• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உள்ளத்தின் காதல் சாகாதடா (அத்தியாயம் 2)

Veera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
57
7
8
Thoothukudi
உள்ளத்தின் காதல்

சாகாதடா


அத்தியாயம் 2


மித்ரன் கடையைத் திறந்து வைத்து விட்டு, சோகமாக அமர்ந்து, அபித்யாவைப் பத்தி நினைவில் மிதந்தான்.. அவளோ மித்ரனிடம் சண்டை போட்டு விட்டு ஊரை விட்டு போகிறேன் எனச் சொல்லிட்டு போய் விட்டாள்.. அப்படி இருந்தும் அவள் மேல் வைத்த பாசம் என்னை விட்டு நீங்கவே இல்லை என தனக்குத்தானே பேசிக்கொண்டான்… .


எலக்ட்ரிக்கல் கடையை நோக்கி விரைந்து வந்தான் பிரசாத் ….தன்னுடைய தம்பியின் முகத்தைப் பார்க்க அவனுக்கு பிடிக்க வில்லை… ஏனென்றால் அவன் தான் அபித்யாவின் நினைப்பிலேயே இருக்கிறானே,..


டேய்.. மித்ரன்.. மித்ரன்..என தோள்பட்டையைத் தட்டி எழுப்பி விட சுய நினைவுக்கு வந்தான்… .


அண்ணா, நீ எப்போது வந்த,...


நான் வந்து அரைமணிநேரம் ஆயிடுச்சு.உன்னுடைய நினைப்பு தான் இங்கு இல்லை என கோபத்தோடு வினவினான்… .


ஆமாம்.. அண்ணா,.. என்னோட நினைப்பு தான் பிழைப்பைக் கெடுக்குது… .அவளை நான் முதலில் பார்த்த போதே என் மனதை பறி கொடுத்து விட்டேன்… மறக்கவும் முடியாமல் நினைக்காமல் இருக்கவும் முடியாமல் செத்து செத்து பிழைக்கிறேன் ….


என்னடா..மித்ரன்… நீ இதுவரைக்கும் அழுததைப் பார்த்ததே இல்லை.. உன்னை இப்படி பாக்கிறது வீட்டுல உள்ள எல்லாருக்கும் எம்புட்டு வருத்தம் தெரியுமா,... உன்னை நினைச்சு அம்மாவும், அப்பாவும் புலம்பிட்டு தான் இருக்காங்க,.. அவ தான் உன்னை பிடிக்கலனு சொல்லிட்டு போயிட்டாளே,.. அப்புறம் என்னத்துக்கு அவளை நினைச்சுட்டு இருக்கிறாய்… .


மித்ரனின் கைப்பேசி ஒலிக்க, அதை எடுத்த பிரசாத் அம்மா தான் போன் பண்றாங்க… நீ அழுகிறது தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாங்க ,நீ கண்ணைத் துடைச்சுக்கோ,... நம்பரை அழுத்தி மித்ரனின் கையில் கொடுத்தான்… .


புஷ்பலதா, "ஹலோ,.. மித்ரன் கண்ணு காலையில் இருந்து ஒன்னும் சாப்பிடாமல் இருக்குற,நீ முதலில் கிளம்பி வீட்டுக்கு வா' என்றாள்… .


வீட்டுக்குள்ளேயே வாசலை எதிர்பார்த்தபடியே அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தாள் ஜோதி…


இரவு முழுவதும் கண் விழித்து .இருந்துருக்க...இப்போது போய் கொஞ்ச நேரம் ஓய்வெடு.. யுவனேஷ் வந்ததும் கேட்போம்…


இல்லங்க.. இன்னிக்கு அவ இங்க இருக்கவே கூடாதுங்க… நானும் ஆரம்பத்தில் இருந்து பொறுத்து தான் போறேன்.. இவ வேலை பார்த்து நம்ம கையில கொடுக்கிறாளா… .இங்க வந்து தங்குவதற்கு, உங்க தம்பி மகள் என்பதால் பாசம் கூடுதோ !. நமக்கென்று ஒரு பொண்ணு இருக்குறா,.. அத தெரிஞ்சுக்கோங்க,..


