• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உள்ளத்தில் ஊஞ்சலொன்று! -47 & 48

Meenakshi Rajendran

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 22, 2024
153
51
28
Tiruppur
அத்தியாயம்-47

கிராமத்தில் வாழ்றது என்ன அட்வாண்டேஜ் தெரியுமா? நமக்கு எதாவது ஒன்னுனா எல்லாரும் உதவி செய்வாங்க. நமக்காக நிட்பாங்க. ஆனால் அதே சமயம் பிரைவசி அப்படிங்கறது கொஞ்சம் கமிதான். எல்லா நியூஸும் எல்லாருக்கும் தெரியும். சிட்டி லைஃபில் பிரைவசி, சுதந்திரம் எல்லாம் நிறைய கிடைக்கும். ஆனால் யாரும் எதுக்கும் உதவிக்கு வர மாட்டாங்க.
-மனோ.

வீட்டுக்கு வந்த மனோஷாவுக்கு எதுவும் பெரிதாக சமைக்கப் பிடிக்கவில்லை. மாலை முழுவதும் ஆன் லைனில் வீடியோ காலில் இருந்தவள் இரவு எட்டு மணிக்கு மேல் நூடுல்ஸ் சமைத்து இரசித்து ருசித்து உண்டாள்.

‘ஆஹா ஸ்மெல் அல்லுதே. இந்த கொரியன் டிராமாவில் வேற அடிக்கடி இந்த நூடுல்ஸை காட்டியே டெம்ப்ட் பன்றாங்க. நம்மலால யாரையும் தான் ராமையுன் சாப்பிடக் கூப்பிட முடியலை. நாமளே சாப்பிடலானா அதுக்கு விடறான நம்ம கூடப் பொறந்தது. ஒரு நாள் கூட விட மாட்டிங்குது. இப்ப ஐம் அ ஃப்ரீ பேர்ட்.’ என நினைத்துக் கொண்டு கொரியன் டிராமா ஒன்றைப் பார்த்துக் கொண்டே உணவை முடித்தாள்.
அடுத்ததாக மீண்டும் இரண்டு வீடியோ அழைப்புகள் பேச வேண்டும். அதற்கு ஆயத்தமானவள் அதையும் வெற்றிகரமாக செய்து முடிக்க அவளுக்குத் தூக்கம் வரும் போலிருந்தது.
ஆதித்திற்கு வேறு அழைத்துப் பேசவில்லை. அவனுக்கும் அழைத்த உடனே இரண்டே ரிங்கில் எடுத்தான் அவன்.

“ஹலோ ஆதித்.”

“சொல்லுங்க மேடம்.”

“கிளையண்ட் கால் பேசிட்டு இருந்தேன். அதான் லேட். இன்னிக்கு ஒன்னும் பெரிசா நடக்கலை.” பாம்பைப் பார்த்ததைக் கூறி முடித்தாள்.

“ம்ம்ம். ஹரி சொன்னான். இனி மேல் பாம்பைப் பார்த்தால் அந்த இடத்தை விட்டு ஓடிடு மனோ. விஷப் பாம்பு கடிச்சால் ரொம்ப கஷ்டம்.”

“ம்ம்ம். சரி. என்னை பாம்பு கடிக்கற டேஞ்சரஸ் பிளேஸில் எல்லாம் விட்டுருக்க. என்னோட உயிருக்கு சேதாரம் ஆச்சு.. என் அண்ணனுக்கு நீதான் பதில் சொல்லனும்.” என்றாள் விளையாட்டாக.
ஆனால் அதைத் தவறாகப் புரிந்து ஆதித் கொண்டான்.

“உனக்கு நான் எதுவும் ஆக விட மாட்டேன் மனோஷா. ஐ பிராமிஸ் யூ.”

