• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-31 & 32

Meenakshi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 22, 2024
67
39
18
Tiruppur
அத்தியாயம்-31

என்னோட பூபூ ரொம்ப நைஸ் கேர்ள். எல்லாருக்கும் ஹெல்ப் பன்னுவாள். கொஞ்சம் டப்ஃபா தெரிஞ்சாலும் ரொம்ப இரக்க குணம் அதிகம். இண்டலிஜென்ஸ் அதிகம். ஆனால் கொஞ்சம் அப்பாவி கூட. யாருக்காவது ஹெல்ஃப் தேவைப்பட்டு அவ அதை செய்யாமல் போறதுக்கான பர்சண்ட் 0.01 சதவீதம். அதனாலேயும் நிறைய ஹர்ட் ஆகிருக்காள். அதனால் சில சமயங்களில் அவ ரொம்ப கோல்டா நடந்துக்குவாள். ஆனால் கோபம் மட்டும் வந்திருச்சுனா இராட்சசி. அதுக்கு ஒரு இன்சிடெண்ட் இருக்கு. அதை மறுபடியும் சொல்றேன்.
-மித்ரன் டூ ஆதி.

இரவு நேரம். ஏழு மணி. கனியை அவள் வீட்டுக்கு சொன்னபடி அனுப்பி விட்டிருந்தாள் மனோஷா. தன் அண்ணனிடம் தான் வரத் தாமதமாகும். கணினியில் சில வேலைகள் இருக்கிறது என்றும் கூறி விட்டிருந்தாள். அது மட்டுமில்லாமல் தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தான்.
அவன் நர்சரி அருகில் இருப்பதால் வந்து விட்டால் என்ன செய்வது. அனைத்தையும் யோசித்து வைத்து செயல்படுத்தி விட்டிருந்தாள் மனோஷா. காலையில் நடந்த சம்பவத்தினால் மித்ரன் மனோஷாவைக் கோபப்படுத்தும் எந்த செயலையும் செய்யமாட்டான். அதனால் நர்சரியில் அமைதியாக அவன் வேலையைத் தொடர்ந்தான்.
ஆதித் காரை பார்க் செய்து விட்டு உள்ளே வந்தான்.
கதவும் திறந்துதான் இருந்தது.

சிவப்பு நிற காட்டன் புடவை, காலர் வைத்த பச்சை நிற பிளவுஸ், ஒரு கிளிப் கொண்டு கூந்தலை அடக்கி இருந்தாள். அது தோள் புறம் விரிந்து கிடந்தது. ரிசப்சன் அருகில் இருக்கும் சோபாவில் சாய்ந்தப்படி தன் கைப்பேசியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள்.
கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் உடனே எழுந்து நின்றாள்.

“ஹாய் மிஸ்டர்.கோல்ட்.”

“ஹலோ மனோஷா மேடம்.”

“மீட்டிங்க் ஸ்டார்ட் பன்னலமா?”

“புரஜக்டர் எதாவது இருக்கா?”

“ம்ம் இருக்கு.”
அவளது அலுவலக அறைக்கு வலது புறம் ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றாள் மனோஷா.

கண்ணாடியால் அமைந்த சிறிய கான்பிரஸ் அறை அது. ஒரு டேபிள் இருந்தது. அது இல்லாமல் இருவர் அமரும் வகையில் சோபா இருந்தது.

“சிட்.”

அதே அறையில் ஒரு பிரிட்ஜூம் இருந்தது. அதைத் திறந்து ஒரு குளிர்பானத்தை அவன் முன் வைத்தாள்.

“நான் கூல் டிரிங்க்ஸ் அதிகம் சாப்பிடமாட்டேன்.. நோ தேங்க் யூ.”

“கிரேட். நானும் தான்.”
அவளைப் பார்த்து ஒற்றைப் புருவத்தை உயர்த்தினான்.

“ஐஸ்கீரிம் மட்டும்தான். என்னோட அம்மா புருட் டிரிங்க்ஸ் மட்டும் தான் குடிக்க அலவ் பன்னுவாங்க. எனக்கும் பழகிடுச்சு.”