புகழேந்தி, "ஏம்மா அவளுக்கு என்னை விட்டா வேற எந்த சொந்த பந்தமும் கிடையாது… அவ எங்க தான் போவாள் என வினவினார்…


அவளுக்கு தான் வெளிநாட்டில் நண்பர்கள், தோழிகள் எல்லாரும் இருக்காங்களாமே ,...அங்க போகசொல்லுங்க என வார்த்தைகளை பொருமி தள்ளினாள்…


வாசலின் பைக்கை நிறுத்திய யுவனேஷ், அக்காவிடம் அம்மா வந்துட்டாங்க,.. எப்படி சமாளிக்க போறேனோ!.. என முணுமுணத்தான்… .

வாடா.. வாடா..வாசல் கதவை திறந்து வச்சுட்டு ,நீங்க இரண்டு பேரும் எங்க போயிட்டு வர்றீங்க,..


யுவனேஷ், "அம்மா அக்கா நேற்று வேலையை முடிச்சுட்டு லிப்ட்டில் ஏறியதும் அது நடுவில் நின்னுடுச்சு… அதனால் அந்த பயத்திலும், பதற்றத்திலும் மயங்கி விழுந்து விட்டாள்… அக்காவோட போனும் சுவிட்ச் ஆப் ஆயிடுச்சு…


நானும் இரவு முழுவதும் தேடினேன்.. இறுதியாக தான் லிப்ட்டில் சிக்கியிருப்பாளோ என்ற யோசனை எழுந்தது… இப்போது தான் பணிபுரியும் இடத்தில் இருந்து இவளை அழைச்சுட்டு வாரேன் என்றான்…


அபித்யா உனக்கு ஒன்னுமில்லையே!,..நீ வாம்மா வந்து உட்காரு என பாசமாக பேச,...


இவருக்கு என்னாச்சு,அபித்யா வந்துட்டா மட்டும் ஓவராக பாசமாக பொழிகிறாரே, என சிந்தித்தவளோ,..எதுவும் பேசாமல் மெளனமாக செல்ல,.. வழியினில் தூங்கிக் கொண்டிருந்த ஷீலாவின் கைகளை மிதித்து விட்டதும் கூச்சலிட்டாள்…


பதற்றமாக கீழே அமர்ந்த ஜோதி ஸாரி.மா..ஸாரி.. ஆறுதலாக கூற,.. திரும்பவும் அப்படியே தூங்கி விட்டாள்…


யுவனேஷ், "இவ கும்பகர்ணனுக்கு தங்கச்சியாக இருக்க வேண்டியவள், எனக்கு அடுத்த பிறந்து இப்படி தூங்கு மூஞ்சியாக இருக்குறாளே, தெனாவட்டாக பேசிக் கொண்டு உள்ளே சென்றான்…


யூவி, "அக்கா,.. உன்னிடம் வரும் போது வாங்கிட்டு வரச் சொன்னதை மறந்துட்டீயா,.


அபித்யா, "என்னடா வாங்கிட்டு வரச் சொன்னாய்… அக்காவுக்கு ஞாபகம் இல்லையே,... சற்று யோசித்தவள்…ஓ. நீ ஏ4 சீட் தானே வாங்கிட்டு வரச் சொன்னாய்… .


யூவி ,"அட,..சீக்கிரமா கண்டுபிடிச்சுட்டீயே,.. லிப்ட்டில் மயங்கி விழுந்தாலும் உனக்கு மூளை நல்லா தான் வேலை செய்யுது .


அபித்யா, "உனக்கு எதுக்குடா ஏ4 சீட்… .இத்தனைக்கும் கல்லூரி படிச்சுட்டு இருக்குறீயே!...


யூவி, "கல்லூரியில் படிக்கிறதா இருந்தா ஏ4 சீட் வாங்கக்கூடாதா என எதிர்கேள்வி கேட்க… .


அபித்யா,". டேய் அப்படி கேட்கல டா… நானும் கல்லூரியில் படிச்சு தான் வந்துருக்கேன்… இந்த மாதிரி ஏ4 சீட் வாங்கி எழுதியது கிடையாது…



யூவி,"அக்கா கல்லூரியில் படிக்கிறவங்களுக்கும் ஏ4சீட் தேவைப்படும்… எனக்கு assignment கொடுத்துருக்காங்க.. அதுக்காக தான் உன்னை வாங்கிட்டு வரச் சொன்னது… .


