாறி நின்றாள்.

அன்று வேலை சீக்கிரம் முடிந்துவிட வீட்டிற்கு வந்த ராம் அங்கு காவேரி கண்களில் கண்ணீருடன் சாமி அறையின் முன் அமர்ந்திருந்தார்.

உள்ளே நுழைந்தவன் அதை பார்த்ததும் மனம் வேதனைப்பட என்னம்மா நீங்க...... தேவையில்லாத எண்ணங்களையும் ,வீண் சம்பரதாயங்களை மனதில் வைத்து கொண்டு உங்களையும் வருத்திகிறீங்க என மனதிற்குள் புலம்பியவன் மெதுவாக அவரின் அருகில் சென்று அமர்ந்தான்.

கண்களில் வழிந்த நீரை துடைத்து விட அதுகூட தெரியாமல் தன்னை மறந்து அமர்ந்திருந்தார் காவேரி.

தாயை தன் தோளோடு சாய்த்து அவன் தட்டி கொடுக்க அந்த இடத்தில தாய் சேயாக மாறினார்.

சில மணித்துளிகள் கழித்த பின்பே கண் விழித்த காவேரி அருகில் ராம் அவளை பார்த்த படி அமர்ந்திருக்க அவனது தோளில் அவர் சாய்ந்திருக்க எதுவும் பேசாமல் அவன் கண்களியே பார்த்தவர் அதில் கண்ணீர் வந்து கொண்டு இருக்க இருவருமே மௌனத்தால் தங்கள் மன உணர்வுகளை பகிர்ந்து கொண்டனர்.

“நான் சொல்வதை நீங்கள் நம்ப வில்லையா அம்மா” என அவன் மெதுவாக கேட்டதும்

அவரோ “உன்னை நம்பாமல் நான் யாரை நம்பபோகிறேன் ராம்.எனக்கு எல்லாமே நீதானே......ஆனால் நீயும் இப்போது” என அவர் வார்த்தை தடைபட மீண்டும் அழுகை தொடர்ந்தது.

அவனோ மிகவும் நிதனமாக “அம்மா ஆசைப்பட்ட பட்ட பொருள் கிடைக்கவில்லை என்றாலே நம்மால் தாங்கி கொள்ள முடியாது .அதிலும் விரும்பிய பெண் உறுதி வார்த்தை வரை வந்து சில தேவையில்லாத காரணங்களை கூறி திருமணத்தை நிறுத்தியது தான் என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை அம்மா” என அவன் வேதனையுடன் சொல்ல

“அப்போ நான் சொல்வது உனக்கு தேவையில்லாத விஷியமாக தெரிகிறது அப்டிதானே ராம்” என அவர் கோபமாக கேட்டார்.

“அம்மா என்னம்மா இப்படி பேசறிங்க...இதுவரை நீங்கள் சொல்லி நான் மீறி பேசி இருக்கிறேனா....ஆனால் இந்த விஷியத்தில் “என அவன் இழுக்க

“ம்ம்ம் சொல்லு ராம் ....என்னை மீறி நீ முடிவு எடுக்க போகிறாய்...அதை தானே சொல்ல வருகிறாய் “ என அவரும் வாக்குவாதத்தில் இறங்க

“ஐயோ அம்மா நீங்கள் ஏன் இப்படி அவசரபடரிங்க......என்னால முடியலம்மா..... உங்க பேச்சை மீறவும் முடியாம,ரதியை மறக்கவும் முடியாம ரொம்ப வலிக்குதும்மா “ என அவன் மனம் நொந்து வேதனயுடன் சொன்னான்.

“இப்போது தெரிகிறதா ராம்.....ஆசைப்பட்ட பொருள் நமக்கு கிடைக்கலைனா அதோட வலி எப்படி இருக்கும்னு” என அவர் அழுத்தமான குரலில் சொல்ல

அம்மாஆஆ என அதிர்ந்து அவர் முகத்தை பார்த்தவன் “நீங்க என்ன சொல்ல வரீங்க” என புரியாமல் கேட்டான்.

அவரோ “இனி அதை சொல்லி பிரயோஜனம் இல்லை ...எந்த வலியும் அவரவருக்கு வந்தால் தான் அதன் வேதனை தெரிகிறது.”என சொல்லிவிட்டு அவர் எழுந்து உள்ளே சென்றார்.

“நீங்க என்ன சொல்றீங்க அம்மா” என கேட்டபடி அவர் பின்னாடியே சென்றவன்

அவர் நின்று திரும்பி முறைக்க

அவர் கையை பிடித்து “அம்மா இங்கே வாங்க” என அவரை சோபாவில் அமரவைத்தவன் அவர் அருகில் அமர்ந்து ..”இப்போ சொல்லுங்க அம்மா.....ஏதோ ஒன்றை நீங்க என்கிட்டே இருந்து மறைக்கிரிங்க......அதை நீங்க சொன்னாதானே தெரியும்.....

