• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் - 7

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
அத்தியாயம் -7



உதவி என்பது எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யும்போது செய்தவர்கள் மறந்துவிடலாம்......ஆனால் உதவி பெற்றவர்கள் மறக்கமாட்டார்கள்......அதும் தன் தாயை போல் அன்பு காட்டிய உள்ளத்தை யாரும் மறக்க முடியுமா என்ன ?

அப்போது தேவா தேனியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்தான்....அவன் வாலிபால் பிளேயர் .....அதே போல் ராமும் வாலிபால் பிளேயர் ......... ஒரு முறை வாலிபால் பயிற்சிக்காக ஒரு வாரத்திற்கு பல பள்ளிகளில் இருந்து மாணவர்கள் சேலத்தில் ராம் படிக்கும் பள்ளிக்கு வந்து இருந்தனர்........ அதில் தேவாவும் ஒருவன். விளையாட்டு பயிற்சியின் போது கீழே விழுவதும் அடிபடுவதும் இயல்பான ஒன்று.......அப்போது அருகில் இருப்பவர் ஓடி வந்து உதவி செய்வார்கள்.....பெரும்பாலும் ஒவொவொரு மாணவர்களுடன் குடும்ப உறுப்பினர் ஒருத்தர் இருப்பதால் அவர்கள் குழந்தைகளுக்கு அவர்களே பார்த்து கொள்வர்......ஒருமுறை தேவாவிற்கு அடிபட அவனுடன் யாரும் வராத காரணத்தினால் உதவி செய்ய யாரும் முன்வரவில்லை......அனைவரும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க காவேரி தான் ஓடி சென்று அவனை அழைத்து வந்து முதல் உதவி செய்தவர் ...அவனது களைப்பு தீர பழசாறும் கொடுத்தார்.பின்னர் அன்புடன் “ஏன் தம்பி வீட்டில் இருந்து யாரும் வரவில்லையா” என கேட்டார்.

எதுவும் சொல்லாமல் தலை குனிந்த தேவா பின்னர் மெதுவாக “எனக்கு யாரும் இல்லை” என்றான். சொல்லும்போதே அவன் முகம் வேதனையில் சுருங்க அதை கண்டதும் காவேரி “ தம்பி நீ கவலைபடாதே நான் இருக்கிறேன்...உனக்கு என்ன வேண்டுமானாலும் என்னை கேள்......நான் உன் அம்மா மாதிரி....தயக்கம் வேண்டாம்” என சொன்னவர் அதற்க்கு பின்பு இருந்த ஒரு வாரத்திற்கும் ராம்க்கு என்ன எடுத்து வருவாளோ அதே தேவாவிர்க்கும் சேர்த்து எடுத்து வந்தார்.

ராம் சரண் கூட அம்மாவை திட்டினான்....”கொஞ்சம் விட்டால் நீங்கள் அவனை தத்து எடுத்து கொள்விர்கலாட்ட இருக்கே என சொன்னவன் எதையும் அளவோடு நிறுத்தி கொள்ளுங்கள்” என்றான்.ஆனால் காவேரி அதை கண்டு கொள்ள வில்லை. அவன் தாயின் அன்பு பிரிக்கபடுகிறதே என்ற கோபம் அவனுக்கு...

பின்னர் கேம்ப் முடிந்ததும் ஒரு சில மேட்சுகளில் தேவாவும் ராம் சரணும் சில போட்டிகளில் சந்தித்து கொண்டனர்.....அப்போது காவேரி வந்திருந்தால் அவரை எங்கு பார்த்தாலும் தேவா ஓடி சென்று பேசுவான். அதன் பின்னர் ராமுவை எங்காவது பார்த்தால் பேசும் அளவிற்கு நட்பு இருந்தது.பின்னர் அவர்கள் சந்திக்கும் வாய்ப்பு குறைய இரண்டு பேர்களின் வாழக்கை முறை,தொழில் மாறுபட சந்திப்பும் நின்று போனது.ஆனால் நீதிமன்றத்தில் ராமை எங்கு கண்டாலும் காவேரி அம்மாவை பற்றி விசாரிப்பான் தேவா... எட்டு வருடங்களுக்கு பிறகு தேவாவை பார்ப்பதால் காவேரிக்கு சட்டென்று அடையாளம் தெரியவில்லை......ஆனால் தேவா கண்டுபிடித்து விட்டான்.