அபித்யா.,"கொடுப்பாங்க.. டா.. ஆனால் ஏ4 சீட் யூஸ் பண்ணது இல்ல'… .டா… ஏனென்றால் நான் எழுத மாட்டேன்… எனக்குப் பதிலாக என்னுடைய தோழி எழுதிட்டு வருவா,.


ஓ.. கோ.. இப்போது புரியுது அக்கா..உன்கிட்ட பேசினால் பேசிக்கிட்டே இருப்பேன்..

நானும் போய் முதலில் எழுதுகிறேன்.


அபித்யாவோ அவளின் துணியை அழகாக அடுக்கி வைத்துக் கொண்டிருந்தவளின், துணியின் அடியில் ஒரு டைரி தென்பட்டது… அதை எடுத்த பிரித்து பார்த்தவள்,.


2014…..புதுவருடம் இன்று…

முதல் பக்கத்திலேயே குறிப்பிட்டிருந்தது…டைரியை படிக்கவா, வேண்டாம்மா என சிந்தித்தவள்,. இத படிக்க ஆரம்பிச்சா, அவனின் நினைவுகள் திரும்பவும் மனசுல அலை பாய தொடர்ந்து விடும்…


நம்ம முதலில் டைரியை. குப்பையில் போடுவோம் என்று எடுத்துச் சென்ற வேளையில் அவங்க பெரியம்மா எதிரே வர, கைகளை பின்பக்கமாக வைத்துக்கொண்டு மறைத்து வைக்க, டைரியை தூக்கி போட்டதும் யுவனேஷின் பக்கமாக விழுந்தது…


ஜோதி, "என்னைப் பார்த்ததும் கையைப் பின்பக்கமாக கொண்டு போற,.. உன் கையைக் காட்டு என அதட்டினாள்…


இதோ என் கையுல ஒன்னுமில்ல பெரியம்மா,..


இப்போது பார்க்கும் போது ஏதோ ஒன்னு தெரிந்ததே!..என்னைப் பார்த்ததும் பின்னால கொண்டு போன,.. ஆனால் முன்னால் கையை நீட்டும் போது எதுவும் இல்லையே பலத்த யோசனையில் அவளிருக்க… .


ஜோதி… ஜோதி.. என அவசரமாக அழைத்த புகழேந்தி…


பலத்த யோசனையில் இருந்த பெரியம்மாவின் கையை தட்ட,...


ஹேய்,.. ஏன்டி யோசிக்க விடுடி… பெரியம்மா, பெரியப்பா கூப்பிடுறாங்க… ஏதோ அவசரமான விஷயமா,...


சரி.. சரி.. போறேன்..நீ இந்த துணியை மாடியில் போய் காய போட்டு விட்டு வா என்றதும்…


மும்ம்.. என்றாள்… .


எழுதிக் கொண்டிருந்த யுவனேஷ் டைரியை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டு அவன் செயலை செய்து கொண்டிருக்க,. .


மாடிக்குச் சென்ற அபித்யா துணியைக் காயப் போட்டு விட்டு விரைவாக வீட்டுக்குள்ளே நுழைந்தவள், டைரியை தூக்கி போட்ட இடத்தில் அங்குமிங்குமாக சுற்றி சுற்றி பார்க்க காணவில்லை… ஒரு வேளை தம்பி எடுத்து வைச்சு இருப்பானோ அவனை அழைக்க முற்பட்ட போது,.சொல்ல வந்த வார்த்தைகளை கூறாமல் வாயை மூடியவள்… .


.இவனிடம் கேட்டால் கேள்வி மேல் கேள்வி கேட்பான்… நம்ம அப்புறமாக இவன் போன பின்பு தேடுவோம்… .


அக்கா, ஏதோ என்னிடம் கேட்க வந்து,வார்த்தைகளை மென்று முழுங்கி மாதிரி தெரியுதே,...


அபித்யா,"அதெல்லாம் ஒன்றுமில்லை… என நழுவினாள்… .


யுவனேஷ், "இந்த டைரியைப் பத்தி தான் கேட்க வந்துட்டு அப்படியே போறீயா,.. அப்படினா இந்த டைரியில் முக்கியமான விஷயம் இருக்குது என நினைத்து ஒளித்து வைத்திருந்த டைரியை மெல்லமாக எடுத்து பார்க்க… .