உங்கள் மனம் புண்படும்படி நான் எதவாது செய்து விட்டேனா ? எனக்கு எதுவும் தெரியவில்லை...இருந்தால் சொல்லுங்கள்...இந்த திருமணத்திற்காக கேட்கவில்லை......இந்த உலகத்திலே எல்லாரயும் விட நீங்க எனக்கு முக்கியம் அம்மா.....உங்கள் சந்தோசம் தான் என் சந்தோசம்.அதனால் சொல்லுங்க” என அவன் அவரை வற்புறுத்த

அவரோ “அதான் இப்போ சொல்கிறனே இந்த திருமணம் வேண்டாம் என்று ......நீதான் கேட்க மாட்டேன்கிறாய்” என அவர் பழையபடி ஆரம்பிக்க

“அம்மா இந்த திருமண பேச்சை விட்டு விடுங்கள்.....உங்களை மீறி எதுவும் நடக்காது. உங்கள் அனுமதி இல்லாமல் எதுவும் செய்யமாட்டேன்” என அவன் உறுதியுடன் கூறினான்..

“அப்படிதான் நானும் நினைத்து இருந்தேன் .ஆனால் ரோஜாவின் திருமணத்தின் போது தான் அது தவறு என எனக்கு புரிந்தது” என அவர் மெதுவாக தன அஸ்த்திரைத்தை எய்தார்.

“ரோஜாவின் திருமணமா.......அதில் என்ன நடந்தது.....எனக்கு ஒன்று புரியவில்லையே “ என அவன் குழம்பி போய் கேட்டவன் “புரியும்படி சொல்லுங்கம்மா” என கெஞ்சினான்.

அவனை கோபமாக ஒரு பார்வை பார்த்தவர் “என்னடா சொல்ல சொல்ற ....பிறந்ததில் இருந்து இவள் என் மருமகள் என மனதில் நினைத்து கொண்டு இருந்தேன். ஆனால் நீங்க என்கிட்டே எதுவுமே சொல்லாம அவளுக்கு வேற மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுடிங்க...திருமணம் முடிஞ்சதுக்கு அப்புறம் என்கிட்டே சொல்றிங்க “..என அவர் ஆவேசமாக கேட்க

“ஐயோ அம்மா நீங்கள் நிஜமாதான் சொல்றிங்களா...நீங்க அன்னைக்கு சொல்லும்போதே நான் சும்மா விளையாட்டுக்கு சொல்றீங்கனு நினச்சேன்.....உங்க மனசில இப்படி ஒரு ஆசை இருந்ததா....ஆனா அம்மா என் மனசில் அப்படி ஒரு எண்ணமே இல்லை என்றவன் ரோஜா திருமணத்தை பற்றி உங்களிடம் முன்பே சொல்லாதது தவறுதான்...அப்போ இருந்த சூழ்நிலை அது போல் .....என்னால் சொல்ல முடியவில்லை...மேலும் நீங்கள் தேவா மாப்பிள்ளை என்றால் சந்தோசம் தான் படுவீர்கள் என்று நினைத்து கொஞ்சம் அசால்ட்டாக இருந்துவிட்டேன்....ஆனால் நீங்களோ இப்படி ஒரு எண்ணத்தை மனதில் வைத்திருப்பீர்கள் என்று எனக்கு தெரியவில்லை.நான் உங்களிடம் திருமணத்தை பற்றி சொல்லாதது தவறுதான்...என்னை மன்னிச்சுடுங்க”....என்றான்.


 

Lashmi Ravi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
145

“ஆமாம் இந்த காலத்து பிள்ளைங்க எல்லா தவறுகளையும் செய்து விட்டு மன்னிப்பு என்ற ஒரே வார்த்தையில முடிச்சிட்றீங்க......எனக்கும் ஒரு மனசு இருக்குனு நினைக்கிறதே இல்லை......அதை மீறி சொன்னா பிள்ளைங்க மனச புரிஞ்சுக்க மாட்டேன்கிறீங்க அப்படினு சொல்லிட்ரிங்க...முதல்ல நீங்க புரிஞ்சுகிறீங்களா? ....சின்ன வயசில இருந்து எது வேண்டுமானாலும் என்கிட்ட தான் கேட்ப...நான் தான் வாங்கி கொடுப்பேன்.....பொருள் வாங்க எல்லாம் என்கிட்டே கேட்ட நீ உன் வாழக்கை துணையை தேர்ந்தெடுத்த நீ உன் பாட்டிகிட்ட சொல்லி என்கிட்டே சொல்ற....அவங்க கேட்கும்போது எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்திருக்கும்...என் மருமகளை யாரோ எனக்கு அறிமுகபடுத்துகிறார்கள் “என அவர் தன் மனகுமறலை கொட்டி கொண்டிருக்க

“அப்படி எல்லாம் இல்லமா....நீங்க என் மேல ரொம்ப நம்பிக்கை வைச்சு இருந்தீங்க ...திடீர்னு வந்து இந்த பெண்ணை எனக்கு பிடிச்சு இருக்குனு சொன்னா நீங்க தப்பா எடுத்துக்குவீங்க அப்டினுதான் பாட்டி பெரியவங்க சொன்னா நல்லா இருக்கும்னு சொல்லி சொன்னேன்.மத்தபடி வேற எந்த காரணமும் இல்லை” என அவன் அவசர அவசரமாக தனது எண்ணத்தை கூற

