• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-35 & 36

Meenakshi Rajendran

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 22, 2024
120
40
28
Tiruppur
அத்தியாயம்-35

எங்களை தெரிஞ்சவங்க, சொந்தக்காரங்களுக்கு எல்லாம் அண்ணன் எங்க போயிருக்கானு கேட்டால் பாரினில் இருக்கானு சொல்லி இருக்கோம். ஏனால் அவனை போட்டோஸில் எங்கேயும் பார்க்க முடியாதுனு எல்லாருக்கும் தெரியும். ஆனால் உண்மை அது இல்லைனு நிச்சயமாக என்னால் சொல்ல முடியும்.
-எழில்.

பேருந்தை விட்டு தன் லக்கேஜுடன் இறங்கினாள் மனோஷா. கண்டக்டர் அவளுக்கு உதவ அவருக்கு நன்றியைத் தெரிவித்தபடி இறங்கினாள்.
அப்போது அவள் அருகில் நின்று கொண்டிருந்தார். டிராலியை ரோட்டில் உருட்டியவள் மறு கையில் டிராவல் பேக்கை உருட்டிக் கொண்டு நடந்தாள். அரைக்கை கொண்டு தைக்கப்பட்டு காலர் வைத்த காட்டன் டாப், பட்டியாலா பேண்ட், துப்பட்டாவை ஊக்கு கொண்டு குத்தி இரு பக்கமும் விட்டிருந்தவள் தன் தலை முடியை பின்னலாகப் போட்டிருந்தாள். தலையில் ஒரு முழம் மல்லிகைப் பூவும் தொங்கிக் கொண்டிருந்தது.
காரில் அவளை பேருந்து நிறுத்ததில் விடும் முன் காரில் அமர்ந்து ஆதித் அவளை இப்படி தயார் செய்திருந்தான்.

“மனோஷா ஷால் ஒன் சைட் இருக்குல்ல. அதை இரண்டு சோல்டரிலும் போட்டு இந்த பின்ஸ் போடு.”

அவள் அதே போல் செய்தவுடன் அருகில் இருந்த பூக் கடையில் மல்லிகையை வாங்கி வந்தான்.

“ஆதித் எனக்கு தலை வலிக்கும் போல் இருக்கு.”

“ஒன் டே பியர் பன்னிக்கோ. எப்படி பின் பன்னும்னு தெரியுமா?”

“நோ. நான் பூவே வைக்க மாட்டேன்.”

“சுத்தம்.”

டிரைவர் சீட்டில் அமர்ந்து ஊக்கில் அதை கோர்த்தவன், “இதை இப்படி கோர்த்து தலையில் அப்படியே பின் பன்னிடலாம். சைடில் அசையாமல் இருக்க டிக் டாக் பின்ஸ் போட்டுக்க.” என்றான்.

“ஆதித் இது எப்படி உனக்கு இதெல்லாம் நல்லாத் தெரியுது?”

“ஏன் தெரியாது? என்னோட வீட்டில் ஐஞ்சு பொண்ணுங்க இருக்காங்க. பின்ன எப்படி தெரியாமல் போகும். அவங்க எல்லாருக்கும் எராண்ட் பாய் நான்தான்.”
உதடுகள் இரண்டையும் அழுத்திக் கொண்டே தலையை ஆட்டினாள் மனோஷா.

“ஆதித் இதை நான் அங்க இறங்கும் போது வச்சுகிட்டா?”

“பேக்கில் வச்சுக்கோ. இறங்கும் போது மறக்கமால் வச்சுக்கோ..”

“ஆமா எதுக்கு துப்பட்டா இரண்டு சைடும் போட்டு பின் பன்னனும்? நான் இதெல்லாம் போட மாட்டேன்.”

“மனோஷா உன்னோட பர்ஸ்ட் இம்பிரசன் பெஸ்டா இருக்கனும். ஜெனரல் ஐடியா. பொண்ணுங்க சுடிதார் போட்டு இரண்டு பக்கமும் ஷாலோட பொட்டு வச்சு , பூ வச்சு.”

“ஸ்டாப். ஸ்டாப்.. இவங்க எல்லாம் நல்ல பொண்ணுங்க அதான?”

