அத்தியாயம் -37
வாவ்.. எவ்வளவு கீரினிஷ்ஷா இருக்கு. இந்த ஊருக்குள்ள வரும் போதே ஜில்லுனு காத்து. அப்படியே ஏசி போட்டு விட்ட மாதிரி. சன் லைட்டும் நல்லா இருக்கு. ரெப்ரஷிங்கா பீல் பன்றேன். மேபி இந்த இடமும், மக்களும் எனக்கு ஒரு வித எக்ஸ்பீரியன்ஸ் கத்துக் கொடுக்கலாம்.
-மனோ.
“நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க. வாங்க.”
பாரதியை உற்றுக் கவனித்தாள் மனோஷா.
‘இந்தப் பொண்ணு என்னை விட அழகா இருக்கு. என்னைப் போய் அழகுனு சொல்லிட்டு இருக்கு.’ என நினைத்தாலும் சிரித்தபடியே உள்ளே வந்தாள்.
“அக்கா. வாங்க. உட்காருங்க..” அவள் சோபாவில் அமரும் போது தண்ணீர் கொண்டு வந்தார் ஹரியின் அம்மா.
வாங்கிக் குடித்தவள் மீண்டும் சொம்பைத் திருப்பிக் கொடுத்தாள்.
‘தேங்க்ஸ் ஆண்ட்டி’ தவறி அவள் வாயில் வந்து விட இறுதி நொடியில் ஆன்ட்டியை அம்மா என மாற்றினாள்.
“வரப்ப எல்லாம் சௌரியமா இருந்துச்சாம்மா?”
“எல்லாம் நல்லா இருந்துச்சுங்க அம்மா.” வார்த்தைக்கு வார்த்தை அம்மா போட்டாள். ஹரியின் அம்மாவும் அவளை ஆராய்ந்து கொண்டிருந்தாள். மனோஷா முகத்தில் புன்னகையுடன் அமர்ந்திருந்தாள்.
“உனக்கு எந்த ஊரும்மா?”
“எனக்கு கோயம்புத்தூர் தொண்டா முத்தூர் பக்கத்திலேங்க. நிர்மலா காலேஜில் படிச்சுட்டு வடிவழகி அம்மா கம்பெனில சூப்பர் வைசர் வேலை கேட்கப் போனேங்க. அங்க வேண்டாம் இங்க ஒரு வேலை காலி இருக்கு. சம்பளமும் எச்சு. தங்க வீடு, சாப்பாடு எல்லாம் கிடைக்கும் அப்படினு சொன்னதும் என்ற அப்பன் ஆத்தாட்ட சொல்லிட்டு இங்க வந்துட்டுனங்க.”
“ஏம்பாப்பா? உனக்கு கல்யாணம் பன்னி வைக்கறத விட்டுப்போட்டு இங்க எதுக்கு அனுப்புனாங்க..”
“ஆமாங்க முதலில் கல்யாணத்துக்குத்தான் பார்த்தாங்க. ஆனால் மருதமலையில் இருக்கற ஜோசியர் ஒருத்தர் உன் புள்ளைக்கு சனி திசை நடக்குது. இன்னும் இரண்டு வருஷம் கழிச்சுதான் பன்ன முடியும். வூட்ட வுட்டு தள்ளி இருக்கறது நல்லதுனு சொல்லிட்டாரு. இதைக் கேட்டு நான் பயந்துட்டனுங்க. அதான் அப்பாகிட்ட கெஞ்சி இப்படி வந்துட்டனுங்க. நாம பாசத்தால் ஒன்னா இருந்து ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிருச்சனுனா என்ன செய்யறதுங்க? எனக்கு எங்க அப்பாதாங்க முக்கியம். அதாங்க இப்படி முன்ன பின்ன தெரியாத ஊருக்கு வந்துருக்கங்க. என்ற அப்பா என்னை சின்ன வயசில் தோளில் தூக்கிட்டே இருப்பாங்க. எங்க போனாலும் கூட்டிட்டுப் போய் விடுவாருங்க.” என கண்களில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் விட்டாள்.