“ஆதித் சில். நான் விளையாட்டுக்குச் சொன்னேன். இனி மேல் பாம்பப் பார்த்தால் நான் கண்டிப்பா ஹரி அண்ணாக்கு இன்ஃபார்ம் பன்றேன்.” கூறும் போதே கண்கள் சொருகத் தொடங்கியது.
அவள் பேசும் போதே தூக்கத்தில் இருப்பது போல் தோன்றியது ஆதித்திற்கு. அவன் அடுத்து ஏதோ கேட்க அப்படியே தூங்கிப் போயிருந்தாள் மனோஷா.

“ஹலோ மனோஷா.”
அவள் போன் தான் கையை விட்டு நழுவி மெத்தையில் கிடந்தது.

“தூங்கிட்டியா?”

பதில் இல்லை. அதனால் அழைப்பைத் துண்டித்து விட்டு தானும் உறங்கச் சென்றான் ஆதித்.
அடுத்த பதி மூன்று நாட்களும் மனோஷாவிற்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சென்றது. மளிகைக் கடைக்குச் செல்லும் போது அவளுடன் பாரதி எப்போதும் இருந்தாள். இருவரும் சேர்ந்து பிடித்ததை சமைத்து உண்டனர். மருதாணி வைத்தனர்.
கிராமத்து வாழ்க்கையை மனோஷா ரசிக்கத் தொடங்கி இருந்தாள். நகரத்தில் இருந்த பரபரப்பு அங்கில்லை. ஆர்ப்பாட்டம் இல்லை. அமைதியாகச் சென்றது.

இருவருக்கும் பெரிய வீட்டுக்குச் செல்ல சரியான சந்தர்ப்பமே கிடைக்கவில்லை. மனோஷா சில நபர்களிடம் மறை முகமாக ஆதித் குடும்பத்தைப் பற்றி விசாரித்தாள். ஆனால் அருணைப் பற்றி எந்த உருப்படியான தகவல்களும் கிடைக்கவில்லை.
பெரிய வீட்டுக்கு கண்ணம்மாளும் மற்றும் சில பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி என்பதால் மனோவால் அங்கு செல்ல முடியவில்லை. அது மட்டுமில்லை கண்ணம்மாளை அவள் மேலும் சீண்ட நினைக்கவில்லை. நேரம் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டாள்.
கண்ணம்மாளைப் பற்றி அவள் அறிய வரும் போது காலம் கடந்திருக்கும். அவர் புலியைப் போல் நேரம் வரும் தாக்கக் காத்திருப்பதை மனோஷா அறிய மாட்டாள்.

அன்றைய நாள் அதிக வேலைகள் இல்லை மனோஷாவுக்கு. ஞாயிறு என்பதால் ஓய்வாகப் படுத்திருந்தாள். மாலை மட்டுமே சில கவுன்சிலிங்க் செசன்கள் உண்டு. அதனால் அன்றைய நாளை சோம்பேறித் தனமாகக் கழித்தாள். மதியம் அவளுடைய கைப்பேசி ஒலித்தது.
கைப்பேசியில் ஒளிர்ந்த எண்ணைப் பார்த்ததும் அவளுக்கு எடுக்க விருப்பமில்லை. அப்படியே விட்டுவிட்டாள்.

அப்போதுதான் வாட்ஸப்பில் ஒரு குறுந்தகவல் வந்தது.
‘மனோஷா நீ ரொம்ப நாள் எங்கிட்ட இருந்து ஓட முடியாது. நான் இந்த தடவை ஒரு மாப்பிள்ளைப் பார்த்திருக்கேன். அவனைக் கண்டிப்பாக உனக்குப் பிடிக்கும். இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு நானே நேரில் வீட்டில் எல்லாம் பேசிட்டு முடிவு சொல்றேன். இந்தக் கல்யாணத்துக்கு நீ ஒத்துக்கலைனா உன்னோட அம்மாவை நீ எப்பவும் பார்க்க முடியாது. நீ வீட்டை விட்டுப் போயிட்ட. நானும் அப்படியே செய்வேன். உன் அப்பாவோட நிலைமையை யோசிச்சுப் பாரு.’
செய்தியைப் படித்த மனோஷாவுக்கு பிளாக்மெயில் என்று அப்பட்டமாகப் புரிந்தது. அதற்கு அவள் எந்த பதிலும் அனுப்பவில்லை.

