அத்தியாயம்-65
அருண் ரூமை பல தடவை திறக்க டிரை பன்னியும் யாரவது ஒருத்தங்க தடுத்துட்டே இருந்தாங்க. அதனால் மாவிளக்கு நாளை சூஸ் பன்னோம். ஏனா அப்ப எல்லாரும் கோவிலில் இருப்பாங்க. ஆதித் அவங்களை இங்க வராமல் பார்த்துக்குவான். நாளைக்கு எப்படியாவது கண்ணம்மாள்கிட்ட இருந்து மாஸ்டர் கீயை சுட்ருவோம்.”
-மனோ.
மாஸ்டர் கீயை கண்ணம்மாளிடம் இருந்து வெற்றிகரமாக எடுத்திருந்தனர் பாரதியும், மனோவும். திருவிழாக் கூட்டத்தில் இருவரும் தங்கள் கை வரிசையைக் காட்டி இருந்தனர்.
வெற்றிக் களிப்புடன் கூட்டத்தில் இருந்து மூவரும் வெளியே வந்து ஆதித்தின் வீட்டை நோக்கி பாரதியின் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தனர். உடன் அகல் நிலாவும் இருந்தாள். எதாவது பிரச்சினை நேரிட்டால் அவளை வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என அவளை இறுதி நேரத்தில் திட்டத்தில் சேர்த்திருந்தனர்.
மற்ற இருவரும் டென்சனாக இருக்க மனோஷா அமைதியாக இருந்தாள்.
திட்டமிட்டபடியே வீட்டிற்குள் நுழைந்தனர். பாரதி மாடியில் காவலிருக்க மனோஷாவும், அகல் நிலாவும் அந்த அறையைத் திறக்க முயன்று கொண்டிருந்தனர். இருவரும் அறைக்குள் நுழைந்தனர். அந்த அறையும் இருக்கும் மற்ற அறைகளைப் போல் இருந்தது. எந்த வித்தியாசமும் இருப்பதாகத் தெரியவில்லை. அருணின் அறைக்குள் நுழைந்த அகல் நிலா சிறுமியாக இருக்கும் போது அங்கு இருந்தது நினைவுக்கு வந்தது. அங்கிருக்கும் சோபாவில் கணினியைப் பார்த்தபடி அமர்ந்திருக்கும் தனது சகோதரன் நினைவுக்கு வந்தான். எப்போது அறைக்கு வந்தாலும் ஒரு சாக்லேட்டை கையில் கொடுத்து சிரித்தப்படி அனுப்புவான்.
மனோஷா ,பீரோ என்ன எல்லாவற்றையும் திறந்து பார்த்தாள். எந்த தடயமும் இல்லை. கால் மணி நேரத் தேடுதலில் எதுவும் தேறவில்லை.
எரிச்சலுடன் திறந்திருந்த பீரோவின் கதவை ஒரு முறை அழுத்திக் குத்தினாள். சட்டென்று அதிலிருந்து ஒரு போட்டோ விழுந்தது. குனிந்து எடுத்தாள். போலாராய்ட் கேமராவில் எடுத்த சிறிய போட்டோ அது. அதை உடனே தன் கையில் இருந்த ஸ்லிங்க் பேக்கில் வைத்தாள்.
“அக்கா என்னாச்சுக்கா?”
“கர்சீஃப் விழுந்திருச்சு அகல். இங்க எதுவும் கிடைக்கல. வா போலாம்.”
அறையை விட்டு வெளியே வந்தவள் பூட்டி விட்டு கண்ணம்மா பாட்டி வீட்டில் வைத்து விட்டு மீண்டும் அங்கேயே வந்தனர். ஹாலில் அமர்ந்து அங்குள்ள கேரம் போர்டில் விளையாட ஆரம்பித்தனர். அப்போது புயலாக உள்ளே நுழைந்தனர் அனைவரும்.
வடிவழகி, சிவ நாரயணன், மகன்கள் மற்றும் மருமகள்களுடன் வந்தார். இவர்கள் அனைவரும் அவர்கள் வந்ததைப் பார்த்ததும் எழுந்து நின்றனர்.