“உன்னை பெற்று வளர்த்த உன் அம்மாவை நீ புரிந்து கொண்டது இவ்ளோதானா” என அவர் வேதனயுடன் சொல்ல

“இப்படி பேசாதிங்க அம்மா ........பாட்டி சொன்னா நீங்க புரிஞ்சுப்பிங்க அப்டினுதான்” என அவன் இழுக்க

“உன்னை சொல்லி தப்பில்லை ராம்.ஆரம்பத்தில் இருந்தே நாம் பெண்ணை கொடுத்து இருக்கிறோம்...எதுவும் பேசக்கூடாது என உங்க அப்பா சொல்லி சொல்லி என்னை பேசவிடாமல் செய்து விட்டார்.அந்த அம்மா என்ன பேசினாலும் நாங்கள் எதுவும் பேசமாட்டோம்.

எனக்கு பலமுறை கோபம் வரும்.ஆனால் ரோஜாவின் முகத்தை பார்த்த உடன் அது மறைந்து போய்விடும்.எனக்கு பெண் பிள்ளை இல்லை என்ற குறையை போக்கியவள் அவள்.அவளது குழந்தைத்தனமான பேச்சும் சிரிப்பும் ,அவளது துடுக்குத்தனமும் உங்க அப்பா எப்பவும் ரசிப்பார். நான் கூட கிண்டல் பண்ணுவேன் இவளை கட்டிக்க போறவன் ரொம்ப பாவம்னு சொல்வான்.ஆனா உங்க அப்பா அவ இந்த வீடு இளவரசி ..........ரோஜா நம்ம வீட்டு மருமகளாக வந்தால் அதைவிட நாம் செய்த புண்ணியம் வேறு எதுவும் இல்லை என சொல்லி கொண்டு இருப்பார்.

அவர் இறந்த பின் அவருடைய ஆசையாவது நிறைவேற்றுவோம் என்று தான் அந்த அம்மா எது சொன்னாலும் நான் அமைதியாக இருந்தேன்.நேரம் காலம் வரும்போது இதை பற்றி உன்னிடம் சொல்லலாம் என்று இருந்தேன்.ஆனால்” என நிறுத்தியவர்

அந்த அம்மா நினைத்தபடியே ரோஜாவை தேவாவிற்கு திருமணம் செய்து வைத்து விட்டார்.அன்று நான் பட்ட வலி வேதனை யாருக்கு தெரியும். திருமணத்தின் போது அவள் அழுகையுடன் என்னிடம் ஓடி வந்த போது என் உயிரே என்னை விட்டு போய்விட்டது.....பெற்ற மகனே அவர்களுடன் சேர்ந்து என்னை ஏமாற்றி விட்டான்” என சொல்லும்போதே ஆத்திரமும் அழுகையும் வர

“என்னம்மா இது......இவ்ளோ வேதனைகளை மனதில் வைத்து கொண்டா அன்று நீங்கள் சிரித்த முகத்துடன் இருந்தீர்கள்.உங்கள் மனம் இந்த அளவு பாதிக்கபட்டு இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை” என்றான் அவன்.

“நீ எதை தான் நினைத்து இருக்கிறாய்.அப்படி நினைத்து இருந்தால் நான் விரும்பிய மருமகளை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டு ஒரு அநாதை பெண்ணே இவள் தான் உன் மருமகள் என அவர் எனக்கு அறிமுகபடுத்துகிறார்...இதற்கு நான் பெற்ற மகனும் உடந்தை” என அவர் மேலும் பொரிய

“அம்மா ரதியை பற்றி நான் சொல்லாதது தவறுதான் ஒத்துகொள்கிறேன்....ஆனால் ரோஜாவை என்னால் எப்படி அம்மா ...நாங்க அப்படி பழகவே இல்லை...அவளுக்கும் அந்த எண்ணம் துளிகூட இல்லை.பாட்டி மேல் நீங்கள் மரியாதை வைத்து இருக்குறீர்கள் என்று நினைத்து தான் நான் அவர்களை பேசசொன்னேன்.அது இவ்ளோ பெரிய காயத்தை உங்கள் மனதில் ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவே இல்லை.என்னை மன்னித்து விடுங்கள்.இனி இது போல் நடக்காது.எனக்கு இந்த திருமணமும் வேண்டாம்.நீங்கள் சந்தோசமாக இருந்தால் எனக்கு அது போதும்” என்று கூறினான்.

“அப்போ அந்த மூன்று பெண்கள்” என அவர் மீண்டும் ஆரம்பிக்க

“முடியாது அம்மா....நான் என்றும் உங்கள் மகன்...அதே போல் கணவனாக நான் ரதிதேவிக்கு மட்டுமே உரிமையானவன்.வேறு யாருக்கும் அந்த உரிமை இல்லை.என்னை வற்புறுத்தாதீர்கள்” என அவன் உறுதியாக சொன்னான்.