“அட கண்ணு. இதுக்கு எதுக்கு கண்ணை கசக்கிட்டு.. இப்ப நான் என்ன கேட்டுப் போட்டேன். இந்த வீடு உன் வீடுமாதிரி நினைச்சுக்கோ. என்ன வேணுமோ சொல்லு நான் உனக்குப் பன்டித் தாரேன். சரியா?”
கண்களை கைக்குட்டை கொண்டு துடைத்துக் கொண்டே மண்டையை ஆட்டினாள் மனோஷா.
“ஏய் பாரதி.. போய் மனோ பாப்பாவைப் போய் இந்த தோட்டத்துச் செடியெல்லாம் காட்டு. பூப்பறிச்சுட்டு வா. அதுக்குள்ள சாப்பாடு ரெடி பன்டிடுவேன்.”
மீண்டும் தலையை ஆட்டிய மனோஷா பாரதியுடன் நடக்க ஆரம்பித்தாள்.
“டேய் ஹரி அங்க என்னடா வாயைப் புளந்துட்டுப் பார்த்துகிட்டு இருக்க.. போய் நம்ம வயக்காட்டில் இருந்து முருங்கைக்காய் பொறிச்சுட்டு வா.” என மகனை முடுக்கினாள்.
கைப்பேசியை எடுத்துக் கொண்டு ஹரி வயக்காடு இருக்கும் திசை நோக்கி நகர்ந்தாள்.
ஆளில்லாத இடம் வந்ததும் ஆதித்துக்கு கைப்பேசியில் அழைத்தான்.
“ஹரி.. மனோஷா வந்துட்டாங்களா?”
“ஆதி நிஜமா மனோகரி சிட்டி பொண்ணா? இல்லை எதாவது டிராமாவில் நடிக்கற ஆளா? என்னம்மா அந்தப் பொண்ணு நம்ம பாஷை பேசுது. நானே அசந்து போயிட்டேன்.”
மறு முனையில் ஆதித் சிரித்து விட்டான்.
அவள் கடந்த பதினைந்து நாட்களாக மணிக் கணக்கில் யூ டியூப் சேனல், பொது நூலகம் என அலைந்து தேடி கொங்கு வார்த்தைகளைக் கற்றுக் கொண்டிருந்தாள். அதன் பலனை இப்போது கை மேல் கிடைத்துக் கொண்டிருந்தது.
“ஊருக்குள் வந்த உடனேயே கோயிலுக்குள் போயிட்டாங்க. ஸ்லோகம் சொல்றாங்க. அங்கிருந்த அக்காக்கள் எல்லாரும் மனோகரியை அப்படி பார்த்தாங்க. இவ்வளவு என்னோட அம்மாகிட்ட அழுதாங்க பாரு. அப்படியா எங்கம்மா ஐஸ்கட்டியாய் கரைஞ்சுட்டாங்கனா பாரு. அவங்க பேசுன ரெக்கார்டிங்க் இருக்கு. கேட்டுப் பாரு.”
என அவனுக்கு அதை டெலிகிராம் செயலியின் மூலம் கைப்பேசியில் அனுப்பி வைத்தான்.
“அவங்களைப் பார்த்தால் துளி கூட டவுன் பொண்ணுனு சந்தேகம் வராது. அப்படியே கிராமத்தில் பொறந்து வளர்ந்த மாதிரி எல்லாம் இருக்கு.”
அவன் கூறுவதற்கு உம் கொட்டிக் கொண்டிருந்தான் ஆதி. அவன் முகத்தில் லேசாக புன்னகை ஆட்சி செய்து கொண்டிருந்தது.
“ஓகே ஹரி. அவங்களை பத்திரமா பார்த்துக்கோ. தைரியமான பொண்ணு. இருந்தாலும் புது இடம்.”
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். பாரு இருக்கு. எந்தப் பிரச்சினையும் இல்லை.”
பாரதியுடன் பூப்பறித்துக் கொண்டிருந்தாள் மனோ.
“இங்க எல்லாப் பூவும் அழகா இருக்கு பாரதி.”
