• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-11 & 12

Meenakshi Rajendran

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 22, 2024
153
51
28
Tiruppur
அத்தியாயம்-11

சிலர் நம்ம வாழ்க்கையில் நமக்குத் தெரியாமல் இருப்பார்கள். கேட்க சில்லியா இருக்கும். ஆனால் உண்மைதான். உதாரணத்துக்கு நமக்கு ரொம்ப நெருங்குன சொந்தமா இருப்பாங்க. ஆனால் நமக்கு அவங்களை தெரிஞ்சுருக்கவே இருக்காது. தீடிர்னு ஏதோ ஒரு பங்கசனில் பார்ப்போம். அப்படித்தான் நமக்குத் தெரிஞ்சவங்களும். ரிட்டர்ன் ஆஃப் ஹேப்பினஸ். அதுக்கு ஒரு பிளவர் இருக்குனு என் அண்ணன் சொல்வான். அதுக்குப் பேரு லில்லி ஆஃப் வேலி. சின்ன சின்ன வெள்ளை நிறப் பூ அது.
மனோ.

காற்று இதமாக வீசிக் கொண்டிருந்தது. வீட்டிற்கு வெளியில் சல சலத்து வீசும் காற்றையும் ஏழாம் பிறையும் பார்த்துக் கொண்டிருந்தாள். இன்று தான் நடந்து கொண்ட அனைத்தையும் யோசித்துக் கொண்டிருந்தாள். ஒரு வேளை தன் அன்னையின் மீது இருக்கும் கோபம் ஆதித்தின் மீது மிஸ்பிளேஸ்மெண்ட் ஆகி அவனை அடித்து விட்டோமோ.. என்று கூட தோன்றியது. தன் மனதில் இருப்பவற்றை அலசிக் கொண்டிருந்தாள்.

“இன்னும் தூங்கலையா?”
அதிர்ச்சியுடன் திரும்பினாள் மனோஷா. ஆதித் குரல் மெல்ல ஒலித்தது.

“இங்க என்ன செய்யறீங்க?”

“உன்னை மாதிரியே எனக்கு தூக்கம் வரலை. பர்ஸ்ட் டைம் ஒரு பொண்ணுகிட்ட அடிவாங்கி இருக்கேன். ஏதோ சின்ன பொண்ணுன்னு நினைச்சு விட்ரலாம்னு நினைச்சேன். ஆனால்.. மித்ரன் தங்கச்சினு தெரியாது.”

கைகளை மீண்டும் உடலின் குறுக்காகக் கட்டி மாடிச் சுவற்றில் சாய்ந்து உற்று நோக்கினாள்.

“சரி அதனால இப்ப என்ன செய்யப் போறீங்க?”

“ப்ச்ச்.மரியாதை எல்லாம் கொடுத்து பேசறீங்க மேடம். சின்ன வயசில் இருந்து உனக்கு அதெல்லாம் பழக்கம் கிடையாது. வா போதான். ரொம்ப மாறிட்ட.”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. பிரசண்ட்டை மட்டும் பேசுங்க. மித்ரனுக்காக இதை இதோட முடிச்சுக்கலாம்.”

“அப்படி எல்லாம் முடிச்சுக்க முடியாது. இது உன்னோட பர்சானலிட்டி கிடையாதே, என்ன ரீசன்?”

“எல்லாரும் ஒரு கட்டத்தில் மாறுவாங்க. நானும் அப்படித்தான். இப்ப என்ன உங்களை அடிச்சதுக்கு என்னை அடிக்கனுமா? அடிச்சுட்டு கிளம்புங்க.” அலட்சியத்துடன் ஒலித்தது அவள் குரல்.

“ஓகே.”
அவன் இப்படி சம்மதம் கூறுவான் என எதிர்பார்க்கவில்லை. திகைத்தாலும் கண்களை மூடி முகத்தைத் திருப்பி கன்னத்தைக் காட்டினாள்.

ஆதி லேசாக நகைத்து விட்டு அவள் கன்னத்தை மெல்லமாக தட்டியவன் அவள் கண்களைத் திறக்க காத்து நின்றான். அவனைக் காக்க வைக்காமல் உடனே கண்களைத் திறந்தாள் மனோஷா.