அடடடா,..அடுத்தவங்க எழுதுற டைரியைப் படிக்கிறதுல எம்புட்டு ஆர்வம்,..முதல் பக்கத்தை விரிக்க,.. அதில் 2014...புது வருடம் எழுதியிருந்தது… .


"முதல் பார்வையிலேயே

என் மனதைக் கவர்ந்தாயேடா!.. '


"பூட்டி இருந்த இதயத்திலேயே'

. திறவுகோலில்லாமல்

. உள்நுழைந்தாயேடா!'


மீண்டும் சந்திக்கும் நாளை

எதிர்பார்க்கிறேனடா,..


ச்சே.. நம்ம அக்காவோட டைரியா இது,.. யாரை இந்த அளவுக்கு லவ் பண்ணிருக்காங்களே,.

வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமல் சாதாரணமாக எப்படி இருக்க முடிகிறது யோசித்தவனோ,..

அடுத்த பக்கத்தைத் திருப்பினான்… …


விரைவிலேயே உன்னை

சந்தித்தேனடா!....



உன்னை தொலைவிலேயே

. ரசித்ததேனடா!.



கண்டு கொண்ட நீயே

என்னருகில் வந்தாயேடா!..


அப்படியே புல்லரிக்குதே,..அம்புட்டு அழகாக அக்கா காதல் கவிதையை வருணிச்சிருக்காங்களே!... என படித்த வேளையில் பின்பக்கமாக வந்த அபித்யா வெடுக்கென்று எடுத்தாள்…


கடுங்சினங்கொண்ட அபித்யா அவனைப் பார்த்து ,.. ..நீ இப்படி செய்வேனு நினைக்கல டா,என எரிச்சலோடு வினவினாள்… .


அக்கா, நில்லு,..டைரியில் யாரையோ நேசிக்கிறதை பத்தி எழுதியுள்ளாயே!.. அது யாருக்காக எதார்த்தமாக கேட்டான்… .


அபித்யா , "நீ எதுவும் பேசாதே.. என்னுடைய டைரியை என்னோட அனுமதி இல்லாமல் படிச்சதே தப்பு,.. இதுல வேற முடிஞ்சு போனதைப் பத்தி கேட்குறீயா… என பொருமியபடி..


அக்கா,...சொல்லு வலுக்கட்டாயமாக கேட்டவனை,.. பதில் ஏதும் பேசாமல் அவளுடைய அறைக்குள் நுழைந்தாள்…


அபித்யா, "யூவி நீ இப்படி செய்வேனு கொஞ்சங்கூட எதிர்பார்க்கல, இனிமேல் உன்னோடு எப்போதும் பேசவே மாட்டேன் என சொல்லிட்டு அறையின் கதவைச் சாத்தினாள்… ..


உள்ளேயிருந்த அபித்யா, அவளுடைய கண்களில் இருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது… அவன் மேல் நான் ரொம்ப காதலை வச்சுட்டேன்.. அதான் அவனை என்னால மறக்கமுடியாமல், அவனின் நினைவாக தான் டைரியை வச்சுருக்கேன்… இனிமேல் இங்க இருந்தால் அவனுடைய ஞாபகம் வந்துட்டே தான். இருக்கும்.. நம்ம நாளைக்கே வெளிநாடு கிளம்ப வேண்டியது தான் என்றாள்..


வீட்டுக்கு வந்த மித்ரன் சோபாவில் அமர்ந்து மெளமாக இருந்தான் ..


புஷ்பலதா, "ஏன்டா மித்ரன், கையை கழுவி விட்டு சாப்பிட வா என அழைக்க பித்து பிடித்தது போல இருக்க ,அவனருகில் சென்ற தலையை கோரி விட்டாள்… .


மித்ரன், "அம்மா என மடியில் தலை சாய்த்து படுத்தவன், ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டீயே,...


என்னடா, சொல்லு என பரபரப்பாக கேட்டாள் புஷ்பலதா… .


எனக்கு மனசே சரியில்லம்மா… கொஞ்ச நாள் ஊட்டிக்கு பக்கத்துல இருக்குற சித்தி வீட்டுக்குப் போயிட்டு வரட்டும்மா,.. அங்க போனா எனக்கு மனசுல உள்ள பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கும்… .


