• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் - 9

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
அத்தியாயம் -9



அன்று எப்போதும் போல் வாலிபால் பயற்சி முடித்து விட்டு திரும்ப வந்து கொண்டிருந்தேன் .......அந்த நினைவுகள் இப்போது நடந்து போல் இருக்கிறது என்றவன் தன்னை மறந்து அந்த நினைவுகளில் மூழ்கினான் ... .....அந்த விளையாட்டு மைதானத்தில் நண்பர்கள் ஏதோ அவனை கிண்டல் பண்ண அவர்கள் பக்கம் திரும்பி பதில் சொல்லிகொண்டே வந்தவன் ...நகருங்க..நகருங்க என குரல் கேட்க சட்டென்று நான் திரும்புவதற்க்குள் ஒரு ஸ்கூட்டி வண்டி என் மேல் மோதியது .....நான் சற்று தடுமாறி கீழே விழ அதற்குள் அந்த வண்டியை ஓட்டிய பெண் வேகமாக வண்டியை கீழே போட்டுவிட்டு அவனிடம் ஓடி வந்தவள் ...”அச்சோ சாரி அண்ணா ...ரொம்ப அடிபட்டுடுச்சா” என கேட்க

விழுந்த கோபத்தில் அறிவிருக்கா என சொல்லிகொண்டே திரும்பி பார்த்தவன் .......அப்போது தான் செடியில் பூத்த முல்லை மலர்போல் மென்மையான முகம் ,அந்த கண்களின் இமைகள் படபடக்க பயத்துடன் “சாரி அண்ணா ...சாரி அண்ணா” என அவள் சொல்ல விழுந்த வலியை விட அவள் அண்ணா என்று சொல்லியதுதான் அவனுக்கு மிகவும் வலித்தது.

சட்டென்று கோபம் வர “கண்ண என்ன பின்னாடியா வச்சிருக்க .....ஹாரன் அடிக்க வேண்டியது தானே” என அவன் சத்தம் போட

அதற்குள் அவள் “எனக்கு பயத்தில் ஹாரன் அடிக்க தோன்றவில்லை ...அதான் கத்தினேன்” என்றாள்.

அதற்குள் ரோஜா அவனை உலுக்கி “ மாம்ஸ் இன்னும் பீட்சா காணோம்” என சொல்ல

அவளை திரும்பி முறைத்தவன் ....ஒருத்தன் எவ்ளோ பீலிங்க்ல சொல்லிட்டு இருக்கேன்......நீ சாபபிட்றதிலே இரு” என அவன் திட்ட

அந்த நேரத்தில் சரியாக பீட்சா வர அங்கு வந்த காவேரி “இது எதுக்குடா இப்போ வாங்கின.........நான் சமையல் பண்றேன்னு சொன்னேன் இல்ல” என கேட்டபடி வந்தார்.

“அதான் அத்தை நானும் சொன்னேன்.....ராம் தான் அம்மா சமையல் போர் அடிச்சிடுச்சு ....அப்படின்னு சொல்லி ஆர்டர் பண்ணினான்” என அவள் தெரியாதவள் போல் சொல்ல காவேரி அம்மாள் அவனை முறைத்து விட்டு உள்ளே சென்றார்.

“சரி ராம்...நீ சொல்லு அப்புறம் என்ன ஆச்சு” என பீட்சாவை வாயில் வைத்தபடி அவள் கேட்க ராமோ அவளை கோபமாக பார்க்க

“சரி சரி சொல்லு “ என அவள் ஆர்வமாக கேட்க

உடனே அவன் முகம் மென்மையாக மாற மீண்டும் அந்த நினைவிற்குள் சென்றான். “அதற்குள் அவளது தோழி அங்கு வந்தவள் என்னடி பண்ண தொலைச்ச .....அச்சோ சாரி சார் ...இப்பதான் இவள் முதன் முறை வண்டி ஓட்டி பழகிறாள்...அதான் கொஞ்சம் தடுமாறிவிட்டாள்” என அந்த முல்லை மலரின் சார்பாக பேசினாள்.

உடனே அந்த பெண் “ஆமாம்...ஆமாம் என தலை ஆட்டியவள் .....தெரியாம இடிச்சுட்டேன்...நானும் நகருங்க நகருங்கனு சொன்னேன் ஆனா நீங்க அந்த பக்கம் பார்த்தே வந்திங்க அதான் தடுமாறிவிட்டேன் ” என திக்கி திணறி சொன்னாள்.

அவளது உதடு அசைவும் அவளது முகபாவனையும் பார்த்து கொண்டிருந்த ராமுவால் அவள் சொன்னதை கவனிக்க முடியவில்லை.

அதற்குள் அவனின் நண்பர்கள் அங்கு வந்து விட “டேய் மாப்பிளை என்னடா ஆச்சு” என கேட்டவர்கள் அங்கு இரண்டு பெண்கள் நின்று கொண்டிருக்க உடனே அவர்களுக்குள் உற்சாகம் தொற்ற...

