• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உள்ளத்தின் காதல் சாகாதடா (அத்தியாயம் 4)

Veera

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
57
அத்தியாயம் 4




சுபத்ரா, "ஏங்க எதுக்காக கண் கலங்குறீங்க "அவருக்கே உடம்பு சரியில்ல"இதுல நீங்க வேற அழுதுட்டு இருந்தா?அங்க பாருங்க என்றாள்.


பிரசாத், "அப்பா நான் ஏதோ உணர்ச்சி வசப்பட்டு அழுதுட்டேன் "நீங்க அழாதீங்க என்றான்.


பிரசாத், "அப்பா கொஞ்சம் மெதுவாக எழுந்திருச்சு உட்காருங்க" என சொல்லிக் கொண்டிருந்த வேளையில் அறைக்குள்ளேயே மித்ரன் நுழைய ,அவனைப் பார்த்த மகேந்திரனும் பெரும் மகிழ்ச்சியடைந்தான்.


மகேந்திரன், "ஹேய் மித்ரன் இங்க வாடா"


"ப்பா சொல்லுங்க, இப்ப ஓ. கே வா"என புன்முறுவலோடு ..


மகேந்திரன், "இந்த மாதிரி தான் உன்னை பார்க்கனும்னு நினைச்சுட்டு இருந்தேன்". எனக்கு இப்போது தான் சந்தோஷமாக இருக்குது என்றான்.


மித்ரன், "அப்பா என்னை மன்னிச்சுருங்க "இத்தனை நாளும் உங்களையும் அம்மாவையும் ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன். இனிமேல் நீங்க புதுசா வந்திருக்கிற மித்ரனை மட்டும் பாருங்க, பழைய மித்ரனை மறந்துருங்க என்றான்.


சுபத்ரா, "கொழுந்தனாரே நீங்க இப்ப இருக்கிறீங்களே இப்படி இருந்தா தான் வீட்டுல உள்ளவங்க முகமே நல்லா இருக்குது "


பிரசாத், "இப்படி பேசிட்டு இருந்தா "வீட்டுக்கு எப்போது கிளம்புறது.. நம்ம வீட்ல போயி பேசிக்கலாம் அங்க அம்மா இன்னும் வரலயே என்ற பதற்றத்தில் இருப்பார்கள் என்றான்.


ஹரிஷ் வருகையை எதிர்பார்த்து

நிறுவனத்தில் பணிபுரியும் வேலையாட்கள், ஸ்டாப்புகள் கையில் வாசமுள்ள மலர் பூங்கொத்து, பூ மாலை வைத்திருந்தனர்.


மேனேஜர் தண்டபாணி அங்குமிங்குமாக உலாவிக் கொண்டிருந்தான். அப்போது நம்ம எல்லாரும் இங்க நம்முடைய முதலாளிக்காக வெளியே நிக்கிறோம். இந்த மீராவை மட்டும் காணோம்மே என்று ஆவலாக எதிர்பார்த்தான்.


மீரா, "இதோ சார் வந்துட்டேன் என ஓடி வந்தவள் வாசலில் உள்ள மேட்டைத் தட்டி கீழே விழும் போது கைப்பிடித்து தாங்கினான் தினேஷ் .


இதை கண்காணித்த மேனேஜர் தண்டபாணி இருவரையும் ஏறிட்டு பார்த்து இங்க என்ன நடக்குது, போங்க.. போங்க இரண்டு பேரும் நம்ம பாஸ் வருகின்ற நேரத்துல Romance வேற, இது எல்லாம் என்னுடைய தலையெழுத்து.


மீராவும் ,தினேஷை பார்த்து கண்களால் நன்றியை தெரிவித்தாள். அதை புரிந்து கொண்டான்.


சரியான சமயத்தில் காரும் வந்து நிற்க, புதியதாக வரும் எம். டி. யை ஆவலாக பார்த்தனர். சட்டென்று கார் கதவைத் திறந்தார் ஹரிஷ்.


ஸடாப்புக்கள் அனைவரும் சேர்ந்து மாலை அணிவித்து கையில் பூங்கொத்தை கொடுத்தை ,மரியாதையோடும் புன்னகையோடும் வரவேற்றனர். மறுபக்க கதவைத் திறந்து வெளியே வந்தாள் அபித்யா.


