• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உள்ளத்தில் ஊஞ்சலொன்று!- 51 & 52

Meenakshi Rajendran

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 22, 2024
120
40
28
Tiruppur
அத்தியாயம்-51

ஐ வில் பி வெயிட்டிங்க் பார் யூ. என்ன யாருக்குனு கேட்கிறீங்களா? எல்லாம் வடிவு டார்லிங்க்காக. ஆதித் கொடுத்த பில்டப்ப பார்த்தால் அவங்க கிங்க் மேக்கர் மாதிரி தெரியுது. பார்ப்போம். இனிமேல் தான் லைஃப் இன்ட்ர்ஸ்டிங்கா இருக்கப் போகுது. இல்ல இல்ல. எப்ப இந்த ஆதித்தை பார்க்கில் பார்த்தோனே அதில் இருந்து அப்படியே ஹை டைவிங்க் செய்யற மாதிரி திரில்லா இருக்கு.
-மனோ .

“அக்கா அப்படித்தான் ஜம்ப் பன்னுங்க..”
கிணற்றின் மேடையில் நின்று கொண்டிருந்தாள் மனோஷா. நீருக்குள் குதிக்க லேசாக தயக்கம் இருந்தது. நீச்சல் குளங்களில் பார்த்தது போலின்றி இந்த நீர் பசுமையாக தோற்றமளித்தது. எதுவும் தெரியவில்லை. சுற்றி உள்ள தென்னை மரங்களின் பிரதிபலிப்பு என்றாலும் மனோஷாவுக்கு அதைப் பார்க்கும் போது லேசாக அச்சம் ஏற்பட்டிருந்தது என்பதே உண்மை.
கண்களை மூடி நீண்ட மூச்சை எடுத்தாள். கைகளை தலைக்கு மேலே உயர்த்தி வணங்குவது போல் இரண்டு கைகளையும் ஓட்டியவள் ஈட்டி போல் உடலை மாற்றிக் கொண்டு நீருக்குள் பாய்ந்தாள். தொப்பென்று சத்தத்துடன் கிணறு அவளை தனக்குள் உள்வாங்கி மேலே தள்ள கண்களைத் திறந்தபடி மேலே வந்தாள் மனோஷா. கிணற்றின் நீர் ஜில்லென்று இருந்தது. இவ்வளவு குளிருடன் இருக்கும் என்று அவள் நினைக்கவில்லை.
பாம்பேறியில் நின்றிருந்த பாரதியை நோக்கி நீந்தினாள்.

பாம்பேறியைப் பிடித்தவள் அழகாக அங்கு மேல ஏறி நின்றாள்.

“ஏக்கா அடிக்கத் தெரியாது அடிக்க தெரியாதுனு செமையா டைவ் பன்னிட்டு அழகாக பாம்பேறி மேல ஏறிட்டு இருக்கீங்க?” என்றாள் கேலியாக.
பாரதியை நீர் வழியும் முகத்துடன் பார்த்தவள், “இன்னுமே லைட்டா பயமாத்தான் இருக்கு பாரதி.” குளிரில் மனோவுக்கு உடல் வெட வெடத்தது.

“முழுசா கிராமத்து பொண்ணா மாறி இருக்கற மனோ அக்காவை பாருங்க!” என சந்தரமுகி படத் தோரணையில் கூறவும் மனோஷா மீண்டும் சிரித்தாள்.

மதியம் அவளை நீச்சல் அடிக்க வேண்டும் என இழுத்துக் கொண்டு வந்திருந்தாள் பாரதி.

“சரி வாங்க. அந்த லாஸ்டைப் போட்டு டச் பன்னிட்டு திரும்பி வருவோம். யாரு முன்னாடி வருவாங்களோ அவங்கதான் வின்னர்.” என்றாள்.