“இங்க உட்கார்ந்து விளையாடிட்டு இருக்கா. பாருங்க.” கண்ணம்மாள் உச்சகட்ட வெறுப்புடன் கூறினார்.
“இந்தப் பொட்டக் கழுதை இப்படி எல்லாம் செய்யும்னு யார் நினைச்சா? அவளுக்கு நீங்க ரொம்ப இடம் கொடுக்கறீங்கனு சொன்னேன். நீங்க கேட்கலை. இப்ப பாருங்க. அப்பவே இந்த வீட்டுக்கு மருமகளாகிடுவேனு எங்கிட்ட அவ சவால் விட்டாள். அதே மாதிரி செஞ்சுட்டாள். பாரு எப்படி அப்பாவி மாதிரி முழிக்கறாள்..”
முதலில் புரியவில்லை என்றாலும் இப்போது புரிந்து விட்டதும் மனோஷாவுக்கு.
கண்ணம்மா பாட்டி இப்படி வெறுப்புடன் பேசுவது தன்னைத்தான் என்று.
அகல் நிலாவின் அன்னை அவளை உள்ளே செல்லும் படி கூறினார்.
“இவங்க சொல்றது எல்லாம் உண்மையா?”
வடிவழகிப் பாட்டி கோபத்தை அடக்கியபடி கேட்டார்.
“என்னம்மா சொல்றீங்க? எனக்குப் புரியலை.”
“ஒன்னும் புரியாத மாதிரி நடிக்காதடி.” கண்ணம்மாள் முந்திக் கொண்டார்.
“உங்களுக்கு என்ன பிரச்சினை இப்ப. அமைதியா இருங்க..” என அமைதியாகக் கூறினாள் மனோ.
“உனக்கும் ஆதித்துக்கும் எப்படி பழக்கம்?” வடிவழகி நேரடியாகக் கேட்டார்.
“ஆதித் சாரா? அவர் இந்த வீட்டு முதலாளி.”
“பொய்.”
தன்னைப் பற்றிய உண்மை தெரிந்து விட்டதோ என மனோ ஒரு கணம் திகைத்தாள்.
“என்னம்மா சொல்றீங்க?”
மனோ இறுதிவரை நடிக்க முயன்றாள். இது என்ன என்று தன் கைப்பேசியில் இருந்த போட்டோவைக் காட்டினார் அவர்.
அதைப் பார்த்த மனோ அதிர்ந்தாள். மாங்காய் தோப்பு, திருவிழாக் கடைக்குப் பின்னால், இரவு நேரம் தோட்டத்தில் சந்தித்தது என அனைத்தும் டி.எஸ்.எல்.ஆர் புகைப்படங்களாக இருந்தது.
விழிகளை விரித்தாள் மனோ.
“ஓ காட்...”
அதற்குள் கண்ணம்மாள் அவளைக் கன்னத்தில் அறைந்திருந்தார். அவர் அறைந்து முடித்த போது சரியாக ஆதித்துடன் உள்ளே வந்தார் ஒரு பெண்மணி.
“மனோஷா. இங்க என்ன செய்யற? வர மாட்டேனு சொல்லிட்டு வந்துட்ட போல.”
ஆதித் டிராவல் பேக்குடன் நிற்க, அவன் அருகில் இருந்த பெண்மணியைப் பார்த்த மனோஷா அதிர்ந்தாள்.
அவளின் அழைப்பில் அங்கிருந்த அனைவருமே அதிர்ந்தனர்.
வடிவழகி பாட்டி இரண்டு ஊர் தள்ளி இருக்கும் ஒருவரை அழைத்து வர வேண்டும் என புகைப்படத்தை மட்டும் காட்டி அவனை ஒரு மணி நேரத்திற்கு முன்பு அனுப்பி வைத்திருந்தார். ஆதித்தும் இயல்பாக பேசியபடி அவரை அழைத்து வந்தார்.
“மனோஷா விஜயராகவன் இங்க என்ன செஞ்சிட்டு இருக்க?”
அவர் குரலில் அங்கிருந்த அனைவரும் அதிர்ந்தனர். மனோஷாவின் முகத்தில் கூட இப்போது அப்பட்டமாக பதட்டம் தெரிந்தது.
