• இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏

உள்ளத்தில் ஊஞ்சலொன்று! -59 & 60

Meenakshi Rajendran

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 22, 2024
127
41
28
Tiruppur
அத்தியாயம்-59

மனோஷாவோட வாய்ஸ் ரொம்ப டல்லா இருந்துச்சு. இந்த மாதிரி டால்லா அவ பேசி நான் பார்த்தது இல்லை. அவ கோபப்பட்டு கூட பார்த்திருக்கேன். ஆனால் இப்படி டல்லா பேசிப் பார்த்தது இல்லை. அவளுக்குள் ஏதோ ஒரு சேஞ்ச். அது மட்டும் புரியுது.
-அருண்.

‘இந்த நேரத்தில் யாராக இருக்கும்? பாரதி நாளைக்கு வரேனு சொன்னாளே. ஹரி அண்ணாவா இருக்குமோ?’ என யோசித்தபடி கதவைத் திறந்தாள். நடக்க நடக்க கால் மேலும் வலித்தது.
முகத்தை வலியில் சுருக்கியபடி கதவைத் திறந்தாள் மனோஷா. வெளியில் நின்று கொண்டிருந்தான் ஆதித்.

“ஆதித்?” கண்களில் கேள்வியுடன் அவனைப் பார்த்தாள் மனோஷா.
விரைவாக அவனைக் கையைப் பிடித்து உள்ளிழுத்தவள் வேகமாகக் கதவைத் தாழிட்டாள்.

“இந்த டைமில் இங்க என்ன செய்யற?” அவள் குரலில் குற்றம் சாட்டும் பாவனை இருந்தது.

“உன்னோட பர்ஸை விட்டுட்டு வந்துட்ட. அதான் கொடுக்கலானு வந்தேன்.” அவளுடைய சிறிய பர்ஸை எடுத்துக் காட்டினான். சதுர வடிவில் பிரவுன் நிறத்தில் இருந்த பர்ஸ் அவன் கையில் மேலும் சிறிதாகத் தெரிந்தது.
பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட மனோஷா அதைக் கையில் வாங்கினாள்.

“இதை நாளைக்குக் கூட கொடுத்திருக்கலாம் சார்.”

“நான் அதுக்கு மட்டும் வரலை.” அவளிடம் பெயின் ரீலிவர் ஸ்பிரே, கிரிப் பேண்டேஜ், கேப்ஸிகம் பிளாஸ்டர் அடங்கிய ஒரு காகிதப்பையை ஒரு பையை நீட்டினான்.
அதைத் திறந்து பார்த்த மனோஷா அவனை சில நொடிகள் ஆழ்ந்து பார்த்தவள்,
“ஆதித் இது எல்லாம் நீங்க செய்யனும் இல்லை. உங்க எல்லாம் எம்பிளாயிஸையும் நீங்க பர்சனாலா பார்த்துக்க வேண்டிய அவசியம் இல்லை. அதிலும் எனக்கு என்னையே பார்த்துக்க முடியும். அதனால்தான் இந்த அசைன்மெண்ட்டுக்கு நான் ஒத்துக்கிட்டது. இனிமேல் நீங்க வேலை சம்பந்தமா இல்லாமல் எந்த பர்சனல் விஷயத்துக்கும் பார்க்காமல் இருக்கறது நல்லது.”

அவள் சொன்னதில் ஆதித்தின் முகம் மாறியது.

“மனோஷா.”

“யூ காட் மீ ராங்க். ஐம் மனோகரி. யூ மே லீவ் நவ்.”

கதவைத் திறந்து விட்டாள் மனோஷா. வெளியே செல் என்ற செய்தும் காட்டி விட ஏதோ சொல்ல வாயெடுத்த ஆதித், “சாரி. யூஸ் த மெடிசன். வொர்க் இன்ஞ்யூரிஸ்க்கு எம்பிளாயர்தான் பொறுப்பு.” என்று அவளிடம் பதிலுக்குக் கூறிவிட்டு ஆதித் வெளியே செல்ல கதவை உடனே மூடினாள் மனோஷா.