தேவா சொன்னதும் நினைவிற்கு வர “அட ஆமா.....தேவா எப்படி இருக்க.....அப்போ ஒல்லியா நெடுநெடுனு ஓட்டடைகுச்சி மாதிரி இருந்த ,,,இப்போ ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி போய்விட்டாய் என பாசத்துடன் சொன்னவர் ......தேனியில் தானே படித்து கொண்டிருந்தாய்......சென்னை எப்போது வந்தாய் ......இப்போ என்ன வேலை பார்த்து கொண்டு இருக்கிறாய் .....இன்னும் வாலிபால் போட்டிக்கு போகிறாயா” எனவரிசையாக கேள்வி கேட்க

தேவா சிரித்துகொண்டே “நான் நல்லா இருக்கேன்மா......நீங்க எப்படி இருக்கீங்க......கல்லூரி படிப்பு எல்லாம் இங்குதான் முடித்தேன் அம்மா........உங்களை அடிகடி நினைத்து கொள்வேன்........ அதுவும் ராம்சரண் IPS முடித்து சென்னைக்கு வருகிறான் என்று கேள்விபட்டதும் எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது...... தொழில் விஷயமாக ராமை அடிகடி பார்ப்பேன்........அப்போதுதான் நீங்கள் வரவில்லை...ஊரிலே இருந்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டீர்கள் என ராம் சொன்னான்.ராமிடம் உங்களை பற்றி விசாரித்து கொள்வேன் என்றவன் ஆமாம் உங்களுக்கு உடலை நிலை சரியில்லை......நடக்கவே முடியவில்லைன்னு சொன்னாங்க.......நீங்க எதற்கு கடைக்கு வந்திங்க?” என்றான்.

“எனக்கு உடம்பு சரியில்லையா ?இல்லையே யார் சொன்னது? அப்படியே இருந்தாலும் எங்க வீட்டில் இப்போது என் செல்ல மருமகள் வந்து இருகிறாள்.என்னால் ஓய்வு எடுக்க முடியுமா என்ன..........இன்று கூட ரொமாலி ரொட்டி பன்னீர் பட்டர் மசாலா வேணும்னு சொன்னாள் என்று எல்லாம் தயார் செய்து வைத்து விட்டுதான் வந்தேன் என சிரித்து கொண்டே சொல்லவும்...அவன் முகத்தை சுளித்தபடி யோசிக்க ...அந்த நேரத்தில் இடி இடிக்கவும் உடனே ...என்னம்மா மழை வர மாதிரி இருக்கு......நீங்க எப்படி வீட்டிற்கு செல்வீர்கள் “ என அவன் கவலையாக கேட்க

“அதான் தேவா நானும் யோசிக்கிறேன்......இந்த பொண்ணு எங்க நான் சொன்னாள் கேட்கிறாள் “ என சொல்லி கொண்டிருக்கும்போதே “அத்தை” என அழைத்து கொண்டே ரோஜா அங்கு வர தேவா காவேரியை பார்த்து நின்று கொண்டிருந்தான் அவனது முதுகு மட்டுமே அவளுக்கு தெரிய....இங்க பாருங்க பானி பூரி,ஐஸ் கிரீம் ,பஞ்சுமிட்டாய்” என கைகள் நிறைய எல்லாவற்றையும் வைத்து கொண்டு அவள் சந்தோசமாக சொன்னாள்.

“ஏன் ரோஜா மழை வர மாதிரி இருக்கு....சீக்கிரம் கிளம்பலாம்னு சொன்னா நீ என்ன இத்தனை வாங்கிட்டு வந்திருக்க” என அவர் சிடுசிடுக்க

“ஏன் அத்தை கோபபட்ரிங்க.......மழையில் நனைந்தால் ஒன்னும் கரைஞ்சிடமாட்டோம்.......உங்க வயசுல எல்லாரும் உலக சாதனையே பண்றாங்க ....நீங்க என்னடானா இந்த மழைக்கு போய் பயந்துகிட்டு....சரி...சரி வீட்ல சாப்பாடு தயாரா இருக்குள்ள ......அதுக்காக உங்களை கூட்டிட்டு போறேன் ....எங்க இந்த மாம்ஸ் காணோம் “என சொல்லி கொண்டே தீனியை அத்தை கையில் கொடுத்து விட்டு அலைபேசியை எடுக்க கீழே குனிந்தாள் .

