• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-69

Meenakshi Rajendran

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 22, 2024
153
51
28
Tiruppur
அத்தியாயம்-69


ஆனால் நம்ம சொசைட்டியில் கல்யாணம் செஞ்சு வச்சால் போதும். அப்புறம் இந்த பொண்ணுங்களால் எதுவும் செய்ய முடியாதுங்கற எண்ணம். அது மட்டும் உண்மையாக இருந்தால் ஏன் இவ்வளவு கிரைம்ஸ் நடக்குது? இந்த சாதி, மதம், கல்யாணம் இது அத்தனையும் ஏதோ ஒரு வடிவில் பெண்களை அடிமைப்படுத்த யூஸ் பன்னிக்கிறாங்க. அப்படிங்கறதுதான் உண்மை.
-மனோ.


அன்று இரவே மித்ரனுடன் கோவை சென்றிருந்தாள் மனோஷா. மித்ரன் முதலில் மறுத்தாலும் அவன் தங்கையின் பிடிவாதம் அவன் அறிந்ததே. அவன் வழியில் நடந்த விஷயத்தைக் கேட்க அவளிடம் இருந்து ஒரு சொல்லைக் கூட வாங்கி விட முடியவில்லை. அவனைச் சமாதானப்படுத்த தன் திருமணம் நடந்த விதத்தை மட்டும் கூறி இருந்தாள்.


மித்ரனும், விஜய ராகவனும் ஆதித்திற்கு ஜாதகத்தில் குருபலன் முடிய சில நாட்கள் மட்டும் இருப்பதாகவும் அதற்குள் திருமணத்தை நடத்திவிட வேண்டும் என்று அழைக்கவும் அவசரமாக கிளம்பி வந்ததாகவும் கூறி இருந்தார். அவள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறி இருந்தார்.


அவனுக்குமே இது அதிர்ச்சிதான். தன் அன்னை இவ்வளவு தூரம் இறங்கிச் செல்வார் என்று அவன் நினைக்கவில்லை.

‘நீ நிஜமாகவே சம்மதிச்சியா?”

“ம்ம்ம். ஒத்துகிட்டேன். ஆனால் ஆதித்கிட்ட இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லியிருந்தேன். ஆனால் மார்னிங்க் இப்படி?”

“ஆதித்தா? அவன் அப்படி எல்லாம் கிடையாதே?”

“அது எனக்குத் தெரியாது. அவன் வீட்டிலும் பிளாக்மெயில் கூட செஞ்சுருக்கலாம். எனிவே இது எனக்கு விருப்பமில்லாமல் கண்ணை மூடி சாமி கும்பிட்டு இருக்கும் போது நடந்த கல்யாணம்.”
அவள் கழுத்தில் இன்னும் தொங்கிக் கொண்டிருந்த மஞ்சள் கயிற்றால் சுற்றப்பட்ட தாலிக் கொடியைப் பார்த்தான். அதற்குப் பிறகு மனோஷா எதுவும் பேசவில்லை. வீட்டுக்கு வந்தவுடன் பிரிட்ஜில் இருந்து பழம் ஒன்றை எடுத்துக் கொண்டு தன் அறைக்குள் முடங்கி விட்டாள். தன் அன்னை திட்டம் தீட்டி இந்த திருமணத்தை நடத்தி விட்டார் என்பது தெளிவாகப் புரிந்தது.
திணிக்கப்பட்ட எதையும் அவனுடைய தங்கை ஏற்றுக் கொள்ளமாட்டாள். அது அவளுக்கு பிடித்திருந்தால் கூட அவள் சில சமயம் அதை ஒதுக்கிவிடுவாள்.


அவளின் அனுமதி இல்லாமல் திருமணத்தை நடத்தி இருக்கிறார்கள். இனி என்ன என்ன பிரச்சினை வரப் போகுதோ தெரியவில்லை. மற்றவர்களின் உரிமையை மதிப்பவள் அதே சமயம் தன் உரிமையும் விட்டுக் கொடுக்காதவள்.


“சரி இப்ப ஆதித் லைஃப் என்ன செய்யறது?”

“டைவர்ஸ்.” யோசிக்காமல் பதில் வந்தது அவளிடம் இருந்து.

“மனோ அதெல்லாம் பெரிய விஷயம்.”

“இருக்கட்டும். பொய்யா நடிக்கறதுக்கு அது பெட்டர். போலிக் கவுரத்துக்கு வாழறதுக்கு வாழாமயே இருக்கலாம்.”


“ஆதித் உன்னைப் போக விட்டானா?”

