அத்தியாயம்-63
புலினா எல்லாருக்குமே பயம் இருக்கும். இரத்தத்தை உறைய வைக்கும் அந்த கொடிய மிருகங்கள். உண்மைதான். இல்லைனு சொல்லவே இல்லை. ஆண் புலி தன் குடும்பத்தைப் பல எதிரிகளுடன் போராடிக் காப்பாத்தும். குட்டிப் புலிகள் தானாக வாழக் கற்றுக் கொள்ளும் வரை தாய்ப் புலியும், தந்தைப் புலியும் வேட்டையாடுதல் முதலிய வாழத் தேவையான திறன்களைக் கற்றுக் கொடுக்கும். சின்னப் புலிகளும் பாதுகாப்பற்ற தன்மையினால் கஷ்டப்படும். இந்த உலகத்தில் மிகப் பலமானவர்களுக்கு பாதுகாத்துக் கொள்ள அதிகமிருக்கும். அந்தக் குழந்தையை தெரியாமல் தொலைத்து விட்டு அவள் கணவனிடம் அடிவாங்கிக் கொண்டு எனக்கு அந்தப் பெண் நன்றி கூறிவிட்டு சென்றாள். ஏதோ தெரியாமல் நடந்த சம்பவம். இந்த பேட்ரி ஆர்க்கல் சொசைட்டியில் அனைத்து இலகுவான பணிகளும், பெருமைகளும் ஆண்களுக்குப் போகும். சுமைகளும், துன்பங்களும் பெண்களுக்கு வரும்படி அழகாக டிசைன் செய்யப்பட்டிருப்பதை அடிக்கடி நான் பார்க்க வேண்டி இருக்கிறது.
-மனோ.
பாரதியும், ஹரியும் விழிகள் விரிய அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தனர்.
“ஆதித். காண்ட் பீரித். லீவ் மி.” மனோ அவனிடம் மெதுவாக பேசிக் கொண்டிருந்தாள்.
அதிகாலை நான்கு மணிக்கு ஹரி ஆதிக்கு அழைத்திருந்தான்.
இரவில் எம். ஆர். ஐ ஸ்கேன் மருத்துவமனை சார்ந்த விஷயங்களில் அவன் பிசியாக இருக்க அவனால் ஆதித்துக்கு அழைக்க முடியவில்லை. அதிகாலையின் அவன் நினைவு வர அவனுக்கு அழைத்துக் கூறினான். அடுத்த கால் மணி நேரத்தில் கிளம்பி விட்டான் ஆதித்.
ஹாலில் அமர்ந்து தங்கைகள் இருவரும் படித்துக் கொண்டிருக்க ஆதித் அவர்களைத் தாண்டி வெளியே கிளம்பி இருந்தான்.
ஹூடி டீசர்ட், த்ரீ ஃபோர்த் பேண்டில் கார் சாவியுடன் தங்களுக்குப் பதில் அளிக்காமல் செல்லும் ஆதித்தை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர் அகல் நிலாவும் இளமதியும். காரை எடுத்த ஆதித் நேராக நிறுத்தியது மனோ அட்மிட் ஆகி இருக்கும் மருத்துவமனையில்தான். கண் விழித்த மனோஷா தண்ணீர் அருந்திவிட்டு தன் கைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பாரதியும், ஹரியும் அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்திருக்க வேகமாக அறைக்குள் நுழைந்தான் ஆதித். நுழைந்தவன் நேராக சென்று விழித்திருந்த மனோஷாவை அணைத்துக் கொண்டான். தலையில் கட்டுடனும், காலில் ஒரு கட்டுடனும் இருந்தவளைப் பார்த்ததும் ஒரு வித குற்ற உணர்வு ஒட்டிக் கொண்டது. அவளைத் தேவை இல்லாமல் இங்கு அழைத்து வந்து இப்படி ஆக்கி விட்டோமோ என்று தோன்றியது.
அவனது செயலில் மனோஷாவும் தடுமாறித்தான் போனாள். இப்படி ஆதித் செய்வான் என அவள் எதிர்பார்க்கவில்லை. அவளை விட்டவன் இன்னும் தோள்களில் கையை வைத்திருந்தான்.
