• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-41 & 42

Meenakshi Rajendran

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 22, 2024
120
40
28
Tiruppur
அத்தியாயம்-41

அருண் மாதிரி ஒரு ஆள் உங்க பக்கத்தில் இருந்தால் கண்டிப்பா நீங்க பிளஸ்ட். ரொம்ப கேரிங்க. பிட்னஸ் செண்டருக்கு வர நிறைய பெண்களுக்கு அவனை ரொம்ப பிடிக்கும். நிறைய பேரு கண்ணில் இண்டர்ஸ்ட்டும் தெரியும். ஆனால் அருண் அதை எல்லாம் கண்டுக்கவே மாட்டான். ஆனால் எங்கிட்ட தானா வந்து பேசினான். நான் கேட்கமாலேயே எல்லாம் செஞ்சான். அருண் மத்த பொண்ணுங்க யாரு மேலையும் இண்டர்ஸ்ட் காட்டாததுக்கு என்ன காரணம்? அவனோட லைஃப்பில் வேற ஒரு பொண்ணு இருக்காள். அப்படினு எனக்குத் தோணுது.
-மனோ.

மாலைக் கதிரவன் உங்களை நாளைக் காலை வந்து தழுவுகிறேன் என பூக்களிடம் விடை பெற்று செல்லும் மாலை நேரத்தில் மித்ரனுக்கு அழைத்தான் ஆதித்.

“எழில் ஈவினிங்க்.”

“குட் ஈவினிங்க் மித்ரன்.”

“என்னடா விஷயம்?”

“நத்திங்க் பிக். என்னோட சிஸ்டருக்கு பீவர். அதான் ஹாஸ்பிட்டலில் இருக்கேன். இன்னிக்கு ஒரு பிளாண்ட் வாங்கலானு பார்த்தேன். வர முடியலை.”

“டாக்டர் என்ன சொன்னாங்க?”

“அவ்ளோ பெரிய பீவர் எல்லாம் இல்லை. டாக்டர் ஊசி போட்டால் சரியாகிடும்னு சொன்னாரு. ஆனால் அதுக்கு போய் இந்த மதி அடம்புடிச்சாள்.”

“உன் சிஸ்டராவது பரவால்லை. என்னோட பூபூ இருக்கே. அதுக்கு பீவர் எல்லாம் அவ்வளவு சுலபத்தில் வராது. வந்திருச்சுனா வீடே இரண்டுபட்டு போயிடும். பீவர் வந்தால் அவளால் சுத்தமா சமாளிக்க முடியாது. சில சமயம் பயங்கர ரெஸ்ட்லெசா இருப்பாள். சில சமயம் அவளால் எந்திரிக்கவே முடியாது. தூக்கத்தில் பயங்கரமா உளருவா. பயப்படுவா. அம்மா, அப்பா, நானும் பக்கத்திலேயே இருப்போம். எங்க யாருக்கும் காய்ச்சல் வந்தால் இந்த மாதிரி நடக்காது. எப்பவும் யாராவது பக்கத்திலேயே இருக்கனும்.”


“ரொம்ப கஷ்டம் டா.”

“எங்க யாரவது கையைப் பிடிச்சுட்டே தூங்குவா.”

“ம்ம்.”

மனோஷா ஊருக்கு சென்று விட்டதால் அவளை மிஸ் செய்தான் மித்ரன்.

“நான் பாரு அவ ஊருக்குப் போனதில் இருந்து அவளைப் பத்தியே பேசிட்டு இருக்கேன்.”

“நோ பிராபளம். நான் மறுபடியும் இன்னொரு நாள் வரேன். அதை சொல்லத்தான் கூப்பிட்டேன்.”

“ஓகே ஓகே.”

அழைப்புத் துண்டிக்கப்பட தன்னுடைய தந்தை வழி சொந்த ஊருக்குச் செல்லும் வழியில் காரை செலுத்தினான் ஆதித்.
ஹரிக்கு அழைத்தான்.

“ஹரி நான் ஊர் எல்லையில் காரை நிறுத்திடேறேன். நீர் ஊர் எல்லையில் என்னைப் பிக் அப் பன்னிக்கோ.”
ஹரியும் அதே போல் வந்து சேர ஆதித்தும் தன் காரை ஓரிடத்தில் நிறுத்தி பார்க் செய்து விட்டான்.