“ஹே யாரு இடிச்சது மாப்பிள்ளை மேல.....இதே நாங்க இடிச்சிருந்தா சும்மா இருந்திருப்பிங்களா...அழுது ஊரே கூட்டிருப்பிங்க” ......என ஒருவன் சத்தம் போட

அதற்குள் மற்றவர்களும் “ஆமாம் .....ஏதாவது ரொம்ப காயம் ஆகிருந்தா அவன் வீட்டுக்கு யார் பதில் சொல்வது” என குரல் எழுப்பினான்.

அதற்குள் வண்டி ஓட்டி வந்த அந்த பெண் .....”அய்யோ என்னை மன்னிச்சுடுங்க அண்ணா ....தெரியாமா மோதிட்டேன்.........எங்க அண்ணாவுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா அவ்ளோதான்......நான் இனிமேல் இந்த வண்டியே ஓட்டமாட்டேன்...ப்ளீஸ்” என கெஞ்ச

அதற்குள் “டேய் சும்மா இருங்கடா...பாவம் அந்த பொண்ணு ஏற்கனவே பயந்திருக்கு...எனக்கு ஒன்னும் இல்லை......நீங்க கிளம்புங்கம்மா” என நண்பர்களின் கிண்டலில் இருந்து காப்பாற்றி அவர்களை அனுப்பினான் ராம்.

அவர்கள் நகர்ந்ததும் “டேய் மாப்பிள்ளை பொண்ணு சூப்பரா இருக்கு....கொஞ்சம் டைம் பாஸ் பண்ணலாம்னு பார்த்தா இப்படி கலட்டி விட்டுட்டியே என சொன்னவர்கள் சரி நீ கிளம்பு” என சொல்லிவிட்டு அவர்களும் நகர்ந்தார்கள்.

ஆனால் ராமிற்கு காலில் நன்கு அடி......அவனால் இயல்பாக நடக்க முடியவில்லை...சாய்ந்து சாய்ந்து அவன் தனது வாகனம் அருகே வர அப்போது அந்த முல்லை மலரின் தோழி வேகமாக ஓடி வந்தவள் “சாரி சார் ...எங்ககிட்ட இப்போ இவ்ளோதான் பணம் இருக்கு......உங்களுக்கு கால்ல அடிபட்டிருக்கும்போல இருக்கு......நீங்க மருத்துவர போய் பாருங்க” என சில நூறுரூபாய் நோட்டுகளை நீட்டினாள்.

அவர்கள் பணம் கொடுத்ததும் அவனுக்கு கோபம் வர , அவள் வராமல் தோழியிடம் பணம் கொடுத்து அனுப்பியது மேலும் அவனை எரிச்சல் படுத்த...அவன் அந்த பணத்தை வாங்காமல் “ஏன் இதை வண்டி இடிச்சவங்க கொண்டு வந்து தரமாட்டங்களா” என கோபமாக கேட்டான்.

“சாரி அண்ணா...நீங்க திட்டுவிங்கனு நினத்து “ என ஒரு குரல் அவன் பின்புறம் இருந்து வந்தது.

திரும்பி பார்த்தவன் அந்த பெண் கண்களில் கண்ணீருடன் நின்று கொண்டிருக்க அவளயே அவன் பார்க்க

மீண்டும் அவள் “ சாரி அண்ணா” என சொல்ல

“ஹே முதல்ல இந்த அண்ணா சொல்றத நிறுத்து என எரிச்சலாக சொன்னவன் உன் தோழி எப்படி சார்னு சொல்றா...அந்த மாதிரி சொல்ல மாட்டியா என சொன்னவன் இங்க வா “என அவளை அழைக்க

அவள் மெல்ல அருகில் வர ...அவளது முகத்தை மிகவும் அருகில் கண்டவன் தன்னை மறந்தான்.அவள் தலைகுனிந்து நின்று கொண்டிருக்க அவனோ அவளை மேலிருந்து கீழாக முழுவதும் அளவெடுக்க அவளின் தோழி உஷாறானாள்.

“சார் எங்களுக்கு நேரமாகுது” என அவள் சொல்ல சட்டென்று சுயநினைவிர்க்கு வந்தவன் இந்த பணம் எல்லாம் வேண்டாம்.....எனக்கு பெரிதாக அடி ஏதும் இல்லை ...மேலும் தவறு என்னிடமும் இருக்கிறது ...நீங்கள் செல்லுங்கள் என்றவன் ஆமாம் என்ன படிக்கிறீங்க நீங்க” உங்கள் பெயர் என்ன ?என கேட்க

உடனே அவள் “பிளஸ் ஒன் “ என சொல்லி முடிக்கும் முன்

அவள் தோழி ....ஓகே சார்...ரொம்ப நன்றி என சொல்லிவிட்டு வாடி போகலாம் என அவளை இழுத்து கொண்டு சென்றாள்.

