அத்தியாயம்-45
எனக்கு பிடிக்காத சில டைப் ஆட்கள் இருக்காங்க. அநாவசியமாக அடுத்தவங்க விஷயத்தில் மூக்கை நுழைக்கறவங்க. எதுவும் தெரியாமல் மத்தவங்க மேல் வீண் பழி போடற ஆட்கள். அப்புறம் இந்த கண்ணம்மா பாட்டி மாதிரி வன்ம தொழிற்சாலைகள். இவங்க நான்ஸ்டாப்பா நான்சென்ஸ உற்பத்தி செஞ்சு எதாவது செஞ்சுட்டே இருப்பாங்க. பாலிதீன் எப்படி நிலத்திற்கு கேடே அதே மாதிரி இவங்க எல்லாம் மன நலத்திற்கு கேடு.
-மனோ.
மனோ மெதுவான குரலில் இவை அனைத்தையும் கூறி முடிக்க பேந்த பேந்த விழித்தார் கண்ணம்மா. மனோஷா இப்படி பேசுவார் என்று அவர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. சில விநாடிகள் ஸ்ம்பித்து நின்றார்.
“ஏய்… உனக்கு எம்புட்டு திமிறு?”
காதைக் குடைந்த மனோஷா, “பாரதி தேங்காய் எண்ணெய் பாட்டிலை எடுத்துக் கொடுத்துட்டு நீ வீட்டுக்குப் போமா. ஒரு பத்து நிமிஷம் கழிச்சு ஆம்புலன்ஸ்க்கு சொல்லிடு.” என்றாள்.
எங்கோ இந்தப் பெண் கூறியதை செய்து விடுவாளோ என்ற பயத்தில் அந்த வீட்டை விட்டு குடு குடுவென வெளியேறினார் கண்ணம்மா பாட்டி.
“அக்கா என்ன சொன்னீங்க? கண்ணம்மா பாட்டி அப்படியே ஆடிப் போயிட்டாங்க? எதுக்கு தேங்காய் எண்ணெய் பாட்டில் கேட்டீங்க?”
“அது ஒன்னுமில்லை பாரதி. நடக்கப் போற உண்மையை சொன்னேன். அதான் பயந்து போயிட்டாங்க.”
“அக்கா பீளிஸ் பிளீஸ் என்னன்னு சொல்லுங்க?”
“இருமா. டயர்டா இருக்கு. உட்கார்ந்துட்டே சொல்றேன்.”
பாரதி உடனே போய் அமர்ந்து கொண்டாள்.
மனோவும் அமர்ந்த உடனே பாரதி ஆர்வமாய் அவரைக் கேட்டாள்.
மனோஷா தான் கூறியவற்றை பாரதியும் தெரிவித்தாள்.
பாரதி வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள்.
“வாவ்! வேற மாதிரி நீங்க.” சட்டென அவள் முகம் மாறியது.
“அக்கா நீங்க ஃபேம்லி பத்தி சொன்னது.. உங்களைப் பத்தி யார் கிட்டேயாவது சொல்லிட்டா என்ன செய்யறது?”
“நோ. சொல்ல மாட்டாங்க. இந்தப் பாட்டி தன்னை விட யாரு வீக்கோ அவங்களை வம்பிழுப்பாங்க. தன்னை விட யாரு பலமோ அவங்களுக்கு அடி பணிவாங்க. அது மட்டுமில்லாமல் சம்பந்தமே இல்லாமல் ஓனர் ஃபேம்லியை இழுத்து வச்சுருக்கேன். அப்ப எனக்கும் ஆதித்துக்கு சம்பந்தம் இருக்குமோனு யோசிப்பாங்க. இப்படி இன்னிக்கு ஃபுல்லா ஷாக்கிலேயே இருப்பாங்க. ஊருக்கு புதுசா வந்த சின்னப் பொண்ணு இப்படி பேசிட்டால் அப்படிங்கறத யார்கிட்டயாவது சொன்னால் அது அவங்களுக்கு அவமானம். நானும் சொல்லச் சொல்லி சொல்லி இருக்கேன். ரிவர்ஸ் சைக்காலஜி. கண்டிப்பா சொல்ல மாட்டாங்க.”