“ஓ! ஷெல் வி ஸ்டார்ட்?”
ஒரு பென்டிரைவை அவளிடம் கொடுக்க சிபியூவில் அதைச் செருகி புரோஜக்டரோடு இணைத்தாள் மனோஷா.

அதில் ஒரு பைல் மட்டும் இருக்க அதை காபி செய்த பின் ஓட விட்டாள். பவர் பாயின்ட் பிரசண்டேசன் அவள் கண் முன் விரிந்தது.

அவன் அருகே அமர்ந்தவள் பக்கவாட்டில் இருந்த டேபிளில் மவுஸ், சிபியூ இருந்ததால் அதை இயக்கினாள்.

முதலில் வயதான பெண் மணியின் புகைப்படம் இருந்தது. வடிவழகியேதான். அவரின் வயது அவரைப் பற்றிய குறிப்புகள் இருந்தது.
அதைப் படித்தவள் அடுத்தடுத்த சிலைடுகளை படிக்க ஆரம்பித்தாள்.
அரை மணி நேரத்தில் முழுவதும் படித்து முடித்திருந்தாள்.

“ஏ.ஐ பப்ளிக் ஸ்கூல்? நாம அங்க கூட..”

“என்னோட பெரியப்பா கரஸ்பாண்ட்ண்ட். பேரளவில். நான் தான் மேனேஜ் பன்னறேன்.”

“ஏ.ஐ காலேஜ்.?”

“என்னோட அப்பா சேர்மேன். அதையும் நான் தான் மேனேஜ் செய்யறேன். கம்பெனிஸ் மட்டும் அவங்க பார்த்துக்குவாங்க. அதிலும் நான் ஒரு டேரக்டர்.”

“ஓ மை காட்? என்னோட பீஸ் சேவிங்க்ஸ்னு சொன்னீங்க. யூ ஆர் வெரி ரிச். நான் உங்களை ஸ்கூலில் வொர்க் பன்னற டீச்சர்னு நினைச்சேன்.”

“இல்லை..”

“ஒரு தடவை கூட நீங்க சொல்லவே இல்லை?”

“நீங்களும் கேட்கவே இல்லை.”

“எனக்கு தெரிஞ்சுருந்தால்..”

“அப்பவும் நீ என்னை அடிச்சுருப்ப.. அதில எந்த மாற்றமும் இல்லை.”

“ஹான்..” மேல் பற்களால் கீழ் உதட்டைக் கடித்த மனோஷா, “உண்மைதான். நிச்சயம் அடிச்சுருப்பேன்.” என்றாள்.

அவளின் முக பாவனைகளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்த ஆதித் எதிரில் திரையின் மீது கவனம் செலுத்தினான்.
சில நொடிகள் அமைதி நிலவியது.

“சரி.. இப்ப வில்லேஜ் கெட்ட்ப்புக்கு என்ன செய்யறது?”

“நாளைக்கு நான் சொல்ற டெய்லர் ஷாப்பில் போய் மெசர்மெண்ட் கொடுத்திரு. டிவெண்டி செட்ஸ் சுடிதார் போதுமா? இல்லை தேர்ட்டி வேணுமா?”

“வாட்?”

“சி இதெல்லாம் சாதாரண சுடிதார்ஸ். கிராமத்தில் நீ ரொம்ப தனியா தெரிய மாட்ட. உன்னோட டேஸ்ட்டுக்கு இல்லைனாலும் அட்ஜஸ்ட் பன்னிக்கோ.. அப்புறம் நைட் டிரஸ்.. ஒரு டென் நைட்டிஸ். டென் சாரிஸ்..”

“சாரிஸ் எங்கிட்ட இருக்கு.”

“டிசைன்ஸ் எல்லாம் ரொம்ப மார்டனாவும், யுனிக்காவும் இருக்கு. வில்லேஜ் லெவல்க்கு கொஞ்சம் தேவைப்படும்.”
நெற்றியில் கை வைத்துக் கொண்டு அமர்ந்தாள் மனோஷா.

