• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் - 4

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
அத்தியாயம் - -4

நேரம் கடத்த வேண்டுமே என அவனிடம் பேச ஆரம்பித்தவள் பின்பு அவன் தான் இராகதேவன் என தெரிந்ததும் தன்னுடைய நேரத்தை நினைத்து மனதில் புலம்பியபடி நின்று கொண்டிருக்க.....பாவபட்ட ஜீவனாக பயத்தில் நடுங்கியபடி பட்டாபி ஒரு புறம் நின்று கொண்டிருக்க இருவரையும் பார்வையாலே அளந்தவன்…….

“அப்புறம் பட்டாபி....எனது அலுவலகத்திலே எனக்கு எதிராக நீ செயல்படுகிறாயா என கேட்டவன் இது எத்தனை நாளாக நடக்கிறது.....யார் இந்த பெண்....மூர் மார்க்கெட்டில் முட்டைகோஸ் விற்ப்பது போல் விபரம் தெரியாமேலே டிவேர்ஸ் கேஸ் என உளறிக்கொண்டு இருக்கிறாள்......இது வக்கீல் ஆபிசா இல்லை மூர்மார்க்கட்டா” என கோபமாக கேட்டான் ராகதேவன் என்கிற தேவா.

“சார் என பதறியவன் அப்படி எல்லாம் இல்லை சார்..... எனக்கு இவங்க யாருனே தெரியாது இவங்க கேஸ் விஷயமாக உங்களை பார்க்க வந்தாங்க ..... அதுக்குள்ள ஒரு சின்ன வேலை ...நம்ம மணி கடைக்கு போயிருந்தான்....அதான் இவங்கள இங்க இருக்க சொல்லி விட்டு நான் சென்றேன்.நான் வேற ஏதும்” என பதட்டத்தில் அவனுக்கு வார்த்தைகள் நர்த்தனமாடின.

தேவா அவனை முறைத்து பார்க்க அவனது முகத்தின் இறுக்கமும் அவன் பேசும்விதமும் ரோஜாவிற்கு பயத்தை ஏற்படுத்த அமைதியாக நின்றாள்..

திரும்பி அவளை எரித்துவிடும் பார்வை பார்த்தவன் “இங்க பார் பெண்ணே நீ நினைப்பது போல் இது ஒன்றும் விளையாடுவதற்கான இடம் இல்லை....வக்கீல் ஆபிஸ்.....உன்னை போன்ற அதிகபிரசிங்கிகள் கேஸ் எல்லாம் நான் எடுப்பது இல்லை..... முதலில் வக்கிலிடம் எப்படி பேசவேண்டும் என்று கற்று கொள்...மரியாதை என்பதே துளி கூட தெரியவில்லை.........என கோபமாக பேசியவன்...பார்ப்பதற்கு நாகரீகமாக இருந்துகொண்டு பண்ணுவது எல்லாம் முட்டாள் தனமான செயல்” என முனக

அதுவரை பொறுத்திருந்த ரோஜா அவன் முட்டாள் என்றதும் கோபம் சுருசுருவென்று தலைக்கு ஏற ,”ஏய் மிஸ்டர் யாரை முட்டாள்னு சொல்றிங்க......முதல்ல நீங்க நாகரீகமா பேச முயற்சி பண்ணுங்க...... எந்த ஊர்ல வக்கீல் பட்டு வேட்டி சட்டையோட ஆபிஸ்க்கு வருவான்.......ம்ம்ம்ம் எனக்கு தெரிஞ்சு திருமணத்திற்கும்,கோவிலுக்கும் தான் இப்படி செல்வார்கள்......எத்தனை திரைபடங்களில் பார்த்திருக்கிறேன் என நக்கலாக சொன்னவள் ......அதனால் தான் நீங்கள் உள்ளே நுழைந்ததும் காமெடி பீஸ் என்று என சொல்லிவிட்டு நாக்கை கடித்தவள் கிளையன்ட் என நினைத்து பேசிவிட்டேன்.யார் அதிகப்ரசங்கி நானா.... நீங்க யார் என்று நான் கேள்வி கேட்டதும் உடனே உங்களை பற்றி சொல்லவேண்டியதுதானே....அதை விட்டு என்னிடம் நீங்கள் கேள்வி கேட்டீர்கள்...அதற்க்கு நான் பதில் சொன்னேன்.....தேவை இல்லாமல் மற்றவர்களை மரியாதை குறைவாக பேசாதீங்க” என படபடவென பேச

