• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உள்ளத்தின் காதல் சாகாதடா (அத்தியாயம் 1)

Veera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
57
7
8
Thoothukudi
உள்ளத்தின் காதல் சாகாதடா


அத்தியாயம் 1



சென்னையை அடுத்த நந்திதாவூர் என்ற ஊரிலிருந்து தினமும் அங்கிருந்து பஸ்சில் பயணித்து, ஜேர் ஆட்டோவில் நிறுவனத்திற்கும் சென்று கொண்டிருந்தாள்.. பியூரிட்டி வாட்டர் சப்ளேயர் நிறுவனத்தில் மேனேஜருக்குக் கீழ் அசிடெண்ட் ஆக பணிபுரிகிறாள்.


ஊருக்கும், பணிபுரியும் நிறுவனத்திற்கும் இடைப்பட்ட தூரம் ஒரு மணி நேரம் தான்.இந்த பணியில் ஒரு வருடமாக பணிபுரிந்து வருகிறாள்…


பியூரிட்டி நிறுவனத்தில் இருந்து வாட்டர் சப்ளே வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது… அதிலும் முக்கியமாக பியூரிட்டி நிறுவனம் வெளிநாட்டிலும் இரண்டு ரன்னிங்கில் உள்ளது… ஒரளவு இலாபம் தரக்கூடிய பிஸினஸ் தான் பியூரிட்டி வாட்டர் சப்ளே நிறுவனம் தமிழகத்தில் மூன்றாவது இடத்தில் இருந்தாலும் முதல் இடத்தை பிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது…


நமது பங்கும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பகலும், இரவும் பாராது அயராது உழைத்து பணிபுரிகிறாள் அபித்யா.. தன்னைப் பற்றி கவலைப்படுவதற்கு யாரும் இல்லை என்றாலும்,.அக்கா என அன்பாக பழகும் தம்பி உறவு இருக்கிறதே என நினைத்து கர்வம் கொண்டாள் ….


மேனேஜருக்குக் கீழ் பொறுப்பில் இருந்தாலும் மற்றவர்களின் பார்வை பொறாமையில் பதிந்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத முழு கவனத்தையும் பணியில் தான் செலுத்துவாள்.நம்ம வாழ்க்கையில் வேற ஒரு படி முன்னேறும் என்ற இலட்சியம் இருந்தால் போதும் என சுய நலமாக சிந்தித்தாள்.. . அந்த வேளையில் அவளின் கைப்பேசி ஒலித்தது… .


அபித்யா"சொல்லு யூவி,. சீக்கிரத்தில் போன் பண்ணிட்ட,நீ போன் செய்தால் கண்டிப்பாக காரணம் இருக்கும்,.. உனக்கு வரும் போது என்ன வாங்கிட்டு வரனும்…


அக்கா,.. இந்த தம்பியைப் பத்தி நல்லா புரிஞ்சு வச்சிருக்க,.. எனக்கு ப்ராஜட் பண்றதுக்கு ஏ4 ஷீட் வேணும்… வேலையை முடிச்சுட்டு ஞாபகமாக வாங்கிட்டு வந்துடு என்றவன் அழைப்பைத் துண்டித்தான்…




அபித்யாவும், யூவியை நினைச்சு வருத்தம் கொண்டாள்.. சிறு குழந்தை பேசுவதை போலவே அவனின் செயல்களும் அப்படியே இருக்கின்றது.. கல்லூரியில் முதலாமாண்டு படிக்கிறானே தவிர இன்னும் விவரம் பத்தலயே,.


தன்னுடைய பணியை முடித்து விட்டு லிப்ட்டை நோக்கி நடந்து சென்று கொண்டிருக்க,.. பின்னாலயே அவளோடு பணிபுரியும் ஸ்டாப் அழைத்தாள்…


மூச்சு வாங்க அபித்யா.. அபித்யா என்றவள்,. உன்னை ஹரிஷ் சார் கூப்பிடுறாங்க!..ஏதோ, முக்கியமான நியூஸ் அப்படினு..தான் சொன்னாங்க… ..


ஓ. கே..மா. தேங்க்ஸ்....