“லெட்ஸ் கேன்சல் தி காண்டிராக்ட். ஹாஸ்பிட்டலில் டிஸார்ஜ் ஆனதும் நீ கோயம்புத்தூர் போயிடு. அவ்வளவுதான். அருண் விஷயத்திற்கு நானே எதாவது செஞ்சுக்கிறேன்.”
தன் தோள்களில் இருந்த கைகளை எடுத்துப் பிடித்துக் கொண்டாள் மனோஷா. அவள் முகத்தில் ஒரு புன்னகை குடி வந்திருந்தது. இதுவரை அதிகம் உணர்வுகளை வெளிக்காட்டாத ஆதித் முகத்தில் பல வித உணர்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மனோஷா.
“ஆதித் யூ ஆர் எமோஷனல். பி ரேஷனல். இது நான் என்னோட ரிஸ்கில் செஞ்ச விஷயம். டோண்ட் வொர்ரி.”
“இல்லை மனோஷா. மித்ரனுக்கு என்ன பதில் சொல்றது நானு?”
“நீ எந்த பதிலையும் யாருக்கும் சொல்ல வேண்டியது இல்லை. ஐம் ஏன் அடல்ட் அண்ட் பிரபசனல். இது 100 பர்சன்ட் சுய நினைவோடு நான் முடிவு செஞ்ச விஷயம்.”
“இல்லை. மனோ..”
“ஆதித்.” என அழுத்தமானக் கூறினாள் மனோஷா.
“காம் டவுன் அண்ட் லிசன் டூ மி.” மனோவின் குரல் மெலடி போன்று ஒலித்தது.
“நான் பார்த்துக்கிறேன்.” அவள் கொடுத்த உறுதியில் ஆதித் ஒருவாறு ஆசுவாசமடைந்தான்.
“ஒகே.” ஆதித் தயக்கத்துடன் சம்மதித்தான்.
ஹரியும் பாரதியும் ஒருவரை ஒருவர் திரும்பிப் பார்த்து கண்களைச் சிமிட்டினர்.
‘என்னடா நடக்குது இங்க?’ என மைண்ட் வாய்ஸ் ஓடியது இருவருக்கும்.
“ஆதித் இன்னொரு வகையில் நமக்கு இந்த விஷயம் அட்வாண்டேஜ்தான்.”
“என்ன அட்வாண்டேஜ்?” மூவரும் ஒரே குரலில் கேட்டனர். மூவரும் இவள் அடி வாங்கியதில் என்ன என்ன லாபம் இருக்கப் போகிறது என்று யோசனை சென்றது.
அவர்களுக்குப் புரியவில்லை என்று உணர்ந்தவள், “ஊருக்குள்ள இப்ப ஹாட் டாபிக் யாரு?” என்றாள்.
“உங்களைப் பத்திதான் அக்கா பேசிட்டு இருக்காங்க.”
“பாசிட்டிவா? இல்லை நெகட்டிவா?”
“பாசிட்டிவ்.” பாரதி பதில் அளித்தாள்.
ஆதித்திற்கு அவள் கூற வருவது புரிந்தது.
“அப்ப எனக்கு நல்ல பேருதானே.. அதிலும் தலையில் வேற அடி. தாய்க்குலங்கள் எல்லாரும் அவுட்தான். ஸ்கோர் ஒன். அப்புறம் இது வடிவு பாட்டிக்குத் தெரியுமா?”
“பாட்டிக்குத் தெரியும். காலையில் உன்னை பார்க்க வரேனு சொன்னாங்க.” ஹரி கூறினான்.
“அப்புறம் என்ன? என்ன ஆதித் குவிட் செய்யனுமா?”
தானாக அவன் தலை வேண்டாம் என்று அசைந்தது. அவன் கேட்ட போதே அவளும் இந்த காண்டிராக்டை கேன்சல் செய்து விட்டு போயிருக்கலாம். ஆனால் அவனையே சமாதானம் செய்ததை எண்ணி நொந்து கொள்ளப் போகிறாள் மனோஷா.
அரை மணி நேரம் நகர ஹரியும், மனோவும் ஆதித்திடம் பேசி அவனை திரும்பவும் கோயம்புத்தூருக்கு அனுப்பி வைத்தனர். ஊர்க்காரர் யாரவது அவளைப் பார்க்க வந்தால் அதற்கு பதில் சொல்ல வேண்டும் என்பதால் அமைதியாக அங்கிருந்து கிளம்பினான்.