“இது பன்னீர் ரோஜா.” ஒன்றை பறிந்து இள ரோஸ் வண்ணப் பூவைக் கொடுத்தாள். அதன் பரிமளத்தைச் சுவாசித்தவளுக்கு அதன் நறுமணம் மிகவும் பிடித்திருந்தது.
பூத்திருந்த மலர்களைப் பேசிக் கொண்டே பறித்தனர். பாரதி அனைவரிடமும் ஓட்டிக் கொள்ளும் தன்மை உடையவள் என்பதால் மனோவுக்கு சுலபமாக இருந்தது.
பூப் பறித்துக் கொண்டே உள்ள சென்ற பாரதி ஹாலில் அமர்ந்து டீ வியைப் போட்டுக் கொண்டு அதில் ஒரு இசைப்பாடல் ஓடும் சேனலை வைத்து விட பாடல் ஓட ஆரம்பித்தது.
“அக்கா இன்னும் அரை மணிக்குள்ள கட்டிட்டு சாமி கும்பிடனும்.”
பாரதி வேக வேகமாக பூக்களைக் கட்ட ஆரம்பித்தாள். அவள் கை தொடுக்கும் வேகத்தை ஆச்சரியத்துடன் பார்த்தாள் மனோஷா. பூக்கடையில் இருப்பவர்கள் மட்டும் அப்படி தொடுத்துப் பார்த்திருக்கிறாள்.
இரவு உணவை பேசிக் கொண்டே உண்டனர்.
ஹரியின் அன்னை அவளை அளவுக்கு அதிகமாக உண்ண வைத்து விட்டார். மனோஷாவும் உண்டு முடித்தபின் அவரிடம் நன்றி கூறி விடை பெற்றாள்.
ஹரியும் பாரதியும் செல்வேன் என அடம் பிடித்து மனோவை அவுட் ஹவுசில் விடச் சென்றனர். கதவைச் சாத்தி விட்டு படுக்கையில் விழுந்தவுடன் கைப்பேசி இசைத்தது.
ஆதித் அழைத்துக் கொண்டிருந்தான். அழைப்பை ஏற்று அதைக் காதில் வைத்தாள்.
“ சொல்லு ஆதித்.”
அத்தியாயம்-38
சில பேரைப் பார்க்கும் போது நமக்கு பாசிட்டிவ் வைப்ஸ் பீல் ஆகும். அவங்கிட்ட தாராளமாப் பேசலாம். சிலரைப் பார்க்கும் போது நெகட்டிவா பீல் ஆகும். நிச்சயமாக அந்த மாதிரி ஆட்களை அவாய்ட் செஞ்சுருவேன். சிலரைப் பார்க்கும் போது நோ வைப்ஸ். அதனால் ரொம்ப காஷியஸா பழகுவேன். ஹரி வீட்டில் இருக்கற எல்லாரையும் பார்க்கும் போது நல்ல வைப்ஸ். ரொம்ப இன்செண்டா இருக்கற மாதிரி தெரியுது. இன்சன்ஸ குறிக்கற பூ எது தெரியுமா? வெயிட் லில்லி.
-மனோ.
மனோவை அவுட்ஹவுசில் விட்ட ஹரி அதைத் திறந்து விட்டு சாவியைக் கொடுத்தான். அவளுடைய பைகளை உள்ளே வைக்க உதவினான்.
“காலையில் எட்டரைக்கு ரெடியா இரும்மா. தோப்பு, எண்ணெய் மில் எல்லாத்தையும் சுத்திக் காட்டறேன்.”
“ஓகே.. காலையில் சாப்பாடு பக்கத்தில் இருக்கற பாட்டி கொடுப்பாங்க. உங்களுக்கு சமைக்கத் தெரியும்னா காய்கறி எல்லாம் நாளைக்கு வாங்கித் தரேன்.”
“குட் நைட் தேங்க் யூ.”
“குட் நைட்” கூறி ஹரியிடம் விடை பெற்று கதவை சாத்தி விட்டு படுக்கை அறையைத் தேடி படுத்தாள். அலுப்பாக இருந்தது.
அப்போதுதான் ஆதித் அழைத்தான்.
“சொல்லு ஆதித்..”