அனைவரும் அபித்யாவை பார்த்து வியந்து நின்றனர்.


மீரா,"இவுக யாராக இருக்கும். ஒரு வேளை ஹரிஷ் சாரோட காதலியாக இருக்கும்மோ என இன்னொரு ஸ்டாப்பின் காதில் கிசுகிசுத்தாள்.


"அபித்யா சீக்கிரம் வாம்மா" என ஹரிஷ் அழைக்க, அவனோடு ஒன்றாக ஆபிஸிற்குள் உள் நுழைந்தாள்.


ஹரிஷ், மேனேஜர் எல்லா ஸ்டாப், வாட்ச்மேன், அவங்களை உள்ளே வரச் சொல்லு எனக் கட்டளையிட்டார்.


மேனேஜர், "சார் எல்லாரும் வந்துட்டாங்க, "


நீங்க எல்லாரும் என்னை மறக்காமல் நல்லா ஞாபகமா வச்சுருக்கீங்க, அந்த பாசத்துக்கு என்னோட மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். .


தினேஷ் ,"பாலா , இவரு எதுக்காக மேடையில் பேசுற மாதிரி பேசிட்டு இருக்காரு, சீக்கிரமா சொல்ல வருகிற விஷயத்தைச் சொல்லிட்டு போக வேண்டியதுதானே?, என முணுமுணத்தான்.


பாலா, "ஏய்!முதலில் என்ன சொல்ல வர்றாருனு கவனி .அப்புறமா மற்றதை பேசிக்கலாம்.இந்த மாதிரி அவரை நக்கல் பண்றது தெரிஞ்சது அம்புட்டு தான்.


ஹரிஷ் "கொஞ்ச நேரம் பேசாமல் இருக்கீங்களா!, இந்த வருடம் முழுவதும் இங்கே தான் பணியாற்ற போகிறேன். நம்முடைய பியூரிட்டி வாட்டர் சப்ளே நிறுவனம் தமிழ்நாட்டில் மூன்றாவது இடத்தில் தான் உள்ளது.இன்னும் முதல் இடத்தைப் பிடிப்பதற்காக முயற்சி செய்து வருகின்றனர்.



அதே போல இந்த நிறுவனத்தை நம்ம எல்லாரும் ஒட்டுமொத்தமாக சேர்ந்து உழைத்து முதல் இடத்திற்குக் கொண்டு வர முயற்சி செய்யனும். இதுக்கு எல்லாரும் ஒத்துழைப்பு கொடுப்பீங்களா!, என்று கேள்வி கேட்டார்.


இந்த நிறுவனத்தை முன்னேற்றத்திற்குக் கொண்டு போவதற்கு நமக்கு துணையாக தமிழ்நாட்டில் நம்ம நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த அபித்யா இன்று முதல் நம்ம நிறுவனத்தில் முக்கியமான அசிட்டெண்ட். உங்களுக்கு எந்தவொரு சந்தேகம் இருந்தாலும் எனக்குப் பதிலாக இவுக தான் தெளிவுபடுத்துவாங்க, இப்ப எல்லாருமே அவர்களுடைய கேபினுக்குச் செல்லலாம்.


பாலா, "டேய், அபித்யா பார்க்க ரொம்ப அழகாக இருக்காளே!அவளின் இதழோ அப்பப்பபா!, அவ பேசும்போது விழிகள் இரண்டையும் மீன்கள் போல துள்ளுகிறதே?என தினேஷ் காதில் கூற ,அது அபித்யாவின் காதுக்கு எட்டியது.


ஹரிஷ், "அபித்யா உன்னுடைய அறை மேனேஜர் பக்கத்துல உள்ள என்னுடைய அறை தான். நீ அங்கே போய் உன்னுடைய வேலையை செய்யலாம்.


அபித்யா, "ஓ. கே சார் நன்றி.. எனச் சொல்லிட்டு பாலாவின் கேபின் பக்கமாக வந்தாள்.


அபித்யா, டேய், "எழுந்திரு டா "என்றவள் சப்பென்று கன்னத்தில் அறைந்தாள்.