ஆதித்தை வழி அனுப்பி விட்டு பாரதியும், ஹரியும் தேநீர் குடித்து விட்டு வருகிறோம் என்று கூறி விடை பெற்றுச் செல்ல அறையில் கைப்பேசியைப் பார்த்தப்படி இருந்தாள் மனோஷா.
ஹரியும், பாரதியும் கேண்டினீன் உயரமான வட்டமான மேசையில் தேநீரைப் பருகியபடி எதிர் எதிரில் நின்று கொண்டிருந்தனர்.
“அண்ணா. நான் நினைக்கறத்தான் நீயும் நினைக்கிறியா?”
“எதை சொல்ற பாரு?”
“ஆதிஷா கெமிஸ்டிரியை?”
அவளின் நேரடியான கேள்வியில் தேநீரைத் துப்பாமல் மேசையின் மீது வாகாக வைத்தான்.
“ஆதிஷாவா?”
“ஆதி அண்ட் மனோஷா.”
“ம்ம்ம்ம்.”
“அண்ணா… நிஜமாவே இவங்க அருண் அண்ணாவைக் கண்டுபிடிக்க வந்தாங்களா?” பாரதிக்கு இப்படி ஒரு சந்தேகம் வேறு முளைத்திருந்தது.
“ஏன் பாரு? நானே குழம்பி போயிருக்கேன். ஆதித் இந்த மாதிரி நடந்துகிட்டதே இல்லை. இரண்டு பேரும் பேசறதைப் பார்த்தால் என்னமோ பல வருஷம் ஒத்துமையா வாழ்ந்த கபில் மாதிரி எனக்கு இருந்துச்சு.”
“ஆமாண்ணா. எனக்கும் நம்ம அம்மா எப்படி அப்பாவை சமாதானப்படுத்துவாரோ அதே பீலிங்க். நீ சொன்னப்ப கூட நான் நம்பலை. ஆனால் இப்ப எனக்கே ரொம்ப சந்தேகமாக இருக்கு.”
“அது சந்தேகமாக இருக்கற வரைக்கும் பிரச்சினை இல்லை பாரு. ஆனால் நிஜம்னா.” கண்களை மூடித் திறந்தான்.
“வடிவுப் பாட்டி ஆதித் வீட்டில் என்ன நடக்கும்னு என்னால நினைச்சுப் பார்க்கக் கூட முடியலை.” ஹரியின் முகத்தில் லேசான பதட்டம் தெரிந்தது.
“அண்ணா, அப்படியே இருந்தாலும் அவங்களை பிரிக்கறது நியாமாக இருக்குமா?”
“பாரு.. நியாயம் அநியாயம் எல்லாம் நாம அவங்ககிட்ட பேச முடியாது. அவங்க எல்லாம் பழைய ஆளுங்க.. அதுவும் சாதி கௌரவம், குடும்ப மானம் எல்லாமே முக்கியம். மானத்துக்காக உயிரைக் கூட விடுவாங்க. அருண் கிடைக்காட்டி கூட பரவால்லை. அவங்க குடும்பத்தில் எதுவும் ஆகாமல் இருந்தால் போதும்.”
“அண்ணா.. இந்தக் காலத்தில் போய்..”
“பாரு. நம்ம ஏஜில் இருக்கற நிறைய பேரு இப்படி இருக்கும் போது நம்ம தாத்தா பாட்டி காலத்து ஆளுங்களை நாம பேசவே முடியாது. உள்ளம் கொஞ்சம் ஊசலாடுனாலும் அதோட விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.”
தன் சகோதரன் கூறியவற்றைக் கேட்டு ஒரு பெரு மூச்சுடன் ஆறிப் போன தேநீரை அப்படியே மடக் மடக் என்று குடித்தாள் பாரதி.
“அண்ணா சீரியசா இரண்டு பேரையும் பார்க்கும் போது நிஜமாவே கண்ணில் ஒத்திக்கனும் போல இருந்தது. ஆதி அண்ணா முகத்தில் இப்படி எக்ஸ்பிரசன் எல்லாம் நான் பார்த்ததே இல்லை.”