பட்டாபியோ அப்படியே சிலையாக நிற்க......ஏனெனில் இதுவரை ராகதேவன் முன் யாரும் இப்படி பேசியது இல்லை......

ராகதேவன் கண்கள் கோபத்தில் சிவக்க .....”பட்டாபி என கத்தியவன் முதலில் இந்த பெண்ணை வெளியே அனுப்பு என்றவன் இனி மேல இது போல் பைத்தியங்களை எல்லாம் உள்ளே விடாதே” என கர்ஜித்தான்.

உடனே ரோஜா “அதை இன்னொரு பைத்தியம் சொல்லகூடாது என ஆத்திரத்துடன் சொன்னவள் ....எல்லாம் இந்த ராம்சரன சொல்லணும்.......அவன் மட்டும் வரட்டும்....இன்னைக்கு உண்டு அவனுக்கு” என சொல்லிகொண்டே வெளியே செல்ல

“என்னது ராம் சரணா” என தேவன் கேட்க

அருகில் இருந்த பட்டாபி....”ஆமாம் ஆமாமா சார்....அதுகூட சொன்னங்க Mr ராம்சரண் IPS தான் அனுப்பி வைத்தர் என்று சொன்னார்கள் ” என்றான்.

ஓ!!!! என அவன் அப்படியே நாற்காலியில் சாய

“மே ஐ கம் இன்” என்றபடி ராம் உள்ளே வரவும் சரியாக இருந்தது.

ரோஜா வெளியே வர அப்போதுதான் ராம் உள்ளே நுழைந்தான்....அவள் கோபமாக இருப்பதை பார்த்து தான் பாதியில் விட்டு சென்றதில் கோபம் என நினைத்தவன் .....அவளிடம் ஒரு நிமிடம் ரோஜா உள்ளே போய் பேசிட்டு உடனே போய்டலாம்” என சொல்லிவிட்டு அவள் பேச ஆரம்பிக்கும் முன் தேவன் அறையில் நுழைந்தான்.

“ஹே ராம்.....வா...வா எப்படி இருக்கிறாய் ......கல்லூரியில் படிக்கும்போது வாலிபால் போட்டியில் பார்த்தது. மறுபடியும் இப்போது தான் பார்க்கிறோம்”.என தேவன் மகிழ்ச்சியுடன் சொல்ல

“ஆமாம் தேவா ....அப்புறம் நீ எப்படி இருக்கிறாய்....சாரி அன்று உன்னை சந்திக்க முடியவில்லை......ஒரு சின்ன பிரச்சனை என அவன் தயங்க...விடு ராம்....எனக்கும் அப்போ கொஞ்சம் வேலை இருந்தது.அந்த நேரத்தில் அதை முடித்து கொண்டேன் “ என சிரித்து கொண்டே சொன்னான் தேவா. அப்புறம் உன்னோட வேலை எல்லாம் எப்படி போய் கொண்டு இருக்கிறது “ என விசாரிக்க

“எல்லாம் நன்றாக போயிட்டு இருக்கு.அப்புறம் தேவா நான் சொன்னேன் இல்லியா என் அத்தை பொண்ணு ரோஜா BL முடித்துவிட்டாள் என்று....அவளை அழைத்து வந்திருக்கிறேன்.......நீ தான் அவளை ஒரு சிறந்த வக்கிலாக கொண்டு வரவேண்டும்....அவள் கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ளவள்......வெளிமனிதரிடம் அதிகம் பேசமாட்டாள்.......”என அவளை பற்றி நல்லவிதமாக ராம் சொல்ல

தேவன் பட்டாபியை பார்க்க ....

