• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-3 &4

Meenakshi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jun 22, 2024
Messages
9
அத்தியாயம்-3

நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக உங்க நாட்கள் போகனுமா? கவலையே பட வேண்டாம். ஒரு தங்கச்சி இருந்தால் போதும். அதிலும் எனக்கு இரண்டு தங்கச்சிகள். அறுந்த வாலுங்க. இரண்டும் சேர்ந்துகிட்டு அமைதியாக என்னை எப்படி எப்படி சீண்டிப் பார்க்கனுமோ அத்தனை வழிகளும் டிரை பன்னுவாங்க. அண்ணனை டிஸ்ட்ர்ப் செய்வதற்கு ஆயிரம் வழிகள் அப்படினு விட்டால் புத்தகமே போடலாம். இருந்தாலும் அவங்கனா ரொம்ப பிடிக்கும். They make my life a cheerfull one.”
-எழில்

ஆதி அவர்களின் பின்பு கைப்பேசியைப் பறிக்கச் சென்றான். இல்லை என்றால் இருவரும் இன்ஸ்டாகிராமில் அவனை கண்டெண்டாக மாற்றி அதை முக நூலில் பதிவிட்டு ஒரு வழி செய்து விடுவார்கள்.
வீட்டின் சோபாவைச் சுற்றி சுற்றி மூவரும் ஓடுகையில் ஸ்பீட் பிரேக்கராக இடையில் குறுக்கிட்டார் சுகந்தி. வரத ராஜின் மனைவி. உடனே மூவரும் பிரேக் போட்டார் போன்று நின்றனர்.
1000079096.jpg


“மதி, அகல் இரண்டு பேரும் சீக்கிரம் ரூமுக்கு போய் ரெடியாகுங்க. இங்க என்ன விளையாட்டு?”

“அம்மா.. பெரியம்மா..” இருவரும் அமைதியாக அவரை அழைத்தனர்.

“இன்னும் என்ன விளையாட்டு? டைம் ஆச்சு. கிளம்புங்க.” ஒரு அதட்டல் போட்டார்.

“விடுங்க அக்கா. சின்ன புள்ளைங்க தான.” என்றபடி வந்து சேர்ந்தார் ஆனந்த்ராஜின் மனைவி ரமா தேவி.

“வர வர டைமுக்கு இரண்டு பேரும் எதுவும் செய்யறது இல்லை தேவி. நேரா நேரத்திற்கு கிளம்புனாதானே ஆகும். வாங்க கிட்சனில் வேலை இருக்கு.”

“போங்க இரண்டு பேரும் சீக்கிரம் கிளம்புங்க.” தேவி அவர்களை முடுக்கினர். தங்கைகள் இருவரும் தன் பெரியம்மாவிடம் டோஸ் வாங்குவதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதி.
மூத்த பெண்கள் அங்கிருந்து நகர்ந்ததும் , “இளா, அகல் இரண்டு பேருக்கும் சாக்லேட் வாங்கித் தரேன். போட்டோ டெலிட் பன்னுங்க.” என்றான்.

“அண்ணா. நாங்க ஒன்னும் சின்ன குழந்தைகள் இல்லை. சாக்லெட் வாங்கித் தந்தா நீ சொல்றதைச் செய்ய. ஒரு ஃபைவ் ஹன்ட்ர்ட் இல்லை டவுசண்ட் தா. அப்ப யோசிக்கிறோம்..”
தங்கைகளின் பேரத்தில் ஆதித் விழித்தான்.

“சரி தரேன். என் கண்ணு முன்னாடி போட்டோ டெலிட் செய்யனும்.” எனக் கூறிவிட்டு இரண்டாயிரம் ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான்.
இரு நிலாக்களும் வலது கையை உயர்த்தி ஹை-ஃபைவ் கொடுத்தனர்.

“இதோ இப்பவே டெலிட் பன்றோம்.”
அவன் கண் முன்னால் டெலிட் செய்தனர். அதைப் பார்த்து ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டவன், “கோ. இட்ஸ் லேட்.” என்றான்.

