அத்தியாயம்-49
சீரியஸ்லி ஐ மிஸ் ஹெர். எனக்கு கிடைச்சதிலேயே ரொம்ப பிடிச்ச பிரண்ட் மனோ. அவ பேசறத கேட்டுட்டு கலாய்ச்சுட்டே இருக்கலாம். அவளும் அப்படித்தான். என்னோட டிராவல் பார்ட்னர் இல்லாமல் எனக்கும் போர் அடிக்குது.
-அருண்.
“ஆதித் இங்க எதுக்கு வந்த?”
மனோஷா கோபத்தின் உச்சியில் இருந்தாள்.
“நான் வேற விஷயமா வந்தேன். அப்படியே நீயு எம்பிளாயி பார்க்கலாம் வந்தேன். ஹரி வந்துட்டு இருக்கான்.”
“அந்த கண்ணம்மா பாட்டி பார்த்திருந்தால் என்ன ஆகறது? நான் வேற?.” கூறிவிட்டு கீழ் உதட்டைக் கடித்தாள் மனோஷா.
அவள் கண்ணம்மா பாட்டியிடம் பேசியதை முழுதாகக் கூறவில்லை. அவளுடைய முகம் லேசாக குற்ற உணர்வில் இருப்பதை உணர்ந்து கொண்டான் ஆதித். அவளிடம் இருந்து தப்பிக்க இது போதுமே.
“சொல்லு மனோஷா என்ன மறைக்கிற?”
“நத்திங்க். பாருங்க சார். நீங்க இனிமேல் நான் இருக்கற இடத்தில் இருந்து ஃபைவ் மீட்டர் டிஸ்டன்ஸில் இருக்கனும். எக்காரணம் கொண்டும் என்னோட பக்கத்தில் வரக் கூடாது.”
“பார் யுவர் இன்பர்மேஷன் இந்த டைம் எங்கிட்ட பக்கத்தில் வந்தது நீங்கதான் மேடம். அப்புறம் தான் நான் வந்தேன். அதுக்கும் இதுக்கும் ஈவனாகிடுச்சு.”
“ஹ்ஹான் ஓகே. இப்ப எதுக்கு இங்க வந்தீங்க?” இப்போது அவள் கைகள் வயிற்றில் குறுக்காகக் கட்டி இருந்தாள்.
“இன்னும் டூ டேஸில் பாட்டி வராங்க. பெரிய வீட்டில் ஹரியோட சேர்ந்து நீங்க ஹெல்ப் பன்னனும். அதாவது சூப்பர் வைஸ் பன்னனும்.”
இதைக் கேட்டதும் மனோஷாவின் முகத்தில் ஒரு கோணல் புன்னகை உதயமானது.
“ம்ம்ம். ஓகே. இப்ப கிளம்புங்க.”
அவள் கூறியபடி கிளம்பிய ஆதித் அவள் கதவைச் சாற்றும் சமயம் கேலிப் புன்னகையுடன், “என்ன பிராண்ட் சோப் யூஸ் செய்றீங்க?” என்றான்.
அவன் கேள்வியில் முகத்தைச் சுளித்தவள், “பொன் வண்டு டிடர்ஜெண்ட் சோப்.” என்றாள். கதவைச் சாற்றிய பின் இரு புருவங்களையும் தூக்கியபடி தலையை உலர்த்த சென்றாள். விழுந்து புரண்டதில் அங்காங்கே வேறு வலித்தது.
“பாக்கறதுக்குத்தான் ஒல்லியா இருக்கற மாதிரி இருக்கு. ஆனால் என்ன வெயிட்டுடா?” என புலம்பியபடி பாத் ரோபை களைந்தவளின் தோள்பட்டை வரை முழங்கை வரை லேசாகக் கன்னிப் போயிருந்தது.
தேய்த்து விட்டவள் ஒரு சுடிதாரை எடுத்து அணிந்தாள்.