பட்டாபியோ வந்த சிரிப்பை அடக்கியவாறு தலை குனிந்த படி நின்றான்.

“ம்ம்ம்ம் ...ஆனா ராம் “என தேவன் இழுக்க

“நீ ஏதும் சொல்லவேண்டாம்........எனக்கு தெரியும்...நீ ஜூனியர் யாரையும் வைத்து கொள்வதில்லை என்று .....ஆனால் எனக்காக ப்ளீஸ்” என கேட்க .

“டேய் என்னது இது...பிளீஸ் எல்லாம்...சரி சரி.....நான் சேர்த்து கொள்கிறேன்” என தேவன் சொல்ல பட்டாபியோ அதிர்ச்சியில் வாயடைத்து நின்றான்..

இது நாள் வரை பலபேர் அவனிடம் ஜூனியராக சேர கேட்டு இருந்தனர்...ஆனால் தேவா மறுத்துவிட்டான்....அதும் பெண்கள் என்றால் சுத்தமாக அனுமதி இல்லை.பட்டாபி இங்கு சேர்ந்தது ஒரு பெரிய கதை அதை அவனிடமே கேட்டுகொள்வோம். இப்போது தேவன் ரோஜா வை ஜூனியரா சேர்த்துக்கொள்ள ஒத்து கொண்டது,அதும் அவளது செயல்களை கண்டு எரிச்சலுற்று இப்போது தான் திருப்பி அனுப்பினான்....இப்போது அவளையே ஜூனியராக ஏற்றுகொண்டது அவனால் நம்பமுடியவில்லை.

தேவன் ஒத்துக்கொண்டதும் “ரொம்ப தேங்க்ஸ் தேவா....நான் பயந்து கொண்டே இருந்தேன் என்றவன் ஆனால் ஒரு சிறு விண்ணப்பம்....இப்போது அவள் என் மேல் கோபமாக இருக்கிறாள்.....அதனால் அவளை சமாதனபடுத்தி நாளை அவசியம் அழைத்து வருகிறேன் என சொல்லிவிட்டு இனி நாம் அடிக்கடி சந்திக்க வேண்டும் தேவா” என சிரித்து கொண்டே சொன்னவன் சிறு கைகுலுக்கலுடன் விடைபெற்றான்.

வெளியே வந்த ராம் அவனுக்கு முன்பே ரோஜா காரில் அமர்ந்திருக்க ...முதலில் நாம் வாயை திறந்தோம்...தொலைந்தோம் என நினைத்தவன் எதுவும் பேசாமல் வண்டியை கிளப்பினான். 1

வீடு சென்றதும் கோபமாக உள்ளே சென்றவள் அப்படியே சோபாவில் அமற ராம் தான் உள்ளே சென்று அவளுக்கு டீ போட்டு எடுத்து வந்தான்.அவளிடம் கொடுக்க அவளும் அப்போதைய மனநிலையில் அதை வாங்கிகொண்டாள்.டீ குடித்து முடித்ததும் மெதுவாக பேச்சை ஆரம்பித்தான் ராம்.

