அத்தியாயம் 3.,
ஆளுக்கொரு அறையில் அடைந்து விட, ருத்ரன் தான் மிகவும் இடைஞ்சலாக உணர்ந்தான். எதோ ஒன்று நெருடவதாக தோன்றியது. ஆனால் அவனுக்கு அது என்னவென்று தெரியாமலேயே குழம்பினான்..
சிகரெட் தீர்ந்து கையைச் சுடும் வரை யோசனையில் இருந்தவனை, சுருக்கென சுட்டு தன் இருப்பை காட்டியது சிகரெட்.
மதிய நேரம் நெருங்க, திவ்யாவும் பார்வதியும் சேர்ந்து உணவை சமைத்து முடித்தனர். அப்போது குழந்தைகளை ஆதவனிடம் விட்டு வந்தாள் திவ்யா.
"அவன் எதும் சொன்னானா திவ்யா" என பார்வதி கேட்க,
"இல்ல ஆன்ட்டி அவர் குழந்தைகள் கூட இருக்காரு" என்றவள் குழம்பினை சட்டியில் இருந்து பரிமாறும் பாத்திரத்தில் மாற்றிக் கொண்டு இருந்தாள்.
"அவனை கேக்கல டி. ருத்ரன் எதும் சொன்னானா" என்றவுடன் அவரு நிமிர்ந்து பார்த்தவள்,
"என்கிட்ட என்ன சொல்ல போறாரு... அவர் கிட்ட பேச நீங்களே பயப்படும் போது, நான்லாம் எங்க" என்றபடி அந்த பாத்திரத்தை டைனிங் டேபிள் மீது வைத்து விட்டு மீண்டும் சமையலறை வந்தாள் திவ்யா.
"எனக்கு எப்படி அவனை சரி கட்டுறதுனே தெரியல திவ்யா, ரொம்ப பண்றான்" என பார்வதி கடுப்பாக சொன்னார்.
"அவர் என்ன நினைக்கிறாரோ அதை பண்ணட்டும் ஆண்ட்டீ நீங்க ஏன் பிரஸர் ஆகரீங்க" எனக் கேட்டவள், "அவரை கொஞ்ச நாள் விட்டுப் பிடீங்க, சும்மா பொண்ணு பாக்கிறேன் சொல்லி... அவரை டிப்பிரஸன்ல தள்ளாதீங்க" என்றாள் அவள்.
"நீ சொல்றதும் சரி தான் மா,ஆனா அவனுக்கு வயசும் கூடிட்டே போகுதே" அவருக்கு வருத்தப் படுவது மிகப் பிடிக்கும் போல ஒன்று முடித்து இன்னொன்று என வருத்தப்பட்டு கொண்டே இருந்தார் பார்வதி.
"ஒரு வருசம் விடுங்க, அப்பறம் பாப்போம். அதுவரை கல்யாணம் கல்யாணம் என்றே பேசி அவரை டென்ஷன் பண்ணாதீங்க" என அவள் சொன்னதும் அவருக்கு சரியாகப் படவே, "ம்ம் சரி கொஞ்ச நாள் போகட்டும்" என்றவருடன் மிச்சமிருந்த உணவு பதார்த்தங்களை எடுத்துக் கொண்டு இருவரும் டைனிங் ஹாலிற்கு வர குழந்தைகளுடன் ஆதவன் அமர்ந்திருந்தான்.
"என்னம்மா புலம்பல் இங்க வரை கேட்குது" என அவன் கேட்க,
"உங்க ரெண்டு பேர் மாதிரி பிள்ளைகள் இருந்தா புலம்பாம என்ன பண்றது" என்றவுடன் ஆதவன் அவரை முறைத்தான்.
"என்ன முறைப்பு, எல்லாம் உங்க அப்பாவ சொல்லணும்... பசங்களுக்கு சுதந்திரம் தரணும்னு சொல்லி நல்லா கெடுத்து வச்சு இருக்கார்" என முறைப்புடனே சொன்னார் பார்வதி.
"அவன் இருக்கும் போது அப்பாவை பத்தி
நியாகம் படுத்தாதீங்க மா, அப்புறம் இன்னும் ஒளிஞ்சுக்கிற மாதிரி ரூம்க்கு உள்ளேயே அடைஞ்சு கிடப்பான்" என்றபடி குழந்தைகள் இருவருக்கும் திவ்யா பிசைந்து கொடுத்த உணவை ஊட்டினான்.
"பேசாம சாப்பிடுங்க, அவரோட லைஃப் ல என்ன நடக்கனும்னு அவர் தான் முடிவு பண்ண முடியும்" என திவ்யா ஆதவனை முறைக்க, பார்வதியும் அடக்க ஒடுக்கமாக அமர்ந்து கொண்டார். திவ்யா அவ்வளவு சொல்லியும் மீண்டும் மீண்டும் ருத்ரனை கட்டாயப்படுத்துவது போலயே அவளுக்கு தோன்றியது. பார்வதிக்கு அவ்வளவு விவரம் இல்லை. கணவன், பிள்ளைகள், மருமகள்... இப்போது பேரன் பேத்தி என அவரின் உலகம் மிகவும் சிறியது. அதனாலேயே அவருக்கு சிறு பிரச்சனை கூட மிகுந்த மன அழுத்தத்தை தருகிறது.