கண்ணம்மா பாட்டி அவருக்கு கொடுக்கப்பட்ட வீட்டின் முன் ஒரு கயிற்றுக் கட்டிலைப் போட்டு அமர்ந்திருந்தார். இரவு உணவை உண்டவருக்கு மனம் முழுக்க மனோகரியே நிறைந்திருந்தாள்.
“யாரந்த ஆளு? கண்டிப்பா ஏதோ ஒரு இளந்தாரி அவ கூட இருந்தான். ஆனால் தீடிர்னு மாயமா மறைஞ்சுட்டான். ஜன்னலில் ஒன்னும் தட்டுப்படலை. இந்த புள்ள இவ்வளவு தகிரியமா பேசுதா? இவ லேசு பட்ட ஆளில்லை. இவளோட சங்கதி என்னனு கண்டு பிடிச்சே ஆகனும்?” என உறுதி செய்து கொண்டார்.
கண்ணம்மா மனோகரி வீட்டுப் பக்கம் வர வேண்டும் என எண்ணவில்லை. அந்த வழியே ஒரு வேலையாக வந்தவர் மனோகரி யாரையோ உள்ளே இழுத்ததைப் போல் சில வினாடிகளுக்குப் பார்த்தார். உடனே கதவும் அடைக்கப்பட சந்தேகம் அவரை சும்மா விட்டு விடுமா?
தன்னை எதிர்த்துப் பேசியவளை ஒழிக்க ஒழுக்கத்தை உபயோகப்படுத்த முடிவு செய்தவர் எட்டிப் பார்க்க வீட்டிற்குள் எதுவும் கேட்கவில்லை. ஏதோ பாடல் மட்டும் ஒலிக்கும் சத்தம் கேட்டது.
சத்தமாக பாடலை வைத்துக் கொண்டு குளித்து முடித்த மனோ பாத்ரூமை விட்டு வெளியே வந்த போதுதான் கதவைத் தட்டும் சத்தம் லேசாகக் கேட்டு வெளியே வந்து கதவைத் திறந்தாள். ஆனால் ஏதோ ஒரு வகையில் கண்ணம்மாவின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்கு வந்து விட்டிருந்தாள் மனோ.
இன்று அவள் தப்பி விட்டாள். ஆனால் கண்ணம்மா தன் சந்தர்ப்பத்திற்காக விழி மேல் விழி வைத்து காத்திருந்தார்.
அகல் நிலா, இள மதி இருவரும் வீட்டில் சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சியில் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போதுதான் ஆதித் வீட்டுக்குள் நுழைந்தான்.
“ஹாய் புரோ..”
ஆதித்தும் புன்னகைத்தபடியே அவர்கள் அருகில் அமர்ந்தான்.
“என்ன புரோ வர வர உன் போக்கே சரியில்லை?”
ஆதித்தின் நெற்றி சுருங்கியது.
“என்ன அகல்?”
“இல்லை.. இப்ப அடிக்கடி நைட் அவுட்டிங்க் போறீங்க புரோ. அதான் கேட்டேன்.”
“நைட் அவுட்டிங்கா?” ஆதித் இயல்பாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான்.
“யெஸ். அதேதான். இப்ப எல்லாம் நைட் லேட்டா வீட்டுக்கு வர்ரீங்க? என்ன ரீசன்?”
இரவு பன்னிரண்டு மற்றும் அதற்கும் அதிகப் படியாக இணையத்தில் உலவும் பலரில் அகல் நிலாவும் ஒருவள் என்பதால் இரவு விழித்திருப்பாள். தினமும் அப்படி செய்ய அவளது அன்னை அனுமதிக்க மாட்டார். ஆனால் ஒரு சில இரவுகள் அவள் விழித்திருப்பாள். அப்படிப்பட்ட ஒரு இரவில் தான் ஆதித் மனோஷாவைக் கவனிக்கச் சென்றது. யார் கண்களுக்கும் அகப்படாமல் சென்று வந்து விட்டதாக நினைக்க அகல் நிலாவின் அகன்ற கண்களுக்கு அவன் தப்பி விடவில்லை.