அறுந்த வால்களான அவனுடைய தங்கைகள் பயப்படுவது சுகந்தி பெரியம்மாவுக்கு மட்டுமே. அவனுடைய தாய் தேவிக்கு என்றும் பயப்பட மாட்டார்கள். தேவிதான் அவர்களுக்கு மிகச் செல்லம். ஆதித் அமைதியாக இருப்பதால் சுகந்தி அவனை ஒன்றும் கூறமாட்டார். அவனின் மீது மிக அதிகப் பிரியம் வேறு. இருந்தாலும் கண்டிப்பும் இருக்கும். ஆண் பிள்ளையோ , பெண் பிள்ளையோ கண்டிப்பு என்பது இருவருக்கும் அவசியம் என்பார் சுகந்தி.

“பார்த்தியா ஆதி என்னோட பேத்திகளோட திறமையை!” என்றபடி ஊன்று கோலின் துணையுடன் மெல்ல நடந்து வந்தார் அந்த முதியவர். வெள்ளை சட்டை, வேட்டி, கழுத்தில் ருத்திராட்சம், நெற்றியில் திறு நீறு அணிந்து ஆறுபத்தி எட்டில் அடி வைக்கும் சிவ நாராயணன் வந்தார். வரதராஜ், ஆனந்தராஜின் அப்பா. வடிவழகியின் சரிபாதி.

“ஒல்ட்மேன் அதுக்கு பேரு பிளாக்மெயில்.”

“பிளாக்மெயிலா? வியாபாரத் திறமை. இதைக் கொடு இதைச் செய்யறேன். இப்படித்தான் பிஸ்னஸ் செய்யனும்.”

“என்னவோ ஓல்ட் மேன். நீங்களாச்சு.உங்க பேத்திகளாச்சு. என்னை விட்ருங்க. இப்பதான் டிவெல்த், காலேஜ் பர்ஸ்ட் இயர். அதுக்குள்ள இத்தனை சேட்டை செய்யறாங்க..”

“ஹா.. ஹா..” என நகைத்தார் அவர். நகைச்சுவையும், கலகலப்பும் அவரை இந்த வீட்டிலிருந்து தனித்துக் காட்டும்.

“இரண்டு பொண் குழந்தைகள் வீட்டில் இருக்கறது கலகலப்பே. வீட்டுக்கு உயிர் கொடுக்கறதே லஷ்மி தேவிதான்.”

“லஷ்மினா பணம் கொடுப்பாங்கனு சொல்வாங்க. இங்க பணம் நான் தான் கொடுக்க வேண்டியதா இருக்கு.இந்த மாசத்தில் மட்டும் டென் டவுசன்ட் கொடுத்திருக்கேன்.” என்றான் ஆதி.

“நீயும் வேணும்னே தான் கொடுக்கறேனு தெரியும். அப்புறம் என்ன ஆதி? சரி நேத்து ஏதோ ரொம்ப இம்பார்ட்ன்ட் வொர்க் இருக்குனு சொன்ன கிளம்பு.”
சரியென்று தலை அசைத்தவன் கிட்சனில் காய்கறிகளைக் கொடுத்து விட்டு தன் அறைக்குச் சென்றான்.
***
அவனுடைய காலைப் பொழுது இப்படி சென்று கொண்டிருக்க காலையில் ஆதி சந்திந்த பெண் தந்தையிடம் கைப்பேசியில் வாதம் செய்து கொண்டிருந்தாள்.

“தங்கம் அப்பா சொல்றதை ஒருவாட்டி கேளு..”

“நோ டாட். ஐம் சாரி. ஆனால் அம்மா அப்படி எல்லாம் பேசவும் நான் இப்படி கிளம்ப வேண்டியதாகிடுச்சு.”

“அம்மா என்ன தங்கம் பெரிசா சொல்லிட்டாங்க. நீ அந்தப் பையனை வேண்டாம் சொல்லிட்ட. அதான் ஆதங்கம் தாங்க முடியாமல் உன்னை இரண்டு வார்த்தை திட்டிட்டாள்.”