“ரோஜா சாரிடா....ஒரு அவசர வேலை அதான் போக வேண்டியதா போச்சு......ஆனா நான் தேவாகிட்ட எல்லாமே பேசிட்டேன்...... அவனும் ஜூனியரா சேர்த்துக்க ஒத்துகிட்டான்” என சொல்ல

“அதிர்ச்சியுடன் அவனை பார்த்த ரோஜா நிஜமாவா ராம்......அவர் ஒத்துகிட்டாரா ...இருக்காதே.......உன்கிட்ட வேற ஏதும் கேட்கலியா” என வினவ

“இல்லை ரோஜா...நான் சொன்னதும் அவன் சரி வர சொல்லு என்றான்.நான்தான் இன்று நீ என் மேல் கோபமாக இருகிறாய்....நாளை அனுப்பிவைக்கிறேன் என்று சொன்னேன் என்றவன் உனக்கு அவனை பற்றி தெரியாது ரோஜா...எங்கள் டிப்பார்ட்மென்ட்டில் அவனுக்கு எவ்ளோ நல்ல பெயர் தெரியுமா ....வக்கீல் இராகதேவன் என்றாலே நீதிபதியே கொஞ்சம் பயபடுவார்.அவன் பேசும் ஒவொவொரு வார்த்தையும் உண்மையாக இருக்கும்....யாரும் குறை கண்டுபிடிக்க முடியாது.......ஆனால் அதிகம் பேசமாட்டான்” என அவன் புகழ் பாட

“யாரு அவனா...அதான் கேட்டேனே நானே...எப்படி பேசினான் என்று என கூறியவள் ...அதெல்லாம் எனக்கு வேண்டாம் மாம்ஸ்.....எனக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் நல்ல வக்கிலா பாருங்களேன்.....இவன் நமக்கு ஒத்து வரமாட்டான்” என அசால்ட்டாக கூறிவிட்டு அவள் எழுந்து உள்ளே செல்ல....

“ரோஜா என சற்று கோபமாக அழைத்த ராம்... முதல்ல இப்படி மரியாதை இல்லாமல் பேசுவதை நிறுத்து.........நாளைக்கு நீ அவர் கிட்ட ஜூனியராக சேருகிறாய்......இது தான் முடிவு “ என சொல்லிவிட்டு அவளுக்கு முன் அவன் மாடிக்கு சென்று விட்டான்.

தனது அறைக்கு சென்றவள் இனி அடுத்து என்ன செய்வது என யோசிக்க சில பல முடிவுகளுடன் மறுநாள் ராகதேவனிடம் ஜூனியராக சேர்ந்தாள் ரோஜா. ராம் அழைத்து சென்றதும் அறிமுகம் இல்லாதவன் போல் அவன் பேச அவளும் அப்படியே நடந்து கொண்டாள்.அவளது மதிப்பெண் பட்டியலை வாங்கி பார்த்தவன் அவளை மேலும் கீழும் பார்க்க ஆஹா நம்ம ஒரிஜினாலிட்டி வெளியே வந்திருச்சே என ஒரு நிமிடம் அவள் தயங்க...ஆம் ரோஜா இது வரை எழுதிய தேர்வில் இரண்டாம் வகுப்பில் தான் தேர்ச்சி பெற்று இருந்தாள். இறுதி தேர்வு முடிவு இன்னும் கைக்கு வரவில்லை ...... அவள் விருப்பப்பட்ட படிப்பு வேறு....இந்த படிப்பு சூழ்நிலையால் அவள் படிக்க வேண்டிய நிலைமை.......அதனால் அவள் விருப்பம் இல்லாமல் படித்தாள்.

அதற்க்கு ஏற்றார் போல் தேவனும்.....”ம்ம்ம் ரொம்ப நல்ல மார்க் வாங்கி இருக்கீங்க” என அவளது குறைவான மார்க்கை அவன் நக்கலாக சொல்ல

உடனே ரோஜா “ஆமாம் சார்.......உங்களிடம் சேருவதற்கான அதிகபட்ச தகுதியே இது தான் என்று வெளியே சொன்னாங்க அதான்”......என அவளும் அவனுக்கு சமமாக பதில் கொடுக்க

“என்னோட தகுதியை நீ விசாரித்து விட்டு தான் வந்திருக்கிறாய்” என அவன் அவளது பதிலிலே கேள்வி எடுக்க