“மனோஷா ஐம் சாரி. நான் ஏதோ ஒரு ஸ்கூல் பொண்ணுனுதான் உன்னை நினைச்சேன். மார்க்கெட்டில் பார்க்கும் போது அப்படித்தான் தெரிஞ்ச. டிரஸ்ஸிங்க் ரூமில் மட்டும் அந்த சதாசிவம் அங்கிள்கிட்ட மாட்டி இருந்தால் அது தேவை இல்லாமல் ஸ்கேண்டல் வரும். அதான் உன்னை பர்மிஷன் இல்லாமல் இழுத்துட்டுப் போயிட்டேன். என்னோட தங்கச்சியை யாரவது அப்படி இழுத்துட்டுப் போனால் எனக்கு நிச்சயமா கோபம் வரும்.”
மெல்லிய குரலில் அவன் கூறி முடிக்க விழி விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் மனோஷா.

“அப்பாலஜி அக்சப்டு. ஆனால் நான் செஞ்சதில் எனக்கு வருத்தம் இல்லை. என்னைப் பொறுத்த வரைக்கும் சரிதான்.”

“நான் செஞ்சதுக்கு ரீசன் இருந்தாலும் உன் பாயிண்ட் ஆஃப் வியூவில் நான் சாரி கேட்டுட்டேன்.”

“சாரி கேட்டுச்சால்ல. சோ கிளம்புங்க. லீவ் மீ அலோன்.”

“வாட் ஹேப்பண்ட் டூ யூ மனோஷா? யூ ஆர் கோல்ட். முன்னாடி நீ அப்படி இல்லையே?”

“பீபிள் மாறுவாங்க. அவ்வளவுதான் கிளம்புங்க. நான் தனியாக இருக்கனும்.”

“ஓகே.. என்னை அடிச்சதுக்கு ஃபீல் பன்ன வேண்டாம். பாய். குட் நைட்.” என அமைதியாக குரலில் கூறிவிட்டு சென்று விட்டான் ஆதித்.

“வாட்?” என்று அவள் கூறியது காற்றில் மட்டுமே கரைந்தது.
புன்னகையுடன் தன் அறைக்குச் சென்றான் ஆதித்.

“பிடிவாதம் மட்டும் மாறவே இல்லை.” என அவன் வாய் தானாக முனு முனுத்தது.
காலை ஏழு மணி. மித்ரன் கதவைத் தட்ட எழுந்தாள் மனோஷா.

“பூபூ பூபூ கதவைத் திற பூபூ”
கண்ணைக் கசக்கிக் கொண்டே எழுந்தவள், “என்ன மித்து?” என்றபடி கலைந்த தலையுடன் கதவைத் திறந்தாள்.

“ பூபூ வீட்டை லாக் பன்னிக்கோ. நானும் ஆதியும் கிளம்புறோம்.”

“ம்ம்ம்…” என்றவள் கண்களை அரை குறையாகத் திறந்து கொண்டே அவர்கள் இருவரும் வெளியேறியதும் கதவைத் தாழிட்டாள்.

மீண்டும் உறக்கத்தைத் தொடர்ந்தவள் பத்து மணிக்கு எழுந்தாள். குளித்துக் கிளம்பியவள் தன் அலுவலகத்திற்கு வந்தாள்.
எம்.வி கவுன்சிலிங்க் செண்டர். மித்ரனின் நர்சரிக்கு அடுத்து இருக்கும் இடத்தில் மரங்களுக்கு நடுவில் அமைந்திருந்தது. அந்த கவுன்சிலிங்க் செண்டர். அலுவலகத்தில் கணினியில் கேஸ் ஹிஸ்டரியைப் புரட்டிக் கொண்டிருந்தாள். படிக்க படிக்க அவள் நெற்றி சுருங்கியது.
அவளுடைய இன்ட்ர்காமில் அழைத்தாள். உடனே உள்ளே வந்தாள் கனிமொழி.

“கனி என்னோட அடுத்த கேஸ் இந்தப் பொண்ணுதான். அப்பாயின்மெண்ட் கன்பார்ம் பன்னி நாளைக்கு செசனுக்கு வரச் சொல்லிடு.”