“மனோஷா என்னாச்சு?”

“என்ன மேன் நீ டிரஸ் ஷாப் நடத்துற மாதிரி பேசிட்டு இருக்க?”

“அதுவும் இருக்கு.. ஏ.ஐ கார்மெண்ட்ஸ், ஏ.ஐ டெக்ஸ்டைல்ஸ்.. உனக்கு அங்கிருந்து டிரஸ் வராது.”

கருப்பு நிற சட்டையின் முன் கையை முழங்கை வர மடித்துவிட்டான் ஆதித். அவன் கையை சில நொடிகள் கவனித்த மனோஷா கண்களை சீலிங்கை நோக்கி மாற்றினாள்.

“ஹே டோண்ட் பி அப்சட்.”

“அப்சட் எல்லாம் இல்லை.. நீ இவ்வளவு பிரிப்பேரா இருக்கறதப் பார்க்கும் போதுதான் இதோட ஸ்கேல் எனக்குப் புரியுது. லைட்டா பயமாவும் இருக்கு. சொதப்பி வச்சுருவேனோனு…”

அவள் தோள் மீது ஆறுதலாக கை வைக்க வந்த ஆதித் அப்படியே நிறுத்தி விட்டு, “யூ கேன் டூ இட். உன்னைத் தவிர யாராலும் இதை செய்ய முடியாது.” என்றான்.

“ம்ம்ம்.. ஐ ஹேவ் டூ. சரி எ.ஐ மீனிங்க் என்ன?”

“அருண் செவ்வெழிலன், ஆதித் பொன்னெழிலன், அகல் நிலா, இளமதி. எங்க நாலு பேராட பர்ஸ்ட் லெட்டர்ஸ்.”

“அ, ஆ, இ.. ஆல்பாமெட்டிக்கல் ஆர்டர்..”

“ம்ம்ம். அப்படித்தான் பாட்டி விருப்பபட்டாங்க.”

“ஒ! ஓகே.”

“வேற எதாவது கேட்கனுமா?”

“கேட்கிறேன். ஆனால் இப்ப சாப்பிடனும். பசிக்குது.”




அத்தியாயம்-32

மிஸ்டர்.கோல்டு என்னோட பக்கத்தில் இருக்கும் போதெல்லாம் ஒரு மாதிரி அன்கம்பர்டபிளா இருக்கு. அந்த பீலிங்க் எனக்குப் பிடிக்கலை. மிஸ்டர். கோல்டை என்னால் ஈசியா பிரடிக்ட் செய்யவும் முடியலை. முகத்தில் எதையும் காட்டிக்க மாட்டகிங்றான். அவங்கிட்ட இருந்து எனக்கு எந்த நெகட்டிவ் பீலிங்கும் வரலை. ஆனால்.. ஐ பீல் ஹெவி இன் மை ஹார்ட்.
-மனோ.

“ஓகே சாப்பிடலாம். புட் ஆர்டர் பன்னட்டுமா?” நேரத்தைப் பார்த்தபடி கேட்டான்.

“இல்லை.. நானே ஆர்டர் செய்யறேன். உங்களுக்கு என்ன வேணும்?”
அவன் கூறி முடிக்க அவளும் ஆர்டர் செய்தாள். உணவும் வந்தது. அதுவரையில் அமைதியாக மீண்டும் அனைத்தையும் படிக்க ஆரம்பித்தாள்.

அவனும் அமைதியாக அவளைப் பார்த்தப்படி இருந்தான். சிறிது நேரம் தன் கைப்பேசியில் எதையோ பார்த்தான். பிறகு அவளைப் பார்த்தான். அவள் முகம் மிகவும் ஆழ்ந்து அதைப் படித்துக் கொண்டிருப்பதைக் காட்டியது.
அதனால் அவளை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. உணவு வந்ததற்காக அலைபேசி அடிக்க அதை எடுத்தாள் மனோஷா.

“நான் போய் வாங்கிட்டு வரேன்..” என்றான் ஆதி.