அவளும் அவனிடம் திரும்பி “ரொம்ப நன்றி அண்ணா” என மறுபடியும் சொல்ல

“என்னது” என அவன் அதட்ட

இல்லை ...இல்லை சார் என அவள் அவசர அவசரமாக மறுத்து சொல்ல அந்த செயலை இப்போது நினைத்தாலும் அவனுக்கு சிரிப்பு வரும் . ஹே உங்க பெயர் என அவன் கேட்க அதற்குள் அவள் தோழி அவளை இழுத்து சென்றுவிட்டாள்.

அந்த முகம் ராமின் மனதில் அப்படியே பதிந்து போனது.....அவனால் அந்த முகத்தை மறக்க முடியவில்லை.......அறிவோ அவள் சிறு பெண் என உணர்த்தினாலும் மனமோ எந்த பெண்ணை கண்டாலும் அவளுடனே ஒப்பிட்டு பார்த்தது.......அவன் மனதில் அழிக்கமுடியாத பிம்பமாக அவள் பதிந்து போனாள்.........அந்த நினைவுகளில் அவன் மனம் லயித்து இருக்க

“அச்சோ என்ன ராம் பேர் கூட கேட்காம விட்டுட்ட என்றவள் பதினொன்றாம் வகுப்புனா ரொம்ப சின்ன பொண்ண இருப்பாளே “என்றாள் ரோஜா .

“ஆமாம் ரோஜா இரட்டை ஜடை போட்டு , விழிகளுக்கு மையிட்டு இன்னும் அந்த முகம் என் மனதில் இருந்து அகலவில்லை” என்றான்.

“அப்புறம் நீ அந்த பொண்ண பார்க்கவே இல்லயா ராம்” என்றாள்..

“இல்லை ரோஜா ...நான் படித்து முடித்து பல இடங்களில் வேலை பார்த்த போதும் அவளை பார்க்க வில்லை.....ஆனால் என்னவள் அவள் தான்” என என் மனம் சொல்லி கொண்டே இருந்தது என்றான்.

“என்ன மாம்ஸ் உளற ....அது எப்படி” என கிண்டல் செய்தவள் அப்போ நீ எங்களோட அந்த ஷாப்பிங் மால்ல தான் அவளை பார்த்தியா என்றாள்

“ம்ம்ம் இல்லை அதற்க்கு பிறகு நான் வேலை கிடைத்து சென்னை வந்த பிறகு இரண்டு முறை பார்த்தேன்.....ஆனால் என்னால் அவளிடம் பேசமுடியவில்லை.....அவள் எங்கு இருக்கிறாள் , பேர் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை” என்றான்..

“அது எப்படி ராம் இத்தனை வருடத்தில் அவளிடமும் பலமாற்றம் வந்திருக்குமே ....அந்த பொண்ணுதான் இந்த பொண்ணுன்னு எப்படி சொல்ற” என ரோஜா குறுக்கு கேள்வி கேட்க

“ஹே அறிவுகளஞ்சியமே என அவள் தலையில் தட்டியவன் மனதில் ஒருத்தியின் முகம் பதிந்துவிட்டால் அவளின் சின்ன அசைவுகள் கூட நமக்கு மறக்காது.இப்பொழுதும் அவளை போல் ஆயிரம் பேர் கொண்டு வந்து நிற்க வைத்தாலும் என்னால் அவளை அடையாளம் சொல்ல முடியும்.அவளது கண்களை வைத்தே நான் கண்டுபிடித்துவிடுவேன்” என சொல்லும்போதே அவன் குரல் மென்மையாக

அந்த பொண்ணு ரொம்ப கொடுத்து வச்சவ ராம் என ரோஜா மனம் நிறைவுடன் சொன்னாள்..

அவன் சிரித்து கொண்டே “நானும் தான் ரோஜா ....நேற்று பார்த்தாய் அல்லவா......அவள் முகத்தில் எப்போதும் ஒரு மென்மை குடியிருக்கும்” என்றான்.

ரோஜாவின் முகம் சட்டென்று சுருங்க தலைகுனிந்தவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டே இருக்க

அவள் ஏதும் பேசாமல் இருப்பதை பார்த்ததும் ராம் அவள் முகத்தை நிமிர்த்த அவளது கண்ணீரை கண்டவன் “என்னடா ...இப்போ எதுக்கு இந்த அழுகை” என பயந்து போய் கேட்டான்.

“இல்ல ராம்...எனக்கு தாத்தா நியாபகம் வந்திடுச்சு.....அவரும் அடிக்கடி இந்த வார்த்தை சொல்லுவார்......பெண்களை பார்த்தலே ஒரு மென்மை இருக்கணும்னு என சொன்னவள் அவன் மடியில் படுத்து குழுங்கி குழுங்கி அழுதவள் எனக்கு அப்போ புரியலை ராம்....ஆனா இப்போ புரியுது...அதுக்கு நான் கொடுத்த விலை தான் ரொம்ப ஜாஸ்தி என்றாள்.

அதற்குள் காவேரி அம்மாள் வந்துவிட பேச்சு திசை மாறியது.

மறுநாள் ராம் நேரமாக அலுவலகம் சென்று விட கிளம்பி சாப்பிட வந்தவள் “எங்க அத்தை ராம் காணோம்” என்றாள்..