மேலிருந்து இறங்கி வந்த ருத்ரன் அவர்களைப் பார்க்க, ஆதவன் தன் அம்மாவைப் பார்த்தான்.
"நீங்க தூங்கிட்டு இருப்பீங்கனு நினைச்சேன்" என்றாள் திவ்யா.
"தூங்குற நிலைமைல நான் இல்லமா" என்றான் கடுகடு முகத்துடன்.
குழந்தைகள் சாப்பிட்டு முடிக்கவும், அவர்களை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றான் ருத்ரன். போகும் முன் வாசலில் நின்று, "நீங்க சாப்பிடுங்க.. நான் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுறேன்" என அவன் சொல்லிவிட்டு போக... மீண்டும் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டார் பார்வதி.
"அவன் சாப்பிடாம போறான் பாரு" என அவர் புலம்பலை ஆரம்பிக்கவும்.
"ஆன்டி அவருக்கு சாப்பிட தோணல, அதான் பிள்ளைகள் கூட விளையாட போயிருக்கார்... வந்து சாப்பிடுவார்" என திவ்யா சொல்லவும்.
"நல்ல புரிஞ்சு வச்சு இருக்க" என்றார் பார்வதி.
"பின்ன ஒரு படம் முழுக்க கூடவே வேலை செஞ்சு இருக்கா, அண்ணன் கூட வொர்க் ல கண்டின்யூ பண்ண கூடிய திறமை என் பொண்டாட்டிக்கு இருந்து இருக்கு" என திவ்யாவை மெச்சிக் கொண்டான் ஆதவன்.
மூவரும் சாப்பிட்டு முடித்து வெளியில் வர, ருத்ரன் ஒரு பெண்ணுடன் தீவிர வாக்கு வாதத்தில் இருந்தான்.
"யார்ட்ட பேசிக்கிட்டு இருக்கான்" என மூவரும் எட்டிப் பார்க்க.
சலிப்பாக நின்று பதில் சொல்லிக் கொண்டு இருந்தாள் கவித்ரா.
"ஹேய் லாலிபாப்" என ஆதவன் முன்னே செல்ல, பார்வதியும் கவியை கண்டு கொண்டு அவன் பின்னே சென்றார்.
"டேய் காப்பாத்து" என அலறினாள் கவி.
அதைப் பார்த்து சிரித்தபடி அவளருகில் வந்தவன், "வாட் அ சர்ப்ரைஸ்" என அவன் சிரிக்க.
அவனை முறைத்துக் கொண்டு நின்றாள் அவள்.
"யார் இந்த பாப்பா" என ருத்ரன் கேட்க.
"அடேய்...! உன் சங்கீதா அத்தையோட பொண்ணு கவித்ரா" என பார்வதி சொல்லவும் தான் ருத்ரன் யோசித்தான்.
"ஹோ", என அவன் அவளைப் பார்க்க.
"அத்தை... அம்மா, ஊருக்கு போறாங்க. எனக்கு வேலை இருக்குனு சொன்னதுக்கு, மாமா வீட்டில தங்கிக்கோனு சொல்லிட்டாங்க, நானும் மாமா வீடு தானேன்னு போன் கூட பண்ணாம வந்துட்டேன்" என தன் உடன் கொண்டு வந்த பேக்கை காட்ட..
"அதுக்கு என்னடி... வா உள்ள வா" என அவளை அழைத்தார் பாரு.
"என்ன வேலை பாக்குற, பாக்க பள்ளிக் கூட பாப்பா மாதிரி இருக்க" என்றவனை பொறுமையாக பார்க்க கடும் சிரமம் மேற்கொண்டாள் அவள்.
' ஏன்டா என்னை சோதிக்கிற ' என மனதில் நினைத்தபடி நின்றிருக்க.
"அவ" என ஆதவன் ஆரம்பிக்கும் முன்னே..
"ஐடி ல வொர்க் பண்றேன் மாமா" என்றாள் கவி.
"ம்ம்", என்றவனுக்கு அவள் சொன்ன மாமா பிடிக்கவில்லை என்றாலும், மாமாவை மாமா என்று சொல்லாமல் என்ன சொல்வாள் என தனக்குள் பேசிக் கொண்டான் ருத்ரன்.
"சரி வாங்க சாப்பிடலாம்" என ருத்ரனைப் பார்த்து சொன்னவள், கவியையும் அழைக்க, அனைவரும் உள்ளே சென்றனர்.
கவியும் ஆதவனும் கடைசியாக பேசிக் கொண்டு வந்தனர்.