“ஓகே.. ரெடி.. ஸ்டார்ட்..” பாரதி நீந்த ஆரம்பிக்க அவள் ஒன் டூ த்ரீ சொல்லுவாள் என எதிர்பார்த்த மனோஷாவும் உடனே நீந்த ஆரம்பித்தாள்.
கிணற்றில் திம் திம்மென்று அலைகள் மோதும் சத்தம் எழும்பியது. முதலில் வந்தது மனோஷாதான்.
பாம்பேறியில் ஏறிய பாரதி அவளை ஆச்சரியத்துடன் நோக்கிக் கொண்டிருந்தாள்.

“என்னக்கா எப்படி இவ்வளவு ஃபாஸ்டா வந்தீங்க?”

பாரதி வேகமாக நீந்தக் கூடிய ஆள். எப்படி தன்னை விட இது வரை கிணற்றில் நீந்தி இராத மனோஷா முதலில் வந்தாள் என்பதை அவளால் நம்ப முடியவில்லை.

“லக்.” என்றாள்.
இருவரும் போனை கிணற்றுக்குள் எடுத்து வந்து செல்ஃபி எடுத்துப் பதிவிட்டனர். பாரதி சிலருக்கு மட்டும் தெரியும் படி செட்டிங்கை மாற்றி அமைத்து பதிவிட அது முதலில் சிக்கியது ஆதித்தின் கண்களுக்குத்தான்.
பிறகு அலைபேசியை மீண்டும் கிணற்றுக்கு வெளியே வைத்து விட்டு நீந்தி விளையாடினர்.

“பாரதி இது உங்க தோட்டமா?”

“ஆமாக்கா.. எங்களோடதுதான். இங்க யாரும் இப்ப வர மாட்டாங்க. நாம ஜாலியா நீச்சல் அடிக்கலாம்.”

“இதுவும் நல்லாதான் இருக்கு. குளோரின் இல்லாத சுத்தமான தண்ணி.”

“சரிக்கா வடிவு பாட்டி எத்தனை மணிக்கு வர சொல்லி இருக்காங்க.”

“ஃபைவ்.”

“ஓகே அவங்க கேட்டதை எல்லாம் ரெடி பன்னிக்குங்க. அவங்க என்ன கேட்டாலும் தைரியமா பதில் சொல்லுங்க. அவ்வளவுதான் மேட்டர் சிம்பில்.”

“ம்ம்ம்.” என்ற மனோஷா மீண்டும் நீருக்குள் குதித்தாள்.
மாலை ஐந்து மணி.
வடிவு பாட்டி கூறியபடி சரியாக கணக்கு வழக்கு பார்க்கும் நோட்டுடன் தென்னந் தோப்பிற்குள் வந்திருந்தாள் மனோஷா. தென்னந் தோப்பின் ஒரு பகுதியில் உள்ள வீட்டில் கட்டிலை இட்டு அதன் மீது அமர்ந்திருந்தார் வடிவழகி பாட்டி.
அவர் கைகளில் ஒரு நோட்டை வைத்துக் கொண்டு எதையோ படித்துக் கொண்டிருந்தார். மூக்கில் கோல்டு பிரேமிட்ட கண்ணாடி ஒன்று வீற்றிருந்தது.
அவரைப் பார்த்துக் கொண்டே நடந்தாள் மனோஷா.

“வணக்கம்ம்மா.” என பணிவாக அவர் முன் கரம் குவித்து நின்றாள்.
நிமிர்ந்து பார்த்தார் வடிவழகி.
சிவப்பும், வெளிர் சந்தனமும் கலந்த காட்டன் புடவையில் கூந்தலை பின்னலிட்டு ஒரு முழம் மல்லிகைப் பூவைச் சூடி இருந்தாள். நெற்றியில் சிவப்பு நிறத்தில் ஒரு வட்டமான சிறிய பொட்டு. அதற்கு மேல் சந்தனமும் குங்குமமும் வைத்திருந்தாள் மனோஷா. அவளுடைய முகத்திற்கு அது மிகவும் பொருத்தமாக இருந்தது. பார்க்க மிகவும் இலட்சணமாக இருந்தாள். மாலை நேர மஞ்சள் வெயிலில் அவள் முகத்திற்கு சோபை அளிக்க வடிவழகியே அவளை சில விநாடிகள் கூர்ந்து பார்த்தார்.