மனோஷா அடுத்து கூறிய வார்த்தையில் அனைவரும் அதிர்ந்தனர்.
அத்தியாயம்-66
ஒரே நாளில் இத்தனை அதிர்ச்சியை நான் எதிர்பார்க்கலை. வாட் ஏ டிவிஸ்ட் அண்ட் டர்ன் ஆஃப் பேட்? இதெல்லாம் நான் ஆதித்தை மார்க்கெட்டில் பர்ஸ்ட் டைம் பார்த்தவுடனே ஏதோ ஒரு போர்ஸ். அதனால் ஆரம்பிச்ச காஸ் அண்ட் எபக்ட். என்னை இப்படி ஒரு கண்டிசனில் நிறுத்தி இருக்கு.
-மனோ.
“மம்மி இங்க என்ன செய்யற?”
கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அவள் கேட்ட கேள்வியில் அங்கிருந்த அனைவரும் அதிர்ந்தனர் ஆதித் உட்பட.
வடிவழகிக்கு நொடியில் விஷயம் புரிந்து போனது.
“ஒன்னுமில்லை மகேஸ்வரிம்மா.. வா! வா! உட்காரலாம். மருமகள் உனக்கு முன்னாடியே இங்க வந்துட்டாங்க.”
யாரிடமும் எதுவும் கூற வேண்டாம் என கண்களைக் காட்டினார் வடிவழகி. அவர் குடும்பத்தினர் சமிஞ்கையை புரிந்து கொண்ட அனைவரும் நகர ஆரம்பித்தனர்.
தன் மகளின் அருகில் வந்தவர், “என்ன சீப்பான டிரஸ் இது? நீ இப்படி எல்லாம் டிரஸ் போட மாட்டியே? டேன் வேற ஆகிருக்க? வெளியில் வந்தால் நம்ம ஸ்டேட்டஸ்க்கு ஏத்த மாதிரி டிரஸ் செய்ய மாட்டியா?”
மனோஷாவின் அன்னை மகேஸ்வரி பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சார்ந்தவர். விஜய ராகவனை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். ஒரே இனம் என்றாலும் அந்தஸ்து பேதம் இருந்தது. ஆனால் விஜய ராகவனை அவர் உயிரிலும் மேலாக நேசிக்க கரம் பிடித்து விட்டார். அவர் மத்திய அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருந்தார். தைரியமான
பெண்மணி. வீட்டை எதிர்த்து திருமணம் செய்தார். முதலில் பேச மறுத்த அவரின் குடும்பத்தினர் தந்தையின் உடல் நிலை குன்ற தொழில்களை பெங்களூர் சென்று தொழில்களைக் கவனிக்க ஆரம்பித்தார். தன் வீட்டினருடன் பேசாத வரை கணவர் வேலை மாற்றல் வந்தால் அவரும் குடும்பத்தினருடன் செல்வார். அப்படி கோவை வந்த போதுதான் இவர்கள் வாடகைக்கு இருந்த பங்களாவின் அருகில் ஆதித்தின் பழைய பங்களா இருந்தது.
தங்கள் இனத்தைச் சார்ந்தவர்கள் வடிவழகி குடும்பம் அவர்களிடம் நன்றாகப் பழகியது.
மித்ரன் ஆதித்தின் குடும்பத்தைச் சந்தித்ததைப் பற்றிக் கூற தன்னை தந்தை, தாய் அன்பற்று கிடந்த நாட்களில் தாங்கிய குடும்பத்திடம் பேச ஆசை வந்தது.
மித்ரனிடம் எண் வாங்கி பேசினார். இது மனோ வீட்டை விட்டு வெளியேறி கோயம்புத்தூருக்கு வந்து சில நாட்களில் நடந்திருந்தது.
தன் மகளுக்கு வரன் தேடிக் கொண்டிருப்பதாகக் கூற வடிவழகி ஆதித்திற்கு மனோஷாவை முடிவு செய்திருந்தார். அகல் நிலாவும், இளமதியும் சிறிய வயதினர். அவர்களுக்கு முடித்து ஆதித்திற்கு திருமணம் செய்வது என்றால் முப்பதை தாண்டி விடும் அவனுக்கு. பெண் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்க ஆதித்திற்கு திருமணம் செய்ய முடிவெடுக்க எந்தக் காதலும் இல்லாத ஆதித்தும் குடும்பத்தினர் ஏற்பாடு செய்யும் திருமணத்திற்கு சம்மதித்திருந்தான்.