“மனோஷா எப்படி இருக்கு ஊர்?”
“எனக்குப் பிடிச்சுருக்கு. எங்க பார்த்தாலும் தென்னை மரம் தெரியுது. வயலா இருக்கு.. ஹரியோட அம்மா, பாரதி எல்லாரும் நல்லா பேசுனாங்க. ரொம்ப இன்சண்டா இருந்தாங்க. நான் தான் ஆக்ட் செய்யற மாதிரி இருந்துச்சு.”
“கேள்வி பட்டேன்.”
“ஓ அதுக்குள்ள அப்டேட் வந்துருச்சா..”
“நீ அவங்ககிட்ட நார்மலாவே இரு. நடிக்க வேண்டிய அவசியம் இல்லை.”
“ம்ம்ம்.”
“அப்புறம் அந்த கண்ணம்மாள் பாட்டிகிட்ட அளவாவே இரு. அவங்க ஐடியாஸ் எல்லாம் உனக்கு சூட் ஆகாது. முடிஞ்ச அளவுக்கு அவாய்ட் பன்னு.”
“யாரு அவங்க?”
“அவங்கதான் உனக்கு சாப்பாடு கொண்டு வருவாங்க..”
“வாட்? எனக்கு சாப்பாடு கொண்டு வருவாங்க. அவங்களை எப்படி அவாய்ட் பன்ன முடியும். ஆர் யூ கிட்டிங்க?”
அவள் பேசிய விதத்தில் ஆதித் சிரித்து விட்டான்.
“ஆதித்” பற்களைக் கடித்தாள்.
“உனக்குத் தெரியும். என்னை அவாய்ட் செஞ்ச மாதிரி செய். அவ்வளவுதான்.”
“ஹே அது வேற இது வேற. அதெல்லாம் சும்மா.”
பேச்சுவாக்கில் உண்மையை உளறிவிட்டாள்.
“ஓ.. அப்ப வேணும்னேதான் செஞ்சயா?”
“அவாய்ட் பன்றதா இருந்தாலும், அன்பு செலுத்தறதா இருந்தாலும் வேணும்னேதான் செய்ய முடியும்.”
“சரி எனக்குத் தூக்கம் வருது. டெய்லியும் நைன் ஓ கிளாக் உனக்கு கால் பன்னி நடந்தது எல்லாம் ரிப்போர்ட் கொடுக்கறேன். குட் நைட். உன்னோட வாய்ஸ் ரொம்ப மெலடியா கேட்குது எனக்கு தூக்க்க.” உளறிக் கொண்டே உறங்கி போயிருந்தாள் மனோஷா.
காலையில் ஏழு மணிக்கு யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு படுக்கையின் குறுக்கே குப்புறப் படுத்திருந்த மனோஷா அடித்துப் பிடித்து எழுந்தாள். இரவு உடையை கூட மாற்றாமல் உறங்கி இருந்தாள்.
பட்.. பட்.. பட்..
“ச்சே யாருடா? அது காலங்காத்தால.”
கண்ணைக் கசக்கிக் கொண்டே கதவைச் சென்று திறந்தாள் மனோஷா.
“யாரு?”
அவள் எதிரே சந்தன நிற சாலை, வெள்ளை நிற பிளவுஸ் அணிந்து முகம் முழுவதும் சுருங்கினாலும் அதில் தனியாக நெற்றி முழுவதும் அடித்த பட்டை தெரிந்தது. முடி அனைத்தும் சில்வர் நிறத்தில் மாறி இருந்தது. அந்தப் பெண்மணி ஹாலுக்குள் எட்டிப் பார்த்தார்.
“ஏம்புள்ளை காலங்காத்தால நேரமே எந்திரிக்கறது இல்லை? வாசலுக்குத் தண்ணீ கூட தொளிக்காமல் என்னதான் புள்ளைகளோ? அந்த நொங்கு வண்டி பொட்டியைக் கூட எடுத்து வைக்க முடியாதோ? சோம்பறித்தனம். அந்த சில்போனை நைட்டெல்லாம் நோண்ட வேண்டியது. ஒன்னும் லாயக்கில்லை.இந்த பாரு. சாணி தண்ணி தொளிச்சுட்டு எட்டு மணிக்கு ரெடியாகி வா. சாப்பாடு ரெடி ஆகி இருக்கும்.”