“அவன் விடிகாலையிலே வேலை இருக்கிறது என்று கிளம்பி விட்டான்.நீ சாப்பிடு என்றவள்” அவளுக்கு தேவையானதை பரிமாறி விட்டு அவள் அருகில் வந்து அமர்ந்தாள்.

மெதுவாக அவள் தலையை வருடியவள் “என்னடா நேற்று அழுது கொண்டிருந்தாய்...வீட்டு நினைப்பு வந்து விட்டதா” என அன்புடன் கேட்க

சாப்பிடுவதை நிறுத்திவிட்டு காவேரியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் கண்களில் கண்ணீர் தளும்ப ஆமாம் இல்லை என இரண்டு விதமாகவும் தலை அசைத்தவள் “அத்தை என் வீட்ல நான் எப்படி இருப்பனோ அதே போல் தான் இங்கும் இருக்கிறேன்......என்ன பாட்டி நியாபகமாக இருக்கிறது......நான் வந்த பிறகு அவர்களிடம் போனில் கூட பேசவில்லை......அதான்” என சொன்னாள்.

“இன்னும் கொஞ்ச நாள் தான் ரோஜா......அப்புறம் நீ நிரந்தரமாக இங்குதானே இருக்க போகிறாய்....அப்போது உன் பாட்டியும் அழைத்து வந்து விடலாம் என சொல்ல அவர் சொல்வதின் முழு அர்த்தத்தையும் புரிந்து கொள்ளாமல் தலையை மட்டும் ஆட்டினாள்ரோஜா”....இது அவளுக்கு எவ்வளவு பெரிய பிரச்சனையை கொண்டு வந்து விடபோகிறது என்பதை அவள் அறியவில்லை.

அதற்குள் மணி ஒன்பது ஆகிவிட அச்சோ நேரமாச்சு என அவசரஅவசரமாக கிளம்பி அலுவலகம் வந்து சேர்ந்தாள். உள்ளே நுழைந்ததும் தேவாவின் அறையை பார்த்தவள் அவன் எதோ தீவிரமாக குறிபெடுத்து கொண்டிருந்தான்.

பட்டாபி ஒரு கிளைன்ட்டிடம் வழக்கு சம்பந்தமான விபரங்களை கேட்டு கொண்டிருந்தான். ரோஜாவை பார்த்ததும் நேற்று வழக்கு தீர்ப்பு சம்பந்தமான நகல்கள் இதில் இருக்கிறது......இவை அனைத்தையும் பத்திரமாக கோப்புகளில் வைத்து அந்த பீரோவில் வைத்து விடு என சொல்லிவிட்டு தன் வேலையை தொடர்ந்தான்.

சற்று மறந்திருந்த அந்த வழக்கு சம்பந்தப்பட்ட நினைவுகள் அவள் படிக்கும்ப்போது மீண்டும் நினைவிற்கு வர வேகமாக எழுந்து அறைக்குள்ளே சென்றவள் செல்லும் அவசரத்தில் கதவை தட்ட மறந்து சட்டென திறந்துவிட

தேவா வேலையில் கவனமாக இருந்ததால் அவள் வந்ததை கவனிக்கவில்லை.....உள்ளே வந்தவள் அவன் முன் அமர்ந்தாள்.அவன் தன்னை கவனிக்காமல் அவன் வேலையை பார்த்து கொண்டிருக்க ஏற்கனவே அவன் மேல் கோபத்தில் இருந்தவள் இப்போது மேலும் அது அதிகமாக ....ஹ்ம்ம்ம் என அவள் சத்தம் எழுப்ப ....முகத்தை சுளித்தபடி நிமிர்ந்து பார்த்தவன் அவள் எதிரில் அமர்ந்திருப்பதை பார்த்தவன் ....”ஹே அறிவிருக்கா உனக்கு......உள்ளே வரும் போது அனுமதி கேட்டு வரமாட்டாயா....நீ எல்லாம் எதற்கு படித்தாய்......மரியாதை என்பதே தெரியாதா” என வேகமாக கேட்டான்.

இதை ரோஜா எதிர்பார்க்கவில்லை.......அவள்தான் அவனுடன் சண்டைபோடவேண்டும் என நினைத்து வந்தாள்.இப்போது இவன் திட்டிக்கொண்டு கொண்டிருக்கிறான்.அவளுக்கு கோபம் சுறு சுறுவென வர” மரியாதை பற்றி நீங்கள் ஒன்றும் எனக்கு கற்று தரவேண்டாம் என கோபமாக சொன்னவள் அதென்ன நான் வேலைக்கு வந்து சேர்ந்த அன்றும் அதை தான் சொன்னீர்கள்....இன்றும் அப்படிதான் சொல்கிறீர்கள்....மரியாதையை என்பது நீங்கள் மட்டும் தான் குத்தகைக்கு எடுத்தது போலவும் நாங்க எல்லாம் அதை பற்றி அறியாதவர்கள் போலவும் பேசுகிறீர்கள் .......ஆமாம்...ஆமாம் உங்களை பொறுத்த வரை எல்லாமே பணத்தினால் தான் மதிப்பிடபடுகிறது என நக்கலாக சொன்னவள் உங்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று நேற்று முழுவதும் காத்திருந்தேன்......நீங்கள் வரவில்லை.....இன்று உங்களை பார்த்ததும் உடனே உள்ளே வந்துவிட்டேன் இது தவறா” என அந்த கோபத்திலும் தான் வந்த உள்ளே வந்த காரணத்தை அவனிடம் சொன்னாள்.