“எப்படி இருக்காங்க? என்ன ஆச்சு?”

“இப்ப கொஞ்சம் பரவால்லை. காலையில் இருந்து நல்லா இருந்தாங்க. மில்லில் இருக்கும் போது தீடிர்னு டல்லாகிட்டாங்க. எனக்கு என்ன செய்யறதுனே தெரியலை. அப்புறம் பார்த்தால் அப்படியே மயங்கிட்டாங்க. தொட்டுப் பார்த்தால் காய்ச்சல். கொரானா சமயத்தில் வாங்குன பீவர் டிடெக்டரை வச்சு செக் பன்னதும் தெரிஞ்சதும் நூறுக்கு மேல் காய்ச்சல்னு. காலையில் கெய்சர் வொர்க் ஆகலைனு சொல்லிட்டு இருந்தாங்க. குளுந்தண்ணி ஒத்துக்கலை போல.”

காரில் பேசியபடி இருவரும் அவுட் ஹவுசிற்குச் சென்றனர். ஹரியின் காரில் உள்ள கண்ணாடிகள் பிளாக் டிண்டடு என்பதால் ஆதித் உள்ளே இருப்பது தெரியாது.

“யாரு ஹரி கூட இருக்கா?”

“நம்ம பாருவைத்தான் கூட இருக்க சொல்லி இருக்கேன்.”

“நல்லது.”

வீட்டைத் தட்டும் சத்தம் கேட்டவுடன் பாரதி கதவைத் திறந்தாள்.

“அண்ணா.” எதிரில் நின்ற ஆதித்தைப் பார்த்து திகைத்தாள்.

“அண்ணா.. நீங்களா? வாங்க..”

“இப்ப மனோஷாவுக்கு எப்படி இருக்கு பாரதி?”

“பீவர் கமியாருக்கு. ஆனால் சாப்பிட்ட அத்தனையும் வாமிட் பன்னிட்டாங்க. கஞ்சி மாதிரி எதாவது கொடுக்கலாம்னு பார்க்கிறேன்.”

“அண்ணா நான் கேட்டதை வாங்கிட்டு வந்தியா?”

“இந்தாம்மா எல்லாமே இருக்கு.” என ஹரி பைகளை நீட்டினான்.
ஹரி, பாரதி இருவருக்கும் ஆச்சரியம். ஆதி ஒரு பெண்ணுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பார்த்ததே இல்லை. பாரதிக்கு ஒரு வேலை செய்யும் பெண்ணுக்காக ஆதித் அண்ணா இவ்வளவு தூரம் வந்திருக்கிறானா? என்ற கேள்வி தோன்றியது.

“எந்த ரூம் பாரதி?”

“அந்த ரூம்.” கை காட்டியபடியே நடக்க ஆண்கள் இருவரும் பின் தொடர்ந்தனர்.

“நம்ம ஊரு டாக்டர் வந்து பார்த்துட்டு ஊசி போட்டுட்டு போயிருக்கார். மாத்திரை கொடுத்திருக்கார். காய்ச்சல் சரியாகலைனா இன்னும் பிளட் டெஸ்ட் பன்னிக்கலாம்னு சொல்லி இருக்கார்.”
பெட்ஷீட்டைப் போர்த்தியபடி முகம் மட்டும் தெரியும் படி படுத்துக் கொண்டிருந்தாள் மனோஷா. அவள் முகம் சோர்ந்து போயிருந்தது. நிறமிழந்து காணப்பட்டது.
அவள் நெற்றியைத் தொட்டுப் பார்த்தான் ஆதித். காய்ச்சல் கொதித்துக் கொண்டிருந்தது.

“பாரதி ஹாட் வாட்டர் வச்சுட்டு வந்து தா. கொதிக்க விடாமல்.”
சரி என்று தலையாட்டிய பாரதி வெளியே சென்றாள்.
சில நிமிடங்களில் திரும்பி வர ஒரு துணியுடன் ஆதித் தயாராக இருந்தான்.
வெந்நீரில் அதை நனைத்தவன் அவள் நெற்றியில் அதை வைத்து விட்டான்.

