• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உள்ளம் 2

மதுரீகா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 16, 2023
12
11
3
Coimbatore
அத்தியாயம் 2.,

ருத்ரன் சென்று சில மணி நேரங்களில், கவியை தன் திட்டத்தில் சிக்க வைத்து விட்டு, ஆதவன் தன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு செல்ல, வீடு முழுவதும் மயான அமைதி. அவனுக்கே கொஞ்சம் பீதியாகத் தான் இருந்தது.

ருத்ரவன் சட்டென கோவம் கொள்ளும் ஆளில்லை எனினும், கோவம் வந்தால் மனிதனே இல்லை என்பதை நன்கு அறிந்த தம்பி இவன்.

"அம்மா எனக்கென்னவோ சரியா படல, நான் அப்புறமா வரேன்", என வெளியில் ஓடப் பார்த்தவனைப் பார்த்து, "என்னை அவன்ட்ட மாட்டி விட்டுட்டு எஸ்கேப் ஆகப் பாக்கிறியா. மீடியா காரங்களிட்ட அவன் பேசினது தெரியும் தான உனக்கு", என்றார் அவர்.

"நீங்க எல்லாம் என்னம்மா அம்மா, செவில்ல ரெண்டு அப்பு அப்பி அவனை அடக்குறதை விட்டுட்டு இப்படி பிச்சுக்கோ தொத்திக்கோன்னு என்னை வச்சு கேம் விளையாட பாக்குறீங்க", என்றான் அவரை முறைத்தப்படி.

"நீங்க என்னமோ பண்ணுங்க, நான் உள்ள போறேன்... ரெண்டு பேருக்கும் நல்ல தூக்கம்", என குழந்தைகளை தூக்கிக் கொண்டு தங்களின் அறைக்குள் நுழைந்தாள் திவ்யா.

"இவ என்னடா ஜாலியா போய்ட்டா" என்றார் பார்வதி, திவ்யாவைப் பார்த்து...

"அவ தான் இந்த வீட்லயே நல்ல பொண்ணுன்னு அண்ணன் கிட்ட பேர் வாங்கி வச்சு இருக்காளே", என சலிப்பாகச் சொன்னான் ஆதவன்.

"சரிதான் டா... அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்பட்டது ஒரு குத்தம்னு பேயாட்டம் ஆடிட்டு போறான்" என்றவரைப் பார்த்து, "ருத்ரவனு பேர் வச்சீங்கள்ள அனுபவிங்க" என்று சொல்ல,


"நீயாச்சும் அவன்கிட்ட எடுத்துச் சொல்லக் கூடாதா டா", என பாரு பாவமாக கேட்க.

"அவன்ட்ட என் தலையை குடுத்துட்டு நான் முண்டமா அலையவா?, நல்ல ஐடியாவா சொல்லுங்கனு சொன்னா... என்னை போட்டுத் தள்ள ஐடியா தரீங்க", என அவனும் காய்ந்தான் அவரிடம்.

"என்கிட்ட மட்டும் இப்படி வாய் கிழிய கிழிய பேசற. அவன்கிட்ட போய் பேச சொன்னா, பயந்து சாகிற" என அவரும் கோவத்தில் பேச.

"அப்படியா மம்மி.. நீங்க அவன்கிட்ட பேசிட்டு வாங்க, அடுத்த ரவுண்ட் நான் போறேன்", என்றவன் மெதுவாக விசிலடித்துக் கொண்டு அவனும் அறைக்குள் புகுந்து கொண்டான்.


"ஒரு கல்யாணம் நின்னு போச்சுன்னு கொஞ்சம் கூட கவலையே இல்ல.. அவன்கிட்ட போய் கேள்வி கேட்கணும்னு தோனுதா பாரு" என்று தனக்குள் பேச, அவரின் மனசாட்சியோ, ' நீதான் பெரிய ஆளாச்சே, போய் பேசு ' என வடிவேல் பாணியில் நக்கலடிக்க..

"நாளைக்கு பாத்துக்கலாம்", என்று சொல்லிக் கொண்டு அறைக்குள் புகுந்து கொண்டார்.