உனக்கு என்ன தான்டா பிரச்சினை..என்னிடம் சொன்னால் தானே தெரியும்.. மனசுக்குள்ளேயே போட்டு புதைத்து வைத்தால்

அது இறுதியில் பெரியளவு பிரச்சனையில் கொண்டு வந்து விட்டுரும் …


இப்போதைக்கு எதுவும் கேட்காதே,.. நானும் சொல்ற நிலைமையில் இல்லை… நீ சித்தியிடம் பேசிட்டு சொல்லு இன்று இரவே கிளம்பனும் என்றவன் சாப்பிட அமர்ந்தான்..


அறையை விட்டு வெளியே வந்தவளோ, அனைத்து துணிகளையும் ஒரு சூட்கேஸில் எடுத்து வைத்து வரவும், புகழேந்திக்கும், யுவனேஷீக்கும் அதிர்ச்சி ஆனது..


ஏம்மா,.. அபித்யா எங்க கிளம்புற,...


பெரியப்பா என்னுடைய பணியை வெளிநாட்டுக்கு டிரான்ஸ்பர் செஞ்சுட்டாங்க.. இப்போது அங்க தான் போறேன்…


என்னம்மா.சொல்ற,.. நேற்று வரைக்கும் இங்க தான் வேலை பார்க்க போகிறேன் . எப்பொதுமே தமிழ்நாட்டை விட்டு எங்கேயும் போக மாட்டேனு சொன்னீயே,...


ஆமா,.. பெரியப்பா.. இன்னிக்கு தான் வெளிநாட்டில் உள்ள நிறுவனத்தில் மிகவும் பொறுப்புள்ள நபரை அனுப்பி வைக்கனும் என்று மேனேஜரோடு கலந்து ஆலோசித்தல் நடந்ததில் மேனேஜர் எம் பெயரை சொல்லிட்டாங்களா! நான் அங்க போனால் நிறுவனத்தை ஓரளவுக்கு உயர்த்தி கொண்டு வந்துருவேன் என நம்பிக்கையில் கூறியுள்ளார்…


நானும் அவங்க எம் மேல வைச்ச நம்பிக்கைக்கு விஸ்வாசமாக இருக்கனும்மே,.. அதான் கிளம்பிட்டேன்… என்னை மன்னித்து விடுங்கள் பெரியப்பா… உங்களிடம் ஒரு வார்த்தைகூட கேட்காமல் முடிவு எடுத்ததற்கு… ..


பரவாயில்ல..அபித்யா கொஞ்சம் இங்க வாம்மா என அழைத்து ,தலையில் கைவைத்து தடவிய படியே நீ எங்கிருந்தாலும் நீ நினைக்கிறத நடத்தி முடிப்பாய்.. உனக்கு எப்போதும் வெற்றி தான் என மனசார வாழ்த்தியவர்,.


அபித்யாவும் பெரியப்பாவின் காலில் விழுந்தவளை தூக்கி விட்டவர்.. விறுவிறுவென்று பூஜை அறைக்குள்ளேயே சென்றார்..


இவள் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த ஜோதி வெளிப்படையாக சந்தோசத்தைக் காட்டிக் கொள்ளாமல் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டாள்… ..


ஏம்மா, அபித்யா கண்ணு நீ கட்டாயம் போய் தான் ஆகனும்மா…


வேற வழியில்லாமல் தான் நானும் செல்கிறேன் என்றாள் கவலையாக… .


யுவனேஷ்,அருகில் வந்து அக்கா உன்னுடைய டைரியை படிக்கிறதுக்கு உரிமை இல்லையா,..அப்படினா என்னை உன் சொந்த தம்பியாக நினைக்கல,.. பதில் சொல்லு அக்கா வலுக்கட்டாயமாக… ..


ஆனாலும் அபித்யா பதில் ஒன்றும் கூறாமல் வாயை மூடிக் கொண்டு மெளனமாக இருந்து சாதித்தாள் …


அக்கா, என்னை மன்னித்து விடு,.. இனிமேல் உனக்கு சம்பந்தப்பட்ட எந்த பொருளையும் எடுக்க உன் அனுமதி இல்லாமல் எடுக்க மாட்டேன்.. நீ இந்த வீட்டை விட்டு போகாதே,கெஞ்சினான்…


அபித்யாவின் கைப்பேசி ஒலிக்க,.. நம்பரை அழுத்தி ஹலோ சொல்லுங்க அண்ணா,.. பக்கத்துல வந்தாச்சா… கிளம்பி தயாராக தான் உள்ளேன்…


யுவனேஷ்,"ஐய்யோ, அக்கா.. என்னை மன்னிச்சுரு..எவ்வளவு முறை கெஞ்சி பார்த்தாலும் திமிராக நின்றிருந்தாள்…


அபித்யா, "டேய் தம்பி உம் மேல பாசம் வச்சதுக்கு நல்ல காரியம் செஞ்ச டா… நீ செஞ்ச தவறுக்கு உன்னை எப்போதும் மன்னிக்கவே மாட்டேன்… .