ஹரிஷ் அறையை நோக்கி உள் நுழைந்தவளை,.. உட்காரும்மா… சின்னதாக ஒரு மீட்டிங்,அதாவது கலந்துரையாடல்,. நீங்க உங்களோட கருத்துக்களைச் சொல்லிட்டு போகலாம்.. இப்போது பத்து நிமிஷத்தில் ஆரம்பித்து விடுவோம் .


சார், மணி ஐந்து ஆயிடுச்சு… உங்களுக்கே தெரியுமே,.. என்னோட பணி முடியும் நேரம் நான்கு மணி.. இன்னிக்கு கொஞ்ச நேரம் அதிகமாக வேலை பார்த்துட்டேன்…


சரியான நேரத்தில் வீட்டுக்குப் போக வில்லையென்றால், எங்க பெரியம்மா திட்டுவாங்க என்று சொன்னவள்,காதில் வாங்காத ஹரிஷ்,.. கலந்துரையாடலை துவங்கி விட்டார்..


கலந்துரையாடல் முடியவே ஆறு மணி ஆயிடுச்சு.. அனைவரும் கிளம்பினர்… அபித்யா விறுவிறுவென செல்ல அதற்கு முன்பு லிப்ட் கீழே இறங்கி விட்டது.சற்று நேரம்காத்திருக்க, அடுத்த நொடியில் லிப்ட் மேலே வர ஏறினாள்… .இவளின் நேரமோ, என்னவோ பாதியிலே நின்றதும் அதிர்ந்து போனாள் ..


யாராவது இருக்கீங்களா,.. ஹெல்ப், ஹெல்ப் கூச்சலிட எவருமே இல்லை,. அவள் அழைத்ததோ யாருடைய செவியில் விழ வில்லை.. லிப்ட்டில் உள்ள பல்பின் வெளிச்சம் மறைந்து மறைந்து மிளிர்ந்தது…


அபித்யா நெற்றியில் இருந்து ஒவ்வொரு துளியாக விழ, கையினில் வைச்சிருந்த கைக்குட்டையை எடுத்து நெற்றியில் துடைக்க, பயத்தில் மனசெல்லாம் படபடவென துடிக்க,. தன்னுடைய பயத்தை தணித்து விட்டு கேன்பேக்கில் போனை எடுக்க முயற்சித்தவள்,.. கைப்பேசியை காணலயே என்ற பதற்றமும் அவளை வாட்டியது… .


நினைவில்லாமல் மேனேஜர் அறையினிலே வச்சிட்டு வந்துட்டேனே!... தலையில் கைவைத்தபடி, கடவுளே!.. தம்பி அழைப்பானே!. இனியென்ன செய்வேன் அவளின் பயத்தை தணிக்க முயற்சித்தாலும் வெளிச்சமும், காற்றும் இல்லாத அறை அவளுக்கு பதற்றத்தை அளிக்க,.. தலைசுற்றியே

மயங்கியவள் எதிர்பாராத சூழ்நிலையில் லிப்ட்டில் மாற்றிக் கொண்ட பிடியில்….


விடியற்காலை ஐந்து மணி,


..வாசற்கதவு திறந்த நிலையில் இருக்க,. கடிகாரத்தின் அலாரமணி ஓசை கேட்டு திடுக்கென்று எழுந்து வாசலேயே எட்டிப்பார்த்தான் யுவனேஷ்..


மேனேஜர் அறையில் நினைவில்லாமல் விட்டு சென்ற, அபித்யாவின் கைப்பேசி

ஒலித்துக் கொண்டே இருந்தது…வெளிச்சமில்லாத அறையினில் அழைப்பு மணியில் அலறல்… .


ச்சே,.. அக்காவுக்குப் போன் பண்ணாலும் எடுக்கவே மாட்டேங்கிறாங்க….என்னாச்சுனு தெரியலயே என்ற பதற்றத்துடன் தம்பி யுவனேஷ்… ..


அபித்யா பணிபுரியும் நிறுவனத்தில் விசாரித்து விட்டேன். அந்த செக்யூரிட்டி சீக்கிரமாகவே பணியை முடிச்சுட்டு போயிட்டாங்க என சொல்லி விட்டார்…


யுவனேஷ், "அக்கா, வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பாங்களே, தனக்கான பணியை முடிச்சுட்டு சரியான நேரத்தில் வீட்டுக்கு வந்துடுவாங்க… நேற்று போன அக்கா இன்னும் வீடு வந்து சேரவில்லையே என நினைக்கும் போது ஒரே பதற்றமாக உள்ளது.


