அத்தியாயம்-53
மனோஷாவை பொருத்தவரை எனக்கு ஒரு பயம் இருக்கு. மனோஷா எந்த அளவுக்கு எல்லாத்தையும் ரொட்டினா செய்வாளோ அதே மாதிரி அவகிட்ட ஸ்பாண்ட்டேனியஸ் குணமும் இருக்கு. சில நேரங்களில் எப்ப எதை செய்வானு எதிர்பார்க்க முடியாது. அப்படித்தான் அவள். அது மட்டும் தான் இந்த விஷயத்தில் என்னோட ஒரே பயம். அவ மேல் தப்பு இருக்காது. ஆனால் அதனால் பிரச்சினை வந்திடக் கூடாது.
-எழில்.
அவன் அணைப்பில் இத்தனை நாள் உணராத மெல்லிய உணர்வுகள் மனோஷாவின் மனதைத் தீண்ட ஆரம்பித்தன. மாந்தளிருக்கு போட்டியாய் அவள் முகம் மாறும் என எதிர்பார்த்தால் அதுதான் இல்லை. அவளுக்கு வெட்கமே வந்தாலும் முகம் சிவக்காது. அவனின் எதிர்பாராத அணைப்பு அவளை புதிதாக உணரச் செய்து கொண்டிருந்தது. ஆனால் மனதில் ஒரு மூலையில் லேசாக கோபமும் கனன்று கொண்டிருந்தது.
சில நிமிடங்களில் பேச்சுக் குரல் சத்தம் முழுவதும் மறைந்து விட நிம்மதி பெரு மூச்சு விட்டபடி ஆதித் அவளை விட்டு லேசாக விலகி நின்று கண்களில் வருத்தத்துடன் பார்த்தான். அவள் வாயில் இன்னும் அவன் விரல்கள் பேச விடாமல் தடுத்துக் கொண்டிருக்க அதை எடுக்க முயன்ற போது சட்டென்று தன் கையால் அவன் விரல்களைக் கடித்தாள் மனோஷா.
கையை உதறியபடி ஆதித் அவளை விட்டு விலகினான் ஆதித்.
‘ஏன் லூசு என்னைக் கடிச்ச?’ என்ற ரீதியில் அவளைப் பார்க்க அவளோ விலகிய புடவையை சரி செய்து கொண்டு மார்பில் குறுக்காகக் கை கட்டிக் கொண்டு அவனை முறைத்தாள். அவள் சரி செய்யும் சமயம் கண்களை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான் ஆதித்.
“நான் தான் சொல்லி இருக்கேன்ல எனக்கு பிடிக்காதுனு. இனி மேல் என்னை ஹக் பன்னால் கையை உடைச்சுடுவேன்.” என எச்சரிக்கும் குரலில் கூறினாள்.
“மனோ அந்த ஆள் மட்டும் உன்னைப் பார்த்தானு வச்சுக்கோ நம்மள பத்தி வேற விதமாக கதை கட்டிடுவார்.”
“அதுக்கென்ன அப்படி இல்லைனு சொல்லிட்டு போகறுதானே. ஊரில் இருக்கற ஒவ்வொருத்தருக்கும் நாம அப்படி இல்லைனு சொல்லிட்டு இருக்க முடியாது.”
“இது வேற மாதிரி ஆகிடும் மனோ.”
தலையைக் குலுக்கியவள், “லீவ் இட்.” என்றபடி அவன் அணைத்ததால் தவற விட்ட மாங்காய்களை எடுத்து பத்திரப்படுத்த ஆரம்பித்தாள்.
“உன்னால என்னோட மாங்கா வேற கொட்டிருச்சு.” என உச்சுக் கொட்டியபடி வேறு எடுக்க கையைத் தேய்த்துக் கொண்டிருந்த ஆதித்திற்கு புன்னகை வேறு எட்டிப் பார்த்தது.
‘உன்னைக் கட்டிக்கறவன் அடி, கடி எல்லாம் வாங்குனும் போலிருக்கு. அவன் தலை விதியை யாரால மாத்த முடியும்.’ நினைத்துக் கொண்டான் ஆதித்.