பூஜை அறைக்குள் நுழைந்த புகழேந்தி, கடவுளே நான் என்ன பாவம் செய்தேனோ,. பெத்த பொண்ணுக்கிட்ட உன் தகப்பன் தானு. சொல்ல முடியாத பாவியாக நிக்கிறேன்… இருபது வருடம் கழித்து எம் பொண்ணு கண்டுபிடித்து வீட்டுக்குக் கூப்பிட்டு வந்தேன்… அதுவும் என்னோட தம்பி பொண்ணு என பொய் சொல்லி ஆசிரமத்தில் இருந்து என்னுடைய வீட்டுக்கு அழைத்து வந்தேன்.. … .


சாகிறதுக்குள்ள உன்னுடைய அப்பா என சொல்ல உதடுகள் துடிக்குது …ஒவ்வொரு நாளும் இந்த குற்ற உணர்ச்சி என்னை நரக வேதனையில் தள்ளுகிறதே!.. .


அபித்யா தான் எம் பொண்ணு எனத் தெரிந்தால் ஜோதி எப்படி நடந்து கொள்வாள் என்று தெரியாது… .அவளை வீட்டுக்கு அழைத்து வரும்போது என்னுடைய நண்பனின் பொண்ணு என்றேன்… அவளும் முதலில் ஏற்கவே மாட்டேனு சொன்னவள்… ஒவ்வொரு நாளும் இவளை வீட்டை விட்டு அனுப்ப பல முயற்சிகள் எடுத்திருக்கிறாள்..


அபித்யாவே டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க,.. கட்டாயம் போய் தான் ஆகனும் என சொல்லி விட்டாள்.. அவள் எங்கிருந்தாலும் சந்தோஷமாக இருக்கனும் என வேண்டியவர் தீருநீறை எடுத்து நெற்றியில் பூசி விட்டார்… .


பெரியம்மா இதுவரைக்கும் உங்களை ஏதாவது தொந்தரவு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்றவள் .கண்ணீர் கலக்கத்தோடு காரில் ஏறினாள்… .


ஏறியதும்,... பெரியப்பாவை பார்க்க இயலாமல் காரை எடுக்கச் சொன்னாள்… காரும் மெதுவாக நகர்ந்தது… .


அக்கா.. அக்கா ..எனக் கண்ணீரோடு கூற,.. அபித்யா அவனிடம் பேச இயலாது கண்களில் வழிந்த கண்ணீரை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டாள்… .


யுவனேஷ் அப்படியே நின்றான்… இவ்வளவு தூரம் உன்கிட்ட கெஞ்சியும் நீ கேட்காமல் சென்று விட்டாயே என அழுதான்…


சுபத்ரா வேலையை முடிச்சுட்டு வர ஹாலில் அனைவரும் சோகத்தோடு இருக்க,.


அத்தை.. என்னாச்சு… எதுக்காக முகத்தைச் சோகமாக வைச்சு உட்கார்ந்து இருக்கீங்க… .


மருமகளே!... .உன்னோட கொழுந்தனாரு ,ஊட்டிக்கு அருகில் இருக்கிற சித்தியோட ஊருக்குப் போகிறானா,..


சுபத்ரா, "ஆஹா.. என்ன மாமா,சொல்றீங்க...நீங்க ஏதாவது அவனை திட்டுனீங்களா… .அத்தை நீங்க சொல்லுங்க என எல்லாரிடமும் கேட்க… '


மாடியில் இருந்து ஒரு பெரிய சூட்கேஸை இழுத்துட்டு வருவதை வியப்போடு பார்த்தாள்… .


தொடரும்..









.






...







..
 
  • Like
Reactions: Durka Janani