“யா ரைட். கிராமத்தில் இதை ரொம்ப அதிகமாப் பார்ப்பாங்க.”

“ஹான்ன். பி கப் சைஸ் இருக்கறது என்னோட தப்பில்லையே.. இட்ஸ் ஃபார் மை பேபி. இட்ஸ் ஃபார் மை பிளஷர். ஐம் நாட் அஷேம்டு ஆஃப் மை பிரஸ்ட்ஸ்.” அவள் எதார்த்தமாக கூறி விடவும் ஆதித் அவள் வாயைப் பொத்தி விட்டான்.

அவள் வாயைப் பொத்தியதும் மனோஷா முறைத்தாள். கையை எடுத்தவன்,
“சாரி. சாரி. எல்லாரும் உன்னை மாதிரி பிராட் மைண்டடு கிடையாது. அண்ட் இட்ஸ் ஆக்வர்டு ஃபார் மி. எந்தப் பொண்ணும் எங்கிட்ட இப்படி பேசுனது கிடையாது. அதுவும் என்னோட பிரண்ட்டோட தங்கச்சி. நீ பேசறது ஒரு என்னனு ரெஜிஸ்டர் ஆகறதுக்கே லேட் ஆகிருச்சு.”

“ஓ.” மனோஷா அமைதியானாள்.

“யாரும் பேசுனது இல்லையா?”

“ம்கூம் இல்லை. சில விஷயம் எனக்குத் தெரியும். சில விஷயம் எனக்குத் தெரியாது.”

“ஓகே.”

“மனோஷா அங்க போய் யார்கிட்டேயும் புரோகிரஸ்வா எதுவும் பேச வேண்டாம். அங்க என்ன நடந்தாலும் உடனே பரவிடும். ஒரு பெரிய ஆள் போய் பேசுனால் கொஞ்சம் ஏத்துக்குவாங்க. ஒரு சாதாரண பொண்ணு சொல்றதை இந்த சொசைட்டி ஏத்துக்காது. ஓகே வா. நீ பிளே பன்னப் போற ரோல் சிட்டியில் படிச்ச கிராமத்துப் பொண்ணு.
சோ.”

“ஷட் யுவர் மவுத். அண்ட் டூ யுவர் டூட்டினு சொல்லற?” மனோஷாவின் கடினமான குரலைக் கேட்ட ஆதித் சலனமடைந்தான்.

“நாட் லைக் தட்.”

“ஹே சில். சும்மா விளையாடுனேன். நோ பிராபளம் ஆதித்.”

“தேங்க்ஸ். இந்தா பொட்டு.” கோபுர ஸ்டிக்கர் பொட்டு ஒன்றை அவள் நெற்றியில் ஒட்டி விட்டான். கருப்பு நிறத்தில் சுடர் வடிவில் இருந்த அந்த பொட்டு அவள் நெற்றிக்கு அழகாக இருந்தது.

“பிரிட்டி. உன்னோட ஃபேஸ்க்கு பொட்டு நல்லாருக்கு. அப்புறம் இதை டெய்லியும் வச்சுக்கோ. நோ மேக் அப். ஐ லைனர் வேணும்னா போட்டுக்க. டாஷ்போர்டைத் திறந்தவன் ஒரு சிறிய பேப்பர் பாக்கெட்டை எடுத்தான். திருநீறை எடுத்து நெற்றியில் வைத்தும் விட்டான். பாக்ஸையும், திருநீறையும் அவள் பேக்கினுள் ஜிப்பை திறந்து போட்டான்.
தன் கைப்பேசியை எடுத்தவன் அவளை ஒரு புகைப்படம் எடுத்தான். ஆப்பிளுக்குள் அந்த அழகி சித்திரமாய் சிறைப்பட்டுவிட்டாள்.

“இங்க பாரு.” என அவளுக்கும் காட்டினான்.
தன் புகைப்படத்தை வாங்கிப் பார்த்தாள்.

“வாவ்.. இந்த போட்டோ நல்லா வந்திருக்கு. நான் யூ டியூபில் பார்த்த மாதிரி கெட்டப் சூட் ஆகிருச்சு.” என மனோஷாவே சிலாகித்துக் கொண்டாள்.