தன் திருமணத்திற்குள் அருணை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என ஆவல். மனோஷாவை எதேச்சையாக சந்தித்தான்.
அடுத்தடுத்த சந்திப்புகள் அவர்களை இப்படி இழுத்து வந்திருக்க இப்போது புதிதாக ஒரு சிக்கல் முளைத்திருந்தது.
நடந்த பிரச்சினையில் மகேஸ்வரியை மறந்திருந்தனர். ஊரின் வாட்ஸப் குருப்பில் சிவநாராயணன் முதல் மரியாதையை ஏற்று ஊர்வலம் போகும் போது இந்தப் புகைப்படங்கள் பரவி இருக்க ஊரே ஆதித்தையும், இவளையும் பற்றி பேச ஆரம்பித்தது. ஊரறிய நடந்ததால் வேறு வழியின்றி வடிவழகியும், சிவ நாராணயனும் மனோகரியை ஆதித்திற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தனர்.
இருந்தாலும் தன் நம்பிக்கையை உடைத்த கோபத்துடன் வந்திருக்க கண்ணம்மாள் அவசரப்பட்டு கை நீட்டி இருக்க, ஆதித் மகேஸ்வரியுடன் வந்து நின்றிருக்க குடும்பத்தினர் அனைவரும் என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் நின்றிருந்தனர்.
ஆனால் அடுத்து மனோகரியைப் பார்த்து அவர் அழைத்ததும், மனோகரி மம்மி என அழைத்ததும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஏதோ விஷயம் இடையில் இருக்கிறது என புரிந்து கொண்டனர். ஒரு வேளை வருங்கால மாப்பிள்ளையை முன்னதாகப் பார்க்க மனோகரியாக இப்படி வந்திருக்கலாம் என்று எண்ணினாலும் அதுவும் இடித்தது.
“டிரஸ்ஸில் ஜூஸ் கொட்டிருச்சு. அதான் இதை சேஞ்ச் பன்னிட்டேன்.
“சரி. சரி வா. கரக்டா உன் அண்ணன் சொன்ன மாதிரி இங்க வந்துட்ட. நான் கூட என்னை ஏமாத்திருவேனு நினைச்சேன். இங்கேயாவது நல்லபடியா நடந்துக்கோ. இவங்க நமக்கு ரொம்ப வேண்டியவங்க. சரியா? ஆதித் கூடதான் உனக்கு வெட்டிங்க்.” மெல்லிய குரலில் தன் மகளின் மீது கை போட்டு பேசிக் கொண்டே சென்று அமர்ந்தார்.
கண்ணம்மாள் நடந்த விஷயத்தில் ஆடிப் போயிருந்தார். இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை.
“கார் பிரேக் டவுன் ஆனதைத் தவிர வேற எந்தப் பிரச்சினையும் இல்லையே மகேஸ்வரி?” வடிவழகி கேட்டார்.
“இல்லைம்மா. தம்பி பொறுப்பா கூட்டிட்டு வந்துட்டார்.”
“உங்களுக்கு தெரியாதது இல்லை. நம்ம வீட்டில் ஓடி விளையாண்ட பொண்ணுதான். அதான் முதலில் சும்மா இங்க சந்திக்கலாம்னு கூட்டிட்டு வந்தேன்.”
ஆதித்தின் அன்னை, “ஆதி பொண்ணு கூட எதாவது பேசனும்னா பேசிக்கோ.” என்றார்.
அவனோ இன்னும் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் நின்று கொண்டிருந்தான்.
“எனக்கு அதுக்கு முன்னாடி பாட்டி கூட கொஞ்சம் பேசனும்மா..” என எல்லாருக்கும் சத்தமாகக் கேட்கும்படி உரைத்தாள் மனோஷா.
