• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உள்ளத்தில் ஊஞ்சலொன்று -29 & 30

Meenakshi Rajendran

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 22, 2024
120
40
28
Tiruppur
அத்தியாயம்-29

மனோஷாவைப் பார்க்கும் போது அவள் அதற்கு சம்மதம் தெரிவிக்கற மாதிரியும் இருக்கு. இன்னொரு பக்கம் சம்மதம் தெரிவிக்காத மாதிரியும் இருக்கு. பிப்டி-பிப்டி. இப்படி அன்சர்ட்டைனா இது வரைக்கும் இப்படி நடந்ததே இல்லை. அவளை நினைக்கும் போது லைட்டா மனசில் ஒரு பயம் வருது. மனோஷா எப்போதும் அன்பிரடிக்டபிள்.
-எழில்.

அருணும் மனோஷாவும் பிட்னஸ் செண்டர் வெளியே நின்று கொண்டிருந்தனர்.

“மனோ என்ன இன்னிக்கு கோபத்துக்குப் பதிலா உன் முகத்தில் குழப்பம் தெரியுது?”

“கரக்ட்தான். சித்ரா போயிட்டு நடந்துட்டே பேசலாமா?”

“ ஓகே.”

இருவரும் தங்கள் வாகனங்களை சித்ரா சாலையில் நிறுத்தி விட்டு பேச ஆரம்பித்தனர். அருகில் உள்ள பேக்கரியில் ஐஸ்கீரிம் வாங்கிக் கொண்டனர். கோன் ஐஸ்கீரிம் சாப்பிட்டபடியே சித்ராவிலிருந்து நடைபாதையில் நடக்க ஆரம்பித்தனர்.

“என்ன மனோ இப்ப சொல்லு?”

“இல்லடா.. நான் அதான் அந்த ஆளு இருக்கானே.. எங்கிட்ட ஒன்னு கேட்டான். இப்படி ஒரு ரெக்குவஸ்ட யாரும் வச்சது இல்லை. அவன் சொன்னதுக்கு நோனு சொல்லவும் முடியலை.”

“என்ன விஷயம்னு சொல்ல முடியுமா?”

“ம்கூம். அதை என்னால் சொல்ல முடியாது.”

“ஓகே. உனக்கு என்ன தோணுது?”

“அவன் கேட்டதில் சின்சியாரிட்டி இருக்கும்னுதான் தோணுது.”

“அப்புறம் என்ன?”

“இது வரைக்கும் நான் செய்யாத விஷயத்தை இதில் செய்யனும்.”

“இருக்கலாம். உனக்கு புது எக்ஸ்பிரியன்ஸ் கிடைக்கலாம்.”

“அப்படிங்கற?”

“ம்ம்ம். அப்ப ஓகே சொல்லிடறேன்.”

“ச்சே. நான் சொன்னதுக்கா ஓகே சொல்ற!”

“ஆஹான்.”

“உண்மையை சொல்லு. என்னை மீட் பன்னறதுக்கு முன்னாடியே இந்த முடிவை எடுத்துட்டதானே.”

அதற்கு ஒரு புன்னகையை மட்டும் பரிசளித்தாள்.

“ஆமா இதுக்கு முன்னாடியே முடிவெடுத்துட்டேன்.”

தன் வாழ்க்கையே மாற்றப் போகும் முடிவினை மிக எளிதாக எடுத்து விட்டு கோனை கடித்துக் கொண்டே முன் சென்றாள் மனோஷா. அவளின் பின்னே புன்னகையுடன் சென்று அவள் தோளை இடித்தான் அருண்.

“ஏய் டைனோசர் வெயிட்ல இருந்துட்டு என்னை இடிச்சு தள்ளிராத..” என தோளை தேய்த்துக் கொண்டே மறக்காமல் அவன் தோளில் இடித்தாள்.
அன்றைய இரவு மனோஷா தன் கைப்பேசியை எடுத்து ஆதித்திற்கு அழைத்தாள். அன்றைய இரவு சாப்பிட்டு விட்டு தன்னுடைய அறை பால்கனியில் அமர்ந்து கொண்டிருந்தான்.
கைப்பேசியில் புரவுஸ் செய்து கொண்டிருந்த போது புதிய எண்ணில் அழைப்பு வந்தது. யாராக இருக்கும் என யோசித்துக் கொண்டே எடுத்தான்.