பாரதி அவரை மெச்சுதலாகப் பார்த்து வைத்தாள்.
“அக்கா எங்கம்மா கூட இந்தப் பாட்டி பல்லுல விழுந்துடாதனு எங்கிட்ட சொல்லி அடக்கி வைப்பாங்க. நீங்க பன்னுன சம்பவம் மாஸ். இந்தப் பாட்டி வம்பு வளர்த்து ஒரு கல்யாணமே நின்னு போயிருக்கு தெரியுமா? அப்பேற்பட்ட ஆளு இவங்க.”
“இந்த மாதிரி நான் நிறையப் பேரைப் பார்த்திருக்கேன். அடுத்தவங்ககிட்ட குறை கண்டுபிடிச்சுட்டு சுத்திகிட்டே திரிவாங்க. அதில் அப்படி ஒரு சந்தோஷம்.”
“எனக்கு இன்னுமே கொஞ்சம் பயமாத்தான் இருக்குக்கா.”
“பயப்படாத. லைஃப்பில் இந்த மாதிரி நிறைய ஆளுங்களைப் பார்க்க வேண்டி இருக்கும்."
“சரிக்கா.” என தலையை ஆட்டினாள் பாரதி.
மனோவிடம் விடை பெற்றுச் சென்றவள் மீண்டும் வரும் போது ஹரியுடன் வந்தாள். மனோஷாவும் குளித்து விட்டு காலை உணவை சிரமப்பட்டு உண்டு முடித்திருந்தாள். உணவு கசப்பாக இருந்தது. ஒரு ஆப்பிளை எடுத்து சாப்பிட்டு விட்டு பிறகு மாத்திரையை விழுங்கி விட்டு கைப்பேசியை நோண்டியபடி சோபாவில் சாய்ந்தாள்.
கதவைத் தட்டும் சத்தம் கேட்க மீண்டும் கதவைத் திறக்க ஹரியும், பாரதியும் நின்று கொண்டிருந்தனர்.
“இப்ப எப்படி இருக்கு மனோகரி?”
“பீலிங்க் பெட்டர். வாங்க.”
“பாரதி ரசம் நல்லாருந்துச்சு. ஆனால் என்னால் சாப்பிடவே முடியலை.”
“உடம்பு சரியாகற வரைக்கும் அப்படித்தான் இருக்கும்.”
பேசிக் கொண்டே அமர்ந்தனர்.
“ரொம்ப தேங்க்ஸ் அண்ணா.”
“இதுக்கெல்லாம் எதுக்கும்மா? ஆதித் நைட் ஃபுல்லா இங்கதான் இருந்து உன்னைப் பாத்துகிட்டான்.”
“ஆதித்தா? யூ மீன் ஆதித் பொன்னெழிலன்?”
மனோ ஆச்சரியத்தில் கண்களை விரித்தான்.
“அவனேதான். அவன்தான் நைட் முழுக்க தூங்கவே இல்லை.”
“என்ன சொல்றீங்க? ஆதித் எதுக்கு அங்க இருந்து இவ்வளவு தூரம் வரனும்? யாரவது பார்த்துட்டால் என்ன செய்யறது?” மனோஷாவுக்கு கோபம் வந்தது அவள் குரலிலேயே தெரிந்தது.
“சரி விடுங்க. நானே பேசிக்கிறேன். நோட்ஸ் எல்லாம் கொடுங்க. நான் செக் பன்ன வேண்டியதை செக் பன்றேன்.”
ஹரி கொடுத்து விட்டு அனைத்தையும் விளக்க மனோஷா புரிந்து கொண்டாள். சந்தேகத்தைக் கேட்டுக் கொண்டாள்.
“ஓகே அக்கா. நான் மதியம் வரேன். அம்மா எனக்கு ஒரு வேலை கொடுத்துருக்காங்க.”
“ஓகே பாரதி.”
அவர்கள் இருவரும் சென்றவுடன் ஆதித்திற்கு அழைத்தாள் மனோ.
“குட் மார்ங்கிங்க். ஹவ் ஆர் யூ?”