“ஓகே மேம். அந்த ஸ்கூல் பொண்ணுக்கு?”

“நாளைக்கு ஈவ்னிங்க் செவன் பி.எம் ஒரு அவுட்டோர் செசன் இருக்கு. அவங்க பேரண்ட் காரிலேயே வெயிட் பன்ன சொல்லிடு.”

“ஓகே மேம்..”
கனி போனி டெயில் அசைந்தப்படி வெளியேறினாள்.
மீண்டும் கேஸ் ஹிஸ்டரியில் மூழ்கியவள் அரை மணி நேரம் கழித்து மாலை செசனுக்கு வரப் போகும் கிளையண்ட்டுகளுக்காகத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டு கவுன்சிலிங்க் அறைக்குச் சென்றாள்.
கவுன்சிலிங்க் அறையில் சுற்றிலும் கண்ணுக்கு குளிர்ச்சியான இயற்கைக் காட்சிகள் நிறைந்திருந்தது. ஒரு சோபா. அதன் அருகே ஒரு நாற்காலி போன்ற சோபா. அந்த அறையில் அதைத் தவிர வேறு எதுவும் இல்லை. நாற்காலியில் அமைதியாக அமர்ந்தாள் மனோஷா.

இரவு ஒன்பது மணி.
தன் கவுன்சிலிங்க் அறையை விட்டு வெளியே வந்தாள் மனோஷா.

“கனி கிளம்பலாமா?”

“யெஸ் மேம்.”
கனி விளக்குகளை அணைத்து விட இருவரும் வெளியில் வந்து அலுவலகத்தைப் பூட்டினர்.
கனியின் வீடு அருகில் என்பதால் அவளை அப்படியே இறக்கி விட்டு தன் வீட்டை நோக்கிப் பயணித்தாள் மனோஷா. காரில் செல்லும் போது தானாக ஆதியின் நினைவு வந்தது. இரவு அவன் தன்னிடம் மன்னிப்புக் கேட்டதும் வந்தது.

அங்கே ஆதியின் வீட்டில் வடிவழகி தன் பேரனின் கன்னத்தைப் பிடித்து ஆராய்ந்து கொண்டிருந்தார்.




அத்தியாயம்-12

மன்னிப்பு. இந்த வார்த்தை மிகவும் பவர்ஃபுல். இதுக்கு ஒரு உறவை உடைக்கவும், மீண்டும் உருவாக்கவும் சக்தி இருக்கு. ஆனால் பல நேரங்களில் நாம ஈகோவால் சாரி கேட்க மாட்டோம். மன்னிப்பு கேட்க பெஸ்டான பூக்கள்னா நீல நிறம் அல்லது ஊதா நிற ஹையாசிந்த் பூக்கள் தான்.
-மித்ரன்.

முந்தைய இரவு வீட்டுக்கு வராத தன் பேரம் அடுத்த நாள் இரவு தாமதமாக வருகை புரிந்தாலும் அவனுக்காகக் காத்திருந்தார் வடிவழகி. கதவைத் திறந்து விட்டவர் கண்ணாடி அணிந்த கண்களுக்கு ஆதியின் கன்னம் தப்பவில்லை.

“ஆதி கன்னத்தில் என்னாச்சு?” என பார்த்தவுடனே கேட்டு விட்டார்.

“என்ன ஆத்தா? கன்னத்தில்?” கன்னத்தைத் தடவிப் பார்த்தான ஆதி.

“கன்னம் சிவந்து கிடக்குதுடா. எப்படி ஆச்சு?”

“ஓ.. அதுவா.. போன இடத்தில் டிரிப்.. ஸ்லிப் ஆகி விழுந்துட்டேன். அப்ப கன்னத்துல அடி பட்டது. அது சிவந்திருச்சா இருக்கும்.”
பேரன் தவறி விழுந்தான் என்ற செய்தி கேட்டதும் வடிவழகியின் கண்கள் கை கால்களை ஆராயந்தது.

“வேற எங்கேயும் அடி இல்லை ஆத்தா. ஒன்னும் பிரச்சினை இல்லை. ரொம்ப பசிக்குது. எதாவது சாப்பிட கிடைக்குமா?”