“உங்கள் தகுதியை நான் நேற்றே பார்த்துவிட்டேன் ....பரவாயில்லை எனக்கு சமமில்லை என்றாலும் என்னால் முடிந்த உதவியை என அந்த உதவியை அவள் அழுத்தி சொன்னவள் உங்களுக்கு செய்யலாம் என்றுதான் வந்தேன்” என அவள் அந்த சொற்போரை மேலும் வலுபடுத்த

அவள் சொல்லும்போதே அவளது முகபாவனையை வைத்து அவளது எண்ணத்தை புரிந்து கொண்டவன் ,அவள் பேச்சில் இருந்து அவளது தைரியத்தையும் தெரிந்து கொண்டவன் இவளிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என நினைத்து கொண்டான்.

“சரி பட்டாபியிடம் சென்று உனக்கான வேலையை கேட்டு தெரிந்து கொள்.....அதற்க்கு முன்னாள் வக்கீல் அலுவலகத்திற்கு வரும் கிளையின்ட்டுகளிடம் எப்படி பேசுவது என தெரிந்து கொள்” என அழுத்தமாக கூறியவன் பின்னர் தனது வேலையில் கவனத்தை செலுத்தினான்.

வெளியே பட்டாபியை பார்த்தவள் அப்போதிருந்த இறுக்கமான மனநிலை மாறி மகிழ்ச்சியுடன் அவனை நோக்கி செல்ல

பட்டாபியோ அவளை பார்த்ததும் கோபமாக முகத்தை திருப்பி கொள்ள

“என்ன பட்டாபி ...என் மேல் கோபமா” என கேட்டவாறே அவன் முன் அமர்ந்தாள்.

“அதெல்லாம் ஏதும் இல்லை என சலிப்புடன் சொன்னவன் நீ நேற்று செய்த காரியத்திற்கு சார் என்னை வேலை விட்டு அனுப்பி இருப்பார்.......எதோ என் நல்ல நேரம் ஏதும் சொல்லலை....ஏன் ரோஜா இப்படி பண்ணின என சலிப்பாக ஆரம்பித்து கெஞ்சலில் முடித்தவன் ஆனாலும் நேத்து அவருக்கு செம நோஸ் கட் தெரியுமா? அவர் முன்னாடி யாரும் இப்படி பேசினது இல்லை......அதுனால உன்னை விடறேன் என சொன்னவன்...நீ ஏன் வந்த உடனே வக்கீல்னு என்கிட்டே சொல்லவே இல்லை” என கேட்டான்.

“நீ எங்க சொல்ல விட்ட......நீயே பேசிட்டு இருந்த......ஆனாலும் பட்டாபி உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு....உன்கிட்ட அசட்டுதனமான பேச்சும் நடவடிக்கையும் இருந்தாலும் நீ ரொம்ப நல்லவண்டா” என அவள் அன்புடன் சொன்னாள்.

“ஹிஹிஹி அப்படியா” என அவன் வழிய .......

“அச்சோ ஆரம்பிச்சுட்டியா ....அந்த வாட்டர் பால்ஸ் தான் கொஞ்சம் க்ளோஸ் பண்ணேன் என்றவள் இங்க பாரு பட்டாபி இப்போ இருந்து நாம இரண்டு பேரும் ஒரே இடத்தில் வேலை செய்யபோறோம்.அதுநாள இந்த வழிசல் எல்லாம் வேண்டாம் என்றவள் சரி எனக்கு என்ன வேலை சொல்லு” என வேலையில் பேச்சை மாற்ற அவனும் அதை பற்றி விளக்கினான்.