“என்னை நிக்கற ஆதி? மாங்காயை எடுத்துக் கொடு.” என அதட்டல் வேறு போட்டாள்.
“இதோ வந்துட்டனுங்க அம்மணி.” கேலி தொனிக்கும் குரலில் கூறிவிட்டு அவள் கேட்டதை செய்து கொடுத்தான்.
“சரி நான் கிளம்புறேன்.” என அவனிடம் இருந்து விடை பெற்றவள் தன் வீடு இருக்கும் திசை நோக்கி நகர ஆரம்பித்தாள். தன்னை விட்டு நீங்கிச் செல்லும் அவன் முகத்திலும் பார்வையிலும் ஒரு வித இனிமை உணர்வு கூடி இருந்தது.
மடியில் மாங்காயையும் மனதில் ஒரு வித அவஸ்தையும் சுமந்தபடி நடந்து கொண்டிருந்தாள் மனோஷா.
‘இந்த ஆதி இப்படி எதாவது செஞ்சு வச்சால் மனசெல்லாம் பக்குனு இருக்கு. ரொம்ப டென்சன் ஆகுது.’ என முனு முனுத்தபடியே தன் வீட்டை அடைந்தவள் அமைதியாக இருக்கும் மாங்காய்களை ஓரிடத்தில் வைத்தாள்.
ஆசை ஆசையாய் பறிந்த மாங்காய்களை விட அவள் சிந்தையை ஆதித் ஆக்கிரமித்திருந்தான். அதை கலைக்கும் வண்ணம் அவள் கைப்பேசி சிணுங்கியது.
எடுத்துப் பார்த்தவளின் முகம் புன்னகை பூத்தது.
அருண் தான் செய்தி அனுப்பி இருந்தான்.
‘குட் ஈவினிங்க் பாஸூ.”
‘குட் ஈவினிங்க். குட் ஈவினிங்க்.’ என அவளும் செய்தி அனுப்பி இருந்தாள்.
‘ஹவ் ஆர் யூ மேடம்?’
‘ஃபைன் புதர் மண்டையா’
‘ஹே அந்தப் பேரை விடு.’
நாக்கை வெளியில் துருத்திக் காட்டுவது போல் எமோஜி அனுப்பினாள். அதோடு வாய்ப்பில்லை ராஜா என்ற ஜிப் உடன் சேர்த்து அனுப்பினாள்.
‘ஆஹான்.’
அவனைக் கேலி செய்யும் போது மனோஷாவின் முகம் குறு நகையோடு மலர்ந்திருந்தது.
‘சரி சொல்லு. எத்தனை பேர் உன்னைப் பார்த்தாங்க இன்னிக்கு? அதிலும் அந்தப் பொண்ணு விபா உன்னைப் பார்த்துட்டே இருக்குமே. அதுவும் எப்படி எப்படியோ டிரை பன்னுது. உன்னோட கடைக் கண் பார்வையை எப்பக் காட்டப் போற?’
‘மனோ தயசு செஞ்சு அந்தப் பொண்ணைப் பத்திப் பேசாத’
‘அப்ப உனக்கும் தெரிஞ்சுதான் இருக்கு.’
‘மனோ உனக்குத் தெரியும். ஐம் நாட் இன்ட்ர்ஸ்ட்டு.’
‘ம்கூம் கண்டெண்ட் இருக்கும் போது எனக்கென்ன கவலை’
வடிவேலு துண்டைப் போட்டு நடப்பது போல் ஒரு படத்தை அனுப்பினான் அருண்.
அதைப் பார்த்ததும் பக்கென்று நகைத்து விட்டாள் மனோஷா.
‘சரி சொல்லு அங்க என்ன நடந்துச்சு மனோ?’
‘ஹி கேம்.’
‘மொட்டையா சொன்னால் எப்படி? என்ன நடந்துச்சு?’
‘சீக்ரெட்.’ அதோடு கண்ணடிக்கும் எமோஜியும் சேர்த்து அனுப்பினாள்.
‘சொல்லாட்டி போ. என்ன ஸ்பெஷல் குக்கிங்?’
