• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் - 5

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
அத்தியாயம் -5



மறுநாள் ராமின் அம்மா வந்து விட அத்தையை பார்த்த சந்தோசத்தில் அவரிடம் சிறிது நேரம் அளவளாவிவிட்டு தாமதமாக அலுவலகத்திற்கு வந்தாள் ரோஜா .

உள்ளே நுழைந்தவள் “ஹாய் பட்டாபி குட் மார்னிங்” என சொல்லிவிட்டு தனது இருக்கையில் அமர்ந்தாள்.

அவளை பார்த்ததும் சுற்றும் முற்றும் பார்த்த பட்டாபி....”ஹே ரோஜா மணி என்ன .....இவ்வளவு தாமதமா வர்ற ....இப்பதான் சார் உன்னை காணோம்னு கேட்டு உள்ளே போறார்......ஏற்கனவே உன் மேல் ரொம்ப நல்ல அபிப்ராயம் அவருக்கு...அதில் நீ இப்படி எல்லாம் வந்தால் உன்னை சீக்கிரம் வேலை விட்டு அனுப்பிவிடுவார்” என அவளிடம் அவன் கவலையாக சொல்ல

அதற்குதானே நானும் காத்திருக்கிறேன் என மனதில் நினைத்தவள் ....அதை வெளிக்காட்டி கொள்ளாமல் “அது ஒன்றும் இல்லை பட்டாபி ,.......நேற்று ஒரு சூப்பர் படம் பார்த்தேன்.......அதுல வர மெயின் கேரக்ட்டர் நம்ம சார் மாதிரியே இருந்தது.......சூப்பரா இருந்தது........அதுனால காலையில் எழுந்தரிக்க தாமதமாகிடுச்சு என்றாள்” அவள்.

“அப்படியா ....என்ன படம் அது...எப்படி நம்ம சார் மாதிரி வக்கீல் கேரக்டரா” என அவன் ஆர்வமுடன் கேட்க

“வக்கீல்னு சொல்லமுடியாது.....ஆனா மெயின் கேரக்டர் அதுதான்” என்றாள்.

“அப்படி என்ன படம் ரோஜா...சொல்லு நானும் பார்க்கிறேன்.......நம்ம சாரையும் பார்க்க சொல்லலாம் .....அப்போதாவது நம்மல பற்றி அவருக்கு நல்ல அபிப்ராயம் வருமல்ல” என அவன் ஆசையுடன் கேட்க

“ம்ம்ம்ம்...சொல்லலாம்.....கண்டிப்பா அவர் பார்க்க வேண்டிய படம் தான்.....கிங்காங் பார்ட் 2 தான் அது” என அவள் சிரிக்காமல் சொல்ல

“என்னது கிங்காங் பார்ட் 2 வா என அசால்ட்டாக கேட்ட பட்டாபி எங்கே கேட்ட மாதிரி என சொல்லி முடிக்கும்முன்பே அவனுக்கு கிங்காங் படம் நியாபகம் வர அவளின் நக்கலை புரிந்து கொண்டவன் ரோஜா உன்னஈஈஈஇ” என அவள் மேல் கையில் இருந்த பேனாவை எறிய அதை இன்னொரு கை கேட்ச் பிடிக்க இருவரும் திரும்பி பார்க்க,அங்கு தேவா நின்று கொண்டிருந்தான்.

அவனை பார்த்ததும் பதட்டத்தில் பட்டாபி வேகமாக எழுந்திரிக்க .......ரோஜாவோ தலை குனிந்தபடி கைகளை பிசைந்த படி மெதுவாக எழுந்தாள்.

அவளையே சிறிது நேரம் பார்த்து கொண்டிருந்தவன் பட்டாபியிடம் திரும்பி ......”.பட்டாபி இன்னைக்கு நீ என்னுடன் நீதிமன்றம் வருகிறாய்......மற்ற வேலைகள் எல்லாம் இந்த பெண்ணிடம் ஒப்படைத்து விடு...ஆனால் நான் சொன்ன நேரத்திற்குள் எனக்கு இந்த டாக்குமென்ட் வேணும்” என்றான்.

