• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உருளைக்கிழங்கு போளி

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
உருளைக்கிழங்கு போளி மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிட ஏற்றது. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு - அரை கிலோ
கடலை பருப்பு - 1 மேஜைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 ஒரு மேஜைக்கரண்டி
முந்திரி பருப்பு - 10
மைதா மாவு - 2 கப்
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பில்லை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
கடுகு - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
நெய் - தேவைக்கு

செய்முறை :

* உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

* முந்திரியை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

* கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, கடலைபருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு நன்றாக வறுத்த பின்னர் பச்சை மிளகாய், கறிவேப்பில்லை, கொத்தமல்லி போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கிளறி இறக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சிறிதளவு சேர்த்து நன்றாக பொளி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

* மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

* அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடோற்றவும்.

ஒரு உருண்டை எடுத்து வாழை இலையில் மெலிதாக தட்டி நடுவில் பூரணம் வைத்து மூடி மீண்டும் மெல்லியதாக தட்டி, தவாவில் போட்டு சுற்றி நெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு போளியை சுட்டு எடுக்கவும்.

* சுவையான உருளைக்கிழங்கு போளி ரெடி.

அஃஃஃஃஃஃஃஃஃஃஃ