அங்கிருந்த அனைவரும் இவள் என்ன இப்படிக் கூறுகிறாள் என பார்த்தனர்.
“மனோ அதெல்லாம் அப்புறம் பேசலாம்.” என்றார் மகேஸ்வரி.
“இருக்கட்டும் மகேஸ்வரி. பேசலாமே.. வாம்மா..” என வடிவழகி எழுந்தார்.
இருவரும் மாடியில் உள்ள ஒரு அறைக்குச் சென்றனர்.
கதவை மூடியபடி மனோஷா அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.
“பாட்டி உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் நான் வேற ஏதோ காரணத்துக்காக இங்க வந்திருக்கேனு.”
“எப்படி இருந்தாலும் நீதான் இந்த வீட்டு மருமகள். அது மாறப் போறது இல்லை. மகேஷூக்கு நான் வாக்குக் கொடுத்துட்டேன்.”
“நீங்க வாக்குக் கொடுக்கலாம் பாட்டி. அதெல்லாம் இருக்கட்டும். ஆனால் அதை நடத்தி வைக்க நான் சம்மதிக்கனும்.” அமைதியான குரலில் சாவாலை முன் வைத்தாள் மனோஷா.
“நான் உண்மையை சொன்னால் என்ன செய்வமா?”
“பாட்டி என்னோட பிரபசனை காரணம் காட்டுவேன். நான் கேட்க வேண்டிய கேள்வியை அவங்களே கேட்பாங்க.”
“இப்ப என்ன வேணும்மா உனக்கு?” அவரது குடும்பத்தின் கௌரவம் இப்போது இவளின் கையில் உள்ளது. அதனால் பாட்டி பொறுமையாக் கேட்டார்.
“ஒன்னுமில்லை பாட்டி. அருண் எங்க இருக்கான்? அவனுக்கு என்ன நடந்துச்சு? இதை மட்டும் சொன்னீங்கனா நான் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன். அப்புறம் இங்க நடந்த எதுவும் லீக் ஆகாது. ஏன் பாட்டி? அப்படி பார்க்கிறீங்க? நான் இங்க வந்தது அருணுக்காக மட்டும்தான்.”
பாட்டி முகத்தில் வியர்வை அரும்பத் தொடங்கியது.
“பாட்டி இப்ப இந்தக் கண்ணம்மாள் என்னை அடிச்சது மட்டும் தெரிஞ்சுதுதான என்னோட மம்மி என்ன என்ன செய்வாங்கனு தெரியுமா?”
வழியின்றி பாட்டி உண்மையைக் கூறத் துவங்கினார். நடந்ததைக் கேட்ட அவள் விழிகளில் வெறுப்பு மண்டியது.
“ச்சே.. இதை உங்ககிட்ட இருந்து நான் எதிர்பார்க்கலை.”
வடிவு பாட்டியின் கண்களில் குற்ற உணர்வு தெரிந்தது.
“சரி அவன் என்ன ஆனானு விசாரிச்சீங்களா?”
“ம்ம்ம்.”
அவர் முகத்தில் இருக்கும் குற்ற உணர்வைப் பார்க்கும் போது அவர் நிஜமாக வருத்தப்படுவது போலிருந்தது.
“உங்களை நான் ரொம்ப உயர்வான இடத்தில் வச்சுருந்தேன். ஆனால் இப்ப அப்படி இல்லை. இதை யார்கிட்டேயும் சொல்ல வேண்டாம். நான் பார்த்துக்கிறேன். ஆனால் ஒரு நாள் நீங்க எல்லாருக்கும் பதில் சொல்லியே ஆகனும். இப்ப நான் போய் என்னோட அம்மாகிட்ட இந்தக் கல்யாணத்தில் சம்மதம்னு சொல்வேன். ஆனால் இந்தக் கல்யாணம் நடக்காது. அதுக்கு நீங்க சந்தோஷப்பட்டுக்கனும்.”
“மனோ ஆதித் ரொம்ப நல்லவன். எங்களுக்காக அவனை இழந்திராத..”