இன்னும் அம்மா, அப்பா தங்கை எல்லாரும் கோவிலுக்குப் போயிருக்காங்க,.. இப்போது வருகிற நேரம் தான்… அபித்யா இன்னும் பணியை முடித்து வராதது தெரிந்தால் அம்மா வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவாங்க… ..


அக்கா,. நீ எங்க தான் இருக்குற என்று இரு கைகளையும் தலையை தாங்கியபடி குழப்பத்தோடு மெல்லமாக

சோபாவில் சாய.. அவனின் நினைவில் அபித்யா மேனேஜரிடம் போனில் கூறிய விஷயம் அலை போல மிதந்தது… ..


ஹலோ, சார் லிப்ட்டில் என்ன பிரச்னை எனத் தெரியவில்லை… திடீரென்று நடுவானில் நின்னுடுது…அத சீக்கிரம் சரிபார்க்க சொல்லுங்க… என அழைப்பைத் துண்டித்தாள்… ..


சற்றென்று எழுந்த யுவனேஷ்,.வெளியே பைக்கை ஸ்டார்ட் செய்துஅக்கா பணிபுரியும் பியூரிட்டி வாட்டர் சப்ளேயர் நிறுவனத்திற்கு பைக்கை அழுத்தினான்… .ஒரு வேளை லிப்ட்டில் மாற்றிக் கொண்டிருப்பாளோ என்ற சிந்தனையிலேயே சென்றான்…


நிறுவனத்தின் அருகே நெருங்கியவன் பைக்கை சரியாக நிறுத்தாமல் கீழே போட்டு விட்டு பரபரப்பாக உள் நுழைந்து,... லிப்ட்டை ஆன் செய்ய முயற்சித்தவனை தடுத்தார் செக்யூரிட்டி…


அடேய்,.. தம்பி.. என்னுடைய அனுமதி இல்லாமல் நீ லிப்ட்டை ஆன் செய்ய முடியாது… எங்களுடைய முதலாளிக்குத் தெரிஞ்சா அவ்வளவு தான், என்னை பணியை விட்டு நிறுத்தி விடுவாங்க… .நிறுவனம் சரியாக எட்டு மணிக்கு செயல்படும்… நீ போகலாம் என கண்டித்தார்…


ஐயா,.. புரிஞ்சுக்கோங்க, லிப்ட்டில் அக்கா மாட்டிக்கிட்டு இருக்குறாங்கன்னு தோணுது… தயவுசெய்து ஒரு பத்து நிமிஷம் டைம் கொடுங்க பார்த்துட்டு போயிடுறேன்… .


என்னப்பா,..சொல்ற… .சீக்கிரம் போ… சுவிட்ச்யை ஆன் செய்துட்டு வா என்றார்…


யுவனேஷ் பதற்றமாக சென்று. சுவிட்ச்யை முயற்சி செய்ய, ஆன் ஆகவே இல்லை… ஏற்கனவே சுவிட்ச்க்குப் பின்புறம் வயர் அறுந்து கிடந்தது… .


வயர் அறுந்து கிடந்ததை செக்யூரிட்டியிடம் கூற, அவரோ அவருக்குத் தெரிந்த எல்க்ட்ரிசியன் நபருக்கு அழைத்தார்..


விரைவிலேயே வந்த நபரோ அறுந்த கிடந்த வயருக்குப் பதிலாக வேறோரு வயரை சொருகி இணைத்து கொடுத்ததும் சுவிட்ச் பாக்ஸில் உள்ள சிறிய லைட் லேசாக மின்னியது… நடுவில் நின்றிருந்த லிப்ட் தானாகவே மேலே வர,.அதற்குள்ளேயே யுவனேஷ் அக்கா.. அக்கா.. எழுந்திரு என கன்னத்தைத் தட்டி எழுப்ப மெதுவாக கண் விழித்தாள்…


அபித்யா, "யூவி, நீ எப்படி இங்க,... கையை பிடித்து மெதுவாக எழ,.. தக்க சமயத்தில் மேனேஜர் வந்தார்…



மேனேஜர், "என்னம்மா ஆயிடுச்சு எனக் கேட்டதும், இறுதியாக லிப்டடில் ஏறும் போது நடுவிலே நின்னு போயிடுச்சு,.. அப்புறம் மயங்கிட்டேன்..இப்போது தான் கண் விழித்தேன் என சோர்வாகவே கூறினாள் அபித்யா… .