“எதாவது வொர்க் இருந்திருக்கும். அவ்வளவுதான்.”
“பிரதர் யூ நோ. எனக்கு இருக்கறது இப்ப நீ மட்டும் தான். அதனால் என்னோட ஃபோக்கஸ் ஃபுல்லா உன் மேலதான் தெரியும்ல..”
மெலிதாக நகைத்த ஆதித், “ஓகே. ஓகே. பார்த்துக்கோ.” என்றான்.
அவனுடைய கோட் பாக்கெட்டில் இருந்து ஒரு டெய்ரி மில்க் சாக்லேட்டை எடுத்து நீட்டியதும் இதுவரை பேசிய அத்தனையும் மறந்து விட்டு அந்த சாக்லேட்டிற்கு இள மதியும், அகல் நிலாவும் சண்டை இட ஆரம்பித்தனர்.
‘டைவர்சன்.’ என நினைத்துக் கொண்டான் ஆதித். சாக்லேட் அவர்கள் இருவருக்கும் கொடுக்க அவன் வாங்கி வந்திருந்தாலும் தக்க நேரத்தில் அவர்களிடம் இருந்து தன் கவனத்தை திசை திருப்ப பயன்படுத்தி இருந்தான் ஆதித். குழந்தையை கவனத்தை அதற்குப் பிடித்த பொருளைக் காட்டி திருப்புவது போல் அவனும் திருப்பி இருந்தான்.
அகல் நிலாவின் உடன் பிறந்த அருண் எங்கு சென்றான் தெரியாமல் அவள் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறாள். ஆனால் ஆதித் அவளுடன் எப்போதும் இருக்க இவனும் இல்லை என்றால் என்ன செய்வது என ஆதித்தின் மேல் அகல் நிலாவின் கவனம் எப்போதும் கூடுதலாக இருக்கும்.
அத்தியாயம்-50
அகலுக்கு எப்போதும் என் மேல் கவனம் இருக்கும். அருண் போனதுக்கு அப்புறம் எங்கே நானும் இப்படி போயிருவேனோ அப்படினு நினைப்பாள். அதுக்கு ஒரு ரீசன் இருக்கு. நான் எது செஞ்சாலும் அகல் கவனிச்சுட்டே இருப்பாள்.
-ஆதித்.
சாக்லேட்டை உண்டு முடித்த சகோதரிகள் ஒரு வழியாக அமைதியாக அமர்ந்தனர். இள மதி படிக்க வேண்டும் என எழுந்து தன் அறைக்குச் சென்று விட அகல் நிலா மட்டும் இருந்தாள். அன்று வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் ஒவ்வொரு சுப நிகழ்வுக்குச் சென்றிருந்தனர். ஆதித்தும் ஒரு நிகழ்வுக்குச் சென்று விட்டுதான் வீடு திரும்பி இருந்தான்.
“அண்ணா இப்ப நீ ஏதோ மாறுன மாதிரி பீலிங்க்னா. சொல்லுண்ணா? என்ன பன்னற?” அகல் நிலா வருத்ததுடன் கேட்டாள். அவள் மன வருத்தம் தாளாத ஆதித் அவள் அருகே சென்று தலையை ஆதுரமாகத் தடவினான்.
“அகல் நான் மாறலை. எல்லாம் நம்ம நல்லதுக்காத்தான் வொர்க் பன்னிட்டு இருக்கேன்.”
“அண்ணா.. நீயும் போயிட்டா எங்களுக்கு யாருனா இருக்கா?”
“ஹே அகல் என்ன இப்படி பேசற. அண்ணன் எங்கேயும் போக மாட்டேன். நீ இப்படி எல்லாம் பயப்பட வேண்டியது இல்லை.”