“வாய்யா சாப்பிடலாம். உன் அம்மா எல்லாம் பன்னி வச்சுருக்காப்படி. வந்து சாப்பிடு.”
டைனிங்க் ஹாலுக்கு அழைத்துச் சென்றவர் பேரனுக்குப் பரிமாறி பசியாற்றிவிட்டு அனுப்பினார்.
எப்படியோ பாட்டியிடம் இருந்து தப்பித்து விட்டோம் என்ற எண்ணத்தில் ஆதித்தும் படியேறி தன் அறைக்குச் சென்றான். மணியைப் பார்த்தாள்.

நேற்று இதே நேரத்தில் மனோஷாவுடன் பேசிக் கொண்டிருந்தான். சிறு வயதில் அங்கும் இங்கும் ஓடிய மனோஷா நினைவுக்கு வந்தாள். அவளை ஓரிடத்தில் நிற்க வைக்க முடியாது. அங்கும் இங்கும் ஓடுவாள். விளையாடுவாள். சிரிப்பாள். அவள் இருந்தால் வீடே கல கலப்பாக இருக்கும். ஆதி அமைதியான குணம் கொண்டவன் என்பதால் அவள் செய்யும் சேட்டைகளை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பான்.
மரத்தில் இருந்து கீழே விழுந்தும் கைக்கட்டுப் போட்டிருந்தும் அவர்கள் இரு வீட்டிற்கும் பொதுவாக இருந்த காம்பவுண்ட் சுவரில் பந்தை அடித்து ஒரு கையில் விளையாடுவாள். சிரித்து சிரித்து விளையாடுவாள். ஆதியுடைய அம்மா, பெரியம்மா அனைவருமே அவளுடைய சிரிப்புக்கு மயங்கி விடுவார்.
அவள் அங்கு இருந்தால் அவளை நோக்கி மட்டுமே அனைவரின் கண்கள் போகும். அப்படி பிரசன்ஸ் அவளுக்கு என்று அவனுடைய அப்பா மனோஷாவின் தந்தையிடம் கூறிக் கொண்டிருப்பார்.

அப்போது அப்படி இருந்தவள் நேற்று இரவு நடந்து கொண்டது வித்யாசமாக இருந்தது. ஒவ்வொரு முறை பார்க்கும் போது அவள் குண நலன்கள் குழப்பமாக இருந்தது.
அவற்றை எல்லாம் அலசியவாறு உறங்கினான் ஆதித்.
காலை நேரம். இளமதியின் கண்களில் சிக்கி விட்டான் ஆதி.

“என்ன அண்ணா கன்னம் சிவந்திருக்கு?”

“கீழ விழுந்துட்டேன் மதி.”
பதில் சொன்ன அண்ணனை சந்தேகமாகப் பார்த்தாள் மதி.

“இல்லையே? இது கீழ விழுந்த மாதிரி தெரியலை. என்னாச்சுனு சொல்லு.”

“என்ன என்னாச்சு? ஸிலிப் ஆகி விழுந்துட்டேன்.”
அப்போது அங்கு வந்து சேர்ந்தாள் அகல் நிலா.

“ஸ்லிப் ஆகி விழுந்த மாதிரி இல்லை. யாரோ ஒரு பொண்ணு கை சிலிப் ஆன மாதிரி ஒரு பீலிங்க் எனக்கு.”
அவளை இயல்பாகப் பார்த்தான் ஆதி.

“இதுதான் இன்னுமே ரொம்ப சந்தேகமாக இருக்கு. ஒரு பையன் கன்னம் சிவக்குதுனா அதுக்கு இரண்டு காரணம். ஒன்னு. ஒரு பொண்ணு கொடுத்திருக்கனும் இல்லை ஒரு பொண்ணுகிட்ட செமையா வாங்கிருக்கனும்..”

“என்னடி சொல்ற? எனக்கு ஒன்னும் புரியலை.” இளமதி அர்த்தம் புரியாமல் விழித்தாள். அர்த்தம் புரிந்த ஆதி தன் தங்கையை முறைத்தான்.

“ஏய் என்னடி அர்த்தம்?” இளமதி அகலின் கையைப் பிடித்துக் கொண்டு கேட்டாள்.