ஆனால் அவளுடைய மனம் மகிழ்ச்சியை முற்றிலும் தொலைத்திருந்தது. படுக்கையில் படுத்தபடி ஒரு கொரியன் டிராவை ஓட விட்டாள். பலரின் பிரச்சினைகளை டீல் செய்யும் அவளுக்குப் பிரச்சினை என்றால் அவள் நாடுவது கொரியன் டிராமாக்கள், வெப் சீரிஸ் மட்டுமே. இப்போது ஏரோபிக்ஸ் பயிற்சிக்கும் செல்ல முடியாது.
மற்றொன்றில் கவனம் செலுத்தும் போது அவளது பிரச்சினைகள் தற்காலிகமாக மனதை விட்டு மறைந்து விடும். அதனால் இதை அவள் எப்போதும் பயன்படுத்தும் ஒரு வழி.

இரண்டு மணி நேரங்கள் கழிந்திருக்கும். கொண்டையைப் போட்டுக் கொண்டவள் குளிக்கலாம் என்று முடிவு செய்தாள்.

ஞாயிறன்று வெந்நீரில் நீண்ட நேரம் குளிப்பது அவளுக்கு மிகவும் பிடிக்கும். அரை மணி நேரம் ஆடிப் பாடி குளித்து முடிக்கும் போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. அவசரத்தில் வெண்ணிற பாத் ரோபை எடுத்துப் போட்டவள் தலையில் துண்டை முடிந்தபடி வெளியே வந்தாள்.

“வரேன் பாரதி. வெயிட் பன்னு.”
மீண்டும் கதவு தட்டப்பட்டது.

“பொறுமை பாருமா. இதோ வந்துட்டேன்.”
அவள் நடக்கும் இடமெல்லாம் அவள் கால் தடங்கள் நீர்த் தடங்களாய் பதிந்தது. அவளுடைய அறையிலிருந்து அவசரமாக வந்து கதவைத் திறந்தாள்.

“பாரு.. நான் சொன்னது கேட்கலையா?”… கதவைத் திறந்தவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அத்தியாயம்-48

ஒரு அம்மாவா என்னோட கடமையை நான் செய்யனும் நான் நினைக்கிறேன். ஆனால் அதுக்கு மனோஷா விட மாட்டீங்கறா. இவளோட வயசில் இருக்கற பொண்ணுங்க எல்லாரும் ஒரு குழந்தையோட இருக்காங்க. ஆனால் இவ எதுக்கும் பிடி கொடுக்க மாட்டீங்கறா. கடைசியா பார்த்த பையன் இவளைப் பத்தி ரொம்ப தப்பா சொல்லிட்டான். இந்த வருஷம் எப்படியும் நான் மனோஷாவுக்கு மேரேஜ் செஞ்சு வச்சுருவேன். அப்புறம் மித்ரனுக்கு பார்க்க ஆரம்பிக்கலாம். அப்பதான் எனக்கு நிம்மதி.
-மனோவின் அம்மா.

எதிரில் ஆதித் நின்று கொண்டிருந்தான். விழிகளை விரித்தவளின் முகம் மலர்ந்தாலும் அடுத்த நொடியே சுருங்கியது. ஆதித்தை சட்டென்று கையைப் பிடித்து இழுத்து கதவைச் சாற்றினாள்.

“மனோஷா..”
அவன் வாயை உடனே ஒற்றைக் கையால் மூடியவள், “ஷ்ஷ்..” என வாயில் விரலை வைத்தாள். அவள் தலையில் லூசாக முடிந்திருந்த துண்டு எந்த நேரத்திலும் கீழே விழும் நிலையில் இருந்தது. தலை முடியில் இருந்த நீர் தரையில் சொட்ட ஆரம்பித்திருந்தது. இவர்கள் இருவரும் கதவுக்கு பக்கவாட்டில் நின்று கொண்டிருந்தனர்.
அவள் கண்களும் காதுகளும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தன. ஆதித் அவளுடைய விழிகள் செல்லும் திசையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.