அன்று இரவு வீட்டில் அவள் டிவி பார்த்து கொண்டிருந்தாள்.அருகில் வந்து அமர்ந்த ராம் ...”ரோஜா வீட்ல இருந்து யார் போன் செய்தாலும் நீ பேசுவது இல்லையாமே ... மாமா என்கிட்டே புலம்புகிறார்.....பாவம் பாட்டி இரண்டு நாளா சாப்பிடவில்லையாம் ....உனக்கு என்ன ஆச்சு.......பார்த்தா தெளிவா இருக்கிற மாதிரி இருக்க...அப்புறம் ஏன் இப்படி பன்ற ரோஜா” என அவன் கவலையுடன் கேட்க

அவள் ஏதும் பேசாமல் அமைதியாக தலைகுனிந்து அமர்ந்திருக்க

“ரோஜா ....உனக்கு என்னதாண்டா பிரச்சனை ...மனசவிட்டு சொல்லு.......என்கிட்ட சொல்லனும்னு உனக்கு தோனலையா” என அவன் ஆற்றாமையுடன் கேட்க

சட்டென்று நிமிர்ந்தவள் “அப்படி எல்லாம் இல்லை மாமா.......நான் அவங்களோட பேசினால் உடனே இங்கிருந்து கிளம்பிடுவேன்......என்னால அப்பா,அம்மா,பாட்டியை விட்டு இருக்க முடியலை....என்னையே நான் கட்டுபடுத்தி கொண்டுதான் இங்க இருக்கேன்....... அவர்கள் குரலை கேட்ட பின்னர் என்னால் இங்க இருக்க முடியாது....ஏற்கனவே என்னால் அவங்க நிறைய கஷ்ட்டபட்டாங்க ....இனியும் அது தொடர வேண்டாம்....நான் இங்கு என்னை சரிபடுத்திகொண்டு அப்புறம் பேசுகிறேன் மாமா...அப்பாகிட்ட சொல்லிடுங்க.......தயவு செய்து பாட்டிய சாப்பிடசொல்லுங்க.......என்னால் ஒரு உயிர் இழந்தது போதாதா” என சொல்லும்போதே அவள் குலுங்கி அழுக

“ரோஜா என்ன இது.......உன்கிட்ட எத்தன முறை சொல்லி இருக்கேன்......அது உன்னால் நடந்து அல்ல என்று....நீ இன்னும் அப்படியே தான் இருக்கிறாய் ....அத்தை சொன்னது சரிதான் ... நீ மாறவே இல்லை என அவளை அதட்டியவன் ...படித்து இருந்தும் முட்டாளாக இருக்கியே ...உன்னை என்ன செய்வது” என சலிப்புடன் கூறினான்.

“அப்படிதான் இருந்து விட்டேன் ராம் நான் ...இல்லை என்றால் அப்படி ஒரு நிகழ்ச்சியே நடந்திருக்காதே “என அவள் மேலும் அதை பற்றியே பேச

அதற்க்கு மேல் அவளிடம் பேச்சை வளர்த்த விரும்பாத ராம்.......”.சரி நேரமாகுது சாப்பிட்டு போய் படு...காலையில் வேலைக்கு செல்லவேண்டும் என்றவன் ...அட ஆமா நான் மறந்துவிட்டேன் .......எப்படி இருந்தது உன் முதல் நாள் வேலை” என ஆர்வமாக கேட்டான்.

“மனம் குழப்பத்தில் இருந்தவள் ....எதோ இருந்தது ராம்” என வேண்டாவெறுப்பாக சொல்லிவிட்டு எழுந்தாள்.

“கவலைபடாதே ரோஜா தேவன் ரொம்ப நல்ல வக்கீல்.... அவனிடம் ஜூனியராக இருப்பது எதிர்காலத்தில் உனக்கு ரொம்ப உபயோகமாக இருக்கும்.....சரி ஏதாவது சாப்பிட்டாயா ....நாளை அம்மா வந்து விடுவார்கள்......அதுவரை நம்ம சமையல் தான் அப்புறம் உனக்கு பிடித்த ஆப்பம் வடைகரி தான் பண்ணபோறேன்” என சொல்லிகொண்டே அவன் சமையல் அறைக்குள் செல்ல...அங்கு அவனுக்கு முன்னாள் தட்டை எடுத்து கொண்டு நின்றாள் ரோஜா.