பாலா, "ஹலோ மரியாதையா பேசுங்க ,


அபித்யா, "உனக்கென்னடா மரியாதை"நீ என்னைப் பத்தி அவனிடம் ஏதோ சொல்லிட்டு இருந்தீயே, அத கேட்டேன். இனிமேல் என்னை பத்தி கிண்டல் பண்றது கேலியாக பேசுறது ,அழகை ரசிக்கிறது இந்த மாதிரியெல்லாம் இருந்துச்சு, உன்னை ஆபிஸை விட்டு துரத்திவிடுவேன் என கண்டித்தாள்.


தினேஷ், இவ என்னடா, பார்த்தாலே மிரட்டல் விடுறா?, இவ பேசியதை மனசுல வச்சுக்காதே, வாடா, நம்முடைய வேலையைச் செய்யலாம்.


பாலா, 'என்னை இதுவரைக்கும் யாருமே அடிச்சதே இல்ல" என்னை அடிச்ச உன்னை நேரம் வரும்போது சும்மாவே விடமாட்டேன்.நீ என்னை ஆபிஸை விட்டு துரத்த போறீயா?,நான் இந்த நாட்டை விட்டே துரத்துறேன் என மனதில் வஞ்சத்துடன் இருந்தான்.


காலையிலேயே டாக்டர் டிஸ்சார்ஜ் பண்ணச் சொல்லிட்டாங்கன்னு சுபத்ரா சொன்னாள். இன்னும் அவங்கள வரக்காணோம்மே என்ற பதற்றமாக அங்குமிங்குமாக நடு ஹாலில் நடந்து கொண்டிருந்தாள். அப்போது வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்டது. உடனே சந்தோஷத்துடன் ஆவலாக ஆராத்தியோடு போய் வரவேற்றாள் புஷ்பலதா.


அத்தை கொடுங்கன்னு என்றவளோ ஆராத்தி தட்டை வாங்க வந்தவளை தடுத்து, என்னுடைய கணவருக்கு நானே என்றாள்.


பிரசாத், "அடியேய் இத எல்லாத்தையும் உள்ளே கொண்டு போ என உத்தரவிட்டான்.


புஷ்பலதா, "மெல்லமாக தன்னுடைய கணவனுக்குத் தோள்கொடுத்து கைப்பிடித்து அழைத்துச் சென்று ஹாலில் அமர வைத்தாள். ஏங்க இப்போது எப்படி இருக்கு?,உடம்புக்கு பரவாயில்லையா?, என வினவினாள்.


மும்ம்.பரவாயில்லை என்றவரோ வாசலையே பார்வையை பதித்து இருந்தார்.


"என்னங்க, நீங்க யாரையோ வாசலயே பார்த்துட்டு இருக்குற மாதிரி தெரியுது. அப்படி யாரோட வருகையை பார்த்துட்டு இருக்கீங்க "


அம்மா, என்னை தான் அப்பா எதிர்பார்த்துட்டே இருக்குது என வாசலில் நின்று பேசிக்கொண்டே உள்ளே வந்தான்.


மகேந்திரன், "டேய் இங்க வாடா "என்றழைத்தார்.


சுபத்ரா, "இவரு எப்ப பார்த்தாலும் மித்ரனை தான் தேடிட்டு இருக்கிறாரு? பக்கத்துலயே இருந்து கவனிக்கிறது எம் புருஷன்.இதெல்லாம் பார்க்கும் போது கடுப்பாக இருக்குது. இப்பவே நம்ம மாடிக்குப் போவோம் என நகர்ந்தாள்.


அண்ணி, கொஞ்சம் நேரம் இங்க வந்து உட்காருங்க "அண்ணா நீயும் வந்து உட்காரு ."அனுஷ்கா பாப்பாவை எங்கே?, "


:அவ இங்க தான் விளையாடிட்டு இருந்தா? "


அனுஷ்கா..அனுஷ்கா.. என்றழைக்க எதுவுமே பதிலளிக்காமல் இருந்ததும் பயத்தில் அனைவரும் ஒவ்வொரு அறையிலும் சென்று பார்க்க, எங்கேயும் இல்லை, கடைசியாக மித்ரனின் அறையினில் கதவு ஓரமாக ஒளிந்து இருந்தாள்.