“இதே நான் மகேஷ் பொண்ணா இல்லாமல் இருந்து, இப்படி நாங்க ஒன்னா இருந்த விஷயம் ஊருக்குத் தெரியாமல் இருந்திருந்தால் நீங்க இந்தக் கல்யாணத்தை செஞ்சு வச்சுருப்பீங்களா?” என்றாள். முகத்தில் கோபம் இல்லை. ஆனால் வார்த்தைகளில் அனல் அடித்தது.
தனக்கு முன் பம்மி பம்மிப் பேசிய பெண் அருணைப் பற்றி கண்டறிய வந்திருக்கிறாள் என்றும் அதுவும் மகேஸ்வரியின் பெண் என்றும் அவருக்குத் தெரியாமல் போய்விட்டது. அவளை முதல் தடவை பார்த்த போதே அவளை எங்கோ பார்த்தது போல் அவருக்கும் தோன்றி இருந்தது. ஆனால் அதைப் புறம் தள்ளி இருந்தவருக்கு இன்று உண்மை புரிந்து விட்டது.
“முகத்தை துடைச்சுட்டு எதுவும் நடக்காதது போல் வாங்க.”
கூறிவிட்டு வெளியேறிய மனோஷா முகத்தில் புன்னகையை ஒட்ட வைத்துக் கொண்டாள். எந்த நேரத்திலும் அவளால் புன்னகைக்க முடியும் என்பதால் தப்பித்தாள். ஆனால் அவளின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருந்த ஆதித்திற்கு அவளின் கண்களை எட்டாத புன்னகையைக் கண்டு கொண்டான்.
“பேசிட்டியா? சொல்லு இவ்வளவு நேரம் என்ன பேசுன?”
“அதுவா! ரகசியம் மம்மி. எனக்கு இந்தக் கல்யாணத்தில் சம்மதம்.” என்றவுடன் மகேஸ்வரியின் முகம் புன்னகையால் மலர்ந்தது.
அவளை அணைத்துக் கொண்டார் மகேஸ்வரி.
“உனக்கு ஆதித்தை எப்படியும் பிடிக்கும்னு எதிர்பார்த்தேன். உன்னை சின்ன வயசிலேயே நல்லா பார்த்துப்பான். இனிமேலும் அப்படித்தான். எனக்கு இவங்க காண்டாக்ட் முன்னாடியே கிடைச்சிருந்தால் நீ பெங்களூரை விட்டு வர வேண்டியதே இல்லை. சரி விடு.”
தன் அன்னையை புன்னகையுடன் அணைத்தவளுக்கு மட்டுமே தான் இனிமேல் தான் செய்யப் போவது தெரியும். மனோஷாவின் குணங்களில் ஒன்று. அவள் அவ்வளவு எளிதில் எதையும் மன்னிக்க மாட்டாள். அதுவும் தவறான வார்த்தைகளை என்றுமே மன்னிப்பது இல்லை.
இப்போது ஆதித் மனோஷாவிடம் பேச வேண்டும் என அவர்களின் அணைப்பில் இடையிட்டான்.
“போய் மாப்பிள்ளை கூட பேசிட்டு வா. போ.” என மகேஸ்வரியும் முக மகிழ்ச்சியுடன் அவனுடன் அனுப்பி வைக்க அவளை தன் அறைக்கே அழைத்துச் சென்றான்.
கதவைத் தாழிட்டவன் தன் முன் கை கட்டியபடி நிற்பவளைப் பார்த்தான்.
“மனோஷா? உங்க அம்மா எப்படி?”
“எனக்கும் தெரியாது. நான் இங்க வந்ததுக்கு அப்பறம் ஒரு பையனை எனக்குப் பார்த்திருக்கேனு சொன்னாங்க. நான் மித்துவுக்காக அவனைப் பார்க்க சம்மதிச்சேன். ஆனால் அவங்க நம்பரை பிளாக் பன்னிட்டேன். மித்துவுக்கு அனுப்பி எனக்கு அட்ரஸ் அனுப்பிருக்கலாம். ஆனால் நான் மித்துவையும் பிளாக் பன்னிட்டேன். ஆனாலும் நீயா இருப்பனு நான் நினைக்கலை.”
“ஓகே. அப்புறம் எதுக்கு சம்மதம் சொன்ன?”