‘மாங்காதான். பிரஷ்ஷா மரத்தில் இருந்து பொறிச்சது..’
‘பாரேன் மத்த மாங்கா எல்லாம் பேக்டரில் இருந்து வந்துச்சா எல்லாம் மரத்தில் இருந்து வந்ததுதான் மேங்கோ ம மனோ.’
‘டே இடையில் என்னடா எம் போட்டுருக்க.’
‘ஒன்னுமில்லை டைபு.’
‘நம்பிட்டேன்.’
‘சரி பாய்.’
‘பாய்டா எம்.’
தான் கூறியதை அவள் திருப்பிக் கூறியதும் அவளை மடைச்சி என்று கூறியது புரிந்து விட்டது என உணர்ந்து கொண்டாள்.
அவனுடன் பேசி முடித்ததும் மனோஷாவின் அலைபேசி அதிர்ந்தது.
மித்ரன் அழைத்துக் கொண்டிருந்தான். உடனே எடுத்தாள்.
“புபூ.”
அவன் குரல் ஏக்கத்துடன் ஒலித்தது.
“என்ன மித்து? சொல்லு.”
“அம்மா கூப்பிட்டிருந்தாங்க.”
“எனக்கும் தான்.”
“மனோ நீ எதுவும் செய்ய வேண்டாம். ஜஸ்ட் அந்தப் பையனை ஒரு தடவை பாரு போதும். எனக்காக உடனே கல்யாணம் நடந்திடாது இல்லை.”
“நடக்காது மித்து. உடனே நடக்காது. ஆனால் அம்மாவோட மேனிபுலேசன் கண்டிப்பா நடக்கும்.”
“புபூ பிளீஸ்.”
“சரிடா. உனக்காக. அந்த இடியட்டைப் பார்க்கலாம்.”
“தேங்க்ஸ்.”
“மித்து. அதுக்குள்ள சந்தோஷப் படாத.”
அத்தியாயம்-54
மனோவை என்னால் புரிஞ்சுக்க முடியுது. இங்க இரண்டு பேருமே கரக்ட்தான். ஆனால் ஒருத்தங்களை ஃபோர்ஸ் செஞ்சு கல்யாணம் பன்னி வைக்க முடியாது. சொசைட்டி பேசறாங்க. அப்படி இப்படினு நாம அதை ஒருத்தங்க மேல திணிக்கும் போது இது வரைக்கும் நம்ம கூட அவங்களுக்கு இருந்த நல்ல ரிலேஷன்ஷிப் உடைய ஆரம்பிக்குது. ஆனால் பெரும்பாலான மகள்கள், மகன்கள் தன்னோட பெத்தவங்கதானே. எவ்வளவு டாக்ஸிக்கா பேசுனாலும் தப்பில்லைனு அப்படியே விட்றாங்க. ஆனால் மனோஷாவால் அதை எப்போதும் ஏத்துக்க முடியாது. அவளைப் பொறுத்தவரை , தேனில் விஷம் கலந்து கொடுத்தாலும் விஷம் விஷம் தான்.
-மித்ரன்.
“மனோ.”
“பார்க்கலாம். அந்த மாப்பிள்ளையே அவன் வாயால் வேண்டாம்னு சொல்லிட்டால் அப்ப என்ன செய்ய முடியும்?”
“பிளீஸ் மனோ. எதுவும் ஏடா கூடாம செஞ்சு வச்சுடாத.”
“ச்சே. இதையெல்லாம் பிரபஷனலா டீல் பன்னிக்கலாம். டோண்ட் வொர்ரி. சரி பாய்.”
அழைப்பைத் துண்டித்து விட்டாள் மனோஷா.
‘அய்யோ. இந்தத் தடவை என்ன செய்யப் போறானு தெரியலை. பீதிய கிளப்பறதையே தொழிலா வச்சுருக்கா. என்ன மாதிரி பிளட் ஷெட் நடக்கப் போகுதுனு தெரியலை. நம்ம தலையை இரண்டு பேரும் உருட்டப் போறாங்க. அது வேணால் நிச்சயம்.’
கைப்பேசியை அணைத்த மனோஷா புன்னகைத்துக் கொண்டாள்.