காவேரியோ எதுவும் பேசாமல் அவனையே பார்க்க

“அம்மா நான் இதை சொல்வதால் கோபித்து கொள்ளாதீர்கள்.உங்களுக்கு தேவாவை பற்றி தெரியும்.....அவன் எவ்ளோ நல்லவன் என்று....அவன் ரோஜாவின் மேல் உயிரே வைத்து இருக்கிறான்.அப்போது ரோஜா அழுதது அது வேறு காரணம் அம்மா...... உங்களுக்கு தெரியாதா அவளை பற்றி...எதையும் புரிந்து கொள்ளாமல் கோபபடுவாள்.பின்னர் புரிந்த உடன் அதை சந்தோசமாக எற்றுகொள்வாள். இப்போதும் அப்படிதான்...தேவாவுடன் அவள் சந்தோசமாக இருக்கிறாள்” என சொன்னவன்

பின்னர் சோபாவில் இருந்து கீழே இறங்கி அவரின் மடியின் மீது தலை வைத்தவன்...”அம்மா அப்பா இறக்கும் போது எனக்கு வயது பத்து.ஆனால் இதுவரை நான் அப்பா இல்லையே என்று வருந்தியது இல்லை.அந்த மாதிரி ஒரு சூழ்நிலையை நீங்கள் எனக்கு ஏற்படுத்தி கொடுத்ததும் இல்லை.தாய் தந்தை இரண்டுபேருமாக ஒருவரே இருந்து என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து இருக்கீங்க.....ஆனால் நான் ..நான் உங்களை” என அவன் அழுகையில் உடல் குலுங்க

காவேரியோ ராம் என்னடா இது...சின்ன பையனாட்ட என அவன் முகத்தை கையில் ஏந்த

“இல்லம்மா தொழில்,வெளி இடத்துல எல்லாரும் சொல்வாங்க .....நான் மற்றவர்கள் மனம் அறிந்து செயல்படுகிறேனு...ஆனால் பெற்றவரின் மனதில் இருப்பதை கூட என்னால் புரிந்து கொள்ள முடியாமல் இவ்ளோ நாள் இருந்திருக்கிறேன் என்று நினைக்கும்போது எனக்கே வெட்கமாக இருக்கிறது.இனி இப்படி ஒரு சூழ்நிலை வர நான் விடமாட்டேன் அம்மா” என அவன் உறுதியாக சொல்ல

காவேரியோ சிறுவயதில் தவறு செய்தால் ராம் இப்படிதான் படுத்து கொண்டு அழுவான்....அப்போது அவனை தைரியம் சொல்லி தேற்றுவார் அவர்.இப்போது அவன் அதே போல் செய்ய தாயின் மனம் பாசத்தில் ததும்ப ...”டேய் ராம் என்னடா இது......நான் யாரையும் குறையாக சொல்லவில்லை ராம்.என் மனதில் வெகுநாட்களாக அடக்கி வைத்திருந்த பொருமளை கொட்டிவிட்டேன்.நீ என் மகன்...எனக்குதான் நீ முதலிடம் தரவேண்டும்.ஆனால் நீ பாட்டியிடம் சென்றது எனக்கு கொஞ்சம் கோபத்தை ஏற்படுத்திவிட்டது.அவ்ளோதான்.மற்றபடி பாட்டியின் மீதும் எனக்கு கோபம் இல்லை.ரோஜாவின் சந்தோசம் தான் என்னோட சந்தோசம்.என்மகள் நன்றாக இருந்தால் எனக்கு அது போதும்” என நெகிழ்ச்சியுடன் சொன்னார்.



வேகமாக நிமிர்ந்து அவர் முகம் பார்த்தவன் “ரோஜா சந்தோசமாகதான் இருக்கிறாள் அம்மா” என்றான்..

“என் மகன் சொன்னால் ஒத்துகொள்கிறேன்” என அவன் சிகையை கலைத்துவிட்டு அவர் சிரிக்க

உடனே ராமும் “ஹப்பா இப்போதுதான் நான் என் அம்மாவை பார்கிறேன் என்றவன் உடனே அதே போல்தான்ம்மா ரதியும் ரொம்ப நல்ல பெண்.....நீங்கள் அவளிடம் பேசி இருக்கிறீர்கள தானே.....அதிர்ந்து கூட பேசமாட்டாள் அம்மா” என அவன் ஆரம்பிக்க

காவேரியோ “ராம் என்னது இது...மறுபடியும் இப்போ எதுக்கு இந்த பேச்சு “என அவர் முறைக்க

இல்லம்மா இந்த ஒருமுறை நான் சொல்வதை கேளுங்கள்...இனி இதை பற்றி பேசமாட்டேன் என்றவன் ரதியை முதன் முதலாக பார்த்ததில் இருந்து சென்சார் கட் செய்து நடந்தை சொல்ல காவேரியோ அமைதியாக அதை கேட்டு கொண்டு இருந்தார்.