வெளியே நின்று கதவைத் தட்ட ஒரு கையைத் தூக்கியவன் பின் திரும்பி நடக்க ஆரம்பித்தான். தீடிரென்று ஏன் மனோஷா இப்படி பேசுகிறாள் என்று ஆதித்திற்குப் புரியவில்லை. ஆனால் அவள் பேசியது அவன் மனதை வருத்தியது. மனோஷா கோபமாக கூட பேசவில்லை. அவள் முகத்தில் உணர்வுகள் கூட இல்லை. அவ்வளவு அமைதியாக அவள் குரல் ஒலித்தது. அவள் முக உணர்வுகள் அவனிடம் பேசும் போது வெளிப்படும். ஆனால் இன்று அவள் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.

விழுந்ததால் ஏற்பட்ட வலியைத் தவிர எதுவும் இல்லை. அவள் தன்னை அப்படி ஒதுக்கியதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
கதவைச் சாற்றிய மனோஷா அமைதியாக தன் சோபாவுக்கு நகர்ந்தாள். அருணிடம் பேசிய போது இருந்த உற்சாகம் மேலும் வடிந்து போயிருந்தது. ஆதித்தின் மீது கோபம் வந்தது. இதற்காக பலரிடம் நடிப்பதும் அவளுக்குக் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது.
பாரதிக்கும், ஹரிக்கு உண்மை தெரிந்தாலும் அவளின் குடும்பத்தினர் அனைவரும் அவளை நல்லபடியாக நடத்தினர். அவள் கையில் உள்ள எதுவும் கனக்கவில்லை. ஆனால் மனதில் ஏதோ பாரம் சூழ்ந்தது.

‘தூங்குனா சரியாகிடும். ஒகேசஷனலா மூட் டவுன் ஆகறதுதான..’
மற்றவர்களின் பிரச்சினையைக் கேட்டுக் கொண்டிருக்கும் மனோஷாவுக்கு சில நேரங்களில் அவளின் மனமும் சோர்வுடன் காணப்படும். இன்று அப்படிப்பட்ட நாள் என்று நினைத்துக் கொண்டவள் அமைதியாக அவன் வாங்கிக் கொடுத்த ஸ்பிரேவை கால்களுக்கு அடித்துக் கொண்டு கட்டிலில் சென்று படுத்தாள்.

அடுத்த நாள் கால் வலி குறைந்திருந்தது. வடிவழகியைச் சந்தித்தார்.

“பரவால்லை. எல்லாத்தையும் கரக்டா நோட் பன்னியிருக்க. இன்னும் ஐஞ்சு நாளில் இதை நீ சூப்பர்வைஸ் பன்னிரு. ஆளுங்க எல்லாரையும் என் பேரன் வர சொல்லிட்டான்.”

“சரிங்கம்மா.” என்று கூறிவிட்டு அமைதியாக மனோஷா நகர்ந்தாள்.
அன்று முழுவதும் வேலை சரியாக இருந்தது. மாலை கோவிலுக்கு அழைத்துச் செல்வதாக பாரதி கூறி இருந்தாள். கோவிலுக்குச் செல்ல மனோவும் ஆர்வமாகக் காத்திருந்தாள்.

திருவிழாவுக்கு என்று விளையாட குடை ராட்டிணம், டிராகன் வடிவ ஸ்விங்க், மெரி கோ ரவுண்ட் பலவை கட்டமைக்கப்பட்டிருந்தன.

பாரதியும் அதிலெல்லாம் ஆடலாம் என விருப்பப்பட்டாள். பெங்களூரில் அடிக்கடி நண்பர்களுடன் வொண்டர்லா செல்லும் மனோஷா இதெல்லாம் சாதாரணம் என்றாலும் பாரதியுடன் விளையாட அவளும் ஆர்வமாக இருந்தாள்.
மாலை நேரம் அழகாக மஞ்சள் நிறத்தில் தங்க பார்டரிட்ட பாவாடை, பிளவுஸ், மெருண் நிறத்தில் தாவணியை அணிந்தாள். லெகங்கா அணிந்து மட்டும் மனோ பழகி இருக்க பாரதி அவளுக்கு இதைச் சொல்லிக் கொடுத்திருக்க தானாகவே கட்டிக் கொண்டாள். பாரதி மல்லிகைப் பூவும் முன்பே கொடுத்து விட்டுச் சென்றிருக்க அதுவும் பிரிட்ஜில் இருந்தது. பூவை பிரிட்ஜில் வைப்பதைப் பார்த்த மனோ நினைத்துக் கொண்டாள்.