“இவதான்பா என் மருமகள் ரோஜா” என காவேரி சொல்ல ....அவருக்கு தெரியாது தேவாவிடம் தான் இவள் ஜூனியராக இருக்கிறாள் என்று .......அதனால் அறிமுகம் செய்து வைத்தார்.

உடனே அவன் சிரித்து கொண்டே அவளை பார்க்க ...ரோஜாவோ முதலில் அதை கவனிக்காமல் ஒரு கையில் அலைபேசியும் இன்னொரு கையில் ஐஸ் கிரீமும் சாப்பிட்டு கொண்டு திரும்பி அவனை பார்த்தவள் அப்படியே அதிர்ச்சியில் சிலையாக நின்றாள்.. 1

அவள் திரு திருவென்று முழிக்க ,காவேரி அம்மாவோ “ரோஜா இவர் பெயர் தேவா....நமக்கு தெரிந்த பையன் என்றவள் ஆமாம் நீ என்ன வேலை பார்க்கிறாய் தேவா” என கேட்டார்.

உடனே தேவா “அதை உங்கள் மருமகளிடமே கேளுங்கள் அம்மா சொல்லுவாள்.....அதுவும் ரொம்ப மரியாதையாக சொல்வாள்” என நக்காலாக சொல்ல

அவளோ வாயில் வைய்த்த ஐஸ்கிரீம் கரைந்து உதட்டில் இருந்து வலிந்து கொண்டிருக்க.....அதை கூட உணராமல் முழித்து கொண்டு நின்று இருந்தாள்.

அதை பார்த்தது காவேரி ...”அச்சோ ரோஜா என்ன இது இப்படியா சாப்பிடுவ...பாரு கை வாய் எல்லாம் ஐஸ்கிரீம் என அவளை கடிந்து கொண்டவள் ...பின்னர் உனக்கு தேவாவை தெரியுமா” என்றார்.

அவளோ அதற்க்கு பதில் சொல்லாமல் அப்படியே நிற்க

ரோஜா என்னாச்சு உனக்கு என காவேரி அவளை உலுக்க...உடனே சுதாரித்தவள் ஹிஹிஹி தெரியும் அத்தை ...இவர்தான் என் சீனியர் பிதாமகன்...... அச்சோ இல்லை இராகதேவன்” என உளற

“ஓ நீ இவர்கிட்டதான் வேலை பார்க்கிறியா” என்றவர் .ஆனா நீ உன் சீனியர் ரொம்ப கோபக்காரன் அப்டின்னு ஏகப்பட்ட புகார் சொன்ன......நம்ம தேவா ரொம்ப நல்ல பையன் ஆச்சே” என அவர் ஆரம்பிக்க

அதற்குள் அவள் ஐஸ்கிரீம் வாய்க்குள் இருந்ததால் பேசமுடியாமல் வேகமாக “ம்ம்ம்ம் என இல்லை என்பது போல் தலையாட்ட வாயில் இருந்து வழிந்த ஐஸ்கிரீம் அவளது உடையில் விழுந்தது.......என்ன ரோஜா நீ என மீண்டும் அவளை கடிந்தவள் இப்படிதான் தேவா வளர்ந்தும் சின்ன பொண்ணு மாதிரியே நடந்து கொள்கிறாள்...... இன்னைக்கும் வீட்ல வந்து ஒரு வேலையும் செய்யலை....கிளம்பி வருவதற்கே இவ்வளவு நேரம் ஆகிடுச்சு....பாரு மழை வேற வருது” என அவர் அவள் மேல் புகார் கடிதம் வாசிக்க

“ஆஹா .....என்னோட இமேஜ் இந்த அத்தை மொத்தமா டேமேஜ் பண்ணுதே என மனதில் புலம்பியவள்...அதற்குள் அலைபேசி ஒழிக்க ...உடனே அத்தை வாங்க...வாங்க ராம் வந்திட்டான் போலாம்” என அவள் கையை பிடித்து இழுத்து கொண்டு நடந்தாள்.