“ம்கூம்.. நோ சொன்னான். வேணால் என்னோட வீட்டுக்கு நீ வானு கிளம்பி வந்துட்டேன்.”

‘ரைட்.. இனி இது இரண்டும் அடிச்சுக்க நடுவுல மாட்டிட்டு முழிக்கப் போறது நான்தான்.’ மனோவின் மீது எந்தத் தவறும் இல்லை. ஆதித்தை சந்தித்து பேச முடிவெடுத்தான்.

“ஒருவேளை வந்துட்டா மனோ?”

“ஹா..ஹா.. ஹே நடக்குறத பேசு.. அதுக்கு வாய்ப்பே கிடையாது. ஒரு நார்மல் பேம்லியில் வைஃப் சொல்றதக் கேட்டு நடந்தாவே அதை நம்ம சொசைட்டி தப்பா பார்க்கும். அதில் இப்படிப்பட்ட குடும்பத்தில் இருக்கற ஆதித் வைஃப் இருக்கற இடத்துக்கு வரதா? வாய்ப்பே கிடையாது.” இப்படி பதில் கூறி இருந்தாள் மனோஷா.
அடுத்த நாள் காலை. மித்ரனின் வீட்டு காலிங்க் ஓயாமல் அடித்தது. அறையில் இருந்து கண்களைத் தேய்த்தப்படியே கதவைத் திறந்தான் மித்ரன். அங்கு பெரிய டிராலியுடன் நின்று கொண்டிருந்தான் ஆதித். கண்களில் கூலர் வேறு. கெத்தாக நின்று கொண்டிருந்தான்.


“எழில் என்ன இது?”

“ஆரத்தி எல்லாம் எடுக்க மாட்டியா? அபிஷியலா உன்னோட மச்சான் போஸ்டுக்கு அப்கிரேட் ஆகி இருக்கேன்.”

“வாடா.. எழுந்ததும் என்னோட தங்கச்சி எடுப்பா.. தலையில் தக்காளி சட்னி வரதுக்குள்ள உள்ள வீட்டுக்குள்ள வா.”
ஹாலில் இருவரும் அமர்ந்தனர்.

“என்ன ஆதித் நடக்குது இங்க? எனக்கு இங்க நடக்கறது பாதி புரியலை. மனோஷாவும் எதோ மறைக்கிறாள்னு தோணுது.”

“அப்புறம் சொல்றேன். இப்ப மனோஷா எப்படியாவது நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வானு என்னை வாழ்த்தி எங்க வீட்டில் வழி அனுப்பி வச்சுருக்காங்க.”

“என்ன?”

“ம்ம்ம்.. பாட்டிகிட்ட மனோஷா கேட்டதை சொன்னேன். சரி போயிட்டுவானு அனுப்பி வச்சுட்டாங்க. வீட்டில் யாருமே தடுக்கலை. நானும் பெட்டியைக் கட்டிட்டு என் பொண்டாட்டி வீட்டுக்கு வந்துட்டேன்.”

“என்னடா ஆதித் சொல்ற?”

“அட நிஜமாத்தான் சொல்றேன்.”

“ஆதி வழக்கமா நீ இப்படி எல்லாம் பேச மாட்டியே? எனக்கு நீ திடீர்னு சேஞ்ச் ஆன மாதிரி தெரியுது.”

“ஆமா.. சேஞ்ச் ஆகிட்டேன். கல்யாணம் செஞ்சுக்கறது உன்னோட தங்கச்சியாச்சே.. வாய் பேசலைனா பொழைக்க முடியாது சாமி.”
அவனை மேலும் கீழும் பார்த்த மித்ரன் அவன் தோள் பற்றி அணைத்துக் கொண்டான்.


“நீ எனக்கு மச்சானா ஆனதில் சந்தோஷப் படறதா.. துக்கப் படறதானு தெரிலை. என்னோட தங்கச்சி ரொம்ப நல்லவ. அதே சமயம் ராட்சசியும் கூட. நீ அவளைப் பார்த்துக்க வேண்டிய பொறுப்பை உங்கிட்ட ஒப்படைக்கிறேன். ஆனால் அவ எதாவது வருத்தப்பட்டால் நர்சரியில் பெர்டிலைசருக்கு வாங்கற செலவு மிச்சம்.”
இறுதியில் மித்ரன் நகைச்சுவையாகக் கூறிய மிரட்டலைக் கேட்டு சிரித்தான்.