“இங்கு பார் நீ என்னிடம் ஜூனியராக வேலை பார்த்து கொண்டு இருகிறாய்........என்னை கேள்வி கேட்கும் அதிகாரம் உனக்கு இல்லை என சொன்னவன் ....ச்சே இதற்குதான் அரைகுறை எல்லாம் ஜூனியராக சேர்த்து கொள்வதே இல்லை....உனக்கு சட்டத்தை பற்றி என்ன தெரியும்” என அவன் கோபத்தில் கேட்க

“ரொம்ப படித்து இருக்கிறீர்கள் என்று ஆணவத்தில் ஆடாதீர்கள்.......கேவலம் பணத்திற்கு விலை போகும் மனிதர் தானே நீங்கள்....... ஒரு மனிதனுக்கு ஆசை இருக்கலாம்...பேராசை இருக்க கூடாது........உங்களை போன்ற ஆட்களினால் தான் நீதி தேவதை கண்ணை கட்டி கொண்டு இருக்கிறாள்........பணம்தானே அநியாயத்தையும் நியாமாக மாற்றுகிறது.......பணம் கொடுத்தால் பின்லேடனும் உங்கள் பிரண்டாகி விடுவான் என அவள் வில்லில் இருந்து வரும் அம்பு போல் மனதில் உள்ள கோபம் எல்லாம் வார்த்தையாக கொட்ட ...

தேவா கண்கள் சிவக்க நரம்புகள் புடைக்க வேகமாக எழுந்தவன்..”ஏஈஈஈ!!!!!!!!! என கர்ஜித்தவன் யாரிடம் என்ன பேசிக்கொண்டு இருகிறாய்......சிறு பெண் என்று பார்க்கிறேன்...இல்லையென்றால் உன்னை என சொல்லி பல்லை கடித்தவன் ....பணம் உனக்கு கேவலமா.......இந்த பணம் இல்லாமல் இன்று எத்தனை பேர் தனது பசி ,பட்டினி , கனவுகள்,சுகம் சொந்தம் அனைத்தயும் இழந்து நிற்கிறார்கள் தெரியுமா?பணம் இல்லாதவன் இக்காலத்தில் பிணத்திற்கு சமமானவன் உனக்கு தெரியுமா ?திருடுவது,கொள்ளையடிப்பது இப்படி பணம் வந்தால் அது குற்றம்.......உழைப்பிற்கு வாங்கும் ஊதியம் எப்படி தவறாகும்.........உனக்கு எங்கே இது எல்லாம் தெரியபோகிறது....... உன் தந்தை சம்பாரித்து கொடுத்து அந்த சுகத்தில் வளர்ந்ததால் பணம் கேவலம் என்கிறாய் ஆனால் என்னால் என சொன்னவன் சட்டென்று நிறுத்தி .....உன்னிடம் போய் இதை எல்லாம் சொல்லி கொண்டு இருக்கிறேன் பார் என அலட்சியமாக சொல்லிவிட்டு ...முதலில் இந்த இடத்தை விட்டு வெளியே செல்” என அழுத்தமாக அதிகாரமாக சொல்ல

அவன் பேசியதில் ஓரளவு புரிந்தாலும் இவன் இந்த அளவு கோபப்படுமாறு நாம் என்ன கேட்டுவிட்டோம்....... என அந்த நேரத்திலும் அவளது மூளை யோசிக்க

சத்ததை கேட்டு உள்ளே வந்த பட்டாபி தேவாவை பார்த்ததும் நிலைமை புரிந்து கொண்டு “ரோஜா நீ வா” என அவளை இழுத்து சென்றான்.

“என்ன ரோஜா .....உனக்கு என்ன வேண்டும்......ஏன் இப்படி அவரிடம் தானாக சென்று திட்டு வாங்கி கொள்கிறாய்.......அவர் இப்படி கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை ...ஏன் ரோஜா இப்படி பண்ணுகிறாய்” என அக்கறையுடன் கேட்டான் பட்டாபி.

ரோஜாவோ “எனக்கே ஒன்றும் புரியவில்லை பட்டாபி.......உள்ளே கோபமாக சென்றது நான் ....ஆனால் என்னை பேசவிடாமல் அவர் கோபமாக பேசி என்னை வாயடைக்க வைத்து விட்டார்.அவர் இந்த அளவு கோபப்படுமாறு நான் எதுவும் பேசவில்லை.......பணத்திற்காக தவறுக்கு துணை போகலாமா என்று தானே கேட்டேன்.......அதற்க்கு எதற்கு இவர் இவ்வளவு வார்த்தை பேசினார் எனக்கே குழப்பமாக இருக்கிறது” என்றாள்.