தன் அம்மாவுடன் கூட சண்டையிட்டு பேசாமல் இருப்பாள் அகல் நிலா. ஆனால் ஆதித்திடம் ஒரு நாள் பேசாமல் இருந்தது இல்லை.
“அண்ணா நீ யாரைவது லவ் பன்னிறியா?” தயக்கத்துடன் அகல் இந்தக் கேள்வியைக் கேட்டாள்.
“வாட்?” ஆதித்துக்கு இந்தக் கேள்வி அதிர்ச்சியாக இருந்தது.
“ஏன் குட்டிம்மா இப்படி கேட்கற?”
“நீ பதில் சொல்லுண்ணா?”
“நீ ஏன் இப்படி கேட்கறீனு சொல்லு?”
“இல்லை இப்ப எல்லாம் நீ முன்னை விட ஹேப்பியா இருக்கற மாதிரி இருக்கு. ஏதோ போனிலும், கம்புயூட்டரிலும் மறைச்சு மறைச்சு செய்யற அதான்.”
ஆதித் முகத்தில் புன்னகை ஒன்று மலர்ந்தது.
“ஓ அதான் அப்படி கேட்கறியா?” தன் தங்கை எப்படி எல்லாம் யோசிக்கறாள் எனத் தோன்றியது.
‘ஐம் இன் லவ்?’ தனக்குள்ளேயே கேள்வி கேட்டுக் கொண்டான்.
“அப்படி எல்லாம் இருந்தால் மறந்திரு அண்ணா.. நம்ம வீட்டில் நிச்சயம் ஒத்துக்க மாட்டாங்க. உனக்குத் தெரியும் இல்லை. நம்ம ஃபேம்லி எப்படினு. ரொம்ப மார்டன் தான். ஆனால் இந்த விஷயத்தில் என்ன ஆனாலும் ஒத்துக்க மாட்டாங்க.”
“ஹே.. அகல் என்ன இவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்க? எனக்கு அரேஞ்ச் மேரேஜ் தான். ஆல்ரெடி எனக்குப் பார்த்துட்டு இருக்காங்க தெரியும் இல்லை உனக்கு. அப்புறம் என்ன?”
அவன் குடும்பம் காலத்திற்கு ஏற்ப பல நவீனங்களை ஏற்றுக் கொண்டாலும் இன்னும் பலரைப் போல காதல் திருமணத்தை எல்லாம் ஏற்றுக் கொள்ளாத வகையினரில் ஒருவர். திருமணம் என்பது ஒத்த இனமும், அந்தஸ்தும் கொண்ட இரு குடும்பங்களிடம் மட்டும் நடத்தப்படும். பணம் கூட இரண்டாம் பட்சம்தான். இனத்தைத் தாண்டி அவர்கள் திருமண பந்தத்தில் நுழைவது இல்லை. இது அவர்களின் கௌரவம் சார்ந்த விஷயம். வடிவழகி இதை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்.
அப்போதும் அகல் நிலாவின் முகத்தில் தெளிவில்லை.
“நிச்சயம் நான் அரேஞ்ச் மேரேஜ்தான். அதில் எந்த மாற்றமும் இல்லை.”
“பிராமிஸா?”
தனது கை முஷ்டியைக் குவித்து அவனிடம் நீட்ட ஆதித்தும் அவ்வாறு செய்தான்.
“பிராமிஸ். பாட்டி யாரைப் பார்க்கிறாங்களோ அவங்கதான் உன்னோட அண்ணி. ஒகேவா?”
“ம்ம்ம்.”