அதற்குள் தேவா...”ஹலோ என விரலில் சொடக்கு போட்டு அவளை அழைத்தவன் போன் எனக்கு” என சொல்லி கொண்டே போனை எடுத்து காதில் வைத்தான்.

அதைக்கேட்டதும் சட்டென்று நின்றவள் மீண்டும் வழிந்துகொண்டே...”ஹிஹிஹி நான் மாம்ஸ் தான் கூபிட்றார்னு நினச்சேன் சார் “என சொல்ல ...காவேரி அவளை முறைக்க

ராம் மாம்ஸ் இந்த நேரம் பார்த்து இன்னும் காணோமே ..... இன்னும் கொஞ்ச நேரம் இருந்தோம்....நம்ம வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறிடுமே என அவள் மனதிற்குள் புலம்பி கொண்டிருக்க சரியான நேரத்தில் வந்து சேர்ந்தான் ராம்.

அதற்குள் இங்கு தேவா......”இல்ல குட்டிம்மா நான் இங்க தான் பேசிக்கொண்டு இருக்கேன்......இந்த பானி பூரி கடை அருகில இருக்கேன்.......நீ காரில் இருந்து இறங்கி இங்க வா உனக்கு முக்கியமான ஒரு நபரை அறிமுகபடுத்துகிறேன்” என அலைபேசியில் அழைப்பு விடுத்து கொண்டிருந்தான்..

அதற்குள் ராம் வந்துவிட பின்னர் சின்ன நல விசாரிப்புடன் ....”எனக்கு வேலை இருக்கு... நேரமாகிடுச்சு கிளம்பலாமா” என கேட்டான் ராம்.

“இதோ அவ்ளோதான் மாமா” என்றவள் கையில் அவள் ஆசையாக வாங்கி வைத்திருந்த பானி பூரியையும் தூக்கி போட்டுவிட்டு ரோஜா வேகமாக அவனுடன் நடையை கட்ட....

அதற்குள் தேவா “கொஞ்சம் இரு ராம்......எனது தங்கை வருகிறாள்....அம்மாவிடம் அறிமுகபடுத்தி விடுகிறேன்....பிறகு நீங்கள் கிளம்பலாம்” என சொன்னான்.

“உனக்கு தங்கை இருக்கிறாளா தேவா” என காவேரி ஆச்சிரியத்துடன் கேட்க

அதற்குள் ரோஜா ராமிடம் காதில் ஏதோ சொல்ல

உடனே ராம் “தேவா...எனக்கு நேரமாச்சு.... கிளம்பனும்... மழை வேற தூறுது இன்னொரு நாளைக்கு பார்த்து கொள்ளலாமே” என்றான்.

“அப்படியா ராம் என்றவன்...சரி என சொல்ல...தப்ப எடுத்துகாதே தேவா” என சொல்லிவிட்டு வேகமாக ராம் திரும்ப.....

சிலுசிலுவென மழைதூறளின் வெண்முத்துகள் முகத்தில் விழ ஒரு வெள்ளை முல்லை மலர் வெண்மேகத்தை குடையாக பிடிப்பது போல் தனது வெள்ளை துப்பட்டாவை பிடித்தபடி துள்ளி குத்தித்து ஓடிவர ..... அதை பார்த்த அவனின் விழிகளே நிலைகுத்தி போனது. கால்கள் நகர மறுக்க ,மூளை மரத்து போக, தன்னையே மறந்த நிலையில் அப்படியே நின்றான் .

பார்த்த விழி பார்த்தபடி

பூத்து இருக்க

காத்திருந்த காட்சி இங்க காண

கிடைக்க

என ஒரு பீஜியம் அவன் பின்னால் ஒழிக்க அந்த பாடலில் ஹீரோவின் மனநிலை எப்படியோ அப்படிதான் ராமின் மனநிலையும் இருந்தது.