“இல்லை.. நானே போறேன். யூ சிட்.” அவனுக்கு முன்னால் சென்று உணவை வாங்கினாள் மனோஷா.
அவள் வாங்கி உள்ளே நுழையும் போது அவளுக்குக் கதவைத் திறந்து விட்டான் ஆதி.

“தேங்க் யூ.”

“எங்க சாப்பிடறது?”

“டைனிங்க் ரூம் இந்த சைட் இருக்கு.”

“டைனிங்க் ரூம் கூட இருக்கா?”

“இருக்கு. கனி சாப்பிடனும். ஒவ்வொரு தடவை நானும் லஞ்சு சாப்பிடுவேன்.”
அந்த டைனிங்க் ஹால் வித்யாசமாக இருந்தது.

“கேன் யூ சிட் ஆன் த புளோர்? இது ஜாப்பனிஸ் ஸ்டைல். அப்படினு ஸ்டைலா சொல்லிக்கலாம். ஆனால் நம்ம டிரடிசன் படி நாம கீழ உட்கார்ந்துதான் சாப்பிடுவோம். கனி ஆசைப்பட்டதால் அதனால் இப்படி செட்டிங்க் பன்னிட்டேன். உங்களுக்கு அன்கம்பர்டபிளா இருந்தால் நாம ரிசப்சன் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடலாம்.”

ஒரு சிறிய புன்னகையுடன், “இல்லை இங்கேயே சாப்பிடலாம்.” என்றான்.

“எனக்காகவெல்லாம் ஓகே சொல்லாதீங்க..”

“நிச்சயமா இல்லை. சாப்பிடலாம்.”
இருவரும் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தனர்.

“இதை டேஸ்ட் பன்னுங்க.” என சிறதளவு உணவை எடுத்து அவனுடைய பார்சல் பேப்பர் பிளேட்டில் வைத்தாள். அவனும் அவனுடைய உணவில் சிறிதளவு உணவை எடுத்து வைத்தான்.

“ஐம் நாட் ஆபரிங்க் மச். ஏனால் நானே நிறைய சாப்பிடுவேன். இதெல்லாம் எனக்கு பத்தாது.”

“ஐ நோ. சாப்பிடுங்க.” உணவில் கவனம் வைத்த மனோஷா தலையை நிமிர்த்தவில்லை. அவளைப் பார்த்தப்படியே உணவை உண்டு முடித்தான் ஆதித்.

“பார்சலை இப்படி கொடுங்க.”

“நானே டஸ்ட்பின்னில் போடறேன்.”

“ஹச்சோ அதுக்கு இல்லை. அதே கவரில் போட்டு வைக்கனும். வெளியில் டிஸ்போஸ் பன்னிடலாம். இல்லை கனி கண்டுபிடிச்சுடுவா..”
அந்த அறையின் ஜன்னல் கதவைத் திறந்து விட்டவள், “கனிக்கு லைட்டா ஸ்மெல் இருந்தாலும் தெரிஞ்சுடும்.” அறையின் ஏசியை அணைத்து விட்டு மின் விசிறியை வேகமாக வைத்தாள்.

அவள் உணவு பொட்டலத்தை பாலிதீன் கவருக்குள் போட்டு நன்றாகக் கட்டினாள்.

“தப்பு பன்னால் எவிடென்ஸ் இருக்கக் கூடாது.”
அவளின் கூற்றில் அவன் முகத்தில் மீண்டும் ஒரு புன்னகை உதித்தது.

“நாம எந்த தப்பும் செய்யலையே..”

“உங்களுக்கு வேணால் இருக்கலாம். ஆனால் நான் மித்து, கனி எல்லார்கிட்டேயும் பொய் சொல்லிட்டு இதை செய்யப் போறேன். அதனால் எந்த லூப் ஹோலும் இருக்கக் கூடாது. மித்துக்கு தெரிஞ்சால் அம்மாக்கு தெரிஞ்சுடும்.”