“ஃபைன்.” குரலில் தெரிந்த வேறுபாட்டை உணர்ந்த ஆதித், “என்னாச்சு மனோஷா?” என்றான்.
“நீங்க எதுக்கு ஆதித் இங்க வந்தீங்க? என்னால் என்னை மேனேஜ் பன்னிக்க முடியும். இங்கேயும் பாரதி இருக்காங்க. அப்புறம் எதுக்கு இங்க வரனும்? நம்ம கவர் புளோ ஆனால் என்ன செய்யறது? நீங்க எந்தக் காரணம் கொண்டு என்னோட விஷயத்தில் இன்வால்வ் ஆகக் கூடாது. டூ யூ அண்டர்ஸ்டேண்ட்?”
“யெஸ். புரியுது.”
“சீரியஸ்லி. ஐ காண்ட் பிலீவ் யூ டிட் தட். நைட் நான் எதாவது செஞ்சேனா?”
“உன்னோட பயம் நம்ம கவர் புளோ ஆகறதைப் பத்தியா இல்லை நீ என்ன எங்கிட்ட உளறுன அதைப் பத்தியா?” என கேள்வியில் கிடுக்குப்பிடி போட்டான்.
“அப்படி எல்லாம் எதுவும் இல்லை.”
“குட். எதுவும் நடக்கலை. பாரதியும் அதே ரூமில்தான் இருந்தாள்.”
ஆதித் சிறிதும் நிதானத்தை இழக்கவில்லை.
“ஓகே. ஆனால் இனிமேல் எக்காரணம் கொண்டு எனக்கு ஹெல்ஃப் பன்ன வேண்டாம்.” அமைதியடைந்த மனோ தீவிரமாக இதைக் கூறினாள்.
“ஓகே பார்க்கலாம்.”
அழைப்பைத் துண்டித்து விட்டாள்.
மறுமுனையில் சிவந்த கண்களுடன் ஆதித் தன் அறையில் அவளை நினைத்தபடி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான்.
மனோவின் கோபத்தைப் பத்தி பேசிக் கொண்டிருந்த பாரதியும் ஹரியிடம் இதே கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
அத்தியாயம்-46
இந்த மனுச மனம் ரொம்ப வித்யாசமானது. எல்லா மனுசங்களுக்கும் வாழ்க்கையில் எதாவது பிடிப்புனு ஒன்னு இருக்கும். அதை அவங்களால் விடவே முடியாது. சிலருக்கு புக்ஸ், சிலருக்கும் மூவிஸ், சிலருக்கு மனுசங்க, சிலருக்கு மது, சிலருக்கு மதம், ஜாதி, சிலருக்கு தங்களோட குழந்தைகள். இந்த போரடிக்கற ஹுயுமன் லைஃப்ப வாழ எதாவது ஒன்னு மேல் நாம அட்சாச்மெண்டோட இருப்போம்.
-மனோ.
அன்றைய நாள் எந்தப் பிரச்சினையும் இன்றி கழிந்தது மனோவுக்கு. பாரதி மதியம் வர அவளுடன் அன்னையும் வந்தார். அவளை நலம் விசாரித்தவர் மதிய உணவைக் கொடுத்துச் சென்றார். இரவு உணவும் அவரே கொடுத்து விடுவதாகச் சொன்ன மனோகரி அவருக்கு நன்றி தெரிவிக்க மறுக்கவில்லை. அவளைக் குளிக்க வேண்டாம் என்றும் கூறிவிட்டு சென்றார்.
“பாரு பாப்பா மேலு அலண்டுக்கப் போகுது. மேலுக்குத் தண்ணி ஊத்த வேண்டாம்.” அவர் கூறுவதை தலையாட்டியபடியே கேட்டுக் கொண்ட மனோ காலையிலே குளித்து விட்டிருந்தாள். இருந்தாலும் அமைதியாக தலையாட்டினாள்.
மதியம் அவள் அம்மாவுடன் பாரதி சென்று விட ஆதித்துக்கு அழைத்தாள் மனோஷா. காலையில் வேறு அவனிடம் கோபமாகப் பேசி இருந்தாள்.