அந்த முல்லைமலர் அருகில் வந்ததும் ....”வாடா குட்டிமா என அவளை அழைத்தவன்...அம்மா இவள் என் தங்கை ரதிதேவி” என அறிமுகபடுத்த இங்கு ஒருவனின் மனமோ அடுத்தடுத்த அதிர்ச்சியில் ஆடிப்போனது.

உடனே காவேரி “அப்படியா.......ரொம்ப அழகாக இருக்கிறாள் என்றவர் என்னம்மா படிக்கிறாய்” என கேட்க

“மருத்துவர் படிப்பு கடைசி வருடம் அம்மா” என தேவா பதில் சொன்னான்.

“அப்படியா...ம்ம்ம் எங்க ரோஜா கூட” என அவர் ஆரம்பிக்க

அதற்குள் ரோஜா “அத்தை” என வேகமாக கத்த

அனைவரும் அவளை திரும்பி பார்க்க சட்டென சுதாரித்தவள் ...”இல்ல ராம் போகணும்னு சொன்னான்...அதற்குதான் கூப்பிட்டேன் என்றவள் வாங்க அத்தை போகலாம்” என சொல்லிகொண்டே வேகமாக நடந்தாள்.

காவேரி பேசவும் அதை இடையில் ரோஜா தடுக்க உடனே தேவாவிற்கு கோபம் வர “இங்க பாரு ரோஜா நீ கிளம்பு .... அம்மா நான் உங்களை வீட்டில் கொண்டு வந்து விடுகிறேன்....அவர்கள் போகட்டும்” என வேகமாக சொன்னான்.

அவள் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றவள் பின்னர் அங்கு சிலையாக நின்றவனிடம் சென்று...”ராம் இந்த அத்தை புறப்படலாம்னு சொன்னா கேட்கமாட்டேன்கிறாங்க......நீ சொல்லு” என அவனை சப்போர்ட்டுக்கு இழுக்க

அவனோ ஏதும் பேசாமல் பார்த்து கொண்டே நிற்க

உடனே ரோஜாவிற்கு கோபம் வர..”டேய் நான் சொல்லிட்டு இருக்கேன்” என அவனை உலுக்கியவள் அவன் பார்வை சென்ற திசையை பார்க்க அது ரதியிடம் இருந்தது.

அந்த பெண்ணையும்,இவனையும் மாறி மாறி பார்த்தவள் ...ஆஹா இது நல்லதுக்கு இல்லையே என நினைத்தவள் ..மாமாஆஅ என கத்த

அப்போதுதான் ராம் நினைவுலகத்திற்கு வந்தான்...”ம்ம்ம்ம் என்ன ரோஜா” என சலிப்புடன் கேட்டான்.

அதற்குள் தேவா அவன் அருகில் வந்தவன் “ராம்...நீ கிளம்பு...நான் அம்மாவிடம் கொஞ்ச நேரம் பேசிவிட்டு பிறகு கொண்டுவந்து வீட்டில் விடுகிறேன்” என்றான்.

உடனே ராம்......”ஒன்னும் பிரச்சனை இல்லை தேவா...நம்ம எல்லாரும் சேர்ந்தே பேசலாம்.....வாங்க காபி ஷாப்க்கு போய் சாப்பிட்டுகொண்டே பேசலாம்” என்றான்.

“இல்ல ராம் உனக்கு ஏதோ வேலை இருக்குனு சொன்ன” என தேவா இழுக்க

“வேலையா...அது...அதூஊஉ என இழுத்தவன் இல்ல ஒன்றும் அவசரம் இல்லை ....... மெதுவாக போய் பார்த்து கொள்ளலாம் .....உன்னையும் அம்மாவையும் பிரித்த பாவம் எனக்கு எதற்கு என்றவன் வாங்க போலாம்” என எல்லாருக்கும் முன்பு நடக்க

அவன் சட்டையை பிடித்து யாரோ இழுக்க திரும்பி பார்த்தவன் ரோஜா அவனை எரிப்பது போல் பார்த்து கொண்டிருந்தாள்.