“ஆதித் நீ ரொம்ப மெட்டிகுலஸ். டீடெயில் ஓரியண்ட்டு.”

“ஐ நோ.”

“அப்புறம்?”

“இன்னும் என்னம்மா?”

“உனக்கு மேல் ஈகோ கிடையாது. கொஞ்சம் கமிதான். சாரி கேட்க யோசிக்கறது இல்லை. மித்து மாதிரி.”

“மனோஷா எனக்கும் மேல் ஈகோ இருக்கு. காட்டிக்கறது இல்லை. அவ்வளவுதான்.”

“ஓ..”

தலையில் இருந்த பூவை எடுத்து பேக்கில் பத்திரப்படுத்தினாள்.

“உனக்கு டவுட்னா கண்டிப்பா என்னைக் கூப்பிடு.”
இவற்றை எல்லாம் நினைத்துப் பார்த்தவள்,
‘மனோ என்னடி உன்னோட நிலைமை இப்படி ஆகிருச்சு.’ அவளுக்கு மல்லிகைப் பூ மணத்தில் தலை வலிக்கும் போலிருந்தது.

‘என்ன யாரையும் காணோம்? தப்பா ஸ்டாப்பில் இறங்கிட்டமா? இல்லையே கண்டக்டர் கரக்டாதான இறக்கி விட்டாரு. சுத்தியும் வயல் மாதிரி இருக்கே.”
அப்போது அவளருகே ஒரு கார் வந்து நின்றது.

‘ஏதோ கார் வருது?...” அதன் எண்ணைப் பார்த்தவள், ‘இந்த கார்தான் ஆதித் சொன்னான்.’ என அதில் அருகில் சென்றாள்.
அதிலிருந்து செக்டு சர்ட் ஜீன்ஸ் அணிந்து ஒருவன் இறங்கினான்.

“நீங்க மனோகரியா?”




அத்தியாயம்-36

மனோஷாவை ஒரு வழியா அனுப்பிட்டேன். எவ்ளோ பிரிப்பரேஷன். கொஞ்சம் பிசகினாலும் அவ்வளவுதான். மனோஷாவும் கோபப்படாமல் ரொம்ப கோ ஆப்ரேட் செஞ்சாள். பார்க்க பாவமாகவும் இருந்துச்சு. ஏனால் இதெல்லாம் அவளுக்கு புதுசு. கிராமத்தில் போய் அங்க இருக்கற பழக்க வழக்கத்தில் கல்ட்சுரல் ஷாக் வராமல் இருந்தால் ஓகே.
-எழில்.

மனோஷா மனோகரியாகி இருந்தாள்.
‘இந்த விஷயம் மட்டும் என்னோட மம்மிக்கு தெரிஞ்சால் அவ்வளவுதான். ஆசையாய் பெயர் சூட்டியவர் ஆகிற்றே.’

“ம்ம்ம். அது நான் தான்.”

“வாங்க.. நான் ஹரி. ஆதித் பிரண்ட்.”
அவளுடைய பைகளை வாங்கி பின் புறம் வைத்தான்.

“கொஞ்சம் லேட் ஆகிருச்சு. வழியில் மாடுங்க குறுக்க வந்திருச்சு.”

“ஹாய்! தேங்க் யூ.” என அவனுடன் பேசியபடி ஏறி காரில் அமர்ந்தாள்.

“ஆதித் எல்லாம் சொன்னான். நீங்க எதுக்கும் கவலைப் பட வேண்டாம். எழில் பத்தி எப்படியாவது கண்டுபிடிச்சு கொடுங்க.”

“உங்களுக்கும் அருண் செவ்வெழிலனை தெரியுமா?”

“என்ன இப்படி கேட்டுடீங்க. நான், அருண், ஆதி எல்லாம் கூட்டாளிங்க. நான் படிச்சு முடிச்சுதற்கு அப்புறம் இரண்டு எழிலும் கேட்டுகிட்டதால் மட்டும் தான் இங்க வேலை செய்யறேன்.”

“இந்த ஊருக்குள்ள யார்கிட்ட எல்லாம் நான் கவனமா இருக்கனும்.”