அவன் சிரித்துகொண்டே “அதான் தேவா சார்......... இது தான் அவரது வெற்றின் ரகசியம்.......இதற்கே இப்படி என்றால் சில நேரம் நீதிபதியே குழம்பிவிடுவார்.இப்போது தானே ஆரம்பித்து இருகிறாய்....இனி போக போக புரிந்து கொள்வாய்.....முதலில் அவரை கவனி...பின் உனது சந்தேகங்களை கேள்” என புத்திமதி சொன்னான் பட்டாபி.

உள்ளே தேவாவிர்க்கோ அவன் படபடப்பு குறைய சிலமணி நேரங்கள் ஆனது. சிறிது நேரம் யோசித்தவன் பின்னர் அலைபேசி எடுத்து என்னை அலுத்தியவன் “நாதன் இன்னைக்கு ஹோட்டல் சோழா போகணும் வந்திடு” என கூறிவிட்டு அலைபேசியை அணைத்தான்.

அன்று முழுவதும் அவனும் அறையை விட்டு வெளியே வரவில்லை.....ரோஜாவும் உள்ளே செல்ல வில்லை......தன் அறைக்கு யாரும் வரகூடாது என்று மணியிடம் சொல்லிவிட்டான்தேவா.வேலை முடிந்து அனைவரும் கிளம்பிய பிறகே அவன் கிளம்பினான். 3

மறுநாள் அலுவலகம் வந்தவன் ரோஜாவின் இடம் காலியாக இருக்க ஏனோ அவன் முகம் சுருங்க உள்ளே சென்றவன் பத்து நிமிடம் பொறுத்து பட்டாபியை அழைத்து “ரோஜா இன்று விடுப்பா” என கேட்க ....அவனோ “இல்லை சார்...இப்பதான் போன் பண்ணாங்க ...ட்ராபிக்ல மாட்டிகிட்டங்கலாம்....சீக்கிரம் வந்திடறேன் சொன்னாங்க” என்றான்.

சட்டென்று ஒரு நிம்மதி தோன்ற....”ம்ம்ம் சரி சரி இனி இப்படி தாமதம் ஆகாமல் நேரமே வர சொல்லுங்க” என வேகமாக சொல்லிவிட்டு தன் வேலை தொடர்ந்தான்.

பின்னர் அந்த ஒரு வாரம் தேவாவுடன் நீதிமன்றம் ரோஜா சென்றாலும் அவளும் எதுவும் பேசவில்லை....தேவாவும் பேச வில்லை....இடையில் ஒருமுறை ஊருக்கு செல்ல அவள் விடுப்பு கேட்க அவன் சந்தேகமாக பார்க்க பின்னர் ராம் தேவாவிற்கு போன் பண்ணி சொன்ன பிறகே அவன் அனுமதித்தான்.

நாட்கள் ஓடின..... பார் கவுன்சில் மெம்பராக அவள் பெயரையும் பதிவு செய்தான் தேவா.......நீதிமன்றத்தில் நடப்பதை கவனிப்பது மட்டுமே அவளது வேலையாக இருந்தது.......அமைதியாக இருந்து கவனித்ததால் தேவாவின் இன்னொரு முகத்தையும் அறிந்து கொண்டால் ரோஜா .

ராமின் நிலைமையோ ஆரம்ப நிலையிலே இருந்தது......ரதியை சந்தித்த சிறிது நாட்களில் அவனுக்கு வேறு இடத்தில் பணிமாற்றம் கிடைக்க அங்கு செல்ல வேண்டிய சூழ்நிலை......மேலும் அவன் தொழில் சார்ந்த பிரச்சனைகள் வேறு அவனை வேறு சிந்தனைக்கு விடவில்லை.

 
  • Like
Reactions: Kajol Gajol

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
ஊருக்கு சென்று பாட்டி அம்மா அப்பாவை அடிக்கடி பார்த்து வந்தாள் ரோஜா......அவள் பழைய ரோஜாவாக மாறவில்லை என்றாலும் பொறுப்புள்ள பெண்ணாக மாறி இருப்பது பார்வதிக்கு மகிழ்ச்சியே.......இடையிடையில் பார்வதி மரகதம் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நீதிபதியாக இவள் மாறவேண்டியநிலை ஏற்பட்டது.இப்படியாக காலம் சென்று கொண்டிருக்க எந்த பாதையும் ஒரே நேர்கோட்டில் செல்வதில்லை...வளைவு, திருப்பங்கள் வரத்தானே செய்யும்......சில இடங்களில் பள்ளங்கள் கூட வரும்....அதை முன்பே உணர்ந்தவன் சுதாரித்து கொள்கிறான்......உணராதவன் விதியின் பிடியில் சிக்கி கொள்கிறான்.

அன்று விடுமுறை நாள்.ராமும் ஊருக்கு வரவில்லை.....அத்தையுடன் வெளியே செல்லலாம் என திட்டம் போட்டு வைத்திருந்தாள்ரோஜா.