“ஹலோ..”

“ஹாய் திஸ் இஸ்..”

“மனோஷா.” அவனே அவள் பெயரைக் கூறி முடித்தான். அவன் கைப்பேசியில் எப்போதும் மெதுவாகப் பேசக் கூடியவன் என்பதால் மெதுவாக பேசினான்.

“நானேதான்.”

“சொல்லுங்க..” அவன் குரல் ஹஸ்கியாக ஒலித்தது.

‘ஒ காட் ஹி ஹேஸ் நைஸ் வாய்ஸ்.’ என நினைத்து விட்டு,

“நான் ஒத்துக்கிறேன். எனக்கு உங்க குடும்பத்தில் இருக்கற அத்தனை பேர் டீடெயிலும் வேணும். பிடிச்சது, பிடிக்காதது, புட் பிரிபரன்ஸ். எவ்ரிதிங்க். ஐ நீட்.”

“யூ வில் கெட் இட் டூமாரோ.”

“ஓ.” அவன் அனைத்தையும் தயார் செய்து வைத்திருந்தான்.

“எப்ப ஃப்பீரி?”
சில நொடிகள் யோசித்த மனோஷா ,“செவன் ஓ கிளாக்.” என பதில் கூறினாள்.

“எந்த பிளேஸ்?”

“பிளேஸ் நீங்களே சொல்லுங்க.”

“உங்க ஆபிஸிலேயே மீட் பன்னலாம். உங்க அசிஸ்டெண்ட்டுக்கு கூட இந்த விஷயம் தெரிய வேண்டாம். சமயம் வரும் போது சொல்லிக்கலாம்.”

“ம்ம்ம்..”

“ம்ம்ம்..”
இருவருக்கும் அடுத்து பேசுவது என்னவென்று தெரியவில்லை.

“சாப்பிட்டாச்சா?” ஆதியும் வழக்கம் போல் இதே கேள்வியைக் கேட்டு வைத்தான்.

“சாப்பிட்டேன். நீங்க?”

“ஓவர். இதை நான் சொல்லவே இல்லை.”

“ இப்ப என்ன புதுசா?”

“தேங்க்ஸ் எ லாட்.”

“ஸி நான் இதுவரைக்கும் இந்த மாதிரி செஞ்சதே இல்லை. வில்லேஜில் எல்லாம் நான் வாழ்ந்ததே இல்லை. எதாவது பிரச்சினையில் மாட்டிகிட்ட என்ன செய்யறது?”

“டோண்ட் வொர்ரி. நீங்க அந்த வீட்டில் அக்கவுண்ட்ண்ட் மாதிரி வொர்க் செய்யப் போறீங்க. நீங்க எதுவும் வொர்க் செய்யத் தேவை இல்லை. அதை என்னோட பிரண்டு பார்த்துப்பார். நீங்க ஃப்ரியா இருக்கலாம். என்னோட ஃபேம்லி மெம்மர்ஸ்கிட்ட நல்ல பழகுங்க. அந்த வீட்டில் எதாவது எவிடென்ஸ் இருந்தால் தேடுங்க.”

“சரி உங்க அண்ணன் போட்டோ இருக்கா?”

“ம்கூம்.. அவனோட சின்ன வயசு போட்டோ மட்டும் தான் இருக்கு. வேற எதுவும் இல்லை.”

“ஆர் யூ சிரியஸ்? இந்த ஸ்மார்ட் போன் உலகத்தில்?”

“என்னோட அண்ணாவுக்கு போட்டோஸ் எடுக்கறது பிடிக்காது. அவனோட பிரைவசி ரொம்ப முக்கியம். அவனுக்குப் பிடிக்கலைங்கறதால் அவனை மட்டும் யாரும் போட்டோ எடுக்க மாட்டோம்.”

“ஏப்பா.. இந்த ஆதார் கார்ட், லைசென்ஸ் இதுக்கெல்லாம்.”

“ஆதார் கார்ட், லைசென்ஸ் இது எல்லாம் அவங்கிட்டதான் இருக்கு.”

“அப்புறம் என்ன செய்யறது?”

“இந்த வீட்டிலேயே அவன் வாழ்ந்ததுக்கு எந்த தடயமும் இல்லை. அப்படியே மறைஞ்சுட்டான். எங்க போனான்? எதனால் போனான் அப்படிங்கறதுக்கு எந்த ஆதாரமும் இல்லை.”

