• இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏

உள்ளத்தில் ஊஞ்சலொன்று! - 57 & 58

Meenakshi Rajendran

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 22, 2024
127
41
28
Tiruppur
அத்தியாயம்-57

பழைய வழிகள் புதிய கதவுகளைத் திறக்காது. அப்படினு ஒரு வாக்கியத்தை ஆன்லைனில் படிச்சிருக்கேன். அது உண்மைதான். என்னோட பழைய வழிகள் எதுவும் வொர்க் ஆகலை. அதனால் தான் மனோஷா இங்க இருக்காள். அவளோட அண்ணனுக்கு மட்டும் இது தெரிஞ்சுதுனா அவனை எப்பவும் நான் ஃபேஸ் பன்ன முடியாது.
-எழில் .

அவன் கூறியதில் மனோ அதிர்ச்சி அடையவில்லை.

“அப்ப எந்த வழியில் போகனும்?”
அதிர்ச்சி அடையாமல் கேள்வி கேட்டவளை மெச்சுதலோடு நோக்கினான்.

“இந்த பக்கம்.” என கைகளைக் காட்ட அவனுடன் நடக்க கதவின் எதிர்த்திசையில் வந்ததும் தன் கையில் ஒரு இடத்தை வைத்து அழுத்த அந்த இடமும் சிறிது சத்தத்துடன் திறந்து ஆள் நுழையும் அளவுக்கு விரிந்தது.

மனோஷாவுக்கு கை கொடுக்க அவன் கையை நீட்ட கை கொடுப்பது போல் கை நீட்டி தட்டி விட்டு பிறகு அங்குள்ள படியில் காலை வைத்தாள் மனோஷா.

முதல் படியில் நின்று திரும்பியவள் அவனுக்கு குறும்பாக புன்னகைத்து கை கொடுக்க தலையை இடம் வலமாக ஆட்டியபடி அவள் விரல்களை இதமாகப் பற்றி ஏறினான் ஆதித்.

பிறகு ஆதித் முன்னால் நடக்க அவனைப் படிக்கட்டில் தொடர்ந்தாள் ஆதித்.

“ஆதித் நீ என்னோட பக்கத்தில் வராத.”
தீடிரென்று அவள் இப்படிக் கூறவும் ஆதித் திரும்பி அவளைக் கேள்வியாகப் பார்த்தான்.

“நான் ரொம்ப ஷார்ட்டாத் தெரியறேன்.”
அவளின் பதிலில் அவன் கஷ்டப்பட்டு கீழுதட்டைக் கடித்து பொங்கி எழுந்த சிரிப்பைக் கட்டுப்படுத்தியவன் திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

“ஆதித் சிரிக்காத.” மனோஷாவின் குரலில் லேசாக எரிச்சல் வெளிப்பட்டது. உடனே சட்டென்று அவன் திரும்ப அவன் தலையின் மீது மோதிக் கொண்டாள். குனிந்து படியைப் பார்த்துக் கொண்டே ஏறியவளின் நாசி தானாக அவன் வாசத்தை சுவாசித்து உள்ளிழுத்துக் கொண்டது. இவன் கைகளும் அன்னிச்சையாக அவள் தோள்களைப் பிடித்திருந்தது.

சில நொடிகளில் அவனிடமிருந்து விலகியவளுக்கு, “சாரி” என்றான். இவளும் தலையசைத்து நடக்கப் பார்க்க அவனோ அந்தப் படிக்கட்டில் இருந்து அசைந்தானில்லை.

“ஆதி டைம் ஆகுது. மூவ்.”

“நான் ஸ்டெப் ஹைட்டா இருக்குதுனுதான உனக்குக் கை கொடுத்தேன். நீ ஏன் பிடிக்கலை?”

“அதுவா கிட் மாதிரி பீலாச்சு. நீ வேற ஜெயண்ட் மாதிரி இருந்த. அதனால் எவ்வளவு தடவை நானே ஏறி உன்னை மாதிரி ஒரு பையனுக்கு ஹெல்ப் பன்னலாம்னு முடிவு செஞ்சேன்.”