செக்யூரிட்டி உங்ககிட்ட நேற்றே வயரை பழுதடைந்த நிலையில் இருக்குது.. சீக்கிரம் பழுது பாருங்கள் என அடிக்கடி சொன்னேன்.. இப்ப பாருங்க ,அபித்யா உள்ளே மாட்டி விட்டதால் எவ்வளவு பரபரப்பாக ஆகி விட்டது.உனக்கு வேற பிரச்சினை ஏதும் இல்லையே,...


அபித்யா, "இல்ல சார்.. I am okay,..


செக்யூரிட்டி, "என்னை மன்னித்து விடுங்க,சார்...மின்பணியாளருக்குப் போன் செய்தேன்… அவரும் வாரேன், வாரேன் என்றவர் இறுதி வரைக்கும் வரவே இல்லை… இனிமேல் இந்த தவறு நடந்து கொள்ளாமல் பார்த்துக் கொள்கிறேன் எனக் கெஞ்சினார்…


நீ இன்னிக்கு பணிபுரிய வர வேண்டாம்.. வீட்டுல போய் நன்றாக ஓய்வெடு பரிவாக பேசினார்… .


அபித்யா, "சார், என்னுடைய கைப்பேசி உங்களுடைய அறையில் இருக்கிறது,கொஞ்சம் அதை எடுத்துட்டு வந்து கொடுக்க முடியுமா தயக்கமாக சொன்னாள்…


மேனேஜர், செக்யூரிட்டி இந்தாங்க என்னுடைய அறையின் சாவி, இவர்களுடைய கைப்பேசியை எடுத்துட்டு வாங்க, உத்தரவிட்டார்…. .


கைப்பேசியை வாங்கி பேக்கினுள் போட்டு விட்டு பைக்கில் மெல்லமாக ஏறி அமர,. வீட்டை நோக்கி சென்று கொண்டிருக்க, இடையிலே தேநீர் ஷாப்பில் நிறுத்தினான்… ..


யூவி, அக்கா இறங்கு நீ ரொம்ப சோர்வாக இருக்கிறாய்,.. முதலில் தேநீர் பருகிட்டு போகலாம் என்றான்…


அபித்யா, மெதுவாக டேபிளில் அருகே உள்ள பெஞ்சில் அமர்ந்தாள்..


யுவனேஷ், இந்தாங்க,வாட்டர் பாட்டில் மூஞ்சைக் கழுவுங்க…. .நீட்டினான்… .


முகத்தைக் கழுவிய,அபித்யா,கையில் வச்சிருந்த கைக்குட்டையால் துடைத்தாள்..


யுவனேஷ், "டம்ளரில் தேநீரை பருகும் படி அன்பை வெளிப்படுத்தினான்..


அபித்யா, "தம்பி அம்மா, அப்பா எல்லாரும் கோவிலுக்குப் போனாங்களே வந்துட்டாங்களா,...


சற்று யோசித்து, தலையில் கைவைத்தபடி அச்சச்சோ,.. வீட்டைத் திறந்து போட்டு வந்துட்டேனே,. அவங்க வந்து பார்த்தாங்கன்னா,. நம்மல திட்டியே சாகடிப்பாங்களே,.. என்றான் யுவனேஷ்… .


அபித்யா, "என்னடா இரவு முழுவதும் வீட்டுக்கு வராத விஷயத்தை பெரியம்மாவிடம் சொல்ல வில்லையா,..


இல்லைக்கா,..உன்னை இரவு முழுவதும் தேடிட்டு இருந்தேன்,.. உம் போனுக்கும் முயற்சி செய்தேன்.. நீ எடுக்கவே இல்லையா!.. அப்புறம் எனக்கு என்ன பண்றதுனு தெரியல,.திடீரென்று ஞாபகம் வந்துச்சு, மீண்டும் பைக்கை எடுத்து கிளம்பி வந்துவிட்டேன்…


அபித்யா, "டேய்,.. வா.. டா. அம்மா வருவதற்குள் வீட்டுக்குப் போயிடுவோம் எனச் சொன்னதும் வீட்டை நோக்கி பாய்ந்தான்.