“ஏன் ரோஜா ....கவலைபடாத ...உனக்கு பிடிச்ச எல்லா தீனியும் வாங்கித்தரேன்” என சொல்ல

“மாம்ஸ் என்னை கொலைகாரி ஆக்கிடாத......ஏற்கனவே உங்க அம்மாவால் ஏகப்பட்ட டேமேஜ்ல இருக்கேன்....இப்போ இன்னும் மா...போதுமடா......அம்மாவும் மகனும் கதற...கதற அடிக்கிரிங்க...ரொம்ப வலிக்குது......அப்புறம் அழுதிடுவேன்... என கோபமாக ஆரம்பித்து இறுதியில் வடிவேல் போல் அழுகையில் முடிக்க”...அவனோ அதை கண்டுகொள்ளவே இல்லை.”பெரியவங்க சொன்ன கேட்கணும் ரோஜா ...சீக்கிரம் வா” என சொல்லிவிட்டு வேகமாக நடந்தான்.

எல்லாம் முடிந்து வீடிற்கு வந்தவள் முகத்தை உர்ரென்று வைத்து கொண்டு உள்ளே செல்ல காவேரியோ ,இல்லை ராமோ அதை கவனிக்கும் மனநிலையில் இல்லை....அவரவர்கள் நினைப்பில் மூழ்கி இருந்தனர்.

.

காலையில் எழுந்து அவள் அலுவலகம் கிளம்பி இருக்க சாப்பிட வந்த ராம் “ஹே ரோஜா என்ன முகம் ஒரு மாதிரியா இருக்கு என ஒன்றும் அறியாதவன் போல் கேட்டான்.

அடபாவி செய்யறது எல்லாம் செய்து விட்டு ......சீதைக்கு ராமன் சித்தப்பனானு கேட்கிறான் பாரு என முனகிகொண்டே ரோஜா அவனை முறைக்க

அவள் மைன்ட் வாய்ஸ் அவன் புரிந்து கொண்டு எதுவும் பேசாமல் தலைகுனிய

அங்கு வந்த காவேரி” ஏண்டி நேற்று எங்கோ ஊருக்கு போறேன்னு சொல்லி எல்லாம் வாங்கின.......இப்போ ஆபிஸ் கிளம்பிட்ட” என கேள்வி கேட்க

“என்னது ஊருக்கு போறியா” என ராம் அச்சிரியத்துடன் கேட்டான்.

கையில் வைத்திருந்த சப்பாத்தியை அப்படியே கோபத்தில் அவன் மீது தூக்கி எறிந்தவள்.....”எங்க போறது....அதான் நீயும் உங்க அம்மாவும் மொத்தமா என்னை பத்தி அந்த பிதாமகன்கிட்ட போட்டு கொடுத்துடிங்கலே என்றவள் நேற்று ஆபிசில் நடந்ததை மறைக்க வேண்டியதை மறைத்து சொல்ல ....நல்ல நேரத்திலே அவன் என்னை கண்டாலே நர்த்தனம் ஆடுவான்....இப்போ ருத்ரதாண்டவமே ஆடுவான் என்றவள்...குட்டு வெளிபட்டுடுச்சு அதான் ஆபீஸ்க்கு போறேன் என சோகமாக சொன்னவள் இன்னைக்கு எனக்கு கச்சேரி உறுதி “என புலம்ப .

“ஹே ரோஜா இரு நான் வேண்டுமானால் வந்து தேவாகிட்ட பேசறேன்” என ராம் கத்த

“ஐயோ சாமிங்களா நீங்க ஆணியே புடுங்கவேண்டாம்....நான் பார்த்துகிறேன்” என சொல்லிவிட்டு கிளம்பினாள்..

இங்கு அலுவலகம் வந்தவள் தேவா அறையில் இல்லாமல் இருக்க ஹப்பா தப்பித்தோம் என நினைத்து கொண்டு அமைதியாக தனது வேலையை தொடர்ந்தாள்.

பட்டாபி வந்து போதும் எதுவும் பேசவில்லை.