“சார்ர்ரர்ர்ர் என இழுத்த பட்டாபி ......டைப் பண்றது நிறையா இருக்கு.......இரண்டு பேரும் சேர்ந்து செய்தால் கூட முடிக்க முடியாதுன்னு நீங்க தான் சொன்னீங்க.......இப்போ ரோஜா மட்டும் எப்படி சார்” என அவன் இழுக்க

“நீ என்கிட்டே வேலை பார்க்க வந்தாயா ....இல்லை அந்த பெண்ணிடமா......யாருக்கு என்ன வேலை கொடுப்பது என்று எனக்கு தெரியும்......இது தான் உனக்கு கடைசி எச்சரிக்கை....இனி என் வார்த்தைக்கு மறு வார்த்தை பேசாதே.....என்னிடம் வேலை பார்ப்பவர்கள் அனைவர்க்கும் இது பொருந்தும்” என சொல்லிவிட்டு அவன் வேகமாக வெளியே சென்றான்.

எல்லாவற்றையும் ரோஜாவிடம் கொடுத்து விட்டு “உன்னால் முடிந்த அளவு செய் ரோஜா ........பின்னர் நான் மாலை வந்ததும் நானும் சேர்ந்து உனக்கு உதவி செய்கிறேன்.....சீக்கிரம் முடித்து விடலாம்” என அவளுக்கு ஆதரவாக சொல்ல

அவளோ ஏதும் பேசாமல் கோபமாக தேவா சென்ற திசையையே பார்த்து கொண்டிருந்தவள் .....”பெரிய இவன்.....நாங்க செய்யமாடோமோ .......நீ கொடு பட்டாபி......மதியத்துக்குள்ள இந்த வேலையை நான் முடித்து வைக்கிறேன் என ரோசமாக சொன்னவள் நீ சீக்கிரம் வந்து விடுவாய் இல்லயா” என கேட்டாள்.

“கண்டிப்பாக ரோஜா......நான் வேலை முடிந்ததும் சாரிடம் சொல்லிவிட்டு வந்து விடுகிறேன்.......கண்டிப்பாக உனக்கு உதவி செய்கிறேன்....எனக்காக நீ எவ்ளோ செஞ்சிருக்க.......இத செய்ய மாட்டேனா” என அவன் உணர்ச்சி பெருக்கோடு சொல்லி கொண்டிருக்க

“அதெல்லாம் அப்புறம் செய்யலாம்....... வரும்போது மறக்காம இரண்டு முட்டை பப்ஸ் , ஒரு சாண்ட்விட்ச் அப்புறம் ஒரு டொரினோ வாங்கிட்டு வந்திடு” என சொல்ல

கேட்ட பட்டாபியோ...”உன்னை எல்லாம் என தலையில் அடித்து கொண்டு சரி வாங்கி வருகிறேன்”என சொல்லிவிட்டு கிளம்பினான்.

ரோஜா சொல்லிவிட்டாளே தவிர அவளால் சொன்ன நேரத்திற்குள் அதை முடிக்க முடியவில்லை.மதிய உணவு கூட அவள் உண்ணவில்லை.....வேலையிலே கவனமாக இருந்ததால் தேவா இருமுறை அலுவலகம் வந்து சென்றது கூட அவளுக்கு தெரியவில்லை.கொடுத்த வேலையில் பாதிக்கு மேல் முடித்தவள் அதற்க்கு மேல் முடியாமல் நிமிர்ந்து நேரத்தை பார்க்க அது இரவு ஏழு மணி காட்டியது.ஆறு மணியோடு வேலை நேரம் முடிந்துவிடும்.தேவா இன்னும் வரவில்லை......அதனால் அவள் இருப்பதை எல்லாம் சரிபடுத்திவிட்டு மீதம் இருப்பதை நாளை நேரமே வந்து முடித்துவிடலாம் என முடிவு செய்து ஆபிஸ் பாய் மணியிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள்.

அவள் பையை எடுத்து தோளில் மாட்டவும் தேவா உள்ளே வரவும் சரியாக இருந்தது.பட்டாபியை காணவில்லை.அவளை பார்த்து கொண்டே அவன் நேராக தன் அறைக்குள் செல்ல...அவளோ உள்ளே செல்வதா வேண்டாமா என யோசனையுடன் நிற்க தேவாவும் இவளை அழைக்கவில்லை.இவளும் உள்ளே செல்லாமல் பத்து நிமிடம் வெளியே நின்று கொண்டிருந்தாள்.

பின்னர் ஒரு முடிவுடன் உள்ளே சென்றவள் தான் செய்து முடித்த வேலையை அவன் முன் வைத்தவள்........”சார் எல்லாம் முடித்து விட்டேன்....இன்னும் கொஞ்சம் இருக்கிறது....காலை நேரமாக வந்து முடித்து விடுகிறேன் என கூறிவிட்டு “எங்கே இருந்தால் ஏதாவது சொல்லிவிடுவானோ என்று வேகமாக நகர

“நான் சொன்ன வேலையை முடித்து விட்டு நீங்கள் செல்லாலாம் ரோஜா” என அவன் அமைதியாக அழுத்தமாக சொன்னான் .