“பெரிசா அப்படி யாரும் இல்லை. நீங்க வடிவழகி அம்மா வீட்டில் வேலை செய்யறீங்கனு சொன்னால் யாரும் உங்களை சீண்ட மாட்டாங்க. முதலில் எங்க வூட்டுக்குப் போயிட்டு அப்புறம் அவுட் ஹவுஸ் போலாம்.”

“ஓகே.”

“அப்புறம் அவுட் ஹவுஸ் பக்கத்தில் இருக்கற இன்னொரு குவார்ட்சில் ஒரு பாட்டி இருக்கு. அதுகிட்ட ஜாக்கிரையதா இருங்க. அதுக்கு சரியான பாம்பு காது. கண்ணு.”

“அப்படின்னா?”

“எப்பவும் உங்களை கவனிச்சுட்டே இருக்கும்.”

“சரி கவனமாக இருந்துக்கிறேன்.”

“என்னோட சிஸ்டர் நீங்க எப்படா வருவீங்கனு காத்திட்டு இருக்காள்.”

“உங்க சிஸ்டர் பேர் என்ன?”

“சங்கீதா. உங்களுக்கு பர்சனலா என்ன தேவைப்பட்டாலும் அவங்க ஹெல்ஃப் பன்னுவாங்க.”
ஹரி எதார்த்தமாக பல நாள் பழகியதைப் போல் பேசிக் கொண்டே வந்தான். கிராமத்தைப் பற்றி கூறிக் கொண்டே வந்தான். கள்ளம் கபடமில்லாதவன் போல் தெரிந்தது. வெளியில் கவனித்தப்படி மனோஷாவும் அத்தனையும் உள் வாங்கிக் கொண்டு பதில் கூறிக் கொண்டு வந்தாள்.
வீடுகள் நிறைந்த பகுதியில் நுழைந்தது கார்.

“பாருங்க அந்தக் கோயிலில் தான் சாட்டப் போறாங்க. இன்னும் பதினைஞ்சு நாள் இருக்கு.” ஊரில் இருக்கும் ஒவ்வொரு பகுதியையும் அவன் விளக்கிக் கொண்டு வர அமைதியாகக் கேட்டுக் கொண்டாள் மனோஷா.

“ஹரி.”

“மனோகரி, எல்லார்த்து முன்னாடியும் என்னை அண்ணா கூப்பிடுமா. சிலர் பேர் சொல்லி கூப்பிட்டால் ஏதாவது சொல்லுவாங்க.”

“சரி அண்ணா. வண்டியை இப்படி நிறுத்துங்க. சாமி கும்பிட்டுப் போலாம்.”

“பரவால்லையே.. சாமி பக்தி எல்லாம் உண்டா..”

“அப்படி எல்லாம் இல்லை. செய்யற வேலையை கரக்டா செய்யனும்.”

ஹரியும் காரை நிறுத்தி விட்டு அவளுடன் இறங்கினான்.
மாலை நேரம் என்பதால் கோவிலில் ஆங்காங்கே சில பெண்கள் விளக்கேற்றிக் கொண்டிருந்தனர்.
செருப்பை வெளியில் கழற்றிய மனோஷா கோவில் வாசப்படியைத் தொட்டுக் கும்பிட்ட படி வலது காலை எடுத்து வைத்தாள்.
அவளுக்கு எதிரில் ராசாப்பாளையத்து மாரியம்மன் அலங்காரத்துடன் இருந்தார். ஒரு புன்னகையுடன் உள்ளே நுழைந்தவள் அருகில் உள்ள விநாயகரின் சன்னதியில் தோப்புக் கரணம் போட்டு ஸ்லோகம் எல்லாம் கூறினாள். பிறகு கோவிலை வலம் வந்து கருவறையின் முன் நின்றனர்.

“என்னப்பா ஹரி இது யாரு இந்தப் பொண்ணு? புதுசா இருக்கு? ”
ஒரு பெண்மணி கேள்வியுடன் கேட்டார்.

“அக்கா இந்த பொண்ணு பேரு மனோகரி. வடிவழகி பாட்டி வீட்டுக்கு புதுசா வந்திருக்கற கணக்குபுள்ளை.”
இதுவரை கண்களை மூடிக் கொண்டிருந்த மனோகரி கண்களைத் திறந்து எதிரே இருந்த பெண்மணியைப் பார்த்து புன்னகைத்தாள்.
அந்தப் பெண்மணியும் புன்னகைத்தார்.