கதிரவனின் பார்வை நம் மீது படனும் என்ற ஆர்வத்திலேயே மொட்டை மாடிக்குச் சென்றாள் சுபத்ரா,.. .


கடவுளே!.. சூர்யபகவானே இன்றைய பொழுது அனைவருக்கும் இனிய பொழுதாக இருக்க வேண்டும் என தொழுதுகொண்டே திரும்ப, பின்னாலேயே வெறித்து பார்த்தபடி நின்றிருந்தான் பிரசாத்… .


சுபத்ரா, "ஏங்க காலையிலேயே முகத்தை வெறித்தனமாக வச்சு இருக்கீங்க.. எனக்கு வழியை விடுங்க,.. கீழே போய் அத்தை, மாமாவுக்கு காபி போட்டு கொடுக்கனும் என விரைந்தாள்… .


மாடியில் இருந்து கீழே இறங்கிய சுபத்ரா, அட, இன்னிக்கு எல்லாருமே சீக்கிரமாக எந்திருச்சுட்டீங்க என புன்னகையோடு கூற,யாரும் கவனிக்காமல் தொலைக்காட்சியை நோக்கியபடி இருந்தனர்…


அத்தை,.. அத்தை… என அழைக்க… சமையல்அறையினுள் இருந்து குரல் கொடுத்தாள் புஷ்பலதா…


கிச்சனுக்குள் நுழைந்தவளோ, அவங்க அத்தையிடம் பரிவாக, இதெல்லாம் காலங்காத்தாலேயே பார்த்துட்டு இருக்கீங்க,.. நீங்க போய் டேபிளில் அமருங்க, நானே பார்த்துக்கிறேன் ....


அடியேய் ,எனத் தலையில் கொட்டி, நீ அங்க மணியைப் போய் பாரு என்றவளின் விழி கடிகாரத்தின் பார்வையில் விழ, எட்டரையைத் தாண்டியது… .


ஓ.. மை. காட் மணி, எட்டரையை தாண்டிவிட்டதா,.. அதான் இன்னிக்கு சூரியபகவான் பிரகாசமாக தெரிந்தாரோ,..


பின்பக்கமாக வந்த பிரசாத், திரும்பவும் அவளின் தலையிலேயே கொட்டி,.. இன்னும் ஒரு மணிநேரம் தூங்கியிருந்தாள் நூலகத்தின் உள்ளே சேர்த்திருக்க மாட்டாங்க,எனக் கிண்டலாக… .


அத்தை.. என்னை மன்னிச்சுடுங்க,.. தினமும் விரைவாக எழுந்திருக்க தான் முயற்சி செய்யுறேன்..என்னால முடியல என சரணடைந்தாள்… .


இப்போது புரியுதா,உன்னால இந்த சின்ன விஷயத்தைக் கூட. செய்ய முடியலேனு ஒத்துக்கிறீயா நக்கலாக அவளுடைய கோபத்தைத் தூண்டினான்..


ஏங்க, ஏதோ நேற்று வேலை அதிகமாக இருந்ததால் உடம்பு அசதியில் கொஞ்சம் அதிகமாக தூங்கிவிட்டேன்,.. அதுக்காக எப்போதும் இப்படியே இருந்துடுவேனு தப்பு கணக்கு போடாதீங்க,..


பிரசாத், "உனக்கு நூலகத்தில் அம்புட்டு அதிகமாகவா இருந்துச்சு… என்னால நம்ப முடியல,.. என சந்தேகத்தோடு… .


சுபத்ரா, "நீங்க எப்ப தான் என்னை நம்புனீங்க!.. இப்ப நம்பறதுக்கு என வெடுக்கென்று பேசிட்டு மாடிக்குச் சென்றாள்… .


புஷ்பலதா , "ஏன்டா அவளை காலையில் டென்ஷன் படுத்துற,நீ போய் கிளம்பிட்டு வாம்மா என அதிகாரத்தோடு… .


அம்மா ,..மித்ரனை எங்கே?..


டேய், அவன் காலையிலேயே எலக்ட்ரிக்கல் கடைக்குப் போயிட்டான்.. நான் சொன்னா கேட்கவே இல்லை.. எனக்கு மனசு சரியில்லை என சொல்லிக்கிட்டு திரியுறான்… .பிரசாத் உங்க மாமாவிடம். பேசினாயா,.. அவங்க இரண்டாவது மகள் பிருந்தா,சுபத்ராவோட தங்கை நம்ம மித்ரனுக்கு மணம் முடிக்கிற விஷயத்தைப் பத்தி என்றாள் தயக்கமாக… ..