ஆதித் அவனுடைய அறையில் உறங்கிக் கொண்டிருந்தான். அவன் வெளியே சென்று விட்டு வந்தது இன்னும் வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாது.
கைப்பேசி அடித்தவுடன் எடுத்தான்.
“சொல்லு மனோ. எதாவது பிரச்சினையா?” அவன் குரல் கரகரவென்று ஒலித்தது.
“எந்தப் பிரச்சினையும் இல்லை. மார்னிங்க் கொஞ்சம் கோபமா பேசிட்டேன். அதான்.”
“நீ சொன்னது கரக்ட்தான். நான் கொஞ்சம் கவனிச்சுருக்கனும். பட் இருந்தாலும் இன்னொரு தடவை இப்படி ஒரு சுட்சுவேசன் வந்தாலும் நான் நிச்சயமா அங்க வந்திருப்பேன்.”
“ம்ம்ம்..”
“வேற எதாவது விஷயம் இருக்கா?..”
“இல்லை. ஓகே.” அழைப்பைத் துண்டித்து விட்டு மீண்டும் உறங்கச் சென்று விட்டான் ஆதித். அன்று இரவு காய்ச்சல் எதுவும் வரவில்லை என்பதால் மனோஷா காலையில் உப்புமாவைக் கிளறி உண்டு விட்டு அதையே டிபன் பாக்ஸிலும் அடைத்து விட்டு வேலைக்குக் கிளம்பினாள்.
அன்று தென்னந்தோப்பில் வேலை என்பதால் அங்கு அழைத்துச் சென்றான் ஹரி.
“இதில் இரண்டாயிரம் மரம் இருக்கு மனோகரி. தேங்காய் எல்லாமே அப்படியே நம்ம எண்ணெய் மில்லுக்கு வரும். பத்தலைனாலும் நாம வெளியில் இருந்து வாங்குவோம்.” என அவன் கூறிக் கொண்டு வரும் தகவல்களைக் கவனித்துக் கொண்டே வந்தவள் நின்று விட்டாள்.
பச்சை நிறத் தேங்காய்கள் மலை போல் குவிக்கப்பட்டுக் கிடக்க அதைப் பலர் மட்டை எடுத்துக் கொண்டிருந்தனர்.
“வாவ்.. அவங்க எப்படி தேங்காயை உடைக்கிறாங்க!!!”
“ஏன் மனோஷா இதுக்கு முன்னாடி நீ தேங்காய் மட்டை வாங்கி நீ பார்த்தது இல்லையா?”
“இல்லை. நாங்க தேங்காய் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில்தான் வாங்குவோம். இதை யார்கிட்டேயும் சொல்ல வேண்டாம்.” என அவனுக்கு மட்டும் கேட்கும்படி உரைத்தாள்.
“அப்ப பால்?”
“அதுவும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்தான். வீட்டுக்கே டெலிவரி வந்துடும்.” அவள் செய்கையில் சிரித்த ஹரி அவளுக்கு அனைத்தையும் சுற்றிக் காண்பித்தான். தோப்பிலேயே அன்று நாள் முழுவதும் கழிந்தது.
தென்னந் தோப்பினை அடுத்து மாங்காய் தோப்பினுள் சென்றனர். மூச்சை நன்றாக இழுத்து சுவாசித்தாள். மாங்காயின் மணம் நாசிகளுக்குள் ஏறியது.
“வாவ்! நல்ல வாசனை.”
நடந்து கொண்டே சென்றவள் கண் முன்னே ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பாம்பு தென்பட்டது. மிகவும் நீளமான கருஞ்சாரை அது. இரையை விழுங்கி விட்டு செரிக்க அது படுத்திருந்தது. ஆளைப் பார்த்தவுடன் அதனால் சட்டென நகர முடியவில்லை. ஹரி தோப்பில் வேலை செய்யும் இன்னொரு நபருடன் பேசிக் கொண்டிருக்க மனோஷா தன்னுடைய ஐந்து நட்சத்திர பிராண்ட் கைப்பேசியில் புகைப்படங்களை எடுக்க ஆரம்பித்து விட்டாள்.