“நீ என்ன தெரியுமா செய்யற மச்சான். இதே டயலாக்கை போய் என் பொண்டாட்டிகிட்ட என்னை கண் கலங்காமல் பார்த்துக்க சொல்லு. அப்புறம் ஒரு காஃபி போட்டுக் கொடு. நான் ரூமில் திங்க்ஸ் வச்சுட்டு வரேன்.”
மித்ரன் தலை அசைக்க தன் டிராலியை தூக்கியபடி படிகளில் ஏறினான் ஆதித் பொன்னெழிலன்.
கதவில் கை வைக்க திறந்து கொண்டது. நடுநாயகமாக இரவு விளக்கின் ஒளியில் சயனம் கொண்டிருந்தாள் மனோஷா.


பெட்சீட் மூடியிருந்ததில் தலை மட்டுமே தெரிந்தது. மூடியிருந்த கண்ணாடி ஜன்னல்கள் வழியே லேசாக சூரிய வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. டிராலியை கட்டிலுக்கு அருகில் வைத்தவன் அறையை சுற்றும் முற்றும் பார்த்தான். அறையில் ஒரு இயற்கை காட்சி பெயிண்டிங்க், புத்தர் பெயிண்ட்டிங்க் இருந்தது. மற்றபடி மற்றொரு பக்கத்தில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. வார்ட் ரோபில் உடைகள் இருக்கும். அதை அவன் திறந்து பார்க்கவில்லை.
அமைதியாக அறையை விட்டு வெளியேறியவன் ஹாலுக்கு வந்தான். மித்ரன் காபி போட்டு வைத்திருக்க அதை பாதி அருந்தி இருப்பான். மனோஷா அறையில் இருந்து ஆ வென்ற அலறல் கேட்டது.
உடனே ஆண்கள் இருவரும் பதறி அடித்தப்படி அவளுடைய அறைக்குச் சென்றனர்.
தரையில் வீழ்ந்து கிடந்தாள் மனோ. காலைப் பிடித்துக் கொண்டிருந்தாள். ஆதித்தின் டிராலி விழுந்து கிடந்தது.

“என்னாச்சு மனோ?” என்றபடி இருவரும் அருகில் வந்தனர்.


“என்னோட டிராலி.. ஆ…இல்லை இது.. ஆ..வேற டிராலி..” கட்டை விரலில் நன்றாக டிராலியில் அடித்துக் கொண்டதால் விரல்களைப் பிடித்துக் கொண்டிருந்தாள் மனோஷா.

“ஆதித்.” மனோ விழித்தாள்.
மித்ரனுக்கு நடந்தது புரிந்து விட்டது.


“ஏண்டா.. வந்த அரை மணி நேரத்தில் வொய்ஃப் காலை பிடிக்க வச்சுட்ட.. சூப்பர்.” என்றான்.

“டேய் சும்மா இருடா. தூக்கி விடு அவங்களை.”
அவனை ஒரு மாதிரி பார்த்தவாறு தூக்கி விட்டான் மித்ரன்.
மெத்தையில் காலைத் தேய்த்தபடி அமர்ந்தாள் மனோ.


“ஆதித் நீ இங்க என்ன செய்யற?”

“ஸ்ரீ தேவி இருக்கற இடம்தான் ராமருக்கு அயோத்தி. அதான் கிளம்பி வந்துட்டேன். நீ கேட்ட மாதிரி.”
தனது கண்களை விரித்து அதிர்ச்சியாகப் பார்த்தாள். உண்மையாக அவளால் அதை நம்ப முடியவில்லை.


“மச்சான் கெட் அவுட். நாங்க தனியா பேசனும்.”
இரு புருவங்களையும் உயர்த்தியபடி, “மச்சான் தயவு மலை ஏறதுக்கு வேணும். மறந்துராத..” என்றான்.

“ஒன்னும் பிரச்சினை இல்லை. எனக்கே டிரைவ் பன்ன தெரியும். நானே ஏறிக்கிறேன். இப்ப கிளம்பு.” என்றான் ஆதித். முகத்தை போலியான சோகத்துடன் இருப்பதாகக் காட்டிக் கொண்டு நகர்ந்தான் மித்ரன்.


‘என்னோட சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே..’ என மனம் பாட்டுப்பாட இந்த சோகக்கதைக்கு ஸ்கெட்ச் போட்டதே தன் தாய்க்குலம் என்று உணர்ந்தவன் அமைதியாக வெளியேறினான்.


“இங்க என்ன செய்யற ஆதித்?”

“வொஃய்ப் இருக்கற இடத்துக்கு வந்துட்டேன் சிம்பில்.” கூறிவிட்டு தோளைக் குலுக்கிக் கொண்டாள்.

“ஆதித் விளையாடறயா?”