அவளுடைய நெற்றியிலும் முகத்திலும் நீர்த் திவலைகள் ஆங்காங்க மின்ன, சிலவை ஊர்வலம் நடத்திக் கொண்டிருந்தது. பாத் ரோபின் இடது பக்க தோள் பக்கம் விலகி இருந்தது. அவன் தோள் உயரமே உள்ளதால் அவனை அறியாமல் கண் சென்று விட்டிருந்தது. அவன் பார்வையை விலக்க முயல அந்த டேட்டூ ஒன்று என்னைப் பார் என தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தது.
ஆதித் அவளிடம் இருந்து விலக முயற்சிக்க அவளோ மேலும் அவனிடம் ஒன்றினாள். இப்போது கண்கள் ஜன்னலை வெறித்துக் கொண்டிருந்தது. அதன் பக்கம் நிழலாடுவதை உணர்ந்து கொண்ட ஆதித்தின் கைகளும் அவளை தற்போது இடையோடு சேர்த்து தன் பக்கம் இழுத்துக் கொண்டது.
அவன் இழுத்ததில் விழிகளை உயர்த்தி அவனைப் பார்த்தாள் மனோஷா. அவனும் இவளைத்தான் துளைப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான்.

மனோஷாவுக்கு ஆண் நண்பர்கள் இருந்தாலும் அவர்களை தோள் பற்றி அனைத்திருந்தாலும் இவ்வளவு நெருக்கமாக யாருடனும் இருந்ததில்லை. அவன் பார்வையில் இதயம் தட தடத்ததோ இல்லை கண்ணம்மாளிடம் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் தட தடத்ததோ.. அதை அவள் மட்டுமே அறிவான். ஆதித்தின் இதயத் துடிப்பும் மூச்சு விடும் வேகமும் அதிகரித்திருந்தது.
அவன் மீது ஒரு பூஞ்சோலை சாய்ந்து கிடக்கிறதே. அவனுக்கு இது முதல் அனுபவமே.

வெளியில் பெண்களுடன் அதிகம் பழகாதவன் ஆயிற்றே. அவனுடைய மூச்சுக் காற்று அவளுடைய கைகளில் சிறைப் பட்டிருந்தது.

“இப்பதானே யாரோ ஒரு ஆள் நிக்கறதப் பார்த்தேன். அதுக்குள்ள எங்க போயிருப்பான்?” கண்ணம்மா முனகியபடி செல்வது அவர்களின் இருவருது செவிகளையும் தீண்டியது.
கண்ணம்மா சில நிமிடங்களில் அங்கு இல்லை என்றதும் உடனே விலகினாள் மனோஷா. கிட்டதட்ட ஐந்து நிமிடங்களுக்கும் மேல் அவன் அணைப்பில் இருந்திருக்கிறாள். அவனுடைய உள்ளங்கைகளின் வெம்மை இன்னும் அவள் இடையில் சுட்டுக் கொண்டிருந்தது. மலரவளை எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் அந்த வெம்மை அவளைத் தாக்கியது.
விலகியவள் ஒரு நிம்மதி பெரு மூச்சு விட்டு அருகில் உள்ள ஜன்னலையும் மூடி விட்டு ஆதித்தின் அருகில் வரும் போது சரியாக ஆங்காங்கே சொட்டி இருந்த நீரின் மீது வேகமாகக் கால் வைக்க அந்த டைல்ஸ் வழுக்க ஆரம்பித்தது.