உணவுப் பொருட்களைக் கெடாமல் இருக்கப் பிரிட்ஜில் வைக்கக் கண்டுபிடித்தால் அதில் பூக்களை வைத்தால் ஒரு வாரத்திற்கும் மேல் கெடுவதில்லை என்பது அவள் இங்கு வந்த பின்னர் கண்டறிந்த உண்மை. தன் அண்ணனிடம் இதைப் பத்தி கேட்க வேண்டும் என நினைத்துக் கொண்டாள்.
கண்ணாடி முன் நின்று தன் தலை முடிக்கு ஏற்ப பிரஞ்சு பிளாட் போட்டுக் கொண்டாள். பிரிட்ஜில் இருந்து பூவை எடுக்கும் போது சிரித்துக் கொண்டாள்.

‘என்ன பிரில்லியண்ட் ஐடியா இது?’ என நினைத்தப்படி பூவை அழகாகக் சூடிக் கொண்டாள்.

‘இந்த கெட்டப் கூட நல்லாதான் இருக்கு மனோ.’ பூவை வைத்தப் பிறகு தானாக ஆதியின் நினைவு எழுந்தது. அவளுக்கு பூச்சூட சொல்லித் தந்தவன் அவனாயிற்றே.
நேற்று வேறு அப்படி பேசி விட்டோம் என நினைத்தவளின் எண்ணத்தை தடை செய்யும் படி கதவைத் தட்டும் ஓசை கேட்ட கையில் கொலுசுடன் பாரதி வந்தாள். அதையும் அணிந்தவள் இருவரும் கோவிலுக்குக் கிளம்பினர்.










அத்தியாயம்-60

திருவிழாக்கள் ரொம்ப அழகான விஷயம். பெஸ்டிவல்னாவே அப்படித்தான். பாரதி அம்மா வீட்டில் இருக்கற அத்தனை பெட்ஷீட்டையும் துவைச்சு போட்டு, வீட்டில் பாதியை கவ் டங்கில் வழிச்சு விட்டு, பெயிண்ட் செஞ்சு, முளைப்பாரி வச்சு இத்தனை வேலையையும் அவங்க ஒரு ஆளே செய்யறாங்க. ஓ மை காட். கிரேட் இண்டியன் கிச்சனில் வர மாதிரி அவங்க கிரேட் லேடி. ஆனால் அவங்க பாரதியை அவ்வளவா அவங்க எந்த வேலையும் செய்யவிடலை. எல்லா பர்டனையும் அவங்களே ஏத்துகிட்ட மாதிரி இருந்துச்சு. ஆனால் அதே சமயத்தில் இங்க இருக்க மத்த வீட்டில் எல்லாம் வீட்டு லேடீஸ் ஒரு வேலை செஞ்சா ஹஸ்பண்ட்ஸ் மாட்டைப் பார்த்துக்குறது, புல் அறுக்கறதுனு இப்படி பல வேலைகளும் செய்யாறாங்க. செஞ்சுட்டும் வெளிய போறாங்க. ஜெண்டர் ஸ்டீரியோடைப் இருந்தாலும் எனக்கு இங்க வொர்க் பர்டன் ஹஸ்பண்ட், வொய்ஃப் வீட்டில் இருக்கற குட்டீஸ் கூட ஷேர் பன்னி செய்யறாங்க.
-மனோ.

ஊரைச் சுற்றிலும் சாலைகளில் டியூப் லைட்டை மரக் கம்பை நட்டு வைத்து அதில் கட்டி வைத்திருந்தனர். சில இடங்களில் விளக்கு பச்சை நிறமாக எரிந்தது. நவீன ஸ்பீக்கரைப் பார்த்திருந்தாலும், கூம்பு போல் வளைந்த ஸ்பீக்கர்கள் பிஸ்தா நிற பெயிண்ட்டில் இரண்டு இரண்டாகக் கட்டப்பட்டிருந்தது. அம்மனின் வடிவம் விளக்குகளாக வைக்கப்பட்டு பிரம்மாண்டமாகக் காட்சி அளித்தது.