நின்று அவனை நிமிர்ந்து பார்த்தவள் “எனக்கு வேலை நேரம் முடிந்து விட்டது சார்” என்றால் நிதானமாக

“அப்போ காலையில் நீங்கள் வேலை நேரம் ஆரம்பிக்கும்போது வந்திருந்தால் இப்போது நீங்கள் சொல்வது பொருந்தும்” என அவனும் அதே போல் சொல்ல

அவள் ஏதும் பேசாமல் அமைதியாக தலை குனிந்து நின்றாள்.

அவளையே பார்த்தவன் எப்போதும் களையாக இருக்கும் அவளது முகம் இன்று வாடி வதங்கி இருக்க,முகத்தில் சோர்வு தெரிய.........துவண்டு போய் நின்று கொண்டிருந்தாள்.அவனுக்கும் இது ஒருவரால் செய்ய முடியாத வேலை என்று தெரியும்...ஆனால் காலையில் அவள் பேசியதை கேட்டவன் கோபம் வர இந்த முடிவு எடுத்தான்.

“எனக்கு நேரம்,உண்மை,கடமை இது மூன்றும் முக்கியம்....நானும் இதில் இருந்து தவறமாட்டேன்...என்னிடம் இருப்பவர்களும் இதில் தவற விடமாட்டேன்......அதை மீறி செய்தால் என நிறுத்தியவன் அதான் உங்களுக்கே தெரியுமே என்றவன் வெளியே சிறிது நேரம் இருங்க.......செய்த வேலையில் ஏதாவது பிழை இருக்கிறதா என பார்த்து சொல்கிறேன்” என சொல்லி அவளை வெளியே அனுப்பியவன் பின்னர் ஆபிஸ் பாய் அழைத்து காரில் இருந்து ஒரு பையை எடுத்து வர சொன்னவன் அதை ரோஜாவிடம் கொடுக்க சொன்னான்.

ஆபிஸ் பாய் கொண்டு வந்து கொடுத்ததும்...”என்ன இது” என அவள் கேட்க

“தெரியலை மேடம்...... ........ சார் உங்ககிட்ட கொடுக்க சொன்னார்” என்றான்.

“யாரு பட்டாபியா “என அவள் கேட்க

அவன் சொல்லுமுன் தேவா அவனை அழைக்க அவன் தலை ஆட்டியபடி சென்றுவிட்டான். பட்டாபி தான் வாங்கி தந்திருப்பான் என நினைத்து கொண்டு பசி வேறு வயிற்றை கிள்ளியதால் வேகமாக பிரித்து சாப்பிட்டாள்.

அவள் முடிக்கவும் ,தேவா அழைக்கவும் சரியாக இருந்தது.நல்லவேளை இவன் பார்க்கலை ....இல்லை இதற்கும் சேர்த்து திட்டி இருப்பான் என நினைத்து கொண்டே உள்ளே சென்றாள்.

“ம்ம்ம்ம் எல்லாம் சரியாக இருக்கு.....நாளைக்கு நேரமாக வந்து முடித்துவிடு...இனி ஒரு முறை அலுவலகத்திற்கு தாமதமாக வந்தால் என நிறுத்தியவன் அவள் முகத்தை உற்று பார்த்து வரமாட்டாய் என்று நினைக்கிறன் என சொன்னவன் சரி...சரி...நீ கிளம்பு” என்றான்.

முகத்தில் கோபம் கொந்தளிக்க வீட்டிற்கு வந்தவள் அவள் உள்ளே நுழையும் முன்பே அவளது பை உள்ளே வர வரவேற்ப்பறையில் அமர்ந்திருந்த ராமின் தாயார் திரும்பி பார்க்க...வேகமாக உள்ளே வந்தவள் அப்படியே அங்கு இருக்கும் சோபாவில் படுத்து கொண்டாள்.

அவளது முகத்தை பார்த்தே புரிந்து கொண்ட காவேரி ராமின் தாயார் வேகமாக உள்ளே சென்று அவருக்கு டீ போட்டு எடுத்து வந்தார்.

“ரோஜா ...ரொம்ப களைப்பா இருக்கா....இந்த டீ கொஞ்சம் சாப்பிடு .......மாத்திரை ஏதாவது வேண்டுமா?” என்றார்.