மித்ரனும் அவளுடைய தந்திரத்தைப் புரிந்து கொண்டு சரியான இடத்தில் போய் அவளை தூக்கிக் கொண்டு கீழே வந்தான். அனுஷ்காவும் சிரித்துக் கொண்டே என்னை விடுங்க சித்தப்பா உங்க யாருகிட்டேயும் பேச மாட்டேன் என இறக்கி விட்டதும் கிடுகிடுவென சோபாவில் போய் உட்கார்ந்து முகத்தை திருப்பினாள்.


சுபத்ரா, "எதுக்குடி செல்லக்குட்டி இவுக மேல கோபமா இருக்க "


அனுஷ்கா, "ஏய், மம்மி உன்னையும் சேர்த்து தான்,சொல்றேன் ..


சுபத்ரா, "அடி வாங்குவ டி! வர்ற வர்ற உன்னோட வாய் ரொம்ப நீலுது "பெரியவங்கள மரியாதை இல்லாமல் பேசிக்கிட்டு இருக்குற, இப்படியே பேசுன வாயுலயே போட்டுருவேன்.


ஹேய், "புள்ளைய போட்டு இப்படி அடிக்குற "சின்ன புள்ள ஏதோ தெரியாமல் பேசியிருக்கும். அப்படித்தானே கண்ணு "என அனீஷ்காவின் கன்னத்தில் இதழ்களைப் பதித்தாள் புஷ்பலதா.


அனுஷ்கா, "போங்க பாட்டி நீங்க எல்லாரும் தாத்தாவை தான் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயி கவனிக்கிறீங்க "என்னைய யாராவது கவனிக்கிறீங்களா?,


புஷ்பலதா, "கண்ணு தாத்தாவுக்கு உடம்புக்கு முடியல "அதான் ஹாஸ்பிட்டலில் வைச்சு பார்த்தோம்டா உன்னை எப்படி நாங்க கவனிக்காமல் இருப்போம்.


அனுஷ்கா, "எந்த ஒரு விஷயமா இருந்தாலும் என்னிடம் சொல்ல மாட்டிக்கிறீங்க "நீங்களா தனியாக கூட்டமா போய் பேசிட்டு வர்றீங்க, இடையில் வந்து கேட்டால் சின்ன புள்ளைனு சொல்றீங்க?,இப்படியெல்லாம் பண்றது எனக்கு பிடிக்கல "என்றாள்.


"அனைவரும் ஹாஹா ..ஹாஹா.. சிரித்தனர்.


அனுஷ்கா, 'எதுக்காக எல்லாரும் சிரிக்குறீங்க "என்னை பார்த்தா காமெடியா இருக்குதா?, ஒழுங்கா வாயை மூடுங்க, நானும் இரண்டு நாளா ஒன்னு கேட்டுக்கிட்டே இருக்கிறேன். யாராவது வாங்கிட்டு வந்து கொடுத்தீங்களா?, யாருக்குமே என் மேல அக்கறையே இல்ல, என்றாள் சோகமாக..


சுபத்ரா, "இவ என்னங்க ஓவரா பேசிட்டு இருக்குறா "நீங்களும் வேடிக்கைப் பார்த்துட்டு இருக்கீங்க 'அவள ரெண்டு அடி போடுங்க, என்றாள்.


மித்ரன்,அண்ணி சின்னகுழந்தை ஏதோ புரியாமல் பேசிட்டு இருக்குது. நீங்க அவளை அடிங்க..அடிங்க என்று சொல்லிட்டு இருக்கீங்களே தவிர அவளை சமாதானப்படுத்த யோசிக்கவே மாட்டிக்கீங்க, என வினவினான்.


சுபத்ரா, "கொழுந்தனாரே என்னாலயே அவளைச் சமாதானப்படுத்த முடியாது. நீங்களாவது முயற்சி செஞ்சு பாருங்க என்றாள் சவாலாக..


மித்ரன், "அண்ணி என்னிடமே சவாலா?, இப்ப பாருங்க அனுஷ்கா குட்டியே எங்கிட்ட ஓடி வரப் போற என்றான் தைரியமாக..