அவற்றை எல்லாம் ரசித்தப்படி மாலை நேரம் பாரதியுடன் ஜல் ஜல் என கொலுசின் ஓசை கலகலக்க மனோ வந்து சேர்ந்தாள். ஊரில் இருக்கும் பல இள வட்டத்தின் கண்கள் மனோவைத் தொட்டுச் சென்றது. ஊருக்குப் புதிதாக வந்திருக்கும் பெண் மட்டுமில்லாது அவளை அடிக்கடி வெளியிலும் பார்க்கவில்லை. ஆனால் அவள் அழகாக இருப்பதாக செவி வழிச் செய்திகள் வந்து சேர்ந்திருக்க அவளைப் பார்க்க சிலர் இல்லை பலர் காத்திருந்தனர்.
தன்னை நிறைய பேர் பார்ப்பதை அவள் உணர்ந்தாலும் யாரையும் அவள் சட்டை செய்யவில்லை. புதிதாக ஒரு பெண்ணைப் பார்த்தால் அப்படித்தான் இருப்பார்கள் என உணர்ந்தவள் பாரதியுடன் வேடிக்கைப் பார்த்தபடி நடந்தாள்.
வண்ண விளக்குகள் எங்கும் ஜொலித்துக் கொண்டிருந்தது. கடைகளில் கூட்டமும் மிகுந்திருந்தது. மக்கள் ஆங்காங்கே சென்று கொண்டிருக்க அதில் மனோஷாவுக்கு யாரையும் தெரியவில்லை.

“பாரு ஏன் இத்தனை கூட்டமாக இருக்கு. இங்க இருக்கற ஆட்கள் யாரையும் எனக்குத் தெரியலையே?”

“அக்கா இதில் மொத்தம் பதினெட்டு கிராமத்து மக்கள் இருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில் பாருங்க. எவ்வளவு பெரிய கூட்டம் சேரப் போகுதுனு.”

“ஒ எக்ஸைட்டிங்க்.”

“உங்களுக்கு கூட்டம் சேரது அவ்வளவு பிடிக்குமா?”

“இல்லை. இந்த மாதிரி பெஸ்டிவல்னா மட்டும் பார்க்கப் பிடிக்கும். எத்தனையோ பேரு ஹேப்பியா வந்து சாமி கும்பிட்டு சொந்தங்களோட கொண்டாடிட்டு போவாங்க. பெஸ்டிவல்னா ஹேப்பினஸ்.” என புன்னகைத்தபடி கூறினாள்.

“சரி வாங்க.. கூட்டம் சேரதுக்கு முன்னாடி நாம சாமி கூம்பிட்டு சுத்தி எல்லாக் கடையும் பார்ப்போம்.”
கோவில் வந்த போது பார்த்ததற்கு இப்போது பார்ப்பதற்கும் வித்யாசமாகத் தெரிந்தது.

“இந்தக் கோயிலுக்கு எல்லாத்தையும் பார்த்துச் செய்யறது வடிவு பாட்டி ஃபேம்லிதான். முக்கால்வாசி செலவு அவங்களோடதுதான். இது அவங்க காலங்காலமாக செஞ்சுட்டு வரது.” என தகவலைத் தெரிவித்துக் கொண்டே நடந்தாள் பாரதி.

“ஆதி எங்க பாரதி?”

“அண்ணா கோவை போயிருக்காங்க. முடிஞ்சா நைட் வரனும் சொல்லி இருக்காங்க.”
எதுவும் பதில் கூறாமல் தலையசைத்துக் கொண்டவள் அமைதியாக கோயிலுக்குள் நுழைந்தாள். பாரதி கூறியபடி கடவுளை வழிபட்டவள் வெளியே வரும் போது மக்கள் கூட்டம் பெருகி இருந்ததது.

“அக்கா கையைப் பிடிச்சுங்குங்க. கூட்டத்தில் மிஸ் ஆகிறாதீங்க.” என அவள் கேலியாகக் கூற பாரதி அவளைப் பார்த்த மனோ தன் கைப்பேசியை எடுத்துக் காட்டினாள்.

“சரி சரி. வாங்க. நீங்க ஸ்மார்ட்தான். சிக்னல் கிடைக்கலைனா என்ன செய்வீங்க?”

“நேரா மைக்கில் அனவுன்ஸ் செஞ்சுருவேன்.” என்றாள் மனோஷா.