“அண்ணா இதெல்லாம் நான் செய்யறேன். நீங்க எதுக்கு இதெல்லாம் பன்னிட்டு?”

“பாரதி இவங்க என்னோட பொறுப்பு. இவங்க மட்டும் இப்படி இருக்கறது தெரிஞ்சால் இவளோட அண்ணன் என்னை தொலைச்சுடுவான். அது மட்டுமில்லாமல் இங்க என்ன பிரச்சினை வந்தாலும் அவங்களை நான் பார்த்துக்கிறேனு சொல்லி இருக்கேன்.”
பாரதி கஞ்சி வைக்க செல்ல ஹரியும் அவளுடன் சென்றான்.

“அண்ணா.. இவங்க யாரு? இவங்க பேரு உண்மையிலேயே மனோகரியா? அப்ப எதுக்கு ஆதித் அண்ணா மனோஷானு சொன்னாரு?”

தன் தங்கையிடம் தங்கள் குட்டு வெளிப்பட்டு விட்டதை உணர்ந்து கொண்டான் ஹரி. அதை நான் சொல்ல மாட்டேன். உங்க ஆதி அண்ணாட்ட கேளு.”

தலையை இட வலமாக ஆட்டிய பாரதி கஞ்சியை வைத்தாள். ஆதியே பர்சனலாக வரும் அளவுக்கு இந்தப் பெண் யார் என்ற கேள்வி அவளுக்கு எழுந்தது. கஞ்சி வைக்கும் சமயத்தில் தன் கைப்பேசியை எடுத்தவள் தேடு பொறியில் மனோஷா என டைப் செய்தாள்.

இருபது பெயர்களைத் தாண்டி ஒரு ஐடியில் ஏதோ ஒரு மலைச் சிகரத்தில் டீசர்ட் முட்டி வரை ஷார்ட்ஸ் அணிந்து தலை முடியை விரித்துப் போட்டு புன்னகைத்தப்படி நின்று கொண்டிருந்தாள் மனோஷா.






அத்தியாயம்-42

சில பேரு சொல்வாங்க. நல்ல பர்சனாலிட்டியா இருப்பாங்க. அது புற அழகை மட்டும் வச்சு சொல்றது. பர்சானாலிட்டி அப்படிங்கறது ஒரு மனுசனோட குணங்கள். நார்சிஸ்ட்டிக்னு ஒரு பர்சானிலிட்டி இருக்காங்க. இவங்க கூட ரிலேஷன்ஷிப்பில் இருக்கறவங்க பாவம். இவங்களுக்கு உலகமே தன்னைச் சுத்தி மட்டும் தான் சுத்தும். இவங்க மட்டும் தான் முக்கியம். தன்னைத் தவிர மத்தவங்களை பத்தி யோசிக்க மாட்டாங்க. எல்லாரும் அவங்க மேலயே கவனம் செலுத்தனும். ஈகோ அதிகமாக இருக்கும். நார்சிஸியஸ் ஒரு பூ கூட இருக்கு.
-மனோ.

இரவு பத்து மணி. எங்கோ ஒரு பள்ளி சத்தமிட்டுக் கொண்டிருந்தது. வீட்டைச் சுற்றிலும் பல்வேறு பூச்சிகள் சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தன. மனோஷாவுக்கு கஞ்சியை பாரதியும், ஆதியும் கொடுக்க அதைக் குடித்து விட்டு மாத்திரையை விழுங்கி விட்டு உறங்கி இருந்தாள் மனோஷா.
மூவரும் வெளிய வர ஹரி ஆதித்திடம் கண்களைக் காட்டினான். மூவரும் சோபாவில் அமர பாரதி தன் கைப்பேசியை எடுத்துக் காட்டினாள்.

“யார்ன்னா இவங்க? இவங்க குவாலிபிகேஷன் எல்லாம் வேற மாதிரி இருக்கு?”