“இல்லை அத்தை எனக்கு ஏதும் வேண்டாம்....என்னால் முடியவில்லை....தலை ரொம்ப வலிக்கிறது” என முனகியவள் அப்படியே சுருண்டு படுத்து கொண்டாள்.

அதை கேட்டதும் பதறிய காவேரி.....”ஏன் ரோஜா என்ன ஆச்சு?உடம்பு சரியில்லையா......காலையில் நன்றாகத்தானே அலுவலகம் சென்றாய் .....இப்போ என்ன ஆச்சு” என பதட்டத்துடன் கேட்டாள்.

“ம்ம்ம்ம் என அனத்தியவள் எல்லாம் அவன்” என சொல்லி முடிக்கும் முன்பே அப்படியே உறங்கிவிட காவேரி அவளை தொந்தரவு செய்யாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.

இரவு சற்று தாமதமாக வந்த ராம் ....”என்னம்மா வரவேற்பறையை படுக்கை அறையாக மாற்றி விட்டாளா இந்த வாலு என கிண்டலாக சொல்லி கொண்டே ரோஜாவின் அருகில் அமர்ந்தான்.பின்னர் ஹே ரோஜா எழுந்திரு என அவளை எழுப்பியவன் அவள் அசைவற்று இருக்கவும் பதறி ரோஜா........ ரோஜா “என அவளை உலுக்க அவளிடம் எந்த பதிலும் இல்லை.

“அம்மா ....அம்மா “என அவன் கத்த

சமையல் அறையில் இருந்த காவேரி “ஏண்டா கத்தர” என கேட்டு கொண்டே வேகமாக வந்தார்.

“என்னம்மா ஆச்சு இவளுக்கு....எப்ப இருந்து இப்படி இருக்கா” என வாய் கேள்வி கேட்க ,கைகளோ அவளை உலுக்கி கொண்டிருந்தது.

“ஏண்டா என்ன ஆச்சு.....அச்சோ தலைவலிக்கிறது என்று தான் சொன்னால்....நான் டீ போட்டு கொடுத்தேன்....அதையும் குடிக்கவில்லை...உறங்கிவிட்டாள்......சாப்பாடும் மதியம் கொண்டு சென்றது அப்படியே இருக்கிறது இப்பதான் பார்த்தேன்.........என்னடா” என பயந்து போய் கேட்க

“என்னம்மா நீங்க....அவள் தலைவலி என்று சொன்ன உடனே எனக்கு போன் செய்து இருக்கலாம்ல...அவளுக்கு தலைவலி வரகூடாது என்று உங்களுக்கு தெரியாதா “என பதட்டத்தில் அவன் படபடவென பேச

“ஏன் ராம்....அவளுக்கு தலைவலி வரக்கூடாதா....அப்படியா .... எனக்கு தெரியாதே” என அவள் வேகமாக சொல்ல...அப்போதுதான் ராம்க்கு தான் உளறியது புரிந்தது.தனது அன்னைக்கும் சில விஷியங்கள் தெரியாது என்பதை மறந்து உளறிவிட்டான் .

சட்டென்று “இல்லம்மா ....இவளுக்கு தலைவலி வந்தாள் சீக்கிரம் சரி ஆகாது.....ஐந்து நாட்கள் படுத்து விடுவாள் ....அந்த வலிகூட தாங்கமுடியாத வாழைபழ சோம்பேறி உங்கள் செல்ல மருமகள் அதற்குதான் சொன்னேன் என அப்படியே பேச்சை மாற்றியவன் ........நான் இவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறேன்” என கூறிவிட்டு வேகமாக அவளை தூக்கி கொண்டு நடந்தான்.”ராம் நான் வரட்டுமா” என அவன் அன்னை கேட்டது கூட அவன் காதில் வாங்கி கொள்ளவில்லை.

மருத்துவமனையில் அவளை பரிசோதித்த மருத்துவர் .....”பயப்படும்படி எதுவும் இல்லை...........ரொம்ப நேரம் வேலை செய்து இருப்பார்கள் போல் தெரிகிறது.......மேலும் சாப்பிடவும் இல்லை போல் தெரிகிறது.......திடீரென்று கண்களுக்கும் ,மூளைக்கும் அதிக வேலை கொடுத்ததால் இந்த மாதிரி ஆகிவிட்டது....மேலும் “என நிறுத்தி ராமின் முகத்தை மருத்துவர் பார்க்க

அவன் “ஆமாம் டாக்ட்டர் ........முன்பு ட்ரீட்மென்ட் எடுத்து இருக்கிறோம்....ஆனால் இப்போது எதுவும் தொந்தரவு இல்லை .......அதிகம் யோசிக்கவேண்டாம் என்று மட்டும் எங்கள் மருத்துவர் சொன்னார்” என்றான்..