“நீங்க செஞ்சாலும் செய்வீங்க..” என ஒவ்வொரு கடையாக அலச ஆரம்பித்தனர்.
பெண்களுக்கான ஒரு வளையல் கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
வரிசையாக நீல நிறத்தில் தார்ப்பாயில் டெண்ட் போடப்பட்டு கடைகளாக மாற்றப்பட்டிருந்தது. சில இடங்களில் கடைகளின் பின்னே செல்ல சிறிய வழிகளும் இருந்தது. கடையில் பெண்கள் பலர் இருக்க பாரதிக்குத் தெரிந்திருந்த ஒருவர் வந்ததும் அவரிடம் பேச மனோஷா எட்டி கடையில் இருக்கும் பொருட்களை எடுக்க முயன்று கொண்டிருந்தாள். அப்போது அவள் தீடிரென்று பின்னால் இழுக்கப்பட்டாள்.
அவள் கத்துவதற்குள் பின்னால் உள்ள மரத்தில் சாய்க்கப்பட்டு அவள் வாயைப் பொத்தி இருந்தான் ஆதித். கண்களை அகல விரித்து அதிர்ச்சியுடன் பார்த்தாள் மனோஷா. அதன் பிறகு கையை எடுக்கவும் அவனை சில நொடிகள் அதிர்ச்சியுடன் பார்த்தவள், “என்ன இது ஆதி?” என மெல்லிய குரலில் கோபத்தைத் தேக்கிக் கேட்டாள்.

“பாரதியைக் கூட்டிட்டு வீட்டுக்குப் போ.”

“நான் எதுக்குப் போகனும்?” முறைத்தபடி கேட்டாள்.

“உன்னோட கால் வீக்கம் இன்னும் குறையலை. வலி இருந்தாலும் வலி இல்லாத மாதிரி காட்டிட்டு எதுக்கு நடந்துட்டு இருக்க நீ?”

அவனை விழிகள் இரண்டும் லேசாக விரியும்படி பார்த்தாள். அவள் சிவந்த அதரங்களின் மீது அவன் பார்வை பதிந்து அவள் விழிகளுக்குச் சென்றது. அவளை விட்டு லேசாக விலகி நின்றான்.

“ஆதித் நான் நேத்து சொன்னது நினைவிருக்கா இல்லையா?”

“இருக்கு. உனக்கு நான் ரெஸ்பான்ஸிபிள் மனோஷா. ஐம் பேயிங்க் மனி. அதனால் உன்னை எப்படி வேணாலும் யூஸ் பன்னிக்கலாம்னு நான் நினைக்கல.”

“ஆதித் இங்க வரதுக்கு முன்னாடி எல்லா ரிஸ்க்கும் தெரிஞ்சுதான் வந்தேன். நீ அதைப் பத்தி எல்லாம் நீ கவலைப் பட வேண்டியது இல்லை.”
ஆதித்தின் முகத்தில் லேசாக அதிருப்தி தெரிந்தது.

“மனோஷா வாட் ஈஸ் ராங்க் வித் யூ? சீக்ரெட் ரூமை விட்டு வெளிய வர வரைக்கும் நீ நல்லாதான இருந்த?”

“ஆதித் ஐம் ஆல் ரைட். நீ என்னோட எம்பிளாயர் அப்படிங்கறதுக்காக என்ன வேணாலும் முடியாது.” அந்த மரத்திலிருந்து நகர முயற்சிக்க மனோவின் தலை முடி அங்கிருந்த மரப்பட்டையில் சிக்கிக் கொண்டது.
அதை எடுக்க அவள் முயல ஆதித் அவள் அருகில் வந்து தலை முடியை விடுவிக்க உதவினான்.

“என்னால உன்னைப் புரிஞ்சுக்க முடியலை. லுக் ஐம் சாரி. நான் என்னை செஞ்சு நீ இப்படி என்னை அவாய்ட் செய்யறனு தெரியலை.” மெல்லிய குரலில் அவள் காதோரம் கூறினான் ஆதித்.

“நீ எதுவும் செய்யலை ஆதித். இப்ப நாம இப்படி பேசிட்டு இருக்கறதை யாராவது பார்த்தால் நிச்சயம் பிரச்சினை ஆகும்.”
உடனே அவளிடம் இருந்து விலகினான் ஆதித்.

“போ. நான் நைட் மீட் பன்றேன்.”

“நோ நீட்.” மனோஷா தெளிவாகப் பதில் உரைத்தாள். அவள் பதிலில் ஆதித்தின் முகத்தில் மெலிதாக ஒரு புன்னகை மலர்ந்தது.

“ஆஸ் ஏ எம்பிளாயர் ஐ வுட் லைக் டூ மீட் யூ.” என ஆதித் கூறவும் அவனை நிமிர்ந்து பெருமூச்சுடன் பார்த்தாள் மனோ.

அந்த இடம் முழுக்க இரைச்சலும், ஸ்பீக்கரில் பாடல்கள் ஒலித்துக் கொண்டாலும் இவர்கள் மெல்லிய குரலில் பேசியது யாருக்கும் கேட்கவில்லை.