“தேங்க் யூ.”
மின் விசிறி வேகமாக ஓட பேன் காற்றில் அவளுடைய தலை முடி கலைய ஆரம்பித்தது. சட்டென்று ஆதித் அவள் தலையின் மீது கை வைத்தான். அவள் தலைமுடியை ஒதுக்கியும் விட்டான். அவன் செய்கையில் விழிகளை விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் மனோஷா.

பிறகு சட்டென்று தன் கையை எடுத்து கண்களை தவறு செய்தவன் போல் சுருக்கினான்.

“சாரி.. சீரியஸா எனக்கு தலை முடி கலைஞ்சிருந்தால் பிடிக்காது. என்னோட சிஸ்டர்ஸ்க்கு இப்படி அடிக்கடி செஞ்சு பழக்கம். அதே மாதிரி.”

“ஓகே கூல்.”
மின் விசிறியை அணைத்து விட்டு ஜன்னலை எட்டி சாத்தினாள் மனோஷா. அதில் புடவை விலகி லேசாக அந்த சிற்றிடை தரிசனம் கொடுத்தது. சட்டென திரும்பிய ஆதித் அந்த கவரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.

மனோஷாவும் அந்த அறையில் உள்ள விளக்கை அணைத்து விட்டு பூட்டி விட்டு வெளியே வந்தாள்.

நுழைவு வாயிலின் அருகே அவனிடம் இருந்து அந்த பாலீதின் கவரை வைத்த மனோஷா ஆதித்தின் முகத்தைப் பார்த்தாள். அவன் முகத்தில் லேசாக குற்ற உணர்வு தெரிந்தது.

“ஹே ஆதித்..”
அவள் சட்டென்று பெயரைக் கூறி அழைத்ததில் அவளை நிமிர்ந்து பார்த்தான் ஆதித்.

“இதுக்கு போய் என்ன பீல் பன்னிட்டு?”

“இல்லை உனக்கு கன்சண்ட் இல்லாமல் தொட்டால் பிடிக்காது. அதையும் மீறி.. உன் கண்ணில் கோபத்தைப் பார்த்தேன்.”

“ஆதித் எனக்கு பர்மிஷன் இல்லாமல் யாராவது தொட்டால் பிடிக்காது. உண்மைதான். அப்ப உன்னை எனக்கு யாருனு தெரியாது. இப்ப எனக்கு தெரியும். ஜஸ்ட் ஏதோ ரிப்லெக்ஸில் அப்படி செஞ்சுட்ட. அவ்வளவுதான். ஐ நோ யூ. எனக்கு கோபம் வந்தது உண்மைதான். ஆனால் இதை எல்லாம் சிரியஸா எடுக்க வேண்டியது இல்லை.”

“இனி மேல் இப்படி நடக்காமல் பார்த்துக்கிறேன்.”

“ஓ மை! சீரியஸ்லி ஆதி? எதாவது நடந்தால் பார்த்துக்கலாம்.”

“ஐ நீட் யூ மனோஷா. என்னோட அண்ணாவைக் கண்டுபிடிக்கனும். டிடெக்டிவ் வச்சும் விசாரிச்சுட்டேன். என்னால் கண்டுபிடிக்க முடியலை. எந்தக் காரணத்துகாகவும் உனக்கும் எனக்கு இருக்கற…” அவனை இடை வெட்டியவள்,
“அண்டர்ஸ்டேண்ட்” என பதில் கூறினாள்.

“சரி இப்ப காண்டிராக்ட் ரெடி செய்யலாம்.”

“காண்டிராக்டா?”
இரு புருவங்களையும் தூக்கி அவனைப் பார்த்தவளின் முகத்தில் ஒரு கேலிப் புன்னகை உதித்தது.

“சப்போஸ் நீ என்னை எதாவது செஞ்சுட்டால் என்னோட கம்யூட்டரில் ஒரு எவிடென்ஸ் இருக்கும். உன்னோட பேரு, ஊரு, அட்ரஸ், இருக்கும். ஒரு சேப்டிக்காக.”

“இந்த காண்டிராக்ட் வச்சு போலீஸ் உன்னை தேடி வருவாங்க..”

-ஊஞ்சலாடும்..