‘இன்னும் நீங்க எவ்வளவு கீழ போவீங்க மம்மி பார்க்கலாம்.’
அன்று உணவு உண்ணவும் பிடிக்கவில்லை என்பதால் மாங்காயை மட்டும் சாப்பிட்டு விட்டு படுத்துக் கொண்டாள்.
அடுத்த நாள் மனோஷா பெரிய வீட்டுக்கு அழைக்கப் பட்டிருந்தாள். வடிவழகி முன்னால் பவ்யமாக சுடிதாரில் நின்று கொண்டிருந்தாள்.
“மனோகரி”
“சொல்லுங்க அம்மா."
“பாரும்மா. இன்னிக்கு வீட்டை எல்லாம் சுத்தம் செய்யப் போறாங்க. நீ என்ன செய்யறனா, எங்க எங்க வீட்டைப் பழுது பார்க்கனும் சுத்தி பார்த்து எனக்கு கணக்குப் போட்டு எவ்வளவு செலவாகும்னு சொல்ற..”
“அம்மா.”
“என்ன உனக்கு பழக்கம் இல்லாத வேலைனு நினைக்கிறியா?”
“இல்லைங்கம்மா. உங்ககிட்ட எத்தனை மணிக்குள்ள லிஸ்ட் கொடுக்கனும்னு கேட்க வந்தேன்.”
வடிவழகியின் பார்வை மெச்சுதலாக உயர்ந்தது.
“இன்னிக்கு சாய்ந்தரம் கொடும்மா. ஏல்லாம் கரக்டா இருக்கனும். அப்புறம் அதைப் பழுது பார்க்கறதை சூப்பர் வைஸ் செய்யப் போறதும் நீதான்.”
“சரிங்கம்மா.” என்றாள்.
“கூட கண்ணம்மாவும் வருவா. அவகிட்ட என்ன வேணுமோ கேட்டுக்கோ. புரியுதா.”
“ம்ம்ம்.” தலையை பொம்மை போல் ஆட்டினாள் மனோ.
அவர் கூறியபடி கண்ணம்மாளைத் தேடிச் சென்றாள் மனோகரி. குத்து விளக்கொன்றை கையில் பிடித்துக் கொண்டிருந்தார் அவர். அது வெள்ளிக் குத்து விளக்கென்று அதற்குப் பின்புதான் உணர்ந்தாள் மனோஷா. மனோவைப் பார்த்ததும் அவர் முகம் சுருங்கியது.
“என்ன வேணும்?”
“மேம்தான் உங்களை வீட்டை சுத்திக் காட்டச் சொன்னாங்க. பழுது பார்க்க லிஸ்ட் ரெடி செய்யனும்?”
“உன்னையா? வீட்டுக்குள்ளயா?”
“ம்ம்ம். ஒரு இடம் விடாம செக் செய்யனும். சாயந்தரம் ரிப்போர்ட் கொடுக்கனும். வாங்க.”
“நான் இருக்கற வேலையை எல்லாம் அப்படியே போட்டுட்டு வர முடியாது. இந்தா சாவி. போய் எந்த ரூம் வேணுமோ அதை நீக்கிப் பார்த்து எழுதிக்கோ. ஆனால் இரண்டாவது மாடியில் வடக்குப் பக்கம் இருக்கற இரண்டாவது ரூமுக்கு மட்டும் போக வேண்டியது இல்லை.”
“ஏன்?”
“போகக் கூடாதுனா கூடாது. சொல்றதை மட்டும் செய்.”
முகத்தை சுழித்துக் கொண்டே அவளிடம் சாவிக் கொத்தை ஒப்படைத்தார். சாவிக் கொத்தை வாங்கியவள், “சரிங்க பாட்டி” என புன்னகையுடன் கூறிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள்.
பெரிய மரக் கதவு வேலைப்பாடுகளும் முன் வாயிலாக இருந்தது.
‘அப்பா எவ்வளவு பெரிய கதவு. எப்படி இதைத் தூக்கி இருப்பாங்க.’ நினைத்துக் கொண்டே கீழே முதலில் இருக்கும் அறையைப் பார்த்தாள். கருப்புற பூட்டு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது.