“வணக்கம்..”
அவர் அருகில் சென்று நின்று கொண்டாள் மனோஷா.

அவளை மேலும் ஒரு நிமிடம் பார்வையால் துளைத்தெடுத்தவர் பிறகு அவளை நோக்கிக் கேட்டார்.

“பேர் என்னம்மா?”

“மனோகரிங்க.”

“மனோகரி நல்ல பொருத்தமான பேருதான். இங்க அந்த நோட்டைக் கொடு.”
மனோகரி அவள் கேட்ட நோட்டைக் கொடுத்தாள். அதை ஆராய்ந்தவர் சிலவற்றைக் கேட்ட மனோ பதில் கூறினாள்.

“சரிம்மா. நீ வீட்டுக்கு கிளம்பு.”

“அம்மா..”

“சொல்லு என்ன வேணும்?”

“இது ஒரு ஐடியா. நீங்கதான் பார்த்து முடிவு பன்னோனம். உங்களுக்குத் தெரியாதது இல்லை. தேங்காய் மில்லில் நார் வேஸ்டா போகுது. அதை வச்சு மேலும் எதாவது பிராசஸ் பன்னால் இன்னும் லாபம் வரும். தாய்லாந்து நாட்டில் தேங்காய் தொட்டியை பாலிஷ் பன்னி அதில் டிராயிங்க் வரஞ்சு விக்கிறாங்க.”

“நீ சொல்றது புரியலையே?”
உடனே தன் கைப்பேசியை எடுத்து அவரிடம் காட்டினாள். அதைப் பார்த்த வடிவழகி அமைதியாக அவளிடம் கைப்பேசியைத் திருப்பிக் கொடுத்தார்.
மனோகரியின் கண்களில் தெரிந்த ஆர்வத்தைக் கண்டார் வடிவழகி.

“சரி சரி. அதை எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம். தேவை இல்லாத வேலையில் எல்லாம் நீ தலையிட வேண்டாம். எப்படி தொழில் செய்யறது நாங்க முடிவு செய்வோம். நீ கொடுக்கற வேலையை மட்டும் ஒழுங்கா பார்த்தால் போதும்.” என எச்சரிக்கை குரலில் கூறினார்.











அத்தியாயம்-52

எதாவது ஒரு விஷயம் நடக்கும் போது உடைஞ்சு போயிடக் கூடாது. இப்ப இருக்கற பலர் ஒன்னுமே இல்லாத விஷயத்துக்கு மனச விட்ராங்க. இந்த மாதிரி நான் நிறைய கேஸஸ் பார்த்திருக்கேன். ஆனால் அது அவங்க தப்பு இல்லை. ஏனால் அவங்க மெண்டல் ஸ்டென்ரெந்த் அவ்வளவுதான். மெண்டலி ஸ்டாராங்கனா ஆட்களும் சில நேரம் மனசொடிஞ்சு போவாங்க. ஆனால் அதுக்கு நிறைய விஷயங்கள் தொடர்ந்து நடக்கனும். நாம எல்லாருமே மனுசங்கதான். பலம், உறுதியைக் குறிக்கறதுக்கு ஒரு பூ இருக்கு. அதுக்கு பேரு கிளாடியோலஸ்.
-மனோ.

மனோஷா மாங்காய் தோப்பின் வழியே நடந்து கொண்டிருந்தாள். நீ தேவை இல்லாமல் மூக்கை நுழைக்காதே என்று கூறி இருந்தார் அவர். எங்களுக்கு என்ன தொழில் செய்வது என்று எங்களுக்குத் தெரியும். அதற்கு உன்னுடைய ஆலோசனை வேண்டாம் என குறிப்பிட்டு இருந்தார். நீ உன்னுடைய வேலை எதுவோ அதை மட்டும் பார் என்றும் கூறி விட்டிருந்தார். மனோஷா தலை அசைத்தவாறு விடை பெற்றிருந்தாள்.