காலையில் இப்படி திட்டு வாங்குவது முதல் முறை. மனோஷாவுக்கு கோபம் சுர்ரென்று ஏறியது. கதவைப் பட்டென்று சாற்றியவள் உள்ளே தன் கைப்பேசியைத் தேடி ஆதித்தை அழைத்தான்.
“குட் மார்னிங்க் மனோஷா..”
“குட் மார்னிங்கா? யாரு அந்த இரிடேட்டிங்க் லேடி. இதுவரைக்கும் என்னை மார்னிங்க் இப்படி யாரும் பேசுனதே இல்லை. ஐம் சோ ஆங்கிரி.”
அவள் மிகவும் கோபத்தில் இருக்கிறாள் என்று தெரிந்தது.
“மனோ காம் டவுன். காம் டவுன். அவங்கதான் கண்ணம்மா பாட்டி.”
“ம்ம்ம் ஐம் சோ இரிடேட்டடு. ஆமா அதென்ன நொங்கு வண்டி. என்னோட டிராலியைப் பார்த்து சொல்லுச்சு அந்தப் பாட்டி.”
அதைக் கேட்டதும் ஆதித் மறு முனையில் சிரித்து விட்டான்.
“ஸாரி சாரி மனோ. அவங்க அப்படித்தான் பேசுவாங்க. சோ நீ அவங்களை கண்டுக்காத.”
“எனக்கு சாப்பிடாட்டியும் பரவால்லை. நானே சமைச்சு சாப்பிட்டுக்குவேன். ஷீஸ் இஸ் வெரி ரூட்.”
“ஓகே.. ஓகே.. அவங்களை நான் பார்த்துக்கிறேன்.”
“ஆமா. அந்த சாணி தண்ணினா என்ன? அதை வேற வாசலில் நான் தொளிக்கனுமாம்.”
“ஓ காட்.. அது கவ் டங்க் சொல்யூசன்.”
“ஆர் யூ கிட்டிங்க். கவ் டங்க். யூ மின் கவ் பூப். அதுல எத்தனை பாக்டீரியா, வைரஸ் இருக்கு தெரியுமா? அதெல்லாம் வாய்ப்பே இல்லை..”
“ஹே அது சானிடைசர் மாதிரி.”
“என்ன சாணி சானிடைசரா உனக்கு?”
மனோஷா எகிறினாள்.
“யெஸ் லைக் மஞ்சள் பொடி. நீ எதுவும் செய்ய வேண்டாம். வெளியில் ஒரு பைப் இருக்கும். அதில் தண்ணீர் பிடிச்சு பக்கெட்டில் இறைச்சு விட்ரு. ஜன்னலுக்கு வெளிய ஒரு பாத்திரத்தில் வெள்ளைக் கலரில் கோலப் பொடி இருக்கும். நான் வாட்ஸப்பில் அனுப்பற டிசைன வரைஞ்சு விட்ரு.”
“ஆதித்..”
“மனோஷா. பீளிஸ். எனக்காக..”
“ஒகே. அஸ் பர் கான்ட்ராக்ட். ஐம் டூயிங்க்..”
அவன் கூறியதை செய்து முடித்து போட்டோ எடுத்து அனுப்பினாள்.
“என்னோட டிராயிங்க் எப்படி இருக்கு?” என்ற கேள்வியுடன்.
சூப்பர் என பதில் அவனும் அனுப்பினாள்.
‘அப்புறம் நான் கண்ணம்மா பாட்டிகிட்ட எல்லாம் போக மாட்டேன். எனக்கு என்னோட செல்ப் ரெஸ்பெக்ட் முக்கியம். நான் ஹரி அண்ணா வீட்டில் சாப்பிட்டுக்குவேன்’ என்ற செய்தியையும் அனுப்பினாள்.
ஆதித் அழைத்தும் அவள் அழைப்பை ஏற்கவில்லை.