“அப்படி என்ன நடந்திருக்கும்?” மனோஷா நினைத்ததை அப்படியே கேட்டு வைத்திருந்தாள்.

“அதுக்குத்தான் நீங்க.”

“உங்க வீட்டில் போலீஸ் கம்பிளெய்ண்ட் கொடுக்கலையா?”

“ம்கூம். நானும் சொன்னேன். யாருமே இனிமேல் அவனைப் பத்திப் பேசக் கூடாதுனு சொல்லிட்டாங்க.”

“ ரொம்ப குழப்பமா இருக்கு. சரி நாளைக்குப் பார்க்கலாம்.”

“மனோஷா என் மேல் நம்பிக்கை இல்லைனு சொன்ன. இப்ப எப்படி?”

“இப்பவும் எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு எதாவது ஆனால் ஐ வில் கம் ஃபார் யூ.” எனக் கேலியாகக் கூறினாள்.

“உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன். வாழ்க்கையில் சில நேரங்களில் சிலரை நம்பித்தான் ஆகனும். என்னை நீ கண்டிப்பா நம்பலாம்.”

“ம்ம்ம்.. பார்க்கலாம்.”

“ஆமா எப்படி நான் இப்படி டீட்டெயில்ஸ் கேட்பீங்கனு நினைச்சு முன்னாடியே ரெடி பன்னீட்டிங்களா?”

“ நான் உங்கிட்ட இந்த விஷயத்தைக் கேட்டதும் நீ உடனே ஒத்துக்க மாட்டேனு தெரியும். அந்த டைம் கேப்பில் உனக்கு என்ன தேவைப்படுமோ அது அத்தனையும் ரெடி செஞ்சுட்டேன். நீ ஓகே சொல்லும் போது கிராமத்து லைஃப்க்கு கொஞ்சம் எக்ஸ்போஷர் தேவைப்படும். அது மட்டும் பார்க்க வேண்டி இருந்துச்சு.”

“சார் ரொம்ப ஸ்மார்ட்தான்..”

“ம்ம்ம்.”



அத்தியாயம்-30

இந்த செடிகள் எப்போதும் வித்தியாசமானவை. தான் இருக்கற இடத்துக்கு ஏத்த மாதிரி தன்னை தகவமைப்பதில் அதாவது அடாப்ட் செஞ்சுக்கும். தொட்டியில் வச்சால் அதோட குரோத் வேற மாதிரி இருக்கும். நிலத்தில் வச்ச வேற மாதிரி இருக்கும். மனுசங்களும் அப்படித்தான். ஒரே சூழ்நிலை திரும்ப திரும்ப வந்தாலும் மனுசங்களோட ரியாக்சன் ஒரே மாதிரி இருக்கும்னு சொல்ல முடியாது. இடம், காலத்திற்கு ஏற்ப அவர்கள் செய்கை மாறுபடும்.
-மித்ரன்.

அடுத்த நாள் காலை.
மனோஷா தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தாள்.

“என்ன மனோ என்ன யோசிட்டு இருக்க?”

“ஒன்னுமில்லையே .”

“இப்ப எல்லாம் உன்னோட பிகேவியர் சரி இல்லை. எதையோ மனசுல போட்டு குழப்பிட்டு இருக்க.”

“ஹே அப்படி எல்லாம் இல்லை. ஒரு தேர்ட்டி டேஸ்க்கு ஒரு டிரைனிங்க் புரோகிரம் வருது. அதுக்குப் போலாமா வேண்டாமானு யோசிச்சுட்டு இருக்கேன். வேற ஒன்னும் இல்லை.”

“ஓ. இவ்வளவுதானா?”

“நீ கொடுக்கற ரியாக்சனைப் பார்த்து நான் என்னவோ ஏதோனு நினைச்சேன். ஒன் மன்த்துக்குள்ள இங்க இருக்கற கேஸ் அத்தனையும் முடிச்சுக்கோ. அப்படி பெண்டிங்க் இருந்தால் வீடியோ கால் மூலம் பேசிக்கோ. அவ்வளவுதான்.”

தான் நினைத்த திட்டத்தையே தன் சகோதரனும் கூற முக மலர்வுடன் நோக்கினாள் மனோஷா.