“ஒ.” என்றவனுக்கு மேலும் சிரிப்பு வந்தது.

“உனக்கு இன்பிரியாட்டி காம்பிளக்ஸா என்னால் நம்பவே முடியலை.”
அவன் கூறியதில் இதுவரை சுவற்றிலிருந்த ஓவியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவள் நிமிர்ந்து பார்த்தாள்.

“எல்லாமே இருந்தாலும் எல்லா மனுசங்ககிட்டேயும் ஒரு குறை இருக்கும். அதுதான் எங்கிட்ட ஹைட். ஒன் பிப்டி செண்டி மீட்டர். அது ஒன்னும் அவ்வளவு பெரிய விஷயம் இல்லைனானும் சில இடங்களில் நான் கஷ்டப்பட்டிருக்கேன். இப்படி இருக்கறதால் எனக்கு அட்வாண்டேஜ்தான். ஸ்டில் ஹைட்டா இருந்திருக்கலாம்னு தோணும்.”
அவள் உச்சந் தலையில் கை வைத்தவன் நீவி விட்டான்.

“யூ ஆர் பர்பெக்ட்.” என புன்னகைத்தான்.
அவனை நிமிர்ந்து ஊடுருவிப் பார்த்தாள் மனோஷா. அவள் துளைக்கும் பார்வையை சில விநாடிகள் எதிர் கொண்டான் ஆதித். ஏற்கனவே வழியின்றி அடைக்கப்பட்டிருந்த அந்த மூடிய இடத்தில் மின்சாரம் பாய்ச்சியது போல் இருவரின் பார்வையும் எதிர்கொண்டன.
தன் தொண்டையை லேசாக செருமிய ஆதித் வேகமாக முன்னால் நடக்க ஆரம்பித்தான். அவனைத் தொடர்ந்தவள் வெளியே வந்தாள்.
வெளியே வந்தவளின் கண்களுக்கு முதலில் தென்பட்டது எதிரே இருந்த ஒரு அழகிய பெண்ணின் ஓவியம். சிவப்பும், தங்க நிறமும் கலந்த பட்டை உடுத்தி கம்பீரமாக நாற்காலியில் அமர்ந்திருந்தார் அந்தப் பெண்.

மனோஷா அதைப் பார்த்தப்படி நிற்க அவள் கண் முன் சொடுக்கினான் ஆதித்.

“ஹே என்ன மனோ புரோஸ் ஆகி நின்னுட்ட?”

“இந்த பெயிண்டிங்க்.. எப்படி சொல்றது ரொம்ப ரியலிஸ்டிக்கா இருக்கு. யாரு இந்த லேடி?”

“நேம் இருக்கு பாரு படி.”
அவனைத் திரும்பி கண்களைச் சுருக்கியவள், “இந்த ஸ்கிரிப்ட் தமிழ் எனக்கு படிக்கத் தெரியாது. இப்ப இருக்கற தமிழே ரொம்ப கஷ்டப்பட்டு கத்துகிட்டேன். நீயே சொல்லு ஆதித்.”

“அவங்க பேரு ராஜம்மாள். என்னோட ஆத்தாவோட பாட்டி.”

“ஓ.” என உதட்டைக் குவித்தாள். அவள் சிவந்த உதடுகளும், மலர்ந்த கண்களையும் சில விநாடிகள் ரசித்தவன் தலையைத் திருப்பி வேறு பக்கம் பார்த்தான்.

“பெயிண்டர் யாரு?”
அவளின் அடுத்த கேள்வி முளைத்தது.

“தெரியலை.” என்று அவனிடம் இருந்து பிறந்த பதில் அவள் நெற்றியை ஏமாற்றத்தில் சுருங்க அவனின் மனதிலும் ஏதோ சுணக்கம் உருவாகியது.

“சரி. நீ வீட்டுக்குப் போய் லஞ்ச் சாப்பிடு. எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு. நீ இந்த வீட்டைச் சுத்திப் பார்க்கறதுனா சுத்திப் பார்த்துக்கோ.” கைப்பேசியை எடுத்து வாட்ஸப்பில் அவள் வேண்டாம் என்று சொல்லியதை அனுப்பி வைக்க அவளும் பார்த்தான்.