“அம்மா உங்கள் நம்பிக்கையை நான் குறை சொல்லவில்லை.ஆனால் அம்மா அப்பாவின் தவறுக்கு அந்த பெண் எப்படி பொறுப்பாவாள்.மேலும் அவள் தேவாவின் வளர்ப்பு.....அவளிடம் நீங்கள் மறுபடியும் பேசிபாருங்களேன்...உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் அம்மா.....ஒரு பெண்ணின் மனதில் ஆசையை வளர்த்து பின்னர் அதை நிரசையாக்கிய பாவம் நமக்கு வேண்டாம் அம்மா.ஆனால் நான் உங்கள் வார்த்தையை மீறி எதுவும் செய்யமாட்டேன். அது உறுதி” என முதலில் ரதியை பற்றி பேசிவிட்டு இறுதியில் அம்மாவின் வார்த்தை மீறமாட்டேன் என அவருக்கு உறுதி அளித்தான் ராம்.

காவேரியோ எல்லாவற்றியும் அமைதியாக கேட்டவர் “இல்லை ராம்......நாளைக்கு நாம் சொந்தகாரங்க எல்லாம் கேவலமாக பேசுவார்கள்.அவர்கள் முன்னாள் நீ அவமானபடகூடாது...நீ எனக்கு ஒரே மகன் ...நாளை நம் சந்ததிகளுக்கும் இந்த பெயர் வந்தால் அதற்காக தான் பார்க்கிறேன்” என அவர் சொல்ல

“அம்மா நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிரீர்கள்......மற்றவர்களுக்காக நமது வாழக்கை இல்லை....நமக்காக வாழவேண்டும்.நான் உங்களை உடனே பதில் சொல்லுங்கள் என கட்டாயப்டுத்வில்லை...நன்றாக யோசித்து பார்த்து முடிவு சொல்லுங்கள்...ஆனால் உங்கள் பேச்சை மீறமாட்டேன்...ரதியை மறக்கவும் மாட்டேன் என சொல்லியவன் பின்னர் எழுந்து “வாங்கம்மா சாப்பிடலாம் நேரமாகிவிட்டது” என அவரை சாப்பிடுவதற்கு அழைத்து சென்றான் ராம்.

பின்னர் அவசரவேலையாக ராம் பாத்து நாட்கள் வெளியூர் சென்று விட்டான்.

ஒரு நாள் மாலை பொழுது வீட்டில் ஓய்வாக தேவா அமர்ந்திருக்க ரதி அவனை தேடி வந்தாள்.

வாடி சோர்ந்த மலர் போல் அவள் நடந்து வர அதைப் பார்த்த தேவாவின் மனம் மிகவும் வருந்தியது.அன்று நடந்த நிகழ்விற்கு பிறகு அதை பற்றி தேவாவும் அவளிடம் பேசவில்லை.ரதியும் அதை பற்றி கேட்கவில்லை.

அவன் அருகில் நின்றவள் “அண்ணா நீங்கள் இப்போது ப்ரீயாக இருக்கிறீங்களா ...உங்களிடம் ஒரு விஷயம் பேசவேண்டும்” என சொன்னாள்.

அவள் என்ன கேட்கபோகிறாள் என்ற பயம் அவன் மனதில் இருக்க,ஏனெனில் அவன் தான் உனக்கு எப்போதும் நான் இருக்கேன் ...ஒரு துன்பம் வர விடமாட்டேன் என வாக்கு கொடுத்து இருந்தான்.ஆனால் இப்போது காவேரி அம்மாவை எதிர்க்கவும் முடியாமல் தங்கைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றவும் முடியாமல் இருதலை கொல்லி எறும்பு போல் தவித்து கொண்டு இருந்தான்.ஆனாலும் முகத்தில் அதை காட்டாதவாறு “என்ன வேண்டும் சொல்லு ரதிம்மா” என பாசத்துடன் கேட்டான்.

“நான் மேற்படிப்பிற்கு வெளிநாடு செல்ல ஆசைபடுகிறேன்.அதற்கான விண்ணப்பம் இப்போது கொடுக்கிறார்கள்.அவர்கள் வைக்கும் தேர்வில் வெற்றி பெற்று விட்டால் உதவி தொகையுடன் நாம்செல்லலாம்.அதற்கு உங்கள் அனுமதி வேண்டும்” என்றாள்.

தேவாவோ “ஏன் ரதிம்மா இந்த திடீர் முடிவு ? படிப்பது என்றால் இங்கேயே படிக்கலாமே” என அவன் முடிக்கும் முன் அவள் நிமிர்ந்து அவனை கெஞ்சுவது போல் பார்க்க

அவனோ அவள் தலையை வருடியாவாறு “ரதிம்மா எந்த ஒரு சந்தோசமும் நினைத்தவுடன் கிடைத்துவிடாது.உன்னை கண்டிப்பாக காவேரியம்மா புரிந்து கொள்வார்கள் ..எனக்கு நம்பிக்கை இருக்கிறது.....உனது நல்ல மனதிற்கு எதுவும் தவறாக நடக்காது” என அவன் சொல்லும்போதே

“வேண்டாம் அண்ணா ...அதை பற்றி பேசாதீர்கள்...அப்படி ஒரு நிகழ்வை நான் என் மனதில் இருந்தே அழித்துவிட்டேன்.இப்போது என் மனதில் இருப்பது எல்லாம் நான் நன்றாக படித்து பலபேருக்கு சேவை செய்யணும் ..அதும் மட்டும்தான்...நீங்கள் எனக்கு உதவி செய்வதாக நினைத்தால் தயவு செய்து இந்த விண்ணப்பதில் கையெழுத்து போடுங்கள் “.என அவள் தலைகுனிந்தவாறு அமைதியாக சொல்ல

அவளின் வேதனை புரிந்த அவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அதில் கையெழுத்து போட்டான்.