‘மனோ இந்தப் பூட்டை எல்லாம் திறக்கவே நீ சாப்பிடனும் போல இருக்கு.’ பூட்டின் சாவி எண்ணைக் கண்டறிந்து அதைத் திறந்தாள். பூட்டி இருந்த அறை அதனால் தூசியாக இருக்கும் என நினைக்க அறை அவ்வளவு தூய்மையாக இருந்தது.
“ ரொம்ப சுத்தமாக இருக்கு.”
அறையில் கலைப் பொருட்கள் இருந்தது. உள்ளே உள்ள பொருட்கள் அனைத்தும் விலை உயர்ந்த கலைப் பொருட்கள் போல் இருந்தது. மிகவும் அழகாக இருந்தன அத்தனையும். நடுவில் ஒரு கட்டில். அந்த மரம் கருப்பாக இருந்தது.
“ஓ! பிளாக்வுட்.”
அதில் உள்ள எந்த இடத்திலாவது பழுது இருக்கிறதா என ஆராய்ந்தாள்.
“பழுது எதிலும் இருப்பது போல் தெரியவில்லை.” கதவு, கட்டில், மேசை என அனைத்தையும் ஆராய்ந்தாள். சுவறு என ஒன்று விடாமல் ஆராய்ந்தாள். இந்த அறையில் எதுவும் பழுதில்லை.
கைப்பேசியில் அனைத்தையும் குறித்துக் கொண்டாள்.
கீழே பத்து அறைகள் முடிக்கவே பன்னிரெண்டு மணி ஆகி இருந்தது. மேலே மெதுவாக ஏறி இருந்தாள் மனோஷா.
‘இதுக்கே டயர்ட் ஆகிடுவேன் போல. கமான். இந்த வீட்டில் டிவெண்டி த்ரி ரூம்ஸ் இருக்கு. இன்னும் பதி மூணு ரூம்ஸ். அப்புறம் டெரஸ், ஹால், கிட்சன். வீட்டைக் கட்டச் சொன்னால் மான்சனை கட்டி வச்சுருக்காங்க. மெயிண்டயின் செய்யறதுதான் கஷ்டம்.’ தன் கைப்பையில் உள்ள பாட்டிலை எடுத்து நீரை அருந்திக் கொண்டாள்.
மாடிப் படியில் ஏறியவள் ஒவ்வொன்றாகப் பார்க்க ஆரம்பித்தாள்.
இதிலும் பத்து அறைகள் இருந்தது.
ஐந்து அறை தாண்டி இருப்பாள். அது மாடிப் படிக்கட்டுக்கு அருகில் இருந்ததது. அதிலிருந்து தான் நடுவில் கீழே இறங்கிச் செல்ல வேண்டும். இரண்டு மாடிப்பட்டுகள் இருந்தது.
‘வீட்டைக் கட்டுன ஆள் ரசிகண்டா.’ என மனதில் ஓடத் தவறவில்லை. பர்மா தேக்கு, டைல்ஸ் என இழைத்து இழைத்துக் கட்டப்பட்டிருந்தது.
மனோஷா யோசித்துக் கொண்டே சாவியைப் போட அந்த அறைப் பூட்டு இரக்கம் காட்டவில்லை. சாவியை எடுத்து எடுத்து மீண்டும் போட ஆரம்பித்தாள். அந்தப் பூட்டைப் பிடித்து பிடித்து அவள் கை நன்றாக சிவந்து போயிருந்தது. கை வேறு எரிய ஆரம்பித்தது.
நெற்றியில் லேசாக வியர்வை வழிய ஆரம்பித்தது. அப்போது தீடிரென்று அவள் பின்னால் இருந்து இரண்டு கைகளை அவளை அணைத்தப்படி யாரோ சாவியைப் போட மனோஷா அதிர்ச்சியில் சாவிக் கொத்தைத் தவற விட்டாள். ஏனென்றால் ஆள் வந்ததற்கான எந்த சத்தமும் கேட்கவில்லை. மனோஷா அந்த நொடியில் அதிகபட்ச விழிப்புணர்வில் இருந்தாள்.