பெண் பார்த்து, ஜாதகம் பார்த்து சடைந்து போனார் பாரு. ஒரு பக்கம் ஜாதக பிரச்சனை, ஒரு பக்கம் அவன் பிரச்சனை இப்படி இருந்த நேரத்தில் புதிதாக வந்தது அவனின் வயது பிரச்சனை.


எப்போதும் பெண் பார்க்கும் போது பார்வதி மட்டும் தான் செல்வார், மீறி போனால் அவருடன் ஆதவன் செல்வான்.

என்ன நல்ல நேரமோ திருமணம் வரையில் வந்தது இந்த முறை தான். அதற்கும் அந்த பெண் மண்ணை லாரியில் லோட் ஏற்றி கொண்டு வந்து கொட்டியது போல மொத்தமாக மூடிவிட்டு வேறு ஒருவனுடன் ஓடி இருந்தாள்.

முதலில் அந்த பெண் ருத்ரன் என்றதும் சட்டென ஒப்புக் கொண்டாள். இவளின் கிரஷ் லிஸ்டிலும் அவன் இருந்திருப்பான் போல. நன்றாகத் தான் சென்று கொண்டு இருந்தது, திருமணத்தின் முந்தைய நாள் அவளின் காதலன் வந்து அவளை அழைக்கும் வரை, பத்தாததிற்கு ருத்ரனின் வயதை மிகைப்படுத்திக் காட்டி அவளை கூட்டிச் சென்று விட்டான் அவளின் காதலன்.



திவ்யா, ருத்ரனின் இயக்கத்தில் வந்த ஒரு படத்தில், அசிஸ்ட் செய்தவள், திறமை வாய்ந்தவள். அண்ணனை பார்க்க போன நாள் ஒன்றில் திவ்யா மீது காதல் கொண்ட ஆதவன், அவளிடம் கெஞ்சி கொஞ்சி அண்ணனிடம் மன்றாடி அன்னையிடம் செருப்படி ,துடப்பகட்டை அடி என பல அடிகள் வாங்கி சில மிதிகள் வாங்கி, திவ்யாவை கரம் பிடித்து ஒரு வருட முடிவில் இரட்டைக் குழந்தைகளுக்கு அப்பாவாகி என தன் ஓட்டத்தில் இருந்தாலும்,

அண்ணனின் வாழ்க்கை இப்படியே போய் விடுமா என பயமே பார்வதிக்கு துணையாக இருக்க வைத்தது.

திவ்யா, ருத்ரன் சொன்னதை மீறி ஒரு செயல் செய்ய மாட்டாள். வேலையில் இருக்கும் போது அவனின் நம்பிக்கையானவள். இப்போது குடும்ப நபர் ஆகினும் ருத்ரன் சொல்வதே அவளுக்கு வேத வாக்கு. ஆதவனும் அதை பெரிதாய் எண்ணுவதில்லை.

அவனின் திருமணம் குறித்து திவ்யா கவலை கொண்டாலும், அவனுக்குள் எதோ இருக்கிறது என புரிந்து கொண்டாள். அதனாலேயே அவனை தொந்திரவு செய்யாமல் இருப்பாள்.



###

"எனக்கு ஒரு மாசம் லீவ் வேணும் சார்", என தான் வேலை செய்யும் சேனலின் எம். டியின் முன் நின்று இருந்தாள் கவித்ரா.

"ஒரு மாசம் லீவா, வாட் ஈஸ் த ரீசென் மிஸ். கவித்ரா" என டேபிள் மீது இருந்த பேப்பர் வெய்ட்டை உருட்டியபடி கேட்டார் அவர்,

"பெர்சனல் மேட்டர் சார்" என்று மட்டும் சொன்னாள் கவி,

"ஓகே... லீவ் தானே, இல்ல ரிலீவா", என்றார் லேசாக புன்னகைத்துக் கொண்டு அதில் என்ன உள்குத்து இருக்கிறதோ, பேமஸ் ரிப்போர்ட்டர் வேறு...

"லீவ் தான் சார், கொஞ்சம் லாங் லீவ்" என அவளும் சிரித்துக் கொண்டு சொல்லிவிட்டு அவரைப் பார்க்க.

"ஓகே லீவ் கிரன்டட்", என்றார் அவர்.