“இதை யூஸ் பன்னலாம்னு வேணாமா இல்லையாங்கறதை நான் தான் முடிவு செய்யனும் ஆதித்.”

அவளின் பிடிவாதம் அறிந்தவன் போல் அவளைப் பார்த்தவன், “அஸ் பர் கான்டிராக்ட்.” என வலது கையின் பெருவிரலையும், ஆள் காட்டி விரலையும் அவளை நோக்கி விரிக்க அவளோ முறைத்தாள்.

“ஓகே எம்பிளாயர். சி யூ.” என அவன் நிற்பதற்கு எதிர்த் திசையில் நடக்க ஆரம்பித்தாள்.
இதுவரை நன்றாகப் பேசிக் கொண்டிருந்த ஆதித்தின் முகம் அந்த பெயிண்டிங்க் பார்த்தப் பிறகு அவன் முகம் சுருங்கி ஏன் ஒட்டாத தன்மையுடன் பேசினாள் என்ற சிந்தனையுடன் ஒரு அறையைத் திறந்தாள் மனோஷா.
அவளைப் பார்த்தபடியே நின்ற ஆதித் சில விநாடிகள் கழித்து எதிர்ச் திசையில் இருக்கும் படிக்கட்டில் நடக்க ஆரம்பித்தான். அவனது மனம் முதல் முதலாய் பல குழப்பங்களில் மூழ்கத் துவங்கியது.

‘காட்.. எப்ப இருந்து மனோஷா என்னை அட்ராக்ட் செய்ய ஆரம்பிச்சாள்..’ அவனால் அவளுடைய முகத்திலிருந்து கண்களை எடுக்க முடியவில்லை.

அவள் பேசும் விஷயங்கள், அவள் முக பாவனைகள் அனைத்தும் ஜூம் செய்து பார்ப்பது போல் அவன் கண்களுக்குத் தெரிந்தது. அவள் மட்டுமே தெரிந்தாள்.














அத்தியாயம்-58

மனுசனுக்குப் போதையில் ரொம்ப இன்ட்ர்ஸ்ட். மது, மாது. அதிலும் மாது ரொம்ப முக்கியம். ஆணோ பெண்ணோ காதலில் இருப்பது டிரக்ஸ் மாதிரி ஒரு போதை தர விஷயம். அவங்க ஒரு தனி உலகத்தில் இருப்பாங்க. ஆனால் யாருக்கு யார் மேல எந்த நேரத்தில் காதல் வரும்னு சொல்ல முடியாது. அதை எக்ஸ்பிளைனும் செய்ய முடியாது. உலகம் முழுக்க காதலுக்குக் கொடுக்கப்படற ஒரு பொதுவாக பூ அது சிவப்பு ரோஜாக்கள் மட்டும்தான்.
-மனோ.

ஆதித் அனுப்பி இருந்த எக்ஸெல் டாக்யூமெண்ட்டை திறந்த மனோஷாவிற்கு அவளுக்குத் தேவையான அனைத்தும் இருந்தது. ஒவ்வொரு அறையாகச் சுற்றிப் பார்த்து விட்டு ஹாலில் உள்ள ஒரு நாற்காலியில் அமர்ந்த மனோஷா அனைத்தையும் எழுதி முடித்து ஒரு பட்டியலைத் தயார் செய்து ஒரு நிம்மதி பெரு மூச்சு விட்டாள்.

அப்போதே வடிவழகி எங்கிருக்கிறார் என்று தேடியவள் தோட்டத்தில் இருந்த அவரிடம் அந்த லிஸ்டைக் கொடுத்தாள்.
வடிவழகி அதைப் பார்த்து படித்தவர் , “சாப்பிட்டியா?” என்றார்.

“இன்னும் இல்லைங்க மேடம்.”

“இன்னாவரைக்கும் சாப்பிடாமல் இருந்தால் உடம்பு என்னத்துக்கு ஆகும். இடையில் சாப்பிட்டிருக்கலாம் இல்லை?”