ஆனால் காதல் நுழையாத இடம் இந்த பூமியில் இருக்கிறதா? என்ன? அதற்கு கட்டுப்பாடு கிடையாது. எங்கும் நுழையும். எதிலும் நுழையும். நாம் உறுதி மொழி கூறலாம். ஆனால் காதல் மனதிற்குள் வைரஸ் போல் நுழைந்து நம்முடைய ரீசனிங்கை அழித்து விடும் போது இந்த கௌரவம் மரியாதை தூசியாய் பறந்து விடும். மிகப் பெரிய அழிவு சக்திகளும் காதலை இன்னும் சேர்க்கவில்லை. ஆனால் அதை உணர்ந்தவர்களுக்குத் தெரியும். அதன் சக்தியைக் கட்டுப்படுத்த முடியாது என்பது. ஆதித்தின் வாக்குறுதியை அவனால் காப்பாற்ற முடியுமா? என்பது அவனுக்கே தெரியாது. நாம் நினைப்பது போல் எதுவும் நடந்து விடுவதும் இல்லை.
“சிரி அகல். சரி சொல்லு உனக்கு என்ன சாப்பிடனும். நான் ஆர்டர் போடறேன்.”
“இருண்ணா. இளாவையும் கேட்ரலாம். அப்புறம் அவ சண்டைக்கு வருவாள்.” என இளாவின் அறைக்குச் சென்றவள் அவளிடமும் கேட்டு விட்டு ஆதித்திடம் கூற இரவு மூவரும் ஒன்றாக அமர்ந்து ஒருவரை ஒருவரை கலாய்த்தபடியே இரவு உணவை உண்டனர்.
இரவு உறங்கும் போது ஆதித்தின் மனதில் அகல் நிலா கேட்ட கேள்வி ஓடியது. கூடவே மனோஷாவின் பிம்பமும் மனதில் வந்தது.
‘ச்சே.. மனோவோட இமேஜ் எதற்கு சம்பந்தம் இல்லாமல் வருது. நோ.. இப்படி எல்லாம் நான் யோசிக்கறனு தெரிஞ்சாவே மேடம் என்னைத் தொலைச்சுக் கட்டிருவாங்க.’ அவள் பற்றி நினைக்காமல் உறங்க முயன்றான்.
ஆனால் மீண்டும் அவளுடைய டேட்டூ மனதில் வந்தது. அது என்ன சிம்பல் என்று வேறு மனதில் யோசனை வந்தது. அவளுடைய நீர்த் திவலைகள் வழிந்த முகமும், அவளுடைய கண்களும், உதடுகளும் மனதில் அனுமதி இல்லாமல் தோன்றின. அவள் கழுத்து வளைவில் இருந்த தன் கைகளில் அவளின் வெப்பமான தேகமும், அவளுடைய மூச்சும் என அனைத்தும் தோன்றியது.
‘ஸ்டாப் இட் ஆதி.’ என அவளின் நினைவைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தான். ஆனால் அன்று மதியம் அவன் கைக்குள் இருந்த அவள் முகம் அவன் மனதை விட்டு நீங்க மறுத்தது.
‘இது ரொம்ப தப்பு ஆதி.’ என அவன் மனம் ஒரு பக்கம் சாடியது. அவன் மனதே அவனுக்கு எதிராய் இரண்டாய் போரிட தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தான். ஆனால் அவள் நினைவு இதயத்தை சுமையாய் மாற்றி அழுத்த இறுதியில் அவளே வெற்றி கண்டாள். ஆதியும் அவள் நினைவுகளை கட்டுப்படுத்த முயலாமல் அப்படியே விட தூக்கமும் அவனைத் தொட்டது. சில சமயம் எண்ணங்கள் கட்டுப்பாடற்றுப் பாயும் அப்படியே நாம் விட்டால் அது தானாகவே மட்டுப்படும். அதையே தான் ஆதியும் செய்தான்.
அடுத்த நாளில் இருந்து ஆதியின் வீடே பரப்பரப்பாகி இருந்தது. ஊருக்குச் செல்லத் தேவையான அனைத்துப் பொருட்களையும் அடுக்கிக் கொண்டிருந்தனர்.
மனோஷாவும் அவர்களது ஊரில் தக்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.