“அப்புறம் சொல்றேன் விடு. அண்ணா ஜாக்கிரதையா இருக்கனும் புரியுதா? எனக்கு என்னமோ இனி லைஃப் ரொம்ப இண்டர்ஸ்ட்டிங்கா இருக்கப் போகுதுனு தோணுது.”
என்றபடி அவ்விடத்தைக் காலி செய்தாள்.

இளமதிதான், ‘இவ இப்ப எதுக்கு இங்க வந்தா.. என்ன சொன்னா.. எதுவும் புரியலையே..’ என்று யோசனையில் மூழ்கி இருந்தாள்.

“அண்ணா..” மதி என்ன கேட்கப் போகிறாள் என்பதை உணர்ந்த ஆதி தங்கையை இடை வெட்டினான்.

“மதி கிளம்பு இல்லைனா பெரியம்மாவைக் கூப்பிட்டுவேன்.”

“எனக்கு என்னப்பா? நீ யார்கிட்ட வேணாலும் கொடுத்துக்கோ.. வாங்கிக்கோ. நான் வரலை இந்த விளையாட்டுக்குப் பாய்.” என அவ்விடத்தை விட்டு உடனே நகர்ந்தாள்.

‘அப்பா இதுக்கு அந்த மனோஷாவே பரவால்ல போல.. இவங்ககிட்ட இருந்து தப்பிக்கறதுக்குள்ள நான் ஒரு வழியாகிடறேன். நம்ம வீட்டில் இருக்கற எல்லா லேடீஸூக்குள்ளேயும் ஒரு டிடெக்டிவ் இருக்காங்க. இனி இந்த இடத்தில் இருந்தால் அடுத்து யார் வருவாங்கனு தெரியாது. ரூமுக்கே போறது நல்லதுனு.’ நினைத்தப்படி தன் அறையை விட்டு நகர்ந்தான்.

மனோஷா. அப்பாயின்மெண்ட் புக் செய்தபடி அடுத்த நாள் மாலுக்குள் இருந்தாள். அவள் அருகே இருந்த டீனேஜ் பெண் மனோஷாவின் கையை விடவில்லை. இறுகப் பற்றி இருந்தாள்.

“ஹே ரிலாக்ஸ்மா. கமான். உனக்குப் பிடிச்ச ஐஸ்கீரிம் ஷாப். வேபல் ஷாப் இருக்கு. வா. உனக்கு என்ன வேணுமோ வாங்கித் தரேன்.”
தலையை ஆட்டினாள் அந்தப் பெண். ஆனால் முகத்தில் பயம் அப்படியே தெரிந்தது.

“கண்ணை மூடி பீரித் எடு. ஒன் டூ திரீ அவுட். ஒன் டூ தீரி இன். ஒன் டூ தீரி அவுட்.” இப்படி ஒரு ஐந்து முறைகள் சுவாசித்தவுடன் அந்தப் பெண்ணின் பயம் லேசாகக் குறைந்து உடல் தளர்ந்தது.

“குட் கேர்ள். இப்ப வா யூ கேன் டூ இட்.” என ஆறுதலாகக் கூறிய மனோஷா அவளை அழைத்துக் கொண்டு அந்தக் கடைக்குள் நுழைந்தாள்.

“கிரேட். இப்ப எப்படி பீல் பன்னற?”

“குட்.” இருந்தாலும் அவள் கண்கள் சுற்றும் முற்றும் அலைப்புற்றுக் கொண்டிருந்ததது.

“உன்னை யாரும் பார்க்கவே இல்லை. எல்லாரும் அவங்க அவங்க வேலையில் பிசி. அப்படியே பார்த்தாலும் நீ அழகா இருக்க. அதனால் திரும்பி பார்ப்பாங்க. அவ்வளவுதான்.”
இருவரும் ஐஸ்கீரிம் ஆர்டர் செய்ய ஆரம்பிக்கும் போது அந்த கடைக்குள் இளமதி, அகல் நிலாவோடு மாஸ்க் அணிந்து நுழைந்தான் ஆதித்.
- ஊஞ்சலாடும்..
 

Vimala

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 10, 2023
112
35
28
Trichy
உங்க வார்த்தை நடை நல்லா இருக்கு மா