“டாட் திட்றது கூட பிரச்சினை இல்லை. அம்மாவுக்கு என்னை விட அவங்க பிரண்ட் முன்னாடி இன்சல்ட் ஆனத தாங்க முடியலையாம். இவங்க இன்சல்டிங்கா பீல் பன்னக் கூடாது அப்படிங்கறதுக்காக நான் கல்யாணம் பன்னிக்க முடியுமா?”

“இல்லை தங்கம்.. அம்மா ஏதோ கோபத்தில்..”

“இல்லை டாடி. எனக்கும் அந்தப் பையனுக்கும் செட் ஆகாதுனு நான் தெளிவாக சொன்னேன். அவனோட பிகேவியருக்கும், என்னோட கேரக்டருக்கும் செட் ஆகாது. அவனுக்கு இண்டிபெண்ட்டா திங்க் பன்னற லைஃப் பார்ட்னர் செட் ஆக மாட்டாங்க. இதை சொன்னால் அம்மாவுக்கு கோபம் வருது. நானும் பொறுமையா சொல்லிப் பார்த்துட்டேன். ஒரு லிமிட்டுக்கு மேல் தள்ளி இருக்கறதுதான் நல்லதுனு தோணுச்சு டாட். அதான் இங்க வந்துட்டேன். எனக்கும் இந்தப் பிளேஸ் பிடிச்சுருக்கு.”

“தங்கம் உனக்கு எப்பவும் அம்மாவை விட பொறுமை அதிகம் இல்லை. அப்படி எல்லாம் பேசக் கூடாது.”

“யெஸ் டாடி. புரியுது. ஆனால் இப்போதைக்கும் நான் இங்க இருந்து மூவ் ஆக மாட்டேன்.”
தன் மகளின் குரலில் இருந்து பிடிவாதம் அந்த தந்தையும் உணர்ந்துதான் இருந்தார்.

“சாரிப்பா..”

இனி தன் மகள் முன்பு போல் வீட்டுக்கு வரப் போவதில்லை என்பதை அறியாமல் அவரும் அழைப்பைத் துண்டித்தார்.

1000079097.jpg










அத்தியாயம்-4

சன் பிளவர். எஸ் சூரிய காந்தி எனக்கு ரொம்ப பிடிக்கும். சூரிய காந்தி மகிழ்ச்சியைக் குறிக்கும். இள வெயில் போன்று மனதில் இதத்தையும், மகிழ்ச்சியும் உருவாக்கும். அதன் மஞ்சள் நிறம் அதற்குக் காரணம். எனக்கும் அது ரொம்ப பிடிக்கும். பொக்கே கொடுக்கும் போது அதை சேர்த்தி கொடுக்கலாம்.
-மனோ .

எம். வி நர்சரி அண்ட் பிளவர் ஷாப். கோயம்புத்தூரில் சித்ரா அருகில் அமைந்திருந்தது அந்த மிகப் பெரிய நர்சரி.
1000079098.jpg


ஆங்காங்கே செடிகள் அழகாக வளர்க்கப்பட்டு பிளாஸ்டிக் தொட்டிகள், மண் தொட்டிகள் மற்றும் கருப்பு பாலிதீன் கவர்களில் இருந்தன. சூரிய ஒளி தேவைப்படாத செடிகளுக்கு அங்காங்கே செட்கள் போடப்பட்டிருந்தது. அதில் ஸ்பீக்கரில் மெல்லிய ஜாஸ் இசை தவழ்ந்து கொண்டிருந்தது.
அங்கிருந்த வாடிக்கையாளர் கேட்டுக் கொண்டிருந்தார்.

“எதுக்கு ஹோட்டல் மாதிரி மியூசிக் எல்லாம் போட்ருக்கீங்க?”

“இது இங்க இருக்கற செடிகள் எல்லாம் நல்லா வளர ஹெல்ப் பன்னும். இந்த மியூசிக் 115 ஹெர்ட்ஸில் இருந்து 250 ஹெர்ட்ஸில் இருக்கும். இது செடிகள் நல்லா வளர உதவும்.”

“ஓ.. செடிகள் வளரதில் இவ்வளவு இருக்கா? எனக்கு லில்லி செடி வேணும். ரெட் கலர்.”

“வாங்க, லில்லி அந்தப் பக்கம் இருக்கு.”