அலுவலகம் வந்த தேவா நேராக ரோஜாவை நோக்கி வந்தான்.காலடி சத்ததை வைத்தே அவன் வருவதை உணர்ந்த ரோஜா....ஆஹா வந்திட்டானே என மனதில் அலாரம் அடிக்க தலை குனிந்த படி அமர்ந்திருந்தாள்.

“என்ன ரோஜா ...லீவுன்னு சொன்னீங்க என்றவன் பின்னர் சரி இன்று நீதிமன்றம் போகணும் ரெடியா இருங்க....அப்புறம் அந்த அரசியல்வாதி மாறன் கேஸ் விபரம் எல்லாம் எடுத்துக்குங்க ..பட்டாபி நீயும் தான்” என சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.

“ஹப்பா என அவள் பெருமூச்சு விட பட்டாபியோ இதெல்லாம் சரியில்லை...என்னை மட்டும் ஆறு மாதம் நீதிமன்றமே அழைத்து செல்லவில்லை.....நீ வந்து இப்போது தான் ஒரு மாதம் ஆகிறது அதற்குள்ளே” என அவன் புலம்ப

அவளோ தேவா தன் மேல் கோபப்படவில்லை என்பதிலே சந்தோசமாக இருந்தவள் விட்ரா பட்டாபி என சொல்லியவாறு எல்லாம் எடுத்து வைத்தாள்.

அன்று முதன் முதலாக தேவாவுடன் நீதிமன்றம் சென்றாள் ரோஜா......அவன் உள்ளே நுழைந்ததும் காவல்துறையினர் முதல் வக்கீல்கள் அனைவரும் அவனுக்கு வணக்கம் சொல்ல அந்த செயலிலும் ஒரு பயம் கலந்த மரியாதை இருக்க அவன் கூட சென்று ரோஜாவிற்கு ஏதோ தெலுங்கு படம் பார்ப்பது போல் இருந்தது.

தனது அறைக்கு சென்று அவன் அமர்ந்ததும்.......இரண்டு கரை வேஷ்ட்டிகாரர்கள் உள்ளே வர அவர்களை பார்த்ததும் தேவா ஏதும் சொல்லாமல் அமைதியாக இருக்க

“தம்பி இது உங்களுக்கே நியாமாக இருக்கிறதா......அவன் செய்தது அநியாயம் என்று தெரிந்தும் அவன் சார்பாக நீங்கள் வாதிடலாமா” என கேட்டனர்.

தேவாவோ மிகவும் சாதரனமாக “நான் என்ன செய்வது பத்ரி......அவன் என்னிடம் வந்து கேஸை ஒப்படைத்தான்......நான் எனக்கான கடமையை செய்கிறேன்” என்றான்.

“தம்பி நீங்க ஆள் தெரியாம மோதரிங்க......இன்னும் கொஞ்ச காலம் தான் ...பிறகு நாங்கள் பொறுப்பிற்கு வந்தால் உங்கள் நிலையை நினைத்து பாருங்கள்” என அவன் குரலை உயர்த்த

தேவாவோ மிகவும் தளர்வாக அமர்ந்து கால் மேல் கால் போட்டவன் “இங்க பாரு பத்ரி நீ மரியாதையாக பேசும்வறை நானும் பேசுவேன்.....அது குறைந்தால் என்னை பற்றி உனக்கு தெரியும்” என சொல்ல

கேட்டதும் அமர்ந்து இருந்த இருவரும் எழுந்து கைகளை கட்டி நின்றவர்கள் “சார் ஏதோ கோபத்தில் பேசிவிட்டேன்.......மேலிடத்தில் சொல்லிவிடாதீர்கள் .....ஆனால் இந்த கேஸ் முற்றிலும் ஜோடிக்கபட்டது.........அவன் ஐம்பது லட்சம் லஞ்சம் வாங்க இருக்கிறான் என்பது அனைவர்க்கும் தெரியும்......அதை ஏன் நீங்கள் மறைக்க பார்க்கிறீர்கள்” என கேட்டான்.