‘பர்ஸ்ட் இம்பிரஷன் கோவிந்தா! கோவிந்தா!’ என மனம் கூற தோப்பின் வழியே நடக்க ஆரம்பித்தாள். பாதையில் கவனம் வைக்காமல் மாந்தோப்பின் பக்கம் வந்திருந்தாள்.

அப்போதுதான் சரியாகப் பார்க்க மாங்காயின் வாசம் நாசியைத் துளைத்தது.
மூச்சை நன்றாக உள்ளிழுத்து அதன் வாசத்தை நுகர்ந்தாள்.

‘மாங்க எல்லாம் பாதி பழுத்தும் பழுக்காமல் இருக்கு. என்ன வாசம்? இன்னிக்கு பறிச்சுட்டுப் போய் உப்பு மிளகாய் பொடி போட்டு சாப்பிட வேண்டியதுதான்.’ என ஒவ்வொரு மரமாக அவளுக்கு எட்டும் படி இருந்த மரத்தையும், மாங்காய் பிஞ்சுகள் இருந்த மரத்தையும் தவிர்த்தாள்.

‘இது கரக்டா.. இருக்கும்.. ஆனால் மரத்தில் ஏறுனாதான் பொறிக்க முடியும் போல..’ தன் கையில் இருந்த கைப்பேசி உள்ளிட்ட பொருட்களை கீழே வைத்தாள்.

‘ச்சே இந்த சேரி வேற. ஸ்வெட் ஆக உடம்புல ஒட்டிக்குது. நடக்க முடியுதா ஒன்னா.’ புடவை கட்டிக் கொண்டு ஏறுவது சிரமம் என தெரிந்தாலும் அனைத்தையும் புடவையில் அசராமல் செய்யும் பெண்களைப் பார்த்திருந்த மனோஷாவும் புடவையை அவர்களைப் போல் தூக்கிச் செருகிக் கொண்டு ஏற ஆரம்பித்தாள். கிளை அருகில் இருந்ததால் மனோஷா ஏறியும் விட்டாள்.

‘சக்சஸ்.’ மாங்காய்களை எட்டி ஒவ்வொன்றாகப் பறித்து கீழே போட்டாள். செந்நிறமும், பச்சை நிறமும் கலந்து அழகாய் இருந்த மாங்காயை கையில் வைத்து சில நொடிகள் ரசித்துப் பார்த்தாள். அதை முகர்ந்தும் பார்த்தாள். நாவில் நீர் ஊறியது.

“என்ன டெம்பிட்டிங்கா இருக்கு. பேசாமல் நாமளும் ஒரு மாந்தோப்பு வாங்கிப் போடனும். வச்சு வளர்த்தால் மாங்காய் வர லேட்டாகும். பேசாமல் இந்த ஆதித்கிட்ட பீசுக்கு பதிலா இந்த மாந்தோப்பை எழுதி வைக்க சொன்னால் என்ன?” என சத்தமாக முனகினாள்.

மாங்காயுடன் இறங்க முயற்சிக்கும் போது, “இந்தக் காடு இரண்டு கோடிக்கும் மேல விலை போகும். ஆனால் உனக்கு வேணும்னா அதுக்கு ஒரு வழி இருக்கு.” என தீடிரென்று கேட்ட குரலில் மனோஷாவின் கவனம் சிதறி கால் வழுக்கியது.

“ஆ…”

“ஆஆ…” அதிர்ச்சியில் கத்தியபடி விழ அவளை தரையில் விழாமல் தன் மேல் தாங்கி இருந்தான் ஆதித்.

கண்களை விரித்துப் பார்த்தாள் மனோஷா.
ஆதித் அவளைக் கெட்டியாகப் பிடித்திருந்தான். இன்றும் ஒரு சட்டை பட்டனை பிய்த்து விட்டிருந்தாள் மனோஷா. அவள் முதுகிலும் இடையிலும் படர்ந்திருந்த கைகளை விடுவித்து அவளை நேராக நிற்க வைத்தான்.
அவன் நிற்க வைத்ததும் அவனைப் பார்த்து முறைத்தாள்.