“அது வந்துங்க மேம். ஒரு சேர முடிச்சிரலாம்னு அப்படியே போயிட்டேன்.” என்றாள்.

“ சரி சாப்பிடமால் எல்லாம் எந்த வேலையும் நீ பார்க்க வேண்டாம். இடையில் கரக்டா சாப்பிடு. இன்னிக்குப் போயிட்டு நாளைக்கு வா.”

தலையை அசைத்தாள் மனோ.

“லிஸ்ட் எல்லாம் ஓகேவாங்க மேடம்?”

“எல்லாம் சரியா இருக்கு. போயிட்டு வாம்மா..”
மனோஷா மலர்ந்த முகத்துடன் அங்கிருந்து நகர்ந்தாள். நடந்து வெளியே வரும் போதுதான் அவளுக்கே களைப்பு புரிந்தது. ஒரு ஆர்வத்தில் வீடு முழுவதையும் நிற்காமல் சுற்றிப் பார்த்திருக்க இப்போது கால்கள் நன்றாக வலித்தது.
இடையில் படிக்கட்டில் தவறுதலாகக் காலை வைத்திருக்க கால் லேசாக மடங்கி இருக்க அதுவும் நன்றாக வலிப்பது போல் தோன்றியது. லேசாகக் காலை இழுத்து நடந்தாள்.

அவள் வீட்டை விட்டு வெளியேறுவதை ஆதித் மாளிகையின் பலகணியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான். மனோஷாவின் நடை தளர்வுற்றிருந்தது. அவள் நடையில் ஏதோ ஒரு வித்தியாசம் தெரிந்தது.

அதைக் கண்ட ஆதித்தின் கண்கள் சுருங்கியது.
தன் வீட்டை அடைந்ததும் மனோஷாவுக்கு நிம்மதியாக இருந்தது. சுடு நிரீல் ஒரு குளியலைப் போட்டதும் தெம்பாக உணர்ந்தாள். ஆனால் அதையும் மீறி உடலிலும், மனதிலும் உற்சாகம் குறைந்து காணப்பட்டது.

சோபாவில் ஆயாசமாகப் படுத்தாள். இரவு தோசை மாவு இருந்தது. இட்லிப் பொடி கூட தொட்டுக் கொள்ளலாம் என முடிவு எடுத்தாள். இரண்டு கிளையண்ட் கால்கள் வேறு பேச வேண்டி இருந்தது. அது ஆரம்பிக்க இன்னும் அரை மணி நேரம் இருந்தது. தன் கைப்பேசியை எடுத்தவள் இவளே அருணுக்கு அழைத்தாள்.

“ஹலோ மனோ மேடம். என்ன நீங்களா எனக்கு கூப்பிட்டு இருக்கீங்க?” மறுமுனையில் அருணின் குரல் உற்சாகத்துடனும் கேலியுடனும் ஒலித்தது.

“ஏய் ஓட்டாதடா.”

“நானு.. ஓட்டறேன். சரி.. சரி.. சொல்லு என்ன விஷயம்?”

“விஷயம் எல்லாம் எதுவும் இல்லை. சும்மா பேசுலானு கூப்பிட்டேன்.”

“இல்லையே வாய்ஸ் டல்லா இருக்கற மாதிரி இருக்கே.”

தன் குரலில் இருக்கும் வித்யாசத்தை உணர்ந்திருப்பவனைக் கண்டு குறும் புன்னகை ஒன்று அவள் முகத்தில் உருவானது.

“அருண். நீ ரொம்ப புத்திசாலி.”

“புத்திசாலியா. ச்சே. ச்சே. சொல்லு.”