“ இதை இப்படியே விட்ரு. நாமே இல்லாத ஒன்னை இருக்கறாக கற்பனை பன்னிக்கக் கூடாது. ஹக்கிங்க் எல்லாம் மனோஷா வளர்ந்த கல்ட்சரில் ரொம்ப காமன். ஏன் இங்கேயும் ரொம்ப காமனாகிட்டு வருது.”
“ம்ம்ம்.. புரியுது.”
இருவரும் மனோஷாவுக்கு ஹார்லிக்ஸ் பானம் பார்சலில் வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பினார். இன்னும் சில பரிசோதனை முடிவுகள் வர வேண்டி இருந்தது. வந்ததும் அவர்கள் எந்த பிரச்சினையும் இல்லை என்றால் உடனே டிஸ்சார்ஜ் செய்யலாம் என்று கூறிவிட்டனர். ஊரில் இருக்கும் வாட்சப்பில் பலர் மனோகரியைப் பற்றி விசாரிக்க ஹரியும், பாருவும் பதில் அனுப்பிக் கொண்டிருந்தனர். குழந்தையின் தாயாரும் அவளை வந்து பார்த்துச் சென்றிருந்தார்.
அவள் காலுக்கு மட்டும் கிரிப் பேண்டேஜ் கொடுத்திருந்தனர். ஆயின்மெண்ட் வலி இருந்தால் மட்டும் பயன்படுத்தக் கூறி இருந்தனர். தலைக்கு தினமும் அடிபட்ட இடத்தில் ஐஸ்பேக் கொடுக்கக் கூறி இருந்தனர். ஹரியும் மனோவைப் பற்றி ஆதித்துக்கு அப்டேட் செய்து கொண்டிருந்தனர்.
டிஸ்சார்ஜ் செய்து முதல் பாரதி வீட்டுக்கு அழைத்துச் செல்ல பாரதியின் அம்மா ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்தார்.
“எதுக்குங்கம்மா இதெல்லாம்?” என்ற மனோகரியின் மறுப்பை எல்லாம் காதில் கேட்கவில்லை.
“நீ சும்மா இரு புள்ளை.. நீ எந்தன்னிக்கு தாவணியை போட்டியோ அன்னைல இருந்து எல்லாருக்கும் உன் மேல் கண்ணு. அதெல்லாம் இப்ப கழிஞ்சுதுனு நினைச்சுக்கோ. அழகு இருக்கற மாதிரி உனக்கு தைரியமும் சாஸ்தி புள்ளை. உனக்கு இப்படி அடி பட்டுருச்சுனு கேட்டதும் எனக்கு கையும் ஓடலை. காலும் ஓடலை. இவங்க இரண்டு பேரும் என்னை வரவும் விடலை. புதுசா வந்ததானால் எல்லா கண்ணும் உன் மேலதான்.” என பாரதி அம்மா பேசவும் மனோவின் முகத்தில் புன்னகை ஒட்டிக் கொண்டது.
தலையசைத்து விட்டு அமைதியாகிவிட்டாள்.
அத்தியாயம்-64
மனோஷா கான்சியஸா இல்லைனு ஹரி சொன்னதும் எனக்கு என்ன செய்யறதுனு தெரியலை. ஒரு செகண்ட் மனசு தேவையில்லாமல் மனோஷா இதில் எல்லாம் தலையிடனும் கூட தோணுச்சு. ஆனால் அவளோட கேரக்டர்படி சும்மா இருந்தால்தான் அதிசயம். எதுவும் சீரியஸ் இல்லை. ஆனால் லைஃப் திரட்டனிங்கனா அவளோட ஃபேம்லிகிட்ட இன்ஃபார்ம் செய்யாமல் இருக்க முடியாது. மனோஷாகூட இருந்தால் இப்படி அடிக்கடி ஸ்டன் ஆகி நிக்க வேண்டியதுதான்.
-எழில்.
மனோஷா அடிபட்டு இதோடு ஐந்து நாட்கள் ஆகி இருந்தது. திருவிழா நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது. இரண்டு நாட்கள் ஓய்வெடுத்தவள் பின்பு வழக்கமான பணிகளுக்குத் திரும்பி இருந்தாள். வடிவும் அவளை ஹரியின் வீட்டில் இருக்கும் போதே வந்து பார்த்திருந்தார். அவருக்கும் மனோவின் தைரியம் ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஒரு குழந்தையைக் காப்பாற்ற இந்தப் பெண் இவ்வளவு செய்திருக்கிறாள் என்று தோன்றியது. அவர் மனதில் இடம் பிடித்து விட்டிருந்தாள் மனோ.