“நம்ம டீல் ஐஞ்சு நிமிசத்துக்கு முன்னாடி முடிஞ்சுருச்சு ஆதித். இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஆதித்.”
அவள் கூறுவது புரியாமல் ஆதித் அவளைப் பார்த்தான்.
ஆனால் அவள் கிளம்புகிறேன் என்று கூறியதும் அது அவன் மனதை அழுத்த ஆரம்பித்தது.
“எப்படி?”
“உன்னோட அருண் உன்னைத் தேடி கூடிய சீக்கிரம் வருவான். வருத்தப்படாத. என்னோட டீலில் இது இல்லைனாலும் அவனை உங்ககிட்ட சேர்க்கறது என்னோட பொறுப்பு.”
“நிஜமாவா?”
“ம்ம்ம்.” என அவனுக்கு உறுதி அளித்தாள்.
“சரி இப்ப என்ன செய்யறது?”
“நீ வீட்ல எல்லார்கிட்டேயும் என்னைப் பிடிக்கலைனு சொல்லிடு. இப்ப சொல்ல முடியலைனாலும் கல்யாண மேடை வரைக்கும் வந்தாவது இந்தக் கல்யாணத்தை நிறுத்திடு.”
“என்ன சொல்ற நீ?” ஆதித்தின் முகத்தில் அதிர்ச்சி தென்பட்டது.
“எனக்கு ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க விருப்பமில்லை.”
“மனோஷா இது விளையாடற விஷயம் இல்லை. மேரேஜ்.”
“அதனால்தான் சொல்றேன். என்னோட அம்மாவுக்கும், உன்னோட பேம்லிக்கும் கல்யாணம் ஸ்டேட்டஸ் சிம்பல். அவ்வளவுதான். வேற ஒன்னும் இல்லை. முடிஞ்சால் மணமேடையில் நீ எனக்கு தாலி கட்டாமல் எழுந்திரு. அப்ப கூட என் ஆத்திரம் அடங்காது.”
மனோஷாவின் குரலில் அப்படி ஒரு வெறுப்பு மண்டிக் கிடந்தது.
“லூசுத்தனமா பேசாத.”
“நான் சீரியஸா பேசறேன் ஆதித். விளையாடலை. இந்த வெட்டிங்கை நிறுத்து. நம்ம காண்டிராக்ட் ஓவர்.” என வெளியில் செல்ல முயன்றவளைத் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தினான்.
ஆனால் அவனை மீறி அவள் செல்ல முயல அவளைக் கதவின் தாழில் கை வைக்கும் முன்னர் தடுத்து தன்னைப் பார்க்கும்படி திருப்பினான். அவள் கையை அவன் இன்னும் விடவில்லை.
“ஆதித்.” அவள் முகத்தில் கோபம் வெளிப்பட்டது.
“மனோஷா நீ சொல்ற அத்தனையும் அப்படியே என்னால் செய்ய முடியாது.”
“ஏன் ஆதித் குடும்ப கௌரவம் போயிருமா?”
“பின்ன போகாதா?”
“ஆல்ரெடி நீ உன் வீட்டில் வேலை செய்யற பொண்ணு கூட நெருக்கமாக இருக்கறதா நியூஸ் இந்த ஊர் முழுக்க பரவிருச்சு தெரியுமா? அதனால் உனக்கும் எனக்கும் பாட்டி மேரேஜ் செஞ்சு வைக்க முடிவு செஞ்சிருந்தாங்க.”
“என்ன சொல்ற மனோஷா?”
“ம்ம்ம். உன் பாட்டிகிட்ட கேளு எல்லாத்தையும் விளக்கமா சொல்லுவாங்க.”
“வாட் எவர் லெட்ஸ் கெட் மேரீட். என்னோட ஃபேம்லியை நான் ஏமாத்த முடியாது.”
“செய்யனும். இப்ப இந்த இடத்தில் அருண் இருக்கற இடத்தை தெரிஞ்ச ஒரே ஆளு நான் மட்டும்தான்.” கூறிவிட்டு அவளை மார்பில் கை வைத்து தள்ளிவிட்டு கதவைத் திறந்து சென்றாள் மனோஷா.
அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தான் ஆதித்.