“இன்னிக்கு நான் ஒரு வீட்டுக்குப் போனேன். அதில் சீக்ரெட் பேசேஜ் வே இருந்துச்சு. அதான் அந்த கிளையண்ட் கூட கூட போனேன். இது வரைக்கும் இந்த மாதிரி பார்த்தது இல்லையா. ரொம்ப எக்ஸைட் ஆகிட்டேன். அவன் கூட கிளையண்ட்னு மறந்து ரொம்ப சாதாரணமாகப் பேச ஆரம்பிச்சேன். அவனை முன்னாடி அடிச்சதுக்கு சாரி கூட கேட்கலாம்னு இருந்தேன். ஆனால் கடைசியில் நீ நான் ஹயர் செஞ்சு இருக்கற எம்பிளாயி மட்டும்தான் அப்படினு சொல்லிட்டான். டேரக்டா அந்த வார்த்தையை சொல்லலை. ஆனால் அப்படித்தான் அது மீன் ஆச்சு. கேட்டதும் எனக்கு ஸ்லாப் செஞ்ச மாதிரி பீலிங்க். கிளையண்ட் கூட நாம அட்டாச் ஆகறதும் நடக்கும். குழந்தைகளான அப்படித்தான். ஆனால் அடல்ட்கிட்ட அப்படி அட்டாச் ஆக மாட்டேன். ஆனால் இங்க உல்டாவா.. பீல் ஆகிடுச்சு. அதான் ஹர்ட்டா இருக்கு.”
அவள் சொல்வதை மறு முனையில் கவனமாகக் கேட்டான் ஆதித்.

“இட் ஓகே மனோ. இந்த மாதிரி செட்டிங்கும் உனக்குப் புதுசு. நீயும் வீட்டை விட்டு வந்துருக்க. சோ நீயும் அன்பானவங்களை தேடலாம். இப்ப புரிஞ்சுருச்சுல்ல. சோ. அந்த கிளையண்ட்கிட்ட டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் செஞ்சுக்க.”

பேசிக் கொண்டே காலைத் தூக்க முயன்ற போது காலைத் தூக்க முயன்றாள்.

“ஷ்ஷ்..”

“ஹே என்னாச்சு?”

“ஒன்னுமில்லை அங்க வீட்டில் ஸ்டெப்ஸில் ஸ்லிப் ஆகிட்டேன். கால் ஸ்வெல்லிங்க் இருக்கு.”

“பாத்து நடக்க மாட்டீயா? லூசு.” மறு முனையில் அருண் கடிந்தான்.

“இல்லைடா.”

“என்ன இல்லை.. நீ அப்படி டான்ஸ் ஆடும் போதே உன்னோட கால் லிக்மெண்ட்ஸ் எல்லாம் கொஞ்சம் வீக்கா இருக்கும். டான்ஸிலும் சில சமயம் விழுந்திருக்க. ஸ்பிரே இருக்கா இல்லையா?”

“இருக்கு. பேக்கில் எடுத்து வச்சேன்.”

“போட்டுட்டு ஐஸ்பேக் வச்சுட்டு படு.”

“ம்ம்ம்ம். சரி.”

“அட்லீஸ்ட் எங்க இருக்கீனாவது சொல்லு?”

“அது முடியாது.” அவன் குரலில் இருந்த அக்கறை அவள் மனதை நெகிழச் செய்திருந்தது.

“அருண் பாய்.”

“பாய் டேக் கேர். நைட் மெசேஜ் பன்னு.”
அடுத்த சில நிமிடங்களில் கிளையண்ட் கால் ஆரம்பித்திருந்தது. ஒவ்வொருவராகப் பேச ஆரம்பித்தாள். இரண்டு மணி நேரங்கள் கடந்தோடி இருந்தது.
பசியும் நன்றாக எடுக்க தோசை வார்க்க முடிவு செய்தவள் பிரிட்ஜிலிருந்து மாவை எடுத்தாள். காலை ஊன்றி நிற்கவும் நன்றாக வலித்தது. மூன்று தோசை சுட்டுக் கொண்டு இட்லி பொடியில் தேங்காய் எண்ணெயை ஊற்றிக் குழைத்தவள் வேகமாக சாப்பிட ஆரம்பித்தாள்.
சாப்பிட்டு விட்டு பல் துலக்கியவள் இப்போது இரவு உடைக்கு மாறி சோபாவிற்கே வந்தாள். உண்டவுடன் உறங்க முடியாது அல்லவா. கைப்பேசியில் சைக்காலஜி தொடர்பாகப் படிக்க ஆரம்பித்தாள். அப்போது காலிங்க் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.