எம்.வி நர்சரி என்ற நீல நிற ஆப்ரானை அணிந்திருந்தான் அவன். கேட்டால் எதிரில் இருப்பவர்களை சாந்தப்படுத்தும் குரல். ஆறடி உயரம். அகன்ற தோள்கள், வெண்ணிறமும், மஞ்சள் நிறமும் கலந்த தேகம் இருந்தாலும், வெயிலில் இருப்பதால் நிறமிழந்திருந்தான். டிரிம் செய்த தாடியுடன் இருந்தான். பார்த்தவுடன் பிடிக்கும் முகம் அவனுக்கு. பெண்கள் அதிகமாக மேன்லி என்று கருதும் ஸ்கொயர் வடிவ தாடை அவனுக்கு பிளஸ்.
அவனுடைய இள நீல டீசர்ட்டிலும் எம்.வி நர்சரி என்று எழுதப்பட்டிருந்தது. கருப்பு நிறத்தில் டிராக் பேண்ட். அது அவர்களுடைய யூனிபார்ம்.
வாடிக்கையாளர் கேட்டதை பேக் செய்து பில் போட்டுக் கொடுத்தான். அவர் சென்றதும் அவன் அருகில் வந்தாள் மனோ.
1000079099.jpg


“அண்ணா. எனக்கு யூனிஃபார்ம் எப்படி இருக்கு?”
மாறாக அவளைப் பார்த்து முறைத்தான் மித்ரன்.

“என்ன மித்ரா முறைக்கிற?”

“மனோ அம்மா சொல்றதைக் கேட்காமல் நீ இங்க நீ வந்துட்ட?”

“நீ கேள்வி பட்டது இல்லையா? புரியாத பிரியம் பிரியும் போது புரியும். அதான்.”

அவள் காதைப் பிடித்தவன், “இந்த வாய்க்கு எல்லாம் குறைச்சல் இல்லை.”

“பின்ன எப்படி குறைச்சலா இருக்கும். அதை வச்சுதான் பொழப்பே ஓடுது. அப்படியே இந்தக் காதையும் திருகேன்.” என்று இன்னொரு காதையும் காட்டினாள்.

“நல்லா மசாஜ் பன்னி விட்டாப்பல இருக்கு.”

“உன்னை?”

“ஒன்னும் பன்ன முடியாது.” என்று அரை நாக்கை வெளியில் நீட்டிக் காட்டினாள்.

“ஓ காட்.”
காதை விட்டவன் அவளை அடிக்க கையை ஓங்கினான்.

“சில் வண்டு சிக்கும். நான் எல்லாம் காட்டாறு. மோட்டாரு போட்டாலும் நிறுத்த முடியாது.”
பேசிக் கொண்டே செடிகளுக்குள் புகுந்து ஓடி போக்கு காட்டினாள்.

“ஐயோ சிக்கிட்டா. நிச்சயமா அடிச்சுடுவான். எப்படியா எஸ்கேப் ஆகிடனும். அம்மானா கூட இந்த வயசில கூட அடிச்சக்கனுமாம் தப்பிக்க வைப்பாங்க. இப்படி சிங்கிலா வந்து மாட்டிகிட்டேயே மனோ.”

எனப் புலம்பியவாறு செடிகளின் நடுவில் ஓடிக் கொண்டிருந்தாள் மனோஷா. தன் அண்ணன் வருகிறானா என்று திரும்பிப் பார்த்து ஓடி நேராக ஏதோ ஒன்றின் மீது மோதினாள்.

“டேய் மித்து, இங்க ஏண்டா பில்லரை வச்ச? இல்லை நான் கரக்டாதான் ஓடி வந்தேன்.” எனப் புலம்பியவாறு கண்களைத் திறந்தாள்.

எதிரில் கூர்மையான பார்வையுடன் நின்று கொண்டிருந்தான் ஒருவன். கடைக்கு வந்த வாடிக்கையாளருடன் மோதிவிட்டோம் என்பதால் அமைதியாக மன்னிப்பு கேட்டாள்.