முன்னே பின்னே தெரியாதவருக்கு உதவியவள் வேலையிலும் நேர்மையை எதிர்பார்க்கலாம் என்று எண்ணினார். அவளால் இவருக்கு நேரப் போகும் அவமானம் பற்றி அறியமாட்டார் அல்லவா!
ஆதித் போன் காலில் மட்டும் மனோவுடன் பேசிக் கொண்டிருந்தான். அவன் ஒரு முக்கியமான வேலையில் மாட்டிக் கொண்டதால் அவனால் நேரில் வர முடியவில்லை. அது மட்டுமில்லாமல் அகல் நிலா தன் அண்ணன் அவளைக் கண்டு கொள்ளாமல் சென்றதற்கு கேள்வி மேல் கேள்வி கேட்டு வைக்க தனக்கு தெரிந்தவருக்கு ஒரு பர்சனல் பிரச்சினை என்று கூறி சமாளித்து வைத்திருந்தான்.
இளமதிக்கு தேர்வு நடந்து கொண்டிருக்க அவள் ஊருக்கு வரவில்லை. ஆனால் மாவிளக்கு எடுக்க அந்த வீட்டின் மூத்த பெண் பிள்ளையாக மாவிளக்கு எடுக்க அகல் வந்திருந்தாள். இதிலெல்லாம் அவளுக்கு ஈடுபாடு இல்லை என்றாலும் பாட்டி விட மாட்டார். இருந்தாலும் தன் நண்பர்கள் மத்தியிலும், இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட கிராமத்திற்கு வந்தவள் ஊரைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
இதற்கிடையில் மனோ வடிவழகியின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி இருக்க அவளிடம் முக்கிய வேலைகள் அனைத்து அவர் ஒப்படைத்துச் செய்யச் சொல்லிக் கொண்டிருந்தார்.
மில்லில் இருந்த மனோஷா வீட்டுக்கு ஒரு ஃபைலை காண்பித்துச் செல்ல வந்திருக்க சிவ நாராயணனும், வடிவழகியும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆதித் அடுத்த நாள் வருவதாக இருக்க அகல் நிலாவை அவள் அன்னை அடம் பிடித்தாலும் இழுத்துக் கொண்டு வந்திருக்க ஆதித்துக்கு இந்தத் தகவல் தெரியாமல் போயிருந்தது. வர மாட்டேன் என்று அடம் பிடித்திருந்த அகல் நிலா இறுதி நேரத்தில் ஒப்புக் கொண்டிருந்தாள்.
அறைக்குள் இருந்த அகல் நிலாவுக்கு அப்படியே ஊர் சுத்தலாம் போலிருக்க உடை மாற்றிக் கிளம்பி வெளியே வந்தவள் ஹாலைப் பார்க்க அங்கிருந்த பெண்ணைப் பார்த்ததும் அவள் அப்படியே நின்றாள்.
“ஹலோ அக்கா? நீங்க எங்க இங்க?”
தீடிரென்று கேட்ட குரலில் மனோ திரும்பிப் பார்க்க அகல் நிலா ஜீன்ஸ் குர்தியில் நின்று கொண்டிருந்தாள். இந்தப் பெண் ஆதித்தின் தங்கை என்பதை நொடியில் உணர்ந்த மனோ, “யாருங்க?” என்றாள்.
“உங்களை நான் கோயம்புத்தூர் ஐஸ்கீரிம் ஷாப்பில்?”
“ஐஸ்கீரிமா? எனக்கு ஜில்லுனு சாப்பிட்டால் ஒத்துக்காதுங்க.”
“அப்படியா?” குழப்பத்தில் இருந்தாள் அகல் நிலா. தன்னை இதுவரைப் பார்த்திராது போல் எதிரில் இருக்கும் பெண்ணின் முகபாவம் இருந்தது.
“அகல் நிலா.” பாட்டி கண்டனக் குரலில் பேசினார்.
“இவங்க பேரு மனோகரி. இங்க புதுசா வேலைக்குச் சேர்ந்திருக்காங்க. நீ போகற மாதிரியான இடத்துக்கு எல்லாம் இவங்க போக மாட்டாங்க.”