அவளை பார்த்ததும் சிரித்துகொண்டே “இன்னும் செய்ய ஆரம்பிக்கவே இல்லை...அதற்குள் தட்டோடு நிற்கிறாய் என்றவன்....டிவி பார்த்து கொண்டிரு...செய்து எடுத்து வருகிறேன்” என்றான்.

அதற்குள் அலைபேசி ஒலிக்க எடுத்து காதில் வைத்தவன்

“ம்ம்ம் சொல்லுடா......இல்லை நாளைக்கு ப்ரீ தான் ...பேசலாம்...எங்க வீட்டுக்கு வரட்டுமா.......சரி சரி ஆபிஸ் வருகிறேன் என்றவன் கேட்டேன்..ரொம்ப நன்றாக இருந்தது.......என புகழ்ந்து தள்ளிவிட்டாள்” என சொல்லி கொண்டிருக்க...அதற்குள் அவனை யாரோ அழைப்பது போல் தோன்ற ஒரு நிமிடம் என்றவன் வெளியே எட்டி பார்க்க

அங்கு வரவேற்பு அறையில் ராம் என அழைத்தவள் “எனக்கு கை வழிக்குது.....என்னால் சாப்பிடமுடியாது......அதனால் நீ செய்து எடுத்து வந்து ஊட்டி விடுகிறாயா...அந்த ராஸ்கல் இன்னைக்கே ஏகபட்ட பேப்பர் கொடுத்து டைப் பண்ண வச்சுட்டான்.....ஏன் ராம் அவன் என்ன சிங்கத்துக்கும் சிறுத்தைக்கும் பிறந்தானா.... எப்ப பார்த்தாலும் முகத்தை உர்றனே வச்சிர்க்கான்.....நான் நினைக்கிறேன்...இவன் எல்லாம் மியுசியத்துல சிலையா நிற்க வேண்டியவன்....இங்க வந்து கருப்புகோட்டு போட்டு நிற்க வச்சுடாங்க” எனஅவள் புலம்பி கொண்டிருக்க .......

இவள் ஏதோ முக்கியமான விஷயம் சொல்கிறாள் என போனில் இருந்தவனிடம் ஒரு நிமிடம் என பெர்மிசன் கேட்டுவிட்டு அவளை கவனித்த ராம்...அவள் புலம்புவதை கேட்டதும் “யாரை பற்றி சொல்கிறாய்” என சுவாரசியமாக கேட்க

“எல்லாம் அந்த பிதாமகனைதான்” என சொல்ல

“ பிதாமகனா என திகைத்தவன் பின்னர் யாரு மகாபாரதத்துல வராரே அவரா” என அவன் கேட்டான்.

“இல்லை..இல்லை ராம்........ பாலா படம் எடுத்தாருள...அதுல வருமே விக்ரம் கேரக்டர் அது என்றவள்...அதே கோபம் முசுடு,எல்லாம்” என சொல்ல

“அஹஹஹா என சிரித்தவன் இப்படி உன்னால் புகழப்படும் ஆள் யாரு ரோஜா” என அவன் கேட்க

“எல்லாம் நீ கொண்டு போய் சேர்த்து விட்டிங்களே அந்த வக்கீல் ராகதேவனைதான் சொல்கிறேன்” என அவள் முகத்தை சுளித்தபடி சொன்னாள்.

அதிர்ச்சியில் போனை பார்த்தவாறு ராம் திகைத்து நிற்க போனில் எதிர்புறம் இருந்த தேவாவோ கோபமும் சிரிப்பும் சேர்ந்து வர

“ஹலோ..ஹலோ” என தேவா போனில் காத்த...