“சாரி.. சார்.. நீங்க வந்ததைக் கவனிக்கலை.. அகெய்ன் சாரி சார்.” என்றாள்.

“இட்ஸ் ஓகே.”
அவள் பின்னால் ஓடி வந்த மித்ரன் தன் தங்கையைக் கண்டு கொள்ளாமல், “ஹாய் ஆதித் பொன்னெழிலன் வா.”

“ஹலோ மித்ரன் எம்பிளாயிஸ் கூட எல்லாம் இவ்ளோ குளோசா பழகாத. பிரண்ட்லியா இருக்கலாம். ஆனால் ரொம்ப இடம் கொடுக்காத.”

“கரக்ட்.” தன் தங்கையை நோக்கி அலட்சிய பார்வையை வீசினான் மித்ரன்.

“ஏய் கோல்ட், பொன்னெழிலன் பேர் வச்சுருந்தால் உன்னோட வாயிலிருந்து வர அத்தனையும் பொன் மொழி கிடையாது. மைண்ட் யுவர் பிஸ்னஸ்.”

“மனோ கோ பேக் டூ லோட்டஸ் பாண்ட். டோண்ட் மைண்ட் ஹெர். ஐ வில் டேக் கேர் ஆஃப் ஹெர்.” என்று கட்டளையிட்டவனை முறைத்தப்படி அங்கிருந்து நகர்ந்தாள் மனோஷா.

“சின்ன பொண்ணுடா. பார்ட் டைம் வொர்க் பன்னறா. கொஞ்சம் வாய் ஜாஸ்தி. அவ்வளவுதான். நீ பெரிசா எடுத்துக்காத.”

தான் செய்த செயலுக்கு மித்ரன் தன்னை புதியவனிடம் வேலை செய்யும் பெண்ணாக அறிமுகப்படுத்துகிறான் என்று புரிந்த மனோஷா, ‘மித்ரனுக்கு ஒரு காலம் வந்தால், இந்த மனோஷாவுக்கு ஒரு காலம் வரும்டா.. அப்ப பார்த்துக்கிறேன்.’ என்று முனு முனுத்தப்படியே தாமரைக் குளத்திற்குச் சென்றாள்.
குதிரை வால் அசைய செல்பவளை ஒரு முறை திரும்பிப் பார்த்தான் ஆதித்.

அவள் பேசியதைக் கேட்டதும் அவனுக்கு கோபம் எழவில்லை. சிறு பெண் என்றுதான் நினைத்தான். அதோடு காலையில் பார்த்ததும் இவளையும் ஒரு பள்ளி படிக்கும் பெண் என்பதால் இவளையும் பள்ளி படிக்கும் என்றே நினைத்துக் கொண்டான்.
காலையில் அவனை இடித்த பெண் யூனிஃபார்மில் இருந்தாள். அதனால் இவளையும் அப்படித்தான் நினைத்தான் ஆதித். அவள் தோற்றமும் அப்படித்தான் இருந்தது.

அதனால் அவள் பேசியதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவன் வீட்டில் இருக்கும் அறுந்த வால்களும் அதற்கு ஒரு காரணம். இப்போது இருக்கும் சிறுபிள்ளைகள் அப்படித்தான் இருக்கின்றனர் என நினைத்தவன் தன் நண்பனுடன் பேசியபடி நகர்ந்தான்.
லோட்டஸ் பாண்டிற்கு சென்ற மனோஷாவின் அதன் அழகில் மெய் மறந்து பார்த்திருந்தாலும் அருகில் இருந்த இன்னொன்று அவள் கவனத்தை ஈர்த்தது. அருகில் இருக்கும் கூரை போன்று கண்ணாடியால் அமைக்கப்பட்ட பொக்கே ஷாப்பில் நுழைந்தாள்.
அங்கே இருக்கும் சிசிடிவியில் தன் அண்ணன் எங்கே இருக்கிறான் என்று பார்த்தான். இருவரும் ரோஜா செடிகளின் அருகில் நின்று கொண்டிருந்தனர்.

“ஆஹா! பட்சி சிக்கிடுச்சு.”
அவள் மனதில் ஒரு திட்டம் உருவானது.
 
Last edited:
Top