மறுநாள் அலுவலகம் வந்தவன் ராமை அலைபேசியில் அழைத்தான்.

தேவாவின் நம்பரை கண்டதும் யோசனையுடனே ராம் அலைபேசியை எடுத்தான்.அன்று நடந்த நிகழ்வுக்கு பிறகு ஒரு முறை அவன் தேவாவை அழைத்து தனது அம்மா சொன்னதற்காக அவனிடம் மன்னிப்பு கேட்டவன்...சிறிது நாள் பொறுத்திருங்கள்...அம்மாவின் கோபம் குறைந்ததும் நான் பேசுகிறேன்....அதுவரை வேறு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என கேட்டு கொண்டான்.அதற்கு பின் தேவா அவனை எதுவும் கேட்கவில்லை.

அலைபேசியை எடுத்து காதில் வைத்தவன் “தேவா” என சொல்லும்போதே குரல் உள்ளே செல்ல எதிர்புறத்தில் இருந்து “உன்னிடம் கொஞ்சம் பேசவேண்டும்...உடனே கிளம்பி என் அலுவலகம் வா” என சொல்லிவிட்டு போனை வைத்து விட்டான் தேவா.



அடுத்த பத்து நிமிடத்தில் அங்கிருந்த ராம் அங்கு ரோஜா தேவா இருவரும் இருந்தனர்.ரதி சொன்னதை ராமிடம் சொன்னான் தேவா.

பின்னர் “ரதி சொல்வதும் ஒருவிதத்தில் சரி என்று எனக்கு தோனுகிறது ராம்.இங்கே இருந்து அவள் வேதனைப்பட்டு கொண்டு இருப்பதை விட இடம் மாறுதல் அவளுக்கு பயனுள்ளதாக இருக்கம் .....மேலும் நீயும் எந்த பதிலும் சொல்லவில்லை” என அவனை குற்றம் சாட்டும் வகையில் தேவா பேச

“எனக்கும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை தேவா......அம்மாவிடம் இருந்து இப்படி எதிர்ப்பு வரும் என்று நான் நினைக்கவில்லை....எனக்கு மனைவி என்று வந்தால் அது ரதி மட்டும்தான்...ஆனால் அது எப்போது என்றுதான்” என அவன் இழுக்க

“இதை நீ பெண்கேட்டு வருவதற்கு முன்னால் யோசித்திருக்கவேண்டும்...ஒரு பெண்ணின் மனதில் ஆசையை விதைத்துவிட்டு இப்படி காரணம் சொல்லி கொண்டு இருக்க கூடாது...தைரியமாக பிரச்னையை எதிர்கொள்ளும் திறமை இருப்பவன் தான் காதலிக்கவேண்டும்” என கொஞ்சம் கோபமாக தேவா பேச

ராமின் முகமோ சுருங்க ரோஜாவோ நிலைமை ஏதோ சரியில்லை என உணர்ந்தவள் “சரி ராம் நீங்க கிளம்புங்க ....மற்றதை பிறகு பேசிக்கலாம்” என அவனை கிளப்பினாள்.

ஆனால் “ராமோ பராவயில்லை ரோஜா.....எந்த அண்ணனுக்கு தங்கையின் வாழ்வு இப்படி இருக்கும்போது கோபம் வருவது இயற்க்கை தானே என்றவன் ஏற்கனவே அம்மாவை நான் மிகவும் வேதனைபடுத்திவிட்டேன்.....அதனால் தான் இப்போது அவரிடம் பேசமுடியாமல் அமைதியாக இருக்கிறேன்” என அவன் புலம்ப

“ஏன் மாம்ஸ்...என்னாச்சு....நீ ஏதாவது கோபமா பேசிட்டியா ......உனக்கு அத்தை பத்தி தெரியாதா .......வரவர நீ எல்லா விஷியத்துக்கும் அவசரபட்ற” என அவனை அவள் திட்ட

ஏற்கனவே தேவா பேசியது,ரதியின் இந்த முடிவு என பலகுழப்பதில் இருந்தவன் அதற்க்கு ஏற்றார் போல் ரோஜாவும் திட்ட “ஆமாம் எல்லாம் என்னையே சொல்லு...பிரச்சனயே உன்னால் தான்......நீ மட்டும் அன்று அழுகவில்லை என்றால் இப்போது இந்த நிலமையே வந்து இருக்காது” என அவன் கோபத்தில் வார்த்தைய விட்டு விட்டான்.

“என்ன சொல்ற ராம் “என ஒரே நேரத்தில் தேவாவும் ரோஜாவும் கேட்டபின்பே தான் உளறியதை உணர்ந்தான் ராம்.