"என்ன மாமே, கல்யாணம் நின்னு போச்சுன்னு கவலை இல்லாம ஜாலியா இருக்கீங்க குடும்பம் மொத்தமும்" என அவள் கேட்க.
"அதுக்குன்னு ஒப்பாரி வைக்க சொல்றியா, அந்த பொண்ணுக்கு என் அண்ணனை கட்டிக்க லக் இல்ல" என்றபடி வந்தான் ஆது.
"அப்படியா சொல்ற, உன் அண்ணன் என்ன அவ்ளோ ஸ்பெஷலா" என அவள் நக்கலாக கேட்டாள்.
"அவன் ஸ்பெஷல் தான் கவி. எனக்கும் அம்மாக்கும் இன்னொரு அப்பா அவன், அப்பா இறந்த பின்ன எங்க ரெண்டு பேரையும் எதுக்கும் ஃபீல் பண்ண விடாம பத்திரமா பாத்துகிட்டான், அப்போ அவனை நம்பி வர பொண்ணை எப்படி தாங்குவான்" என ஆதவன் சொல்லிவிட்டு அவள் பேக்கை இழுத்துக் கொண்டு செல்ல,
"பாக்கத்தான போறேன்" என அவள் பின்னே சென்றாள்.
"ஆமா நீ என்ன திடீர்னு வந்து இருக்க, போன தடவை நீ வரப்ப அண்ணா ஃபாரின் ல சூட்டிங் போயிருந்தான், அதான் உன்னை தெரியல" என்றான் ஆது.
"நீ என்கூட சவால் விட்டு இருக்க நியாபகம் இருக்கா" என அவள் கேட்க.
"அதெல்லாம் இருக்கு. ஆனா இப்படி இறங்குவனு நினைக்கல" என சிரிக்காமல் நக்கலாக சொல்லி சென்றான் ஆதவன்.
இருவரும் பேசிக் கொண்டும் சிரித்து, முறைத்துக் கொண்டு வர ருத்ரன் அவர்களை பார்த்து விட்டு தன் அறைக்குள் செல்லப் போனவனை தடுத்து உணவு உண்ணும் படி சொன்னாள் திவ்யா.
"நீங்களும் வாங்க" என கவியை அழைக்க, இருவருமாக சாப்பிட அமர்ந்தார்கள்.
"உங்க அம்மா ஏன் டி, பழைய மாதிரி வீட்டுக்கு வரதில்ல" என பார்வதி கேட்க.
"நீங்க சொந்தத்தில் பொண்ணை வச்சுட்டு, வெளில தேடுரீங்கனு அம்மாக்கு கோவம்" என்றாள் கவி இயல்பாக.
"எது நீயா" என அலறினார் பார்வதி.
"நினைப்பு தான்" என அவள்.
"பின்ன யாருடி இருக்கா, அவளுக்கு இருக்க ஒரே பொண்ணு நீதான்" என அவர் கேட்கவும்.
' அய்யயோ இதை யோசிக்காம பேசிட்டனே ' என நேரம் கழிந்து மூளை வேலை செய்தது ரிப்போர்ட்டர் மேடமிற்கு.
அவள் பேச ஆரம்பித்ததில் இருந்தே அவளை கவனித்த ருத்ரன், பார்வதி சொன்னதைக் கேட்டு நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
நிச்சயம் பள்ளிக் கூட பாப்பா தான் அவள். உயரம் மிகவும் குறைவு. பஸ்ஸில் மேலே இருக்கும் கம்பியை பிடிக்க முடியாமல் சைடு கம்பியை பிடித்து பயணம் செய்யும் பெண்களில் ஒருவள் கவித்ரா.
' இவள் எனக்கு ஜோடியா ' நினைக்கும் போதே சிரிப்பாக வந்தது அவனுக்கு.
' சிரிக்கிறான் பாரு, பன் மண்டையன்..எப்படியும் என் ஹைட் பாத்து தான் சிரிச்சு இருப்பான் ' என உள்ளூர முனகிக் கொண்டாள் கவி.
அவள் பார்க்கும் பிரச்சனைகளில் இந்த உயரப் பிரச்சனை பெரும் பிரச்சனை.
பஸ்ஸில் தொடங்கி, ஸ்கூட்டியில் கால் எட்டாத வரையில் அனைத்தும் பிரச்சனை. இப்போது புதிதாக இவன் பார்க்கும் கேலிப் பார்வை.
அவன் அவளின் உயரத்தை கேலியாக பார்க்க, இவளோ அவன் அடர்ந்த முடியை அமேசான் காடாக நினைத்து அவனைப் பார்த்தாள்.
ரசிகையாக பார்த்தாள் அவன் கேசம் ஸ்டைல் தான். இவளுக்கு தான் அவன் மீது கோவம் கோவமாக வருகிறதே, அழகான கேசம் கூட அமேசான் காடாக தெரியும் அளவிற்கு அவளை எரிச்சல் படுத்துகிறான் ருத்ரன்.