“ஆம்....அதான் இனியும் இவள் இதே போல் கடினமான வேலை செய்தால் மறுபடியும் இப்படி வரும்........அதனால் கவனமாக இருங்கள்......முடிந்தால் வேலைக்கு அனுப்பாமல் இருந்தால் நல்லது” என்றார்.

அவன் சரி என்று சொல்ல அதற்குள் ஒரு பாட்டில் குளுகோஸ் ஏறிய உடன் ரோஜாவிற்கு நினைவு திரும்ப கண் முழித்து பார்த்தவள் மருத்துவமனயில் இருப்பதை பார்த்ததும் முகம் இருள,கண்கள் அங்கும் இங்கும் அலைபாய” ராம்....ராம்......நான் இங்கு எப்படி வந்தேன்” என கத்தினாள்

அவளது சத்தத்தை கேட்டு பேசிகொண்டிருந்த ராம் உள்ளே வர கூட மருத்துவரும் வர அவளோ” ராம் என்னை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த ....மறுபடியும் ஆரம்பிச்சுட்டியா” என அவள் சத்தம் போட

அவள் அருகில் வந்தவன் ....”ஒண்ணுமில்லை ரோஜா......சும்மா தலைவலிக்கு பார்க்க வந்தோம்...கிளம்பிடலாம்” என பொறுமையாக சொன்னான்.

“முதல்ல நீ இங்க எதுக்கு கூட்டிட்டு வந்த “என மீண்டும் அவள் அதேயே திரும்ப கேட்டாள்..

“ரோஜா ஷட் அப் என அதட்டல் போட்டவன் ,டாக்டரிடம் திரும்பி சரி டாக்டர் நாங்க கிளம்பறோம்......நீங்க கொடுத்த மருந்தை தவறாம கொடுத்தறேன்” என சொல்லிவிட்டு அவளை அழைத்து கொண்டு கிளம்பினான்.

வீட்டிற்கு வரும்வரை அவள் முனகிகொண்டே வர ராம் எதுவும் பேசவில்லை.

உள்ளே நுழைந்ததும் காவேரி “என்ன ஆச்சு ராம்.......டாக்டர் என்ன சொன்னாங்க” என கேட்க

“அத்தை எனக்கு ஒண்ணுமில்லை என அவரின் அருகில் சென்று தோள் சாய்ந்தவள் தனக்கு மகள் இல்லாத குறையை இவளை கொண்டு ஆறுதல் அடைந்த காவேரி அவள் அப்படி சாய்ந்ததும் தாயன்புடன் அவளை அணைத்தவள் ....உனக்கு எதுவும் வராது செல்லம் என சொல்லியவள் ...சரி...சரி ...நீ களைப்பாக இருப்பாய்.....சென்று படுத்துகொள்” என அவளை அனுப்பிவிட்டு மகனின் முகம் பார்க்க

அவனோ தீவிரமான சிந்தனயில் ஆழ்ந்திருந்தான்.

அவன் அருகில் வந்து அமர்ந்தவள் “என்ன ராம்.......எதவாது பிரச்சனயா” என கேட்க

“இல்லம்மா....... சரியாக சாப்பிடததனால் வந்த தலைவலின்னு டாக்டர் சொல்லிட்டார். நீங்க போய் படுங்க” என சிரித்துகொன்டே அவளையும் அனுப்பி வைத்தான்.

அங்கு ரோஜா மருந்தின் உதவுடன் தன்னை மறந்து உறங்க,காவேரியோ அவளுக்கு ஏதும் பிரச்சனை இல்லை என தெரிந்து நிம்மதியாக தூங்க ராமின் நிலையோ தூங்கா இரவானது.



கடந்து போன நினைவுகள்

மனதை விட்டு மறையவேண்டும் என

மனிதன் நினைக்கிறன்.

ஆழமாக பதிந்துவிட்ட வடுக்கள்

நேரம் வரும்போது நினைவுகளை

தட்டி எழுப்புவதை

தவிர்க்கத்தான் முடியுமா என்ன ????????
 
  • Like
Reactions: Kajol Gajol

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,121
679
113
Ariyalur
அட கடவுளே ரோஜாவுக்கு என்ன தான் நடந்தது இப்படி secret ஆவே writer கொண்டுபோறீங்க 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