“நான் என்ன சொன்னேன்...இல்லே ஒன்னும் சொல்லலை” என அவன் மறைக்க

பின்னர் இருவரும் அவனை மிரட்டி அன்று நடந்தை தெரிந்து கொண்டனர்.

முதலில் ரோஜா தான் “என்ன மாம்ஸ் இது ...நான் எதோ நினைத்து அழுக அத்தை இப்படி புரிந்து கொண்டார்களா ...இதை அத்தை என்னிடம் கேட்டு இருந்தால் நானே சொல்லி இருப்பேன்” என அவள் சொல்லிக்கொண்டு இருக்க

ராம் ரோஜாவை தனக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும் என்ற காவேரியின் ஆசையை நான் மேலோட்டமாக சொல்லிவிட்டு அதை விட்டுவிட்டான்.ஆனால் எதிரில் இருப்பவன் கண்களை வைத்தே அவன் சொல்வதை உணரும் தேவா அதை கண்டுபிடித்துவிட்டான்.

“நான் வந்து அத்தையிடம் பேசுகிறேன் என ரோஜா வேகமாக எழுந்தரிக்க ...ரோஜா என ஒரு அதட்டல் போட்ட தேவா...நீ முதலில் வீட்டிற்கு கிளம்பு” என அவளை கிளப்பினான்.

நாட்கள் செல்ல ஒரு வாரம் கழிந்த பின் தேவா ரோஜாவிடம் “பட்டாபியின் கதை எப்படி போகிறது” என கேட்டான்.”எல்லாம் நல்லபடியாதான் அத்தான் போயிட்டு இருக்கு.....சீக்கிரம் நல்ல செய்தி வரும் “என சொன்னாள் ரோஜா.”நீ ஏதோ செய்கிறாய்....எனக்கு இது சரியாக வரும் என்று தோனல ... அப்புறம் அந்த வாணி கேஸ்ல கொஞ்சம் ஜாக்கிரதயா இரு....அவன் கொஞ்சம் மோசமான ஆள்.....எங்கு போனாலும் பட்டாபியை கூட கூட்டிட்டு போ” என அவன் எச்சரிக்க செய்ய

“என்ன அத்தான் இந்த ரோஜாவ பார்த்து இப்படி சொல்லிடிங்க...நாங்க எல்லாம் சுனாமிலே சுண்டல் வித்த ஆளுங்க ...இதெல்லாம் எங்களுக்கு சாதரண விஷியம்” என சொல்லி கொண்டு இருக்க

அவனோ சிரித்துகொன்டே அமைதியாக அங்கிருந்து நகர்ந்தான்.

இரண்டு நாட்களில் காவேரி அம்மாவிடம் இருந்து திருமணத்தை இன்னும் பதினைந்து நாட்களில் வைத்து கொள்ளலாம் என செய்தி வர தேவாவோ சந்தோசத்தில் ரோஜாவை அலைபேசியில் அழைத்து விபரம் சொன்னான்.

“எப்படி அத்தான் அத்தை சம்மதித்தார்கள்” என அவள் ஆச்சரியப்பட்டு கேட்க

“அதெல்லாம் விபரமாக அப்புறம் சொல்கிறேன் ...முதலில் இது ரதியிடம் சொல்லவேண்டும்” என்று அவசரபட்டான் தேவா..

“பொறுங்க அத்தான் .....அவங்களுக்கு ஒரு அதிர்சசி வைத்தியம் கொடுப்போம் என்றவள் நான் இதை பற்றி தரணியிடம் பேசிவிட்டு சொல்கிறேன்” என்றாள்.

தரணியிடம் சொல்ல அவளோ மிகவும் சந்தோசபட்டவள் ஆனால் “ரோஜா இந்த விபரம் ரதிக்கு தெரிவதற்கு முன்னாள் அவளது கோபம் குறைய வேண்டும்.அதற்கு ராம் ரதி தனியாக சந்திக்க வேண்டும் “என்றாள்.

இதும் நல்லாத்தான் இருக்க என்றவள் என்ன பண்ணலாம் என இருவரும் சேர்ந்து திட்டமிட முதலில் ரோஜா மறுத்தாலும் தரணியின் கட்டாயத்தாலும் மேலும் ரதி ராம் மீது இருந்த பாசத்தாலும் அதற்க்கு ஒத்து கொண்டாள்.

“நீ ரதியை அழைத்து கொண்டு ஹோட்டலுக்கு வந்திடு.....அப்புறம் தேவா சாரிடம் சொல்லி ராமை வர சொல்லு” என சொல்ல ஹோட்டல் என்றதும் முதலில் பயந்த ரோஜா ஆனால் தரணியின் அந்த ஐடியா பிடித்து இருக்க இருமனதுடன் தலையாட்டினாள் .

வாழக்கையின் ஒவொவொரு நிமிடமும் சுவாரசியம் நிறைந்ததே...அதை விரும்பி அனுபவிப்பவன் வாழ்கிறான்.அதை பார்த்து பயப்படுபவன் அதனாலே வாழ்வை தொலைத்து விடுகிறான்.ஒருவருக்கு அதிர்ச்சி கொடுக்க இவர்கள் செல்ல காலமோ இவர்களுக்கு கொடுக்கபோகும் அதிர்ச்சியை பாவம் இவர்கள் அறிந்திருக்கவில்லை.