“விளையாடறது நான் இல்லை. நீயும், நானும் லீகலி மேரீட். அதான் வந்துட்டேன். உன்னை மாதிரி மேரேஜை நான் லைட்டா எடுத்துக்கற கேட்டகரி இல்லைமா.”
அவன் கூறியதில் முறைத்தாள் மனோ.


“நானும் மேரேஜை லைட்டா எடுத்துக்கற ஆள் இல்லை. ஆனால் பொய்யா என்னால் வாழ முடியாது.”

“அப்ப நிஜமா வாழலாம்.” ஆதித் கூறிவிட்டான். அவன் கூறியதைக் கேட்ட மனோஷா கட்டிலில் இருந்து எழுந்தாள். அவனை விட்டு விலகி நின்றான் ஆதித்.


“நோ டச்சிங்க் ரூல். மறந்துடாத. நீ என்னைத் தப்பித் தவறி கூட டச் பன்னிட்டா.. அப்புறம் முன்னாடி சொன்னதுதான் நடக்கும்.”


“யூ…” அருகில் கிடந்த தலையணையை எடுத்து வீசினாள் மனோ. அதை அழகாகக் கேட்ச் பிடித்த ஆதித் அமைதியாக கையில் வைத்துக் கொண்டான்.

“கெட் அவுட்.”

“இப்பப் போறேன். ஆனால் திரும்ப வருவேன். ஆனால் என்னை நீ டச் பன்னக் கூடாது. அப்படி செஞ்சா நீ…” கூறவந்தததை அப்படியே விட்டு விட்டான் ஆதித்.

“என்ன செய்வ? உன்னால் என்னதான் செய்ய முடியும்?”

“செய்யும் போது உனக்கே தெரியும்.” கோணலாக புன்னகைத்துவிட்டு வெளியேறிவிட்டான் ஆதித். அவனின் பேச்சில் மனோதான் திகைத்து நின்றாள்.
‘இப்ப ஆதித் எங்கிட்ட பிளர்ட் பன்னானா? இல்லை நான் அவங்கிட்ட பிளர்ட் செஞ்சேனா?’ என நினைத்தவள் அடுத்த நொடியே அருணை நினைத்துப் பார்த்தாள். தலையை சிலுப்பி தன் எண்ணத்தின் போக்கை மாற்றியவள் அலுவலகத்திற்கு கிளம்பச் சென்றாள்.


மித்ரன் ஹாலில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தான். புன்னகைத்தபடியே இறங்கியவனைப் பார்த்ததும் இரண்டு புருவங்களைத் தூக்கிப் பார்த்தான்.


“உங்கிட்ட இதை எதிர்பார்க்கலை மச்சான்?”


“என்ன செய்யறது மச்சான்? உன் தங்கச்சியை சமாளிக்க தனித்திறமை வேணும்ல.”


“ஆமா எந்த நம்பிக்கையில் புபூ இதை ஏத்துக்குவானு இப்படி பொட்டி படுக்கையை கட்டிட்டு வந்துருக்க?”


“ஹா..ஹா.. ஒன்னுமில்லை.. தாலி கட்டுன உடனே அதை மனோ கழற்றி எறியாத நம்பிக்கை. இன்னும் அவ கழுத்தில் இருக்க நம்பிக்கை. வேற ஒன்னுமில்லை. மனோவுக்கு பிடிக்காத ஒன்னை அவமேல் திணிச்சால் என்ன ஆகும்னு நான் சின்ன வயசிலே பார்த்துருக்கேன்.”
பேப்பரை உடனே மடித்து ஆர்வமாக எழுந்தான் மித்ரன்.


“கரக்ட். மனோவுக்கு இந்த தாலி செண்டிமெண்ட் எல்லாம் கிடையாது. ஒரு செயின் எல்லாம் எப்போதும் மனசுக்கு விலங்கு போட முடியாதுனு சொல்லுவாள். கமிட்மெண்ட், லாயல்ட்டி, லவ் எல்லாம் மனசில் இருக்கனும். அதையும் மீறி மனோ அதைக் கழட்டாமல் இருக்காள்.


ஒ.. காட்..” தன் நண்பனை அணைத்துக் கொண்டான் மித்ரன்.


“நிச்சயம் உனக்கு ஒரு வாய்ப்பு இருக்கு ஆதித். இல்லை கண்டிப்பாக இருக்கு. நீயும், அவளும் ஹேப்பியா வாழ்ந்தால் மட்டும் போதும்.”

“அதை இப்ப உறுதியாக சொல்ல முடியாது. பார்ப்போம்.”