“இப்ப தான் பூபூ அழகா இருக்கு. உம்முனு இருந்தால் நல்லாவே இல்லை.”

“போடா. “

“சரி அம்மா கால் பன்னாங்களாம். நீ எடுக்கவே இல்லைனு சொன்னாங்க.”
சட்டென்று அவள் முகம் மாறியது. அவள் முக மாற்றத்தைக் கவனித்தவன் எதுவும் கூறவில்லை.

“நான் பேசும் போது பேசிக்கிறேன்.”

“பூபூ அடம் பிடிக்கக் கூடாது.”

தலையைக் குனிந்து அவனை முறைத்தவள் அடுத்த நொடி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த பைப்பை அவன் திசையில் காட்ட சில நொடிகளில் அவன் முழுவதும் நினைத்திருந்தாள்.

“ஏ. ஏய்ய்ய்ய் மனோஷா.” கைகளை வைத்து தான் நனைவதை தடுக்க முயன்றான். ஆனால் அவளோ பைப்பை முழு வேகத்தில் வைக்க தொப்பலாக நனைந்து விட்டான்.

அவனை முழுவதுமாக நனைத்து விட்டு பைப்பை மூடினாள்.

“வர வர ரொம்ப ஓவரா பேசிட்டு இருக்க. அந்த மிஸ்டர் கோல்ட் முன்னாடி என்னை இன்சல்ட் செய்யற. அதுக்கு இப்ப பனிஷ்மெண்ட் வாங்கிக்கோ.”

‘பெங்களூரில் இருந்து இந்த பக்கி வரும் போதே இப்படி பல சம்பவங்களை நானும் எதிர்பார்த்தேன்.’

“என்ன மிஸ்டர். கோல்டா?”

“அதான் நர்சரியில் பார்த்த ஆதித் பொன்னெழிலன்.”

“ஏய்.. அப்ப அன்னிக்கு நடந்த?”

“நான்தான் வேணும்னு செஞ்சேன். ரொம்ப ஓவரா பேசினாரு சார். அதான்.”

“அடிப்பாவி.” நடுங்கிக் கொண்டே அவளை முறைத்தான்.

“அப்புறம் எங்கிட்ட அப்படி சொன்ன. நானும் நம்பிட்டேன்.”

“நான் வெளியில் யார்கிட்டேயும் பொய் சொன்னது இல்லை. ஆனால் உங்கிட்ட சொல்லுவேனே. மிஸ்டர் கோல்டுக்கு உண்மை தெரியும். அப்பவே சொல்லிட்டுதான் பிளவர் பாட் கொடுத்தேன்.”
அவள் கூறியதில் வாயைப் பிளந்தான் மித்ரன். ஒரு நொடி மறந்து விட்டான். தன் தங்கையைப் பற்றி. தன்னை வேண்டுமென்றே ஏமாற்ற சில சமயம் பொய் கூறுவாள்.

“மனோஷா..”

“என்ன நீயும் தான் மிஸ்டர். கோல்ட்கிட்ட நான் உன்னோட சிஸ்ட்ர் இல்லை. எம்பிளாயினுதான் சொன்ன. அப்புறம் என்ன?”

“ஹே அது எதோ கோபத்தில்..”

“நானும் கோபத்தில்தான்.”

‘ஐ ஃபார்காட். சில சமயம் மனோ எவ்வளவு மோசமாக இருப்பாள்னு.’

“மனோ உங்கிட்ட நான் இதை எதிர்பார்க்கலை. ஆதித் எவ்வளவு நல்லவனு தெரியுமா? ரொம்ப நல்லவன்.. அவனைப் போய். அவனை நீ அப்படி டீரிட் பன்னி இருக்கக் கூடாது.”

“உனக்கே தெரியும். நான் எல்லாரையும் அப்படி நடத்த மாட்டேனு..”

“அவங்கிட்ட சாரி கேட்டியா இல்லையா?”

“கேட்கலை.”

“உன்னை.”
இரு கை முஷ்டிகளையும் மடக்கியவன் லேசாக நடுங்கியபடி தன் வீட்டிற்குள் சென்றான். அவசர அவசரமாகக் குளித்து விட்டு தன் கைப்பேசியை எடுத்து ஆதித்திற்கு அழைத்தான்.
பாத்ரூமில் இருந்து தலையை துவட்டியபடியே வந்த ஆதித் கைப்பேசியை எடுத்தான்.