அனுஷ்கா.. செல்லக்குட்டி சித்தப்பாவை பிடிக்குமா?,பிடிக்காதா?, இப்ப நீ சொல்ல வில்லையென்றால் உனக்கு ஐஸ்கிரீம் கிடையாது.


"ஐய்.. ஐய்.. ஐஸ்கிரீம்மா!,

சித்தப்பா உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும் என

துள்ளிக் குதித்து ஓடி வந்தாள்


.இத தான் கேட்டேன். யாருமே கண்டுக்கல சித்தப்பா, நீங்க தான் எனக்கு பிடிச்சதை வாங்கிட்டு வந்துருக்கீங்க!, எனச் செல்லமாக மித்ரனின் கன்னத்தில் இதழ் பதித்தாள்.


சுபத்ரா, "ஆஹாம்!, இதெல்லாம் கிடையாது. அவளுக்கு முன்கூட்டியே ஜஸ்கிரீம் வாங்கி வந்துட்டு,என்னிடம் தைரியமாக சவால் விட்டுருக்க?.இந்த ஆட்டைக்கு ஒத்துக்க மாட்டேன் என வேகமாக மாடிக்குச் செல்ல முற்பட்டவளைத் தடுத்தான் மித்ரன்.


என்ன கொழுந்தனாரே, நீ வேற என்னை மாடிக்கு போகவே விடமாட்டேங்குற..


மித்ரன், "உங்க எல்லாருக்கும் ஒரு நல்ல செய்தி. "


பிரசாத், "டேய் எல்லாரும் நீ சொல்லப் போற விஷயத்த ஆவலாக எதிர்பார்த்துட்டு இருக்கிறோம். சீக்கிரமாக சொல்லுடா?,


சரி.. சரி. நம்ம எல்லாரும் சேர்ந்து நம்ம அகிலா பாட்டி கிராமத்துக்குப் போறோம்.


புஷ்பலதா, "என்னது!,அகிலா அத்தை வீட்டுக்கா?, என வியந்தாள். மகேந்திரனும் லேசாக அதிர்ச்சியுற்றான்.


சுபத்ரா, "தம்பி யாரது அகிலா பாட்டியா?

இந்த பெயரை இதுவரைக்கும் கேள்வி

பட்டதே இல்லையே என நெற்றியில் ஒரு விரலை வைத்தபடியே சிந்தித்தாள்.


பிரசாத், "அடியேய் என்றவனோ மண்டையிலேயே ஒரு போடு போட, தலையை தடவியபடியே எதுக்குங்க என்னை அடிச்சீங்க, என்ற சிணுங்களோடு வினவினாள் சுபத்ரா.


புஷ்பலதா,"அவளுக்கு நம்முடைய அகிலா பாட்டியைப் பத்தி தெரியாது.. டா.. அதான் சந்தேகத்தோடு கேட்டாள்.


சுபத்ரா, "அப்படி சொல்லுங்க அத்தை, எதுக்கெடுத்தாலும் அடிச்சுட்டே இருக்குறான். இப்படியே அடிச்சுட்டு இருந்த அப்புறம் நான் என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது.


பிரசாத், "என்னடி பண்ணுவ "


சுபத்ரா, "அதான் எனக்கே தெரியாதுனு சொல்றேன்ல "டா ..என்றாள் பாவ முகத்துடன்.. ..


மித்ரன், "அண்ணா, எதுக்காக அண்ணியை கிண்டல் செய்துட்டே இருக்குற, கொஞ்சம்நேரம் நீ எதுவும் பேசாமல் இரு.


அப்பா.. "அப்பா நீங்க சொல்லுங்க,உங்களுக்கு பெரியம்மாவை பார்க்கனும்னு தோணலயா?,


மகேந்திரன், "எனக்கு ஆசை தான். ஆனா நீங்களெல்லாம் தங்குவதற்கு அங்கு வசதி இருக்காதே?,அதான் யோசிக்கிறேன்.