“வந்த முதல் நாளே சாமி எல்லாம் கும்புடற பாப்பா. நல்லா வேண்டிக்கோ. உனக்கு இந்த வேலை நிலைச்சு நிக்கனும்னு.”

“சரிங்க அக்கா. அப்படியே வேண்டிக்கிறேன்.”
அதற்கு பூசாரி வரவும் அனைவரும் சாமியின் மீது கவனம் வைத்தனர்.
பூசாரி வரவும் தட்டில் பத்து ரூபாய் போட்டு திருநீறை எடுத்து வைத்துக் கொண்டாள்.
அழகாய் சிரித்துக் கொண்டு பேசிய மனோஷா பலரது கவனத்தைக் கவர்ந்திருந்தாள்.

“பாரு அந்த புதுசா வந்திருக்க புள்ளை எவ்வளவு இலட்சணமா இருக்கு. நல்லாவும் பேசுது. அப்பளையா விநாயகன் முன்னாடி ஏதோ ஐய்யர் மாதிரி மந்திரம் எல்லாம் சொல்லுச்சு. ரொம்ப பக்தியாட்டக்குது.”
இதை எல்லாம் ஹரி கேட்டுக் கொண்டிருக்க மனோஷா நெற்றியில் மிகப் பெரிய பட்டை ஒன்றை அடித்துக் கொண்டு சந்தனமும், குங்குமமும் வைத்துக் கொண்டிருந்தாள்.

‘இதை மட்டும் என்னோட மம்மி பார்த்துருக்கனும். பொண்ணுக்கு ஏதோ ஆகிருச்சுனு டாக்டர்கிட்ட கூட்டிட்டு போயிருப்பாங்க.’ என அவள் மனதிலும் ஓடத் தவறவில்லை.

கோவிலில் இருந்து மீண்டும் காரில் ஏறினர்.

“மனோகரி சூப்பர். பலருக்கு உங்களை பிடிச்சு போச்சு. கலக்கிட்டீங்க.”

“சரிங்க அண்ணா.”

“அப்புறம் ஸ்லோகம் எல்லாம் சொன்னீங்களே? அதெல்லாம் முன்னாடியே தெரியுமா?”

“இல்லையே. காரில் வரும் போது படிச்சுட்டு வந்தேன் அண்ணா.”
அவளை மெச்சுதலாகப் பார்த்து வைத்தான்.

“அப்புறம் செல் போன் அதிக ஆளுங்க இருக்கற சமயம் யூஸ் பன்னாதீங்க. பசங்க செல் போன் வச்சுருந்தாலே திட்டுவாங்க. பொண்ணுங்க வச்சுருந்தால் இன்னும் அதிகமாப் பேசுவாங்க. அதையும் பார்த்துக்குங்க. அதுதான் கெடுக்கற மாதிரி.”

“ஓகே. நான் பார்த்துக்கிறேன்.” என்றாள்.

‘ச்சே செல்போன் வச்சுருந்தால் என்ன? கேரக்டர் என்ன மோசமாகிடுமா என்ன?’ என மனதில் நினைத்துக் கொண்டாலும் வெளியில் சொல்லவில்லை.
ஒரு மச்சு வீட்டின் முன் வாகனத்தை நிறுத்தினான் ஹரி.

“இதுதாங்க என்னோட வீடு. வாங்க. லக்கேஜை காரில் விட்ருங்க. நைட் இங்க சாப்பிட்டுக்குங்க. நாளையில் இருந்து நீங்க அங்கேயே சாப்பிட்டுக்கலாம். யாராவது கேட்டால் சமைக்கத் தெரியும்னு சொல்லிடுங்க.”

“அண்ணா எனக்கு நிஜமாவே சமைக்கத் தெரியும்.”

“அப்ப பிரச்சினை இல்லை.”

காரை விட்டு இறங்கியதும் அவளைப் பார்க்க ஆவலாக ஓடி வந்தாள் ஒரு பெண்.

“ஹாய் அக்கா.. நான் பாரதி.”

“ஹாய்.. நான் மனோகரி.”

-ஊஞ்சலாடும்..