பாம்போ அவளைக் கவனித்து விட்டு தலையைத் தூக்கியது. இவள் திரும்பி நின்று தனக்கு முன்னர் பிடித்து பாம்புடன் செல்பி எடுத்துக் கொண்டாள். பாம்பை விட்டு ஒரு பத்து அடி தூரம் விலகி நின்றிருப்பாள்.
அப்படி என்ன மனோஷா போட்டோ எடுக்கிறாள் என்று அருகில் வந்த ஹரிக்கு அப்போதுதான் பாம்பு கண்ணில் பட்டது.
“டேய் கம்பெடுத்துட்டு வாங்கடா.. பாம்பு.. பாம்பு..” என சத்தமிட்டான். அந்த சத்தத்தில் மனோஷா அதிர்ந்தாள்.
“அண்ணா எதுக்கு கத்திறீங்க? பாம்பு பயந்து ஓடிடப் போகுது. பார்த்தீங்களா எப்படி போஸ் கொடுக்குதுனு?” என புகைப்படங்களைக் காட்டினாள்.
‘ஆத்தி.. பாம்பு போஸ் கொடுக்குதா? நாகப் பாம்பா இருந்தால் இன்னேரம் உனக்கு பதிலா அது படம் எடுத்திருக்கும்.’ என நினைத்தான்.
“மனோகரி பாம்பு இருந்தால் இப்படி போட்டோ எடுக்கக் கூடாது. அந்த இடத்தை விட்டு ஓடிடனும். இதே விஷப் பாம்பா இருந்தால் இன்னேரம் கடிச்சுருக்கும்.” என்றான்.
அதற்குள் ஆட்கள் கம்புடன் வந்து விட்டனர். அதை அடிக்கப் பாய மனோகரி அவர்களை நிற்கச் சொன்னாள்.
“அண்ணா.. இது விஷம் இல்லை. அதனால் அடிக்க வேண்டாம். சாப்பிட்டு அது அசையக் கூட முடியலை பாவம்.” என்றாள்.
“இல்லை மனோ அடிக்கனும்..”
“அண்ணா.. பீளிஸ்.. அதை அப்படியே விட்டுடுங்க.” எனக் கெஞ்சினாள்.
பெரு மூச்சு விட்ட ஹரி ஆட்களை அனுப்பி விட்டான்.
“ஆமாம் மனோ இதுக்கு முன்னாடி பாம்பைப் பார்த்துருக்கியா?”
“ஓ பைத்தானை ஜூவில் பார்த்திருக்கேன்.”
“சரியா போச்சுபோ. பாம்பு இருந்தால் இனி மேல் தயசு செஞ்சு அந்த இடத்தைக் காலி பன்னிடுமா. இங்க எல்லாம் விஷ ஜீவங்க இருக்கும். கடிச்சா அவ்வளவுதான். புரியுதா? இனி இப்படி பாம்பு கூட போட்டோ எல்லாம் எடுக்க வேண்டாம்.” என்றான்.
மனோஷா தலையை மட்டும் ஆட்டினாள்.
பாம்பிற்கே இந்தப் பெண் பயப்படவில்லை. இந்தப் பெண்ணை வைத்துக் கொண்டு இன்னும் தான் என்ன்னென்ன அனுபவிக்கப் போகிறோமோ என நினைத்துக் கொண்டான் ஹரி.
பாம்பென்றால் ஆண்கள், பெண்கள் எல்லாரும் பெரும்பாலும் பயப்படுவார்கள். ஆனால் இவள் செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்கிறாள். இதை நினைத்து சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை.
அதற்குப் பிறகு வேலை முடிந்ததும் மாலை வீட்டுக்குத் திரும்பிய மனோஷா தனக்கு பிடித்த நூடுல்ஸை சமைத்து ஒரு பிடி பிடித்தாள். ‘ஆஹா ஸ்மெல் அல்லுதே.’ ரசித்துச் சாப்பிட்டாள்.
அவள் இப்போது சுதந்திரப் பறவை அல்லவா.
-ஊஞ்சலாடும்..