“அப்புறம் ஹாஃப் சேரி உனக்கு ரொம்ப சூட்டபிளா இருக்கு. லுக்கிங்க் கார்ஜியஸ்.” எனக் கூறிவிட்டு அவள் கையில் சில வளையல்களைத் திணித்து விட்டு அங்கிருந்து இருட்டில் எங்கோ மறைந்து விட்டான் ஆதித்.

முகம் முழுவதும் சூடேறியது மனோவுக்கு. அப்போது அவள் கைப்பேசிக்கு ஏதோ நோட்டிபிகேஷன் வர உடனே கடையின் அருகில் சென்றாள் மனோ. பாரதி இன்னும் அந்தப் பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தாள். அந்தப் பெண்மணி விலகவும் பாரதி திரும்பவும் சரியாக இருந்தது.

“வாவ்.. இந்த வளையல் அழகாக இருக்கு. எனக்கும் நல்லதா செலக்ட் செஞ்சுதாங்க.”
அப்போதுதான் வளையலை நிமிர்ந்து பார்த்தாள். அந்த வளையல்களிருந்து ஒரு வித வாசனை வந்து கொண்டிருந்தது. அது ஆதித்தின் பர்ஃப்யூம் வாசனை என புரிந்தது மனோவுக்கு. உடனே அதைக் கைகளில் அணிந்து கொண்டாள். பாரதி கண்டுபிடித்து விட்டால் என்ன செய்வது? இருவருக்குள்ளும் இருக்கும் பனிப்போரை பாரதி அறியமாட்டாள் அல்லவா.

பாரதி விரும்பியபடி அவளுக்கு வளையல்களைப் பார்க்க ஆரம்பித்தாள் மனோ. அவளுக்குமே தான் ஏன் இப்படி நடந்து கொள்கிறோம் என்று குழப்பமாக இருந்தது.

இதுவரை எந்த கிளையண்ட்டிடமும் இவ்வளவு நெருங்கிப் பழகியது இல்லை. அவளது பேசண்ட்ஸ் பெரும்பாலும் குழந்தைகள் என்பதால் அவர்களிடம் எப்போதும் நெருக்கம் இருக்கும். ஆனால் அவர் பெற்றோர்களிடம் அவ்வளவு நெருங்கிப் பழக மாட்டாள். அளவோடுதான். முதல் முறை அவளுடைய சமநிலை ஆதித்தின் விஷயத்தில் தடுமாறிக் கொண்டிருக்கிறது. அதற்கான காரணத்தை அலசிக் கொண்டிருக்கிறது அவள் மனது.


அவள் அலசி ஆராயும் முன் அவளது வாழ்வில் மிகப் பெரிய மாற்றம் நடக்கப் போகிறது என்பதை அவள் அறியவில்லை. அதற்கான அச்சாணி வலுவாக இடப்பட்டு காலச் சக்கரத்தில் அதற்கான நிகழ்வுகளும் ஒவ்வொன்றாக நடக்க ஆரம்பித்திருந்தன.



1000105815.jpg

இரவு கடையில் பானி பூரி, குச்சி ஐஸ், கோலா ஐஸ் அனைத்தையும் உண்டவர்கள் ரோஸ் வண்ணம், பச்சை வண்ணத்தில் கலந்த பஞ்சு மிட்டாயைக் கண்டதும் அதையும் ஆசையோடு வாங்கி உண்டனர். பஞ்சாய் நாவில் அது கரைந்தது. உதடுகள், நாவில் வண்ணம் வேறு ஒட்டிக் கொண்டது.
நிறைய உண்டதால் ராட்டினம் போன்றவற்றில் ஏறாமல் பேசிச் சிரித்தபடி பாரதி அவளை வீடு வரை விட்டவள். அங்கு விட்டிருந்த தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு தன் வீட்டுக்கு வந்தாள்.
வீட்டுக்கு வந்து சோபாவில் வயிற்றை நிரவியபடி சாய்ந்தாள். வயிறு முழுக்க சாப்பிட்டிருந்தாள்.

அவளது கைப்பேசியில் ஆதித் அவர்கள் சந்திக்க வேண்டிய இடத்தை செய்தி அனுப்பியது. பெருமூச்சு விட்டபடி வீட்டைப் பூட்டி விட்டு ஆதித்தைத் தேடி செல்ல ஆரம்பித்தாள் மனோ.