“பாட்டி, ஆனால் இவங்களை நான் பார்த்திருக்கேன். மார்டன் டிரஸ்ஸில் இருந்தாங்க. ஆனால் இப்ப தாவணி பாவடையில் இருக்காங்க.”
“இந்தப் பொண்ணு வீட்டில் அதுக்கெல்லாம் விட மாட்டாங்க. நீ கிளம்பு.” என அவளிடம் கண்டிக்கும் தொனியில் கூறவும் குழப்பத்துடன் விடை பெற்றாள் அகல் நிலா.
“அவங்க வேற யாரையோ பார்த்திருக்காங்கனு நினைக்கிறேன்.”
“சில பேருக்கு சாயல் இருக்கும்.” என வடிவு அவர் வேலையில் பைலில் மூழ்கினார்.
மனோ மனதுக்குள் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டாள். ஆதித்திடம் இது குறித்து பேச வேண்டும் என முடிவு செய்து கொண்டவள் வடிவழகி பாட்டியின் முக பாவனைகளைக் கவனிக்க ஆரம்பித்தாள்.
அந்த இடத்தை விட்டு நகர்ந்து மில்லுக்கு சென்றதும் இந்த மாதிரி ஹரியிடம் நடந்ததைக் கூறிவிட்டு ஆதித்திற்கு அழைத்தாள்.
“ஆதித் ஒரு பிராபளம்.” என நடந்ததை விளக்கினாள்.
“தேங்க் காட். அகல் அங்க வரேனு எங்கிட்ட சொல்லவே இல்லை. மார்னிங்க் கூட வர மாட்டேனு சொல்லிட்டு இருந்தாள்.”
“தெரியலை. பட் இப்போதைக்கு ஓகே. ஆனால் இப்போதைக்கு அவளை பாட்டியே சாமாளிச்சுட்டாங்க.”
“அப்ப நான் நினைச்சது சரிதான்.”
கையில் ஒரு பைலுடன் அவர்கள் பின்னே நின்று கொண்டிருந்தாள் அகல் நிலா. அவள் அகன்ற விழிகளில் கோபம் பூத்திருந்தது.
“ஆதித் நாம மாட்டிகிட்டோம். நீயே உன் சிஸ்டருக்கு எக்ஸ்பிளைன் செய்.” மனோ கூலாகக் கைப்பேசியைக் கொடுத்து விட்டு அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.
கோபத்துடன் கைப்பேசியை வாங்கிய அகல் நிலா, “அண்ணா என்ன இது? இவங்க உன்னோட லவ்வரா? அதை மறைக்கத்தான் இப்படி நாடகமா?” என்றாள்.
அவள் கூறியதைக் கேட்ட மனோ ஒரு முறை சலிப்பாகப் பார்த்து விட்டு மேசையில் இருந்த நீரைக் குடித்தாள். எப்பவும் இதே போரிங்க் ஐடியாதான் என நினைத்துக் கொண்டாள்.
“இல்ல நிலாம்மா. அவங்க.”
“இந்த நிலாம்மா முலாம்பழம்மா எல்லாம் வேண்டாம். எதுக்கு இந்த டிராமா?”
“அகல் நீ நினைக்கற மாதிரி இல்லை. நான் உங்கிட்ட சொல்றேன். நீ இளாகிட்ட சொல்ல வேண்டாம். பீளிஸ்.”
“எனக்கு தெரியாது. நான் பாட்டிகிட்ட சொல்லப் போறேன்.”
“ உனக்கு அருணைப் பத்தி தெரிஞ்சுக்கனுமா வேண்டாமா?” ஆதித்தின் குரல் உறுதியாக ஒலித்தது.
அருண் என்ற பெயரில் அமைதியாகி விட்டாள் அகல் நிலா. கண்களில் நீர் தளும்பி நின்றது.
“அண்ணா..” வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக் கொண்டது.
அவளின் முகத்தில் தெரிந்த வருத்ததில் மனோஷா அவளின் வேதனையை உணர்ந்து கொண்டாள். இதுவரை பொறுமையாக அமர்ந்திருந்தவள் எழுந்து அவள் தோளின் மீது ஆறுதலாகக் கை வைத்தாள்.