மித்ரன், "அப்பா அத பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம். அதுக்கான ஏற்பாட்டை எல்லாமே செஞ்சுட்டேன். நம்ம எல்லாரும் கிளம்புற தவிர வேற வேலை இல்ல என்றான்.


புஷ்பலதா, "டேய்!,உடனே கிளம்பனும்மா எப்புடி?,நம்ம அங்க வருகிற தகவலை உங்க பாட்டியிடம் சொல்ல வேண்டாம்மா?,


மித்ரன், "அம்மா ஆரம்பத்திலேயே எல்லாத்தையும் பாட்டியிடம் சொல்லியாச்சு,நீங்க எல்லாரும் துணிகளை எடுத்து வையுங்க,மதியம் லன்ச்க்கு நம்ம எல்லாரும் அங்க அதுவும் பாட்டியோட ஊர்ல..


பிரசாத், "நீங்க எல்லாரும் போயிட்டு வாங்க "இங்க வீட்டைப் பாக்கிறதுக்கு ஒரு ஆள் இருக்கனும்மே!,அதனால் நானே இங்க இருந்து கவனித்து கொள்கிறேன்.


மித்ரன், "அண்ணா, இந்த வீட்டைப் பார்க்கிறதுக்கு ஒரு நபரை ஏற்பாடு செய்துட்டேன். நீயும் எங்களோடு வரனும் ஒரு வாரம் தானே அங்க இருக்கப் போறோம். அதுவரைக்கும் எனக்கு தெரிந்த நண்பன் தான்..


பிரசாத், "முகம் தெரியாத நபரை எப்படிடா?,கடையை பார்த்துக்கிற. சொல்வது என பதற்றமடைந்தான்.


மித்ரன், "அண்ணே ,அவன் நம்ம எல்லாருக்கும் தெரிஞ்சவன் வினோத் தான் என்றான்.


ஹாய், பிரதர்ஸ் நான் ஒன்னும் புது நபர் இல்லை. உங்களுக்கே தெரிஞ்சவங்க தான் என வாசலில் நின்றபடியே கூலிங்கிளாஸ் போட்டுக் கொண்டே உள்ளே வந்தான் வினோத்.


அப்பா, அப்பா.. என அலறிக் கொண்டே ஓடி வந்து தோளில் சாய்ந்து கொண்டு பூச்சாண்டி, பூச்சாண்டி என கை நீட்டினாள்.


டேய்!,வினோத் உன்னோட கூலிங்கிளாஸை கழட்டி உம் மூஞ்சை காட்டு.. புள்ள ரொம்ப பயப்படுது…


ஹேய், அனுஷ்கா குட்டி நான் தான்ம்மா வினோத் மாமா.. இங்க பாரு என முகத்தைக் காட்டினான்.


அனுஷ்காவும் பார்த்து ஒரே சிரிப்பு.. வீட்டில் உள்ள அனைவரும் சிரித்தார்கள்.


உங்களுக்கு என்னைப் பார்த்தா எப்படி தெரியுது.


அனுஷ்கா, 'மாமா உங்க மூஞ்ச பார்த்தா காமெடியா இருக்குது.எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது என வாயை மூடி சிரித்தாள்.


பாப்பா போதும் நீ சிரிச்சது, மாமா அப்படியே கிளம்புறேன் என நகர்ந்தான்.


பிரசாத்,"வினோத் உன்னை நம்பி வீட்டையும் கடையையும் விட்டுட்டு போறோம் .நீ தான் நல்லா பார்த்துக் கொள்ளனும் என தோளை தட்டிக் கொடுத்தான்.


புஷ்பலதா, "உட்காரு.. டா..


வினோத், "மும்ம்.. என்றவனோ கூலிங்கிளாஸை போட்டு அமர்ந்தான். அதை கவனித்த மித்ரனின் அப்பா, வீட்டுக்குள்ளே எதுக்குடா, கூலிங்கிளாஸ் என சத்தம் போட்டதும், என்னப்பா!,நீங்க உங்க பேத்தி தான் என்னை போட விடமாட்டிக்கனா?,நீங்களும்மா ,நான் சமையல் அறையில் போய் போட்டுக்கிறேன் எனச் சொல்லிட்டு சென்றான்.


இனியும் தொடரும்..
 
Top