அப்போது பட்டாபியிடம் இருந்து அலைபேசி அழைப்பு வர எடுத்து பேசியவள் தேவா அவர்களை இன்று அலுவலகம் வர சொன்னார் என அவன் சொல்லி கொண்டிருக்கும்போதே

“ஏன் பட்டாபி அந்த பிதாமகன் எதுக்குடா இப்படி ஓவர் கடமை உணர்ச்சியோட இருக்கான்......லீவு நாள் கூட வேலை பார்க்கணுமா .......இவன் கிட்ட வேலை செய்வதற்கு பதிலாக ஒரு ரோபர்ட் கூட வேலை செய்யலாம்.....நீ வேண்டுமானாலும் பாரு.......கொஞ்சா நல்ல வேலை வேலைனு பைத்தியம் பிடிச்சு அலைய போறான்......நமக்குன்னு வந்து சேருது பாரு என சொன்னவள் சரிடா சொல்லு எத்தன மணிக்கு வரணும் ....சரியான நேரத்தை சொல்லு....இல்லினா ஐந்து நிமிடம் தாமதமா வந்தா உள்ள கூப்பிட்டு அரைமணிநேரம் அட்வைஸ் பண்ணுவான்”......என அவள் சலித்து கொண்டு சொல்ல

“நீ கிளம்பி வீட்ல இரு ரோஜா ....நாங்கள் வந்து உன்னை அழைத்து செல்கிறோம் “என ஒரு கடினமான குரல் கேட்க

“டேய் பட்டாபி அப்படியே அந்த பிதாமகன் மாதிரியே பேசறடா......சூப்பர் ...அப்படியே அவர் எப்போது பேசுவரோ ...அவர்கிட்ட இல்லாத ஒரு விஷயத்த மத்தவங்ககிட்ட கேட்டுகிட்டு இருப்பானே” என சொல்ல

“ரோஜா” என பட்டாபி குரல் கொடுக்க

“அட அதாண்டா ....அச்சோ உன்னை வேற டா சொல்லிட்டனா...அட அதான் பட்டாபி மரியாதையை என்பதே தெரியாதான்னு கேட்பாரே அந்த டைலாக் சொல்றேன்” என சொல்லி அவள் சிரிக்க

“நேரில் வந்து சொல்கிறேன் ...நீ கிளம்பி இரு” என எதிர்புறத்தில் இருந்து பதில் வர

அவளுக்கு சட்டென்று சந்தேகம் வர பட்டாபி ...பட்டாபி என அவள் இருமுறை அழைக்க

சொல்லு ரோஜா என பட்டாபி பதில் சொல்ல

“இப்போ பேசினது நீ தானே......யாரோ நம்ம பேச்சை ஒட்டு கேட்கிற மாதிரி இருக்குடா .......அதும் இப்போ பேசினது அப்டியே நம்ம பிதாமகன் மாதிரியே இருக்கு” என மெதுவாக ரகசியம்மாக சொல்வது போல் சொல்ல

“பிதாமகன் மாதிரி இல்லை...... நான் தேவா தான் பேசுகிறேன் ...கான்பரன்ஸ் கால் போட்டிருக்கு...அதை பட்டாபி சொல்வதற்கு முன்னால் எப்பவும் போல் அவசரகுடுக்கையாக உன் வால்தனத்தை காட்டி விட்டாய்........உன்னிடம் பேச நேரமில்லை ...நீ கிளம்பி இரு நான் வருகிறேன்” என கூறிவிட்டு போனை அணைத்தான் தேவா.

அப்படியே சிலையாக அவள் நிற்க அங்கு வந்த காவேரி “என்னாச்சு ரோஜா என கேட்க ....ஒன்றும் இல்லை அத்தை என தடுமாறியவள் கொஞ்சம் வேலை இருக்காம்.சீனியர் போன் பண்ணினார்.....நான் கிளம்புகிறேன்” என சொல்லிவிட்டு வேகமாக கிளம்பி காத்திருந்தாள்.

தேவா வந்ததும் காவேரி அம்மாள் அவனை உள்ளே அழைக்க அவசர வேலை இருப்பதால் வேறுஒரு நாள் வருகிறேன் என்றவன் அவளை அழைத்துக்கொண்டு சென்றான்.கார்ல் ஏறியவள் வாயை திறக்கவே இல்லை. கார் ஒரு பெரிய வணிக வளாகத்தின் முன் நின்றது .

காரில் இருந்து இறங்கிய ரோஜா வாய் பிளந்து நின்றாள்.மூன்று மாடி கட்டிடம் வெளிப்புறம் மாடல் அழகான இருகைகளை நீட்டிகொண்டு இருப்பது போல் தோன்ற உள்ளே பலர் அடைக்களமாக ஒண்டி இருப்பது போல் இருக்க அன்னை இலவச சட்ட ஆலோசனை மையம் என ஒரு பலகை முன்னே தொங்கி கொண்டிருந்தது.