“ உனக்கு முன்னாடியே எனக்கு அண்ணன் அருண். நீ மிஸ் பன்னறதை விட அவனை அளவுக்கு அதிகமாக நான் மிஸ் பன்றேன். எனக்கு அவனைப் பத்தி தெரிஞ்சுக்கனும். அதுக்கு ஹெல்ஃப் பன்னத்தான் அவங்க வந்துருக்காங்க. அன்னிக்கு ஐஸ்கீரிம் பார்லரில் பார்த்ததுக்கு அப்புறம் தான் எனக்கு அந்த ஐடியா வந்துச்சு.”
“அழாதடா குட்டிம்மா.” மறுமுனையில் அங்கு ஆதித் ஆறுதல் கொண்டிருக்க இங்கே மனோ அவன் தங்கையின் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தாள்.
“சோ பீளீஸ்டா அவங்களை மாட்டி விட்றாத. எனக்கும் உண்மை தெரியுமானு தெரியலை. இருந்தாலும் ஒரு அட்டம்ட் தப்பில்லையே. நம்ம பாட்டிக்கும் இவங்களை ரொம்ப பிடிச்சு போயிருச்சு. ஆனால் இதுவரை அருண் ரூமை திறக்க அவளால் முடியலை. நாளைக்கு எப்படியாவது அந்த ரூமைத் திறக்க நீயும் ஹெல்ப் பன்னு.”
“புரியுதுனா. நான் பார்த்துக்கிறேன்.”
அழைப்பைத் துண்டித்தவளுக்கு மேலும் கண்களில் நீர் கசிந்தது.
“டோண்ட் வொர்ரி. பார்த்துக்கலாம் அகல் நிலா.”
அவளை அமர வைத்து நீரைப் பருகக் கொடுத்தாள் மனோ.
நீர்ப்படலத்துடன் தன் எதிரில் இருப்பவளைப் பார்த்தாள் அகல் நிலா.
“அக்கா.. சாரிக்கா.. என்ன ஏதுனு உண்மை தெரியாமல் பேசிட்டேன்.”
“இட்ஸ் ஓகே. யாரா இருந்தாலும் இப்படித்தான் அஸ்யூம் பன்னுவாங்க. பரவால்லை. பாரு மேக்கப் எல்லாம் கலஞ்சு போச்சு.”
“இருக்காதுக்கா. பூசாரி தீர்த்ததை அடிச்சுருவாங்கனு நான் வாட்டர் புரூஃப் மேக்கப் போட்டுட்டு வந்தேன்.”
“இல்லை ஸ்மட்ஜ் ஆகிருச்சு.”
உடனே தன் கைப்பேசியை எடுத்து முகத்தைப் பார்த்தாள்.
“இல்லையேக்கா. நல்லாதான் இருக்கு.” ஹரியும், மனோவும் லேசான சிரிப்புடன் நின்றிருந்தார்கள்.
மனோ தன்னைக் கேலி செய்ததை உணர்ந்தவளின் உதடுகள் லேசாகத் துடித்தது. அவளுக்கும் சிரிப்பு வரும் போலிருந்தது.
“அக்கா.” என சிணுங்கினாள்.
“நீ கேட்டியே என்னோட பியூட்டி சீக்ரெட். இப்ப சொல்லட்டுமா?”
“அக்கா. நிஜமாவா? என்ன காஸ்மெட்டிக்?”
“எனக்கு மட்டும் இல்லை. எல்லாருக்குமே பெஸ்ட் மேக்கப் எது தெரியுமா?”
“எதுக்கா?” அவள் குரலில் ஆர்வம் கூடி இருந்தது.
“ஸ்மைல்.”
அகல் நிலாவுக்கு சப்பென்று ஆகிவிட்டது.
“நிஜம்தான் அகல் நிலா. சிரிப்புதான் முகத்துக்கு உண்மையான அழகைக் கொடுக்கும்.”
ஹரியும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
“பிரண்ட்ஸ்.” எனக் கை கொடுத்தாள் மனோ.
“பிரண்ட்ஸ்” என நிலாவும் புன்னகையுடன் கை கொடுத்தாள்.
நிலாவை அமைதியாக்கிய மனோ அடுத்தநாளுக்காகக் காத்திருந்தாள். அடுத்த நாளில் நடக்கப் போகும் அனர்த்தங்களை அறியாமல் மனோவும் ஆர்வத்துடன் தயாராக இருந்தாள்.