“நீ என்ன பூனையா? சத்தமே இல்லாமல் வர? நானே மரத்தில் இருக்கேன் இல்லை.” என அவனைத் திட்ட ஆரம்பித்தாள்.
இடுப்பில் கை வைத்த ஆதித் அவளை பதிலுக்கு முறைத்தான்.

‘கொஞ்சம் ஓவரா பேசிட்டோமோ.. முறைக்கிறான்.. சாமாளிப்போம்..’

“ஸேரியில் இருக்கும் போது உனக்கு இந்த ஸ்டண்ட் தேவையா மனோ? எத்தனை தடவை சொல்லி இருக்கேன். கேர்புல்லா இருனு.” அமைதியாக ஒலித்தது அவன் குரல். கோபம் இருந்தாலும் அவள் நிதானத்தைக் கை விடவில்லை.

“நீ வராமல் இருந்ததிருந்தால் நான் மாங்கா பொறிச்சுட்டு போயிருப்பேன். நீ தேவை இல்லாமல் இடையில் வந்துட்ட.” அவனிடம் பேசிக் கொண்டே மாங்காய்களை பொறுக்க ஆரம்பித்தாள்.

அதை எடுத்துச் செல்ல அவளிடம் எதுவும் இல்லை என்பதால் தன் புடவை தலைப்பை இழுத்து அதை பை போல் உருவாக்கிக் கொண்டாள். அதை லேசாக முடிந்தவள் கைப்பேசியையும் நோட்டையும் எடுத்துக் கொண்டாள்.

“இப்பதான போன அதுக்குள்ள எதுக்கு வந்த ஆதித்?” என்ற கேள்வியையும் கேட்டு வைத்தாள்.

“பாட்டி வர சொன்னாங்க. அதான் வந்தேன். இப்ப மறுபடியும் கிளம்புறேன்.” அவன் கோபத்தை எல்லாம் அவள் பொருட்படுத்தவில்லை. அவனை மீண்டும் கேள்வி கேட்டு பதில் வாங்கிக் கொண்டாள்.
அப்போது மாங்காய் தோப்பில் சல சலப்பு கேட்டது. யாரோ பேசும் அரவம் கேட்டது. ஆதித்தின் முகம் கூர்மையானாது. உடனே மனோஷாவின் கையை இழுத்தவன் மாமரத்தின் பின்னால் நகர ஆரம்பித்தான்.

மனோஷாவும் அவன் இழுத்த இழுப்பிற்குச் சென்றாள். இன்னும் இரண்டு மரங்கள் தள்ளி மறைந்து கொண்டனர்.
மாமரம் சிறியதாக இருந்ததால் மரத்தின் தண்டின் அருகே ஒருவர் தான் மறைய முடியும். மனோஷாவை தனியே விட்டால் எதாவது செய்து வைப்பாள் என்பதால் அவளை மரத்தில் சாய்த்து அணைத்துப் பிடித்து சத்தம் கேட்கும் திசையை பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித். அவனுடைய வலது கை அவளுடைய தலைக்குப் பின்னர் இருந்தது. அவனுடைய மார்பில் புதைந்திருந்தாள் மனோஷா.

அவன் கட்டிப் பிடித்திருந்ததில் எட்டி அவன் காதில் முனு முனுத்தாள்.

“இப்ப மட்டும் என்னை நீ விடலைனா.. நடக்கறதே வேற.” என்றாள்.

“அதே சதாசிவம் அங்கிள். அமைதியா இரு மனோஷா. இந்த ஆளுக்கு அருணைப் பிடிக்காது. என்னையும் தான்.” என்று அவள் காதில் கிசு கிசுத்தான்.

“ஆதி என்னை விட்டால் நான் பாட்டுக்கு எதாவது ஒரு வழியில் போயிடுவேன்.” என அவனுக்கு பதில் கூறியவள் நகர முயற்சித்தாள்.

“சாரி உன்னை விட்டால் எதாவது செஞ்சு வைப்ப.” என அவள் சற்று விலக்கி கண்களை நோக்கிக் கூறியவன் இன்னும் அவளை தன்னோடு சேர்த்து அணைத்தான்.