மனோஷாவின் முக நூல் பக்கத்தைத் திறந்து தன் கைப்பேசியை ஆதித்திடம் கொடுத்தாள். ஆதித்தே இதுவரை மனோஷாவின் முக நூல் பக்கத்தைப் பார்த்தது இல்லை.
அவளிடம் உண்மையை மறைப்பதில் பலனில்லை என்பதை உணர்ந்த ஆதித், “பாரதி இவங்க மனோஷா. சைக்காலஜிஸ்ட். நம்ம அருணைக் கண்டுபிடிக்க வந்திருக்காங்க.” என்றான்.

“அண்ணா இவங்க எப்படி கண்டுபிடிக்க முடியும்?”

“மனோஷாவால் சுலபமாக யார்கூடவும் பேச முடியும். உண்மையை வாங்கவும் முடியும். நம்ம ஃபேம்லி மெம்பர்ஸ்கிட்ட பேசி இவங்கதான் கண்டுபிடிக்கப் போறாங்க.”

“என்ன அப்ப இவங்க எங்ககிட்ட பழகுனது எல்லாம் ஆக்டிங்கா? அது மட்டுமில்லாமல் இது எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும்னு தெரியலை.” பாரதியின் முகத்தில் வருத்தம் இழையோடியது. மனோஷா அவளைத்தான் ஈர்த்து இருந்தாளே.

“ஒரு விதத்தில் உண்மை. ஆனால் உங்களை ரொம்ப பிடிச்சுருந்தது சொன்னாங்க.”.

ஆதித் மனோஷாவுக்கு காய்ச்சல் என்றதும் பதறி விட்டான். வந்த முதல் நாளே காய்ச்சலில் விழுந்தவளை என்ன செய்வது? மித்ரனிடம் தன் தங்கையைப் பற்றி பேசுவது போல் பேசி உண்மையை வாங்கி இருந்தான். அதன் பிறகு அவளைப் பார்க்க வந்திருந்தான்.
மனோஷா என்ற பெயரைச் சொல்ல பாரதியிடம் மாட்டிக் கொண்டனர். பாரதி முக நூலில் தேடி மனோஷாவுடன் வரலாற்றுடன் அமர்ந்திருந்தாள்.

“நீ மனோஷாவை தப்பா நினைக்காத பாரதி. அவங்க மேல் எந்த தப்பும் இல்லை. அவங்ககிட்ட ஹெல்ப் கேட்டது நான். ஒரு வழியாக ஒத்துகிட்டு வந்துருக்காங்க.”
பாரதிக்கு மனோகரி என்ற பெண்ணைப் பார்த்ததும் பிடித்து விட்டிருந்தது. அவளுடன் பேசிக் கொண்டிருந்த போது நேரம் போனதே தெரியவில்லை. இப்போது அது அத்தனையும் நடிப்பு என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அவள் முகத்தில் தெரிந்த உணர்வுகளைப் படித்த ஆதித், “பாரதி இதுக்கு காரணம் நான்தான். அவங்க இல்லை. சொல்லப் போனால் மனோஷா ஒத்துக்க மாட்டேனு சொல்லிட்டாள். என் மேலேயே கோபத்தில் இருந்தாள். உங்கிட்ட சொல்றதுக்கு என்ன? நம்ம ஸ்கூலுக்கு பிளாண்ட்ஸ் டெலிவரி பன்ன அவங்க நர்சரியில் இருந்து வந்தாங்க. மனோஷா நம்ம பர்சனல் டிரஸ்ஸிங்க் ரூமிற்கு மாறி வந்துட்டாங்க. நானும் அப்ப உள்ள வந்தேன். சதாசிவம் அங்கிள் வேற வெளியில். நான்.. காஸ்டியூம் ரூமுக்கு..” நடந்தவற்றை சொல்லி முடித்தான். அவர்கள் குடும்பத்திற்கும், தன் குடும்பத்திற்கும் உள்ள சம்பந்தம் அத்தனையும் கூறி முடித்தாள்.

“என்ன அடிச்சாங்களா? உன்னையா அண்ணா?”
பாரதியின் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி தெரிந்தது.