பிரசாத், :அம்மா,.. அவரிடம் போனில் பேசினேன்,.. நீங்க நேராக வாங்க மாப்பிள்ளை எனச் சொல்லி போனை வச்சுட்டாரு… '


ஒரு வேளை அவங்களுக்கு விருப்பமில்லையா,... அதனால் நேரில் வாங்க எனச் சொல்லியிருப்பாரோ,.. என வினவினாள்….


பிரசாத், "அப்படியெல்லாம் இருக்காது… அவங்க பொண்ணு மேன்மேலும் படிக்கனும்னு சொல்கிறாளாம்.

இப்போது கல்லூரியில் இறுதியாண்டு முடிக்கப் போகிறாள்.. இன்னும் இரண்டு வருடம் படித்து முடிச்சுட்டா ,அவளே தனியாக மெடிக்கல் ஷாப் வச்சுடுவாளாம்.. .சுபத்ரா தான் சொல்லிக்கிட்டு இருந்தா ..



சரிடா,.. படிக்கிற புள்ளைய தொந்தரவு செய்யக்கூடாது, கொஞ்ச நாள் போகட்டும் என பெரு மூச்சு விட்டபடியே பணியைத் தொடர்ந்தாள்…


நூலகத்திற்குக் கிளம்பிய சுபத்ரா தயாராகி டைனிங்க டேபிளில் அமர்ந்தாள்….அவங்க மாமா மகேந்திரனும் அப்போது தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்…


ஏம்மா,.. மருமகளே….


சொல்லுங்க மாமா… ..


மகேந்திரன், "நூலகத்தில் இருந்து வரும் போது மாமாவுக்கு இராமாயணம் புத்தகம் வரும் போது எடுத்துட்டு வந்துரும்மா'… .


சரிங்க,மாமா...அத்தை உங்களுக்கு புத்தகம் ஏதும் எடுத்துட்டு வரனும்மா,...


புஷ்பலதா, "ஏற்கனவே உள்ள புத்தகத்தை படிக்காமல் வச்சுருக்கேன்…அந்த புத்தகத்தைப் படித்து முடித்ததும் சொல்றேன் …


சுபத்ரா, "அனுஷ்கா எழுந்துட்டாளா,...


இல்லம்மா.. இன்னும் தூங்கிட்டு தான் இருக்குறா,...


அத்தை, அவளை சீக்கிரமாக எழுப்பி விடுங்க.. இல்லையென்றால் என்னை மாதிரி விடிய விடிய தூங்கப் போறா என்றவள் …


பிரசாத், "எம் பொண்ணு உன்னை மாதிரி விடிகிற வரைக்கும் தூங்க மாட்டாள்.. அவ அப்பவே எழுந்து படம் வரைந்து கொண்டு இருக்கிறாள்'…


புஷ்பலதா, "என்னடா சொல்ற அவ எப்ப எந்திரிச்சா,.. இம்புட்டு நேரமா ஹாலில் தான் உட்காருந்து இருந்தேன்…


அதுவா பாட்டி, நான் உங்களுக்கே தெரியாமல்,.. தவண்டு அப்பா இருக்கிற அறைக்கு வந்துட்டேன்… .


அம்மு குட்டி இங்க வா,.. ப்ரஷ் பண்ணுவோம் என்றழைக்க… ..


அம்மா,.. அவ ப்ரஷ் செய்துட்டா,.. அவளுக்கு டிபன் ஊட்டி விடுங்கள் என்றான் .


அத்தை நானும் அப்படியே கிளம்புறேன் ….அனுஷ்கா குட்டி… அம்மாவுக்கு டாட்டா போடுங்க… என்றதும்… டாட்டா, காட்டினாள்… ..


தொடரும்..








.


















.






 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,105
679
113
Ariyalur
யூகி ரெம்ப பாசக்கார பையன் தான் வீட்டை கூட பூட்டாம அக்காவை தேடி போய்ட்டானே 👍👍👍👍👍.
தூங்கமூஞ்சி சுபத்ராவா இல்ல வேலை பழுவால் அசதி தூக்கமா 🙄🙄🙄🙄