ராம் உடனே “தேவா...சாரிடா....எல்லாமே கேட்டுவிட்டாயா ..........சின்ன பொண்ணு தெரியாம பேசிட்டா” என கெஞ்ச

“ஒன்னும் பிரச்சனை இல்லை ராம்...நான் பார்த்துகிறேன்...நீ கவலை விடு...சரி நாளை அலுவலகம் வா பேசிக்கொள்ளலாம்” என சொல்லி கொண்டிருக்கும்போதே

“ராம் ரொம்ப பசிக்குது....யாருகூட கடல போட்டுட்டு இருக்க...சீக்கிரம் செஞ்சு எடுத்திட்டு வா” என ரோஜா கூப்பாடு போட்டு கொண்டிருந்தாள்.

“சரி ராம் நீ வேலையை பாரு...நான் பிறகு உன்னிடம் பேசுகிறேன் “ என சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்தான் தேவா.

இங்கு தனியாக தன் அறையில் கேஸ் கட்டுகளை பார்த்து கொண்டிருந்த தேவாவிற்கு அவளது கிண்டல் பேச்சு மீண்டும் மீண்டும் காதில் ஒழிக்க முதலில் இவளை அடக்கவேண்டும்.......என்ன பெண் இவள் என நினைத்தவன் அதே நேரத்தில் அவள் தன்னை சிங்கத்துக்கும் சிறுத்தைகுமா பெற்றார்கள் என சொன்னதை நினைத்தவன் கண்ணாடி முன் சென்று நின்று நாம் அப்படியா இருக்கிறோம் என அவன் பார்க்க ஒரு நிமிடம் அவனே அதிர்ந்து போனான்.

ஏனெனில் இதற்க்கு முன் யார் எப்படி பேசினாலும் கண்டுகொல்லாதவன் இப்போது ஒரு சிறு பெண் பேசியதை மனதில் வைத்து இப்படி நம்மை நாமே சரிபார்த்து கொள்வதா...அந்த அளவுக்கு நான் மாறிவிட்டேனா என நினைத்தவன் அவன் மேலே அவனுக்கு கோபம் வர ........ எல்லாம் இந்த ரோஜாவால் வந்தது...இவளிடம் இன்னும் கடுமையாக நடந்து கொள்ளவேண்டும்...அப்போதுதான் அவள் திமிர் குறையும் என அவன் செய்த காரியத்திற்கு அவள் மேல் குறை சொல்லி தன்னை நியாயபடுத்திகொண்டான்.

இதுதானே மனிதமனம்......தனக்குள்ளே ஒரு வட்டம் போட்டுகொண்டு அதில் வாழ்பவர்கள் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிகொல்லாமல் அதனால் பிரச்சனை வரும்போது அதற்க்கு மற்றவர்கள் தான் கரணம் என் அவர்களின் மேல் பழி போட்டு தான் தப்பித்து கொள்ள நினைப்பார்கள்.வெளியே வேண்டுமானால் அப்படி நடிக்கலாம்...ஆனால் உண்மை ஒரு நாள் கண்டிப்பாக வெளிவரும்.

ரோஜாவின் மணம் இராகதேவன் என்ற அசையாத தூணையும் ஒரு நிமிடம் அசயவைத்துவிட்டது.இதை அறியாதே அந்த இளம் மலரோ ஆப்பத்தை ஒரு பிடி பிடித்து கொண்டிருந்தது.





கலைந்து செல்லும் மேகங்கள்
தொலைந்து விடுவதுமில்லை!
வளைந்து செல்லும் நதிகள்
அழிந்து விடுவதும் இல்லை !
வீசும் தென்றல் காற்று
மறைந்து விடுவதுமில்லை !

அதுபோல் ஆசையில்லா மனிதன்

எவனும் இல்லை

சூழ்நிலை வரும்பொழுது பலரது

சுயரூபம் வெளியே வரும்....

இந்த இயற்கையின் சூட்சமத்தை

புரிந்து கொண்டவர்களுக்கு

இதில் வியப்பதற்கு எதுவும் இல்லை....