ரதியின் கல்லூரிக்கு சென்று அவளிடம் முக்கியமான விஷயம் பேசவேண்டும் என அவளை ஹோட்டலுக்கு அழைத்து வந்து இருந்தனர் ரோஜாவும் தரணியும்.தேவாவிடம் ரோஜா சொன்னதும் அவனும் இதற்க்கு சரி என்றவன் ராமைஅழைத்து வருவது தன்னுடைய வேலை என்றான்.

திருமணத்திற்கு பிறகு தேவா அவளை ஹோட்டலுக்கு அழைத்து வரவே இல்லை.இப்போது தான் முதன் முறையாக வருகிறாள்.உள்ளே நுழைந்ததும் முகம் வேர்க்க கைகால் நடுங்க அவளை பற்றி தெரிந்த ரதி ..”என்னாச்சு ரோஜா ..நாம் சென்று விடலாமா” என கேட்டாள்.

“இல்லை..இல்லை ரதி எனக்கு ஒன்றும் இல்லை” என சமாளித்தவள் ஆனால் முன்பு போல் பயம் இல்லாமல் சற்று தெளிவாக நடந்தாள்.



இன்னும் தேவாவும் ராமும் வராததால் மூவரும் அவர்களுக்காக காத்து இருந்தனர்.

ரதி விபரம் தெரியாததால்” என்ன பேசணும் ரோஜா...வீட்லே பேசி இருக்கலாம்”.....என சொல்ல

“அது வந்து ரதி” என ரோஜா தடுமாற

“தரணியோ அது ஒன்றும் இல்லை ரதி.......உன்னிடம் உன் திருமணத்தை பற்றி” என ஆரம்பிக்க

அதற்குள் ரோஜாவிற்கு அலைபேசி அழைப்பு வர அவள் திரும்பி அதில் பேசிக்கொண்டு இருந்தாள்.

அதற்குள் “ஹலோ ரதி” என ஒரு குரல் கேட்க

திரும்பி பார்த்தவள் “ஹலோ சார்” என அவள் பவ்வியமாக எழுந்து நின்றாள்.

“மரியாதை எல்லாம் கல்லூரியோடு போதும் ...இங்கு வேண்டாம்” என சிரித்து கொண்டே சொன்னவன்

“இப்போது தான் கல்லூரி முடிந்தது...அதற்குள் ஹோட்டலில் இருக்கிறாய்” என அவன் ஒரு மாதிரி குரலில் கேட்க

“இல்லை சார் அது வந்து இவங்க என் அண்ணியோட தோழி தரணி,இவங்க என அண்ணி” என அவள் உறவினரோடுதான் வந்து இருக்கிறேன் என சொல்லாமல் சொல்ல

ஓ என்றவன் அதற்குள் ரோஜா பேசி முடித்து விட்டு திரும்ப ...எதிரில் இருப்பவனை பார்த்ததும் அவள் அதிர்ந்து நிற்க

அவனும் அவளை பார்த்ததும் அதிர்ச்சியில் இருக்க

ரதியோ அது புரியாமல்” ரோஜா இவர் கல்லூரியில் டெண்டல் தொடர்பான சிறப்பு வகுப்பு எடுக்க வருவார்.பெயர் mr விக்டர் ராஜ் MDS என அறிமுகபடுத்தியவள் விக்டரிடம் திரும்பி இவங்க என் அண்ணி சார் ....MRSரோஜா லாயரா இருக்காங்க “ என சொன்னாள்.



காலம் கனிந்தது கதவுகள திறந்தது.

கனவுகள் நினைவாக

வாழ்வின் வசந்தங்கள் அனைத்தும்

அவர்கள் வசம் வீச

சந்தோஷ வானில் மனம் சிறகடிக்க

இரு ஜோடி பறவைகள் இன்புற்று இருந்தது.

விடை தெரியாத பல வினாக்களுக்கு

சூழ்நிலையே பதிலாக அமைய

இன்ப அதிர்ச்சி கொடுக்க வந்தவளே

நடக்கும் நிகழ்வில் அதிர்ந்து போய் நின்றாள்.

வந்த துன்பங்கள் யாவும் காற்றோடு

கரைந்தது என எண்ணி அவன்

மகிழ்ந்து இருக்க

நினைப்பது எல்லாம் நடந்து விட்டால்

தெய்வம் ஏதும் இல்லை என்று ஆகிவிடாதா?

ஒரு பக்கம் முடிச்சை அவிழ்த்தவன் மறுபக்கம்

அதை மறுபடியும் போட்டுவிட்டான்

என்பதை பாவம் இவர்கள் அறியவில்லை

அறியாமல் இருப்பதை அறிந்து கொள்ள செய்வதும்

எதிர்வரும் துன்பத்தை எப்படி துவம்சம் செய்வது

என்பதையும் கற்று கொடுப்பதே

சோதனை காலம் தான்.......

அந்த காலம் அவர்களுக்கு இப்போது வர


இதன்தீர்வு யார் அறிவாரோ???????????
 
Top