"தேங்க் யூ சார்" என நன்றி மொழிந்து விட்டு அங்கிருந்து கிளம்பினாள்


அவள் தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்யும் நேரம், "ஹேய் கவி", என மூச்சிரைக்க ஓடி வந்தாள் ஒருத்தி.

அவளின் அழைப்பில் ஸ்கூட்டியை ஆஃப் செய்தவள், "என்னடி... ஏன் இப்படி ஓடி வர" என்று கேட்க,

"நீ இனி ஆபீஸ் வர மாட்டியா. உன்னோட தியரி எல்லாம் முடிச்சுட்டு அந்த போஸ்டிங்கை அஜய்க்கு தர சொல்லிட்டியா" என மூச்சு வாங்க சொன்னாள் அவள்.

"அஜய் பத்தி தெரியல, பட் நான் ஒன் மந்த் ஆஃப்டர் இங்க வருவேன்" என்று கவி சொல்லவும்,

"சரி டி... எதாச்சும் விஷயம்னா உனக்கு இண்ஃபார்ம் பண்றேன்", என்றாள் அவள்.

பேசி விட்டு கவித்ரா சென்று விட, மேலிருந்து அவள் செல்வதைப் பார்த்தார் அந்த சேனலின் எம்.டி.

####

அமைதியாக படுத்து இருந்தான் ருத்ரவன். மனமோ அலைக்கடலாக ஆரப்பரித்தது. அந்த பெண் தன் காதலனுடன் சென்றது, அவன் திருமணம் நின்றது எல்லாம் பெரிய விஷயமே இல்லை. இனி திருமணமே ஆகாமல் போனால் நல்லது என்று நினைக்கும் ஜீவராசி இவன்.

அவன் எண்ணங்கள் எல்லாம் தன் வயது விமர்சனம் செய்வதை சுற்றி தான் இருந்தது.

முப்பத்தி ஆறு ஒன்றும் அவ்வளவு பெரிய வயதில்லையே. மேற்பட்ட நைன்ட்டீஸ் கிட்ஸ் எல்லாம் முப்பது வயதிற்கு மேல் தான் திருமணமே செய்து கொள்கிறார்கள்.

ஆனால் தான் மட்டும் ஏன் இவ்வளவு விமர்சிக்கப் படவேண்டும். அவன் யார் பேசினாலும் கண்டு கொள்ளாத ஆள் தான்.


' நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க, என்பதிற்கு எதிராக... நாலு லட்சம் பேரு என்ன பேசினாலும் பரவால்லைனு ' சொல்ற கோட்ஸ்க்கு பொருத்தமானவன் தான்.

இருந்தும் வெறுமையாக உணர்கிறான் இந்த நேரத்தில். தான் ஆசைப்பட்ட துறையில், ஆசைப்பட்ட வேலையில் உயர்ந்து நிற்கிறான். ஆளுமையும் கம்பீரமும் நிறைந்த அழகன்.

டீனேஜ் பெண்கள் கூட இவனுக்கு விசிறியாக இருக்க, அவர்கள் முன் பட ஹீரோக்களை விட ரியல் ஹீரோவாக வலம் வருபவன் ருத்ரவன்.


என்னவோ குறைகிறது அவனுக்கு. என்ன என்று தெரியாமலேயே அதை தேட முயல்கிறான். பாவம் அது என்னவென்றே தெரியாத நிலையில் எப்படி தேடுவது.

"அம்மா ஏன் தான் இப்படி டார்ச்சர் பன்றாங்களோ", என கடுப்பாக முணங்கிக் கொண்டான்.


"எனக்கு என்ன தேவைனு எனக்கே தெரியல.. இதுல எப்படி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்த முடியும். ஒரு பொண்ணோட லைஃபை நான் ஏன் கெடுக்கணும்", என தனக்குள் பேசிப்பேசி மூளை சூடாக எழுந்து அமர்ந்தவன், தன் பெஸ்ட் ப்ரெண்டான சிகரட்டை எடுத்து வாயில் வைத்து லைட்டர் கொண்டு பற்ற வைத்து மனப் போராட்டத்தைத் குறைக்க முயன்றான்.

 

மதுரீகா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 16, 2023
12
11
3
Coimbatore