“என்னை அவங்களுக்கு சுத்தமா பிடிக்காது. சின்ன வயசிலும் அப்படித்தான். அருணை மட்டும் தான் பிடிக்கும். எப்போதும் அருண் வாலைப் பிடிச்சுட்டே சுத்துவாங்க. அது எல்லாம் நினைவில் இல்லைனாலும் அருணுக்காக இதுக்கு ஒத்துகிட்டு இருக்காங்க.”

பாரதியும் தன் சித்தப்பா மகன் ஆதித் கூறுவதை ஆலோசித்துக் கொண்டிருந்தாள்.

ஆதித்தும், பாரதியின் குடும்பமும் உறவினர்கள். அந்த எண்ணெய் மில் இரண்டு குடும்பத்துக்கும் பொதுவானது. ஹரிதான் கிராமத்தில் அவர்களுடைய சொத்திற்கும், ஆதித்தின் குடும்ப சொத்திற்கும் மொத்தமாக அனைத்திற்கும் கணக்கு வழக்கு பார்ப்பது, நிர்வாகிப்பது அனைத்தும். அதனால்தான் இங்கே மனோஷா வேலைக்கு வருவதில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. இல்லை என்றால் வடிவழகியின் கண்களுக்கு எதுவும் தப்பாது.
பாரதி கீழே குனிந்து நெற்றியைத் தடவிக் கொண்டாள்.

“இது எந்த அளவுக்கு சரிப்பட்டு வரும்னு எனக்குத் தெரியலை அண்ணா. ஆனால் நீ செஞ்சால் எதாவது காரணம் இருக்கும்னு நான் நம்புறேன்.”
மறு நொடியே ஹரியின் காலை மிதித்தாள் பாரதி.

“ஹவ் டேர் யூ? எங்கிட்ட கூட சொல்லாமல்?” என முறைத்தாள்.

“பாரு.. வலிக்குது பாரு.."

“நல்லா வலிக்கட்டும். என்னையே ஏமாத்தப் பார்த்தீங்கள்ள?”

“பாரதி இப்ப மனோஷா?”

“மனோகரி.”

“பேரை மாத்தி சொல்லிட்டு ஒழுங்கா நடிக்கத் தெரியலை இரண்டு பேருக்கும்.” என இருவரையும் கண்டனப் பார்வை பார்த்தாள்.
பாரதி இனி தங்களுக்கு எல்லா வகையிலும் உதவி செய்வாள் என்பதை உணர்ந்து கொண்ட ஆதித்தின் முகத்தில் நிம்மதி பரவியது.

“சரி.. நீ இவங்களுக்காக இவ்வளவு தூரம் வந்திருக்க? இதெல்லாம்…”

“பாரு ஆதி அவங்களுக்கு மல்லிகைப் பூ வைக்க சொல்லி கொடுத்தாங்களாம். அது என்னனு கேளு?”
ஹரி நமுட்டுச் சிரிப்புடன் போட்டுக் கொடுக்க பாரதி ஆதியைக் கூர்மையாகப் பார்த்தாள்.

“அது அவங்களுக்கு தெரியாது அதான் சொல்லிக் கொடுத்தேன். டே சும்மா இருடா.” ஆதித் ஹரியை அடக்க முயன்றான்.

“ஹரி சார் நீங்க அமைதியா இருக்கீங்களா? அவங்களைப் பாரு வெரி மார்டர்ன் பொண்ணு. அவங்களுக்கு ஆல்ரெடி பாய்பிரண்டு கூட இருக்கலாம். அது மட்டுமில்லாமல் இந்த சினிமால காட்டற மாதிரி பூ வச்சால் ரொமான்ஸ், பொட்டு வச்சால் ரொமான்ஸ், புடவை கட்டி விட்டால் ரொமான்ஸ் நம்பிட்டு இருக்கிறியா? நீயா பூ வச்சு விடறது அப்படி இப்படினு கம்பி கட்டற கதை எல்லாம் சொல்லிட்டு இருக்காத..”

ஆதித் அவளுக்கு கையைத் தூக்கிக் காட்ட அவளும் ஹை- ஃபைவ் கொடுத்தாள்.

“அப்படி சொல்லு பாரு. உன் அண்ணனுக்கு அப்பப்ப மூளை வேலை செய்ய மாட்டீங்குது.”

- ஊஞ்சலாடும்..