“எதுக்குடா பட்டாபி இங்க வந்திருக்கோம்......யாருக்காவது ஏதாவது பிரச்சனயா .......இந்த மாதிரி இடத்துக்கு எல்லாம் நம்ம சார் வர மாட்டாரே......பணம்......காசு...துட்டு மணி மணி அப்டினுதானே சொல்வார்......இலவசம்கிறது மறந்தும் இவர் வாயிலே வராதே” ...என அவள் சலசலத்துகொன்டே வர

“கொஞ்சம் சும்மா இரு ரோஜா” என பட்டாபி அவளை அடக்கினான்.

உள்ளே வந்தவன் “நாளை மறுநாள் இந்த கட்டிடம் திறக்கபடுகிறது......ஒரு பெரிய வி ஐ பி வராங்க.......அதற்க்கான ஏற்பாடு எல்லாம் நீங்க செய்யணும் ...அதற்காகத்தான் உங்களை இன்று வர சொன்னேன்”...... என சொன்னான் தேவா.

“ஓ இப்போ வக்கீல் தொழிலோடு இந்த தொழிலையும் சேர்த்து பார்க்க ஆரம்பிச்சுட்டிங்களா சார்........ஆமாம் ஆமா இப்போ இதுக்கும் நல்ல காசு தான் என அவள் சொன்னவள் அரேஞ்ச்மென்ட் மட்டும் தானே நம்ம பண்றோம் ...மற்றது எல்லாம் அவங்க பார்த்துகுவாங்கள சார்” என கேட்டாள்.

அவளை முறைத்து பார்த்தவன் “எதையும் முழுசா கேட்க மாட்டியா....இந்த கட்டிடமே நம்முடையதுதான் தான்..... எல்லாமே நம்ம தான் செய்யறோம்” என்றான்.

“என்னது தூஊஊஉ என அதிர்ந்தவள் நீங்க இலவச சட்ட உதவி செய்யரிங்களா” என வாய் விட்டு சொல்லிவிட

அவன் அவளை திரும்பி பார்க்க

அதற்குள் பாட்டாபி அவளின் வாயயை பொத்தி “கொஞ்சம் நேரம் சும்மா இரு ரோஜா” என சொல்ல

“அச்சோ பட்டாபி இது என்ன இது சாத்தான் வேதம்ஓதுததா...என்னால் நம்ப முடியவில்லை என அவள் மேலும் அதை தொடர ...... உன்னை திருத்த முடியாது.என்னமோ பேசி சார்கிட்ட திட்டு வாங்கிக்கோ” என சொல்லி விட்டு பட்டாபி நகர்ந்தான்.

இந்த திறப்பு விழாவிற்கு வர போறவங்க எனக்கு மிக மிக வேண்டிய நபர்.....என்னோட வளர்ச்சிக்கு ரொம்ப உதவியா இருந்தவங்க.......அதுனால ஏற்பாடு எல்லாம் பலமா இருக்கனும்....ம்ம் அப்புறம் அவங்களுக்கு இப்படி வழ வழனு பேசினா பிடிக்காது என ரோஜாவை பார்த்து சொன்னவன் அவங்க ஒரு நீதிபதி........அதுனால அதற்கு ஏற்ற மாதிரி ஏற்பாடு செய்ங்க” என ஆர்டர் போட்டான்.

“யாராக இருக்கும் பட்டாபி......இவரு ஓவர் பில்டப் கொடுக்கிராரே .....அவ்ளோ பெரியா அப்பாடக்கரா அந்த விஐபி என யோசித்தவள் ....ம்ம்ம் இன்னும் இரண்டு நாளில் தெரிந்துவிடும்.பிதாமகனின் குரு எப்படி இருப்பார்........ சிரித்து கொண்டே பித்துகுலியாகதான் இருப்பார் என அவள் மனதில் நினைத்ததை தெரியாமல் சத்தமாக சொல்லிவிட திரும்பி பார்த்த தேவா என்ன சொன்ன “என புரியாமல் கேட்க

“ஹிஹிஹி.....இல்லை சார் எல்லாமே சூப்பரா பண்ணிடறோம் சார்” என்றாள்.

அருகில் வந்த பட்டாபி “ஏன் ரோஜா அந்த விஐபி யாராக இருக்கும் என கேட்க ...அதான் நானும் யோசிச்சுட்டு இருக்கேன்” என்றாள் அவள்.



கல்லுக்குள் இருக்கும் ஈரம்

கண்களுக்கு தெரியாது

அவன் மனதின்ஓசை அவன்

மட்டுமே அறிந்தது....

பார்ப்பவர்கள் கேட்பவர்கள்

அதற்க்கு பல அர்த்தங்கள் சொல்லலாம்

இப்படி செய்திருக்கலாம் அப்படி செய்து இருக்கலாம்

வியாக்கியானங்கள் பலர் கூறலாம்

ஆனால் செயலில் இறங்கி செய்பவர் ஒரு சிலரே!

பிறர்க்கு பாதிப்பில்லாமல் தனக்கு சரியென்று

தோன்றியதை செய்யும் செயல்கள்

ஒருபோதும் தவறாகாது.......

அது உண்மைதானே ??????????????
 
  • Like
Reactions: Kajol Gajol