ஆமாம் பத்ரி...எனக்கும் தெரியும் தான்......ஆனால் நான் என்ன செய்ய முடியும்.....நீங்கள் முன்பு வந்து என்னிடம் வழக்கை ஒப்படைத்து இருந்தால் உங்களுக்கு சாதகமாக வாதாடி இருப்பேன்.......அவன் என்னை நம்பினான்......நான் எப்படி அவனை கைவிடுவது என கேட்டவன் இனி பேசி பயனில்லை.....அடுத்த முறை நீங்கள் முதலில் வருவதற்கு பாருங்கள் என சொல்லிவிட்டு பட்டாபி அந்த கேஸ் கட்டு எடு” என்றான்.

இனி அவன் என்ன சொன்னாலும் கேட்கபோவதில்லை என தெரிந்த பத்ரி ....”சார் இது தான் உங்க முடிவுன்னு மேலிடத்தில் சொல்லிவிடலாமா” என கேட்க

“நீ சொல்லவேண்டாம் அவர்களுக்கே அது தெரிந்திருக்கும்” என அழுத்தமாக சொல்லிவிட்டு வேலையை தொடர்ந்தான் தேவா.

கேட்டதும் பத்ரியின் முகம் ஆச்சிரியத்தில் மின்னி மறைந்தது.

வெளியே வந்த இருவரில் ஒருவன் “என்ன பத்ரி அண்ணே அந்த ஆள் அப்படி பேசறான் ....நீங்க பேசாம வரீங்க .......மேலிடத்திற்கு என்ன பதில் சொல்ல போறீங்க”....... என புலம்ப

“டேய் நீ வேலைக்கு வந்து இரண்டு நாள் தான் ஆச்சு.......உனக்கு இவரைப்பற்றி தெரியாது......இந்த பதில் தான் இவரிடம் இருந்து வரும் என்று மேலிடத்திற்கும் தெரியும்......இதற்க்கு முன்பு பல விவகாரங்களில் இவர் நமக்கு சார்பாக வாதாடி வெற்றி பெற்று தந்து இருக்கிறார்.....இவரை பொறுத்தவரை யார் முதலில் செல்கிறார்களோ அவர்களுக்கு முன்னுரிமை....அவ்ளோதான்......இது சும்மா எதற்கும் கேட்டு பார்ப்போமே என கேட்டு வர சொன்னார்கள்.......அதனால் நமக்கு ஏதும் பிரச்சனை இல்லை...வா “என சொல்லி அவனை அழைத்து சென்றான் பத்ரி .

நடப்பதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த ரோஜாவிற்கு எதுவும் புரியவில்லை.அவன் வந்து மிரட்டுவது போல் பேசுகிறான்...ஆனா இவரோ அவனுக்கு மேல் பேச அவனோ அமைதியாக செல்கிறான்....மேலும் அந்த கேசை ரோஜாதான் குறிப்பெடுத்தாள்.அதில் இவர்கள் கட்சிகாரர் பக்கம் தான் குற்றம் என்பது தெளிவாக தெரிகிறது . தெரிந்தும் இவன் ஏன் அவர்களுக்கு வாதாடுகிறான் என அவள் யோசிக்க அப்போது பட்டாபி சொன்ன வார்த்தை நியாபக வர பணத்திற்காக இவன் தவறுக்கு துணை போகிறானா என அவளுக்கு தோன்ற உடனே கோபம் வர வேகமாக அவன் அருகில் சென்றாள்.



கடமையை செய் பலனை எதிர்பாராதே!

மதியால் விதியையும் வெல்லலாம்.

நியாயம் தர்மம் அவரவர் மனதை பொருத்தது.

ஒருவனுடைய நியாயம் இன்னொருவனுக்கு அநியாயம்

இதில் யாரையும் குறை சொல்ல முடியாது.

நம்பி வந்தவர்களை கைவிடகூடாது

அது தொழில் தர்மம் ஆகாது என்பது அவன் கூற்று!

செய்யும் தொழிலும் நியாயம் அநியாயம்

பகுத்தறியவேண்டும் என்பது அவள் கூற்று !

எண்ணத்தின் முரண்பாடு வார்த்தையில் வெளிப்பட

இதற்க்கான தீர்வு யார் கையில்??????????????



உங்களை போல் நானும் கேள்வியுடன்