“ஹலோ சொல்லு மித்ரன்..”

“அன்னிக்கு நர்சரியில் நனைஞ்சோமே..”

“ம்ம்ம். அதுக்கு என்ன?”

“என்னோட சிஸ்டர் வேணும்னே செஞ்சேனே உங்கிட்ட..”

“ அப்பவே சொன்னாங்க..”

“காட். ஆதி நீ ஏன் சொல்லவே இல்லை?”

“அதை எதுக்கு பெரிசு பன்னிட்டு. சின்ன விஷயம்தானே. அதான்.”

“இல்லைடா. இருந்தாலும் எங்கிட்ட செய்யறது வேற.. உங்கிட்ட..”

“ஒரு பிரச்சினையும் இல்லை. உன்னோட சிஸ்டர் ரொம்ப ஸ்ரைட் பார்வேர்ட். செஞ்சுட்டு செய்யலைனு மறுக்கமாட்டங்க. அது மட்டுமில்லாமல் அப்ப உன்னோட சிஸ்டரை நான் ஸ்கூல் படிக்கற பொண்ணுனு நினைச்சுட்டேன். சின்ன பொண்ணுதானே. அப்புறம் தான் அது நம்ம மனோஷானு தெரிய வந்துச்சு. மேடம் அப்படி செய்யாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.”

“ஆனாலும் உனக்கு ரொம்ப பொறுமை ஆதித்.”

“ஹே. அதெல்லாம் பாஸ்ட். இப்ப எதுக்கு இதைப் பத்தி பேசிட்டு இருக்க?”

“ம்ம். மறுபடியும் என்னை அதே மாதிரி நனைச்சு விட்டுட்டு இந்த உண்மையை சொன்னாள்.”
ஆதித் மறுமுனையில் வாய் விட்டு சிரித்திருந்தான்.

“சரி நான் சொல்லியிருந்தால் மட்டும் என்ன செஞ்சுருப்ப நீ?”

“இல்லை ஆதி.”

“உனக்கே அவங்களைப் பார்த்தால் பயம். அப்புறம் என்ன?”

“எனக்கு பயம் எல்லாம் இல்லை. நீ சொன்ன மாதிரி சின்ன பொண்ணுகிட்ட எதுக்கு சண்டை போட்டுட்டு. நாம பெருந்தன்மையா இருக்கனும் இல்லை. நான் தான் பெரியவன்.”

“ஆஹான். உன்னோட சிஸ்டரைப் பார்த்து பயப்படறத இப்படியும் சொல்லலாம்.”

“ஏண்டா நீ வேற..”

“உனக்காவது ஒன்னு. எனக்கு இரண்டு பேர் இருக்காங்க. அறுந்த வாலுங்க தெரியுமா? அதுக்கு உன்னோட சிஸ்டர் எவ்வளவோ பரவால்லை..”

“அதுவும் சரிதான்.”

“சரி மனோஷா என்ன செஞ்சுட்டு இருக்காங்க?”

“மேடம் என்னை நனைச்சுவிட்டு தோட்டத்துச் செடிக்கு தண்ணீ ஊத்திட்டு இருக்கா.”

“ம்ம்ம். மறுபடியும் பக்கத்தில் போயிடாத.”

“டேய்.. எனக்குத் தேவைதான். காலையில் உங்கிட்ட எல்லாம் கலாய் வாங்கனும் எழுதிருக்கு.”

“எங்கிட்ட இல்லடா.. உன்னோட சிஸ்டர்கிட்ட. நான் என்ன செஞ்சேன்..”

“போடா.. நான் வைக்கிறேன்.”
அழைப்பு துண்டிக்கப்பட்டாலும் ஆதித்தின் முகத்தில் புன்னகை தொடர்ந்தது.

‘ரொம்ப கவனமாக இருக்கனும். தண்ணி அடிச்சதுக்கே நீ இப்படிங்கற. நானெல்லாம் அடி வாங்கிட்டு கம்முனு இருக்கேன்.’
ஆனாலும் அவர்களின் சண்டை பிடித்திருந்தது. அவர்களின் இருவரின் மீது மேலும் பிடித்தம் கூடி இருந்தது.

-ஊஞ்சலாடும்...