“ஆ ஆ.”
நேராகச் சென்று மோதியது கைப்பேசியை பார்த்துக் கொண்டிருந்த ஆதித்தின் மீதுதான். ஆதியும் அதிர்ச்சியில் பின்னால் நகர அவனுடைய வெற்றுப் பாதங்களும் நீர் மேல் பட வழுக்கி இருவரும் விழுந்தனர். ஆதித் கீழே இருக்க அவன் தோளைப் பிடித்தப்படி மனோஷா விழுந்திருந்தாள்.
அவன் மார்பில் தலையை வைத்து பாதுகாப்பாக விழுந்திருந்தாள். ஆதித்தின் கைகளும் பிடிமானத்திற்காக அவளை இறுக்கமாக அணைத்திருந்தன. அவனுடைய ஆப்பிள் கைப்பேசி அம்போவென்று விழுந்து கிடந்தது. ஆதித்தின் சட்டையில் இருந்து இரண்டு பட்டன்களும் பிய்ந்து விழுந்திருந்தன.
அப்போது ஜன்னல் திறக்கும் சத்தம் கேட்டது. உடனே இருவரின் கண்களும் சத்தம் வரும் திசையை நோக்கியது. மீண்டும் ஏதோ ஜன்னல் பக்கம் நிழலாடுவதைப் போலிருந்தது.
மனோஷா எழ முயற்சிக்க அவளை விடாமல் ஜன்னலில் இருந்து பார்க்க முடியாதவாறு சுவற்றின் பக்கம் அவளோடு சேர்ந்து உருண்டிருந்தான் ஆதித். இப்போது அவள் கீழிருக்க ஆதித் மேலே இருந்தான்.
அவளுடைய பாத்ரோப் இப்போது முட்டியைத் தாண்டி மேலேறி இருந்தது. தோளில் இருந்து நன்றாக விலகி இருந்தது. அவள் வாயைப் பொத்தி இருந்தான் ஆதித்.

இருவரின் விழிகளும் மௌனமாய் பேசிக் கொண்டன.
அவனுடைய பெரு மூச்சு அவளை வெம்மையாய் தீண்டிச் சென்றது. விழிகளைத் திருப்பி வெளியே பார்த்தாள்.

‘இந்த அம்மாவோட சரியான இம்சை. இங்க நான் உருண்டு புரண்டு ஸ்டண்ட் பன்ன வேண்டியதாக இருக்கு.’ என மனதில் நினைத்துக் கொண்டு மீண்டும் ஆதித்தைப் பார்த்தாள்.
அவன் எடை அழுத்துவது போல் இருந்தது. விழிகளும், நெற்றியையும் சுருக்கினாள். அவள் வாயிலிருந்து கையை எடுத்த ஆதித் அவள் தோளின் மீது கை வைக்கச் செல்ல மனோஷா விழிகளில் கோபத்தோடு அதைத் தடுத்திருந்தாள். அவள் கையைத் தள்ளி விட்டு அவள் தோளில் விலகி இருந்த ஆடையை சரி செய்து விட்டான்.

மீண்டும் ஒன்றும் கிடைக்காததினால் கண்ணம்மா திரும்பி போய் விட்டாள். முதலில் எழுந்த ஆதித் மனோஷாவைக் கை பிடித்து தூக்கி விட்டான்.
மீண்டும் ஜன்னலைச் சாற்றி நன்றாக லாக் செய்து விட்டான். மனோஷா கதவைச் சரியாக லாக் செய்யாததால் அது காற்றுக்கு மீண்டும் திறந்திருந்தது. இவர்கள் விழும் போது அருகில் இருந்த சில பொருட்களையும் உருட்டி விட்டு தட்டென்று விழ அதில் கண்ணம்மா மீண்டும் திரும்பி வந்திருந்தார்.

மனோஷா சட்டென்று தன் அறைக்குச் சென்று அறைக் கதவை தாழிட்டாள். அவள் மனம் முழுவதும் ஒரு அவஸ்தை படர்ந்திருந்தது. இதுவரை அவள் இப்படி உணர்ந்ததில்லை.

சட்டென்று உடையை மாற்றியவள் ஹாலுக்குள் விரைந்தாள். சோபாவில் அமர்ந்திருந்தவனைப் பார்த்து முறைத்தபடி இடுப்பில் கை வைத்து நின்றாள். அவளை எதிர் கொண்டான்.