• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உள்ளத்தின் காதல் சாகாதடா (டீஸர்)

Veera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
57
7
8
Thoothukudi
உள்ளத்தின் காதல் சாகாதடா!.. .

கதையின் டீஸர் :

இருவருடைய சந்திப்பே முதலில் மகிழ்ச்சியில் தொடங்கியது.. அபித்யாவே கதாநாயகனை சந்திக்கிறாள்…


அந்த முதல் சந்திப்பிலேயே மித்ரனின் மனதைக் கவருகிறாள் அபித்யா…


ஒருவருக்கொருவர் உயிருக்கு உயிராக நேசிக்கின்றார்கள்… அபித்யாவிற்கு பெற்றோர்கள் கிடையாது… அவள் காதலிக்கும் மித்ரனிற்கும் பெற்றோர் இல்லை என சொன்னதால் மட்டுமே அவள் காதலிக்க தொடங்கினாள்… இறுதியில் அபித்யாவிற்கு உண்மை தெரிய வருகிறது..அவனை எப்போதும் சந்திக்கும் இடத்தில் சந்தித்து பேசுகிறார்கள்…


மித்ரன் அபித்யாவை சமாதானப்படுத்த முயற்சி செய்கிறான்… ஆனால் சமாதானம் ஆக வில்லை… கடைசியாக அபித்யா மித்ரனிடம் நம்ம இருவரும் பிரிந்து விடலாம் எனக் கோபத்தில் சொல்கிறாள்.. அதை ஏற்கமுடியாத மித்ரன் அவளிடம் பேசி புரிய வைக்க முயற்சிக்கிறான். அபித்யா எதையும் செவி கொடுத்து கேட்க வில்லை… அபித்யாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு என்னை விட்டு செல்லாதே எனக் கெஞ்சினான்… அதை மறுத்தவள் அவனை விட்டு தொலைதூரப் பயணத்தில் இருக்கிறாள்…


இருவரும் சந்திக்கின்ற நேரமும் வந்ததே,.. என்றென்றும் உள்ளத்தின் காதல் எப்போதும் மாறாது… .எப்போதும் சாகாது. இவர்களின் உண்மையான காதல் கதை… ..

விரைவில்....